World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Socialist Equality Party gains significant support in US elections

அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி பெற்றுள்ள குறிப்பிடத்தக்க ஆதரவு

By Joseph Kay
4 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கத் தேர்தல்களில் அது போட்டியிட்ட பல்வேறு தேர்தல் களங்களில் சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றிருக்கிறது.

கட்டுப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு சட்டங்களாலும் மூன்றாவது கட்சிகள் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளும் தகுதியை வென்றெடுப்பதை தடுக்கும் வகையிலும் ஜனநாயகக் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட முயற்சிகளாலும் நியூஜேர்சி, ஐயோவோ, வாஷிங்டன், மின்னஸ்சோட்டா மற்றும் கொலராடோ போன்ற ஐந்து மாநிலங்களில் மட்டுமே சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிகளுக்கு போட்டியிட்டார்கள். பில்வான் ஒகென்னும் ஜிம் லோரன்சும், ஒரு பூர்வாங்க அளவில் மொத்தம் 2,088 வாக்குகளைப் பெற்றனர். நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் வாக்குசீட்டுகளில் வேட்பாளர்களது பெயர்கள் எழுதப்பட்ட வாக்குகள் விவரம் இதில் சேர்க்கப்படவில்லை.

நியூஜேர்சியில் SEP வேட்பாளர்கள் பூர்வாங்கமாக மொத்தம் 972 வாக்குகளைப் பெற்றனர், இவை பெரும்பாலும் தொழிலாள வர்க்கம் நிறைந்துள்ள கேம்டன், நியூவார்க் மற்றும் ஜேர்சி நகரத்திலிருந்து கிடைத்தவை. மின்னசோட்டாவில் 528 வாக்ககுகளும், கொலரடாவில் 276 வாக்குகளும், ஐயோவாவில் 161 வாக்குகளும், வாஷிங்டன் மாநிலத்தில் 151 வாக்குகளும் பெற்றனர்.

மைனின் இரண்டாவது நாடாளுமன்ற மாவட்டத்தில் அமெரிக்க கீழ்சபைக்கு (US House of Representatives) போட்டியிட்ட SEP வேட்பாளர் கார்ல் கூலி 96 வாக்கு சாவடிகளில் மொத்தம் 8,218 வாக்குகளை பெற்றிருக்கிறார், பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் இது 2.5 சதவீதமாகும். மைனில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட முதல் சோசலிஸ்ட் வேட்பாளர் கூலி ஆவார்.

இரண்டாவது மைன் நாடாளுமன்ற மாவட்ட பகுதிகளில், சிறிய நகரங்களும் விவசாய பிராந்தியங்களும் இடம்பெற்றிருப்பதுடன் பெரிய நகரங்களான லுவிஸ்டன் மற்றும் பாங்கர் போன்றவையும் இடம் பெற்றிருக்கின்றன. 394 தனித்தனி அனைத்து கவுண்டிகளிலும் ஏறத்தாழ கூலி வாக்குகளை பெற்றிருக்கிறார். முன்னர் பெரிய ஆடை உற்பத்தி மையமாக இருந்து தற்போது பொருளாதார தேக்கநிலையில் சிக்கிக் கொண்டுள்ள லெவிஸ்டனில் அவர் 338 வாக்குகளை பெற்றார். தனது பிறந்த இடமான ஜாக்சனில் கூலி 20 சதவீத (55 வாக்குகள்) வாக்குகளையும் அருகாமையிலுள்ள சிறிய நகரமான வெஸ்டனில் 32 சதவீத வாக்குகளையும் (63 வாக்குகள்) பெற்றார்.

மிச்சிகன் 15-வது நாடாளுமன்ற மாவட்டத்தில் SEP கீழ்சபை வேட்பாளர் ஜெரி ஒயிட் 1815 வாக்குகளை அல்லது பதிவான வாக்குகளில் 1 சதவீதத்தை பெற்றார். இவற்றில் பாதி மிச்சிகன் பல்கலைக்கழகம் உள்ள ஆன்அர்பரில் உள்ள Washtenaw கவுண்டியிலும் தொழிலாள வர்க்க நகரமான ப்ஸ்சிலாண்டியிலும் பெற்றவை மண்ட்ரோவில் 292- வாக்குகளையும் 15-வது மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள வைனே கவுண்டியில் 670 வாக்குகளையும் பெற்றார்.

இல்லினோயில் 103வது மாவட்டத்தில் அமெரிக்க கீழ்ச்சபைக்கு போட்டியிட்ட (சாம்பையின் மற்றும் அர்பனா நகரங்கள் உட்பட) SEP வேட்பாளர் ரொம் மக்கமன் 1462 வாக்குகளை அல்லது பதிவான வாக்குகளில் 4 சதவீதத்தைப் பெற்றார். மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகமாகவுள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளில் அவர் 5-சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். மத்திய அர்பானாவில் அவர் பெற்ற 8- சதவீத வாக்குகளும் இதில் அடங்கும். பெரும்பாலும் கருப்பர்களும், வெள்ளையர்களுமாய் தொழிலாள வர்க்கத்தினர் வாழ்கின்ற வாக்குச்சாவடி பகுதிகளில் SEP கணிசமான ஆதரவைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. உழைக்கும் மக்கள் அனைவரது பொது நலன்களையும் அவர் முன்னிலைப்படுத்தினார் என்பது அவர் பெற்ற வாக்குகளில் இருந்து தெரிகிறது.

ஜனநாயகக் கட்சி அவரை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிட மேற்கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கைக்கப்பாலும் அக்கட்சியின் தீவிர எதிர்ப்பிற்கு பின்னரும் மக்கமன் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நோமி ஜேக்கப்சன் வெற்றிபெற்றார்.

மக்கமனின் தேர்தல் பிரச்சாரம் உள்ளூர் ஊடகங்களில் கணிசமான கவனத்தைக் கவர்ந்தது. தேர்தல் தினத்தில் மட்டுமே அவர் மூன்று தனித்தனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக பேட்டி காணப்பட்டார். மற்றும் ஆறு வானொலி மற்றும் செய்திப் பத்திரிகைகளுக்கு மாலையில் பேட்டியளித்தார்.

அமெரிக்க கீழ்சபைக்கு முதலாவது நாடாளுமன்ற ஓகியோ மாவட்டத்திலிருந்து பெயர் எழுதி வாக்களிக்கப்படும் வேட்பாளராக போட்டியிட்ட SEP வேட்பாளர் டேவிட் லோரன்ஸ் மற்றும் கலிபோர்னியா 29-வது நாடாளுமன்ற மாவட்டத்திலிருந்து அமெரிக்க கீழ்சபைக்கு போட்டியிட்ட ஜோன் கிறிஸ்டோபர் பேர்டன் ஆகியோருக்கு பதிவான வாக்குகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கட்சியின் குறைவான வாய்ப்பு வசதிகளையும் இரண்டு பெரிய வர்த்தகக் கட்சிகளாலும் மூன்றாவது தரப்பு பிரச்சாரத்திற்கு இடப்பட்ட மிகப்பெரும் தடைகளையும் எடுத்துக் கொண்டால் SEP மிகக்குறைந்த சதவீத வாக்குகளை பெற்றிருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. SEP-யின் தேர்தல் திட்டம் குறிப்பிட்டிருப்பதைப்போல்: ''வலதுசாரி முதலாளித்துவ அரசியலின் இறுக்கப் பிடியிலிருந்து உடைப்பதற்கும், ஊடகங்களும், ஸ்தாபிக்கப்பட்ட கட்சிகளும் கூறுகின்ற பொய்களுக்கும் வெறும் சொல்லலங்காரத்திற்கும் ஒரு சோசலிச மாற்றை முன்வைப்பதற்கும் அமெரிக்காவிற்குள்ளேயும், சர்வதேச அளவிலும் அரசியல் விவாதத்தின் தரத்தை உயர்த்துவது தான் எங்கள் பிரச்சாரத்தின் நோக்கமாகும். எங்களது பிரச்சாரம் வாக்குகளைப் பற்றியது அல்ல. அது கருத்துக்களையும் கொள்கைகளையும் பற்றியதாகும்.''

SEP தேர்தல்களில் போட்டியிட்டதன் தாக்கம் அது பெற்றிருக்கின்ற வாக்குகளுக்கும் அப்பால் சென்றிருக்கிறது. வாக்குப்பதிவு தகுதி பெறுவதற்கு நடைபெற்ற போராட்டத்தில் கட்சி போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற மற்றும் இருகட்சி முறைக்குள் மாற்றை தேடிக்கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களது கையெழுத்துக்களை திரட்டியது. இதில் ஓகியோ மாகாணத்தில் திரட்டப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களும் அடங்கும், இறுதியில் ஆயிரக்கணக்கான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் மனுக்கள் முறைகேடாக தள்ளுபடி செய்யப்பட்டபின்னர் வான் ஓகென்னும், ஜிம் லோரன்சும் இறுதியாக அங்கு வாக்குப்பதிவிலிருந்து நீக்கப்பட்டனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது பல சந்தர்ப்பங்களில் கார்ல் கூலியும், ரொம் மக்கமனும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி எதிராளிகளோடு நேரடி விவாதங்களில் கலந்துகொண்டு SEP-ன் ஈராக் போர் எதிர்ப்பு மற்றும் கட்சியின் சர்வதேசிய மற்றும் சோசலிச வேலைத்திட்டங்களை பலவற்றை எடுத்துரைத்தனர். SEP -ன் தேர்தல் அறிக்கைகள் ஆதரவாளர்களால் கல்லூரி வளாகங்களிலும் தொழிற்சாலைகளிலும் தொழிலாள வர்க்க புறநகர்களிலும் விநியோகிக்கப்பட்டன.

நாடு முழுவதிலும் நகரங்களில் SEP பொதுக்கூட்டங்களை நடத்தியது-----மிச்சிகன், மைன், இல்லினோய், மின்னஸ்சோட்டா, ஓகியோ, நியூ யோர்க், வாஷிங்டன் மற்றும் கலிஃபோர்னியாவில் நடத்தப்பட்ட கூட்டங்கள் கணிசமான அளவிற்கு கவனத்தைக் கவர்ந்தன.

தேர்தல் பிரச்சார முன்னோட்டமாக, வான் ஓகென் SEPன் முன்னோக்கை சர்வதேச அளவில் எடுத்துச்சென்று பிரிட்டனிலும், இலங்கையிலும், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். அந்தக்கூட்டங்கள் கட்சிப் பிரச்சாரத்தின் சர்வதேசத்தன்மையை திட்டவட்டமாக வெளிப்படுத்துபவை, உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதுதான் அதன் கொள்கை என்று அது ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.

தேர்தல் முடிவுகள் SEP- ன் முன்னோக்கை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளது. போருக்கும் சமூக பிற்போக்குத்தனத்திற்கும் எதிரான இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் குறுக்கு வழிகளுக்கு இடமில்லை. முதலாளித்துவ அமைப்பை எதிர்த்து நின்று சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொது நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியை, அமெரிக்காவிலும், சர்வதேச அளவிலும், உருவாக்குவதன் மூலம் தான் நிலவுகின்ற அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும். தேர்தலுக்கு பின்னர் இந்த முன்னோக்கிற்காக SEP- தொடர்ந்து போராடும்.

Top of page