World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Sharon, facing indictment, threatens new government

இஸ்ரேல்: ஷரோன் குற்றச்சாட்டை சந்திக்கிறார், புதிய அரசாங்கத்திற்காக அச்சுறுத்துகிறார்

By Chris Marsden
31 March 2004

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷரோன் ஆழமாகிக்கொண்டிருக்கும் ஊழல் மோசடிகள் மற்றும் தனது தீவிர வலதுசாரிக் கூட்டணி பங்காளிகளிடமிருந்து வரும் அரசியல் சவால்கள் ஆகியவற்றிக்கு முகம் கொடுக்கிறார். அவர்கள் ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீனர்களிடமிருந்து பிரித்துவைக்கும் அவரது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுக்களால் பலவீனமடைந்துவரும் ஷரோனது திட்டத்தை கைவிடச் செய்வதற்கு தீவிர வலதுசாரியினர் முயன்று வருகின்றனர். ஆனால் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்குமளவிற்கு சென்றால் கூட தனது திட்டத்தை தொடர்ந்தும் செயல்படுத்தப் போவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 28 ல் அரசாங்க வழக்குரைஞர் ஷரோன் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய பரிந்துரைத்தார். ஷரோன் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது கிரேக்கத்தில் ஒரு நட்சத்திர விடுதியை அமைப்பதற்கு, ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் மறைமுகமாக லஞ்சம் வாங்குவதற்கு சம்மதித்தார் என்பது குற்றச்சாட்டாக உள்ளது.

ஜனவரியில், ஒரு ரியல் எஸ்டேட் வர்த்தகரும் ஷரோனின் ஆளும் லிக்குட் கட்சி அரசியல் தரகருமான டேவிட் ஏப்பல் என்பவர், ஷரோன் மற்றும் அவரது புதல்வர் ஜிலாட் (Gilad) மற்றும் தொழில், வர்த்தக மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் எகுட் ஒல்மட் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

ஷரோனுக்கு 100,000 டாலர்கள் கொடுக்கப்பட்டதாகவும் மற்றும் ஷரோனின் நெகேப் (Negev) பகுதி தோட்டத்திற்கு 580,000 டாலர்களை அவரது புதல்வர் ஜிலாட் நிர்வகித்த போது அவருக்கு கொடுக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் ஷரோன் லிக்குட் கட்சி தலைமைக்கு வருவதற்கு முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

மேலும், டேவிட் ஏப்பல் ஜிலாட்டிக்கு 700,000 டாலர்கள் கொடுத்ததாகவும், 3 மில்லியன் டாலர்கள் தருவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், மற்றும் கிரேக்க அகீன் (Aegean) தீவில் ஒரு சூதாட்ட விடுதியும் ஒரு விடுமுறைகால வளாகமும் கட்டுவதற்கு அவரது தந்தை கிரேக்க நாட்டின் திட்ட அனுமதியை பெற்றுத்தருவாரானால் ஜிலாட்டிக்கு அதற்குமேல் பல்லாயிரக்கணக்கான டாலர்களை மாதச் சம்பளமாக தருவதற்கு உறுதியளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

பெப்ரவரி 29 ல் எட்டுமாத சட்ட நுட்ப போராட்டங்களுக்குப் பின்னர் இஸ்ரேல் உச்சநீதிமன்றம், ஜிலாட் தனது ஆவணங்களை போலீசாருக்கு தந்துவிட வேண்டுமென்று கோரியுள்ளது. அந்த ஆவணங்கள் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து, 1999 தேர்தல் பிரச்சாரத்திற்கு தனக்கு கிடைத்த சட்டவிரோத நன்கொடைகளை திரும்பித் தருவதற்கு 1.5 மில்லியன் டாலர் வெளிநாட்டுக் கடன்களை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை ஷரோன் மீது பதிவு செய்ய முடியுமா? என்பதை முடிவு செய்வார்கள் என்று தீர்ப்பளித்துள்ளது.

இஸ்ரேலின் அட்டர்னி ஜெனரல் மெனாசம் மசூஸ் (Menachem Mazuz) ஏப்ரல் கடைசியில் அல்லது மே மாதம் பசோவர் விடுமுறைக்குப்பின் குற்றச்சாட்டு பற்றி முடிவு செய்வார்.

ஆகவே, போலீஸ் வட்டாரங்களுக்குள்ளிருந்து இந்த விவகாரம் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.

ஏப்ரலில் ஷரோன் அளித்த உறுதிமொழி ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ''அந்தத்தீவு எங்கள் கையில் இருக்கிறது'' என்று ஷரோன் கூறியது பதிவு செய்யப்பட்டிருப்பதை அரசாங்க அட்டர்னி எட்னா ஆர்பெல், தனது நகல் குற்றச்சாட்டில் பிரதமருக்கும், அவரது புதல்வருக்கும் எதிராக பதிவு செய்திருக்கிறார்.

ஷரோனின் கூட்டணிப் பங்காளிக் கட்சிகளான தேசிய மதவாதக் கட்சி மற்றும் தேசிய ஐக்கிய கட்சி ஆகியவை இரண்டும், அவர் ஒருதலைப்பட்சமாக பிரிவினைத் திட்டத்தை நிறைவேற்றுவரானால் கூட்டணியிலிருந்து விலகப்போவதாக அச்சுறுத்தியுள்ளன.

ஷரோன் தற்காலிகமாக காசா பகுதியிலுள்ள 17 முதல் 20 குடியிருப்புக்களை அப்புறப்படுத்தி அதிலிருக்கும் 5,000 இஸ்ரேலியர்களை மற்றும் சில மக்களை மேற்குக்கரையில் குடியமர்த்த திட்டமிட்டிருக்கிறார். அத்தோடு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சுமார் பாதி நிலப்பரப்பை அபகரித்து நிரந்தரமாக தற்போது அமைக்கப்பட்டுவரும் பாதுகாப்பு வேலிக்குள் கொண்டுவந்து இஸ்ரேலுடன் நிரந்தரமாக இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார். தனது திட்டத்திற்கு ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ்ஷின் ஆதரவைப் பெறுகின்ற முயற்சியாக வெள்ளை மாளிகையில் ஏப்ரல் 14 ந்தேதி ஷரோன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். சம்பிரதாய முறையிலாவது, இஸ்ரேல் மேற்குக்கரையிலிருந்து விலகிக் கொள்வதைக் குறிக்கும் அமெரிக்காவின் ''சாலை வரைபடத் திட்டம்'' கைவிடப்படுகிறது.

இது கூட பாசிச குடியிருப்பாளர் ஆதரவு கட்சிகளுக்கும் லிக்குட் கட்சிப் பிரிவுகளுக்கும் தீவிரமான நடவடிக்கையாகத் தோன்றுகிறது. பயங்கரவாதத்திற்கு அடிபணிந்து ஒரு குடியிருப்பைக்கூட நீக்கக்கூடாது என்று இந்தக்கட்சிகள் கூறிவருகின்றன.

தேசிய மதவாதக் கட்சித் தலைவரும் ஷரோனின் வீட்டுவசதி அமைச்சருமான எபி எய்தம் (Effi Eitam) ஷரோனின் சங்கடங்களைப் பயன்படுத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ''போலீஸ் எச்சரிக்கை காரணமாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் நிலையிலுள்ள ஒரு பிரதமர் அமெரிக்காவிற்கு சென்று இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு திட்டத்திற்கு உறுதியளிக்க அனுமதிக்கக்கூடாது'' என்று கூறினார்.

இக் கட்சியின் ஷாகுல் யாகலோம் (Shaul Yahalom) என்பவர் ''அரசாங்கத்தின் முன் அனுமதி எதுவும் பெறாமல் ஒரு புரட்சிகரமான கொள்கையை ஜனாதிபதி புஷ்ஷிடம் தாக்கல் செய்வது அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளை மீறுவதாகும்'' என்று அறிவித்துள்ளார்.

தேசிய ஐக்கியக் கட்சியைச் சார்ந்த சுற்றுலா அமைச்சரான பெனி எலன் (Benny Elon) கூறுகையில், ''ஷரோன் அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கலாமே தவிர அவரது காபினெட் அமைச்சரவை முடிவு இல்லாமல் எந்தத் திட்டத்திற்கும் பேச்சுவார்த்தை நடத்த முடியாதென்று'' அறிவித்தார்.

ஆனால் ஷரோன் இதனை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டார். நாடாளுமன்ற வெளிவிவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது, அந்த இரண்டு கட்சிகளும் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொண்டால் ''அதே நாளில்'' தாம் மாற்று அமைச்சரவை அமைக்கப் போவதாகவும், மறுதேர்தல் நடத்தப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

தனது திட்டத்தை வாஷிங்டன் ஏற்றுக்கொள்ளும் என்றும் தற்காலிகமாகவாவது தனது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்பாளர்களது -- உடனிருந்து இழித்துக்கூறும் -- எல்லைகள் பற்றிய எதிர்பார்ப்புக்களை குறைந்தபட்சம் திருப்திப்படுத்தி விடமுடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிவிவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு குழுவில் அவர் உரையாற்றும் போது, யூத குடியிருப்புக்களை வெளியேற்றுவதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திவரும் மூன்று அமெரிக்க அதிகாரிகளுடன் --துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீவ் காட்லி, NSC -ஐ சார்ந்த எலியட் ஆப்ரகாம் மற்றும் வெளியுறவுத்துறை மத்திய கிழக்கு நிபுணர் வில்லியம் பேன்ஸ்-- இஸ்ரேலுக்கு கிடைக்கவேண்டிய மாற்று உதவிபற்றி பேச்சுவார்த்தை நடத்திவிட்டு ஜனாதிபதி புஷ்ஷுடன் ''இறுதி உடன்பாட்டிற்கு'' வரப்போவதாகவும் குறிப்பிட்டார்.

.ஷரோன் தான் புதிதாக அமைக்கப்போவதாக அச்சுறுத்திவரும் அரசாங்கம் பற்றி கோடிட்டுக்காட்டும் வகையில் எதுவும் கூறவில்லை என்றாலும், தனது பதவியை காப்பாற்றிக் கொண்டு மேற்குக்கரை நிலத்தை பிடித்துக்கொள்வதற்கு ஒரு இடது முகமூடி அணிந்து கொள்வதற்காக எதிர்கட்சியான தொழிற்கட்சியை அவர் நம்பக்கூடும் என்பதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன.

இஸ்ரேலின் செய்தி ஊடகங்கள், தொழிற்கட்சி உட்பட தேசிய ஐக்கிய அராங்கத்தை அமைப்பது தொடர்பாக ஒரு இரகசிய உடன்படிக்கை உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. Maariv என்ற பத்திரிகை தந்துள்ள தகவலின்படி, ஷரோனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்ட பின்னர் தொழிற்கட்சிக்கு ஆறு அமைச்சர்கள் பதவி தரப்படும் என்றும், இக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான சிமோன் பெரஸ் வெளியுறவு அமைச்சராக வரக்கூடும் எனத் தெரிவிக்கிறது. --தற்போது லிக்குட் கட்சியைச்சார்ந்த சில்வான் சலோம் இப்பதவியில் இருக்கிறார்-- அத்துடன், தற்போது தேசிய ஐக்கிய கட்சித் தலைவர் அவிக்டன் லீபர்மான் வகிக்கும் போக்குவரத்து அமைச்சரவை தொழிற்கட்சிக்குத் தரப்படும் என்றும், தேசிய மதவாதக் கட்சியைச் சேர்ந்த எபி எய்தம் வசமுள்ள வீட்டுவசதி அமைச்சரவை தொழிற்கட்சிக்கு வழங்கப்படும் என்றும், பொருளாதார தாராண்மை கொள்கை கொண்ட Shinui கட்சியின் வசமுள்ள சுற்றுப்புற சூழல் அறிவியல் அமைச்சகங்களும் தொழிற்கட்சிக்கு தரப்படும் என்று இப்பத்திரிகை தகவல் தந்துள்ளது.

சில தொழிற்கட்சி பிரதிநிதிகள் அத்தகைய பேரம் எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். இந்தத் தகவல்கள் என்பன ஷரோன் முயற்சிக்கு ஆதரவாக அவரது கூட்டணிக் கட்சியினரையும் லிக்குட் கட்சி அதிருப்பதிக் குழுக்களையும் திருப்திப்படுத்துவதற்காக கூறப்படுபவையே தவிர, தீவிர வலதுசாரிப் போக்கிலிருந்து வெட்டிக்கொண்டு செல்லுகின்ற நியாயமான முயற்சியல்ல என்று கருத்துத் தெரிவித்தனர்.

ஆனால், அத்தகைய பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் உண்டு. அவசியம் எழுமானால் 2002 அக்டோபர் வரை ஷரோனை ஆதரித்தது போன்று தொழிற்கட்சி செயல்படக்கூடும். அந்த நேரத்தில் ஷரோன் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய மூன்று தொழிற்கட்சி அமைச்சர்களில் ஒருவரான டாலியா இட்சிக் இதுபற்றி கருத்து தெரிவிக்கும்போது, அட்டர்னி ஜெனரல் ஷரோன் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதா? என்பதை முடிவு செய்யும் வரை தமது கட்சி கூட்டணியில் இணைவது பற்றி முடிவு செய்ய இயலாது என்று அறிவித்துள்ளார்.

Top of page