World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government seeks to curry Washington's favor

முகஸ்துதி கூறி வாஷிங்டனின் தயவைப்பெறுவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சி

By Keith Jones
19 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள பாராட்டு செய்தி அதன் கெஞ்சுதல் தன்மையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது.

புஷ் ''ஒரு வலுவான கட்டளையை'' பெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைமையிலான இடதுசாரி அணி ஆதரவுடைய ஐக்கிய முற்போக்கு முன்னணி அராசங்கத்தின் தலைவர் கூறுகிறார். அமெரிக்க இந்திய உறவுகளை ஒரு புதிய கட்டத்திற்கு அவர் கொண்டுவந்திருப்பதாக பாராட்டியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய பங்காளியாயிருப்பதில் இந்திய செல்வந்த தட்டினரின் உறுதிப்பாட்டை வலியுறுத்திக் கூறியுள்ளார். ''நாம் ஒரு பெரிய மற்றும் அதிக அபிலாஷைகள் கொண்ட செயல்திட்டத்தை விரிவான மூலோபாய ஒத்துழைப்பிற்காக தொடங்க வேண்டும் மற்றும் உயர் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒரு குறிப்பான உறுதிமொழியை இந்த வகையில் வழங்குகின்றன'' என்று சிங் அறிவித்துள்ளார்.

"பயங்கரவாதத்தின் மீதான போரில்" அவரது தலைமைக்காக புஷ்ஷை புகழ்ந்து தள்ளினார். ''அமெரிக்காவும், இந்தியாவும் இந்த முயற்சியில் ஒரே பக்கமாக நிற்கிறது'' என்று மேலும் குறிப்பிட்டார். "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடல்" என்ற பதாகையின் கீழ் வாஷிங்டன், ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் வென்றெடுத்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, அருகாமையிலுள்ள எண்ணெய் வள மண்டலங்களில் அமெரிக்க புவிசார் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்ட வாஷிங்டன் அமெரிக்காவின் இராணுவ வலிமையைக் கட்டவிழ்த்திருக்கிறது.

அண்மையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய நாடக பாணி தேர்தல்களை சிங் வரவேற்றார். மற்றும் அது ஈராக்கில் நியமித்துள்ள பொம்மையாட்சிக்கு அதே போன்ற சட்டபூர்வ அங்கீகாரம் தரும் நாடகம் நடத்துவதற்கு புஷ் நிர்வாகம் தீட்டியுள்ள திட்டங்களுக்கு தனது அரசாங்கத்தின் ஆதரவையும் வெளிப்படுத்தினார். ''நாம் அனைவருக்கும் ஈராக் விரைவில் சர்வதேச நீரோட்டத்திற்கு ஒரு ஜனநாயக நாடாக வரவேண்டுமென்பதில் அக்கறையிருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் நடைமுறையில் பங்களிப்புச்செய்ய இந்தியா தயாராக இருக்கிறது'' என்று சிங் சொன்னார்.

வாஷிங்டனின் தயவை நாடுவதற்காக கூறப்பட்டது என்றாலும் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத பரவல் இவற்றுக்கெதிரான அமெரிக்காவின் போராட்டத்தை ஆதரிப்பதாக இந்திய பிரதமர் மன் மோகன் சிங் தந்துள்ள உறுதிமொழி பாக்கிஸ்தான் மீது ராஜியத்துறையில் ஒரு தாக்குதல் நடவடிக்கையாகும். பனிப்போரின் போது அமெரிக்கா இந்தியா மீது பாக்கிஸ்தானின் பகை உணர்வை தீவிரமாக தூண்டிவிட்டது. 2002-ல் தெற்கு ஆசிய போட்டி அரசுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் அணு ஆயுதப்போர் விளிம்பிற்கே வந்துவிட்ட நிலையில் அமெரிக்கா தந்த நிர்பந்தங்களின் காரணமாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இரு தரப்பும் தங்களது உறவுகளை சகஜ நிலைக்குகொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடக்கின. என்றாலும் அனுகூலம் பெறுவதற்கான போராட்டம் நீடித்துக்கொண்டேயிருக்கின்றது. பாக்கிஸ்தானின் இராணுவ வல்லாட்சியாளர் பர்வேஷ் முஷ்ராப்பிற்கு புஷ் நிர்வாகம் தந்துவருகின்ற வலுவான ஆதரவு கண்டு இந்தியாவின் மேல்தட்டினர் சங்கடமடைந்துள்ளனர். இந்தாண்டு ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை ஒரு பெரிய நேட்டோ- அல்லாத நட்பு நாடு என்று வாஷிங்டன் பிரகடனப்படுத்தியது.

புது தில்லி முடிந்தநேரத்தில் எல்லாம், இந்தியாவும் அமெரிக்காவும், பயங்கரவாத முற்றுகைக்கு உட்பட்டுள்ள இரட்டை ஜனநாயகங்கள் என்று சித்தரிக்க முயன்று வருகிறது. அதே நேரத்தில், காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிரான கிளர்ச்சியில் பாக்கிஸ்தான் அரசியல் மற்றும் இராணுவ ஆதரவை தந்துவருவதன் காரணமாகவும் மற்றும் அணு- ஆயுத பரவலில் ஒரு உடந்தையாளராக செயல்பட்டு வருவதன் காரணமாகவும், பாக்கிஸ்தான் பயங்கரவாதத்தை ஊட்டிவளர்ப்பதாக கூறி வருகிறது.

சிங், புஷ்ஷிற்கு புகழாரம் சூட்டியிருப்பது ஒரு அரசியல் கூக்குரலையே உருவாக்கிவிட்டது. இந்தியாவில் வேறு-எல்லா நாடுகளையும் போல் அமெரிக்காவின் சட்டவிரோதப் படையெடுப்பு மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு மகத்தான மக்கள் எதிர்ப்பு நிலவுகிறது. புஷ்- அரசியல் பிற்போக்குத்தனத்திற்கும் புதிய காலனி ஆதிக்கத்திற்குமான ஒரு மானிட உருவாக கருதப்படுகிறார்.

என்றாலும் இந்தியப் பிரதமரின் அறிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பெரும்பாலானவர்களின் கருத்தை எதிரொலிக்கிறது. பல வர்த்தக தலைவர்கள் ஜனநாயகக்கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரி இந்தியாவில் பெருகிவரும் கம்யூட்டர் மென்பொருள் மற்றும் அவுட்சோர்சிங் தொழில்கள் தொடர்பாக ஆவேசமாக தாக்குதல்களை தொடுத்தது பற்றி சுட்டிக்காட்டினர். புஷ்ஷின் தேர்தல் வெற்றி இந்திய வர்த்தகத்திற்கு பயன்தரும் என்று வாதிட்டுள்ளனர். ''புஷ் சுதந்திர வர்த்தகத்தை ஆதரிப்பவர் மற்றும் நமது (BPO) வெளிநாடுகளுக்கு அனுப்பி வர்த்தக நடவடிக்கைகளை செயல்படுத்தும் தொழிலுக்கு எந்தப் பிரச்சனையும் எழாது, ஜோன் கெர்ரி வெற்றி பெற்றிருந்தால் ஏற்படும் நிலையைப்போன்று எதுவும் நடக்காது'' என்று ஒரு முன்னணி இந்திய தொழிலதிபர் ஆதி கோத்ரெஜ் கூறினார்.

இதை ஒப்புநோக்கும்போது சென்னையை தளமாகக் கொண்ட தாராண்மை, இந்து நாளிதழ், புஷ் தேர்தல் வெற்றி 2002- டிசம்பரில் குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றிபெற்றதற்கு சமமானது என்று ஒப்பிட்டிருக்கின்றது. அந்த தேர்தல் நடப்பதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நரேந்திர மோடி வகுப்புக் கலவரங்களைத் தூண்டிவிட்டார். அதில் 2000-த்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் மடிந்தார்கள், அதன்மூலம் இந்து மேலாதிக்கவாத BJP மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாக்காளர்களை தனக்குச்சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுவதற்கு மோடியைப்போன்று புஷ் அச்சமூட்டும் தந்திரோபாயங்களையும் பொய்களையும் பயன்படுத்திக்கொண்டார்.

இடதுசாரி அணிக்கு தலமை வகித்துக்கொண்டுள்ள ஸ்ராலினிச கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புஷ்ஷிற்கு சிங் அனுப்பியுள்ள செய்தியில் "சில கருத்துக்களை" கண்டித்து அறிக்கை வெளியிட்டது. ''பயங்கரவாதத்திற்கு எதிராக நடைபெற்றுவருகின்ற சர்வதேச போர் புஷ்ஷின் உறுதிப்பாடு மற்றும் தலைமையினால் பெருமளவில் பயனடைந்திருப்பதாக கூறுவது எல்லா உண்மைகளுக்கும் சான்றுகளுக்கும் முரணானது'' என்று சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு அறிவித்திருக்கிறது ''ஈராக் மீது புஷ் படையெடுத்ததால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதா அல்லது வலுவடைந்துவருகிறதா என்று நியாயமாக கேட்கமுடியும். எனவே நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான பங்காளிகள் என்று எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் வலியுறுத்திக் கூறுவது அறிவுக்கு புறம்பானது.''

ஸ்ராலினிஸ்டுக்கள் சிங்கை கடுமையாக கண்டித்தாலும் இந்திய தேசிய முதலாளித்துவவாதிகளின் தேசிய நலன்களை தாங்கிப்பிடிக்கின்ற வகையில் எப்படி சிறப்பாக செயல்படுவது என்ற கண்ணோட்டத்தில்தான் கண்டனம் செய்திருக்கிறார்கள். பன்முக உலகக்கட்டுக்கோப்பில் இந்தியாவிற்கு அதிக பயன் கிடைக்கும் என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்தக் குறிக்கோளோடு பிரான்ஸ் ஜனாதிபதி சிராக் மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றிய முதலாளித்துவ வர்க்கத்தினரின் அரசியல் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்காவின் பூகோள அரசியல் அபிலாஷைகளுக்கு எதிரெடையாக உருவாக்கிவிட வேண்டுமென்ற முயற்சியைப் பாராட்டியுள்ளன. இந்தக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஸ்ராலினிஸ்டுக்கள் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடிக்க வேண்டுமென்று அழைப்புவிடவில்லை. மாறாக தற்போதுள்ள அமெரிக்க பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு ஐ.நா மேற்பார்வையின் கீழ் வருவதாக மாற்றப்பட வேண்டுமென்றே கோரிக்கையை விடுக்கின்றனர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்திற்கு அவர்கள் தருகின்ற ஆதரவின் அடிப்படையிலும் மேற்கு வங்காளத்தின் இடதுசாரி முன்னணி அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வர்த்தக ஆதரவு பொருளாதார சீர்த்திருத்தங்கள் அடிப்படையிலும் ஸ்ராலினிஸ்டுக்கள் இந்திய முதலாளித்து வர்க்கத்தின் ஏற்றுமதிகள் மூலம் உருவாகின்ற பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்தை தீவிரமாக ஆதரிப்பவர்கள். அந்த மூலோபாயம், அமெரிக்க பெருநிறுவன முதலீடுகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் இந்தியாவை உலக சந்தைக்கான மலிவு ஊதிய தொழிலாளர் தொழில் உற்பத்திகேந்திரமாக மாற்றுவதை நோக்கமாகக்கொண்டது.

இந்து தேசியவாத பி.ஜே.பி-யை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு அது ஒன்றே வழி என்று கூறி, காங்கிரஸ் தலைமையிலான UPA- விற்கு தங்களது ஆதரவை ஸ்ராலினிஸ்டுகள் நியாயப்படுத்துகின்றனர். இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பாரம்பரிய ஆளும் கட்சியான காங்கிரசிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வர்த்தக நிறுவனங்களின் புதிய தாராண்மை திட்டங்களுக்கு ஒரு மனிதநேய முகத்தை உருவாக்கிவிட முடியுமென்று ஸ்ராலினிஸ்டுக்கள் கூறுகின்றனர்.

UPA- ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களாக ஒரு திட்டவட்டமான நடைமுறை ஒன்று உருவாக்கியிருக்கிறது. திரும்பத்திரும்ப ஸ்ராலினிஸ்டுக்கள் கடுமையான எச்சரிக்கை விடுக்கும் அறிக்க்ைகளை காங்கிரஸ் தலைமைக்கு தந்து கொண்டிருக்கிறார்கள் அந்த அறிக்கைகளை BJP-தலைமையிலான முன்னாள் கூட்டணி அரசாங்கம் பின்பற்றி வந்த கொள்கைகளை மாற்றம் சிறிதும் இல்லாமல் பின்பற்றி வருவதாக கண்டனம் செய்கின்றனர். மன்மோகன் சிங், சோனியா காந்தி மற்றும் இதர காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பத்திரிகைகளில் பதில் அறிக்கைகளை விடுக்கிறார்கள். இடதுசாரி அணி தலைவர்களுடன் நடத்தும் இரகசிய கூட்டங்களில் ஸ்ராலினிஸ்டுகளின் சங்கடத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அரசாங்கத்திற்கும் அதன் இடதுசாரி நண்பர்களுக்குமிடையே நெருக்கமான ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டுமென்று கூறுகின்றனர். மக்களை கவரும் பல்வேறு முழக்கங்களை வெளியிடுகின்றனர். என்றாலும் அரசாங்கத்தின் நடவடிக்கை வலதுசாரி போக்கிலேயே நீடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த விஷயம் சற்று வேறுபட்டது

வாஷிங்டனுடன் இந்தியாவில் உறவு குறித்து சிபிஎம்-மிற்கு அரசாங்கத்துடன் பெரிய வேறுபாடுகள் எதுவும் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்று மன் மோகன் சிங் கூறினார்: ''எங்களது வார்த்தைகள் பிரயோகம் வேறுபட்டதாக இருக்கக்கூடும். ஆனால் இந்த உலகில் உண்மையான நிலவரங்களை நாம் பார்க்கவேண்டும். சர்வதேச உறவுகள் இறுதியாகப் பார்க்கும்போது அதிகார உறவுகள்தான் மற்றும் நாம் இன்றைய தினம் வாழ்ந்து கொண்டிருப்பது அதிகாரம் சமச்சீர் நிலையில் இல்லாத உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலவரத்தின் உண்மையான நிலைப்பாடுகளை நாம் புறக்கணித்துவிட முடியாது. நமது நலன்களை வளர்ப்பதற்காக கிடைக்கின்ற சர்வதேச கட்டுக்கோப்பை நாம் பயன்படுத்தியாக வேண்டும் எனவே அமெரிக்காவோடு நாம் உறவு வைத்துக்கொள்வது ஒரு அவசியமாகும்''

சிங்கின் வழக்கத்திற்கு மாறானவகையில் பாராட்டுக் கடிதம் புஷ்ஷிற்கு அனுப்பப்பட்டாலும், அவரும் அவரது அரசாங்கமும் மற்றும் இந்திய மேல்தட்டினரும் தங்களது பூகோள அரசியல் நலன்கள் எப்போதுமே வாஷிங்டனின் பூகோள அரசியல் நலன்களோடு ஒட்டிப்போகவில்லை அப்படி நடக்கப்போவதுமில்லை என்று உணர்ந்துள்ளனர்.

இந்திய பத்திரிக்கைகளில் ரஷ்யாவுடன் பாரம்பரியமாக நிலவுகின்ற உறவுகளை இந்தியா புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென்று பெருமளவிற்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கு இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தவுடன் அப்போது BJP- தலைமையிலான இந்திய அரசாங்கம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவுகின்ற நீண்ட கருத்துவேறுபாடுகளை நீக்குவதற்கு முயன்றது. காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் பெய்ஜிங்குடன் நெருக்கமான தூதரக மற்றும் பொருளாதார உறவுகளை நிலைநாட்டுவதை ஒரு முன்னுரிமை நடவடிக்கையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கா வென்றெடுத்தபின்னர் இந்தியா, ஈரானுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துவருகிறது. இந்த மாத ஆரம்பத்தில் உரையாற்றிய சிங், ஈரானின் அணு திட்டங்கள் தொடர்பான சர்வதேச சர்ச்சை ''ஈரானுக்கும் IAEA விற்கும் (சர்வதேச அணுசக்தி ஏஜென்சி) இடையிலான கலந்துரையாடல் என்ற கட்டுக்கோப்பிற்கு தீர்த்துக்கொள்ள முடியுமென்று'' இந்தியா நம்புவதாகவும் மற்றும் அதை ''மித மிஞ்சிய வகையில் அரசியல் ஆக்கிவிடக்கூடாது'' என்றும் வலியுறுத்திக் கூறினார்.

இந்திய -ஐரோப்பிய யூனியன் ஐந்தாவது உச்சி மாநாடு சென்றவாரம் நடைபெற்றது. அதில் சிங் கலந்து கொண்டார், இரண்டுதரப்பும் ஒரு "மூலோபாய பங்காளி" ஒப்பந்தம் உருவாக்கிக் கொள்வதை பிரகடனப்படுத்துவதோடு அந்த உச்சி மாநாடு முடிவுற்றது. இருதரப்பு உறவுகளை பெருக்குவதற்கான உத்தேச திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும், ஐரோப்பிய ஒன்றியத்தின் Galileo global positioning system-ல் பங்கெடுத்துக்கொள்ள உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிட சம்மதிக்கப்பட்டது. இதன் பொருள் என்னவென்றால் தற்போது அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் Navstar/Global Positioning System.சர்வதேச தகவல் தொடர்பு முறைக்கு அது ஒரு மாற்றாகும். வாஷிங்டனுக்கு வருத்த மூட்டுகிற வகையில் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே Gallileo வில் சீனா பங்கெடுத்துக்கொள்ளவதற்கு சம்மதத்தைப் பெற்றுவிட்டது.

ஐரோப்பிய விஜயத்தின் போது பிரெஞ்சு ஜானதிபதி சிராக் ''பன்முகப் போக்குடைய உலகம்" ' உருவாக்கப்பட வேண்டும் என்று விடுத்திருக்கும் அழைப்பு குறித்து சிங்கிடம் கேட்கப்பட்டது. அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் இடையில் பெருகிவரும் மோதல் தொடர்பான விவாதத்திற்குள் பங்கெடுத்துக்கொள்வதை சிங் தவிர்க்க முயன்றார், என்றாலும் இந்தியா ஒரு பெரிய பிராந்திய வல்லரசு அந்தஸ்து வழங்கப்படுகின்ற நிலைக்குவர வேண்டுமென்ற இந்திய மேல்தட்டினரின் அபிலாஷைகளை வெளிப்படுத்தினார். மற்றும் வாஷிங்டன் ஒருதலைப்பட்ச போக்கிற்கு திரும்புதலுக்கு இந்திய மேல்தட்டினரின் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் விதமாக பன்முகப் போக்கு என்பதற்கு மாறாக "பன்முகத்தன்மை" பற்றி பேசவே தாம் விரும்புவதாக அறிவித்தார்.

Top of page