World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Berlin summit: Blair, Schröder, Chirac press for accelerated "reforms"

பேர்லின் உச்சிமாநாடு: பிளேயர், ஷ்ரோடர், சிராக் ''சீர்திருத்தங்களை'' விரைவுபடுத்த அழுத்தம் கொடுக்கின்றனர்

By Peter Schwarz
21 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

புதனன்று பேர்லினில் ஜேர்மன், பிரெஞ்சு, பிரிட்டிஷ் தலைவர்கள் நடத்திய உச்சிமாநாடு அதில் பங்கெடுத்துக்கொள்ளாத ஐரோப்பிய நாடுகளின் கடுமையான கண்டத்திற்கு இலக்காகியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இதர 22 உறுப்பு நாடுகள் மீதும் ''அந்த மும்மூர்த்திகள்'' ''அதிகாரமிக்க'' தங்களது முடிவைத்திணிப்பதாக கண்டித்தனர்.

அந்த உச்சிமாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னரே இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அதை ''கந்தலாடை'' கூட்டணி என்று கண்டித்தார். அவரது வெளியுறவு அமைச்சர் Franco Frattini ''அது சுயநலத்தின் ஒட்டுமொத்த அடையாளச்சின்னம்'' என்று மாநாட்டைக் கண்டித்தார். போலந்து வெளியுறவு அமைச்சர் Vlodzimierz cimoszaviez ''ஒரு சில நாடுகள் எல்லாவற்றையும் முன்னேற்பாடுகள் செய்துவிட்டு அதை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடிப்பதை ஏற்கமுடியாது'' என்று அறிவித்தார். பேர்லினில் உச்சி மாநாடு நடத்தியவர்கள் ஐரோப்பிய நாடுகளின் மக்கள் நலன்புரி திட்டங்களையே ''கடத்திக்கொண்டு'' சென்று விட்டார்கள் என்று ஸ்பெயின் நாட்டு வெளியுறவு அமைச்சர் Ana Palacio குற்றம்சாட்டினார்.

அத்தகைய கூற்றுக்களுக்கு நியாயம் இல்லாமலுமில்லை, ஆனால் ஜேர்மனி ஜனாதிபதி ஹெகார்ட் ஷ்ரோடர், ஜனாதிபதி சிராக், பிரதமர் பிளேயர் ஆகியோர் கூட்டாக நடத்திய நிருபர் பேட்டியில் தங்களது நிலைப்பாட்டிற்கு சமாதானம் கூறினர்.'' மூன்று நாடுகளும் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி செய்வதால் இப்படி கலந்தாலோசனை நடத்துவது முற்றிலும் வழக்கமான நடவடிக்கைதான்'' என்று ஜனாதிபதி சிராக் அறிவித்தார்.

அவநம்பிக்கையை மேலும் தூண்டுகின்ற வகையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் நடப்புத்தலைவரான அயர்லாந்தைச் சேர்ந்த பெர்டி ஆஹனுக்கு (Bertie Ahern) கூட்டாக கடிதமொன்றை எழுதியிருக்கிறனர். அந்தக் கடிதத்தில் ''பொருளாதார சீர்திருத்த பிரச்சனைகளை மட்டுமே தனியாக கவனிப்பதற்கு ஐரோப்பிய ஆணைக்குழு துணைத்தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற உடன்பாட்டு பேச்சு வார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவடையும் போது ஒவ்வொரு நாட்டிற்கும் சொத்த ஆளுனர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவு தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது புதிதாக கூறப்பட்டுள்ள முன்மொழிவுகளின் படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனி ஆளுனர்கள் என்ற நிலையையும் சம உரிமையையும் இரத்து செய்துவிட்டு புதிய அதிகார ஏணிகளை உருவாக்குகின்ற முன்மொழிவு இது என்று சிறிய நாடுகள் கருதுகின்றன.

ஜனாதிபதி ஷ்ரோடர் மூலம் வந்த முதல் பத்திரிகை முன்மொழிவின்படி வர்த்தகம், தொழில், உள்நாட்டு சந்தைகள், சுற்றுப்புற சூழல் மற்றும் சமூக கொள்கைகள் தொடர்பாக விரிவான அதிகாரங்கள் படைத்த ''சூப்பர் ஆளுனரை நியமிப்பது'' பற்றிக்கூட குறிப்பிட்டன. அதற்குப்பின்னர் அந்தத்திட்டங்களில் தனக்கு சம்மந்தமில்லை என்று ஷ்ரோடர் ஒதுங்கிக்கொண்டார். ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுருப்பதை போன்று ''இதர ஆளுனர்களோடு ஒருங்கிணைப்பு பணியைத்தான் திட்டமிடப்பட்டுள்ள துணைத் தலைவர் செய்வார்.'' அப்படியிருந்தாலும், இந்த விளக்கத்தின்படியே கூட அத்தகைய அமைச்சர் இதர ஆளுனர்களளோடு ஒப்புநோக்கும்போது உயர் அதிகாரம் படைத்தவராகவே செயல்படுவார்.

ஜேர்மன் அரசாங்கம், அந்த பதவிக்கு ஜேர்மன் பிரதிநிதி இடம்பெறவேண்டும் என்பதில் குறியாக உள்ளது என்பதில் இரகசியம் எதுவுமில்லை. பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான சூப்பர் அமைச்சர் Wolfgang Clement மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கத்திற்கு காரணமாக இருந்த Gunter Verheugen ஆகியோர் இந்த பதவிக்கான ஜேர்மன் வேட்பாளர்கள் ஆவர்.

விரைவாக்கப்பட்ட ''சீர்திருத்தங்கள்''

ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த சிறிய நாடுகள் தெரிவிக்கும் அச்சம் தொடர்பாக உச்சிமாநாடு முடிந்த பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் மற்றும் கவலைகள், உண்மையிலேயே ஐரோப்பிய வாழ்வில் ஒவ்வொரு நாளும் மேலோங்கிக் கொண்டிருக்கும் அடிப்படையான மோதலான ஒருபக்கத்தில் சகல ஐரோப்பிய அரசாங்கங்களுக்கும் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கும் மறுபக்கத்தில் பரந்த தொழிலாள மக்களுக்கும் இடையிலான மோதல்களை மூடிமறைப்பதாக அமைந்திருக்கிறது.

ஷ்ரோடர், பிளேயர் மற்றும் சிராக் ஆகியோர் ஐரோப்பிய ஆணைக்குழுவின் அயர்லாந்து தலைவருக்கு எழுதிய கடிதம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நலன்புரி திட்டங்களை வெட்டுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்காரச் சொற்கள் அடங்கியதாகவே காணப்படுகிறது. அவர்கள் மூவரின் நோக்கமும் இந்தப் பத்தாண்டு முடிவில் ஐரோப்பாவை ''உலகின் தலைசிறந்த பொருளாதார வளர்ச்சிப்போக்கில் செல்லும் மண்டலமாக ஆக்கிவிடவேண்டும்'' என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. இதன்மூலம் அமெரிக்காவையும், மிஞ்சுகின்ற வளர்ச்சியை எட்டிவிட முடியுமென்று குறிப்பிடுகிறது. இந்த நோக்கம் ஏற்கனவே மூன்றாண்டுகளுக்கு முன்னர் லிஸ்பனில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றும் தற்போது இந்த மூன்று நாடு உச்சிமாநாட்டின் படி அது புதிய உத்வேகம் பெறுகிறது.

அயர்லாந்தைச்சார்ந்த ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவருக்கு எழுதிய கடிதம் ''அப்பட்டமாக முதலாளித்துவ சாதகமான போக்கைக் கொண்டதாகும். ''சம்பிரதாய சொற்களான புதுமைகளைப் புகுத்துவது, ஐரோப்பிய சமுதாய முன்மாதிரியை புதுமையாக்குவது, போட்டிகளையும், புதுமைகளையும் புகுத்துவதற்கு இடையூறாக இருக்கும் நெறிமுறைகளை ஒழித்துக்கட்டுவது மற்றும் அரசு நிர்வாக அதிகாரத்தை குறைப்பது'' என்று விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. தொழிலாளர் சந்தை கொள்கை àதவும் நோக்குடனும் உணர்வுடனும் அதே நேரத்தில் சமமான பயன்கிடைக்கும் வகையிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பொது சுகாதாரம் போன்ற நடவடிக்கைகளில் செலவினங்களுக்கு ஏற்ப திறமைபளிச்சிட வேண்டுமென்றும்'' அந்த அறிக்கை வழக்கமான சொற்களில் விளக்கம் தருகிறது.

ஆராய்ச்சிகள் பெருகவேண்டும் என்றும், கல்வித்தரம் உயர வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் ஆராய்ச்சிகளை தனியாருக்கு தந்துவிடவேண்டும். சிறந்த கல்வி பற்றிய உறுதிமொழியைப் பொறுத்தவரை அரசாங்கங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளால் கல்விக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. மற்றும் கல்விக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருக்கின்றன இப்படி கொள்கைக்கு முரணாக செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்தத் வேலைதிட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பை புதிய சூப்பர் ஆணையாளர் ஏற்றுக்கொள்ள விருக்கிறார். ''லிஸ்பன் செயற்த்திட்டத்தின் நோக்கங்கள் அடங்கிய அனைத்து ஐரோப்பிய ஒன்றிய திட்டங்களையும் நிறைவேற்றும் முடிவை எடுக்கும் முன்னர் துணைத்தலைவர் அதில் கலந்து கொள்ள உரிமைபடைத்தவர்'' என்று மூன்று தலைவர்களின் கடிதம் கூறுகிறது.

இந்த உச்சி மாநாடு பற்றி மிக அதிகமாக கண்டனங்களைத் தெரிவித்த அரசாங்கங்கள், இந்த முன்மொழிவுகள் பற்றி அவற்றின் பொதுவான நடைமுறை குறித்து எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதற்கு மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆறு சிறிய உறுப்புநாடுகள் திங்களன்று ஐரோப்பிய ஆணைக்குழு தலைவருக்கு எழுதியுள்ள கூட்டு கடிதத்தில், பெரிய மூன்று நாடுகளின் முயற்சிகளையும் மிஞ்சுகின்ற வகையில் அதிரடியாக வலதுசாரி கொள்கைகளை வளர்க்கின்ற முயற்சிகள் காணப்படுகின்றன.

ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல், நெதர்லாந்து போலந்து, மற்றும் எஸ்தோனியா அரசாங்க தலைவர்கள் இந்தக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. எல்லா ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களையும் கட்டுப்படுத்துவதாகவும் தேசிய வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளுக்கு வரம்புகளை விதிக்கவும் பொருளாதார ஸ்திரத்தன்மை உடன்படிக்கையை சிதைக்கின்ற வகையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அந்தக் கடிதத்தில் இந்தக் குற்றச்சாட்டு ஐரோப்பிய பொருளாதாரத்தில் மேலும் ''சுதந்திர சந்தை'' நெறிமுறைகளை தளர்த்த வலியுறுத்துகிற வகையில் அமைந்திருக்கிறது.

அந்தக் கடிதம் வலியுறுத்தும் இதர அம்சங்களில் ''அதிக வளைந்து கொடுக்கும் தொழிலாளர் சந்தை'' மற்றும் ''வரி அதிகரிப்பிற்கு தலைசிறந்த முன்மாதிரி பரிசீலனை'' ஆகியவை அடங்கியுள்ளன. ஸ்லோவேக்கியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவுகின்ற உயர் வருமானங்கள் மற்றும் இலாபங்களுக்கான மீதான வரிவிதிப்பில் நிலவுகின்ற மிகக்குறைந்த விகிதங்கள் ஐரோப்பா முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தக் கடிதத்தின் கொள்கை விளக்கம் அமைந்துள்ளது.

இந்த அரசாங்கங்கள் ''மும்மூர்த்திகளுக்கு'' எதிராக தெரிவித்துள்ள கண்டனங்களை ஐரோப்பிய பொதுமக்களது நலன்களை தற்காத்து நிற்பதற்கான குரல் என்று எடுத்துக்கொண்டு குழப்புவது மிகப்பெரும் தவறாகும். சிறிய அரசாங்கங்கள், பெரிய அரசாங்கங்களைப்போல் ஐரோப்பாவை பெரு வர்த்தக நலன்களுக்கு ஏற்றதாக மாற்றவேண்டும் என்ற ஒத்த கருத்தை கொண்டுள்ளனர். பெரிய ஐரோப்பிய அரசாங்கங்கள் தங்களை ஒதுக்கித் தள்ளிவிடுமென்று இந்த அரசாங்கங்கள் பயப்படுகின்றன.

பெரிய மூன்று நாடுகளுக்கிடையில் மோதல்கள்

பேர்லினில் நடைபெற்ற முத்தரப்பு உச்சிமாநாடு ஐரோப்பா எவ்வளவு மிக ஆழமான மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கின்றன என்பதைக்காட்டுகிறது. 1950களில் ஆரம்ப நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்பு போக்கு வர்த்தக நலன்கள் அடிப்படையிலேயே எப்போதும் முடிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றன. அப்படி இருந்தும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை சமூக மற்றும் பிராந்திய வேறுபாடுகளை சமப்படுத்த கூடியதாக இருந்தது. விவசாய நிதிகள், பிராந்திய நிதிகள் மற்றும் பிரஸ்ஸல்சை அடிப்படையாகக் கொண்ட நிதி வளங்கள், மிகக்கடுமையான சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்கு பயன்படுத்தப்பட்டன.

இன்றைய நிலைமை அவ்வாறானதாக இல்லை. பிரஸ்ஸல்சில் செயற்பட்டு வருகின்ற ஆணைக்குழு பொருளாதார தளர்வு, ''சுதந்திர சந்தை'', தாராளமயமாக்கல், மற்றும் தொழிலாளர்கள் உரிமைபறிப்பு ஆகியவற்றின் ஒட்டுமொத்த அடையாளச்சின்னமாகவே மாறிவிட்டது. ஸ்பெயின் கிரேக்கநாடு மற்றும் போர்த்துக்கல் போன்ற ''ஏழை'' மத்தியத்தரைக்கடல் பகுதி நாடுகள் ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில் பில்லியன் கணக்கான நிதியாதரவு தரப்பட்டது. ஆனால் இன்றைய தினம் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருகின்ற நாடுகளுக்கு அத்தகைய உதவி எதுவும் கிடைக்காது. கிழக்குப்பகுதியிலுள்ள சிறந்த தொழிற்பயிற்சி பெற்ற அதே நேரத்தில் குறைந்த ஊதியம் பெற்றுவருகின்ற தொழிலாளர்கள், மேற்கு பகுதிகளிலுள்ள தொழிலாளர்களின் ஊதியத்தையும் வேலை நிலைமைகளையும் சீர்குலைக்கின்ற பொறிமுறையாக பயன்படுத்தப்படுவர்.

அமெரிக்காவின் பங்கினால் இந்தப்பிரச்சனைகள் தீவிரமடைகின்றன. அமெரிக்கா தனது ஐரோப்பிய செல்வாக்கை முதல் தடவையாக ஈராக் போரின்போது ஐரோப்பியக் கண்டத்தை பிளவுபடுத்துவதற்கு பயன்படுத்தியது. அதுவரை அமெரிக்கா பொதுவாக ஐரோப்பிய ஒற்றுமையை ஆதரித்து வந்தது. இப்போது ஈராக் போருக்கு ஆதரவாக தனக்கு ஆதரவுதந்துவரும் நாடுகளை ஜேர்மனிக்கும், பிரான்சுக்கும் எதிராக செயல்படுத்தி வருகிறது. இப்படி திரட்டிவரும் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஆரம்பித்து போலந்து வரை நீடித்துக்கொண்டு போகிறது.

இதன் விளைவாக இணைந்த ஐரோப்பிய நலன்களுக்கு மேலாக தேசிய நலன்கள் மிகக்கூர்மையாக முன்னுரிமைப்பெற்றுக் கொண்டு வருகின்றன. மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்குள்ளேயே மோதல்கள் வளர்ந்துள்ளன. அதற்கேற்ப ஐரோப்பா முழுவதன் நலன்களுக்காக நிதிச்சலுகளைகள் மற்றும் அரசியல் சலுகைகளைத் தருவதற்கு முன் வருகின்ற போக்கு சிதைந்து கொண்டுவருகிறது.

உச்சி மாநாட்டில் பிளேயர் பங்கெடுத்துக்கொள்வதற்கு முன்னர் பல்வேறு வட்டாரங்கள், முந்திய கருத்துவேறுபாடுகள் முடிவிற்கு வந்துவிட்டதாக கருத்துத் தெரிவித்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பதினைந்து உறுப்பினர்களிலிருந்து இருபத்தைந்து உறுப்பினர்களாக விரிவடைவதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் புதிய ஒற்றுமைக்கான ஒரு கட்டம் ஆரம்பித்துவிட்டதாகவும் கருத்துகள் வந்தன. அத்தகைய அர்த்தப்படுத்தல்கள் தவறானவை. இலண்டன், பேர்லின் மற்றும் பாரிஸ் இடையில் தற்காலிகமாக ஒற்றுமை உருவாகியிருப்பதற்கு பல்வேறு சிக்கலான காரணங்கள் உள்ளன. ஆனால் அந்த மூன்று நாடுகளுக்கிடையில் நிலவுகின்ற அடிப்படை முரண்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை.

லண்டனுடன் ஒத்துழைத்துச் செல்வது ஜேர்மனிக்கும் பிரான்சிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும், ஏனென்றால் ஈராக் போரைத் தொடர்ந்து இந்த இரண்டு நாடுகளும் ஐரோப்பாவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கான தங்களது நிலைப்பாட்டை உறுதியாக நிலைநாட்ட இயலவில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கான முடிவுகளை மேற்கொள்ளும்போது ''இரட்டை பெரும்பான்மை'' (double majority) என்ற நிலைப்பாட்டை வார்சாவும், மாட்ரிடும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு பிளேயர் நிர்பந்தம் கொடுக்க முடியும் என்று அவை இரண்டும் நம்புகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அரசியலமைப்பு சென்ற ஆண்டு தோல்வியடைந்தது. ஏனென்றால் இரட்டைப்பெரும்பான்மை முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஜேர்மனிக்கும், பிரான்சுக்கும் எதிராக எந்தவிதமான பொருளாதாரத் தடை நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று ஐரோப்பிய ஆணைக்குழு எடுத்த கருத்து வேறுபாடுகள் நிரம்பிய முடிவையும் லண்டன் ஆதரிக்கிறது. இரு நாடுகளும் திரும்பத்திரும்ப ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உறுதிப்பாட்டு ஒப்பந்தத்தை மீறி நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றின் மீது ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு எந்த எதிர் நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஐரோப்பிய ஒன்றிய முடிவை சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையாக கண்டித்து வருகின்றன. பிரான்சும், ஜேர்மனியும் மேற்கொண்டுவரும் நிதிக்கொள்கையை லண்டன் மன்னித்துவிடவில்லை ஆனால் தேசிய நிதி, வரிவிதிப்பு கொள்கையில் பிரஸ்ஸல்ஸ் தலையிடும் உரிமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ஜேர்மனி அரசாங்கத்தைப் பொறுத்தவரை இதுவரை பிரான்சு பின்பற்றிவரும் '' உயிர்நாடியான ஐரோப்பா'' என்ற பாதையை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறது. இந்த தத்துவம் பிரான்சும் ஜேர்மனியும் சிறிய நாடுகளுடன் சேர்ந்துகொண்டு இதர ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களது அக்கறைகளைப்பற்றி கவலைப்படாமல் ஐரோப்பாவின் முன்னணி நாடுகள் என்ன நிலையை எடுக்க வேண்டும் என்பதாகும். இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய ஜேர்மனியின் வெளிநாட்டுக்கொள்கை பிரான்சுடன் நல்ல உறவுகளை நிலைநாட்ட வேண்டும் அதே நேரத்தில் அதிக நெருக்கமாக ஜேர்மனியை முடிச்சுப்போட்டு விடக்கூடாது என்ற அடிப்படைக்கொள்கையை கொண்டதாகவே நீடித்துவருகிறது. வாஷிங்டனோடும் பாரிஸ்சுடனும் அதிக நெருக்கமில்லாமல் செயல்பட வேண்டும் என்பதே நோக்கம். எனவேதான் ஈராக் போரின் போது ஷ்ரோடர், பிளேயருடன் உறவு கொண்டார். அந்த நேரத்தில் சிராக்கிற்கும் பிளேயருக்குமிடையே உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தது.

டேவிட் கெல்லி விவகாரம் மற்றும் ஈராக்கிடம் பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள் உள்ளன என்ற பொய்மூட்டைகள் ஆகியவற்றால் உள்நாட்டில் எழுந்த அரசியல் நிர்பந்தங்களை தளர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக சிராக் மற்றும் ஷ்ரோடருடன் ஒத்துழைப்பதை பிளேயர் எடுத்துகொண்டார். மேலும், வாஷிங்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய போர் ஆதரவாளர்களுடன் அவரது நெருக்கமான உறவுகள் அவருக்கு ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் பலமான ஸ்தானத்தை வழங்கும் என்று அவர் உணர்கிறார்.

கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் இந்த மூன்று நாடுகளும் சில திட்டங்களில் பொதுவான நலன்களை பகிர்ந்து கொள்கின்றன. 1998 இல் சுதந்திரமான ஐரோப்பிய இராணுவ அதிரடிப்படை அமைக்கும் ஆலோசனைகளை லண்டன் ஆதரித்தது. ஆனால் இத்தகைய படை அமைக்கப்படுவது வெளியுறவு கொள்கைகளை செயல்படுத்துவதில் அதிகமான சுதந்திர தன்மைகளை நிலைநாட்டுவதற்கு ஒருவழியாக அமையும் என்று பிரான்சு கருதியது. ஐரோப்பிய வெளியுறவுக்கொள்கை லண்டன் வாஷிங்டனிலிருந்து வெட்டிக்கொண்டு செல்லும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்தது.

அமெரிக்காவுடன் போட்டி போடுவதற்கு வல்லமையுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான ஆயுதத்தயாரிப்புத் தொழிற்சாலை உருவாக்கவேண்டும் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டவட்டமாக ஆதரித்தது. இத்தகைய ஒரு வளர்ச்சி பிரிட்டிஷ் தொழிற்சாலைக்கு தெளிவான திட்டவட்டமான சாதங்கங்களை வழங்கும். ஏனென்றால் அவை முக்கியமாக ஐரோப்பிய சந்தையை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் ஐரோப்பிய ஆயுதத் தொழிற்சாலையில் பெரிய பங்கு வகிப்பவை.

இந்த பிரச்சனைகளுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறுகியகால நலன்களை பற்றிய உத்திகளும் பேர்லினில் பங்கு வகித்தன. உச்சிமாநாடு முடிந்த மறுநாள் பிரான்சு நாட்டின் பத்திரிகைகளில் இடம்பெற்ற தலைப்புகள் பிரான்சு நாட்டு உணவு விடுதிகளுக்கு VAT வரிவிதிப்பு 19.6 இலிருந்து 5.5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என்பதற்கு ஜேர்மனி தெரிவித்து வந்த எதிர்ப்புக்களை கைவிட்டு விட்டது என்பதை வலியுறுத்தி விளக்கும் வகையில் அமைந்திருந்தன. இந்த நடவடிக்கையால் பிரான்சு நாட்டு கருவூலத்திற்கு ஆண்டிற்கு 3 பில்லியன் யூரோக்கள் செலவாகும். இது பிரான்சின் முக்கியமான பிராந்திய தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் பிரான்சு நாட்டு வலதுசாரி அணிக்கு கிடைத்துள்ள மிகமுக்கியமான தேர்தல் பரிசாகும்.

இதில் ஷ்ரோடர், பிளேயர், சிராக் ஒன்று சேர்ந்ந்ததற்கு மிக முக்கியமான காரணம் அவர்களது அரசியல் பலவீனமாகும். இந்த மூவருமே உள்நாட்டு பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ளனர். பிளேயர் ஈராக் போர் தோடர்பாக கூறிய பொய்கள் அவரது சமூக பொருளாதார கொள்கைகளுக்கு பெருகிவரும் எதிர்ப்புக்கள்: சிராக் அவர் பாரிஸ் நகரத்து மேயராக இருந்த காலத்தில் புரிந்ததாக கூறப்படும் ஊழல் வழங்குகள் அவரது நெருங்கிய நம்பிக்கைக்கு பாத்திரமான Juppe அண்மையில் சிறைதண்டனைக்கு உள்ளானது. சிராக் தற்போது ஜனாதிபதியென்ற முறையில் அவருக்கு சட்டபாதுகாப்பு இல்லாதிருக்குமானால் அவரும் நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளை சந்திக்க வேண்டியிருக்கும் நிலை: ஷ்ரோடர் கொண்டு வந்திருக்கும் ''செயற்பட்டியல் 2010'' சிக்கன வேலைதிட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புகளால் அவர் ஏற்கெனவே தனது சமூக ஜனநாயக கட்சித்தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொள்தற்கான நிர்பந்தம் ஆகிய பல்வேறு உள்நாட்டு சிக்கல்களை இந்த மூன்று தலைவர்களுமே சந்திக்க வேண்டியுள்ளது.

ஷ்ரோடர், சிராக், மற்றும் பிளேயர், ஐரோப்பிய ஒன்றிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் இந்த மூன்று நாடுகளிலுமே பரந்த மக்கள் மிகக்கடுமையாக எதிர்த்து வருகின்ற மற்றும் ஏற்கனவே பெரும்கண்டன பேரணிகளுக்கு காரணமாக அமைந்த கொள்கைகளை ஆதரித்து வாதிடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த வகையில் பேர்லினில் இந்த மூவரும் நடத்திய உச்சி மாநாடு அரசியல் சதி அடிப்படையில் அமைந்ததே தவிர வேறு எதுவும் என்று தோன்றவில்லை. இவை சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எதிரானவை மட்டுமல்ல அதைவிட அதிகமாக தங்களது சொந்த நாட்டு மக்களுக்கே எதிரானவை.

Top of page