World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

நிமீக்ஷீனீணீஸீஹ்: ரிறீணீus ஹிஷ்மீ ஙிமீஸீஸீமீtமீக்ஷீtலீமீ ஸீமீஷ் ஷிறிஞி ரீமீஸீமீக்ஷீணீறீ sமீநீக்ஷீமீtணீக்ஷீஹ்

ஜேர்மனி: சமூக ஜனநாயக கட்சியின் புதிய பொதுச்செயலாளர் Klaus Uwe Benneter

By Ulrich Rippert
17 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஒரு கட்சி தனது தலைமையைத் தேர்ந்தெடுக்கும் போதுதான் அந்தக் கட்சியின் வீழ்ச்சி வெளிச்சத்திற்கு வருகிறது. 1989-ம் ஆண்டு பேர்லின் எல்லைச்சுவர் வீழ்ந்தபோது ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி (SED) இன் பொதுச்செயலாளராக Egon Krenz தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இதை தெளிவாக நாம் புரிந்து கொண்டோம். அவர் கட்சியை புதுபிக்க மேற்கொண்ட முயற்சிகள், அவை பகிரங்கமாக வெளிப்படுவதற்கு முன்னரே காலாவதியாகிவிட்டவை என்று தெரிந்தன. அவர் மிகுந்த பரபரப்போடு சீர்திருத்த முயன்ற குழுக்கள் கூட்டப்படுவதற்கு முன்னரே கலைக்கப்பட்டன. ஏனென்றால் பெரும்பாலான உறுப்பினர்கள் கட்சியை துறந்துவிட்டு ஓடிவிட்டனர்.

இன்றைய தினம் ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) கலைக்கப்படுகின்ற கட்டத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. சமூக நலத்திட்டங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்ற கொடூரமான அரசாங்கத்தின் கொள்கைகளை கண்டித்து ஆயிரக்கணக்கானோர் கட்சியைவிட்டு விலகிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் கட்சி செயற்குழு ''செயற்திட்டம் 2010-க்கு மாற்று எதுவும் இல்லை'' என்று திரும்பதிரும்ப கூறிக்கொண்டேயிருக்கிறது. கப்பல் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது நாற்காலிகளை மாற்றுவதைப்போல் தற்பொழுது கட்சித்தலைவர்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிபர் ஷ்ரோடருக்கு பதிலாக Franz Müntefering கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பேர்லினில் செயல்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் Klaus Uwe Benneter முன்னாள் ஹேம்பர்க் உள்துறை அமைச்சர் Olaf Schoiz இற்கு பதிலாக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது புதிய தலைமை ஜோடி அசாதாரணமான கோணங்களைக் கொண்டதாக தோன்றுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் சமூக ஜனநாயகக்கட்சிக்குள் இரண்டு துருவங்களாக அவர்கள் செயல்பட்டனர். ''70 களில் பெனற்றர் முன்டர்பெயரிங்கை ''தொழிலாள வர்க்கத்திற்கு துரோகம் செய்கிற திருத்தல்வாதி என்று கண்டித்திருப்பார்'' அதற்கு முன்டர்பெர்ரிங் ''முட்டாளே நீ! உனக்கொரு முறையான வேலையைத் தேடிக்கொள்'' என்று கூறியிருப்பார். இவ்வாறு பத்திரிகையாளர் Kurt Kister, Süddeutschen Zeitung பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

தற்போது அவ்விருவரும் கட்சித்தலைமைக்கு வந்திருக்கிறார்கள். ஏனென்றால் கட்சிக்கு இரண்டு தீர்க்கமான முண்டுகோலுகள் தேவைப்படுகின்றன. அல்லது அதை மிகச் சரியாக சொல்வதென்றால் கட்சிக்கு இரண்டு ''ஊன்றுகோல்கள் தேவைப்படுகின்றன. பரவலாக பொதுமக்கள் கட்சிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாலும், கூட்டம் கூட்டமாக பறவைக் கூட்டங்களைப் போல் சமூக ஜனநாயகக்கட்சியிலிருந்து உறுப்பினர்கள் விலகிக்கொண்டிருப்பதாலும் கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு இவை தேவைப்படுகின்றன.

பிரான்ஸ் முன்டர்பெயர்ரிங் கட்சிக்கட்டுப்பாட்டையும் கட்சிக்கு ஊழியம் செய்வதையும் உயிர்நாடியாகக் கருதும் ஒரு கட்சி நிர்வாகியாவார். அவர் குறுகிய நோக்கமுள்ள மனிதர். பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பான உடனடிப்பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்துபவர். உட்கட்சி ஜனநாயகம் மற்றும் சோசலிசக் கருத்துக்களுக்கு அடிப்படையிலேயே விரோதமானவர்.

வழக்கறிஞரான Klaus Uwe Benneter "68 களில் திசைமாறிய'' தலைமுறையில் முத்திரை குத்தப்பட்ட பிரதிநிதி ஆவார். அவர் "கட்சியமைப்புக்கள் ஊடாக அணிநடையிடல்" என்று கூறப்படுவதற்கு ஆதரவான 60களின் எதிர்ப்பு இயக்கத்தை பிரதிநிதித்துவம் செய்த மற்றும் நலன்புரி அரசை ஒழித்துக்கட்டுவது, ஆயுதக் குவிப்பை ஆதரிப்பது மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதை தீவிரமாய் ஆதரித்ததன் மூலம் சமூக ஜனநாயகக் கட்சியில் தங்களின் பிழைப்பை நடத்திய ஒரு அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கிறார். அவர் ஷ்ரோடரின் தனிப்பட்ட நண்பராக மாறியது தற்செயலாக நடந்துவிட்ட சம்பவமல்ல. இந்த இருவரும் சமூக ஜனநாயகக் கட்சி அமைப்புக்களின் கொள்கை மாறியவர்களின் பிரிவைச் சார்ந்த அதே தட்டினரின் பகுதி ஆவர்.

18 வயதில் இலக்கணப்பள்ளியில் படிக்கும்போது Benneter சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார். மற்றைய சமாதான விரும்பிகளைப்போல் (pacifists) அவர் அந்த நேரத்தில் மேற்கு பேர்லினுக்கு இடம்பெயர்ந்தார். அந்த நேரத்தில் அந்த நபருக்கு போருக்கு பிந்திய சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இளம் ஜேர்மனியர்கள் கட்டாய இராணுவசேவையில் ஈடுபடவேண்டுமென்ற அவசியமில்லாத நிலை ஏற்பட்டது. 1977ல் அவர் இளம் சோசலிஸ்டுகளின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக ஜனநாயகக்கட்சியினுள் ஸ்ராலினிச ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி நோக்குநிலையை பகிர்ந்துகொண்ட Stamokap என்றழைக்கப்பட்ட பிரிவில் இருந்தார். இப்பிரிவு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் கிழக்கு ஜேர்மனி அமைப்பான ஆளும் ஜேர்மனி சோசலிச ஐக்கிய கட்சி (SED) ஆகியவற்றோடு இணைந்து செயல்பட விரும்பியது. இந்தப்போக்கு அரசாங்கத்திற்கும் பெரு வர்த்தக நிறுவனங்களுக்குமிடையில் நிலவும் நெருக்கமான உறவுகள் குறித்து புகார் கூறப்பட்டது. அரசாங்கம் பெரு வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் பிடியிலிருந்து அறுத்துக்கொண்டு பொருளாதாரத்தின் மீது அதிக ஆதிக்கத்தை செலுத்த வேண்டுமென்று கோரப்பட்டது. இந்தக் குழுவின் அரசியல் நிலைப்பாடு தொழிலாள வர்க்கத்தை நோக்கி செல்லவில்லை. மாறாக கிழக்கிலுள்ள ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சியின் நிலைப்பாடுகளுக்குகேற்ப அரசாங்கத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதிலேயே நாட்டம் செலுத்தப்பட்டது. அப்போது ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சி தலைமை முற்றிலும் பீதியடைந்த முறையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியது.

70 களின் ஆரம்பத்தில் கட்சித்தலைமை ஏற்கெனவே வில்லி பிராண்ட் (Willy Brandt) தலைமையில் இடதுசாரி விமர்சனங்களை அச்சுறுத்துவதற்கு ''தீவிரவாத தடுப்புக்கட்டளை''களையும் ''ஒவ்வாமை தீர்மானங்களையும்'' கொண்டுவந்தது. பொருளாதார பிரச்சனைகள் தீவிரமடைந்தன. 70 களின் இரண்டாவது பாதியில் வேலையில்லாத் திண்டாட்டம் உயர்ந்ததுடன் கட்சிக்குள்ளிருந்த சூழ்நிலை மோசமடைந்தது. பிராண்ட்டிற்கு அடுத்து ஜனாதிபதியாக பதவியேற்ற, கெல்முட் சிமித் (Helmut Schmidt) தமது கொள்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்க எவரையும் அனுமதிக்கவில்லை. அவரது கொள்கைகள் முதலாளிகளுக்கு சலுகைகள் தருவதற்கான குறிக்கோளுடன் தொழிலாளர்களது உரிமைகள் தகர்க்கப்பட்டு ஜேர்மன் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவின.

1977 இல் சிமித் நேட்டோ மீண்டும் ஆயுதக்குவிப்பில் ஈடுபட வேண்டுமென்று ஐரோப்பாவில் நடுத்தர தொலைவு அணு ஏவுகணைகளை நிறுவவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன் மூலம் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் நேட்டோவின் இரட்டை கட்டளை (NATO-Double-Decree) செயல்படத்துவங்கியது. அவரது அரசாங்கம் அவரது சமுதாயக் கொள்கைகளுக்கெதிராக தொழிலாளர்களது கண்டனத்தை மட்டுமே சந்திக்கவில்லை. போருக்கெதிராகவும் மறு ஆயுதக்குவிப்பிற்கெதிராகவும் பொதுமக்கள் கண்டனப்பேரணியையும் சந்திக்கவேண்டி வந்தது. மிகப்பெரும்பாலானவர்கள் அதற்கெல்லாம் மேலாக இளைஞர்களும், மாணவர்களும் ஏமாற்றத்தில் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிச்சென்றனர். மாற்று விவாதக்குழுக்களை அமைத்து மக்கள் அமைப்புக்களுக்கான முயற்சிகளை முடுக்கிவிட்டனர். அது சிறிதுகாலம் கழித்து பசுமை கட்சியமைக்கப்படுவதற்கு அடிதளமாக அமைந்தது.

சமூக ஜனநாயகக் கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர்கள் அணியைச் சேர்ந்தவர்தான் Benneter. அந்த அடிப்படையில் ''அரச அமைப்புக்களில் நடைபோட்டு'' பிடித்துக்கொண்டவர். 60 களின் கடைசியில் மாணவ கண்டன இயக்கங்கள் வீழ்ச்சியடைந்தபோது தோன்றிய இம் முழக்கங்களின் அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு உள்ளிருந்தே நிர்வாக அதிகாரத்துவ கருவியை வென்றெடுப்பதை குறிக்கோளாகக் கொண்டு அந்த முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கட்சித்தலைமைக்கு Benneter தனது பணிவைக்கடைபிடித்து நடந்து கொண்டாலும் 1977ல் இளம் சோசலிஸ்டுகள் தலைமைப் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அவருக்கு வியப்பு ஏற்படுகிற முறையில் அவர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். இளம் சோசலிஸ்ட் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவர் கலந்து கொள்வதாக அறிவிந்திருந்த ஆயுதக் குவிப்பிற்கெதிரான தேசிய கண்டனப்பேரணியில் கலந்து கொள்ளும் திட்டத்தை இரத்துசெய்தார். கலந்து கொண்டால் அதன் ''விளைவுகளை'' சந்திக்க வேண்டிவருமென்று செயற்குழு அச்சுறுத்தியதால் இவ்வாறு ரத்து செய்தார். அவர் இப்படி பணிந்து நடந்துகொண்டது அவருக்கு எந்த வகையிலும் உதவுவதாக இருக்கவில்லை. Benneter- க்கு முன்னணித்தலைவர் என்ற முறையில் கவர்ச்சி எதுமில்லாததால் அவரால் அவர் எதிர்ப்புக்காட்டுவதால் கட்சிக்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை. அவர் போட்டியமைப்பை உருவாக்க முயன்றாலும் அதைப்பற்றிக் கவலையில்லை. ஒழுங்கு நடவடிக்கையெடுப்பதில் அவரை மற்றவர்களுக்கு முன்மாதிரியாக காட்ட வேண்டுமென்பதற்காக அவர் கட்சியிலிருந்து விரட்டப்பட்டு அவருக்கு பதிலாக இளம் சோசலிஸ்ட் தலைவராக அவரது நண்பர் ஷ்ரோடர் நியமிக்கப்பட்டார்.

அப்போது கூட Benneter அரசியல் மாற்று எதையும் தேடிக்கொள்வதற்கு மறுத்துவிட்டார். சாட்டையடி வாங்கிய நாயைப்போல் சமூக ஜனநாயகக் கட்சியின் கதவருகே ''எப்போது உள்ளே விடுவார்கள், என்று கதவு திறக்கப்படும்'' என்பதைப்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். சிமித்தின் அதிபர் பதவிக்கால முடிவிற்கு பின்னர் அவரது வலதுசாரி கொள்கைகளால் பழமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) பதவிக்கு வருவதற்கு பாதையமைத்துத் தரப்பட்டது. அப்போது Benneter இற்கான நேரம் வந்துவிட்டது 1983ல் அவர் சமூக ஜனநாயகக் கட்சியில் அவரது நண்பர் ஹெகார்ட் ஷ்ரோடரின் முயற்சியால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தவுடன், பேர்லின் உள்ளூர் அமைப்பில் தனது அரசியல் செல்வாக்கை மீண்டும் வளர்த்துக்கொள்ள முயன்றார். பேர்லினில் துணைத் தலைவராகவும், பொருளாளராகவும் செனட்சபையின் குழு உறுப்பினராகவும் பணியாற்ற ஆரம்பித்து பேர்லின் குழு என்று அழைக்கப்படும் குழுவின் முன்மாதிரி பிரதிநிதியாக செயல்பட ஆரம்பித்தார். அதற்குப்பின்னர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், பசுமை கட்சி அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனநாயக சோசலிச கட்சி (PDS) கூட்டணியுடன் அவர் நடந்துகொண்ட முறையிலும் Benneter தன் சொந்தக்காலிலேயே நின்றார். கருத்துக்களை பிரச்சாரம் செய்வதில் அவர் எப்போதுமே தனித்தன்மை காட்டியவர் அல்ல. அல்லது விவாதங்களில் சிறப்பு முத்திரை பதித்தவரல்ல. கட்சியின் மாகாண அமைப்பில் தலைவர் என்கிற முறையில் எல்லா இழைகளையும் இணைக்கும் நெருக்கமான பின்னலாக இயங்கி உறவுகளையும், சார்ந்தவர்களையும் உருவாக்கிக்கொண்டார்.

பேர்லினில் நடைபெற்ற வங்கி (Bankgesellschaft) மோசடியில் தீவிரமாக சம்மந்தப்பட்டிருந்தது வெளிவந்தது, முன்னணி முதலீட்டாளர்களுக்கு மிக அற்புதமான பெருமளவில் லாபம் கிடைக்கச்செய்வதை உறுதிப்படுத்துவதற்கு செனட்சபை நிதி உத்தரவாதம் பெருமளவில் தருவதற்கு முன்வந்திருக்கிறது என்பது ஆரம்பகட்டத்திலேயே தெரியுமென்றாலும் இந்த மோசடியில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மீது பழிபோட்டுவிட்டு சமூக ஜனநாயகக் கட்சியை இந்த மோசடியிலிருந்து தப்பிக்கவைக்க Benneter- ரால் முடிந்திருக்கிறது. பேர்லின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர்களின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவின் தலைவராக Benneter நியமிப்பதற்கு ஜனாதிபதி ஷ்ரோடருடன் ஒரு ஏற்பாடு செய்துகொண்டார். அதே நேரத்தில் இந்த மோசடியில் தனது பங்கையும் பேர்லின் சமூக ஜனநாயகக் கட்சி தொடர்பையும் மறைத்து வாசிக்க தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்.

இதன் விளைவாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் செல்வாக்கு படுமோசமாக சரிந்தது கிறிஸ்தவ ஜனநாயக யூனியனிற்கு எப்போதுமே பாதுகாப்பான தொகுதியென்று கருதப்பட்ட பேர்லின் Steglitz-Zehlehndorf- இருந்து ஜேர்மன் நாடாளுமன்றத்திற்கு Benneter நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்குப்பின்னர் ஜனாதிபதி ஷ்ரோடரினதும் மற்றும் ''செயற்பட்டியல் 2010'' தீவிர பாதுகாவலராக அவர் மாறிவிட்டார். நலன்புரி வெட்டுக்களையும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகளைகளையும் கண்டிப்பவர்கள் ''அரசியலில் கனவு'' காண்பவர்களென்றும், சமூக யதார்த்த அங்கீகாரத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் என்றும் Benneter வர்ணித்தார். ஷ்ரோடரின் செயற்பட்டியல் 2010 இன்றையதினம் இருக்கின்ற சமூக ஜனநாயகத்திலேயே தலைசிறந்த நிர்வாகமென்று அவர் வர்ணித்தார்.

புதிய கொள்கைக்கு மாற்றப்பட்டவர்கள் தங்களது நம்பிக்கைகளை பரப்புவதில் மற்றவர்களைவிட தீவிரமாக இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த வகையில் Benneter பசுமை கட்சியின் முன்னணி அரசியல்வாதிகளின் தோற்றத்தைப்போன்று சமூக ஜனநாயகக் கட்சியின் நெருக்கடிப்பின்னணியில் செயற்பட்டியல் 2010 சீர்திருத்தப்போக்கிலிருந்து எந்தவிதமான மாற்றமும் செய்யக்கூடாது என்று கூறுகிறார். துணை அதிபரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜோஸ்கா பிஷ்ஷர் (பசுமைகட்சி) ''சமூக மறுஒழுங்கு நடவடிக்கைகளில்'' தாமதப்போக்குகள் எதுவும் கூடாது என்று எச்சரித்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித்தவிக்கின்ற மக்கள் அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளை எதிர்பார்த்து வாழ்பவர்கள் குறைந்த வருவாய்காரர்கள் ஆகியோர் ஆண்டு ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட வெட்டுக்களால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு பிஷ்ஷரின் விமர்சனம் - நலன்புரி அரசை சீர்திருத்தங்கள்தான் காப்பாற்ற முடியும் என்ற கருத்து முற்றிலும் ஆணவபோக்குள்ள கருத்தாகத் தோன்றுகிறது.

இந்த நாட்டின் நடப்பு அரசியல் நிலைப்பாட்டின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பரிணாமங்களில் ஒன்று, முதலாளித்துவத்தை கண்டித்துவந்த சமூக ஜனநாயகவாதிகள் மற்றும பசுமை சமாதான விரும்பிகள் மிக வேகமாக தங்களது கருத்துக்களை மாற்றிக்கொண்டிருப்பதுதான். இதில் பலர் நடப்பு அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்களது பூர்வீகத்தை பார்த்தால் முதலாளித்துவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்த பரம்பரையிலிருந்து வந்தவர்கள். கடந்த காலத்தில் அடித்தள ஜனநாயகத்திற்கு ஆதரவாக உறுதியோடு நின்றவர்கள் இன்றைய தினம் ஜனநாக உரிமைகளைக் கட்டுப்படுத்துவதிலும், சமூகக் கட்டுக்கோப்பில் நலன்புரி திட்டத்திற்கு வெட்டுக்களைக் கொண்டு வருவதற்கும் உறுதியாகத்துணை நிற்கின்றன.

கட்சியின் இரும்பு கரத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்து அனுபவப்பட்ட Benneter; தானே கையில் சாட்டையை எடுத்துக்கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு சவுக்கடி கொடுத்து தனது வழிக்கு திருப்பிக் கொண்டிருக்கிறார்.

Top of page