World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After the 2004 elections: The political and social crisis will intensify

2004 தேர்தலுக்கு பின்னர்: அரசியல் மற்றும் சமூக நெருக்கடி தீவிரமாகும்

Statement of the World Socialist Web Site editorial board
3 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

எவங்கலிச கிறிஸ்தவ மதவாதத்திற்கு அழைப்புவிட்டதன் மூலமாக அணிதிரட்டிப்பட்ட கூடிய வாக்குகளை பெற்றதை அடிப்படையாகக்கொண்டு ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அமெரிக்க ஜனநாயகத்திற்கு நீண்டகால மற்றும் மிகமோசமான நாசம் விளைவிக்கும் தாக்கங்களை கொண்டதாகும்.

செனட்டர் ஜோன் கெர்ரி வழக்கமான பாணியில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் காணப்படுகின்ற பாராட்டுரைகள் எதுவாக இருந்தாலும், 2004 தேர்தல் முடிவுகள் தேசிய ஒற்றுமை புத்துயிர் பெறுவதற்கு உதவப்போவதில்லை. 2004 தேர்தல் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் சிதைவினையும் மற்றும் நெருக்கடியை மேலும் முன்னெடுத்துச்செல்லும் ஒரு கட்டத்தையும் பிரதிநிதித்துப்படுத்துகிறது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக குடியரசுக் கட்சியால் வளர்த்து வருகின்ற மதவாத அடிப்படைவாதிகளுக்கு, ஒரு வெகுஜன சமூக பிற்போக்கு மற்றும் இராணுவவாத அடித்தளத்தை உருவாக்குகின்ற ஒரு மூலோபாயத்தின் இறுதி வடிவம்தான் இது. பெருநிறுவன மற்றும் வசதிபடைத்தவர்கள், தங்களது சொந்த கபளீகர இராட்சதனை வடிவமைத்த அதனது அரசியல் மற்றும் சமூக செயற்திட்டங்கள், அமெரிக்காவின் மதச்சார்பற்ற அரசியல் நிர்ணய அடிப்படைகளுக்கும் பாரம்பரிய ஜனநாயக நெறிமுறைகளை நிலைநாட்டுவதற்கும் ஏற்புடையதல்ல.

புஷ்ஷும் குடியரசுக் கட்சியினரும் மிக ஆழ்ந்ததொரு பிற்போக்கு பிரச்சாரத்தை பொய்கள் மற்றும் அரசியல் அவதூறுகளையும், வாக்காளர்களில் மிக முக்கியமான பகுதியினர்களிடையே நிலவுகின்ற பயங்களையும் பாதுகாப்பற்ற மற்றும் குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் அதிகாரத்தில் இருக்கின்ற அனுகூலம் இருந்தாலும், நட்பு பாராட்டுகின்ற ஊடகங்களும் இருந்தாலும், 9/11 துயரத்தை மிக தீவிரமாக இடையீடில்லாமல் சுரண்டிக்கொண்டாலும் புஷ் மக்களது வாக்குகளில் 51 சதவீதத்தைத் தான் பெறமுடிந்திருக்கிறது.

ஊடக நிபுணர் இந்த தேர்தல் முடிவுபற்றி எப்படிச்சொன்னாலும், புஷ் நிர்வாகம் மற்றும் அதன் கொள்கைகளை பொதுமக்கள் பெருமளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாக ஆகாது. வரலாற்று அடிப்படையில், மறுதேர்தலில் வெற்றிபெற்ற ஜனாதிபதிகள் ஆட்சியில் இருந்தவர்கள் என்ற அனுகூலத்தை பயன்படுத்திக்கொண்டு தீர்க்கமான வெற்றிகளை பெற்றிருந்தனர். 1930களில் ரூஸ்வெல்ட், 1960களில் ஜோன்சன், 1980களில் றீகன், 1996ல் கிளின்டனே கூட இவ்வாறு வெற்றிபெற்றவர்கள். அப்படியிருந்தும் புஷ் அறுதிப்பெரும்பான்மைக்கு சற்று அதிகமான வாக்குகளைத்தான் பெற்றிருக்கிறார்.

தேர்தல் வரைபடத்தை ஆராய்ந்தால் உடனடியாக ஒன்று தெளிவாகத்தெரிகிறது. 2000ல் நடைபெற்ற பிரச்சனைக்குரிய தேர்தலுக்கு பின் நான்காண்டுகள் கழித்து குடியரசுக் கட்சிக்காரர்கள் மக்களில் கணிசமான பகுதியினர் வாழ்கின்ற எந்த இடத்தையும் தங்கள் பக்கம் திருப்பிக்கொள்ள முடியவில்லை. ஒரு சில விதிவிலக்குகளைத்தவிர, 2000தேர்தலில் அல் கோருக்கு வாக்களித்த மாநிலங்களில்-----கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு பகுதிகளைச் சார்ந்த மிகப்பெருமளவில் தொழிற்துறை மயமாகிவிட்ட நகர்பகுதி மாநிலங்கள் உட்பட 2004 தேர்தலில் கெர்ரி பக்கம் சார்ந்திருக்கின்றன. இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், குடியரசுக் கட்சிக்காரர்கள் அச்சத்தை பரப்புவதற்கும், பொய்களையும், இதர தந்திரங்களையும் அரசியல் பிற்போக்கு வாதிகளிடமிருந்து பிடிங்கிக் கொண்டாலும், அவர்களால் தங்களது அடித்தளத்தை சமூக ரீதியாகவும் புவியியல் ரீதியாகவும் விஸ்தரிக்க முடியவில்லை.

தேர்தல் வரைபடம் மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனநாயகத்தின் மற்றொரு நெருக்கடி அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது----அமெரிக்க அரசியல் பிளவுபட்டுள்ளது. இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் எதுவும் உண்மையிலேயே ஒரு தேசிய கட்சி என்று கூறமுடியாத அளவிற்கு வந்துவிட்டன.

தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக நாட்டின் துருவப்படுத்தலை மறுபடியும் எடுத்துக்காட்டுகின்றன, புஷ்ஷிற்கும், ஈராக் போருக்கும் நிலவுகின்ற பரந்த மற்றும் ஆழமான எதிர்ப்புணர்வு வெளிப்பட்டிருக்கிறது. வாக்காளர்களின் எண்ணிக்கை கூர்மையாக, குறிப்பாக இளைஞர்களிடையே வாக்குப்பதிவு திடீரென்று அதிகரித்துள்ளது, அவர்களில் மிக்பபெரும்பாலோர் புஷ்ஷிற்கும், போருக்கும் எதிராகவே வாக்களித்திருக்கின்றனர், இது குடியரசுக் கட்சியின் வலதுசாரிகளுக்கு சமூகத்தில் நிலவுகின்ற மகத்தான எதிர்ப்பை எதிரொலிக்கிறது.

அப்படியிருந்தும், இந்தத்தேர்தலில் பதிவாகியிருக்கின்ற வாக்குகள் அரசியல் அதிகாரம் மேலும் தீவிர வலதுசாரிகள் கையில் குவிகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது, அந்தப் பிரிவினர் அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளான நிர்வாகம், சட்டவாக்கம், நீதித்துறையை தங்கள்கையில் வைத்திருப்பார்கள். அத்துடன் குடியரசுக்கட்சி செனட் சபையில் தனது பெரும்பான்மையை பெருக்கிக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு நியமனங்களை செய்வதற்கான கட்டம் வந்திருக்கிறது. அதன்மூலம் உச்சநீதிமன்றத்தின் அச்சாணி வலதுசாரி பக்கம் திரும்பும், Roe v. Wade வழக்கில் கருக்கலைப்பு உரிமைகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரத்துசெய்யப்படும் நிலை ஏற்படும் மற்றும் மிகுந்த தீவிரத்தன்மையுள்ள இதர ஜனநாயக விரோத தீர்ப்புகளுக்கும் வழிவகுக்கும்.

இந்த தேர்தல் புஷ்ஷின் குறைந்த வெற்றியை விட ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான வரலாற்றுத் தோல்வியாகும். மக்களிடம் செல்வாக்கில்லாத ஒரு போரின் நடுவில், பாரிய வேலைவாய்ப்புக்கள் பறிப்பு, வாழ்க்கைத்தரம் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவது, வறுமை வளர்ந்து வருவது, பணக்காரர்களுக்கு மிகப்பெருமளவில் வரிச்சலுகைகள், வழக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே பல்வேறு வகையான பெரு நிறுவன ஊழல்கள் தொடர்ந்து கொண்டுடிருக்கும்போது ஜனநாயகக் கட்சி அந்த நிர்வாகத்தை வெளியேற்ற முடியாத நிலையிலுள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது, அது ஜனநாயக விரோத வழிமுறைகளில் பதவியில் அமர்த்தப்பட்டது, மக்களில் பாதிப்பேர் இதை சட்டவிரோதமான அரசு என்று கருதுகின்றனர், மிகப்பெரிய பொய்களைச் சொல்லி சிக்கிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்தை வெளியேற்ற முடியாத நிலையில் ஜனநாயகக் கட்சி உள்ளது. கெர்ரியும், அவரது கட்சியும் வெகுஜனங்கள் புஷ்ஷிற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை பயன்படுத்தி தங்களது சமூக அடித்தள ஆதரவை விஸ்தரிக்க முடியவில்லை மற்றும் தொழிலாள வர்க்க வாக்காளர்களிடையே தங்களது ஆதரவை முக்கியமாக நிலைநாட்டிக்கொள்ள முடியவில்லை.

பிழையான மற்றும் இரட்டைவேட தேர்தல் பிரச்சாரத்தில் போர் எதிர்ப்பு உணர்வு உள்ளவர்கள் ஆதரவை திரட்டுவது, அதே நேரத்தில் போருக்கு ஆதரவு தெரிவிப்பது, உழைக்கும் மக்களின் பொருளாதார கவலைகளை எடுத்துரைப்பது, அதே நேரத்தில் நிதிச்சிக்கன ஆதரவு உறுதிமொழி, தேசபக்தி சட்டத்தை விமர்சிப்பது அதே நேரத்தில் ''பயங்கரவாதத்திற்கெதிரான போரில்'' இன்னும் சக்திவாய்ந்த போலீஸ்-அரசு அதிகாரங்களை கோருவது இப்படி கெர்ரியும் அவரது கட்சியும் குடியரசுக் கட்சிக்காரர்கள் மக்களது அச்சங்களை வெறுப்புக்களை மற்றும் அரசியல் குழப்பங்களை சுரண்டிக்கொள்ள வகுத்த மூலோபாயத்தை பயனுள்ள வகையில் முறியடிக்கும் திறன் இல்லாதவர்கள் ஆகிவிட்டனர்.

குடியரசுக் கட்சிக்காரர்கள் ஒருங்கிணைந்த தேர்தல் மூலோபாயத்தை வைத்திருந்தனர். கிறிஸ்தவ அடிப்படை வாதத்தை உசுப்பிவிட்டு ''பிளவு'' ஏற்படுத்தும் பிரச்சனைகள் என்று கூறப்படுகின்ற, ஒருபால் திருமணங்கள், கருக்கலைப்பு, மற்றும் பள்ளிகளில் வழிபாடு போன்றவற்றை பயன்படுத்தி தங்களுக்கு சமூக பிற்போக்குவாத மற்றும் இராணுவ வாதத்திற்கு பரந்த ஆதரவான அடித்தளத்தை உருவாக்க முயலுகின்றனர்.

ஜனநாயகக் கட்சியை சீர்குலைத்த முரண்பாடுகளை அவர்கள் மிக பயனுள்ள வகையில் சுரண்டிக்கொண்டனர், எடுத்துக்காட்டாக, இப்போது போரை எதிர்கின்ற தனது எதிரி ''தவறான போரை, தவறான இடத்தில், தவறான நேரத்தில் நடத்திக்கொண்டிருப்பதாக விமர்சிக்கின்ற கெர்ரியும் அவரது சகவேட்பாளர் ஜோன் எட்வர்ட்ஸ்சும் போருக்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்ற புஷ்ஷின் கேள்விக்கு அவர்கள் என்றைக்கும் பதிலளிக்க முடியவில்லை. உண்மையிலேயே, கெர்ரியின் பதில் எதுவாக இருந்ததென்றால் ஈராக் போரை ---எதிர்காலப் போர்களை---- இப்போதுள்ள ''தலைமை தளபதியைவிட'' தான் மிகுந்த பயனுள்ள வகையில் முடிவற்றதாக கொண்டு செல்லப்போவதாக திரும்பத்திரும்ப உறுதியளித்தார்.

கெர்ரியின் ''நிலையற்ற போக்குகள்'' என்று அழைக்கப்படுபவை அந்தக் கட்சியின் முரண்பாடுகளிலிருந்து முளைத்தவை. உழைக்கும் மக்களுக்கு பேசுகின்றோம் என்று சொல்கின்ற அது அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரையும், அவர்களது நலன்களையும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தற்காத்து நிற்கின்றனர்.

மிகப்பெருமளவிற்கு தொழிற்துறைமயமும் நகர்மயமாதலுக்கும் இலக்காகியுள்ள மத்தியமேற்கு மாநிலங்களான மிக்சிகன், விஸ்கான்சின், மற்றும் மின்னசோட்டா, போன்றவற்றில் கெர்ரி பெரும்பான்மை வாக்குகளைப்பெறவில்லை. தெற்கிலுள்ள, எல்லைப்புற மாநிலங்களான டென்னசி மற்றும் மிசெளரி போன்றவற்றிலும், ஜனநாயகக் கட்சியின் பழைய கோட்டைகள் என்று கருதப்படும் நிலக்கரி வளமிக்க மேற்கு வர்ஜினியாவிலும் மில்லியன்கணக்கான வெள்ளையர் இன தொழிலாளர்கள் மற்றும் நகர்புற மற்றும் கிராமப்புற ஏழைமக்களது வாக்காளர்களின் ஆதரவை கோருவதுபற்றி கெர்ரி கவலைப்படவில்லை.

உழைக்கும் மக்களின் வர்க்க நலன்களை எதிரொலிக்கின்ற வகையில் நிலையான நம்பகத்தன்மையுள்ள திட்டங்கள் எதையும் ஜனநாயகக் கட்சி எடுத்துவைக்காத சூழ்நிலையில், மதவாத பிற்போக்குத் தனத்தையும், குழப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளும் குடியரசுக் கட்சி மூலோபாயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துவிட்டது. தொழிலாள வர்க்கத்தின் உண்மையான சமூக மற்றும் பொருளாதார தேவைகளுக்கு ஜனநாயகக் கட்சி முக்கியமாகவும், நேரடியாகவும் குரல் எழுப்ப முடியாது. ஏனென்றால் அது ஒரு அமெரிக்க முதலாளித்துவக் கட்சி மற்றும் அமெரிக்க நிதியாதிக்க செல்வந்தர்களுக்கு கடமைப்பட்டது. ஓரளவிற்கு அந்தக் கட்சிக்கு மனித சக்தியையும், தொலைபேசி வங்கிகள் போன்ற வசதிகளையும் தருகின்ற தொழிற்சங்கங்கள், தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது என்ற நிலைவரும்போது அவை முற்றிலும் பயனற்றவை.

இதன் விளைவாக மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் ---தெற்கில் சிவப்பு மாநிலங்கள் என்றழைக்கப்படும் மத்திய பிளைன்ஸ் மற்றும் தெற்குமேற்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த வாழ்க்கைத்தரத்தை சீர்குலைக்கும் கொள்கைகளை கொண்டு வந்திருக்கும் ஒரு ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் இந்த குளறுபடி திடீரென்று வானத்திலிருந்து வரவில்லை. ஜனாயகக் கட்சிக்காரர்களும், அவர்களது வலதுசாரி கூட்டணியின் தொழிற்சங்க அதிகாரத்துவத்துவமும், கைவிட்டுவிட்ட மிகப்பெரும்பாலான தொழிலாள வர்க்க பரந்த பகுதிகளில் குடியரசுக் கட்சிக்காரர்கள் தங்களது செல்வாக்கை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

புஷ்ஷின் சிவப்பு மாநிலங்களில் மேற்கு வெர்ஜினியாவும், கென்டகியும் அடங்கும், இவை ஜனநாயகக் கட்சியின் முன்னாள் செல்வாக்கு கோட்டைகள் 1980களிலும், 1990களிலும், அங்குள்ள நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டதால், ஊதிய வெட்டுக்களுக்கெதிரான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுத்துள்ளன. அதில் அப்பகுதிகளை சார்ந்த சுரங்க தொழிலாளர் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதேபோன்றுதான் ஓகியோ, மிசெளரி, அரிஜோனா, அலபாமா மற்றும் பல மாநிலங்கள் குடியரசுக் கட்சியின் கோட்டையாகிவிட்டது. இந்த ஒவ்வொரு சம்பவத்திலும், ஜனநாயகக் கட்சி AFL-CIO தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் சேர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தவும், அவர்களது எதிர்ப்பை நொருக்கவும் பணியாற்றியது. இதுபோன்ற தோல்விகள் ஏற்படும்போது அது விட்டுச்செல்லும் பாரம்பரியம் எதுவெனில் பொருளாதார பேரழிவு, விரக்தி, முன்னோக்கு எதுவுமில்லாத நிலை--- இதுபோன்ற சூழ்நிலைகளில் மத நம்பிக்கை என்ற போர்வையில் பிற்போக்குத்தனமான அரசியல் வளருவதற்கு ஏற்றநிலை உருவாகிவிடுகிறது.

குடியரசுக் கட்சி ஆதரிக்கின்ற தரப்பினரில் ஒரு கணிசமான பிரிவுகள் இனவாதம் மற்றும் இதர பிற்போக்குத்தனமான உணர்வுகளால் உந்தப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கணிசமான பிரிவு வாக்குகள் குடியரசுக் கட்சிக்கு கிடைத்திருப்பது வேறு எந்த பெரிய கட்சியும் தனது வர்க்க நலன்களுக்கு குரல் கொடுக்க மறுப்பதுதான் காரணமாகும்.

குடியரசுக் கட்சி வலதுசாரிபக்கம் திரும்பியிருப்பது நீண்டகால அடிப்படையில் இடைவிடாது நடைபெற்றுவரும் நிகழ்வாகும். அதே போன்று ஜனநாயகக் கட்சியின் வீழ்ச்சி ஒரு நீண்ட பரிணாமத்தைக்கொண்டது. ஒரு தலைமுறைக்கு மேலாக ஜனநாயகக் கட்சி பெருநிறுவன வட்டாரங்களில் சந்தேகிக்கப்படும் எந்தக் கொள்கைகளில் இருந்தும் தன்னை விலக்கிவைத்துக் கொண்டே வந்தது. அந்தக் கட்சியின் வலதுசாரிப் போக்கு மிக வேடிக்கையான முயற்சிவரை சென்றது தனது ''தாராளவாத'' முத்திரையை புறகணிக்க ஆரம்பித்தது -----அதை கெர்ரி தனது தேர்தல் பிரச்சாரத்திலும் நீடித்தார். இதன் விளைவாக, தொழிலாள வர்க்கத்தின் உண்மையான பொருளாதார நலன்களுக்கு குரல் கொடுக்கின்ற தகமையை ஜனநாயகக் கட்சி பறிகொடுத்துவிட்டது.

அனைத்து சம்பவங்களிலும், தொழிலாள வர்க்கத்தின் சுகாதார சேவை மற்றும் ஏனைய சமூக தேவைகளை சீர்திருத்துவோம் என்று உறுதிமொழியளித்த ஜனநாயக கட்சி அரசியல்வாதிகள் அவற்றை பொசுக்கிவிட்டனர். பில் கிளின்டன் பதவியேற்று ஓராண்டிற்குள் தனது சுகாதார சேவைத்திட்டத்தை கைவிட்டதோடு, றீகன் மற்றும் மூத்த புஷ்ஷின் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்துவந்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தோல்விக்கு சமாதானம் கூறுகின்ற வகையில் ஜனநாகக் கட்சிக்காரர்கள் மேலும் அதிகமாக வலதுசாரிபக்கம் நோக்கியே சாய்வார்கள். அவர்கள் மிகத்தீவிரமாக புஷ்ஷோடும் குடியரசுக் கட்சிக்கார்களோடும் சமரசம் காணமுயன்று, மதப்போர்வையை போர்த்து முதலாளித்துவ, எதிரிகளை விட தாங்கள் தான் அதிக ''மிதவாதிகள்'' என்று காட்டிக்கொள்ள முயல்வார்கள்.

ஜனநாயகவாதிகள் மற்றும் ஜனநாயகக்கட்சி பக்கம் தங்களது நோக்குநிலையை கடைபிடித்துக் கொண்டுள்ள ''இடது'' தாராளவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் தேர்தல் முடிவு தொடர்பாக சீரழிந்த விமர்சனமற்று தெரிவிக்க விரும்புகின்ற கருத்துக்கள் குறித்து முன்கூட்டியே நாங்கள் எச்சரிக்கிறோம் மற்றும் புறக்கணிக்கிறோம்: புஷ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான பழி முழுவதுமே அமெரிக்க மக்களையே சார்ந்தது என்ற எண்ணக்கருத்தும் மற்றும் போர் மற்றும் பிற்போக்குத்தன்மை தொடர்பான குடியரசுக் கட்சி வலதுசாரி கொள்கைகளை எதிர்ப்பதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்றும் அவர்கள் கூறுவார்கள்.

2004 தேர்தல் முடிவுகள், அமெரிக்காவில் சமூக மற்றும் அரசியல் நெருக்கடி ஒரு தீவிரதன்மைக்கு செல்வதை உத்தரவாதப்படுத்துகின்றது, மற்றும் பாரிய மாற்றங்களும், போராட்டங்களும் எழவுள்ளன. மிக மோசமான ஒரு அரசியல் சமபலமின்மை நிலவுகிறது அது நீடித்திருக்கக்கூடியதல்ல, ஏற்புடையதுமல்ல --- அது அமெரிக்க சமுதாயத்தில் பாரிய பொருளாதார துருவப்படுத்தலை பிரதிபலிக்கிறது.

அனைத்து அரசியல் அதிகாரமும் தீவிர வலதுசாரி சக்திகள் கையில் குவிந்திருக்கிறது. அதிகாரபூர்வமான எதிர்கட்சி ஜனநாயகக் கட்சி என்ற வடிவத்தில் இருந்தாலும் அது தனது திவால் தன்மையை நிரூபித்துவிட்டது. இதற்கிடையில் நாடு முழுவதிலும் வெகுஜனங்கள் தீவிரமாக புஷ் நிர்வாகத்திற்கும், ஈராக் போருக்கும் குடியரசுக் கட்சியின் வலதுசாரிகளுக்கும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்துடன் ஸ்திரமற்ற, மற்றும் கொந்தளிப்பான ஒரு கலவை என்னவென்றால் புஷ்ஷிற்கு வாக்களித்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் அச்சத்தாலும், குழப்பத்தாலும் வாக்களித்தார்கள்- இந்த நிலையை குடியரசுக் கட்சிக்காரர்கள் சுரண்டிக்கொண்டனர் ----மற்றும் அதன் மூலம் அதே கொள்கைகள் தொடருவதன் மூலம் தங்களது சொந்த வாழ்க்கைத் தரங்கள், மேலும் சீர்குலைவதற்கு உறுதிசெய்துள்ளனர்.

இத்தகைய புறநிலைமைகள் சமூக மற்றும் அரசியல் போராட்டத்திற்கு போதுமான உந்துவிசையை தரவல்லவை. ஈராக்கில் ஏற்பட்டுள்ள புதைசேறு மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற அபாயகரமான இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றால் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பொருளாதார நெருக்கடி ஆழமாகிக்கொண்டு வருகிறது. பெருகிவரும் வரவுசெலவுதிட்ட பற்றாக்குறைகள் மற்றும் பலவீனமாகிக்கொண்டுவரும் டொலர் ஆகியவற்றால் புஷ்ஷின் இரண்டாவது நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய தாக்குதல்களை தொடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்படும், புஷ் பதவிக்கு வரவேண்டுமென்று வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.

இத்தகைய தாக்குதல்கள் ஒரு சோசலிச வேலைதிட்ட அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் அணிதிரட்டுவதன் மூலமே எதிர்கொண்டு சமாளிப்பது சாத்தியமாகும். இதற்கு குடியரசுக் கட்சிக்காரர்கள் மற்றும் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டினரின் கொள்கைகளுக்கு திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அவசியமாகும். அதில் அவர்களது மத கொள்கைகளின் அகந்தை போக்கையும், கபட நாடகத்தையும் மிகக்கடுமையாக அம்பலப்படுத்தியாக வேண்டும், அதில் சிறிதளவு கூட சமரசத்திற்கிடமில்லை.

இந்தப் போராட்டத்திற்கான தலைமை ஏற்கெனவே உள்ள இரண்டு கட்சி முறை கட்டமைப்பினுள் அபிவிருத்தி அடைய முடியாது. அத்தகைய ஒரு போராட்டத்திற்கு ஜனநாயகக் கட்சியிலிருந்து தெளிவாகவும் தீர்மானகரமாகவும் உடைத்துக்கொண்டு வரவேண்டியது அவசியமாகும். இந்த தேர்தல் படிப்பினைகளை உள்ளிளுத்துக்கொண்டு எதிர்வரும் மாதங்களில் இந்த புதிய பரந்த சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்ய சோசலிச சமத்துக் கட்சி போராடும்.

Top of page