World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

The overthrow of Haiti's Aristide: a coup made in the USA

ஹைட்டியின் அரிஸ்டைட் தூக்கிவீசல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் அறிக்கை

1 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

வன்முறையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஹைட்டியின் ஜனாதிபதி ஜீன்-பேர்ட்ராண்ட் அரிஸ்டைட் கட்டாயமாக நாடுகடத்தப்பட்டது, வாஷிங்டன் மற்றும் ஏனைய பெரிய வல்லரசுகளின் பாசாங்குத்தனமான, போலி ஜனநாயகக் கொள்கையின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியது மட்டுமல்லாமல், புத்தெழும் ஏகாதிபத்தியத்தின் மிருகத்தனமான மற்றும் சூறையாடும் தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் ஹைட்டியில் எடுத்துள்ள நடவடிக்கைகள், ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பின் நோக்கம் மத்திய கிழக்கிலும் மற்றும் உலகெங்கிலும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் கொண்டுவருவதற்காக என்று கூறிய கருத்தின் போலித்தன்மையை நன்கு விளக்குகின்றன.

அரிஸ்ட்டைட்டை அகற்றியது, புஷ் நிர்வாகத்தால் இயக்கப்பட்ட குருதிபடிந்த ஆட்சிக்கவிழ்ப்பின் வெளிப்பாடாகும்; பாரிசின் சிராக் அரசாங்கமும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுத்துள்ளது. கலைக்கப்பட்டிருந்த, இழிவிற்குள்ளாகியிருந்த ஹைட்டியன் இராணுவத்தினர் மற்றும் கொண்டிருந்த கொலையாளிப் படை, மற்றும் CIA ஆதரவு கொண்டிருந்த மரணக் குழுக்கள், பழைய இராணுவ சர்வாதிகாரம் நாட்டை 1990ன் முற்பகுதிகளில் ஆண்டிருந்தபோது மக்களை பயங்கரவாதத்திற்கு உட்படுத்தியிருந்த கொலைப் படையினர் ஆகியோரிடமிருந்து எடுக்கப்பட்ட ஒரு கொலைகாரர்களைக் கொண்ட குழுவால் இது நிறைவேற்றப்பட்டது.

நாடு முழுதும் பரவிய ஆயுதக்குழுக்களை தலைமை தாங்கியவர்களில், 1993ல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அன்டோயின் இஜ்மெரிமைக் கொலைசெய்ததற்காக கடுங்காவல் ஆயுட்தண்டனை பெற்றிருந்த, பழைய ஹைட்டிய இராணுவ அதிகாரி, லூயி-ஜோடெல் சேம்ப்ளின், மற்றும் 1994 படுகொலையில் பங்குகொண்டிருந்து, ஆயுட்கால தண்டனை பெற்றிருந்த ஜோன்-பியர் பாப்டிஸ்ட் இருவரும் அடங்குவர். இவர்கள் இருவருமே, FRAPH என்று அழைக்கப்படும், ஹைட்டிய முன்னேற்ற அணியின் தலைவர்கள்; இந்த அமைப்பு 1991லிருந்து 1993 வரை நாட்டை ஆண்டிருந்த இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்மீது சிஐஏ ஆதரவுடன் அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதாகும்.

ஆயுதக் குழுவின் மற்றொரு தலைவர், 1990களில் ஈக்குவடாரில் அமெரிக்கச் சிறப்புப்படைகளில் பயிற்சி பெற்றவரும், பின்னர் ஹைட்டிக்கு அனுப்பப்பட்டு, மிருகத்தனமான போலீஸ் அதிகாரியாக இருந்து 2000ம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்த நினைத்த பழைய ஹைட்டிய இராணுவ அதிகாரியாவார். இவர் கொக்கைன் போதைப் பொருள் கடத்தலில் சந்தேகத்திற்குரியவர் ஆவார்.

இந்த பெருமளவு ஆயுதந்தாங்கிய பயங்கரவாதிகள், நாட்டின் எல்லைக்கப்பால் டொமினிகன் குடியரசிலிருந்து ஹைட்டியின்மீது படையெடுப்பு நடத்தினர். இவர்களுக்கு வாஷிங்டன் பயிற்சி, பணம், ஆயுதங்கள் முதலியவற்றைக் கொடுத்து, முதலில் டோமினிகன் இராணுவத்திற்கு அனுப்பப்பட்டிருந்தவற்றிலிருந்து M-16 துப்பாக்கிகள், எறிகுண்டு ஏவுகருவிகள், மற்றைய ஆயுதங்கள் ஆகியவற்றையும் கொடுத்துள்ளது என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்த அமெரிக்கத் தயாரிப்பு ஆட்சிக் கவிழ்ப்பினால், நூற்றுக்கணக்கான ஹைட்டியர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயுதமேந்தியவருக்குமுன் வீழ்ச்சியடைந்த Gonqives, Cap Haitien என்ற இந்தநகரங்களில், இவர்கள் வீட்டுக்கு வீடு சோதனைகளையும் நடத்தி, அரசாங்கத்திற்கு ஆதரவாளர்களாக இருந்தவர்களை தேடிப்பிடித்து, தப்ப இயலாதவர்களைக் கொலையும் செய்துவிட்டனர்.

போர்ட்-ஓ-பிரின்சும் இரத்தக் குளியலுக்கு ஆளாகுமோ என்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. நகரவாசிகள் ஆங்காங்கு தடுப்புக்கள் எழுப்பியுள்ளதோடு, ஆயுதங்களையும் ஏந்தித் தலைநகர் மீது வரும் தாக்குதலை விரட்டியடிக்க தயாராக உள்ளனர். "ஒழுங்கை" மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்துடன் அரிஸ்டைட் வெளியேறிய பின்னரும், ஆயுதம் ஏந்திய குண்டர்களோ தாங்கள் தலைநகருக்குள் அணிவகுப்போம் என்று உறுதிமொழி எடுத்துள்ளனர்.

அரசியலமைப்பு நெறிக்குட்பட்டிருந்த அரிஸ்டைட்டின் அரசாங்கத்தை வன்முறைக் கவிழ்ப்பில் அகற்றுவதிலிருந்து தடுக்கும் குறுக்கீடுகள் அனைத்துயும் முறையாக தடுத்தபின்னர், இந்த அச்சுறுத்தலைப் பற்றிய வாஷிங்டனுடைய போக்கு இரட்டைத்தன்மையுடையதாக உள்ளது. "எதிர்பாராத வரவு எதிர்ப்பாளர்கள். அவர்கள் திட்டத்தோடு உடன்படுவார்களா?" என்று அரசுத்துறை அதிகாரி ஒருவர் Reuters செய்தி நிறுவனத்திடம் கூறினார். "நாங்கள் அவர்களை எப்புறத்திலும் சேரவிடாமல் செய்யவேண்டும் என்று நினைக்கிறோம். அவர்களைப் பிடிக்கவேண்டும் என்ற கருத்து கிடையாது, ஆனால் உரிய நேரத்தில் பலவந்தமாக அவர்கள் போக்கை நிறுத்தவேண்டும் என்பது முக்கியமானது."

"உரிய நேரம்" எது என்பது முக்கியமான கேள்வியாகும். ஹைட்டியில் ஆயுதமேந்திய வன்முறையினால் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம், அரசியலமைப்பிற்கு புறம்பான ஆட்சிக் கவிழ்ப்பினால் வந்த மாற்றத்தை நாட்டுத் தொழிலாளர்கள், ஏழைகள் இவர்களுக்கு எதிராக பயங்கரவாத கொடூரத்தை நடத்தாமல், இதை நிலைநிறுத்த முடியாது. ஒரு குறுகிய காலத்திற்கு என்றாலும், கொலைப்படையினருக்கு போர்ட்-ஒ-பிரின்சில் தடையற்ற அதிகாரத்தைக் கொடுப்பது என்றால் அது விரும்பத்தக்கது என்றுதான் "அரசியல் எதிர்ப்பு" என அழைக்கப்படும் அமைப்பாலும் அதன் வாஷிங்டன் புரவலர்களாலும் நினைக்கப்படலாம்.

184 குழுவிலும் ஜனநாயக அரங்கு என்பதிலும் ஒழுங்கு செய்யப்பட்ட "அரசியல் எதிர்ப்பு" என்பது ஹைட்டியின் சலுகைபெற்றுள்ள வர்க்கத்தினரால் மேலாதிக்கம் செய்யப்படுவதுடன் அவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது; இது கிட்டத்தட்ட உளவியலளவிலும் உடற்கூற்று அளவிலும் அரிஸ்டைட் பால் பெறும் வெறுப்பைச் சுமந்துள்ளது. டுவாலியிரின் சர்வாதிகார ஆட்சிக்கால இறுதியில், மேலைப் பகுதியின் மிக வறிய தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோரின் விழைவுகளுக்கு ஆதரவாய் அரிஸ்டைட்டால் இனம் காணப்பட்டதிலிருந்து தோன்றிய காழ்ப்பு உணர்வு ஆகும்; இந்நாட்டு மக்கட் தொகையில் உயர்மட்ட சதவிகிதத்தினர் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதிப் பகுதியை தங்களிடம் பெற்றுள்ளனர்.

அரிஸ்டைட்டின் பிந்தையகால ஊழலும் சர்வதேச நிதியத் தலைமையிடத்திற்கும் அடிபணிந்தது எவ்வாறாயினும், ஹைட்டியின் உயர் செல்வந்தத்தட்டு இவருடைய தலைமயை இந்தத் தொடர்பை கொண்டு எப்பொழுதும் கறைப்படுத்தப்பட்டதாக பார்த்து வருகிறது. இவரை வெளியேற்றவேண்டும் என வலியுறுத்துவதுமட்டும் இல்லாமல் ஒடுக்கப்படும் மக்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றும் கருதுகின்றர்.

இது உடனடியாக எப்படியும் நடந்தேறுமா அல்லது தாமதமான வழிவகையில் சில மாதங்கள் இதற்காக எடுத்துக்கொள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொலைப்படையினரின் கோரிக்கைகளில் ஒன்று, ஹைட்டிய இராணுவம் மீண்டும், ஒருகால் இவர்கள் தலைமையிலேயே போலும், அமைக்கப்படவேண்டும் என்பது ஆகும். வரலாற்றின்படி, இந்த அமைப்பு, நாட்டின் உயராட்சிக் குடும்பங்களின் செல்வத்தையும் அதிகாரங்களையும் காப்பாற்றுவதற்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு மிருகத்தனமான கருவியாக உள்நாட்டு அடக்குமுறைக்கு பயன்பட்டுவந்ததால், 1995ல் அரிஸ்டைட்டினால் கலைக்கப்பட்டது.

2,200 வீரர்களை கொண்ட அமெரிக்க கடற்படையின் நிலப்படைப் பிரிவின் முன்னணிப்படை சில மணி நேரங்களில் ஹைட்டியை அடையும் என்று ஞாயிற்றுக்கிழமையன்று அறிவிப்புக்கள் வந்தன. இது நடக்குமா, இதன் சரியான பணி எதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது போன்றவை இன்னும் தெளிவாக்கப்படவில்லை. வாஷிங்டன் இத்தகைய தலையீட்டில் உறுதியாக ஈடுபடும் என்பது, அரிஸ்டைட், ஹைட்டியின் ஆளும் செல்வந்தத்தட்டு, வலதுசாரி பயங்கரவாதிகள் இவர்களுக்கிடையே நடுநிலையில் நின்று சமாதானப்படுத்தப்போவதாக எடுக்கப்பட்டிருந்த புஷ் நிர்வாகத்தின் முந்தைய முயற்சிகள் எவ்வளவு இரட்டைவேடம் கொண்டவை என்பதை உறுதியாக அம்பலப்படுத்துகின்றன.

இரண்டு வாரங்களுக்கு முன்புதான், வெளியுறவு அமைச்சர், கொலின் பவல் அறிவித்தார்: "உண்மையில் இப்பொழுது ஒரு இராணுவ அல்லது போலீஸ் படைகள், அங்குள்ள வன்முறையை அடக்குவதற்காக அனுப்பப்பட வேண்டும் என்பதற்கு ஆர்வம் காணப்படவில்லை." மாறாக அவர், காணப்படவேண்டும், அரிஸ்டைடுக்கும், ஏற்கனவே வாஷிங்டனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஜனாதிபதியை ஒரு பெயரளவு அதிகாரம் மட்டுமே செலுத்தும் ஒரு ஆட்சியின் பிரமுகர் நிலைக்குத் தள்ளும் எதிர்ப்பிற்கும் இடையிலான உடன்பாட்டின் அடிப்படையில் "ஒரு அரசியல் தீர்வு" அமையவேண்டும் என்று வலியுறுத்தினார்.

அரிஸ்டைட் இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டாலும், எதிர்க்கட்சி இதை நிராகரித்தது; ஜனாதிபதி எந்தவித நிபந்தனையும் இன்றி அகற்றப்படவேண்டும் என்று அது கோரியது. இந்த மறுப்பிற்கு புஷ் நிர்வாகத்தின் எதிர்விளைவு எதிர்க்கட்சியுடன் சேர்ந்து அரிஸ்டைட் பதவி விலகவேண்டும் என்றதுதான். எனவே, சனிக்கிழமையன்று, வெள்ளை மாளிகை செய்தித்துறைச் செயலாளர் ஸ்காட் மக்கிலீலன், அரிஸ்டைட் "தன்னுடைய நிலையை கவனத்துடன் ஆராய்ந்து, பொறுப்பை ஏற்று, ஹைட்டி மக்களுடைய நலன்களுக்கு உகந்த முறையில் நடந்துகொள்ளவேண்டும்" என்று கோரி அறிக்கை வெளியிட்டார்.

CIA ஆதரவின் விளைவாக, ஹைட்டியின் பெருங்குழப்பமாக நடந்திருந்த எழுச்சி, "பெருமளவு திரு. அரிஸ்டைட்டின் செயல்களினால்தான் தோன்றியது" என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது கொலைப்படைப் பிரிவினரின் செயல்களுக்கு ஒப்புதல் அளிப்பதுபோல் மட்டும் இன்றி, தன்னுடைய அகற்றுதலை தடுக்க அமெரிக்கா எப்படியும் குறுக்கீடு செய்யும் என நினைத்திருந்த அரிஸ்டைட்டின் வீணான நம்பிக்கைகளுக்கு கடுமையான மறுப்புப் போன்றும் உள்ளது. விரும்பப்பட்டிருந்த "அரசியல் தீர்வு" இப்பொழுது சாதிக்கப்பட்டுவிட்டதால், அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜனாதிபதி வீழ்த்தப்பட்டுவிட்டதால், அமெரிக்க இராணுவ படைப்பிரிவுகள் தீவு நாட்டிற்கு முன்னேறுகின்றன.

அரிஸ்டைட்டுக்கு பின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதி போனிபாஸ் அலெக்சாந்தருக்குப் பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியை நடத்திவைத்த, ஹைட்டியின் அமெரிக்கத்தூதரான ஜேம்ஸ் போலி, இதைப்பற்றித் தெளிவாக அறிவிக்கையில் "அமெரிக்கப்படைகள் உட்பட, சர்வதேச இராணுவப் படைகள் ஹைட்டிக்கு விரைவில் வந்து ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கும்" என்றார்.

இதற்கு முன்பாக, போலி, அரிஸ்டைட்டின் ஆதரவாளர்கள் "நெருப்புவைத்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபடுவர்" என்று கூறினார்: இது, CIA ஆதரவு பெற்றிருந்த படைகள் நூற்றுக் கணக்கான மக்களைக் கொன்றபோது வெறுமே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பின்னர் தெரிவிக்கப்படும் கூற்றாகும். இந்த வர்ணனை, எந்தப்படைகளை அடக்குவதற்கு கடற்படையின் நிலப்படைப்பிரிவு அனுப்பப்படுகிறது என்பதைப் பற்றிய சந்தேகத்தை அறவே நீக்குகிறது.

இந்தச் சதித்திட்டதிற்கு முற்றிலும் ஆதரவாக பிரெஞ்சு அரசாங்கமும் உள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியான டொமினிக் டு வில்பன், அரிஸ்டைட் பதவியை துறப்பது ஒன்றுதான் ஹைட்டியில் நெருக்கடிக்குத் தீர்வு என்று பலமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த நெருக்கடிக்கு தூபம் போட்டுத் தூண்டியதில் பிரான்சிற்கு நேரடிப் பங்கு உண்டு; ஏனெனில் ஹைட்டியின் ஆளும் செல்வந்தத் தட்டினுள், அரிஸ்டைடின் அரசியல் எதிரிகளுடைய நடவடிக்கைகளுக்கு பெரும் பண உதவியை இந்நாடு கொடுத்துள்ளது.

வாஷிங்டனுடைய ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கை ஈராக்கின்மீது நடந்தபோது, பிரான்ஸ் காட்டிய எதிர்ப்பு, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மாறாக சற்று கருணையுடன் இருக்கும் என்ற கருத்தைப் பெற்றிருந்தவர்களுக்கு, ஹைட்டியின் நிகழ்வுகள் நிதானத்தை மீட்கும் அனுபவமாக அமைந்துவிட்டன.

ஹைட்டியின் பழைய காலனிய எஜமான நாடாக இருந்த பிரான்ஸ், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் Toussaint L' Ouverture என்பவரால் நடத்தப்பட்ட அடிமைப் புரட்சியில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான், அந்நாட்டின் மீதான கட்டுப்பாட்டைக் கைவிட்டது. பின்னர் அது மலர்ச்சியடையத் தலைப்பட்டிருந்த கறுப்பர்களின் குடியரசை, நிதிமுறையில் மிரட்டியும், கடுமையான அபராதத் தொகைகள் கட்டுமாறு வலியுறுத்தியும், பிரான்சிற்கு Ouverture ஐ வருமாறு அழைத்து, இருட்டறையில் பட்டினிபோட்டும், கொடுமைகளை இழைத்தது.

ஒரு சுதந்திரமான ஹைட்டி, தன்னை வறுமையிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளமுடியாமல் அழிவுகளுக்கிடையேதான் பிறக்கவேண்டும் என்று பிரான்சின் ஆளும் வர்க்கம் வழிசெய்ததுடன், மேற்கு கோளப்பகுதியின் ஏகாதிபத்திய அரசாங்கமான அமெரிக்காவின் வேட்டைக்கு இரைப் பிராணிபோல் இதைத் தவிக்க விட்டுவிட்டது. 1915ல் வாஷிங்டன் தன் கடற்படையின் நிலப்படைப் பிரிவை ஹைட்டிக்கு அனுப்பிவைத்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் அந்நாட்டில் இராணுவ ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்தது. இதன் பின்விளைவாக அங்கு ஹைட்டிய இராணுவம் ஒன்றை அடக்குமுறையின் குவிப்பாக வைத்து, பின்னர் கொலைகார டுவாலியர் மரபின் சர்வாதிகார ஆட்சி 30 ஆண்டுகள் நடந்ததற்கும் ஆதரவைக் கொடுத்தது.

அரிஸ்டைட் அகற்றப்பட்டதும், இப்பொழுது அயல்நாட்டு இராணுவத் தலையீடும் உலக அளவில் ஏகாதிபத்தியம் புத்தெழுச்சியைத்தான் தெளிவாக நிரூபிக்கின்றன. ஹைட்டி ஒரு "நடத்தப்படமுடியாத நாடாகப்" போய்விட்டது எனத் தள்ளப்பட்டு விட்டது -- இந்தப் பிரிவில் எந்த நாட்டின் பொருளாதார, சமுதயாய பிணைப்புக்கள், சர்வதேச நிதி முதலாளித்துவ கொள்ளை கொள்கைகளினால் அழிக்கப்பட்டு உள்ளனவோ, அவையெல்லாம் சேர்க்கப்படுகின்றன. இத்தகைய நாடுகளில், தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அல்லது வேறுவிதத்திலேனும் அமைந்துள்ள அரசாங்கங்களை தாங்கள் நினைத்தவாறு, தங்களுடைய புவி அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களைக் காப்பாற்றிக்கொள்ளுவதற்காக,எவ்விதத்திலும் அகற்றும் உரிமையை, வாஷிங்டனும், அதேபோல பாரிசும் தாங்களே எடுத்துக் கொண்டுள்ளன. இதன் விளைவு ஒரு ஆணவத்தனமான காலனித்துவமுறை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தது போல் மீண்டும் தலையெடுக்கிறது.

ஹைட்டியில் ஒர் அமெரிக்கத் தலைமையிலான இராணுவக் குறுக்கீடு என்பது அந்தநாட்டின் எட்டு மில்லியன் மக்கள் நசுக்கப்படுதலை அதிகப்படுத்துவதுடன் மற்றொரு அமெரிக்க ஆதரவிலான சர்வாதிகார ஆட்சிக்கு அஸ்திவாரம் போடுவதற்கும் வழிவகை செய்யும். இது இரண்டரை ஆண்டுக்கும் குறைவான காலத்திற்குள்ளே இரு போர்களைக் கண்ட மற்றும் கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு மேல் படைகளை அனுப்பி முகாமிட்டுள்ள அமெரிக்க ஏகாதிபத்திய வெடிப்பின் இன்றியமையா கூறு ஆகும்.

அரிஸ்டைட் நாட்டைவிட்டு ஓடவேண்டிய நிலை, ஹைட்டியில் அவரது சொந்த ஜனரஞ்சக கவர்ச்சி அரசியலின் பொறிவை மட்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்றில்லாமல், குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது என்ற முன்னோக்கு முழுவதும் இயலாது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. நல்ல போர்க்கலங்கள் ஏந்திய ஒரு சில நூறு காலிகள், குண்டர்கள் ஒரு நாடு முழுவதையும் வெற்றி கண்டு அதன் ஜனாதிபதியை கட்டாயப்படுத்தி நாட்டைவிட்டு வெளியேற்ற முடியும் என்பதற்கும், இந்த அரசியல் பார்வையின் திவாலாகிவிட்ட தன்மை உயர் சான்றாக உள்ளது.

தேசியவாத கொள்கையின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க சமுதாய வெற்றிகளைப் பாதுகாக்கவோ அல்லது புதிதாக சாதிக்கவோ இயலாது என்ற நிலையில் அரிஸ்டைட் தன்னுடைய மக்கள் ஆதரவுத் தளம் கரைந்துவிட்டதைத்தான் பார்த்தார். நன்கு தயாரிக்கப்பட்ட அரசியல் எதிர்ப்பிற்கு பெரும்பாலான ஹைட்டிய மக்கள் விரோதப்போக்கைக் காட்டி நின்றபோது, அரிஸ்டைட் அரசாங்கம் சலுகைபெற்ற செல்வந்தத் தட்டிற்கும், அதன் கூலிப்படைக்கும் எதிராகத் தலைமை ஏற்று எந்தப் போராட்டத்தையும் கொள்ளும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தனர்; எவ்வாறு அந்த அரசாங்கம் IMF மற்றும், அயல்நாட்டு வங்கிகள் சுமத்திய கொடுமையான கொள்கைகளை எதிர்க்க முடியாமல் இருந்ததோ, அதேநிலைதான் இப்பொழுதும் என்று அறிந்து கொண்டனர்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சொல்ஜாலங்கள் இருந்தபோதிலும்கூட, அரிஸ்டைட் இரண்டு நூற்றாண்டுகளாக அயலாரின் நசுக்குதலின் விளைவாக இருந்த அரசுக் கட்டமைப்பை தூக்கி எறிவதற்கு ஒருபோதும் முயலவில்லை. தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில், பொதுமக்கள் ஆட்சியை அமைப்பதற்கான அஸ்திவாரங்கள் எதையும் போடவில்லை.

ஹைட்டிய தொழிலாளர்களும், ஏழைமக்களும் 1991ம் ஆண்டிலேயே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரிஸ்டைட், அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பினால் தூக்கி எறியப்பட்ட போது, தன்னைப் பின்பற்றிய ஆதரவாளர்கள் விளைவுகளை சந்திக்கட்டும் என அமெரிக்காவிற்கே தப்பி ஒடிச்சென்றிருந்ததையும், அனுபவமாகக் கொண்டுள்ளனர். அப்பொழுது கிட்டத்தட்ட 5,000 பேர் கொல்லப்பட்டனர்.

இவர், பின்பு அமெரிக்க இராணுவத்தலையீட்டினாலேயே அதிகாரத்திற்கு மீண்டும் வந்தார்; ஹைட்டிய மக்களின் சமுக போராட்டங்களை அடக்குவதாகவும், IMF போன்ற அமைப்புக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் எழுத்து வடிவில்லா உடன்பாட்டை இவர் மேற்கொண்டிருக்கவேண்டும். இதன் விளைவு, ஊழல் மிகுந்த, அரசியலில் செயலற்ற தன்மையைக் கொண்டிருந்த அரசாங்கம், ஒரு வறிய நாட்டின் தொடர்ந்த சீர்குலைந்து சரிந்த வாழ்க்கை நிலைமைகளுக்குத்தான் தலைமை தாங்கியிருந்தது.

டுவாலியரின் சர்வாதிகாரம் கவிழ்க்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த பெரும் குழுப்பங்களுக்கு பின், இருபது ஆண்டுகள் போராட்டத்தின் சோகமான விளைவு, ஹைட்டியில் அரிஸ்டைட் தேவை என்று வாதிட்டிருந்த, "இடது" தேசிய அரசியல்வாதிகள் நல ஆட்சி என்ற எங்கும் முன்னேறாத தன்மையைத்தான் அம்பலப்படுத்தியுள்ளது. வாஷிங்டனும் அதனுடைய ஹைட்டியிலிருக்கும் வணிக வர்க்கத்தில் உள்ள அதன் வாடிக்கையாளர்களும், காலனித்துவ பாணியிலான சர்வாதிகாரத்தை மீண்டும் புகுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள் உறுதியாகச் சமுதாய பதட்டங்களையும் வர்க்க குரோதங்களையும் தவிர்க்க முடியாத வகையில் ஆழப்படுத்தும்.

ஹைட்டியின் உழைக்கும் மக்களிடையே முதிர்ந்த அரசியல் உணர்வுடைய அடுக்குகளிடையே, இந்தக் கசப்பான மூலோபய அனுபவத்தைப் பற்றிய சரியான மதிப்பீடும், அதன் அடிப்படைப் படிப்பினையும் கட்டாயம் இருக்கவேண்டும்: ஏகாதிபத்தியத்தின் ஒருக்குமுறை தேசிய அடிப்படையில் கடக்கப்படமுடியாது. அதற்கு ஹைட்டி, கரீபியன் மற்றும் அமெரிக்கா தன்னிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் வறுமையில் வாடும் மக்களும் பூகோள முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை நடத்துவது தேவையாகும்.

See Also :

ஹைட்டியின் "அகிம்சை வாத" எதிர்க்கட்சி போர்ட்-ஒ-பிரின்சில் ஓர் இரத்தக் களரியை விரும்புகிறதா?

வலதுசாரி தலைமையிலான கிளர்ச்சிஎழுச்சி ஹைட்டியை அதிரவைக்கிறது

Top of page