World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Crisis of the European Union commission overshadows signing of EU constitution

ஐரோப்பிய ஒன்றிய அரசியல் யாப்பின் கையெழுத்திடலை மங்கச்செய்யும் ஐரோப்பிய ஒன்றிய கமிசனின் நெருக்கடி

By Peter Schwarz
12 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

அக்டோபர் இறுதியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 25 அரசாங்க தலைவர்களும் ரோமபுரியின் ஒரு விழாவில், "ஐரோப்பிய அரசியல் யாப்பு ஒப்பந்தத்தில்" கையெழுத்திட்டனர். என்றாலும், புதிய EU அரசியல் யாப்பு உடனடியாக அமுலுக்கு வராது, முதலில் அனைத்து 25 உறுப்பு அரசுகளும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படி இந்த உறுப்பு நாடுகள் கையெழுத்திடுவதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பிடிக்கும், மற்றும் அதன் முடிவு நிச்சயமற்றதாகும். ஸ்பெயின், பிரான்சு, அயர்லாந்து, ஹாலந்து மற்றும் அதேபோல் பிரிட்டன் டென்மார்க் மற்றும் போலந்து உட்பட குறைந்தபட்சம் 10 அரசுகள் EU அரசியல் யாப்பு தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றன. இங்கு இந்த ஒப்பந்தம் மிகவும் கேள்விக்குரியதாக இருக்கின்றது.

ஒப்பந்தம் கையெழுத்தான விழா மேலும் மங்குகின்ற வகையில் ஒரு கடுமையான நெருக்கடி EU -வில் தோன்றியுள்ளது, EU கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள José Manuel Barroso அவரது புதிய கமிஷனுக்கு EU-வின் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கு தவறிவிட்டார். ரோமாபுரியில் தங்களது ஒற்றுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக அரசுத் தலைவர்களும், அரசாங்க தலைவர்களும் காமிராக்கள் முன் மகிழ்ச்சி பொங்க காணப்பட்ட அதே நேரத்தில், எதிர்கால கமிஷன் அமைப்பது தொடர்பாக, பின்னணியில் மிக ஆக்ரோஷமான ஒரு தகராறு நடந்து கொண்டிருந்தது.

EU வரலாற்றிலேயே முதல் தடவையாக திட்டமிட்டபடி, ஒரு கமிஷன் பதவியை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. Barroso, EU நாடாளுமன்றத்தின் முன் அக்டோபர் 27-ல் தனது கமிஷன் தொடர்பான ஆலோசனைக்கு ஒப்புதல் வாங்குவதை தள்ளிவைத்தது ஏனென்றால், அது தள்ளுபடி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமிருந்ததால்தான். நாடாளுமன்றம், கமிஷனை ஒட்டுமொத்தமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும். மற்றும், ஒவ்வொரு உறுப்பு அரசும் முன்வைக்கும் தனிப்பட்ட கமிஷனர்கள் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை. பின்னர், ஒவ்வொரு கமிஷனருக்கும் எப்படி பொறுப்புக்களை ஒதுக்கீடு செய்வது என்பதை முடிவு செய்வது கமிஷன் தலைவரை பொறுத்ததாகும்.

இத்தாலிய கமிஷனர் Rocco Buttiglione-க்கு Barroso-வால் நீதி மற்றும் உள்விவகாரத்துறை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக EU நாடாளுமன்றத்துடன் மோதல் உருவாயிற்று. அவர் ஒரு கத்தோலிக்கர், வாட்டிகனோடு நெருக்கமான உறவு கொண்டிருப்பவர், Buttiglione, ஒரின பாலியல் தொடர்பாக, வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து அது ஒரு "பாவச் செயல்" என்று குறிப்பிட்டதன்மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பிற்கு இலக்கானவர்.

பாரபட்ச போக்குகொண்டவர்கள், ஊழல் அல்லது திறமைக் குறைவுள்ளவர்கள் என்று கருதப்படும் இதர கமிஷனர்கள் தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்தன. எடுத்துக்காட்டாக, வரிவிதிப்பு மற்றும் சுங்கவரி ஒன்றிய பொறுப்பை ஒப்படைப்பதற்கு Barroso திட்டமிட்டிருந்த Ingrida Udre லாத்வியாவில், ஒரு ஊழல் விவகாரத்தில் ஆழ்ந்த குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கிறார். ஹாலந்தைச் சேர்ந்த Neelie Kroes ஐரோப்பிய போட்டி இலாகா மேற்பார்வை பொறுப்பு தரப்பட்டவர் அவர் பல பெரிய நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் பணியாற்றி வருகிறார், அமெரிக்க, ஆயுதங்கள் விற்பனை நிறுவனமான Lockheed Martin-க்கு அவர் இதற்கு முன்னர் ஒரு தீவிர ஆதரவாளராக (lobbyist) பணியாற்றி வந்தவர். EU-வில் மிகப்பெரிய பதவியான மானியங்கள் துறையை நிர்வகிக்கும் Else Fischer Boel டென்மார்க்கை சேர்ந்த மிகப்பெரிய பண்ணை விவசாயி EU மானியத்தில் பெரும்பகுதி பெற்று வருபவர். எரிசக்தி கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹங்கேரியைச் சேர்ந்த Laszlo Kovacs முற்றிலும் திறமைக் குறைவானவர், என்று கருதப்படுகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளுக்கு Barroso பல வாரங்கள் பதிலளிக்க மறுத்துவிட்டார், ஏனென்றால் தேசிய அரசாங்கங்களின் தலைவர்களோடு தமக்குள்ள உறவுகளை சீர்குலைத்துவிட அவர் விரும்பவில்லை. இதன் விளைவாக, முன்னணியை விஸ்தரிப்பது கடினமானது அவர் பாராளுமன்றத்தில் தோல்வி கண்பது தவிர்க்கமுடியாதது. நாடாளுமன்ற சிறு குழுக்களுக்குள் நடத்தப்பட்ட மாதிரி வாக்கெடுப்பில், சமூக ஜனநாயகக் கட்சிகாரர்கள், பசுமைகள், மற்றும் இடதுசாரி கட்சிகள் கமிஷனுக்கு எதிராக அணிகளை தடுத்துக் கொண்டுவிட்டனர் மற்றும் மூன்றில் இரண்டுபங்கு என்ற பெரும்பான்மையில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தாராளவாதிகளும், சமரசம் செய்து கொண்டனர். பழமைவாதிகள் மட்டுமே Barroso-வை ஆதரித்தனர். அவர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையிலான நாடாளுமன்ற குழுவைச் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அவர்களுக்கு ஒரு மெஜாரிட்டி இல்லை. கமிஷனுக்கு சாதகமாக வாக்குப் பதிவு நடைபெற வேண்டுமென்றால் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள தீவிர வலதுசாரிகள் மற்றும் EU மீதே ஐயுறவாதம் கொண்டவர்களை இணைத்துக் கொண்டால்தான் சாத்தியமாகும்----அப்படிப்பட்ட ஒரு முயற்சியை மேற்கொள்ளுவது நாடாளுமன்றத்தில் நிரந்தரமாக ஒரு கசப்பான நச்சுச் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

இந்தச் சூழ்நிலைகளில், Barroso கடைசி நேரத்தில் பின்வாங்கிக் கொண்டு திட்டமிட்ட வாக்குப்பதிவை இரத்து செய்து விட்டார். ரோமில், நடைபெற்ற உச்சி மாநாட்டில், இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தகராறுக்குரிய Buttiglione நியமனத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். அவர், தனது பதவியிலிருந்து "விருப்ப" இராஜினாமாவை அறிவித்தார். தனது பெயரை காப்பாற்றி கொள்வதற்காக Berlusconi இதர அரசாங்கங்களும் தங்களது வேட்பாளர்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரியதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. எதிர்பார்த்தபடி, பெர்லுஸ்கோனி, Buttiglione மற்றும் Urde இருவருக்கும் பதிலாக நவம்பர் 3-4ல் ஐரோப்பிய சபை கூட்டத்தில் திருத்தப்பட்ட கமிஷன் ஆலோசனையை முன்வைத்தார்.

இந்த நெருக்கடியின் பின்னணி

குறிப்பாக ஜேர்மன் பத்திரிகைகளில், EU நாடாளுமன்றம் கமிஷனை மறுசீரமைத்திருப்பது, ஜனநாயகத்தின் ஒரு வெற்றி என்றும் EU ஒருங்கிணைப்பு திட்டத்தின் முன்னேற்ற நடவடிக்கை என்றும் கொண்டாடின.

Frankfurter Rundschau வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு கருத்தில்: "ஐரோப்பாவில் இது ஒரு திருப்புமுனையாகும். பல ஆண்டுகள் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த EU முற்றிலும் சிறப்பு குன்றியதாக ஆகிவிடுமோ என்று கருதப்பட்ட சூழ்நிலையில் EU நாடாளுமன்றம், தனக்கு ஒரு பெயரை வெற்றிகொண்டுவிட்டது. அது தனது அந்தஸ்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது EU கமிஷன் பல அரசாங்கங்கள் தனித்தனியாக ஒட்டுப் போட்ட அமைப்பு அது எளிதில் வெற்றி கொண்டது. அதன் மூலம் EU ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மைக்கு சேவை புரிந்திருக்கின்றது.... Barroso-ம், அரசாங்கங்களும் ஒரு இடர்பாடுள்ள தோல்வி என்று கருதுவது எல்லாம் ஒரு நெருக்கடிதான். முற்றிலும் எதிரானது, அது ஐரோப்பாவிற்கு ஒரு லாபமாகும். ஏனென்றால் தனது செல்வாக்கைவிட சிறப்பானது ஒன்றியம் என்று எடுத்துக்காட்டியுள்ளது. அரசியல் முடிவு எடுப்பதும், கட்டுப்பாட்டு செயல்பாடுகளும் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன."

இதேபோன்ற உணர்வுகள் பிரான்சிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. "ஜனநாயகம் என்றால் நாடாளுமன்றத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பொருள். எல்லாவற்றையும் பலாத்காரத்தின்மூலம் எவரும் திணித்துவிட முடியாது" என்று பிரதமர் ஜோன் பியர் ரஃப்ரன் விளக்கினார். பிரெஞ்சு சோசலிஸ்ட் தலைவர் பிரான்சுவா ஹாலண்ட் மிகுந்த மகிழ்ச்சி துள்ளலில் இருந்தார். Barroso பின்வாங்கியது, "EU நாடாளுமன்றத்திற்கு ஒரு வெற்றியாகும், மற்றும் ஐரோப்பிய மட்டத்தில் இறுதியாக ஜனநாயகம் புகுத்தப்பட்டிருப்பதற்கு அது ஒரு சான்றாகும்." என்று அவர் கூறினார்.

இது ஒரு மிகப்பெரிய மிகைப்படுத்தலாகும், ஐரோப்பாவின் உண்மையான தோற்றத்திற்கும், இதற்கும் சம்மந்தமில்லை. EU நாடாளுமன்றத்திற்கும், அரசாங்கங்களுக்குமிடையில் கமிஷன் அமைப்பு தொடர்பாக நிலவுகின்ற அதிகாரத்திற்கான போராட்டம் ஜனநாயகம் அதிகரித்திருப்பதன் ஓர் அடையாளமல்ல. இந்த மோதல் EU கொள்கை நிலைநோக்கை மாற்றிவிட எதுவும் செய்துவிடப் போவதில்லை, அது மிக பரந்த மக்களின் இன்றியமையாத நலன்களுக்கு பகிரங்கமாக, எதிராக அமைந்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை குறிக்கோள் என்னவென்றால்----- ஐரோப்பாவை ஒரு பொருளாதார மற்றும் அரசியல் வல்லரசாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பது---- இதை, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள எல்லா குழுக்களும் எல்லா ஐரோப்பிய அரசாங்கங்களும் ஆதரிக்கின்றன. மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும், சமூக சலுகைகள் மற்றும் உரிமைகள் மீதும் இடைவிடாத தாக்குதல்களை நடத்துவதிலும், இராணுவவாதம் உயர்வதிலும் பின்னி பிணைந்து நிற்கிறது.

Barroso கமிஷன் தலைவராகப் பணியாற்றுவதற்கு அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவர் போர்ச்சுக்கல்லில் மிகத் தீவிரமான வலதுசாரி மற்றும் நவீன-தாராளவாத அரசாங்கத்தின் தலைவராக பணியாற்றியவர், மற்றும் அவர் பிரஸ்ஸல்சிற்கு வருவதற்கு முன்னர், போர்ச்சுக்கல் வாக்களர்களிடையே, மிகக் குறைந்த அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்தவர். மேலும் Buttiglione ஒரின பாலியலுக்கெதிராக தனது வசைமாரியை தொடக்கிய பின்னர்தான் அவருக்கு விமர்சனம் உருவாயிற்று. இத்தாலிய அரசாங்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஐரோப்பிய சட்டங்களை இயற்றி நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இத்தாலிய அரசாங்கம் தனது சொந்த நாட்டில் நீதித்துறைக்கு எதிராக நீண்ட பூசல்களில் ஈடுபட்டிருக்கிறது. மிகக் கடுமையாக அரசாங்கத் தலைவரின் வர்த்தக நலன்களுக்கு நாடாளுமன்றத்தை கீழ்ப்படிந்து நடக்கச் செய்திருக்கிறது, இவையெல்லாம் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு போதுமானதாக கருதப்படவில்லை,

ஆனால் நாடாளுமன்றம், கமிஷன் மற்றும் அரசாங்கங்களின் தலைவர்களுக்கிடையே நடைபெறுகின்ற மோதல்கள் EU-வின் அரசியல் நிலைநோக்கு பிரச்சனைப் பற்றியோ மற்றும் ஜனநாயகத்தை சுற்றியோ நடைபெறவில்லை. மாறாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உள் வாழ்க்கையை, மிகப்பெருமளவில் முடிவு செய்து கொண்டிருக்கின்ற, கொந்தளிப்புக்கள், மோதல்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு பதிலாக ஒரு வெளிப்பாட்டு அரங்கு கிடைத்திருக்கிறது. பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கிடையில் முரண்பாடுகள் நிலவுகின்றன. ஐரோப்பிய ஒருமைப்பாட்டிற்கு, பிரான்சும் ஜேர்மனியும் மேலாதிக்கம் செலுத்துவதை வரவேற்கும், அரசாங்கங்களுக்கும், எதிர்க்கும் அரசாங்கங்களுக்குமிடையில் மோதல்கள் முரண்பாடுகள் நிலவுகின்றன. "பழைய" மற்றும் "புதிய" ஐரோப்பாவிற்கிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன, அதாவது ஐரோப்பா அமெரிக்காவிற்கு போட்டியாக, ஒரு வல்லரசாக உருவாகின்ற வல்லமை படைத்தது என்று கருதுபவர்களுக்கும், வாஷிங்டனுக்கு அடிபணிந்து நடக்கலாம் என்று தயாராக, இருக்கும் நாடுகளுக்குமிடையில் முரண்பாடுகள், நிலவுகின்றன. இவற்றிற்கெல்லாம் மேலாக ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையே தொடர்ந்து இடைவெளி அதிகரித்து வருகிறது.

தாராளமான மானியத் தொகைகள், மற்றும் ஆதரவு கொள்கையை அடிப்படையாகக் கொண்டு EU உள்முரண்பாடுகளை ஈர்த்துக்கொள்கிறவரை EU ஒற்றுமைக்கு அது ஒரு தடைக்கல்லாக இருக்கப்போவதில்லை. ஆனால் உலக பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள் மோசமாகிக் கொண்டு வருவதால் ஐரோப்பாவிற்குள் தேசிய இறுமாப்புக்கள் தீவிரமாகிக் கொண்டு வருகின்றன.

ஏற்கனவே ஈராக் போர் ஐரோப்பிய ஒன்றியத்தை இரண்டாக பிளவுபடுத்தி விட்டது. இப்போது பொதுவான விரும்புகிற வெளியுறவுக் கொள்கை என்பது எதுவும் இல்லை. அதற்குப் பின்னர் ஒரு EU அரசியல் சட்டத்தை உருவாக்குவது சீர்குலைந்தது, பெரும்பான்மை முடிவுகள் மற்றும் அமைச்சர் குழுவின் அந்தஸ்து தொடர்பான விவகாரங்களில் இந்த சீர்குலைவு ஏற்பட்டது, இறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நகல் அரசியல் சட்டம் பெரிய அரசுகளுக்கு, குறைந்த அதிகாரத்தை தருகிறது, ஒருமனதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும் கோருகிறது. 25 உறுப்பு அரசுகளும் தனித்தனியே இரத்து அதிகாரம் படைத்தவை மற்றும் ஒரு தீர்மானம் செயல்படுவதை எதுவும் தடுத்துவிட முடியும்.

இறுதியாக, பிரான்சு, ஜேர்மனி ஆதரித்த பெல்ஜிய Guy Verhogstadt- ஐ கமிஷன் தலைவராக பொறுப்பேற்பதை பெரும்பாலான EU அரசாங்கங்கள் தடுத்துவிட்டன. மாறாக, ஜேர்மன் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிக்காரர்களின் தீவிர உதவியோடு அமெரிக்காவோடு நெருக்கமான உறவு வைத்திருக்கின்ற Barroso தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Barroso கமிஷன் தொடர்பாக நிலவுகின்ற மோதல் இந்த முடிவினால் ஏற்பட்டதல்ல. நாடாளுமன்றத்தில், அமைச்சரவையைவிட ஜேர்மனி மற்றும் பிரான்சு போன்ற பெரிய நாடுகளுக்கு திட்டவட்டமான முக்கியத்துவம் உண்டு ஆனால், அமைச்சரவையில் ஒவ்வொரு நாட்டிற்கும் சம அதிகாரங்கள்தான் உண்டு. சில பிரச்சனைகளில் மட்டுமே பெரும்பான்மை மூலம் முடிவு செய்யப்படும். தற்செயலாக, தற்போது ஜேர்மன் அரசியல்வாதிகள் இரண்டு பெரிய EU நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை வகிக்கிறார்கள்---அந்த அரசியல்வாதிகள், பழமைவாதிகளும், சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களும், பசுமைகளும் ஆவர்.

அண்மையில் நடைபெற்ற இந்த மோதல் குறித்து ஜேர்மன் அரசாங்கமே வருத்தமடைந்தது. பிரெஞ்சு செய்தி பத்திரிக்கையான Le Monde தந்துள்ள தகவலின்படி, ஜேர்மன் சான்சலர் ஷ்ரோடர் தனிப்பட்ட முறையில் சமூக ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற குழுதலைவர் Martin Schutz உடன் தலையிட்டு Barroso கமிஷனுக்கு ஆதரவு பெற ஏற்பாடு செய்தார்.

கமிஷன் தேர்வை சுற்றி நடந்து கொண்டிருக்கும் கொந்தளிப்பு EU-வின் கட்டளைப்படி, ஒரு ஜனநாயக மற்றும் சமூக நீதி அடிப்படையிலான ஐரோப்பாவை உருவாக்கிவிட முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. EU- வில் வர்த்தக மற்றும் தேசிய நலன்கள் திட்டவட்டமான, செல்வாக்கை, நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. மக்களது தேவைகளையும், நலன்களையும், முன்னிலைப்படுத்துகின்ற ஒரு ஐக்கிய ஐரோப்பா உருவாக, வேண்டுமென்றால், ஒரு ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அடிப்படை இயக்கத்தை உருவாக்குவதன் மூலம்தான் சாத்தியமாகும்.

Top of page