World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

The dead end of nationalism

Turkey: Successor organization of the PKK curries favour with US

தேசியவாதத்தின் இறுதி முடிவு

துருக்கி: PKK யின் வாரிசு அமைப்பு அமெரிக்காவின் தயவைப் பெற சாதகமாகவுள்ளது

By Bülent Kent
8 April 2004

Use this version to print | Send this link by email | Email the author

1990 களில் துருக்கியின் கிழக்குப் பகுதியில் குர்திஸ் அரசுக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தி வந்த குர்திஸ் தொழிலாளர் கட்சியின் (Kurdish Workers Party - PKK) வாரிசு அமைப்பு தற்பொழுது ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை ஆதரித்துள்ளது.

Junge Welt என்ற தினசரிப் பத்திரிகை அறிக்கையின்படி, PKK அமைப்பிலிருந்து உதித்தெழுந்த அமைப்பான குர்திஸ்தான் மக்கள் காங்கிரசுடைய (Kurdistan People's Congress - Kongra-Gel) துணைத் தலைவர் ஒஸ்மான் ஒக்கலானின் இந்த அமைப்பு கடந்த பெப்ரவரியில், வடக்கு ஈராக்கிலுள்ள அதன் முகாமிலிருந்து வெளியேறி அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளிடம் சென்றுள்ளது. ஒஸ்மான் ஒக்கலான், PKK ன் நீண்டகாலத் தலைவரும் துருக்கியில் 1999 முதல் சிறைவாசம் இருந்து வரும் அப்துல்லா ஒக்கலானின் சகோதரர் என்று இந்தப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

ஒஸ்மான் ஒக்லானுடன் வெளிப்படையாகவே செயற்குழு உறுப்பினர்களான நிசமற்றின் தாஸ் மற்றும் PKK யின் ஐரோப்பிய முன்னாள் பேச்சாளரான கைடர் சாரிக்காய், அதே போல பல நூறு இதர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுக்கு சாதகமாக உள்ளனர். எடுத்துக்காட்டாக, இ்ஸ்லாமிய எதிர்ப்பு போராளிகளை (Islamic resistance) ஊடுருவ விடாது தடுப்பதற்காக ஈராக் மற்றும் ஈரான் எல்லையை பாதுகாக்கும் பணியை இவர்கள் ஏற்றுக்கொள்ள சம்மதித்துள்ளனர் என்று இப்பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

குர்திஸ்தான் மக்கள் காங்கிரசுடைய தலைவர் சுபையீர் அய்டர் இந்தக் குழுவை கண்டனம் செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மற்றும் அப்துல்லா ஒக்கலான் தனது சகோதரர் ''ஒரு ஆபத்தான வலதுசாரி தேசியவாத பாதையை'' பிரதிநிதித்துவம் செய்வதாக விமர்சித்துள்ளார். ஆனால் தந்திரோபாய அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு அப்பால் PKK ன் முந்திய கொள்கைகளின் தர்க்க ரீதியான விளைவுதான் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களின் தயவைப் பெறுவதற்கு பகிரங்கமாக மேற்கொள்ளப்படும் முயற்சியாக இது இருக்கின்றது.

2003 நவம்பரில் குர்திஸ்தான் மக்கள் காங்கிரஸ் நிறுவப்பட்டதே, அமெரிக்கா ஈராக்கை பிடித்துக் கொண்டதன் எதிர்விளைவாகத்தான் ஆகும். தங்களது தலைவரை சிறையில் வைத்தவுடன் PKK கொரில்லாக்கள் குர்திஸ் இனத்தவர் அதிகமாக வாழும் வடக்குப் பிராந்தியத்திக்கு பின்வாங்கிச் சென்றனர். இக் கட்சி நிறுவப்பட்டபோது வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கை வெளிப்படையாக அமெரிக்கத் தலையீட்டை வரவேற்றுள்ளது. ''சதாம் ஹூசைன் ஆட்சிக்கெதிராக தலையிட்டதன் மூலம் குர்துகளையும் மற்றும் மக்கள் அனைவரையும் கடுமையாக ஒடுக்கி வந்ததை மாற்ற, புதிய சகாப்த விடியலில் அமெரிக்கா மிக முக்கிய பங்களிப்பு செய்துள்ளது. அமெரிக்காவின் தலையீட்டை குர்திஸ்தான் மக்கள் காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் குர்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால் மட்டுமே ஆக்கபூர்வமான முடிவுகளை அடைய முடியும்'' என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ந்து வந்த வாரங்களில், கட்சிக்கு நெருக்கமாக உள்ள பத்திரிகைகள் அமெரிக்காவின் பிரச்சாரத்தை அப்படியே பின்பற்றியதுடன், அதன் வார்த்தைகளைக் கூட அதே பாணியில் தேர்ந்தெடுத்து கட்டுரைகளை எழுதின. எடுத்துக்காட்டாக, Yeniden Özgur Günden என்ற தினசரி பத்திரிகையில் டிசம்பர் 28 ல் செமால் உகார் என்பவர் ''அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களை எதிர்ப்பு (resistance) என்று அழைப்பதை நான் எதிர்க்கிறேன்'' என்று அவர் வார்த்தையில் கண்டித்துள்ளார்.

செமால் உகார், சன்னி முக்கோணம் என்றழைக்கப்படும் நிலவரத்தை தான் ஈராக்கிலிருந்த போது தெரிந்துகொண்டதாகவும், அமெரிக்காவை ''ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு அதிகாரம்'' என்று விவரிப்பதை தான் ஏற்க மறுப்பதாகவும் எழுதுகிறார். ''ஏனெனில் ஈராக்கியர்களின் எதிர்ப்பு தேவையான அடிப்படைகளை கொண்டதாக இல்லை. ஒவ்வொரு எதிர்ப்பு இயக்கமும் தனது கொள்கை அறிக்கையில் அதன் நோக்கங்களை விளக்கியாக வேண்டும். அமெரிக்கர்களுக்கு எதிரான இயக்கத்தில் கொள்கை அறிக்கை இல்லை என்பதுடன் ஆற்றலும், ஒரு அடித்தளமுமில்லை'' என்று அவர் தொடர்கிறார். அத்தோடு, ஜோர்ஜ். டபுள்யூ. புஷ் வாயிலிருந்து வருகின்ற சொற்களைப்போன்று ''ஈராக்கில் தீங்கை எதிர்த்து போரிட வாஷிங்டன் முயன்று வருகிறது. அதே நேரத்தில் எது நல்லது என்று செய்வதில் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் துன்புறும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்று அவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ஈராக் மக்களது துன்பத்திற்கும் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் அதன் சூரையாடலுக்கும் சம்மந்தமில்லையென்றும், ஈராக்கியர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளால்தான் இந்த துன்பங்கள் ஏற்படுகின்றன என்றும் உகர் கூறுகிறார். ''இந்த தாக்குதல்கள் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றினால் பிரச்சனைகள் தீருவதற்கு பதிலாக அவை தீவிரமடையவே செய்கின்றன. இதற்கு முறியடிக்கப்பட்ட சதாம் ஹூசைன் குழுதான் பொறுப்பாகும். அவர்கள் முறியடிக்கப்பட்ட நேரத்தில் பணம் முழுவதையும் தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். அவற்றின் மூலம் ஆயுதங்களை வாங்கி அரபு நாடுகளிலிருந்து போராளிகளையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள்'' என்று கருத்து அவர் தெரிவித்துள்ளார்.

மறைக்கமுடியாத அளவிற்கு இனவெறி உணர்வோடு அவர் மேலும் தொடர்கிறார்; ''சதாம் ஆட்சியில் செலவினங்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் போருக்குப்பின்னர் கீழிறக்கப்பட்ட ஆட்சியாளர்கள் காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு புதிய கற்காலத்தில் (அறிவுஜீவித) வாழ்ந்து கொண்டிருக்கும் இனங்களோடு சேர்ந்து கொண்டார்கள். அதற்குப்பின்னர் எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் ஒரு வெடிகுண்டு உருவாக்கப்பட்டது. எப்போது அது வெடிக்கும், எத்தனை குடிமக்களை அது கொல்லும்? எத்தனை பேருக்கு அதிர்ச்சியை உண்டாக்கும்? என்று எவருக்கும் தெரியாது. அதற்கு தரப்பட்டுள்ள விஞ்ஞானப் பெயர் பயங்கரவாதமாகும்''

அந்தக்கட்டுரை முழுவதும் திரட்டப்பட்ட வாதம் நிரூபிக்க முயற்சிப்பது என்னவெனில், ஈராக்கில் நிலவுகின்ற கலகத்தையும் குழப்பத்தையும் செயலாற்றத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது. மேலும் அது, அமைதியும் ஒழுங்கும் மிக விரைவாக திரும்பவேண்டும். ஏனென்றால் ஈராக் மக்கள் தங்களை அமெரிக்காவிடம் கீழ்படுத்தவேண்டும் என்பதாகும்.

அதே ஆசிரியர் மற்றொரு கட்டுரையை 2004 ஜனவரி 4 ல் Yeniden Özgur Gündem பத்திரிகையில், ''எதிர்ப்பு சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்று நினைப்பவர்கள் அந்த ஆக்கிரமிப்பு நீண்ட காலம் நீடிப்பதற்கு வழிசெய்கிறார்கள்'' என்றும் எழுதியியுள்ளார்.

DEHAP என்ற கட்சியும், குர்திஸ் தேசியவாதத்தை சட்டபூர்வமான வழிமுறைகளில் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தக் கட்சி சற்று அதிகமான கட்டுபடுத்தப்பட்ட தொணியோடு பக்கத்து நாட்டில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்திருப்பதை வரவேற்றுள்ளது.

எடுத்துக்காட்டாக, 2003 டிசம்பர் 29 ல் இந்தக் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் நசி குட்லே துருக்கியின் இடதுசாரி நாளிதழான Evrensel ல் பின்வருமாறு எழுதுகிறார்: ''அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய அரசு என்பதில் சந்தேகம் எதுவும் இருக்கமுடியாது. ஆனால் அமெரிக்கா, ஈராக் மீது ஆக்கிரமித்து சதாம் ஹூசைனை பிடித்து மத்திய கிழக்கில் பல மாற்றங்களை உருவாக்கும். ஈராக் மேலும் அதிக அளவில் ஜனநாயக உரிமையுள்ள நாடாக மாறுவது அவசியமாகும். இதனால், முதல் தடவையாக குர்துகளுக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கும். அதற்குப் பின்னர் இந்தப் பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளும் மாறியாக வேண்டும். இந்த மாற்றம் இடம்பெறாவிட்டால் உள் இயக்க விசையாயால் அது உலகத்தின் மிகப்பெரிய ஏகாதிபத்திய அரசால் உதவப்படும். நாம் என்ன விரும்புகிறோம் அல்லது என்ன விரும்பவில்லை என்பது இந்த நிலவரத்தை மாற்றாது. குர்துகளை அடக்கி ஒடுக்குவதற்குப் பதிலாக அவர்கள் ஜனநாயக முறையிலும் மனித உரிமைகள் அடிப்படையிலும் உருவாக்கப்படுகின்ற புதிய கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்''

தேசியவாதத்தின் இறுதி முடிவு

குர்திஸ் தேசியவாதிகள் தங்களது இடதுசாரி ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் தந்து வந்தவர்கள் ஆவர். அவர்கள் தற்போது மிக வலிமைமிக்க ஏகாதிபத்திய சக்தியை ஆதரிக்கிறார்கள் என்பதை யார் விளக்குவது?

1970 களின் கடைசியில் PKK நிறுவப்பட்டபோது துருக்கி கடுமையான வர்க்க போராட்டங்களால் ஆட்டம் கண்டிருந்தது. ஆனால், குர்து சிறுபான்மையினரின் மீதான காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குமுறைகளுக்கு PKK ன் பொறுப்பாக, குர்திஸ் மற்றும் துருக்கி தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கு மாறாக, சுதந்திர குர்திஸ் அரசு என்ற கோரிக்கையை முன்னெடுத்தது. இந்தக் கட்சி தனது பெயரையும் மீறி, தொழிலாள வர்க்கத்தினது சமூகப் போராட்டத்தை இரண்டாம் பட்சமாகவும், முதல் இடமாக தேசியப் பிரச்சனை முடிவு செய்யவேண்டும் என்பதையும் கொண்டிருந்தது.

1980 ல் துருக்கி இராணுவத்தால் கிளர்ச்சி எழுச்சி தொடரப்பட்டு, அங்கு கொடூரமான சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்டது. இதனால், PKK ஆயுதந் தாங்கிய போராட்டத் திசைக்கு திரும்பியது. ஆரம்பத்தில் மக்களது குறைந்தளவு ஆதரவைக் கொண்டிருந்த இந்த அமைப்பு இராணுவத்தின் பயங்கர நடவடிக்கைகளால் மக்களிடையே மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றது. இந்த அமைப்பின் ஆயுதந் தாங்கிய போராட்டத்தின் நோக்கம் குர்து அரசை ஸ்தாபிப்பதாக இருந்தது. இதன் முன்னோக்கு பிராந்திய அரசுகள் மற்றும் சில பெரிய அரசுகளின் ஆதரவை பெறுவதை நோக்கமாக கொண்டது. பல ஆண்டுகள் PKK க்கு சிரியா தஞ்சமளித்தது. நேட்டோவின் கிழக்கு எல்லையில் துருக்கி கணிசமான பங்களிப்பு செய்து வந்ததால், இந்த அமைப்பால் ஐரோப்பாவிற்குள்ளேயும் அல்லது அமெரிக்காவிலும் கணிசமான ஆதரவைப்பெற முடியவில்லை.

சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் 1991 வளைகுடாப் போருக்குப்பின், PKK சிரியாவின் தளத்தை இழந்தது. சிரியா ஆட்சி ஈராக்கையும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவையும் எதிர்த்து வந்தது. எனவே PKK புதிய நிலைநோக்கை தேட ஆரம்பித்து, பெரிய அரசுகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தந்தும், அதேபோல துருக்கி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஆதரவு காட்டத் தொடங்கியது. அத்துடன், அதிகாரத்தில் ஒரு சிறிய பங்கிற்காக அவர்களது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள PKK தயாராகவும் இருந்தது. ஏற்கெனவே வளைகுடாப் போரின்போது ஒக்கலான், வாஷிங்டனுடன் நல்லுறவு வைத்திருந்த ஈராக்கிலுள்ள குர்துக்களின் தலைவர் செலால் தலிபானியை (Celal Talabani) சந்தித்தார். அவர் துருக்கி அரசாங்கத்துடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு தனது சேவையை வழங்க முன்வந்தபோதிலும், அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. இருப்பினும் அவர், 1993 ல் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு தனி அரசு கோரிக்கையையும் கைவிட முன்வந்திருப்பதாக பிரகடனப்படுத்தினார். ஆனால், இதற்கு துருக்கி அரசாங்கத்தின் சார்பில் எந்தவிதமான உடன்பாடான பதிலும் கிடைக்கவில்லை.

மேலும், இவர்கள் அமெரிக்கா மற்றும் குறிப்பாக ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆதரவைக்கோரி வலுவான குரலை எழுப்பினார்கள். ஆனால் 1999 ல் இத்தாலி ஒக்கலானுக்கு தஞ்சம் தரமறுத்துவிட்டதற்கு சற்று பின்னர் நைரோபிலிருந்து அமெரிக்க ரகசிய சேவைகளின் ஆதரவோடு அவர் பலாத்காரமாக கைதுசெய்யப்பட்டார். இந்த நடவடிக்கைகளின் மூலம், ஐரோப்பிய அரசுகள் மற்றும் அமெரிக்கா PKK வுடன் ஒத்துழைக்க எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பதை சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்திக்காட்டின.

இதன்பின்பு, இந்த அமைப்பு வடக்கு ஈராக்கிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொண்டதன் மூலம் துருக்கிக்கு எதிரான ''ஆயுதந்தாங்கிய போராட்டத்திற்கு'' அதிகாரப்பூர்வமான முற்றுப்புள்ளி வைத்தது. 1999 ஆகஸ்டில் PKK யின் மத்திய குழுவானது, பத்திரிகைக்கு வெளியிட்ட ஒரு அறிக்கையில், மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் அதன் புதிய ஒழுங்குமுறைக்கும் ஒத்துப்போக வேண்டிய நிலை அவசியமென்று அறிவித்தது.

9/11 ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கம், உலகம் தழுவிய ''பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' பிரகடனத்தை வெளியிட்டது. இதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் PKK தனது பெயரை ''குர்திஸ்தான் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்'' (KADEK- Congress for Freedom and Democracy in Kurdistan) என்று மாற்றிக்கொண்டது. இந்தப் பெயர் மாற்றமானது, கட்சியின் பழைய போராளி தன்மையிலிருந்து பிரிந்து வந்திருப்பதை கோடிட்டு காட்டுவதற்கு செய்யப்பட்டதாகும். ஆனால் இந்த அமைப்பின் தலைவர்கள் ஏமாற்றமளிக்கும் வகையில் இரண்டாண்டுகளுக்குப் பின்னர், ''குர்திஸ் பிரச்சனை தொடர்பாக மத்திய கிழக்கில் முக்கிய நபர்களுடன் பேச்சுவார்த்தையை அபிவிருத்தி செய்வதற்கு'' இந்த சமிக்கை போதுமானதல்ல என்று கருதினார்கள்.

இதற்கிடையில் அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தை பலாத்காரமாக இராணுவத்தின் மூலம் மீள ஒழுங்கமைக்கத் தொடங்கியதால், KADEK எந்தப் பயனுமில்லாத அமைப்பாக போயிற்று. ஆகவே, கடுமையாக மதிப்பிழந்துபோன ஒரு எதிரியோடு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு துருக்கி அரசாங்கம் விரும்பியதாக தெரியவில்லை. மாறாக துருக்கி இராணுவம், வடக்கு ஈராக் மீது அமெரிக்கா PKK / KADEK க்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் படையெடுக்கப் போவதாக அச்சுறுத்தியது. இதற்கு வாஷிங்டனும், வடக்கு ஈராக்கில் PKK யை சகித்துக் கொள்ளப்போவதில்லை என்று அங்காராவிற்கு உறுதியளித்ததுடன், KADEK ஒரு ''பயங்கரவாத அமைப்பு'' என்று உத்தியோகபூர்வமாக வகைப்படுத்தியது.

2003 TM KADEK கலைக்கப்பட்டு ''குர்திஸ்தான் மக்கள் காங்கிரஸ்'' (Kurdistan People's Congress - Kongra-Gel) அமைக்கப்பட்டது. மேலும் அவர்கள், KADEK ன் வேலைத்திட்டமும், அமைப்பின் கட்டமைப்பும் ''பல இனங்களைக் கொண்ட, மற்றும் ஜனநாயக சமுதாயத்தின் அரசியல் போராட்டத் தேவைகளை நிறைவேற்றவில்லை'' என்று சுயவிமர்சனம் செய்து கொண்டனர். ''லெனினிஸ்ட் கட்சி அமைப்பு மாதிரியின் மிச்சமிருந்த பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கின் கோட்பாடு கட்டமைப்பு சிந்தனைகள் என்பன கட்சி அமைப்பில் புதிய சமுதாயக் குழுக்களையும் ஜனநாயக சக்திகளையும் சேர்த்துக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கிவிட்டதாக'' அவர்கள் குறிப்பிட்டனர். "பழைய PKK வின் தொடர்ச்சிதான் KADEK ஆகும். இதனால் சர்வதேச அங்கீகாரம் தடுக்கப்பட்டதுடன், ஜனநாயகமயமாக்கும் திட்டத்தின் நிகழ்ச்சிப்போக்கு எதிர்மாறான தாக்கத்தை சந்தித்தது'' என்று தலைமையின் அதிகாரிகள் நம்பிக்கை கொண்டனர்

Kongra-Gel கட்சித் தலைவராக தேரந்தெடுக்கப்பட்டுள்ள சுபையர் அய்டர் (Zubeyar Aydar) பழைய கொரில்லாப் போராளி என்ற வரலாற்றுப் பின்னணி இல்லாதவர். 1986 முதல் அவர் ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருவதுடன், மனித உரிமைகள் அமைப்பில் (IHD) தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவர், தனது சொந்த நகரான Siirt ல் சமூக ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவராக (Social Democratic Populist Party-SHP) பணியாற்றி வருகிறார். அத்துடன் மக்கள் தொழிலாளர் கட்சியின் (People's Labour Party-HEP) சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். அவரை கொலை செய்வதற்கு 1993 ல் இரண்டு முயற்சிகள் நடந்ததாக Kongra-Gel தெரிவித்தது. 1994 ல் அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்டிருந்த தனி உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, HEP கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால், அவர் துருக்கியிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து குர்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் குர்து தேசிய காங்கிரசிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார்.

நவம்பர் 2003 ல், Kongra-Gel ன் தலைவராகத் சுபையர் அய்டர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்குமா என்று ஒரு பத்திரிகையாளர் அவரிடம் கேட்டபோது; "அமெரிக்கா ராஜீய ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் என நம்புகிறோம்" என்று அறிவித்தார். Kongra-Gel ஆன்லைனின் படி, கொரில்லாக்களிடமிருந்து ஆயதங்களைக் களைவது தொடர்பாக துருக்கிக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உடன்பாடு இருந்ததா என பத்திரிகையாளர் கேட்டதற்கு அவ்வாறு செய்வதற்கு அமெரிக்கா முயற்சி செய்துவருகிறது என்று அவர் பதிலளித்தார். அத்தோடு அமெரிக்கா குர்திஸ் இயக்கத்தைக் காட்டிலும் துருக்கி மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தொடர்ந்தார்.

ஆகவே, Kongra-Gel ன் முன்னோக்கானது அமெரிக்காவின் செயலூக்கமான ஆதரவுடன் துருக்கி முதலாளித்துவத்துடன் ஒரு உடன்பாட்டுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இது, ஈராக்கில் அமெரிக்காவின் ஒரு போலீஸ் படையாக சேவை செய்ய ஒஸ்மான் ஒக்கலானும், அவரை சுற்றியுள்ள குழுவினராலும் வெளிப்படையாக செய்யப்பட்ட ஒரு சிறிய அடி எடுத்து வைப்பாகும்.தேசியவாதத்தின் தர்க்கவியலானது PKK ஐ நம்பிக்கையற்ற முடிவிற்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த தேசியவாத முன்னோக்கு ஏழ்மை பீடித்த குர்திஷ் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதனையும் வழங்கவில்லை. அத்தடன், துருக்கியிலோ அல்லது ஐரோப்பிய நகரங்களிலோ வாழும் மற்றும் வேலைசெய்யும் அவர்களில் பலருக்கு ஒன்றும் தரவில்லை. ஆகவே இதற்கு மாறாக, ஒடுக்குமுறை, வறுமை மற்றும் உரிமையின்மை இவற்றை வெல்ல, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மத்தியகிழக்கு முழுமையிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சோசலிச முன்னோக்கு அவசியமாக தேவைப்படுகிறது என்பது தெளிவாகும்.

Top of page