World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government attacks labour laws, working conditions

பிரெஞ்சு அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டங்கள், பணிபுரியும் நிலைமைகள் மீதான தாக்குதல்கள்

By Francis Dubois and Françoise Thull
21 February 2004

Use this version to print | Send this link by email | Email the author

பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், தனது புத்தாண்டு உரையில் சமூக சேவைகள் மீதான புதிய தாக்குதல்களை அறிவித்ததை தொடர்ந்து, தேசிய நாடாளுமன்றத்தில் ''சமூக பேச்சுவார்த்தை சட்டத்தின்'' முதலாவது வாசிப்பு நடைபெற்றது. வேலைவாய்ப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் பிரான்சுவா பியோன் (François Fillon) உருவாக்கிய இந்தச் சட்டமானது பிரான்சில் நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டங்களை சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரான்சின் தொழிற்சாலைகளுக்கு சர்வதேச பெரு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களை அதிகமாக கவர்ந்திழுப்பதற்காகவும், அதேநேரத்தில் உள்ளூர் தொழில்கள் பூகோளச்சந்தைகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை, அதற்கான நிலைமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதுதான் அரசாங்கத்தின் இந்த உத்தேச நடவடிக்கைகள் ஆகும். தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் கடந்த காலத்தில் அவர்கள் பெற்றுவந்த நன்மைகளையும் ரத்து செய்வதாகத்தான் இது அமையமுடியும். உழைப்புச் சந்தை அதிக நெகிழ்வுத் தன்மை உடையதாகவும், சமூக செலவின சுமையிலிருந்து அரசுப் பொருளாதாரத்தை விடுவிக்கவும், மற்றும் இலாபத்தை உச்ச அளவு ஆக்குவதற்கு உள்ள சட்டத்தடைகளை நீக்கவும் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இதனால், கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கும் முன்பு நிலவிய தொழிலாளர்களின் சமூக உரிமைகள், ஊதியங்கள் மற்றும் பணி நிலைகளுக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள்.

இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு பிரெஞ்சு அரசாங்கம் அமைத்துள்ள ''நிபுணர்கள்'' கமிஷனில், அரசு அதிகாரத்துவ மற்றும் வர்த்தகர்கள் இடம்பெற்றுள்ளனர். ரெனோல்ட் (Renault) கார் உற்பத்தி தொழிற்சாலை ஊழியர் நியமண இயக்குநரும், அந்த நிறுவன நிர்வாகக்குழு உறுப்பினருமான மிஷல் டூ வேர்வில் (Michael de Virville) இந்த முன்மொழிவு தொழிலாளர் சட்டங்களை உருவாக்கியுள்ளார். அத்துடன், பிரான்சுவா மித்திராண்ட் மற்றும் லியோனல் ஜொஸ்பன் அரசாங்கங்களில் (சோசலிஸ்ட் கட்சி - PS) சமூக சேவைகள் அமைச்சக அரசாங்க செயலராக பணியாற்றிவந்த ஜோன் மரின்பேர் (Jean Marimbert) மற்றொரு நிபுணராகும். இவர் தேசிய வேலைவாய்ப்பு ஏஜென்சியின் (ANPE) முன்னாள் தலைவருமாவார்.

தொழிலாளர் சட்டங்களை சீர்குலைத்தல்

ஏற்கெனவே நடைமுறையிலுள்ள தொழிலாளர் சட்டங்கள் என்பன தொழிலாளர் நெறிமுறையின் (Code du travail) கீழ் வருபவை ஆகும். பியோன் உருவாக்கியுள்ள ''சமூக பேச்சுவார்த்தை சட்டங்கள்'' இவற்றிற்கு எதிராக அமைந்திருக்கின்றன. வழக்கமாக தேசிய அல்லது ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலைக்கென்று வகுக்கப்படும் ஊதிய விகித ஒப்பந்தங்கள் ஆகியன, புதிய சட்டப்படி ''பல்வேறு வகையான உடன்படிக்கைகள்'' ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் ஏற்றபடி உருவாக்க வகைசெய்கிறது. இதன்படி தனிப்பட்ட ஒவ்வொரு தொழிலும் தங்களது சொந்த உடன்படிக்கை நிபந்தனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். இதில் இன்னொரு புதுமையும் புகுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் மிகக்குறைந்த உறுப்பினர் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்ட சிறிய ஒரு தொழிற்சங்கம், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டால் போதும் அது சட்டபூர்வமாக ஆகிவிடும்.

பிரான்சில் நடைமுறையிலுள்ள தொழிலாளர் நெறிமுறையின் கீழ் விரிவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையில், நடுவர் மன்றங்களின் செல்வாக்கை குறைக்கின்ற வகையில் தற்போது நடைமுறை ஒப்பந்தங்கள் என்ற ஒன்று புகுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங்களின் நடைமுறைப்படி, தொழிலாளர்கள் பாரியளவில் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள். அத்தோடு, கண்டனப்பேரணிகள், ஆர்பாட்டங்களை தடைசெய்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டது அல்லது தொழிற்சாலை மோதல்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்படும் வழக்குகள் குறைக்கப்படுகின்ற வாய்ப்புக்களும் இதனால் உருவாகின்றன.

தொழிலாளர் நீதிமன்ற நீதிபதிகள் அடிக்கடி முதலாளிகளுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பளிக்கின்றனர். இருந்த போதிலும், தொழிலாளர் நீதிமன்ற நடைமுறைகள் தொழிலதிபர்கள் தரப்பில் முள்ளாக குத்திக்கொண்டே நிற்கின்றன. சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்னோட் டூ மொன்ட்பேர்க் (Arnaud de Montebourg) என்பவர் இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது ''இப்படித்தான் பிரான்சுவா பியோன் பொது அலட்சியப்போக்கிற்கு நடுவில் சட்டபூர்வமாக தொழிலாளர் நெறிமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்'' என்று கூறினார்.

பகுதி நேரமும், தற்காலிகப்பணிகளும்

அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றத்தில் ''வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான சட்டம்'' அறிமுகப்படுத்தப்படும் என்று சிராக் அறிவித்தார். இந்தச் சட்டம் தற்காலிகப் பணிகளுக்கும் (CDD-contrat a durée déterminé) ''குறுகிய காலப்பணிகளுக்கும்'' வகை செய்யும். தற்காலிக பணி ஒப்பந்தங்கள் இதற்கு முன்னர் அதிகபட்சம் 18 மாதங்களுக்குத்தான் செல்லுபடியாகும். இனி இந்த ஒப்பந்தங்களை ஐந்தாண்டுகள் வரை நீடிக்க முடியும்.

இந்தச் சட்டம் புதுமையான பணி ஒப்பந்தத்திற்கும் வகை செய்கிறது. அதாவது, ஒரு ''திட்ட ஒப்பந்தம்'' அல்லது ஒரு குறிப்பிட்ட பணி முடியும் வரை இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும். ''நிரந்தரமற்ற பணிகள் நிறைவேற்றி முடிக்கப்படும்வரை முதலாளிகளுக்கும் தற்காலிக ஊழியருக்குமிடையே இத்தகையப்பணி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

இந்த வகையான பணி ஒப்பந்தங்கள் ஏற்கெனவே முதலாளிகளின் அமைப்பான Medef மூலம் 1999 ல் ''சமூக மாற்றம்'' என்ற திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த அமைப்பு தீவிரமான சட்டத் தளர்வுகளை வலியுறுத்தியது. அப்படியிருந்தும் அன்றிலிருந்து இன்றுவரை தொழிற்பாதுகாப்பு இல்லாத தற்காலிக அல்லது தினக்கூலிப்பணிகள் கண்டிப்பாக நெறிமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அல்லது மிகக்குறைந்த அளவிற்கு அவை நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் இந்தப் புதிய சட்டங்கள் பிரான்சில் தொழிலாளர் சந்தை முழுவதையும் இது போன்ற ஒப்பந்தங்களுக்கு திறந்துவிடும் உபகரணமாகிவிடும்.

''குறைந்தபட்ச வருமானம்'' என்று அழைக்கப்படும் RMA என்ற திட்டத்தின்கீழ் ''நீண்ட காலமாக வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித்தவிப்போர் பணிகளில் சேருவதற்கு உதவி செய்யப்படுமென்று'' சிராக் அறிவித்தார். ''வேலையில்லாதிருப்போர் அரசாங்க சமூக பாதுகாப்பு பெறுவதற்கு பதிலாக ஏதாவதொரு வேலையில் சேர்ந்து ஊதியம் பெறுவது தெளிவான பயன்களைத் தரும்'' என்று தனது நடவடிக்கைகளை சிராக் நியாயப்படுத்தினார். RMA உருவாக்கப்பட்டதற்கான அடிப்படையானது, இப்போது மாதத்திற்கு 411 யூரோக்கள் (521 அமெரிக்க டாலர்கள்) உத்திரவாத குறைந்தபட்ச வருவாய் (RMI) பெற்று வருவதற்குப் பதிலாக, குறைந்த ஊதியப்பணியை நிரந்தரமாக்குவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் RMI பெற்றுக்கொண்டிருப்பவர்கள் ஒரு தொழிற்சாலையில் பகுதிநேர ஊழியராகவோ அல்லது குறைந்தபட்ச வருமான வரம்பிற்கு மேலாகவோ ஊதியம் கிடைக்கும் பணியில் அமர்த்தப்படலாம். உள்ளூர் அரசாங்கம் முதலாளிகளுக்கு RMI ஐ வழங்கும்போது, அவர் இதனுடன் சேர்த்து இதற்கு மேற்பட்ட சிறிய தொகையை தொழிலாளர்களுக்கு வழங்குவார். முழுநேர ஊழியர்கள் அந்தஸ்து இத் தொழிலாளர்களுக்கு கிடைக்காது. இதர ஊழியர்கள் பெறுகின்ற சமூக நலன்களில் கால்பகுதிதான் இவர்களுக்கு கிடைக்கும். (ஓராண்டு பணியை பூர்த்தி செய்தால்தான் மூன்றுமாத பணிக்கால பென்ஷன் உரிமைகள் கிடைக்கும்) RMA உடன்படிக்கையானது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும். அதை இரண்டுமுறை நீட்டிப்புச்செய்து அதிகபட்சம் 18 மாதங்கள் வரை நடைமுறைப்படுத்தப்படலாம்.

ஏற்கெனவே தற்காலிகப் பணி உடன்படிக்கைகளின் கீழ் பிரான்சில் 1 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். பகுதிநேர அல்லது தினக்கூலி ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் ஏறத்தாழ 2.7 மில்லியன் மக்கள் அல்லது ஊதியம் பெறுபவர்களில் 12 சதவீதம் பேர் பாதுகாப்பு எதுவுமில்லாத பணிகளில் உள்ளனர்.

இதற்கு முன்னர் இருந்துவந்த பொதுவான முழுநேர பணி ஒப்பந்தங்களுக்கு பதிலாக இது போன்ற பாதுகாப்பற்ற பணிநிலைகள் மிகப்பெருமளவில் பெருகிக்கொண்டு வருகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் தொழில் பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது. பணியாற்றும் நிலைமை தொடர்பான நெறிமுறைகளும் கிடையாது. அவற்றோடு தொடர்புடைய மருத்துவ காப்பீடு, ஓய்வூதியம், வேலையில்லாதவர்களுக்கான காப்பீடு மற்றும் விடுமுறை நாட்களுக்கான ஊதியங்கள் ஆகிய அனைத்து சலுகைகளையும் இழந்து விடுகிறார்கள். இதுதான் சிராக் சித்தரித்துக்காட்டியுள்ள ''வேலைவாய்ப்பு ஊக்குவிப்பின்'' உண்மையான நிலவரமாகும்.

வர்த்தக முதலாளிகளை ஊக்குவித்தல்

''தற்சார்பு நிலையை ஊக்குவிக்க'' சிராக் விரும்புகிறார். ''நமது நாட்டில் போதுமான அளவிற்கு தொழில் முகவர்களில்லை'' என்று குறிப்பிட்டு, ''தனிநபர் தொடங்கும் புதிய வர்த்தகத்திற்கு'' சிறப்புச் சட்டம் ஒன்றை அறிவித்தார். அந்தச்சட்டம் வர்த்தகத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் பாதுகாப்பான பணிகள் கிடைக்கும் என்றும் புதிய நிலைப்பாடுகள் தொழிலாளர்களுக்கு உருவாகுமென்றும் அவர் வலியுறுத்தினார்.

முதலாளிகள் கூட்டத்தில் உரையாற்றிய சிராக் வர்த்தக வரிகள் தொடர்பான உத்தேச சீர்திருத்தத்தையும் அறிவித்தார். ஒவ்வொரு தொழிலும் தொடங்கப்படுவதற்கு பணியாற்றும் தொழிலாளர் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு விதிக்கப்பட்டுவரும் தொழில்வரி, முன்தேதியிட்டு 18 மாதங்களுக்கு 2004 ஜனவரி 1 லிருந்து வரிவிலக்கு தரப்படும் என்று அறிவித்தார். அத்துடன் நீண்டகால அடிப்படையில் இந்தத் தொழில் வரியையே ரத்து செய்வதற்கு சிராக் திட்டமிட்டுள்ளார். அதற்கு பதிலாக ''தொழிற்துறையை தண்டிக்காத ஒரு நடைமுறையை உருவாக்கப்போவதாகவும்'' கூறியுள்ளார்.

சிராக்கின் வர்த்தக ஆதரவு பகட்டு முழக்கங்கள் வேலை வாய்ப்புக்கள் வளர்வதற்கு வகைசெய்யும் என்றுள்ளபோதிலும், ஆனால் உண்மையான நிலவரம் வேறுபட்ட ஒரு சித்திரத்தை உருவாக்கிகாட்டி வருகிறது.

சென்ற ஆண்டு மட்டுமே பிரான்சின் தொழில்துறையில் 33,000 வேலைகள் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளன. இந்த வகையில் சென்ற ஆண்டு Metaleurop, Daewoo, Arcelor, Comilog மற்றும் Danone ஆகிய கம்பெனிகள் மூடப்பட்டு பெருமளவில் ஆட்குறைப்பு நடைபெற்றது. 2004 ஆம் ஆண்டு Alsom, GIAT, Altalis, Aventis, STMicroelectronics மற்றும் பல இதர நிறுவனங்கள் தொழில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவித்துள்ளன.

சமூக சேவைகள் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 5,000 மட்டுமே என்று ஒப்புக் கொண்டாலும் பிரெஞ்சு வாரப்பத்திரிகை L'Express மதிப்பீட்டின் படி 2002 மே மாத்திற்கு பின்னர் ஏறத்தாழ பொது சேவைகளில் 100,000 பேர் வேலையிழந்திருக்கின்றனர்.

ஜனாதிபதி தனது புத்தாண்டு உரையைத் தொடங்குவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்னர், தொழில் அமைச்சர் நவம்பர் 2003 க்கு பின்னர் வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 0.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவித்தார். இந்தப்போக்கு 2004 லிலும் நீடிக்கும் என்று குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வமான வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் 9.7 சதவீதமாக அல்லது 2.6 மில்லியன் மக்கள் உள்ளனர். இவர்களில் 700,000 பேர் ஓராண்டிற்குமேலாக வேலையில்லாமல் தவிக்கின்றனர். இவர்களில், தகுதிக்கும் குறைந்த பணிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களில் சேர்க்கப்படவில்லை. 25 வயதிற்கு குறைந்த 382,184 இளைஞர்கள் வேலைதேடி அலைகின்றனர்.

2002 நவம்பர் முதல் 2003 நவம்பர் வரை 12 மாதங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் 9 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

அரசாங்க வீடமைப்புக் கட்டுமானம் தனியார்மயமாக்கல்

பொது வீடமைக்கும் திட்டங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று சிராக் அறிவித்துள்ளார். ''சொந்த வீடுகளை கட்டிக்கொள்வதை ஊக்குவிக்கும் திட்டம்'' என்று அவர் இதை வர்ணித்துள்ளார். அரசாங்க வீட்டுவசதி திட்டங்களில் ஒரு பகுதியை தனியாருக்கு விற்பது சம்மந்தப்பட்டது இத்திட்டமாகும். 1950 களில் இருந்து துணை நகரங்களில் அரசாங்கம் வீடுகள் அமைக்கும் நடைமுறைகள் தற்போது கைவிட அனுமதிக்கப்பட்டு வருகின்றன. எனவே இப்போது தனியாரிடம் அத்தகைய நகரங்களில் வீடுகளைக்கட்டும் திட்டத்தை விடுவதன் மூலம் அவை எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நிதியில் நெருக்கடியை ஏற்படுத்தாமல், தற்சார்பு உள்ளவையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நோக்கத்தோடு நீண்டகால அடிப்படையில் வீடுகளை சொந்தத்தில் வாங்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கு வங்கியில் கடன்களை வழங்க கட்டளையிடப்பட்டிருக்கிறது. இதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பது முன்கூட்டியே மறைமுகமாக தெளிவாகிக்கொண்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாடிக் குடியிருப்புக்கள் வங்கிகளுக்கும் கட்டுமான சங்கங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது அவற்றில் குடியிருப்பவர்கள் முற்றிலும் அடமானம் வைக்கும் நிலை அல்லது நடுத்தெருவிற்கு வரும் நிலைதான் உருவாகும்.

அத்தகைய கொள்கை ஏற்கெனவே மோசமடைந்து கொண்டுவரும் வீட்டுவசதி நிலவரத்தை படுமோசமாக்கிவிடும். பல இணையத் தளங்களில் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் பிரான்சில் 10 சதவீதமான மக்கள் நெரிச்சல்மிக்க மாடிக் குடியிருப்புக்களில் வாழ்ந்து வருகிறார்கள். 11 சதவீதமானவர்கள் குளிர்காலத்தில் வெப்பமூட்டும் வசதியின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 3 சதவீதமானவர்களின் வீடுகளில் குளியல் அறைகள் இல்லை. 2 சதவீதமானவர்கள் கழிப்பறைகளில்லாத மாடிக் குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வீடுகளிலிருந்து வெளியேற்றப்படுவது அதிகரித்துக்கொண்டு வருவதால், 300,000 பேர்கள் வீடுகளை இழந்து வாழ்கின்றனர். அரை மில்லியன் மக்கள் விடுதிகள் அல்லது பிறருக்கு சொந்தமான வீடுகளில் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். ஆனால், 2 மில்லியன் குடியிருக்க வசதியான மாடிக் குடியிருப்புக்கள் மக்களுக்கு கிடைக்காமல் காலியாக உள்ளன.

பெருகிவரும் சமூக துருவப்படுத்தல்கள்

அரசாங்கத்தின் புதிய நடவடிக்கைகள் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவே பயன்படும். வருமானவரி குறைக்கப்படும் என்று 2002 தேர்தல் பிரச்சாரத்தில் சிராக் உறுதிமொழியளித்தார். ஆனால் இது உயர்வருமானத்தைக் கொண்டுள்ளவர்களுக்கு பயன்தருவதாக அமைந்துள்ளது.

வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கித்தவித்து வறுமையில் வாடுகின்ற இளைஞர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் வளர்ந்து கொண்டு வருகிறது. 2002-03 குளிர்காலத்தில் கஞ்சித்தொட்டிகளை (soup kitchens) நடத்திய Restaurants du coeur என்ற அமைப்பு, 610,000 மக்களுக்கு 61.5 மில்லியன் உணவு பொட்டலங்களை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளது. தாய் அல்லது தந்தை மட்டுமே சம்பாதிக்கின்ற குடும்பங்கள் மற்றும் 30 வயதிற்கு குறைந்த இளைஞர்கள் வறுமையால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்த அமைப்பு தகவல் தந்துள்ளது. பிரெஞ்சு மக்களில் 15 சதவீதம் வரை தாய் அல்லது தந்தை மட்டுமே சம்பாதிக்கும் குடும்பங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். இதில் 30 சதவீதம்பேர் Restaurants du coeur உடைய வாடிக்கையாளர்களாக உள்ளனர். இவர்களில் 25 வயதிற்கும் குறைந்த 8 சதவீதம் பேர் தங்களது வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க ஹெல்ப் (Catholic Help) என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, ஒருவருடைய வருவாயை நம்பியுள்ள குடும்பங்கள் வறுமையில் பெருகிக்கொண்டு வருவது விளக்கப்பட்டிருக்கிறது. 2002 ல் ஏழைகள் 30 சதவீதம் பேராக இருந்தனர். 2001 ல் 5.5 மில்லியன் மக்கள் அல்லது 10.4 சதவீதம் பேர்கள் வறுமைகோட்டை நெருங்கி வருகிற அளவிற்கு, மாதம் 560 யூரோக்கள் (710 அமெரிக்க டாலர்கள்) வருமானத்துடன் வாழ்ந்து வந்தனர். 2002 ல் ஏழைகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் பெருகியது. 2 மில்லியன் சுரங்கத் தொழிலாளர்கள் வறுமையின் எல்லைக்கே வந்துவிட்டனர். ஏழைக் குடும்பங்களில் வாழுகின்ற 18 வயத்திற்கும் குறைந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை 18 சதவீதமாகும்.

இப்படி சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து தகவல் தந்துள்ள Observatoire des inégalités என்ற வலைத் தளம் ''மக்களில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மொத்த வருமானத்தில் 2 சதவீதத்தை மட்டுமே பெறுகின்றனர். அதே நேரத்தில் பணக்காரர்களான 10 சதவீதம் பேர் நாட்டின் மொத்த வருமானத்தில் 28 சதவீதத்தை சம்பாதிக்கின்றனர். 10 சதவீதமான மிகப்பெரும் பணக்காரர்கள் நாட்டின் தேசிய சொத்தில் 46 சதவீதத்திற்கு மேல் தங்கள் கையில் வைத்திருக்கின்றனர். ஆனால் வறுமையில் தவிக்கும் 50 சதவீத மக்களிடம் 10 சதவீதத்திற்கும் குறைந்த சொத்துக்கள்தான் உள்ளன. முழுநேர பணிசெய்யும் தொழிலாளி மாதம் பெறுகின்ற நிகர வருமானம் 1,400 யூரோக்கள் (1,776 டாலர்கள்) ஆகும். 90 சதவீதம்பேர் 2,800 யூரோக்களுக்கும் (3,552 டாலர்கள்) குறைந்த வருவாயையே பெறுகின்றனர்.

இதை ஒப்பு நோக்கும்போது மிகப்பெரும் கம்பெனிகளின் இயக்குநர்கள், குறிப்பாக Danone Group, Franc Riboud போன்றவற்றை எடுத்துக்காட்டாக கொண்டால், 2001 ல் இக் கம்பெனிகளின் நிர்வாக அதிகாரிகள் 2.4 மில்லியன் யூரோக்களை (3 மில்லியன் டாலர்) பெற்றுள்ளனர். பிரான்சிலேயே இரண்டாவது பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் (Sanofi-Synthélabo) நிர்வாக இயக்குநர் ஜோன் பிரான்சுவா டோக் (Jean-Françoise Dehecq) என்பவருக்கு ஆண்டிற்கு 1.9 மில்லியன் யூரோக்கள் (2.4 மில்லியன் டாலர்கள்) வழங்கப்படுகின்றன. இது குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்திலும் (SMIC) பார்க்க 150 மடங்கு அதிகமாகும். பிரான்சிலுள்ள மிகப்பெரும் முதலாளியும் L'Oréal நிறுவனத்தின் தலைவருமான லின்ட்சே ஓவன் ஜோன்ஸ் (Lindsay Owen-Jones) என்பவர் 2002 ல் மிக இலகுவாக 6.2 மில்லியன் யூரோக்களை (7.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சம்பாதித்துள்ளார்.

தொழிற்சங்கங்களின் பாத்திரம்

சிராக் தனது புத்தாண்டு உரையை ''நாட்டின் வாழும் சக்திகளுக்கிடையே'' (forces vives de la nation) நிகழ்த்தியபோது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பிரான்சின் பொருளாதார, காப்பீடு மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் மிக முக்கியமான பிரதிநிதிகள் ஆவர். திட்டமிட்டு உருவாக்கிய இத்தீர்மானமானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலில் நனபூர்வமாக சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்தைகய நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்தத் தொழிற்சங்கமும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

தொழிற்சங்கத் தலைவர் மார்க் புளொன்டல் (Marc Blondel) தொழிலாளர்களின் நிலை சீர்குலைந்து வருவதாக புகார் கூறினார். ஸ்ராலினிச மேலாதிக்கமுள்ள CGT தொழிற்சங்கத் தலைவர் பேர்னாட் திபோ (Bernard Thibault) ஜனாதிபதியின் இரட்டை வேடத்தைக் கண்டித்தார். ''ஒரு பக்கம் பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு முயலுகிறார். அதே நேரத்தில் நாடாளுமன்ற பெரும்பான்மை ஊக்குவிப்பையும் கோரி, முதலாளிகளை ஆதரித்து நின்கிறார்'' என்று கண்டனம் செய்தார். சோசலிஸ்ட் கட்சியோடு தளர்வான உறவு கொண்ட CFTC தொழிற்சங்கத் தலைவர் ஜாக்கி டான்தாஞ்சர் (Jacky Dintinger) ''தொழிலாளர் தரம் ஒட்டுமொத்தமாக தளர்த்தப்பட்டிருப்பதை'' குறிப்பிட்டார்.

ஆனால், இதில் உண்மை என்னவென்றால் அரசாங்கம் பல நடவடிக்கைகளை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியோடுதான் நடைமுறைப்படுத்தி வருகிறது. அண்மையில் இதற்கு ஓர் அப்பட்டமான உதாரணமாக UNEDIC என்றழைக்கப்படும் வேலையில்லாதோர் காப்பீட்டு ''சீர்திருத்த'' திட்டம் இருக்கிறது. முதலாளிகளும் தொழிற்சங்கங்களும் இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம் 2004 ஜனவரி 1 ல் செயல்படத் தொடங்கியது. இந்த நடவடிக்கை சட்டமாக ஆனது Medef மற்றும் அரசாங்கத்திடையே ஏற்பட்ட உடன்படிக்கையினால் மட்டுமல்ல, 2002 டிசம்பரில் பல தொழிற்சங்கங்கள் இதற்கு திட்டவட்டமாக சம்மதம் தெரிவித்ததினால் ஆகும். அப்போது CGT தொழிற்சங்கமானது மெளனமாக இருந்தது.

இந்த நடவடிக்கை வேலையற்ற தொழிலாளர்கள் பயன்பெறுவதை பல மாதங்கள் அளவிற்கு குறைத்துவிட்டது. இதன் மூலம் ஜனவரி முதல்தேதி வேலையற்ற 180,000 தொழிலாளர்கள் தங்களது உரிமை ஊதியத்தை இழந்தார்கள். 2005 வாக்கில் இந்த நடவடிக்கையால் மொத்தம் 600,000 முதல் 800,000 மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.

Top of page