World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

Haiti: Thousands march in Port-au-Prince against US-backed coup

ஹைட்டி: அமெரிக்க ஆதரவினால் நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக போர்ட்-ஒ-பிரின்சில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி

By Keith Jones
6 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளியன்று Reuters செய்தி நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் போர்ட்-ஒ-பிரின்சிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு ஊர்வலமாக சென்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஜோன்-பேர்ட்ராண்ட் அரிஸ்டைட்டின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததற்கு எதிராக இந்தப்பேரணி நடந்தது. மேலும் கரீபியன் தீவு நாடான தங்களது ஹைட்டிலியிருந்து அமெரிக்க மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் உடனடியாக வாபஸ்பெறவேண்டும் என்று கோரினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ''புஷ் பயங்கரவாதி'' என்று கோஷமிட்டனர். மத்திய ஆபிரிக்க நாடு ஒன்றில் தற்போது அடைக்கலமாகியிருக்கும் தங்களது ஜனாதிபதி அரிஸ்டைட் தனது ஐந்து வருட பதவிக் காலத்தை பூரணமாக முடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். அரிஸ்டைட்டைத் தூக்கி எறிவதற்கு வாஷிங்டன் பயன்படுத்திய ஹைட்டியின் முன்னாள் இராணுவத்தினர், கொலைப்படை தலைவர்கள், குற்றவியல் கும்பல்களின் உறுப்பினர்கள் - கிளர்ச்சியாளர்கள் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படுபவர்கள் ஆகியோர் அரிஸ்டைட் வெளியேறிய பின்னர் போர்ட்-ஓ- பிரின்ஸ் நகரின் குடிசைப் பகுதிகளில் வெறியாட்டம் போடுவதாக குற்றம் சாட்டினர்

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஒரு ஆர்ப்பாட்டக்காரர் ''முதலாளித்துவ வர்க்கம் சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து கொண்டு ஹைட்டியை ஆக்கிரமித்து, ஜனாதிபதி அரிஸ்டைட்டை துரத்தியும் விட்டனர்'' என்று கூச்சலிட்டார். முதலாளித்துவ வர்க்கம் பரந்த மக்களாகிய எங்களுக்கு எதுவும் செய்ததே இல்லை. இப்போது எங்களது ஜனாதிபதியையும் துரத்திவிட்டனர்'' என்று குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டமானது துப்பாக்கி ஏந்தி போர்ட்-ஓ-பிரின்ஸ்ஸில் மக்களை தொல்லை கொடுத்து கொண்டிருந்த கிளர்ச்சியாளர்கள் மறைந்த பிறகு வெடித்தது. ஞாயிற்றுக் கிழமையிலிருந்து புதன் வரையிலும் கிளர்ச்சியாளர்கள் ஹைட்டியின் தலைநகரில் வெறியாட்டம் போட்டனர். அரிஸ்டைட்டின் ஆதரவாளர்களை அமெரிக்க கடற்படையின் நிலப்படையினர் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே கொன்று குவித்தனர். ஞாயிற்றுக்கிழமையில் அரிஸ்டைட் அவசரமாக வெளியேற்றப்பட்ட பிறகு அமெரிக்கப் படையினர் பெருமளவில் வர ஆரம்பித்திருந்தனர்.

பிரதமர் யுவொன் நெப்டியூனின் இல்லத்தை நோக்கி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் முன்னேறும் போதுதான் அமெரிக்க கடற்படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முற்பட்டனர். வாஷிங்டன் வெகுவிரைவில் அவரைப் பதவியிலிருந்தோ அல்லது ஒரேயடியாகவோ ஒழித்துக்கட்டிவிடும். அவரது மந்திரிசபையில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கோ, அல்லது தலைமறைவாகவோ ஓடி மறைந்துவிட்டனர். பிரதம மந்திரி கூட பல நிர்பந்தங்களுக்கு உட்பட்டுதான் பிரதமராகவே நீடிக்கிறார். இல்லையென்றால் எப்போதோ கொலைக்காரர்களின் கையில் சிக்கியிருப்பார். இப்போதைக்கு நெப்டியூன் பதவியில் இருப்பதுதான் அரசியல் ரீதியில் நல்லதாக இருக்கும் என்று அமெரிக்க நினைத்திருக்கிறது.

வார மத்தியில், புஷ் நிர்வாகம் கிளர்ச்சியாளர்களை - வெளிவிவகார இணைச்செயலாளர் ரோஜர் நொரிகாவின் வார்த்தைகளில் சொல்வதென்றால் அவர்களே உடனடியாக ''மறைந்து'' விட வேண்டும் - கொஞ்சம் அதிகமாக கடுமையான முறையில் எச்சரித்ததற்குக்காரணம் இருக்கிறது. ஏற்கனவே சிதைந்து இருக்கும் ஹைட்டியின் கலகலத்துப்போன ஜனநாயகத் தோற்றத்திற்குப் பின்னால் நிகழ்ந்த ரத்தகளரியான கவிழ்ப்பை மறைப்பதற்கான வாஷிங்டனின் முயற்சிகளை அவர்கள் இடையூறு செய்வதால்தான்.

நடத்தப்பட்ட படுகொலைகளைப் பற்றி யாரும் ரொம்பவும் அலட்டிக்கொள்ளவில்லை. ரொம்பவும் ஒத்துப்போகக்கூடிய சர்வதேச தொலைத்தொடர்பு சாதனங்கள் இக்கொலைகள் அரிஸ்டைட் சமீப காலத்தில் மிகவும் நம்பிய chimères என்கிற ஆயுதம் தாங்கிய கும்பலை பழி வாங்குகிற நடவடிக்கைகள் என்று விளக்கம் கூறித் தப்பித்துக் கொள்ள முடியும். வாஷிங்டனை கடுப்பேற்றிய விஷயம் என்னவென்றால் சர்வதேச தொலைத்தொடர்பு ஊடகங்களுக்கு முன்னால் வந்து கிளர்ச்சியாளர்கள் பற்றிய அளித்த பேட்டிகள் தாம். கிளர்ச்சியாளர்கள் கமாண்டரான கய் பிலிப்பி அவர் பக்கத்தில் FRAPH கொலைப்படையின் தலைவர் லூயிஸ் ஜோடல் சாம்பிளின் ஆகியோர் சர்வதேச பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும் போது, பிலிப் தன்னை ஹைட்டி நாட்டின் பாதுகாப்பு பொறுப்பாளர் என்று அறிவித்துக் கொண்டதுடன் ஹைட்டியின் அடுத்த ஆட்சியின் தலைவரும் தான்தான் என்றும் அறிவித்தார். ஆயுதங்களைக் கீழே போடுவார்களா என்று கேட்கப்பட்டதற்கு அமெரிக்க தலைமையில் உள்ள படையினரை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.

புஷ் நிர்வாகம் வேறுவழியில்லாமல் பிலிப்பையையும் அவரது படையினரையும் குண்டர் என்றும் கிரிமினல்கள் என்றும் திட்டித்தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்மாதிரியான கூச்சல்கள் எதுவுமே வாஷிங்டன் இவர்களை போன்றவர்களைத்தாம் போர்ட்-ஓ-பிரின்ஸ்ஸிற்கு வரவேற்று தன் நெடுநாளைய இலக்கான ஹைட்டியின் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது என்பதை மறைக்க முடியாது.

ஏனென்றால் கடந்தவாரத்தில்தான் வலதுசாரியான குடியரசுக் கட்சியின் நெடுநாளைய ஆதரவுப் பத்திரிகையான வீக்லி ஸ்டாண்டர்ட் குறிப்பிட்டது என்னவென்றால், ''பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவும் நடக்கும் நிகழ்வுகளை வைத்துப்பார்க்கும்போது அரிஸ்டைட்டின் வன்முறை ஆட்சிக்கு எதிராக துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள்தாம் ஏதாவது சாதிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.''

மாற்றி எழுதப்படும் வரலாறு

கிளர்ச்சியாளர்களுக்கான அமெரிக்காவின் ஆதரவு மிகவும் வெளிப்படையானதாக இருந்தது. அவர்கள் ஹைட்டியின் தலைநகருக்கு நுழைவதும் அதேபோல அமெரிக்க மற்றும் பிரெஞ்சு படைகள் நிறைவதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டப்படி தான் நிகழ்ந்திருக்கிறது. இதை இப்போது புஷ் நிர்வாகம் அவசரத்துடன் வரலாற்று உண்மைகளை திரிக்கப்பார்க்கிறது. கடைசியாக கிடைத்த தகவல்களின்படி அமெரிக்கா வெளிப்படையான எந்த கட்டத்திலும் அரிஸ்டைட் பதவி விலக வேண்டும் என்று கோரவில்லை.

ஆயுதம் தாங்கிய ஆட்சிக் கவிழ்ப்பை தடுக்க சர்வதேச பாதுகாப்புப் படையை அது தடுக்கின்ற அதேவேளை, அரிஸ்டைட் ''தனது நிலையை மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும்'' என்று மட்டும் அமெரிக்கா நிர்பந்தம் கொடுத்தது. அவர் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் கிளர்ச்சிக்காரர்கள் மூலமாகக் கொல்லப்படுவதை தாங்கள் தடுக்கப்போவதில்லை என்பதை அமெரிக்க அதிகாரிகள் அரிஸ்டைட்டிடம் கூறினர், அதுவும் இல்லாமல் தனது பாதுகாப்பை மேம்படுத்த ஹைட்டியன் ஜனாதிபதி செய்த முயற்சிகளையும் தடுத்துவிட்டது.

மியாமி ஹெரால்ட் என்ற பத்திரிகையின் நிருபர் ஜீவான் ஓ. டாம்யோ பத்திரிகையில் குறிப்பிட்டதாவது: அரிஸ்டைட்டின் பாதுகாப்பிற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து தன்னைக் காப்பாற்ற மேலும் பாதுகாவலர்களை அனுப்புமாறு அரிஸ்டைட் கேட்டுக்கொண்டிருந்தார். "ஹைட்டியின் ஜனாதிபதி ஜோன்-பேர்ட்ராண்ட் அரிஸ்ட்டைட் தன்னை பாதுகாத்துக்கொள்ளச் செய்த கடைசி நேர முயற்சியையும் அமெரிக்க மெய்காவலர்கள் தடுத்துவிட்டனர். இந்த மெய்காவலர்களில் பெரும்பான்மையோர் அமெரிக்க முன்னாள் சிறப்புப்படையில் பணியாற்றியவர்கள்" என்று டாமயோ "விவரம் தெரிந்த வட்டாரங்களை" மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. "சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டீல் பெளண்டேஷன் என்கிற பாதுகாப்பு நிறுவனத்திலிருந்து மேலதிக மெய்க்காவலர்களின் சிறு குழுவை அமெரிக்காவிலிருந்து ஹைட்டிக்கு செல்லும் அவர்களின் விமானத்தை தாமதப்படுத்தும்படி வாஷிங்டன் நிர்பந்தித்தது", அவர்கள் ஹைட்டிக்கு சென்றாலும் அரிஸ்டைட்டைக் காப்பாற்ற முடியாமல் போகுமளவிற்கு காலதாமதமாக இருந்தது என்று கூறியது.

கரீபியன் தீவு அரசுகளின் ஏழ்மை பீடித்த அரசாங்கங்களில் எதுவும் இதுவரை வாஷிங்டனுடன் மோதல்போக்கை மேற்கொண்டதாக வரலாறு இல்லை. ஆனாலும் இப்பிராந்தியத்தின் முக்கிய பெரும் வல்லரசுகளான பிரான்ஸ், மற்றும் அமெரிக்க ஐக்கிய அரசுகள் ஜனநாயக முறையில் அரசியலமைப்புக்கு உட்பட்டு தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தை தூக்கி எறிவதில் தயக்கமின்றி ஈடுபட்டமுறையானது மேற்படி அரசுகளை நிதானிக்கவைத்திருக்கிறது. கரீபியன் தீவு நாடுகளின் கூட்டமைப்பான CARICOM உள்-அரசு அமைப்பு, அரிஸ்டைட்டை வெளியேற்றியதில் வாஷிங்டன் மற்றும் பாரிசின் பங்கு பற்றி விசாரிக்கவேண்டியது அவசியம் என்று கோரியிருக்கிறது. அரிஸ்டைட் பதவியிழந்த விதமானது "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிற இடங்களில் உள்ள அரசுகளின் எதிர்கால நிலைகுறித்து அபாயகரமான முன்னோடியாகவும் இருப்பதாக" எச்சரித்திருக்கிறது.

ஐ.நா.பாதுகாப்பு சபை ஹைட்டிக்கு துருப்புக்கள் அனுப்புவது என்று எடுத்த முடிவைக்குறித்து ஜமைக்காவின் பிரதம மந்திரி P.J. பேட்டர்ஷன் தெரிவித்ததாவது, பெப்ரவரி 26 வியாழன் அன்று ஹைட்டிக்குப் படைகளை அனுப்ப இயலாமையாக இருந்தது, அரிஸ்டைட்டை துரத்தியவுடன் புஷ்ஷின் பெப்ரவரி 29-ஞாயிறன்று கூட்டப்பட்ட அவரசக்கூட்டத்தில் நிறைவேற்றப்படக் கூடியதாக முடிந்தது என்பதை தங்களால் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.'' "நடவடிக்கை எடுக்கத் தவறியது குறித்து நாங்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம்" என்றார்.

புஷ் நிர்வாகம் CARICOM-ன் கூறியவற்றை ஒதுக்கித்தள்ளியது. இதில் விசாரணை செய்வதற்கு எதுவுமில்லை என்று அரசுத்துறையின் அதிகாரபூர்வ பேச்சாளர் ரிச்சார்ட் பெளச்சர் ''அரிஸ்டைட்டை கீழிறக்குவதை நாங்கள் ஆதரிக்கவில்லை" என்றும் தெரிவித்தார்.

மற்றொரு போலியான நிலைப்பாடு என்னவென்றால் கிளர்ச்சியாளர்களும், அரிஸ்டைட் மற்றும் அவரது லாவலாஸ் கட்சியை எதிர்க்கும் தாங்களாகவே அறிவித்துக் கொண்ட அரசியல் எதிர்ப்பும்- ஜனநாயக மேடை- வெவ்வேறானவர்கள் என்ற புஷ் நிர்வாகத்தின் பாசாங்கு போலித்தனத்திற்குக் குறைந்ததல்ல. இதில் ஒரு பகுதி கொலைகளின் மூலமாக அடக்குமுறை ஆட்சி செய்துவருபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், மற்றொரு பிரிவு சமுதாய நலன்பற்றி பேசுபவர்கள். இவர்கள் டுவாலியர், ஆவ்ரில் மற்றும் செட்ராஸ் போன்ற சர்வாதிகார ஆட்சிகளை ஆதரித்த அதே பணத்திற்கு விலைபோகும் அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள்தான் ஜனநாயக மேடைக்கு தலைமை வகிக்கின்றனர். இந்த அமைப்புத்தான் கிளர்ச்சியாளர்கள் வெற்றிபெற ஆரம்பித்த உடனே அவர்களை வரவேற்பதில் தயக்கம் காட்டவில்லை. கிளர்ச்சிக்கார்கள் ஹைட்டியின் வடக்குப்பகுதி முழுவதும் பிடித்து தலைநகரை நோக்கி வரப்போவதாக அச்சுறுத்திக்கொண்டிருந்தபோது இவர்களுடைய ஆர்வம் அதற்கேற்றாற்போல் உச்சிக்கு சென்றது.

திங்களன்று ஜனநாயக மேடை தலைவர்களில் ஒருவரும் முன்னாள் போர்ட்-ஓ-பிரின்ஸ்ஸின் மேயருமான இவான் போல் கிளர்ச்சிப்படையினரின் கமாண்டரான கேய் பிலிப்பை மிகவும் புகழ்ந்தார். ஜனநாயக மேடையின் மற்றொரு பேச்சாளரான மைகேல் கெல்லார்ட் மேற்படி சந்திப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ''அந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றது'' என்றார். வடபகுதியின் இராணுவ சக்தி சுதந்திரமானது, சக்திமிக்கது மற்றும் மக்களின் ஆதரவை பெற்றது என்று நாங்கள் நிலைநாட்டியுள்ளோம். நாங்கள் எந்தவித வகையிலும் அதை எதிர்க்கவில்லை'' என அறிவித்தார்.

வெள்ளியன்று கிளர்ச்சிக்காரர்களும், அரசியல் வாதிகளும், மறுபடியும் சந்தித்தனர். அதற்கு முன்தினம் பிரான்சு நாட்டைச்சேர்ந்த LCI தொலைக்காட்சிக்கு இவான் போல் கூறியதாவது, "நாங்கள் திரு. பிலிப் மற்றும் இந்த ஆட்சிக்கு எதிராக போராடிய அனைத்துப் பிரிவினருடனும் இணைந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இவர்களும் திரு. அரிஸ்டைட்டைப் பதவியிலிருந்து அடித்துச்சென்ற பெரும் எழுச்சியில் முக்கியப்பங்காற்றி இருக்கிறார்கள்.''

கிளர்ச்சியாளருடன் இணைந்து செயலாற்ற தாங்கள் தயாராக இருப்பதைக் குறித்து அறிவித்தப்படி இருக்கும் ஜனநாயக மேடையின் அமைப்பினர் அதேவேளையில் தங்களது எதிர்க்கட்சியினரான லாவாஸ் கட்சியினர் ஒழிக்கப்படவேண்டும் என்றும் கூக்குரலிட்டவண்ணம் இருக்கின்றனர். நெப்டியூன் மற்றும் லாவாலஸ் கட்சி தலைவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

ஆயுதக் களைவு மோசடி

கிளர்ச்சியாளர்கள் எதிர்காலம் குறித்து புஷ் நிர்வாகத்தினரின் தற்போதைய வாய்வீச்சுகள் ஜனநாயக மேடை தலைவர்கள் சொல்வதிலிருந்து வேறுபடுவதுபோல தோன்றும். ஆனால் அவர்களின் தற்போதைய அட்டூழியங்களுக்கு எதிர்காலத்தில் பதிலளிக்குமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்பது மட்டுமல்ல வரும் காலங்களில் தேவைப்படும் நேரங்களில் ஹைட்டிய பரந்த மக்களை பீதியுறவைக்க அவர்கள் அதே நிலையில் வைக்கப்படுவார்கள் என்றும் நம்ப அனைத்துக் காரணங்களும் இருக்கின்றன.

அமெரிக்க கோரிக்கைகளுக்கு தலைவணங்கி, தங்களது ஆயுதங்களை கீழே போடுவதற்கு தயாராக இருப்பதாக சொல்கிறார் பிலிப். ஆனால் அமெரிக்க இராணுவம் தாங்கள் இவ்வாறான பணியில் ஈடுபடப்போவதில்லை என்று தெளிவாக அறிவித்துள்ளது. அமெரிக்கத் தலைமையில் இருக்கும் சர்வதேச படையின் சார்பில் குரல்தரவல்லவரான ரிச்சார்ட் க்ரூஷன் நிருபர்களுக்கு தெரிவித்ததாவது: ''நாங்கள் (கிளர்ச்சிக்காரர்களின்) ஆயுதங்களை தொடக்கூட விரும்பவில்லை. அது ஹைட்டியின் போலீசின் வேலை" என்று கூறினார்.

ஹைட்டியின் தேசிய போலீஸ்துறை வெளிப்படையாகவே, கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது கேய் பிலிப் ஒருகாலத்தில் இந்த துறையின் தலைவராக இருந்தார். கடந்த ஞாயிறன்று கிளர்ச்சியாளர்கள் போர்ட்-ஓ-பிரின்ஸ்சின் உள்ளே நுழைந்தபோது தேசிய போலீஸ்படையினர் உடனடியாக அவர்களுடன் சேர்ந்துகொண்டு அரிஸ்டைட்டின் ஆதவராளர்களுக்கு எதிரான தாக்குதலில் தங்களையும் இணைத்துக்கொண்டனர்.

கிளர்ச்சியாளர்களின் ''அரசியல் பேச்சாளர்", பக்கத்து நாடான டோமினிக்கன் குடியரசுக்கு முன்னாள் ஹைட்டிய தூதுவராக இருந்வரான, போல் அர்சேலின், 'கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை துறக்கமாட்டார்கள் என்று பகிரங்கமாகவே தெரிவித்திருக்கிறார். ஆயுதங்களை அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டதற்கு ''நாங்கள் அவற்றை மறைத்துவைப்போம்'' என்று பதிலளித்தார்.

ஹைட்டியின் செல்வந்த தட்டு வாஷிங்டனின் ஒத்துழைப்போடு பல ஆண்டுகளாக மக்களை சர்வாதிகாரத்தின் மூலமாகவும், பயங்கரவாதத்தின் மூலமாவும்தான் ஆட்சி புரிகின்றனர். சமூக சமத்துவமின்மை அமெரிக்க நாடுகளோடு சமமற்ற வகையில் பரந்த மக்கள் வறுமை நிலை இவற்றால் எழும் மக்களின் கோபத்தை சமாளிக்க ஆட்சியாளர்களுக்கு இதுதான் ஒரே வழியாக இருக்கிறது. அரிஸ்டைட்டுக்கு இருந்த பொதுமக்களின் ஆதரவு குலைந்ததற்கு காரணம் IMF-ன் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தியது, இன ரீதியிலாக செயல்பட்டது மற்றும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள வன்முறையை உபயோகித்தது ஆகியவைதான். அதே நேரத்தில் புஷ் நிர்வாகம் கொத்தடிமை முறையிலான தொழிலாளர்களை பிழிந்தெடுக்கும் பெரும் முதலாளிகள் மற்றும் சிறு வியாபாரிகள் இவர்களைச் சார்ந்து இயங்கும் ஜனநாயக மேடைகள் ஆகியவை இறுதியாக கிளர்ச்சி செய்யும் குண்டர்களை நம்பித்தான் அரிஸ்டைட்டின் வெளியேற்றத்தை நிகழ்த்த முடிந்தது. ஏனென்றால் இவர்களால் பொதுமக்களின் ஆதரவை திரட்ட முடியவில்லை.

இதை குறிப்பிட்டாலும், கூட ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், அரிஸ்டைட் பின்பற்றிய குட்டி-முதலாளித்துவ தேசியவாத அரசியல்தான் ஹைட்டியில் பிற்போக்கின் எழுச்சிக்காக வழி திறந்து விட்டது மற்றும் ஹைட்டியின் பாரம்பரிய செல்வந்தத் தட்டு வாஷிங்டனுடன் கூட்டு சேர்ந்து தங்கள் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முடிந்தது.

டுவாலியரின் சர்வாதிகாரத்தை வீழ்த்திய பரந்த சமூக எழுச்சி மற்றும் ஹைட்டி அடுத்த ஐந்து வருடங்கள் கொந்தளிப்பில் இருந்ததன் விளைவாக அரிஸ்டைட் அதிகாரத்திற்கு கொண்டுவரப்பட்டார். இதன் காரணமாக அவர் வோல் ஸ்டிரிட், குடியரசுக்கட்சியின் அமைப்பு மற்றும் ஹைட்டியின் முதலாளித்துவம் ஆகியோரின் எதிர்ப்பை சம்பாதித்தார். ஆனால் 1991-ல் அமெரிக்க உதவியுடன் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு பிறகு அரிஸ்டைட் தனது ஆதரவாளர்கள் அமெரிக்காவை எதிர்க்க வேண்டாம் என்று கட்டுப்படுத்திவிட்டார். ஏகாதிபத்தியத்தையும் அதன் ஹைட்டியின் ஆதரவாளர்களையும் எதிர்ப்பதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு வேண்டுதல் விடுக்கத் திராணியற்ற அவரது வர்க்கக் கண்ணோட்டத்தால், அரிஸ்டைட் வாஷிங்டனின் காலடியில் விழுந்தார், தனக்கு ஹைட்டியின் மக்கள் ஆதரவு இருப்பதன் காரணமாக சமூகத்தில் நிலவும் அமைதியின்மையும், பதட்டங்களையும் இராணுவ ஜெனரல்களைக்காட்டிலும் தன்னால் ஒழுங்காக கையாள முடியும் என்று வாதாடி ஆதரவு கோரினார்.

1994-ல் மறுபடியும் அதிகாரத்திற்கு வந்ததும், அவருடைய குறைந்தபட்ச சீர்திருத்த நடவடிக்கையையும் கைவிட்டார், அடுத்த பத்தாண்டுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகமோ, அதிகாரத்தை இயக்குபவராக இருந்த காலகட்டத்தில் சமுதாயத்தை சீரழிக்கும் IMF-இன் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டினார். ஹைட்டியின் பாரம்பரிய செல்வந்ததட்டினரை எதிர்த்தப்போது வாஷிங்டனின் ஆதரவை பெறுவதின் அடிப்டையில்தான் இருந்தது. வாஷிங்டனை பொறுத்தவரை ஹைட்டியை எப்போதுமே பொருளாதார மற்றும் தேசிய அடிமைத்தனத்தில் வைத்திருப்பதில் பெரும்பங்கு வகித்துவந்தது. அரிஸ்டைட்டுக்கு உதவும் ஆதரவு உறுதியுடன் விலகிக்கொள்ளப்பட்டபோது, இவரது ஆட்சி, பெரும் பணமும் ஆயுதமும் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பொழுதும், எண்ணிக்கையில் மிக குறைந்த அளவிலான கிளர்ச்சியாளர்களின் முன்னால் சக்தியற்றதாக ஆனது.

ஹைட்டி உழைக்கும் மக்களின் மிகவும் அரசியல்ரீதியாக முன்னேறிய தட்டு, நடந்தவை குறித்து விமர்சனரீதியாக, கசப்பான மூலோபாய அனுபவங்களை உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும். ஏகாதிபத்திய ஒடுக்குமுறையை தேசியவாத அடிப்படையில் தீர்க்க முடியாது. இதற்கு, ஹைட்டிய தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைமக்கள், கரீபியன் மற்றும் அமெரிக்காவிலிருக்கும் தொழிலாள வர்க்கத்தினர் மற்றும் பரந்த மக்களால் ஆன, பூகோள முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டம் தேவைப்படுகிறது.

See Also :

அமெரிக்கா ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து ஹைட்டியில் பயங்கர நடவடிக்கைகள்

அரிஸ்டைட் கடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்களுக்கிடையில் அமெரிக்க கடற்படையினர் ஹைட்டி தலைநகரை ஆக்கிரமித்துக் கொண்டனர்

ஹைட்டியின் அரிஸ்டைட் தூக்கிவீசல்: அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு

ஹைட்டியின் "அகிம்சை வாத" எதிர்க்கட்சி போர்ட்-ஒ-பிரின்சில் ஓர் இரத்தக் களரியை விரும்புகிறதா?

வலதுசாரி தலைமையிலான கிளர்ச்சிஎழுச்சி ஹைட்டியை அதிரவைக்கிறது

 

Top of page