World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Mass protests in China point to sharp social tensions

சீனாவில் கூர்மையான சமூக பதட்டங்களைச் சுட்டிக்காட்டும் வெகுஜன எதிர்ப்புக்கள்

By John Chan
1 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசாங்க ஊழல், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் வேலைவாய்ப்புக்கள் இழப்பு ஆகியவற்றை கண்டித்து சீனாவின் போர்க்குணமிக்க நகர்ப்புற எதிர்ப்புக்களின் அலை வெடித்துக்கிளம்பியது.

சில மதிப்பீடுகளின் படி, அக்டோபர் 18-ல் ஒரு அரசாங்க அதிகாரி ஒரு ஊழியர் மீது நடத்திய கொடூரமான தாக்குதல் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானிலுள்ள Wangzhou நகரில் ஒரு கலவரத்தை கிளறிவிட்டது. பல்லாயிரக்கணக்கான போலீசாருடன் 80,000 பேர்வரை தொழிலாளர்களும் வேலையில்லாதிருப்பவர்களும், ஓர் இரவு முழுவதிலும் மோதல்களிலும் எதிர்த்து நிற்பதிலும் ஈடுபட்டனர். ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக பக்கத்து நகரங்களில் இருந்து இணை இராணுவப்பிரிவுகள் இறுதியாக அழைக்கப்பட்டன.

இந்த கொந்தளிப்பை உருவாக்கிய சம்பவம் சீன அரச அதிகாரத்துவமும், முதலாளித்துவ செல்வந்த தட்டினரும் எந்தளவிற்கு தொழிலாள வர்க்கத்தை துச்சமாக மதிக்கின்றனர் என்பதை - குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றழைக்கப்படுகின்ற கிராமப்புறங்களில் இருந்து நகரங்களில் வேலைதேடி வந்திருக்கிற மக்களை எந்தளவிற்கு துச்சமாக மதிக்கின்றனர் என்பதை மிக விரிவாக எடுத்துக்காட்டுகின்ற ஒரு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைதியின்மையைத் தாண்டிவிட்டது.

ஒரு வலைத் தளத்தில் வந்துள்ள தகவலின்படி, ஒரு தொழிலாளி தனது முதுகில் சுமையை ஏற்றிக்கொண்டு சென்றவர், தற்செயலாக ஒரு உள்ளூர் வரிவிதிப்புக் கழக இயக்குநர் மனைவி மீது மோதிவிட்டார். அவர் மன்னிப்புக்கேட்க முயலும்போது அந்த அதிகாரி அவரை தரையில் தள்ளிவீழ்த்திவிட்டார். அதிர்ச்சியடைந்த டஜன்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு கம்பை எடுத்து அந்தத் தொழிலாளி வேதனையில் கிடக்கும்போது அந்த அதிகாரி அங்கு கூடி நின்ற மக்களை தாக்க தொடங்கினார். அவர் விரும்பியிருந்தால் அந்தத் தொழிலாளியை அவர் கொன்றிருக்க முடியும் என பெருமை அடித்தார். ஒரு கட்டத்தில் காயமடைந்த அந்த மனிதரின் முகத்தில் அறைபவர்களுக்கு 20- யுவான்கள் தருவதற்கு அவர் முன்வந்தார்.

அந்தத்தாக்குதல் நடந்து கொண்டிருக்கும்போது வந்த போலீசார் அந்த அதிகாரியுடன் கைகுலுக்கினர், அவர் கைது செய்யப்படமாட்டார் என்று உறுதியளித்தனர். ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அந்த அதிகாரியைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் போலீசாரால் இரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டுவிட்டார்.

இந்த சம்பவம் பற்றிய செய்தி உடனடியாக தொழிலாள வர்க்க மாவட்டங்களில் பரவியது. மாலை நேரத்தில் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் Wangzhou நகர அரசாங்க அலுவலகங்களுக்கு முன்னர் திரண்டு ''தாக்கியவர்களை ஒப்படை'', "தாக்கியவர்களை தண்டிக்கவேண்டும்" மற்றும் "காயம்பட்டவருக்கு நியாயம் வேண்டும்" என்பதுபோன்ற முழக்கங்களை எழுப்பினர்.

அந்தக் கட்டடத்தை பாதுகாப்பதற்காக நின்று கொண்டிருந்த கலவரத்தடுப்பு போலீசார் மீது தொழிலாளர்கள் கற்களை வீசினர் மற்றும் கண்ணாடியிலான நுழைவு வாயிலை நொருக்கினர். போலீஸ் கார்கள் தீவைத்து கொளுத்தப்பட்டனர். ஏசியா டைம்ஸ் கொடுத்துள்ள தகவலின்படி, ''ஆர்ப்பாட்டத்தின் தன்மை நீதிக்காக நடைபெற்றதிலிருந்து ஒருஅரசாங்கத்தின்மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக மாறிவிட்டது.'' இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான போலீசாரும் இணை இராணுவத்தினரும் அங்கு அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்டனர். ஆர்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் ரவைகளால் சுட்டனர். நள்ளிரவுவரை தெருச்சண்டைகள் நீடித்தன.

சீன அரசாங்கம் இந்த சம்பவத்தை குறைத்து மதிப்பிட முயன்றது. "தவறான புரிதல்" அந்த கிளர்ச்சியை உருவாக்கியது மற்றும் அந்த கலவரங்களில் "ஒரு சில சட்டவிரோதமான சக்திகள்தான்" சம்மந்தப்பட்டிருக்கின்றன. என்று ஊடகங்களுக்கு தெரிவித்தது. என்றாலும், கலவரத்திற்கு அடிப்படையான காரணங்கள் அனைவருக்கும் மிக வெளிப்படையாக தெரிந்ததுதான்.

யாங்ட்சி ஆற்றின் மீது மூன்று மலை இடுக்கிளடையே அணையை கட்டுவதற்கு வழிசெய்வதற்காக சுமார் 250,000- மக்கள் தங்களது கிராமங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஏற்கெனவே வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். இப்படி குடியேறியவர்களில் பலர் வேலை எதுவும் கிடைக்காததால் அரசாங்கம் தருகின்ற மாத ''வாழ்க்கைப்படி'' யான 70-முதல் 80- யுவான்களை (9-முதல் 10- அமெரிக்க டாலர்கள்) நம்பி அவலநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் மூன்று மலை இடுக்குகள் திட்ட அகதிகளுக்காக வழங்கப்பட்டுவரும் இந்தத் தொகை 2005-ல் நிறுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது, இதற்கெல்லாம் மேலாக வறுமையிலும் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலும், இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற கிராமமக்கள் அரசு அதிகாரத்துவத்தினால் துச்சமாக மதிக்கப்படுகின்றனர் மற்றும் போலீஸ் தொந்தரவுகளுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். குமுறிக்கொண்டிருந்த கொந்தளிப்புக்கள், ஒரு வெடித்துச்சிதறும் முறையில் இறுதியாக கலவரமாக வெடித்தது.

விரிவான கலவரம்

இந்த மாதம் இதர சீன தொழிற்துறை நகரங்களிலும் அதிருப்தி வெடித்துச்சிதறியது. என்றாலும் தகவல் வந்துள்ள கண்டனங்கள் கடலில் நீட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் கட்டியின் முனை போன்று உள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் தந்துள்ள தகவலின்படி, ஒரு பெரிய அரசிற்கு சொந்தமான ஜவுளி தொழிற்சாலையிலிருந்து ஒய்வுபெற்ற 5000- பேர், அவர்களில் பலர் பெண்கள் அக்டோபர் 22-ல் கிழக்கு Anhui மாகாண Bengbu நகரத்தில் கண்டனப்பேரணி நடத்தினர். வறுமைநிலை பென்ஷன் அளவை உயர்த்தவேண்டும் என்று கோரினர். பல்லாயிரக்கணக்கான அனுதாபிகள் அவர்களுடன் தெருக்களில் இணைந்து ஒரு கி.மீ தூர பேரணி நடத்தியதால் அந்த நகருக்குள் வரும் எல்லா வாகனங்களும் தடுத்துநிறுத்தப்பட்டன. தொடக்கத்தில் கலவரத்தடுப்பு போலீசார் அனுப்பப்பட்டனர். எந்த ஒடுக்குமுறை நடவடிக்கை மேற்கொண்டாலும் ஒரு Wangzhou பாணி கலவரம் ஏற்பட்டுவிடும் என்று கவலை கொண்ட அரசாங்கம் அந்தப் போலீசாரை விலக்கிக்கொண்டது. தவறான கண்ணோட்டத்தில் கண்டனம் நடைபெற்றுக்கொண்டுள்ள பகுதிக்குள் சென்ற பல அதிகாரிகள் தங்களது கார்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி வந்துவிட்டனர், தொழிலாளர்கள் தங்களை தாக்கக் கூடும் என்று பயந்து அவ்வாறு செய்தனர்.

ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மாதம் 400- முதல் 500- யுவான்கள் (50-முதல் 60- டாலர்கள் பென்ஷன் பெறுகின்றனர்) கடந்த 7- ஆண்டுகளில் இல்லாத 5.2-சதவீதமாக பணவீக்கம் நீடித்துக் கொண்டிப்பதால் அவர்கள் தங்களது வாழ்க்கை செலவை ஈடுகட்டவே முடியாத நிலையில் உள்ளனர். அத்துடன் ஓய்வுபெற்றவர்களில் பலர் அவர்களது பணி தொடர்பான காயங்கள் அல்லது நோய் நொடிகளில் சிக்கியுள்ளனர். சீனாவிலுள்ள ஜவுளி ஆலைகள் நிலை படுமோசமாக இருப்பதால் அவற்றை பொதுவாக ''தரைக்கு மேலேயுள்ள நிலக்கரி சுரங்கங்கள்'' என்று கூறுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தொழிற்துறை விபத்துக்களால் பல்லாயிரக்கணக்கான நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்களும், ஜவுளி ஆலை ஊழியர்களும் கொல்லப்படுகின்றனர். அல்லது உடல் ஊனமுற்றவர்களாக ஆகின்றனர்.

சீனப்பிரதமர் Wen Jiabao ஒரு உள்ளூர் அங்காடியை திறந்துவைப்பதற்காக வந்திருக்கிறார். என்ற வதந்தியை கேள்விப்பட்டு அவர் தங்களது கோரிக்கைகளை கேட்பார் என்ற நம்பிக்கையில் அந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. என்றாலும் அனுதாபம் கிடைப்பதற்கு பதிலாக தங்களது கோரிக்கைகளை விளக்கும் துண்டு வெளியீடுகளை வழங்கிய பல ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு Shangdong மாகாண ஜினிங் நகர அரசிற்கு சொந்தமான பல்பொருள் அங்காடி நிறுவனம் சீரமைக்கப்பட்ட பின்னர், குறைந்த ஊதியங்களும் பணிநேரம் நீடிக்கப்பட்டிருப்பதும் தங்களை நிர்பந்தித்துக்கொண்டிருப்பதாக நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அக்டோபர் 18-ல் கண்டனப் பேரணிகளை நடத்தினர். அவர்களது கோரிக்கையின் மீது தங்களது அனுதாபங்களை தெரிவிப்பதற்காக Bengbu -வைப்போல் மற்ற பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசிற்கு சொந்தமான Shaanxi மாகாணத்தைச்சேர்நத Xianyang நகர ஜவுளி ஆலையைச் சேர்ந்த ஏறத்தாழ 7000- தொழிலாளர்கள் அந்த ஜவுளி ஆலையை சீன வளங்களை அடிப்படையாகக் கொண்ட ஹாங்காங்கிலிருந்து செயல்பட்டுக் கொண்டுள்ள நிறுவனம் எடுத்துக்கொள்வதை கண்டித்து செப்டம்பர் 14-முதல் அந்த ஜவுளி ஆலையில் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.

அந்தக் கம்பெனி தொழிலாளர் அனைவரையும் வேலைநீக்கம் செய்துவிட்டது. எதிர்கால ஊழியர்கள் அனைவரும் குறைந்த ஊதியங்களுக்கான ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கம்பெனி கேட்டுக்கொண்டது. புதிய உரிமையாளர்களுக்கு தங்களது பங்களை விற்றுவிடவும், தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த உள்ளிருப்பு வேலைநிறுத்தத்திற்கு உள்ளூர் மக்களது ஆதரவைப் பெற்றது. செப்டம்பர் 18-ல் 1000- போலீசார் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்துள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக அனுப்பப்பட்டனர். தொழிற்சாலைக்கு வெளியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் போலீசாரை விரட்டி அடித்தனர். கண்டனப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் சர்வதேச அளவிலான புரட்சிகர பாடலையும் ஏனைய புரட்சிகர பாடல்களையும் பாடினர்.

செப்டம்பர் 13-ல் Shaanxi Precision Alloy நிறுவனத்தை சேர்ந்த 1000- ஊழியர்கள் அரசிற்கு சொந்தமான அந்த நிறுவனம் தனியார் உடைமை ஆவதை கண்டித்து நான்கு நாட்கள் போக்குவரத்து மறியலில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் அந்தத் தொழிற்சாலையில் காணாமல் போய்விட்ட சொத்துக்கள் பற்றி ஒரு புலன்விசாரணை நடத்தக்கோரினர். "அரசிற்கு சொந்தமான சொத்துக்களை காக்க இறுதிவரை போராடுவோம்", "குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் வேண்டும்", "முதியவர்களுக்கு உணவு வேண்டும்", "உழைப்பின் பலாபலன் தேவை" மற்றும் "கருத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை முறியடி" என்பது போன்ற முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை தொழிலாளர்கள் ஏந்திவந்தனர்.

இந்த சம்பவங்கள் ஒவ்வொன்றிலும் அரசாங்க அதிகாரிகள் தொழிலாளர்களது குறைபாடுகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படுமென்று பயனற்ற உறுதிமொழிகளை தந்தனர். ஆனால் உண்மை என்னவென்றால் பெய்ஜிங் ஸ்ராலினிச ஆட்சி உலக வர்த்தக அமைப்பிற்கு தந்துள்ள உறுதிமொழிகளுக்கு ஏற்ற வகையில் சீனா முழுவதிலும், சுதந்திர அங்காடி சீரமைப்பை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது.

1990-களில் அரசிற்கு சொந்தமான தொழில்கள் மூடப்பட்டுவிட்டதாலும் தனியார் உடைமை ஆக்கப்பட்டிருப்பதாலும் மில்லியன் கணக்கில் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். வீட்டுவசதி, மானியங்கள் இரத்துசெய்யப்பட்டன. பென்ஷன்களும் சுகாதார சேவைகளும் நீக்கப்பட்டன. ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ தலைமையிலான புதிய சீனத்தலைமை மிச்சமிருக்கும் 190,000- அரசிற்கு சொந்தமான தொழில்களையும் வந்த விலைக்கு விற்றுவிடுவற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. 190- கம்பெனிகள் மட்டுமே அரசாங்கத்தின் கையில் உள்ளன.

இந்தக் கொள்கைக்கு நேரடியான பதிலடிதான் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்கள். ஹாங்காங்கிலிருந்து பிரசுரிக்கப்படும் China Labour Bulletin ஆராய்ச்சி இயக்குநர் Robin Mandrow அக்டோபர் 26-ல் Blooomberg News- ற்கு அளித்த பேட்டியில் ''அண்மையில் நடைபெற்ற இதுபோன்ற கண்டனங்கள் நாடு முழுவதிலும் நடந்து கொண்டிருக்கின்றன. அரசிற்கு சொந்தமான கம்பெனிகள் அலையலையாக மேலும் அதிக அளவில் தனியார் மயமாக்கப்படும்போது இதுபோன்ற மேலும் பல கண்டனங்களை நாம் எதிர்பார்க்கமுடியும்'' என்றார்.

கடலோர மாகாண ஏற்றுமதி மண்டலங்களிலும் வர்க்க மோதல்கள் தீவிரமடைந்து கொண்டு வருகின்றன. அங்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் சீன தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டிக்கொண்டிருக்கின்றன. அண்மை மாதங்களில் எண்ணெய் மற்றும் மூலப்பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருப்பதால் இந்தப் பகுதிகளில் இயங்கிக் கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை கசக்கிப்பிழியும் தொழிற்சாலைகள் தங்களது இலாப வரம்புகளை நிலை நாட்டிக் கொள்வதற்காக தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்தையும், அதிக நேரப்பணிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டாயப்படுத்தி வருகின்றன.

அக்டோபர் 10-ல், குவாங்டங் மாகாணத்தில், ஷென்ழென் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயல்படும் ஹாங்காங்கை அடிப்படையாகக் கொண்ட (குறுந்தகடு) CD-க்கள் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து 3000- தொழிலாளர்கள் பிரதான நெடுஞ்சாலையில் தங்களுக்கு வழங்கப்பட்டுவரும் குறைந்த ஊதியங்கள் தொடர்பாக கண்டனங்களை எழுப்பியது, 4-மணிநேரம் நகரப் போக்குவரத்தை சீர்குலைத்தது. குறைந்தபட்ச அதிகாரபூர்வமான கூலி 610- யுவான்களுடன் ஒப்பிடுகையில், அந்த நிறுவனம் 12-மணிநேர வேலைநாள் அடிப்படையில் மாதத்திற்கு 230- யுவான்கள் (26அமெரிக்க டாலர்கள்) குறைவாக ஊதியம் வழங்குகிறது. இந்தக்கண்டன பேரணியில் கலந்து கொண்ட இரண்டு இளம்பெண் தொழிலாளர்களும் ஐந்து ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

அக்டோபர் 6-ல் பிரதான தொழில் உற்பத்தி நகரமான குவாங்டாங், டாங் கூவான், பகுதியைச் சார்ந்த 5000- ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் 500- கலவரத்தடுப்பு போலீசாருடன் மோதினர். ஜப்பானுக்கு சொந்தமான ஒரு அச்சு தொழிற்சாலையிலிருந்து வழங்கப்பட்டுவரும் தரக்குறைவான உணவு சப்ளையை கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. டஜன் கணக்கான தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். அல்லது காயமடைந்தனர். மற்றும் ஒரு போலீஸ் வாகனம் நொறுக்கப்பட்டது.

சீன இராணுவக்கட்டுப்பாடு சென்ற மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு பிளீனத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமீனிடமிருந்து ஹூ ஜிண்டாவோவிற்கு மாற்றப்பட்டது. வளர்ந்துவரும் சமூக கிளர்ச்சிகளை சமாளிப்பதற்கு ஆயுதப்படைகளை புதிய தலைமை ஆயுதப் படைகளை நம்பியிருக்கிறது.

சீன ஆளும் வட்டாரங்களில் இணை இராணுவத்தையும், போலீஸ் எண்ணிக்கையையும் பெருக்குவது தொடர்பான கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. அரசிற்கு சொந்தமான சீன மத்திய தொலைக்காட்சியில் அக்டோபர் 17-ல் பேட்டியளித்த பொதுபாதுகாப்பு அமைச்சர் ழோவ் யோன்காங், போலீசார் எண்ணிக்கை "போதுமான அளவிற்கு இல்லை" மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணிக்கை அளவிற்கதிகமாக இருக்கும்போது அவர்களை போலீசாரால் வெற்றிகரமாக சமாளிக்க இயலவில்லையென்று அறிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சீன தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை மகத்தான அளவிற்கு எண்ணிக்கையிலும், சமூக எடையிலும் வளர்ந்து கொண்டுவருவது பெய்ஜிங்கிற்கு மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. 1.4 பில்லியன் மக்களை கட்டுப்படுத்துவதற்காக ஆட்சியிடம் 1.7- மில்லியன் போலீசாரும் மக்கள் விடுதலை இராணுவத்தில் 2-மில்லியன் துருப்புக்களும், உள்ளன. தற்போது 110-க்கு மேற்பட்ட சீன நகரங்களில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்களை மிரட்டுகின்ற ஒரு முயற்சியாக தொழிலாளர் தலைவர்களை இலக்காக கொண்டு கைது செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. மிக அண்மையில் ஜியாங் சூ மாகாணத்தில் முன்னர் அரசிற்கு சொந்தமான பியூனிங் கவுண்டி ஜவுளி ஆலையைச்சேர்ந்த Liu Meifeng மற்றும் Ding Xiulan இரண்டு பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கதவடைப்பிற்கு எதிராக ஒரு மாத காலம் நீடித்த போராட்டத்தில், 3000- தொழிலாளர்களை வழிநடத்திய பின்னர், யாங் செங் நகரத்தில் அரசாங்கத்தால் அக்டோபர் 20 அன்று ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக்கூட்டத்தில் அந்தப்பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சமூக ''ஒழுங்கை சீர்குலைத்ததாக'' குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது- அது நீண்டகால சிறை தண்டனைக்குரிய அரசியல் குற்றமாகும்.

Top of page