World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Private military companies in Iraq: profiting from colonialism

ஈராக்கில் தனியார் இராணுவ கம்பெனிகள்: காலனித்துவத்திலிருந்து இலாபம்

By James Conachy
3 May 2004

Use this version to print | Send this link by email | Email the author

அரசு மற்றும் பெரிய நிறுவன இரகசியங்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு, அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்கு மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கும் டசின்கணக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் ஈராக் அமெரிக்க ஆக்கிரமிப்பில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்துவருகின்றன. புஷ் நிர்வாகத்தின் ஆதரவில் மிக ஆத்திரமூட்டுகின்ற வடிவங்களில் கொள்ளை இலாபம் பெறுகின்ற இந்தக் கம்பெனிகளுக்கு ஒட்டு மொத்த இராணுவப்பணி ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. நவீன கூலிப்படையினரான இவர்கள் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு ஈராக்கில் ஒரு பொம்மை ஆட்சியை அமைப்பதிலும் ஈராக் மக்களை அடக்குவதிலும் மற்றும் அந்த நாட்டு வளங்களை சூறையாடுவதிலும் உதவுவதன் மூலம் ஏராளமான செல்வத்தைக் குவித்து வருகிறார்கள்.

பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள், சீருடை எதுவும் அணியாமல் அல்லது முறையான அடையாளச்சீட்டு இல்லாமல், அடையாளக்குறி இல்லாத வாகனங்களில் தெருக்களைச் சுற்றிவருவதும், சாலைத் தடுப்புக்களை கண்காணிப்பதும் அல்லது கட்டடங்களுக்கு வெளியே எந்திரத்துப்பாக்கிகளோடு செருக்குடன் கம்பீரமாய் நடந்தும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் தாக்குதல் சின்னமாக எங்கும் காணப்படுகின்றனர்.

தனியார் இராணுவக் கம்பெனிகள் (Private military companies -PMCs) அமெரிக்கா தலைமையில் ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்துள்ள மொத்தப்படைகளில் 20 சதவீதத்திற்கு பங்களிப்புச் செய்கின்றன. குறைந்த பட்சம் 35-PMC -க்கள் ஈராக்கில் ஒப்பந்தம் பெற்றுள்ளன. குறைந்தபட்சம் கனரக ஆயுதந்தாங்கிய 5,000- வெளிநாட்டுக் கூலிப்படையினரும் 20,000-திற்கு மேற்பட்ட ஈராக்கியரும் திட்டவட்டமாக இராணுவப் பணிகளில் நாட்டின் மிக ஆபத்தான பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். மற்றொரு 10,000 முதல் 15,000 ஒப்பந்தக்காரர்கள் பூகோளத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து முக்கியமான இராணுவ ஆதரவு பங்களிப்புக்களான வாகனங்களை ஓட்டுவது, பராமரிப்பது, பயிற்சி, தகவல் தொடர்புகள் மற்றும் புலனாய்வு-திரட்டுதல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பாக்தாத் அருகிலுள்ள அபு கிரைப் சிறையில் ஈராக் கைதிகளை சித்திரவதை செய்து கொண்டிருக்குமிடத்தில் விசாரணை நடத்துநர், மொழிபெயர்ப்பாளர்களாக ஒப்பந்தக்காரர்கள் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், இளைஞர் ஒருவருடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் அவர் மீது வழக்கு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அமெரிக்க இடைக்கால கூட்டணி நிர்வாகம் (CPA) வெளியிட்டுள்ள ஒரு அரசு ஆணையின் படி இந்த கூலிப்படையினருக்கு ஈராக் சட்டத்திலிருந்து முழுமையான பாதுகாப்பு நிலை தரப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக, மற்றும் குறிப்பாக 2001-செப்டம்பர் 11- பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் முன்கண்டிராத இராணுவ நடவடிக்கைகளினால் உண்டு பண்ணப்பட்ட வாடகைக்கு துப்பாக்கி ஏந்துபவர்களை அமர்த்தல் என்ற இந்த பெருநிறுவனங்களுக்கான சந்தை உருவாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க இராணுவப் படைகள் தற்போது 350,000 ஊழியர்களை வெளிநாடுகளில் நிறுத்தியுள்ளது, குறைந்த பட்சம் 130-நாடுகளில் இருக்கின்றனர், 63 நிரந்தர இராணுவத் தளங்களும் அதற்கு உள்ளது. இவர்களில் ஈராக்கில் 1,35,000-துருப்புக்கள் பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்க இராணுவம் தனது முழு வீச்சை பயன்படுத்தி கொண்டிருப்பதால், காலனித்துவ தலையீடு மற்றும் ஆக்கிரமிப்பு போர்களை நடத்துவதற்கு இராணுவ மற்றும் ஆதவு உதவிகளை செய்வதற்காக PMCs-க்கள் புஷ் நிர்வாகத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூலிப்படையினரின் சேவைகள் இல்லாவிட்டால் அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க இராணுவத்தின் அளவை அதிகரிப்பதற்கான கட்டாயம் ஏற்படும் அல்லது கட்டாய இராணுவ சேவைக்கான வரைவு விதியை மீண்டும் கொண்டுவர வேண்டியிருக்கும்.

ஈராக்கில் PMCs-க்களின் நடவடிக்கைகள் தொடர்பாக ஏப்ரல் 19-ல் வாஷிங்டன் போஸ்ட் கருத்தை வெளியிட்டுள்ளது: ''அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மோதல், பென்டகன் தனியார் பாதுகாப்பு கம்பெனிகளை மிக முக்கியமான பணிகளை செய்து முடிக்க சார்ந்திருப்பதாகும், ஒரு காலத்தில் இது இராணுவத்திடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதாகும். எண்ணிறைந்த மீள்கட்டுமானப் பணிகள், தனியார் கம்பெனிகள் ஆகியவற்றை காவல் புரிகின்ற பணிகளுடன் ஈராக்கின் இடைக்கால கூட்டணி நிர்வாகம் L. Paul Bremer III க்கும் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு தருகின்ற பணிகளையும், இந்த தனியார் நிறுவனங்களுக்கு தந்திருப்பதுடன், விரோத போக்கு நிலவுகின்ற பகுதிகளுக்கு சப்ளைகளை கொண்டு செல்லுகின்ற கவச வாகனங்களை பாதுகாப்பதிலும், 15 பிராந்திய நிர்வாக தலைமையகங்கள் உட்பட முக்கிய பகுதிகளை பாதுகாப்பதிலும், ஈராக்கில் அமெரிக்காவின் அதிகார மையமான பாக்தாத் நகரின் மத்தியில் உள்ள கிரீன் மண்டலத்திற்கும் பாதுகாப்பளிக்கப்படுகிறது.

ஏராளமான இலாபம் ஈட்டப்படுகிறது. அதே சமயம் குறிப்பிட்ட ஒப்பந்தங்களில் எவ்வளவு தொகை சம்மந்தப்பட்டிருக்கின்றது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் புஷ் நிர்வாகம் ஈராக் ''மறு சீரமைப்பிற்கு'' ஒதுக்கியுள்ள 18.6 பில்லியன் டாலர்களில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இந்த பாதுகாப்பு கம்பெனிகளுக்கு கட்டணமாக தரப்படுகிறது. லண்டனிலிருந்து செயல்பட்டுவரும் ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் David Claridge பிரிட்டனில் இருந்து செயல்பட்டு வரும் PMCs -க்களின் ஆண்டு வருமானம் 320 மில்லியன் டாலர்களிலிருந்து 1.7 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நிறுவனமான பிளாக் வாட்டர் PMC-க்களில் மிக பிரபலமாகியிருப்பதற்கு ஒரு காரணம்: அதன் நான்கு ஊழியர்கள் திடீரென்று சுற்றி வளைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு அவர்களது சடலங்கள் மார்ச் 30-அன்று பல்லூஜா தெருக்களில் பகிரங்கமாக இழுத்துவரப்பட்டனர். ஈராக்கில் இந்த இரகசிய நிறுவனத்திற்கு 450- ஊழியர்கள் உள்ளனர். இடைக்கால கூட்டணி நிர்வாகத்தினருக்கு (CPA) பாதுகாப்பு வசதி தருகிறார்கள், கவச வாகனங்களுக்கு பாதுகாப்பாக செல்கின்றனர் மற்றும் பிரேமருக்கு மெய்க் காவலராக பணியாற்றுகின்றனர். ஏப்ரல் 5-ந்தேதி ஷியைட்டு போராளிகள் தாக்குதலில் இருந்து நஜாப்பில் உள்ள CPA தலைமை அலுவலகங்களை எட்டு ஒப்பந்தக்காரர்கள் காப்பாற்றினர். அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் குண்டுவீச்சு விமானங்களுடன் இணைந்து, அந்த கம்பெனி தனது சொந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி தனது பணியாளர்களுக்கு மீண்டும் தளவாடங்களை வழங்கியது.

பிளாக் வாட்டர் சம்பளப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பல ஊழியர்கள் அமெரிக்க சிறப்பு படையின் முன்னாள் இராணுவத்தினர் ஆவர். அவர்களைடைய பணிக்கு கணிசமான பணம் கிடைக்கிறது. குறிப்பாக ஆபத்துக்கள் நிறைந்த பணிகளை மேற்கொள்ளும்போது, எடுத்துக்காட்டாக பல்லூஜா நகருக்குள் இராணுவ சப்ளைகளை கொண்டு செல்வது போன்ற முயற்சிகளில் அந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 1,500-டாலர்கள் வரை வசூலிப்பதாக நம்பப்படுகிறது. பினோசே சர்வாதிகாரத்தின்போது பயிற்சி பெற்ற சிலி நாட்டின் 60 முன்னாள் அதிரடிப்படையினரையும் பிளாக் வாட்டர் நிறுவனம் பணியில் அமர்த்தியுள்ளது.

Control Risks Group- என்பது நீண்டகாலமாக ஸ்தாபிக்கப்பட்ட பிரிட்டனின் தனியார் பாதுகாப்பு நிறுவனம், இதில் 500-பேர் முன்னாள் பிரிட்டிஷ் இராணுவத்தினர் தற்போது ஈராக்கில் பணியாற்றி வருகிறார்கள், முக்கியமாக எலைட் சிறப்பு விமான சேவை (elite Special Air Services (SAS) பிரிவின் முன்னாள் உறுப்பினர்களாவர். இந்த நிறுவனம் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடும் பல தனியார் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்து கொண்டு, மெய்க்காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்குவது இவர்களின் பணியாகும். பிரிட்டனின் கூலிப்படையினர் சேவைகளுக்கு தினசரி 1000 டாலர்கள் கட்டணம் தரப்படுகின்றது.

இப்படி PMCs-க்களுக்கு தரப்படுகின்ற ஊதியத்தினால் ஈர்க்கப்பட்டு நூற்றுக்கணக்கான அமெரிக்க, பிரிட்டன், மற்றும் ஆஸ்திரேலியா சிறப்புப்படைப்பிரிவுகளுக்கு தலைமை தாங்குபவர்கள் இராணுவப் பணியிலிருந்து பதவி விலகி கூலிப்படையினராக ஆகியிருக்கின்றனர். பிரிட்டிஷ் இராணுவம் தனது மிக உயர்ந்த பயிற்சி பெற்ற ஊழியர்களை தனியார் நிறுவனங்களுக்காக இழந்துவிட்டதாக பகிரங்கமாக கவலை தெரிவித்திருக்கின்றது. ஈராக் படையெடுப்பின் போது போரில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் SAS-ச் சேர்ந்த 40 உறுப்பினர்கள் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களிடம் சேருவதற்காக பதவி விலகிவிட்டனர். பிரிட்டனின் நிறுவனமான AKE- ஈராக்கில் ஆஸ்திரேலிய SAS பயிற்சி பெற்ற 13-பேரை பணியில் அமர்த்தியிருப்பதாக கூறியது.

பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட Global Risk Strategies 1500 வலிமை கொண்ட தனியார் இராணுவத்தை மிக மலிவான ஊதியத்தில் ஈராக்கில் CPA கட்டிடங்களையும் மற்றும் இதர உயர் அதிகாரி வசதிகளையும் பாதுகாக்க பயன்படுத்திக்கொண்டு வருகிறது. இந்த கம்பெனி 500 பிஜியன் மற்றும் அதே எண்ணிக்கை நேபாள கூலிப்படையையும் பணியில் அமர்த்தி, அவர்கள் ஏற்கனவே பிரிட்டனின் இராணுவ கூர்கா படைப்பிரிவுகளில் பணியாற்றியவர்கள், ஈராக்கிற்கு விமானத்தில் அனுப்பப்பட்டனர். பிஜி மற்றும் நேபாள கூலிப்படையினருக்கு மாதத்திற்கு 1000-டாலர் ஊதியம் வழங்கப்படுகின்றது. பெயர் குறிப்பிடாத ஒரு PMC நிர்வாகி, எக்கனாமிஸ்ட்-க்கு ''ஒரு இராணுவ தளத்தை பாதுகாக்கும் பிரிட்டிஷ் படைப்பிரிவை விட மிகச் சொற்ப செலவில் கூர்க்காக்கள் பாதுகாக்க முடியும் என்கிறபோது பிரிட்டிஷ் படைகளுக்கு ஏன் செலவிட வேண்டும்?'' என்று பத்திரிகைக்கு தெரிவித்தார்.

சென்ற ஆண்டு, ஈராக்கில் முன்னாள் பாத் ஆட்சியிலிருந்து இன்றைய ஈராக் நாணய மாற்றத்திற்கான பாதுகாப்புக்களை சரியாக செய்வதற்காக 28 மில்லியன் டாலர் ஒப்பந்தம் Global Risk Strategies நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. டிசம்பர் முதல்தேதி, பிஜியன் கூலிப்படை சமாரா நகரங்களில் கொலையில் ஈடுபட்டதால், கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் கண்மூடித்தனமாய் சுட்டதில் ஒரு நாணய மாற்று வாகன வண்டிகள் தாக்குதலுக்கும் உள்ளானது. கூலிப்படையினர் சுட்டுத்தள்ளியதில் குறைந்த பட்சம் 10-ஈராக் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

ஆர்மோர் குறூப் (Armor Group) 500-முன்னாள் கூர்க்காக்களையும் மேலும் பணியில் அமர்த்தியுள்ளது, இதன் கிளை புளோரிடாவை தளமாகக் கொண்ட பாதுகாப்பு நிறுவனமான Armor Holdings ஆகும், இது 1999-ம் ஆண்டு Foutune பத்திரிகை வெளியிட்ட அதிக வேகமாக வளர்ந்து கொண்டுள்ள 100- கம்பெனிகளில் ஒன்று என்ற பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஈராக்கில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களான Bechtel மற்றும் Haliburtan துணை நிறுவனமான KBR- ஆகியவற்றின் பாக்தாத் தலைமை நிறுவனங்களையும் போக்குவரத்து பண்டகசாலைகளையும் பாதுகாப்பதில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த கம்பெனி மேலும் கப்பற் படைக்கும் பாதுகாப்பளிக்கிறது. சர்வதேச அளவில் பிரிட்டனின் தூதரகக் கட்டிடங்களையும், ஊழியர்களையும் பாதுகாக்கும் ஒப்பந்தங்களும் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நிறுவனமான Custer Battles பாக்தாத் சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பு தருவதற்கான ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது. முன்னாள் கூர்காப்படை வீரர்களது சேவையையும் அதேபோல அமெரிக்காவில் பணியில் அமர்த்தப்படும் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. அமெரிக்க நிறுவனமான DynCorp ஈராக் போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி தருவதற்காக 50-மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை பெற்றிருகின்றது. Northman Grumman நிறுவனத்தின் துணை நிறுவனமான Vinnell புதிய ஈராக் இராணுவத்திற்கு பயிற்சி தருவதில் உதவுவதற்காக 48-மில்லியன் டாலர் ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கின்றது. USA Environmental என்ற நிறுவன குழுவின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து நிபுணர்கள் தற்போது ஈராக்கில் பணியாற்றி வருகின்றனர், அதற்காக 65-மில்லியன் டாலர் ஒப்பந்தம் வாங்கியுள்ளனர் இவர்களது வேலை வெடிக்காத தளவாடங்களை கண்டுபிடித்து அழித்துவிடுவது ஆகும்.

பிரிட்டிஷ்/தென் ஆப்பிரிக்க நிறுவனமான Erinys, 100-மில்லியன் டாலருக்கு மேற்பட்ட ஆண்டு ஒப்பந்தத்தை பெற்று, ஈராக்கின் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் குழாய் இணைப்புக்களை பாதுகாத்து வருகிறது. Erinys 14,000- ஈராக் பாதுகாப்பு காவலர்களை 150- டாலர் மாத ஊதியத்தில் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களை முன்னாள் பிரிட்டிஷ் மற்றும் இன ஒதுக்கல் பாணியைச் சார்ந்த தென்னாப்பிரிக்கா இராணுவ முன்னாள் அதிகாரிகள் டசின் கணக்கில் மேற்பார்வையிடுகின்றனர்.

Erinys நிறுவனத்தைச் சேர்ந்த தென்னாபிரிக்க ஊழியர்கள் நான்குபேர் ஜனவரிமாதம் நடைபெற்ற கொரில்லா தாக்குதலில் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தென்னாபிரிக்கா வெள்ளையரான Francois Strydom, இவர் நமீபியாவில் இன ஒதுக்கல் பாணிக்கு சார்பாக இணை இராணுவத்தில் போராடியவர், மற்றொரு Erinys ஒப்பந்தக்காரர் இந்தத்தாக்குதலில் காயம் அடைந்தார். அவர் பெயர் Deongows, அவர் தென்னாபிரிக்க இரகசிய போலீசான Vlakplaas-ல் பணியாற்றியவர். 1986-ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலுக்கு எதிராக தீவிரமாக பங்கெடுத்துக்கொண்ட ஒருவரை கொலைசெய்ததாக தென்னாபிரிக்க உண்மைக் கண்டுபிடிப்பு கமிஷன் குற்றம் சாட்டியது. முன்னாள் தென்னாபிரிக்க நீதிபதி Richard Goldstein நிருபர்களிடம் தெரிவித்தபொழுது, 150 இன ஒதுக்கல் பாணி-பிரிவு பாதுகாப்பு படைப்பிரிவு ஈராக்கில் கூலிப்படையினராக செயல்பட்டு வருகிறது என்பது தனக்கு தெரியும் என்று குறிப்பிட்டார்.

இதர PMCs க்கள் பல CPA விற்காகவும் தனியார் நிறுவனங்களுக்காகவும், ஒப்பந்தங்களைப் பெற்று செயல்பட்டு வருகின்றனர். டெக்ஸாசைச் சேர்ந்த Meyer & Associates நிறுவனம் ''அரசாங்க அலுவலகம், தூதரகங்கள், இராணுவம், உள்ளூர் மற்றும் கொரில்லா தலைவர்களுடன்'' அதேபோல மிகவும் பாரம்பரிய பாதுகாப்பு சேவைகளையும் வெளிப்படையாக வழங்குகிறது. Overseas Security & Strategic Information நிறுவனம் ''முன்னாள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இணை இராணுவ பின்னணியோடு நிர்வகித்து வரும் உயர்பயிற்சி பெற்ற அனுபவமிக்க தென்னாபிரிக்க பாதுகாப்பு அலுவலர்களின் சேவைகளை வழங்கி வருகிறார்கள்.'' சிக்காக்கோவை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் Triple Conopy நிறுவனம் ''இரகசியமாக வழிப்பயண துணையாக செயல்படுவது முதல் கனரக இராணுவ வாகனங்களுக்கு பாதுகாப்பு தருவது வரை அனைத்து சேவைகளையும் தருகின்றது.'' Military Professional Resources Incorporated (MPRI) நிறுவனம் 12,500- முன்னாள் அமெரிக்க இராணுவம் மற்றும் போலீஸ் அலுவலர்களை பணியில் அமர்த்துவதற்கான பட்டியலை வைத்திருப்பதாக கூறுகின்றது.

PMC- பணிகள் இரகசியமாக நடந்து கொண்டிருப்பதால் அதைப் பயன்படுத்தி வெள்ளை மாளிகை ஈராக்கில் மேற்கொண்டுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பில் ஏற்படும் உயிர் சேதங்களையும் செலவினங்களையும் மறைத்துவிட முடிகின்றது. ஈராக்கில் ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டால், அல்லது காயம் அடைந்தார்ல், அந்த தகவலை வெளியிடுவது அந்த கம்பனியின் பொறுப்புதான். தங்களது இழப்புக்களை ஒரு சிலர் தான் வெளியில் சொல்கிறார்கள். Brookings ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பீட்டர் சிங்கர் தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் தனியார் பாதுகாப்பு நிறுவன பணிகள் குறித்து எழுதியிருக்கிறார். ஏப்ரல் 15-ல் அவர் எழுதியுள்ள கட்டுரையில் போரில் 30 முதல் 50 PMC ஊழியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், விபத்துக்களில் ''பத்துக்கு'' மேல் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்ற வாரம் மட்டும் மேலும் ஆறு பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள்- இரண்டு தென்னாபிரிக்கர்கள் இரண்டு பிஜியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இரண்டு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் ஒவ்வொருவர் பலியாகும் போதும் ஆறு பேர் காயம் அடைகின்றனர் என்ற விகிதத்தின் அடிப்படையில் சிங்கர் (Singer) குறைந்த பட்சம் 200-முதல் 300-வரை ஒப்பந்தக்காரர்கள் காயமடைந்தாலும் அது பற்றி தகவல் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

PMC க்கள் செயல்பாட்டில் கடைபிடிக்கப்படுகின்ற இரகசியமானது, மற்றொரு அச்சுறுத்துகின்ற சாத்தியக்கூறுக்கும் வழிவகுக்கின்றது. ஈராக் மக்களிடையே வளர்ந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்காக, திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் கொலை பிரச்சாரங்களிலும் ஈடுபடுகிறார்கள். காலனித்துவ ஒடுக்குமுறையின் கறைபடிந்த அம்சங்களில் சித்ரவதையிலிருந்து ஆத்திரமூட்டல்வரை, மற்றும் படுகொலைகளில் புஷ் நிர்வாகத்திற்கு உயர்ந்த கொலையை, கூலிக்கு இந்த கூலிப்படையினர் வழங்குகிறார்கள். இராணுவம் நேரடியாக ஈடுபடவில்லை என்பதற்கும் இவர்கள் உதவுகிறார்கள்.

ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவிற்கு ஈராக்கிலும் அமெரிக்க மக்களிடமும் எந்த அளவிற்கு ஆதரவு குறைந்துகொண்டு வருகின்றது என்பதை கணக்கிட்டுத்தான், புஷ் நிர்வாகம் ஆக்கிரமிப்பை கண்காணிக்க இத்தகைய அமைப்புக்களை சார்ந்துள்ளது என்பது தெளிவாகிறது.

Top of page