World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Ruling elite discuss Iraq strategy

பிரிட்டன்: ஈராக் மூலோபாயம் பற்றி ஆளும் செல்வந்த தட்டு விவாதம்

By Julie Hyland
16 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்காவும், அதன் நட்பு நாடான பிரிட்டனும் ஈராக்கில் வளர்ந்துவரும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் டோனி பிளேயர் அமெரிக்காவுடன் நட்புறவை உறுதிசெய்து கொள்வதற்காக புறப்படுகிறார். அப்போது, திருப்தியற்ற இடிமுழக்கங்கள் தோன்ற ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கப் படைகள் ஈராக்கின் பெரும்பகுதிகளில் தோன்றியுள்ள எழுச்சிக்கு எதிராக கொலைவெறி பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இந்தக் கருத்து வேறுபாடுகளுக்கும் சம்மந்தம் எதுவும் இல்லை. அத்தகைய எதிர்ப்பை பாலஸ்தீன இண்டிபாடாவோடு ஒப்பு நோக்கிக் கொண்டாலும் அதைக் கொடூரமாக நசுக்குவதில் பிரிட்டன் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதற்கு மாறாக பரவலாக பொதுமக்களிடையே தோன்றியுள்ள கிளர்ச்சியை ஒட்டி பிரிட்டனின் நலன்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதிலும், மற்றும் வாஷிங்டனுக்கு தற்போது தோன்றியுள்ள இடர்பாடுகளை பயன்படுத்தி இதற்கு முன்னர் வெள்ளை மாளிகை தனக்கு தருவதற்கு மறுத்த செல்வாக்கை எப்படிக் கோருவது என்பதிலும்தான் இந்தக் கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன.

ஈராக்கில் வியட்நாம் பாணியில் கிளர்ச்சிகள் நடைபெற்று வருவதாக செனட்டர் ரெட் கென்னடி (Ted Kennedy) சுட்டிக்காட்டியிருப்பது, பிரிட்டனின் அரசியல் வட்டாரங்களில் அபாய மணியை ஒலித்திருக்கிறது. வியட்நாமில் அமெரிக்காவின் தோல்வி பிரிட்டனில் அப்போது எந்தவிதமான எதிரொலியையும் ஏற்படுத்த முடியாது இருந்தது. ஏனெனில் அன்று இருந்த வில்சன் தொழிற்கட்சி அரசாங்கம் இராணுவத் தலையீட்டிற்கு மறுத்துவிட்டது. ஆனால் தற்போது பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் தனது எதிர்காலத்தையே ஈராக்கில் அமெரிக்காவின் வெற்றியோடு கட்டுத்தறித்துள்ளது.

உண்மையிலேயே பிரிட்டன் பிரதமர் தனது வழக்கமான மத போதகர் பாணியில் ஈராக்கில் நடைபெறும் வரலாற்று ரீதியான போராட்டத்தின் விளைவை ''நாகரீகத்தின்'' எதிர்காலத்தோடு முடிச்சுப் போட்டுவிட்டார். (பிளேயர் குறிப்பிடும் அவை சர்வதேச மூலதனத்தை குறிப்பதாகவே அமையும்.)

தற்போது பிரிட்டனில் நடைபெற்றுவரும் விவாதங்கள் பழைய சரித்திர சம்பவத்தின் பூதாகார காட்சிகளையும் நினைவுபடுத்துகின்றன. 1920 ஆம் ஆண்டு பிரிட்டன் படைகளுக்கு எதிராக ஷியைட்டுக்கள் எழுச்சியுடன் போராடினர். அந்தக் கிளர்ச்சி இறுதியாக மிகுந்த ரத்தக்களறி மூலம் அடக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மிகக்கடுமையான கசப்புணர்வு நிலவியதால் தனது படைகளை திட்டமிடப்பட்ட காலத்திற்கு 13 ஆண்டுகளுக்கு முன்னரே விலக்கிக் கொள்ளவேண்டிய கட்டாயம் பிரிட்டனுக்கு ஏற்பட்டது.

தற்போது நிலவும் ஏமாற்றம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். தெற்கு ஈராக் பகுதியில் தற்போது 8,700 பிரிட்டிஷ் துருப்புக்கள் உள்ளன. தற்போது நாடு பூராகவும் எழுந்துள்ள எதிர்ப்பானது, அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருந்து பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கும் பரவும் என்ற கவலை வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில், பிரிட்டன் அடிக்கடி நிரந்தரமாக அமெரிக்காவுடன் நிலவும் ''சிறப்பு உறவுபற்றி'' பேசிக்கொண்டிருந்தாலும், ஈராக்கிற்குள் நடக்கும் சம்பவங்களை பிரிட்டன் கட்டுப்படுத்த முடியாது.

ஆகவே, தற்போது பழமைவாத கட்சிக்காரர்கள் (Conservative Party) பீதி உணர்வுகளை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய சட்டவிரோதமான போரை தீவிரமாக ஆதரித்தவர்களும், மக்களது எதிர்ப்பையும் மீறி பிரிட்டிஷ் துருப்புக்களை காலனித்துவ படையெடுப்புக்கு அனுப்பியதை ஆதரித்தவர்களுமான இந்தக் கட்சியினர், இந்த வாரம் இரண்டுமுறை பிளேயரின் ஈராக் நிலைப்பாட்டை சவால்விட முயன்றிருக்கின்றனர்.

முதலாவதாக, இக்கட்சியின் (Tory) தலைவர் மைக்கேல் ஹோவார்ட் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி செயல்பாட்டில் பிளேயர் போதுமான அளவிற்கு செல்வாக்கை பயன்படுத்தவில்லையென்று புகார் கூறினார்.

ஒரு போட்டியில் ஹோவார்ட் கூறியதாவது:- ''நமது இராணுவ வீரர்களும், வீராங்கனைகளும், மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருவதால் நம்முடைய இராணுவ பலத்தை அதிகமாக காட்டி வருகிறோம்.

''ஆனால், நாம் அரசியல் அடிப்படையிலும், ராஜதந்திரத்திலும் நமது வலிமைக்கு குறைந்த பங்களிப்பையே செய்து வருகிறோம். ஏனெனில் பாக்தாத்தில் முடிவுகள் எடுக்கப்படுவதில், அவற்றைச் செயல்படுத்துவதில் நமது பங்களிப்பு இல்லை''

ஹோவார்ட், குறிப்பாக ஈராக்கிலுள்ள சிறப்புத்தூதர் சேர் ஜெரேமி கிரீன்ஸ்டோக் (Sir Jeremy Greenstock) நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளைய நிலை தூதரக அதிகாரி டேவிட் ரிச்மண்ட் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி கவலை தெரிவித்தார். ''இது பிரிட்டனின் செல்வாக்கு அதிகரிக்கவேண்டிய நேரத்தில், இப்போது பலவீனப்பட்டு நிற்கிறது என்று பொருள்'' என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.

உயர் அதிகாரம் படைத்த ஒருவர் ஈராக்கிற்கு அனுப்பப்படவேண்டும். அவர் பாக்தாத்தில் செயல்பட்டுவரும் அமெரிக்காவின் இடைக்கால பொம்மை ஆணையத்தின் தலைவரான போல் பிரேமருக்கு துணையதிகாரியாக செயல்பட வேண்டுமென்று டோரியின் தலைவர் கூறியுள்ளார். இதனால் ஈராக்கில் அமெரிக்க நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும், அமெரிக்கா எப்படி நிலவரத்தை சமாளிக்கிறது என்பதை லண்டனில் இருந்து கொண்டு முடிவுசெய்வது சிரமமென்றும் அவர் குறிப்பிட்டார்.

டெலிகிராப்பில் ஏப்ரல் 14 ல் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு தகவலானது, ஈராக்கிலுள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் அதிகாரிகளுக்குகிடையே நிலவுகின்ற, வளர்ந்துவரும் கருத்து முரண்பாடுகளோடு சேர் ஜெரேமி கிரீன்ஸ்டோக் லண்டன் திரும்பியிருப்பதை சம்மந்தப்படுத்தியுள்ளது.

அந்தச் செய்தியில், 10 நாட்களுக்கு முன்னர் பென்டகனிலிருந்தும் பாக்தாத் இடைக்கால கூட்டணி ஆணையத்திலிருந்தும் பதவி விலகிய மைக்கல் ரூபின் (Michael Rubin) என்பவர், பிரிட்டனின் அதிகாரிகள் ஈராக் தொடர்பான கண்ணோட்டத்தை செயல்படுத்துவதில் ''அக்கறை எதுவுமில்லாதவர்களாகவும்,'' தங்களது ''சொந்த செயற்திட்டங்களையே'' மேற்கொள்வதாகவும், எதிர்ப்பைச் சமாளிப்பதில் மிகுந்த ''மெத்தனப்போக்கில்'' செயல்படுகின்றனர் என்று தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு ஈராக்கில் பிரிட்டன் அதிகாரிகள் தங்களுக்குள்ள ''திடீர் முயற்சிகளை'' பயன்படுத்தி ''சுதந்திரமாக'' ஈரானுடன் உறவுகளை வளர்த்து வருவதாகவும், ஈரான் வாஷிங்டனின் சகித்துக்கொள்ள முடியாத எதிரி நாடுகளில் ஒன்று என்றும் ரூபின் புகார் கூறினார்.

"இடைக்கால கூட்டணி ஆணையத்தைப் (CPA) பயன்படுத்தி பிரிட்டன் ஈரானுடன் தொடர்பு கொண்டு வருவதாக எங்களுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது'' என்றும் அவர் டெலிகிராப்புக்கு தெரிவித்தார்.

பிரேமருக்கும் கிரீன்ஸ்டோக்கிற்கும் இடையே அத்தகைய பதட்டங்கள் முற்றின. ''பிரேமர் கபடமற்றவர் என்று கிரீன்ஸ்டோக் நினைத்தார்; கிரீன்ஸ்டோக் தவறான கொள்கைகளை பின்பற்றி வருவதாக பிரேமர் நினைத்தார்'' என்று ரூபின் குறிப்பிட்டார்.

இப்படிப்பட்ட கருத்துக்களானது, இவர்களது கொள்கை வேறுபாடுகளை காட்டியதாக ரூபின் குறிப்பிட்டார். ''பிரேமர் ஜனாதிபதியின் செயற்திட்டத்தை பின்பற்றி வருகிறார். பொதுவாக மிகப்பெரும்பாலன பிரிட்டனின் இராஜதந்திர அதிகாரிகள் ஜனாதிபதியின் செயற்திட்டத்துடன் உடன்படவில்லை'' என்றும் ரூபின் தெரிவித்தார்.

இந்தத் தகவல்களின் உண்மை எதுவாக இருந்தாலும் கூட்டணிப்படைகள் தங்களது குறிக்கோள்களை நிறைவேற்றுகின்றவரை உறுதியாக நிற்க வேண்டுமென்று பழமைவாதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஹோவார்ட்டின் பேட்டியைத் தொடர்ந்து அடுத்த நாள் டோரியின் வெளியுறவு செயலர் மைக்கேல் அங்கிராம் (Michael Ancram) ஒரு பேட்டியளித்தார். அதில் இடைக்கால ஆணையம் என்றழைக்கப்படும் அமைப்பிடம், அதிகாரத்தை ஒப்படைக்கும் இறுதிநாள் ஜூன் 30 என்று முடிவு செய்யப்பட்டிருப்பதை தள்ளிவைப்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் ஆராய வேண்டுமென்றும், இறுதிக்கெடு ''கல்லில் செதுக்கப்பட்ட முடிவல்ல'' என்றும் அங்கிராம் குறிப்பிட்டார். அதிகார மாற்றுத் தேதி எதையும் அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும். அதுதான் நல்லதென்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

இப்படி அங்கிராம் கருத்துத் தெரிவித்திருப்பது பிரேமர் தேர்ந்தெடுத்துள்ள அடிமை ஆட்சி ஈராக் மக்களது ஒப்புதலைப்பெற்றதல்ல என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. எனவே கூட்டணிப்படைகள் எழுச்சி எதிர்ப்புக்களை முற்றிலுமாக சமாளித்தபின்னர்தான் பொம்மை ஆட்சி நிர்வாகத்தில் பங்கெடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்.

எந்த வகையில் ஆட்சி மாற்றம் நடப்பது, எப்போது அதைச்செய்வது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் எதிர்ப்பை முறியடித்திவிட வேண்டும் என்பதில் பிரிட்டன் பத்திரிகைகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.

ஈராக் சம்பவங்கள் ''சுதந்திரத்திற்குத் தருகின்ற விலையென்று'' டெலிகிராப் பத்திரிகை கூறியுள்ளது. ஈராக்கில் தற்போது நடந்துகொண்டுள்ள குழப்பம் மற்றும் போர் துவக்கப்பட்டதே தவறு என்று கருதுபவர்கள் ''ஒழுக்க நெறிப்படியும், அறிவுஜீவிதனமாகவும், நேர்மைக் குறைவானவர்கள்'' என்று அது குறிப்பிட்டிருக்கிறது.

இத்தகைய இரட்டைப்பேச்சை வழக்கமாக ஊடகங்கள் பின்பற்றி வருகின்றன. அமெரிக்கா, ஈராக் மக்களை அடிபணியச் செய்வதற்கு மேற்கொண்டுள்ள கொலை முயற்சிகளை ''ஜனநாயக ஈராக்கின் நலன்களைக் காக்கும் நடவடிக்கை'' என்று டெலிகிராப் சித்தரிக்கின்றது. ''இப்போது நிர்ப்பந்தங்கள் அதிகம் தரப்படுகின்ற தருணமாகும். எனவே கூட்டணிப்படைகள் அதை சமாளித்தாக வேண்டும்'' என்று அது கேட்டுக்கொண்டுள்ளது.

டைம்ஸ் பத்திராகை இதில் உடன்படுகிறது. இது, ''கடுமையான நேரம், கடுமையான முடிவுகளை'' எடுக்க வேண்டுமென்று அதன் தலைவர் எச்சரிப்பதாகவும்,. ''அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் கிளர்ச்சியை மிக விரைவாக அடக்கி, ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அவசியம்'' என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

''இப்போது படைகளை குறைத்துக்கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடுவது மிகவும் ஆபத்தானது. இந்த வாரம் அமெரிக்கர்களும், பிரிட்டிஷாரும் ஈராக்கில் தங்களது பணிகளை முடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்று டைம்ஸ் கேட்டுக்கொள்கிறது.

டைம்ஸின் லிபரல் மாற்று என்று கருதப்படும் அப்சர்வர் பத்திரிகை அதைவிட வேகமாக, ஏப்ரல் 11 ல் தீட்டியுள்ள தனது தலையங்கத்தில் ''இப்பொழுது நிறுத்தி விட வேண்டாம்'' என்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், கிளர்ச்சிக்காரர்களை முறியடிக்கவேண்டும் என்றும் கோருகிறது. (அல்லது அவர்களை கொள்ளைக்காரர்கள் என்று அப்சர்வர் வர்ணிக்கிறது.)

ஜூன் 30 என்ற காலக்கெடு தள்ளிவைக்கப்படுவது நல்லது என்று அப்சர்வர் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் புஷ் அதற்கு உடன்படமாட்டார்.

அதற்கு பதிலாக ஐ.நா ஈராக்கில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளுமாறு புஷ்-ஐ நிர்பந்திக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறது. ''பிரேமர் வெளியேறியதும், ஈராக்கில் பயனுள்ள புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதற்கு வெற்றிகரமாக செயல்புரியக் கூடியவர் ஈராக்கின் ஐ.நா சிறப்புத்தூதரான, அல்ஜீரியாவைச் சேர்ந்த முஸ்லீமான (Lakhdar Brahimi) லக்தர் பிராம்மி தான்'' என்றும் அந்தப் பத்திரிகை கருத்துத் தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் தலையீடு மற்றும் பயனுள்ள புதிய அரசாங்கம் இவை எதுவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆக்கிரமிப்பிற்கு இணையாகாது என்பதை அப்சர்வர் தெளிவுபடுத்தியுள்ளது. ''ஈராக் செயல்படத்'' தொடங்குவதற்கு ''அதிக நிதியும் அதிகமான படைகளும் தேவை'' என்று அதற்கு அப்சர்வர் காரணம் கூறியுள்ளது.

அதன் சகோதர பத்திரிகையான கார்டீயன் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறது. ''ஈராக்கிலிருந்து எந்த வகையில் வெளியேறுவதாக இருந்தாலும் அதை எதிர்ப்பதில் பிளேயர் செய்வது சரிதான். அப்படி வெளியேறினால், தலையீட்டிற்கான அடிப்படையே சிதைந்துவிடும். போருக்கான ஒழுக்கநெறி அடிப்படையும் அபத்தமாகிவிடும்'' என்று அது கருதுகிறது.

பிளேயரின் தார்மீகப் போருக்கு மிச்சமிருக்கும் சிதைந்துவிட்ட நம்பகத்தன்மைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை வழங்குவதற்கு பத்திரிகைகள் முயன்று வருகின்றன. குறிப்பாக ஐ.நா அதில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும் என்று அவை கருதுகின்றன. கார்டீயன் தனது தலையங்கத்திற்கு ''ஈராக்கிற்கு ஐ.நா தேவை'' என்று தலைப்பிட்டிருந்தாலும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு ஐ.நா தேவைப்படுகிறது என்றுதான் இதன் பொருளாக இருக்கிறது.

பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை இதே கருத்தை உரத்தகுரலில் தெளிவாகத் தெரிவிக்கிறது. இந்தக் காலம் கடந்த ''மிகக் கொடிய கட்டத்தில்'' ஐ.நா இன்னமும் புஷ்ஷை காப்பாற்ற முடியுமா என்ற சந்தேகத்தை கிளப்பி, அப்படி ஐ.நாவிற்கு எந்த பங்களிப்பு தருவதாக இருந்தாலும் அது அமெரிக்க மற்றும் பிரிட்டனின் படைகள் இருப்பதற்கு மேலாக அமைந்திவிடக்கூடாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ''இதில் உண்மையான பிரச்சினை எதுவாயினும், அது அமெரிக்காவின் தலைமையிலான கூட்டணியை கலந்தாலோசிக்காது, 'சட்டப்பூர்வமான மாற்றத்தை' ஐ.நா தர முடியுமா? என்பதை ஐ.நா இப்பொழுது நிருபிக்கவேண்டும்.

''பிராம்மி அமெரிக்காவிடமில்லாத ராஜதந்திர ஆற்றலைப் பயன்படுத்தி நம்பகத் தன்மையுள்ள இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவுவாரானால், ஐ.நா பாதுகாப்பு சபையும் தனது தீர்மானம் மூலம் அதற்கு அங்கீகாரம் தர முடியும். எந்த அரசாங்மாக இருந்தாலும் அமெரிக்காவின் ஆயுத வலிமையை மட்டுமே சார்ந்திருக்குமானால் அது ஒரு மோசடியான அரசாங்கமாகத்தான் இருக்கும். அத்தகைய ஒரு அரசாங்கம் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஈராக் மக்களது ஆதரவை பெறுகின்றவரை தாக்கு பிடிக்கக்கூடும்'' என்று இப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே, தற்போது ஐ.நா வின் முகமூடியுடன் அல்லது அது இல்லாமல் ஈராக் மக்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்க வேண்டுமா? என்று பிரிட்டனின் ஆளும் வட்டாரங்களுக்குள், அந்த அளவிற்கு வெறுக்கத்தக்க நிலைக்கு விவாதம் சென்று கொண்டிருக்கிறது.

Top of page