World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Mass unemployment deepens internal social divisions

இஸ்ரேல்: பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் ஆழமாகிவரும் உள்நாட்டு சமூக பிளவுகள்

By David Cohen
6 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்ரேலில் 2003 ம் ஆண்டு கடைசிக்் காலாண்டு பகுதியான ஜூன்-செப்டம்பர் காலகட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 10.7 லிருந்து 10.9 சதவீதத்திற்கு அதிகரித்திருக்கிறது. இதனை நாட்டின் மத்திய புள்ளிவிவரத்துறை (Central Bureau of Statistics - CBS) மதிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய தகவல்களின்படி 2003 ம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் 279,000 ஆண்களும், பெண்களும் வேலையில்லாத பட்டியிலில் இருந்தனர். இந்த எண்ணிக்கை ஆண்டின் கடைசிக் காலாண்டில் 287,000 ஆக உயர்ந்துள்ளது.

CBS ஸின் தகவல்களின்படி 2003 ம் ஆண்டில் மூன்றாவது காலாண்டில் 10.2 சதவீத ஆண்கள் வேலையில்லாமல் இருந்த நிலை கடைசிக் காலாண்டு காலகட்டத்தில் 10.3 ஆக உயர்ந்தது. அதே போல பெண்களைப் பொறுத்தவரையில் இதே கால கட்டங்களில் 11.4 சதவீதத்திலிருந்து 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாரிவ் என்கிற தினசரி பத்திரிகையின் அறிக்கை, ''அரசாங்கமானது இஸ்ரேலில் வெகுகாலமாக இருந்து வந்த பொருளாதாரப் பின்னடைவு அல்லது சரிவிலிருந்து மீண்டுவருவதாக அறிவித்து வந்தாலும் வேலைவாய்ப்பு என்பது அதிகரிக்கவேயில்லை என்பது மட்டுமல்ல மேலும், மோசமான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன. கடந்த வருடத்தில் மட்டும் 25,000 தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தார்கள். இதில் பெரும்பாலோர் பெண்கள். 18 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் ஒரு வருடகாலமாக வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர். (2002-ம் ஆண்டில் இவ்வாறானவர்களின் சதவீதம் 13.5) இதே நேரத்தில் 6 மாதங்களாக வேலைகிடைக்காமல் தேடிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 37 சதவிகிதமாகும். (2002 ல் 32 சதவீதம் பேராக இருந்தனர்)

அதே செய்தித்தாளில், நிதி அமைச்சு மற்றும் இஸ்ரேல் வங்கியிலுள்ள நிபுணர்கள் வருட முடிவிற்குள் வேலையில்லாதோர் எண்ணிக்கை 301,000 ஐத் தொடும் என ஊகித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது வேலை செய்யக்கூடியவர்களில் 11.3 வீதமாகும். ''பிரதமர் ஏரியல் ஷரோனின் பதவிக்காலத்தில் மட்டும் 77,000 பேர் புதிதாக வேலைவாய்பை இழந்தனர். வேலையில்லாதோரின் விகித எண்ணிக்கை 8.75 சதவீதத்திலிருந்து 10.9 சதவீதத்திற்கு தாவியது'' என்று மாரிவ் மேலும் தெரிவித்துள்ளது.

ஹிஸ்டாட்ரட் தொழிற்சங்க கூட்டமைப்பின் (Histadrut trade union) தலைவரும் எம்.பி யுமான அமிர் பெரேட்ஸ், பிரதமர் ஷரோன் மற்றும் நிதியமைச்சர் பென்யாமின் நெதன்யாகு ஆகியோர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஏனென்றால் சமீபத்தில் நெதன்யாகு சமர்ப்பித்த புள்ளிவிவர அறிக்கையில் பொருளாதார நிலை தேறியிருந்தாலும் அதனால் புதிய வேலைவாப்புக்கான எந்த வாய்ப்பும் இல்லாது இருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால் ''பொருளாதார நிலை தேறி வந்தாலும் அந்த வண்டியானது இஸ்ரேலின் மேல்தட்டைச் சார்ந்த பத்து சதவீதம் மட்டுமே எடுத்துச் செல்ல முடிந்திருக்கிறது என்பதுதான் உண்மை'' என்று மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, பாதுகாப்பு அமைச்சர் சால் மோஃபஸ் NIS 200 மில்லியன்களை கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அதுவும் பிரதமர் ஷரோன் எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இந்தத் தொகையை வேண்டும் என்கிற பட்சத்தில் திரும்பவும் வாங்கிக்கொள்ளலாம் என்று உறுதி அளித்ததன் பேரில் இந்த ஏற்பாட்டுக்கு ஒப்பக்கொள்ளப்பட்டது. ''உங்களது இந்தச் செயல் மிகவும் உயர்ந்தது. கல்விக்காக இம்மாதிரியாக உதவ வந்தது நீங்கள் மட்டும்தான்'' என்று மோஃபஸிடம், ஷரோன் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 6000 ம் இஸ்ரேலிய ஆசிரியர்கள், குறைந்தபட்ச சம்பளத்தொகையை விடக் குறைவாகத்தான் ஊதியம் பெறுகிறார்கள். இவர்களுக்கான உதவித்தொகை கல்வி அமைச்சகத்திலுருந்து வழங்கப்படுகிறது.

நெதன்யாகு தன்மேல் எழுந்துள்ள விமர்சனத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படாமல் இருப்பதுடன், தேசியப் பொருளாதாரத்தில் தனியார்மயமாக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவதில் குறியாக இருக்கிறார். முக்கியமாக டிஸ்கொன்ட் வங்கியைப் பற்றி (Discount Bank) குறியாக இருக்கிக்கிறார். ''நம்மால் இதை உடனடியாக செயல்படுத்த முடியும். இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது. அதை இருக்கிறது இருக்கிறபடி என்ற நிலையில் விற்கலாம். இதற்கான விலையாக தொழிலாளர்களை குறைப்பது என்பது வங்கியின் தொழிற்சங்கத்துடன் ஒப்பந்தம் மூலமாக உறுதிசெய்து கொள்ளலாம். இதற்கு முன்னாலும் நான் தனியார்மயமாக்கும் திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறேன். இதற்கு அதிகாரத்துவத்தின் நீண்ட தொடர்ச்சியான முறைகள் ஒத்துவராது. இதில் நியாயமும் இல்லை'' என்று ஜெருசலேம் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ''நமது அரசாங்கமும் நிதித்துறைக்கமிட்டியும் சேர்ந்து இதை விரைவுபடுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில்தான் இறங்கியிருக்கிறோம் என்று நம்புகிறேன். இப்படி இருந்தால்தான் டிஸ்கொண்ட் தனியார்மயமாக்கலை அமுலாக்க முடியும்'' என்று கூறியுள்ளார்.

அட்வா சென்டர் என்கிற இயக்கம் 1991 ல் உருவாக்கப்பட்டது. இஸ்ரேலின் நடைமுறையில் இருந்த சம உரிமைகள் மற்றும் பாதுகாப்பு கருதி இவ்வியக்கம் உருவானது. இதில் மிஸ்ராஹி யூதர்கள் (மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை தங்களது பூர்வீகமாகக் கொண்டிருந்தவர்கள்) இயக்கம் மற்றும் இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்களுக்கான இயக்கம் மற்றும் பெண்நிலைவாத இயக்கம் ஆகியவற்றில் இருந்து பிரநிதிகள் மேற்குறிப்பிட்ட அட்வா சென்டரில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதனுடைய சமீபத்திய அறிக்கையில் சென்டர் தெரிவித்திருப்பதாவது.

''விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சி நிலையில் இதன் பலன்கள் சமமாகப் பங்கிடப்படவில்லை. மிகவும் குறைந்த அளவிலான இஸ்ரேலியர்கள்தாம் இதனால் பயன்பெற்றுள்ளார்கள். பெரும்பான்மை மக்களின் வருமானம், கல்வியறிவு, மற்றும் வீட்டுவசதி ஆகியவை அப்படியேதான் இருந்தன. இன்னும் சொல்லப்போனால் ஓரளவிற்குக் குறைந்தும் போயின. இதனால்தான் தற்போதைய பொருளாதார சரிவு காலத்தில் இம்மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகமாகிப்போவதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. இஸ்ரேலுக்கு இப்போது தேவை என்னவென்றால், ஏற்கெனவே பின்னால் விடப்பட்ட பெரும்பான்மையான இஸ்ரேலியர்களுக்கு கல்வி, வருவாய் ஆகியவற்றைப் பெருக்கும் விதத்திலான, வெகுகாலத்திற்கு பயன்பெறும் விதத்திலும் நிலையான திட்டம் தீட்டப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக இப்போதைய அரசின் கொள்கைகள் இந்த மாதிரியான விளைவுகளை நோக்கி இல்லை. இதற்கு மாறாக சமீபத்தில் பதவியில் இருக்கிற அரசுகள் இடது மற்றும் வலது என்று யாராக இருந்தாலும், தங்களுக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்புக்களை கைகழுவிவிட்டனர். தொழில் மற்றும் வர்த்தகத்துறைக்கு சுதந்திரமாக செயல்பட வழிவகுத்துக் கொடுத்துவிட்டனர். இதைத் தவிர பெரும்பாலான இஸ்ரேலியர்களை ''சுதந்திர சந்தைப்'' பொருளாதார முறையின் பிடியில் விட்டுவிட்டனர்''.

''கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகாரத்தில் இருந்த அரசுகள் பட்ஜெட்டில் பெருமளவில் நிதிக்குறைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்தியிருந்தன. இதன் விளைவாக சமூகப் பாதுகாப்பு திட்டங்கள், பொதுக் கல்வி, பொது சுகாதாரம், அரசின் வீட்டுவசதிக்கான உதவிகள் சமூக நலன்புரிகள் ஆகியவை பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. இதற்கு மேலாக அடுத்தடுத்து வந்த அரசுகள் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்வதற்கான நிபந்தனைகளை மோசமாக்கி, சம்பள விகிதம், ஓய்வூதிய முறை ஆகியவற்றை வெகுவாக குறைத்துள்ளனர். தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிற மாற்றங்களால் வறுமைக்கோட்டின் இழே இருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக இருக்கின்றன. இதனால், பெரும்பான்மையான இஸ்ரேலியர்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதன் விளைவாக எதிர்காலத்தின் இளம் சமுதாயத்தினர் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது'' என்று இந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஷரோன் மற்றும் நெதன்யாகு ஆகியோர் அமுல்படுத்திக்கொண்டிருக்கும் சிக்கன நடவடிக்கைகள் என்பன, முன்னர் ஆட்சியில் இருந்த 1992-1996 மற்றும் 1996-2001 தொழிற் கட்சியினர் ஆரம்பித்து வைத்த நடவடிக்கைகளின் நேரடித்தொடர்ச்சி எனலாம். முறைமைப்படுத்தப்படாத முதலாளித்துவப் பொருளாதாரம் என்பதைத்தான் தொழிற்கட்சி அறிமுகப்படுத்தியது. இதில் சுதந்திர வியாபாரம் மற்றும் வர்த்தகப் பகுதிகளை தொழிற்கட்சியினர் அதிகமாக நடைமுறைப்படுத்தினர். இதில் முக்கியமாக செயல்பட்டது தற்போதைய தலைவரான சிமன் பேரஸ் எம்.பி ஆகும். அவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருக்கும் மேற்குக்கரைப்பகுதி மற்றும் காசாப் பகுதி ஆகியவற்றில் மேலும் முதலீடுகள் செய்வது, அதே சமயத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பெரும்பாலானவற்றை சிறுபான்மையினராக இருக்கும் பெரும் செல்வந்தர்களிடம் கொடுப்பது என்ற கொள்கையில் இருந்தார். இக் கொள்கை இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்தினரின் ஆதரவு பெற்றதாகும். முன்னாள் தொழிற்கட்சி ஆட்சியில் நிதித்துறை அமைச்ராக இருந்த ஆப்ரஹாம் சொகாட் நெதன்யாகுவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். ஆனால் அவர் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முறையில் ''நிதானம்'' காண்பிக்க வேண்டிய ''தேவையைக்'' குறித்து மட்டும் வாதிட்டார்.

இஸ்ரேலின் நலன்புரி அரசு சிதைந்து அதனது பொருளாதாரம் ஆழமான நெருக்கடிக்கு சென்று கொண்டிருக்கிறது. அரசின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் 2003 ன் இறுதிவரையில் 5.6 சதவீதத்திலிருந்து NIS 520 பில்லியன்களாக அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டி 105 சதவீதம் வரை 2001 ஆண்டை ஒப்பிடுகையில் உயர்ந்துவிட்டது என்று இஸ்ரேல் வங்கி அறிவித்துள்ளது. கடந்த எட்டு வருடங்களில் இதுதான் அதிகப்பட்ட கடனாக இருக்கிறது. ஜெருசலேம் போஸ்ட் என்ற பத்திரிகையில் தெரிவித்திருப்பதாவது, ''OECD உறுப்பு நாடுகளில் கடன்நிலை அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 78 சதவீதமாகவும், 15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கடன்நிலை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 73 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சதவிகிதங்களைவிடக் குறைவாகத்தான் இதர மேற்கத்திய நாடுகளில் இருக்கிறது. அமெரிக்காவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 63 சதவீதமான கடன்நிலை ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின் அளவைப்போன்றே இருக்கிறது. ஆஸ்திரேலியாவில்தான், இருப்பதிலேயே மிகக்குறைந்த அளவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த விவரங்கள் கடந்த வருடத்தில் OECD உறுப்பு நாடுகளின் அமைப்பு வெளியிட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.

Top of page