World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: ruling parties in crisis as Chirac and Sarkozy spar

பிரான்ஸ்: சிராக் மற்றும் சார்கோசி சர்ச்சை போன்று ஆளும் கட்சிகளுக்குள் நெருக்கடி

By Alex Lefebvre
4 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

பிரான்ஸ் ஜனாதிபதி சிராக்கின் UMP கட்சி மார்ச் 28-ல் நடைபெற்ற பிராந்தியத் தேர்தல்களில் படுதோல்வியடைந்தது பிரான்ஸ் அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது: சிராக்கின் ஸ்தாபனமும் அதன் கொள்கைகளும் பரவலாக செல்வாக்கை இழந்துவிட்ட நிலையிலும் இப்போதுள்ள எந்த அரசியல் வடிவமும் பிரான்சில் மாற்றுக்கொள்கைகளை கொண்டுவர அல்லது மக்களது ஆதரவை பெறுகின்ற வல்லமை பெற்றவையாக இல்லை.

இந்த தேர்தல்களில் வலதுசாரி UMP-க்கு ஒரு படுதோல்வியாகும். பிரான்சின் நிர்வாகத்தின் 22 பிராந்தியங்களில் 14-பிராந்தியங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருகின்றது. மற்ற 21 பிராந்தியங்களில் மத்திய-இடது சோசலிச கட்சி (center-left Socialist Party-PS) கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுள்ளது. பிரதமர் ஜோன்-பியர் ரஃப்ரன் அரசாங்கம் மேற்கொண்ட சமூக சிக்கன நடவடிக்கைகளால் வாக்காளர்களும், அரசியல் பண்டிதர்களும் புறக்கணித்து விட்ட காரணத்தினால் ரஃப்ரின் அரசாங்கத்தை மீண்டும் ஒழுங்கமைக்க வேண்டிய கட்டாயம் சிராக்கிற்கு ஏற்பட்டுவிட்டது. வாக்குப்பதிவில் 29-சதவீதம் ஆதரவாளர்கள் மட்டுமே ரஃப்ரன் பதவியில் நீடிக்கவேண்டும் என்று கருதி வாக்களித்தார்கள். இருந்தபோதிலும் சிராக் மார்ச் 30-ல் மீண்டும் பிரதமராக ரஃப்ரனை நியமித்திருக்கிறார்.

இதற்கு முன்னர் ஊடகங்கள் சிராக் தனது முதன்மை-பகைவரான முன்னாள் உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோசியை பிரதமராக நியமிப்பதற்கான கட்டாயம் ஏற்படும் என்று பகிரங்கமாக ஊகங்களை வெளியிட்டன. சர்கோசி அதிதீவிர சுதந்திர-சந்தை கொள்கைகளையும், சமூக வெட்டுக்களை கொண்டுவந்ததையும் தெளிவாக அறிந்திருந்தாலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சார்கோசி மேற்கொண்ட வலதுசாரி கொள்கைகள் பிரான்சில் பிரபல்யமானவை என்று அவருக்கு சாதகமாக முன்னிலைப்படுத்தி ஊடகங்கள் பரப்பி வந்தன. சார்கோசி UMP கட்சித்தலைவராக வந்து, இறுதியில் சிராக்கிற்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் பகிரங்க சவாலாக 2007 இன் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிற்கும் தனது ஆவலை வெளிப்படுத்தினார்.

ரஃப்ரன் அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட கொள்கைகளோடு நேரடியாக சம்மந்தம் இல்லாத நான்கு ''சூப்பர் அமைச்சர்களை'' சுற்றி சிராக் தனது அரசாங்கத்தை மறு-வடிவமைப்பு செய்திருக்கிறார். சார்கோசி நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருப்பார், Dominique de Villepin உள்துறை அமைச்சராகவும், François Fillon கல்வி அமைச்சராகவும், Jean-Louis Borloo தெளிவற்ற துறையான வேலைவாய்ப்பு மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பு அமைச்சில் தலைவராகவும் பணியாற்றுவர்.

இப்படி அலுவலர்கள் மாற்றம், அரசாங்க கொள்கைகளை மாற்றவேண்டும் என்ற உள்ளடக்கத்தில் உருவாக்கப்பட்டவை அல்ல. தனக்கு சாதகமாக UMP கொள்கையின் செல்வாக்கை சிராக் பரவலாக மாற்றி அமைத்துக்கொள்ளவதின் ஒரு முயற்சிதான். சார்கோசி, முன்பு உள்நாட்டு அமச்சராக இருய்தவர், முன்னர் ஊடகங்களால் விரிவாக ஆதரிக்கப்பட்ட சட்ட ஒழுங்கு கொள்கைகளை இனி கண்காணிக்க மாட்டார். ஒப்பீட்டளவில் எளிதான பணி de Villepin-க்கு கிடைக்கும், அவர் சிராக்கிற்கு விசுவாசமானவர் என்று மதிப்பிடப்படுகிறது. மாறாக சார்கோசி மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்ட சமூக செலவின வெட்டு, பொது நிறுவன தொழிலாளர் ஊதிய குறைப்பு, மற்றும் சலுகைகள் ரத்து போன்ற பணிகளை மேற்கொள்வதுடன் அரசாங்கத்தின் மிகப்பெரிய பட்ஜெட் பற்றாக்குறையையும் முடிவு செய்ய வேண்டியவராவார். இதர முன்னணி சிராக் ஆதரவாளர்களான--- பாதுகாப்பு அமைச்சர் Michèle Alliot-Marie நீதியமைச்சர் டோமினிக் பெர்பன் மற்றும் விவசாய அமைச்சர் Hervé Gaymard ஆகியோர் தங்களது பழைய பதவிகளை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.

பார்லோ புறநகர் அமைச்சராக இருந்தபோது அருகாமை பகுதிகளில் வாழுகின்ற ஏழை மக்களது இடர்பாடுகளை முன்நிலைப்படுத்தி ஆற்றிய உரையினால் மிகப்பிரபலமானவர் என்று கருதப்படுபவர், அவர் சமீபத்திய பட்ஜெட்டோடு தனது பணிகளை துவக்கியிருப்பது (அதிகமாக 6-பில்லியன் யூரோக்கள் ஒரு வருடத்திற்கு என்று இருந்ததில் தற்பொழுது பரந்தளவில் வெட்டு என்று அச்சுறுத்தப்படுகிறது) மேலெழுந்தவாரியாக மேற்பூச்சு நடவடிக்கைகளுக்குத்தான் பயன்படுத்தப்படும் தொகையாகும்.

சிராக் அணியினர் துவக்கியுள்ள விரிவான பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான் பார்லோவின் தலைமையிலான அமைச்சரவை வாக்காளர்களின் கருத்தைக் ''கேட்டு'' அதிகம் ''சமூக'' வர்ணந்தீட்டும் முறை உருவாக்கப்பட்டிருப்பதாக வாதிடுகின்றனர். வேலையிழந்தோர் காப்பீட்டுத்திட்டத்தில் வெட்டுக்கள் தாமதப்படுத்தப் பட்டிருக்கின்றது. வேலை நிறுத்தம் செய்துவந்த விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கோரி வந்த நிரந்தர இடத்தை ஏப்ரல் 8-ந்தேதி பெற்றிருக்கின்றனர். தற்போது பகுதிநேர நாடக அரங்குகளின் ஊழியர்களுக்கு சேரவேண்டிய வேலையிழந்தோர் உதவிகளை எப்படி மீண்டும் கணக்கிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன.

இவை பெரும்பாலும் சான்று குறிப்பு கொள்கை மாற்றம்தான் வாக்காளர்களை இதனால் சாந்தப்படவில்லை. சிராக் மற்றும் ராப்ரினை ஏற்றுக்கொள்கின்ற விகிதத்தில் வீழ்ச்சியுற்ற அதேவேளை மேலும், மக்கள் அவிப்பிராய வாக்கெடுப்பு ஏப்ரல் 21-மற்றும் 22-ல் நடத்தப்பட்டதில், 32 மற்றும் 26 சதவீதம் முறையே இவர்களுக்கு கிடைத்துள்ளது. ராப்ரனை சிராக் மீண்டும் நியமித்தது சட்டவிரோதமானது என பரவலாகப் பார்க்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் ஜூன் 13-ந்தேதி நடைபெறும் ஐரோப்பிய தேர்தல்கள் வரைதான் நீடிக்கும் என்று பத்திரிகைகள் இடைவிடாது ஊகச்செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

âவ்வாறாயினும் நிலமையில் இவ்வாறு மாற்றம் செய்தது பிராசின் வர்த்தக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனென்றால் இவாறான சொற்ப சலுகைகளை அளிப்பது திட்டமிட்ட பாரிய சமூக வெட்டை தொழிலாளர்களி தோள்களின்மீது சுமத்துவதனை முடியாததாக்கிவிடும் என அவை பயந்தன. ஏப்ரல் 7-ல் வர்த்தக தினசரி Les Echos பிரான்சின் தொழிற்துறை பிரிவின் பிரதான வர்த்தக அமைப்பான Medef (பிரான்சு தொழிற்துறை இயக்கம்) தலைவர் Daniel Dewavrin பேட்டியை வெளியிட்டிருக்கிறது. ''யதார்த்தமான நிலவரத்திற்கு தொடர்பில்லாத அரசியல் சூழ்நிலை பற்றிதான் கவலையடைந்திருப்பதாகவும்'' அது "CEO களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லை'' என்றும் குறிப்பிட்டார். Dewavrin தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டங்களில் வெட்டுக்களை கொண்டுவர வேண்டும் என்றும், பெரிய கூட்டுநிறுவனங்களது வரிகளை குறைக்க வேண்டுமென்றும், ஏற்றுமதி மானியங்களை அதிகரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Medef டைரக்டர் Ernest - Antoine Seillière ஏப்ரல் 3-ல்வெளியிட்ட கருத்துகள் பிரெஞ்சு வர்த்தக வட்டாரங்களின் கவலைகளையும், பிரான்சின் ஆளும் வர்க்க அரசியல் விசுவாசத்தை பெருக்குவதற்காக சிராக் மற்றும் சர்கோஷி-க்கு இடையே வளர்ந்து வருகின்ற போராட்டதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. Seillière கருத்துரையில் முந்தைய இரண்டு அரசாங்கங்களும் ரஃப்பரன் கீழ் ''துணிவற்று'' அதன் "சீர்த்திருத்தங்களை" செயல்படுத்தியது. கால்பந்து வீரர் Zinédine Zidane-ஐ மேற்கோள்காட்டி சர்கோஷி ''அராசங்க அணியில் Zidane ஆக'' விளங்குகிறார். 'கோல்'களை போடுவதற்காக அவரைத்தான் நம்பியிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்போதுள்ள அணி ஆளும் வட்டாரங்களின் நலன்களை காத்துநிற்கின்ற வல்லமைபடைத்தது என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் சிராக்கின் அணி இதற்குப் பதிலளித்தது.

முதலில் தங்களது உள்நாட்டுக் கொள்கைகள் மாறுவது இல்லை என்பதை எடுத்துக்காட்டும் நடவடிக்கைகளை அறிவித்தது. இது வலதுசாரி சட்டம் ஒழுங்கு சூழ்நிலையை வளர்த்து அரசியல் அடிப்படையில் தாக்குப் பிடிக்கக்கூடிய விவேகமான சாத்தியமான வழிகளில் தொழிலாள வர்க்கதின் சமூகநிலையினை தாக்குகினன்ற நடவடிக்கைகளை எடுப்பதாகும். ஏப்ரல் 22-அன்று ரஃப்பரன் ஒரு சுய தனியார் ஒய்வூதிய நிதிக்கான கட்டளையைப் பிறப்பித்தார். அது பொது சமூக பாதுகாப்பு நிதியை ரத்துச்செய்வதற்கான முதல் நடவடிக்கை என்று கருதப்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் Phillippe Douste-Blazy தேசிய சுகாதாரத்திட்டத்திற்கு வழங்கப்படவேண்டிய 14 பில்லியன் யூரோகளில் குறைப்புச் செய்யும் ஒரு திட்வரைபை விரைவில் வெளிவிட உள்ளார். அத்துடன் நாற்பத்தி ஏழு நாடாளுமன்ற UMP உறுப்பினர்கள் ஏப்ரல் 29-ல் ''பயங்கரவாத செயல்களுக்காக'' மரண தண்டனையை மீண்டும் புகுத்தவேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்தனர்.

மேலும் சிராக் அண்மையில் சர்கோஷிக்கும் PS-ற்கும் இடையில் நடைபெற்ற அரசியல் சச்சரவுகளை அனுமதித்தார். தனக்கும் சர்கோஷிக்கும் இடையே சர்வதேச உறவுகளில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதற்காக அவ்வாறு செய்தார். ஏப்ரல் 23, 24-ல் சர்கோஷி அமெரிக்காவிற்கு சென்ற நேரத்தில் சிராக்கிற்கு எதிராக, தான் அமெரிக்க ஆதரவுப் பிரஞ்சு ஜனாதிபதி என்று காட்டிக்கொள்ள முயன்றார். ஈராக்கிற்கு எதிரான போர் முன்னேற்பாடுகள் துவங்கிய நேரத்தில் ஐ.நா-வில் சிராக் அமெரிக்காவிற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் பிரான்ஸ்-அமெரிக்க உறவுகளில் கசப்புணர்வு உருவாயிற்று

சுதந்திர சந்தை மற்றும் தீவிர வலதுசாரி கொள்கைகளின் பக்கம் சார்கோசியின் அதிக நாட்டமும் மற்றும் சுதந்திர சந்தைக் கொள்கை ஆதரவு அதிதீவிர பழமைவாத வலது தாராளவாத கட்சியின் அமெரிக்க ஆதரவு தலைவர் Alain Madelin உடனானா சார்கோசியின் கூட்டு வரலாறும், பிரெஞ்சு அரசியலில் அவரை வாஷிங்கடனின் கூட்டாளியாக இயல்பாக உருவாக்கியது. வாஷிங்டன் வேண்டுகோளை ஏற்று Air France விமானம் அமெரிக்கா புறப்படுவதை ரத்து செய்ததை குறிப்பாக பாராட்டியது. அப்போது அமெரிக்கா தாக்கல் செய்த சான்று தொடர்பாக இந்த விமானங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதற்கு அமெரிக்கா அளித்த ஆதாரங்கள் தொடர்பாக பிரஞ்சுப் பொலிசாருக்கு சந்தேகங்கள் நிலவியபோதிலும் சார்கோசி அந்த விமானப்பயணத்தை ரத்துச் செய்ததை அமெரிக்கா பாராட்டியது என Le Monde ஏப்ரல் 21 கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. ஈராக் மீது புஷ் நிர்வாகம் படையெடுத்ததை நியாயப்படுத்தும் வகையில் சார்கோசி விமர்சித்தார். ''நான் அளவிற்கு அதிகமான வேகத்தோடு செயல்படுவேனேத்தவிர மந்தமாக செயல்படமாட்டேன்''

வாஷிங்டன் DC- க்கு அவர் பிரான்சின் நிதியமைச்சர் என்ற முறையில் பயணம் செய்தார். IMF கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அமெரிக்கப்பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ், வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் ஆகியோரைச் சந்தித்துப்பேசினார். அமெரிக்க யூதர்கள் குழு ACJ ஏற்பாடு செய்த ஒரு பாராட்டு விருந்திலும் அவர் கலந்து கொண்டார். அந்த அமைப்பு இத்தாலிப் பிரதம் பெர்லுஸ்கோனியை 2003-செப்டம்பரில் அவரது இஸ்ரேல் உறவுகளுக்காக பாராட்டியது. அவரது முசோலினி ஆதரவுக்கருத்துக்களை அந்த அமைப்பு பொருட்படுத்தவில்லை. ACJ சர்கோஷியை அவர் யூதர்களுக்கு எதிரான போக்குகளை கண்டிப்பவர் என்பதால் பாராட்டியது. இது முஸ்லீம் மாணவிகள் பிரான்சு அரசாங்கப்பள்ளிகளில் ''தலை அணி'' அணிவிற்கு எதிராக பழிவாங்கும் முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் சம்மந்தப்பட்டது. அப்போது ஏழை பிரான்சு முஸ்லீம்கள் வாழுகின்ற புறநகர் பகுதிகளில் பெருமளவில் போலீசார் தலையிட வேண்டிய அளவிற்கு சம்பவங்கள் நடந்தன.

வாஷிங்டனிலிருந்து அவர் பாரிஸ் திரும்பியதும், நாடாளுமன்ற PS உறுப்பினர் Phillippe Martin அவரிடம் ஒரு கேள்வி கேட்டார். ''அமெரிக்க அரசியல்வாதிகள் எமக்குள் யார் நல்ல தலைவர்கள் என தேர்ந்தெடுத்து அவர்கள்தான் பிரஞ்சு அரசின் தலைவர்கள் என்று பாராட்டுகின்ற நிலைக்கும், குறைந்தபட்ச மரியாதையை பெற்றுக்கொள்ளும் நிலைக்கும் நீங்கள் தள்ளி விட்டீர்களா? இப்படி செய்ததன் மூலம் நீங்கள் ஜனாதிபதியின் செல்வாக்கை பிரஞ்சுக் குடியரசிலும் ஐ.நா விலும் குறைக்கின்ற ஆபத்தான காரியத்தை செய்யவில்லையா?''

சர்கோஷி ''அனைத்து அமெரிக்க யூத சங்கங்களும் என்னை வரவேற்று, யூதர்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்த்து நிற்பதில் பிரான்சு உறுதியுடன் நிற்பதற்கு பாராட்டுத் தெரிவிக்க விரும்பின. ஏனென்றால் சோசலிஸ்டான ஜொஸ்பன் ஐந்தாண்டுகள் பிரான்சை நடத்திச்சென்ற பின்னர் பிரான்சு யூதர்களுக்கு எதிரானது என்று அமெரிக்கா நினைக்கிறது'' என்று பதிலளித்ததும் சோசலிஸ்ட் பிரதிநிதிகள் சார்கோநி பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினார். அதற்குப்பின்னர் அவரை பத்திரிகைகள் கடுமையாகக் கண்டித்தன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் சிராக் இந்தப்பிரச்சனையில் சார்கோசியை ஆதரிக்க மறுத்துவிட்டார். PS -ன் வாதங்களை எதிரொலித்தார். "அரசியல் கருத்து மோதல்களில் யூதர்கள் எதிர்ப்பை விவாதப்பொருளாக எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது" என்ற சோசலிஸ்டுக்களின் கருத்தை எதிரொலித்தார். இந்த சம்பவத்தில் சிராக் என்ன பங்களிப்பு செய்தார் என்பது தெளிவாக இல்லை. ஆனால் இது சிராக்கிற்கும் PS-ற்கும் இடையே நிலவுகின்ற கொந்தளிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா மூலம் வாஷிங்டன்னிலிருந்து சுதந்திரமாக செயல்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்க PS விரும்புகிறது. இறுதியாக அவர்களும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். சார்கோசி, மடேலின் போன்றவர்கள் பிரான்சை திட்டவட்டமாக அமெரிக்க வெளியுறவுக்கொள்கை ஆதரவாளர்களாக மாற்ற விரும்புகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கம் இல்லாத நிலையில், எவ்வளவு விரைவாக மக்கள் விருப்புக்கு எதிரான சமூக வெட்டுக்களை கொண்டுவருவது மற்றும் எவ்வளவு சிறப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பேரங்களை உருவாக்கிக்கொள்வது இதுபோன்ற விவாதங்கள்தான் பிரஞ்சு அரசியலில் மேலோங்கி நிற்கும்.

நடப்பு அரசியலில் நடமாடுகின்ற இடதுசாரிகள் அவர்களது பல்வேறுபட்ட தேர்தல் வெற்றி தோல்விகள், எவ்வாறு இருந்தாலும் முற்றிலும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டவர்கள் இது போன்ற பிற்போக்குத்தனமான கொள்கைகளுக்கு எதிராக பொதுமக்களைத் திரட்டுகின்ற வல்லமை இல்லாதவர்கள், மற்றும் அதை விரும்பாதவர்கள், சிராக்கிற்கும், ரஃப்ரனிக்கும் இணையாக சமூக நலத்திட்ட வெட்டுக்கொள்கைகளையும் தனியார்மயத்தையும் PS முன்னெடுத்துச் செல்கிறது. போலி ட்ரொட்ஸ்கிஸ்டுகளான ''இடது கட்சிகளான'' LO (Lutte Ouvrière) மற்றும் RCL (Revolutionary Communist League) 2003- மே-ஜூனில் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் இணைந்து ஓய்வூதியங்களுக்கு எதிரான சீர்திருத்தங்களை கண்டித்து நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்திற்கு கூட்டாக துரோகம் செய்த பாதிப்பலிருந்து இன்றும் விடுபடவில்லை.

சோசலிச கட்சியின் (PS) வங்குரோத்து என்பதை மார்ச் 18- அன்று அந்தக் கட்சியின் பெருந்தலைவர்களான Jack Lang மற்றும் Julien Dray இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தற்செயலாக ஒரு நேரடி ஒலிவாங்கியில் ஈர்க்கப்பட்டதில் மிக அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் பிராந்தியத் தேர்தல்களில் UMP படுதோல்வியடையும் என்பது தெளிவாகப்பட்டிருக்கின்றது. அவர்களிடையே நடைபெற்ற உரையாடல் வருமாறு:

Lang: ''அரசாங்கம் தோல்வியடையும் ஆனால் வெளிப்படையாகச் சொல்வதென்றால் நாளைக்கு நாம் அதிகாரத்தில் இருப்போம். நாம் என்ன செய்வது?''

Dray: ''என்ன செய்வதென்று நமக்குத் தெரியாது. இந்த வேளையில் 'ரஃப்ரன் ஒழிக' என்பதைத் தவிர வேறு எதையும் சொல்லவேண்டாம்.''

Top of page