World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israeli assassination of Hamas leader: a provocation, incitement and prelude to stepped-up aggression

ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் படுகொலை செய்தது: ஆக்கிரமிப்பை முடுக்கிவிட ஆத்திரமூட்டும், தூண்டிவிடும் ஒரு முன்னோடி நடவடிக்கை

By Chris Marsden
23 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

பாலஸ்தீனிய இஸ்லாமிய போராளிக் குழுவான ஹமாஸ் ஆன்மீகத் தலைவர் ஷேக் அஹமது யாசீனை இஸ்ரேல் படுகொலை செய்தது, மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் மோதலை முடுக்கிவிட வேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு கணக்கிடப்பட்டதாகும். பாலஸ்தீனியரிடமிருந்து தன்னிச்சையாக பிரித்துக்கொள்வதற்காக அவரது திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெரும் நில அபகரிப்பிற்கான மிக சாதகமான சூழ்நிலைமைகளை உருவாக்குவதற்காக பிரதமர் ஏரியல் ஷரோனால் எடுக்கப்பட்ட வெறிபிடித்த மற்றும் குற்றவியல் முயற்சியாகும் இது.

ஷேக் யாசின் மீது தாக்குதலை ஷரோனே நேரடியாக ஏற்பாடுசெய்தார். இந்த கொலை முயற்சி முழுவதையும் அவரே நேரில் பார்வையிட்டதுடன் தனது Negev ranch வீட்டிலிருந்துகொண்டு அடிக்கடி இராணுவ அதிகாரிகளிடம் இருந்து தொடர்ச்சியான நவீன புள்ளிவிவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். மார்ச் 14-ல் 10-இஸ்ரேலியர் பலியானதற்கு காரணமாக அமைந்த அஸ்தோத் துறைமுகத்தில் தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு யாசின்தான் அரசியல் அடிப்படையில் பொறுப்பு என்ற சாக்குபோக்கு கூறி, சென்றவாரம் ஒரு அமைச்சரவை கூட்டத்தில் இந்த கொலை முயற்சிக்கு முறையான அங்கீகாரம் தந்தார்.

பாலஸ்தீன மக்களிடம் ஆத்திரத்தை தூண்டிவிட்டு தற்கொலை குண்டுவீச்சுக்கள் அதிகரிக்க வேண்டும் என்பது ஷரோனின் நோக்கமாகும். இப்படி நடந்துவிட்டால் யாசர் அரஃபாத்தின் பாலஸ்தீன நிர்வாகத்திற்கு (PA) இன்னமும் மிச்சமிருக்கின்ற செல்வாக்கும் சிதைந்துவிடும். ஹமாஸ்-ன் சொந்த அதிகாரம் வலுப்பெறும், அதன் மூலம் இஸ்ரேலின் இராணுவத் தாக்குல்களை முன்னெடுக்க முடியும் என்று ஷரோன் கருதுகிறார்.

காது ஒரு பகுதி செவிடாகிவிட்ட, கால் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு சக்கர நாற்காலியுடன் நடமாடிய ஷேக்யாசின், காசா நகர மசூதி ஒன்றிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது கொல்லப்பட்டதை விட வேறு எந்த தனியொரு நடவடிக்கையையும் --அரஃபாத்தையே கொலை செய்தால்தவிர-- ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் புகைந்து கொண்டிருக்கின்ற பதட்டங்களை தூண்டிவிடும் என்பது மிக எளிமையாக கணிப்பிட்டிருக்க முடியாது. அவரது இரண்டு மெய்காப்பாளர்கள் மற்றும் ஷேக் யாசினின் புதல்வர்களில் ஒருவரும் உட்பட ஏழுபேர் இஸ்ரேல் தாக்குதலில் மடிந்தனர். பதினேழு பேர் காயமடைந்தனர்.

ஷேக் யாசினை கொல்வதற்கு நடைபெற்ற இரண்டாவது முயற்சி இது. 2003- செப்டம்பரில் முதலாவது முயற்சி நடந்தது.

அரஃபாத் மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என்று அறிவித்தார். ''இது ஒரு பைத்தியக்காரத்தனமான மிகவும் ஆபத்தான செயலாகும். குழப்பத்திற்கு இது கதவு திறந்து விடுகிறது. யாசின் மிதவாத போக்குள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும் மற்றும் அவர் ஹமாசை கட்டுப்படுத்திவந்தார், எனவே இது மிக ஆபத்தான கோழைத்தனமான செயல்'' என்று பாலஸ்தீன பிரதமர் அஹமது குரேயா எச்சரித்தார்.

''இது எரிகின்ற நெருப்பை மேலும் தூண்டிவிடுகின்ற தன்மை கொண்டது, பல்சக்கரம் போல் வன்முறை, எதிர்வன்முறை சுழற்சியாய் போய்க்கொண்டே இருக்கும்'' என்று பாலஸ்தீன நிர்வாகத்தின் தலைமைப் பேச்சுவார்த்தை அதிகாரி சாயெப் எரக்காத் (Saeb Erekat ) எச்சரித்தார்.

ஹமாஸ் உடனடியாக "நரகத்தின் வாயிற்கதவுகளை" திறந்துவிடப்போவதாக அச்சுறுத்தியது. பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தெருவில் ஆவேச எதிர்ப்புக்களில் அணிவகுத்தனர். அமெரிக்கா, இஸ்ரேலை ஆதரித்து வருவதால்தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று, முதல் தடவையாக, அமெரிக்காவை இப்போது ஹமாஸூம் அச்சுறுத்தியுள்ளது.

''பயங்கரவாத அமெரிக்க நிர்வாகத்தின் ஒப்புதலைப் பெறாமல் இந்த நடவடிக்கையை சியோனிஸ்டுகள் எடுக்கவில்லை, இந்த குற்றத்திற்கு அது பொறுப்பேற்க வேண்டும். உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் இந்த குற்றத்திற்கெதிரான பதிலடி நடவடிக்கையில் கலந்து கொள்வதால் கண்ணியப்படுத்தப்படுவார்கள்'' என்று ஹமாஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.

அரஃபாத்தின் அல்-பத்தா இயக்கத்தோடு தொடர்புள்ள அல்-அக்ஸா தியாகிகள் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சியோனின் புதல்வர்கள் மீது போர், போர், போர்..... யாசினை படுகொலை செய்வதற்கான கட்டளையில் கையெழுத்திட்டவர் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களின் சாவிற்கு கட்டளையிட்டுவிட்டார்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பும் பழிக்குப்பழி என்று உறுதியளித்துள்ளது.

யாசின் இறுதிச்சடங்கில் காசா நகரத்து தெருக்களில் பல்லாயிரக்கணக்கானோர் அணி வகுத்து ஆஞ்சலி செலுத்தினர். ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்ட கார்களிலிருந்து பழிவாங்க வேண்டுமென்ற முழக்கங்கள் வந்தன. காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகள் முழுவதிலும் இளைஞர்களுக்கும், இஸ்ரேல் இராணுவத்தினருக்குமிடையே மோதல்கள் நடைபெற்றன. கண்டன எதிர்ப்பினர் மூன்று பேரும் ஒரு பாலஸ்தீன பத்திரிகையாளரும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நாபுலஸ் நகர மையத்தில் 15,000-பேர் திரண்டனர். ஜெனின் நகரில் 10,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேற்குக்கரை நகரான ஹெப்ரோனில் டஜன்கணக்கான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் இராணுவத்தினர்மீது கற்களால் தாக்கினர். இராணுவத்தினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர்.

காசா பகுதியிலுள்ள Neveh Dekalim இஸ்ரேல் குடியிருப்பை நோக்கி பாலஸ்தீன போராளிகள் 10-நாட்டு ராக்கெட்டுகளை வீசினர். இரண்டு குடியிருப்புக்கள் சேதமடைந்தன. Neveh Dekalim குடியிருப்புக்கு அருகிலுள்ள கான் யூனிஸ் அகதிகள் முகாமிற்கு மேற்கே சாலைத்தடையில் திரண்டு வந்த நூற்றக்கணக்கான கண்டனப்பேரணியினர் காவலர்கள் மீது கற்களை வீசினர். அப்போது நடைபெற்ற மோதலில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் 13-வயது பாலஸ்தீனிய சிறுவனை சுட்டுக்கொன்றனர். பள்ளிக்குழந்தைகள் நிறைந்த அந்தக்கூட்டத்தில் போர் வீரர்கள் நிஜகுண்டுகளால் சுட்டனர்.

கோடாரி ஏந்திய ஒரு பாலஸ்தீனியர் டெல் அவிவ் அருகிலுள்ள இராணுவ தளத்திற்கு வெளியில் ஒரு பெண் இரண்டு ஆண்கள் ஆகிய மூன்று பேருக்கும் சொற்பகாயத்தை உண்டாக்கினார். Ketziot இஸ்ரேல் சிறைமுகாமில் அடைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கைதிகள், கலவரம் செய்தனர், கூடாரங்களுக்கு தீ வைத்தனர், படையினர் மீது கற்களை விட்டெறிந்தனர்.

அமெரிக்கா மீது ஆத்திரம்

ஷரோனின் குற்றத்தில் நேரடியாக புஷ் நிர்வாகத்தை உடந்தையாக்கிக் காட்டுவது ஹமாஸ் இயக்கத்தின் போக்குமட்டுமல்ல. பாலஸ்தீன விடுதலைக்கான ஜெனரல் கமான்டின் பாப்புலர் முன்னணி தலைவரான அஹமது ஜிப்ரில் லெபனானின் அல்-மனார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ''அமெரிக்கா பச்சை விளக்கு காட்டாமல் இந்த சியோனிச எதிரி இந்தக் குற்றத்தை செய்திருக்க முடியாது. இப்போது அமெரிக்கா நம்மையெல்லாம் பயங்கரவாதிகள் என்று கருதுகிறதே தவிர ஒரு குறிக்கோளுக்காக போராடுபவர்கள் என்று நினைக்கவில்லை'' என்று கூறியுள்ளார்.

இந்த கொலையை கண்டிப்பதற்கு வாஷிங்டன் தவறிவிட்டது. இதன் மூலம் ஷரோனின் நடவடிக்கைகளை அமெரிக்கா மறைமுகமாக ஆதரிக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. அமெரிக்காவின் மிக நெருக்கமான பிரிட்டன் உட்பட எல்லா ஐரோப்பிய அரசுகளும் ஷேக் யாசின் கொலையைக் கண்டித்திருக்கின்றன. இந்தச் செயலால் வன்முறை அதிகரிக்கும் என்று பெரும்பாலான நாடுகள் எச்சரித்துள்ளன.

அரபு உலகம் முழுவதும், இந்தக் குற்றத்தை "அரச பயங்கரவாதம் அதன் மிகக்கொடூரமான வடிவத்தில்" என்று கண்டித்திருக்கின்றன.

மேற்கு நாடுகளுக்கு மிகப்பெருமளவில் ஆதரவுகாட்டிவரும் அரபு ஆட்சி எகிப்து, ஹமாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மற்றொரு சண்டை நிறுத்த உடன்படிக்கையை உருவாக்க முயன்றுவருகிறது. எகிப்து- இஸ்ரேல் காம்ப் டேவிட் சமாதான உடன்படிக்கை கையெழுத்தான நினைவு விழா இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கிறது, அதில் எகிப்து கலந்துகொள்ளாது என்று ஜனாதிபதி ஹஸ்னி முபாரக் அறிவித்துள்ளார். சமாதான நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் எல்லா முயற்சிகளையும் ஷேக் யாசின் கொலை சிதைத்துவிட்டதாக அவர் எச்சரித்தார்.

அமெரிக்கா நியமித்துள்ள ஈராக்கின் ஆளும் குழுவே கூட இந்த நடவடிக்கையால் ஈராக்கில் ஆபத்து அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

இவற்றோடு ஒப்புநோக்கும்போது, அதிகாரபூர்வமான கருத்தை முதலில் வெளியிட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தாலும் கொலையைக் கண்டிக்கவில்லை. அரசுத்துறை பேச்சாளர் Lou Funtor, ''எல்லாத்தரப்பும் நிதானமாக இருந்து கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும் என்று அமெரிக்கா வேண்டிக்கொள்கிறது" என்று மட்டுமே கூறியிருந்தார்.

ஹமாஸ், அமெரிக்கா உடந்தையாக இருந்தது என்று குற்றம் சாட்டிய பின்னரும் அமெரிக்கா இன்னும் அந்தக் கொலையை கண்டிக்கவில்லை. புஷ்ஷின் பாதுகாப்பு ஆலோசகரான கோன்டலீசா ரைஸ் வாஷிங்டன் இஸ்ரேலுக்கு கொலைக்கான பச்சைவிளக்கு காட்டியது என்பதை மறுத்தார். ''இதில் ஒவ்வொருவரும் தங்களது நடவடிக்கைகளை கைவிட்டு அந்த மண்டலத்தில் அமைதிகாக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கில் சிறந்த எதிர்காலத்திற்கு எப்போதுமே வாய்ப்பிருக்கிறது'' என்று மட்டுமே கூறினார்.

ஷரோனின் அகன்ற இஸ்ரேல் திட்டம்

ஷரோன் தன்னிச்சையாக சில யூத குடியிருப்புக்களை காலிசெய்ய உத்தேசித்திருப்பதை பாலஸ்தீனியர்களுக்கு வெற்றி என்று ஹமாஸ் பிரகடனப்படுத்தும் எந்த முயற்சியையும் கீழறுக்கின்ற வகையில்தான் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஷரோன் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்று மிகப்பெரும்பாலான ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அப்போதுதான் பாலஸ்தீன நிர்வாகத்தில் ஏற்படும் குழப்பத்தால் மேலும் வன்முறைகள் வெடிக்கும் என்பது அவர்களே எதிர்பார்க்காத திருப்பமாகும்.

எடுத்துக்காட்டாக, Ze'ev Sehiff , Haaretz பத்திரிகையில் எழுதியிருப்பதாவது: ''காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது குடியிருப்புக்களை காலி செய்யும்போது அந்த நடவடிக்கை தங்களது பயங்கரவாத குழு நடவடிக்கைகளின் விளைவுதான் என்றும் இத்தகைய தாக்குதல்கள் நீடித்துக் கொண்டே இருக்குமானால் இஸ்ரேல் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து முழுமையாக வெளியேறிவிடுமென்று ஹமாஸ் பிரகடனப் படுத்தக்கூடும் என்பதை தடுப்பதற்காகத்தான் ஷேக் அஹமது யாசின் கொலை மூலம் இஸ்ரேல் ஒரு எச்சரிக்கையை அனுப்பியுள்ளது''.

''காசா பகுதியில் அராஜகம் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தெருக்கள் அனைத்தும் ஹமாஸ்-இன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அப்போது பாலஸ்தீன நிர்வாகத்தின் படைகள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாத நிலை உருவாகும்'' என்று அவர் எச்சரித்துள்ளார்.

அவரது கவலைகளை ஆதரிக்கின்ற வகையில் Haaretz- ன் மற்றொரு ஆய்வாளர் Danny Rubinstein கணிப்பதாவது, ''ஹமாஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் இஸ்ரேல் மேலும் மேலும் தாக்கிக்கொண்டே இருக்குமானால் அவர்களது செல்வாக்கு வளர்ந்து கொண்டேபோகும். எனவே யாசின் கொலை பாலஸ்தீன நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் நின்றுவிடாமல் காசா பகுதியில் குழப்பத்தை உருவாக்கும். இதனால் யாசின் மரணத்தால் பயன்பெறுகின்ற ஒரே தரப்பு ஹமாஸ்-ஆகத்தான் இருக்கும்'' என்று எழுதியிருக்கிறார்.

ஒரு முட்டாள்தனமான அவசரப்போக்கின் எதிர்பாராத விளைவு, வன்முறையும் குழப்பமும் அதிகரிக்கும் என்பதுமட்டுமல்ல. அது தான் ஷரோனின் விருப்பமும்கூட. அவரது வாழ்க்கையின் குறிக்கோளே அகண்ட இஸ்ரேலை உருவாக்குவதுதான்.

மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்வசமாக்கி இஸ்ரேலோடு நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளும் வெளிப்படை முயற்சிக்கு ஆதரவாக பாலஸ்தீனியர்களுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண்பது என்ற பாவனையைக்கூட ஷரோன் துறந்துவிட்டிருக்கிறார். அவரது தன்னிச்சையான தனிப்படுத்தும் திட்டத்தின் பெளதீக ரீதியான உருவம்தான் இப்போது கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வேலி என்று அழைக்கப்படுவதாகும். 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத யூதர்கள் குடியிருப்பை இஸ்ரேலுடன் இணைத்துக்கொண்டு, 15 இலட்சம் பாலஸ்தீன மக்களை மேற்குக்கரையின் 42- சதவீத நிலப்பரப்பில் குறுகிய குடிசைப்பகுதிகளைப் போன்ற குடியிருப்புக்களில் அடங்கிவிட திட்டமிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர்கள் கிழக்கு ஜெருசலம் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டுவிடும்.

இதற்குப்பதிலாக ஷரோன் உறுதி அளித்திருப்பதெல்லாம் காசா பகுதியிலிருந்து 21-குடியிருப்புக்களில் 17-ஐ நீக்கிவிடுவது என்பதுதான். இதன்மூலம் 5,000- இஸ்ரேலியர்கள் தான் இடம்பெயரும் நிலை ஏற்படும்.

இதுகூட ஷரோனின் சூறையாடும் நோக்கங்களை திருப்திப்படுத்த முடியாது. அத்தகைய அநீதியான நிலைமைகளில் ஏற்படுத்தப்படும் பிரிவுபடுத்தல் வன்முறையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் என்று எவரேனும் நம்புவார்களாயின் அவர்கள் அரசாங்கத்தின் சொந்த அறிக்கைகளின் மற்றும் அதன் ஆதரவாளர்களின் அறிக்கைகளின் விஷயத்தைக் கவனமெடுக்காதிருக்கின்றவர்கள் ஆவர். ''இதன் மூலம் மேலும் பாலஸ்தீன நிர்வாகப்பகுதிகளில் இதுபோன்ற பல நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன'' என்று விளக்கி, நிதியமைச்சர் பெஞ்சமின் நேட்டன் யாகு, ஷேக் யாசின் படுகொலை செய்யப்பட்டதை ஆதரித்தார்.

நடைமுறையில், இராணுவ பாதுகாப்புள்ள சுவருக்கு பின்னால் பாலஸ்தீன எல்லைகளை இணைத்துக்கொள்வதையே தனியாகப்பிரித்தல் பிரதிநிதித்துவம் செய்கிறது. அந்த இடங்களில் உள்ள நிலத்தில் சியோனிச வெறியர்கள் நிரந்தரமாக குடியேற்றப்படுவர். சிறை முகாம் போன்ற ஒரு பெரிய பகுதியில் சிக்கிக்கொள்ளும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மோதல்கள் நீடித்துக்கொண்டே இருக்கும். இதில் ஷரோனுக்கு முழுமனநிறைவு எப்போது ஏற்படுமென்றால் பாலஸ்தீன மக்கள் அனைவரும் பக்கத்திலுள்ள ஜோர்தான், சிரியா, லெபனான் மற்றும் எகிப்து நாடுகளுக்குள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்படும் போதுதான்.

அத்தகைய திட்டங்கள் ஷரோன் அரசாங்கத்திற்குள்ளேயே பகிரங்கமாக பேசப்பட்டு வருகின்றன. தேசிய ஐக்கிய கட்சியைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர் Avigdor Liberman மேற்குக்கரையில் இஸ்ரேல் ஆயுதப்படைகள் சுற்றி வளைத்துக்கொண்டு நிற்கும் பகுதிகளுக்குள் நான்கு தனித்தனி சிறிய குடியிருப்புப் பகுதிகளை ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் பாலஸ்தீன மக்களுக்கு உருவாக்கித்தர வேண்டுமென்று கூறியுள்ளார். அதே நேரத்தில் தேசிய மதவாத கட்சியைச் சேர்ந்த, வீட்டுவசதி அமைச்சர் Effi Eitam, காசா பகுதிகளை எகிப்துடன் இணைக்கவும் மற்றும் மேற்குக்கரை வாசிகளை ஜோர்டானோடு சேர்த்து "பெரிய சமேளனமாக" உருவாக்கவேண்டுமென்று கூறியுள்ளார்.

இத்தகைய இஸ்ரேலின் குற்ற நடவடிக்கைகள் எதுவும் அமெரிக்காவின் மறைமுக ஆதரவு இல்லாமல் நடக்கமுடியாது. பாலஸ்தீன அரசாங்கத்தை இறுதியாக உருவாக்குவதாக புஷ் நிர்வாகம் நாடாகமாடியிருந்தாலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஒவ்வொன்றையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது அல்லது அலட்சியப்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கில் அமைதிக்கான "சாலை வரைபடம்" என்று அழைக்கப்படும் வாஷிங்டனின் திட்டத்தை இஸ்ரேல் அவமதித்தபோதும் கூட வாஷிங்டன் அதைப் பொருட்படுத்தவில்லை.

வாஷிங்டனின் "பயங்கரவாதம் மீதான போர்" என்பதுடன் தான் மேற்கொள்ளும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான எந்த இராணுவ தாக்குதலையும் குறிப்பிட்ட தலைவர்களை, குறிவைத்து கொலை செய்யும் அவரது கொள்கைகளையும் தொடர்புபடுத்தும் தனது முயற்சிக்கு, வெள்ளை மாளிகையில் இடம்பெற்றுள்ள மிக வலுவான சக்திகளின் ஆதரவு தனக்கு உண்டு என்பதை ஷரோன் தெளிவாகவே அறிந்திருக்கிறார்.

மிக வலுவான பிராந்திய எதிரியான ஈராக்கை கடுமை குறைந்ததாக்கிய அமெரிக்கா சதாம் ஹூசைனை ஆட்சியிலிருந்து அகற்றியதில் இஸ்ரேலுக்கு ஏற்கனவே பயனடைந்துள்ளது. மக்களது செல்வாக்கை இழந்து முற்றுகையிடப்பட்ட நிலையில் இருக்கும் புஷ்ஷின் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள சிலர் மத்திய கிழக்கில் மேலும் குழப்பத்தை உருவாக்குவதற்கு தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை ஆதரிப்பார்கள் ஏனெனில் அது மேலும் மத்திய கிழக்கை நீர்குலைக்கும் மற்றும் நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும் என்று கணித்து ஷரோன் செயல்பட்டு வருகிறார்.

ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தியதால் தான் பயனடைய முடியும் என்று ஷரோன் கணக்குப் போடக்கூடும். ஏனென்றால் ஈரானுடனும், சிரியாவுடனும், லெபனான் வழியாக ஹமாஸ்-க்கு தொடர்பு இருக்கிறது என்பதால், ஏற்கனவே புஷ் அந்நாடுகளை "தீங்குகளின் அச்சு" என்று கூறியிருப்பதாலும் ஆகும். யாசின் படுகொலைக்கான கிளர்ச்சி எழுச்சிகள் இஸ்ரேலுடன் மட்டும் எல்லைக்குட்படாது, உண்மையில் அமெரிக்க நலன்களையும் பாதிக்கும் என்று அவர் தெளிவாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார். இது தொடர்பாக ஈரான் துணை ஜனாதிபதி அலி-அப்தாஹி, யாசின் "இறப்புக்கு பின்னர் இஸ்லாமிய நாடு முழுவதற்கும் தலைவராகி விட்டார்" பழிக்குப்பழி வாங்க வேண்டுமென ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

Top of page