World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

US dollar slide increases global tensions

அமெரிக்க டாலரின் சரிவு உலகளாவிய பதட்டங்களை அதிகரித்துள்ளது

By Nick Beams
18 November 2004

Use this version to print | Send this link by email | Email the author

இந்த வாரக் கடைசியில் Group 20 ன் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பில் அண்மையில் ஏற்பட்ட கடும் சரிவும் உலகப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டை ஒட்டிய அதன் உட்குறிப்பும் என்பதுதான் விவாதத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். யூரோவுடன் ஒப்பிடுகையில் டாலர் இப்பொழுது 1.30 குறைந்து, புஷ் அதிகாரத்திற்கு வந்தபின் 30 சதவிகிதக் குறைவு என்பதுடன் இது $1.50 ஆகக் கூடக் குறையலாம் என்ற ஊகமும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் G7 மற்றும் சீனா, ரஷியா, கொரியா, துருக்கி போன்ற பல நாடுகளின் நிதி அமைச்சர்களும் அடங்கியுள்ள ஏனைய நாடுகளின் அமைச்சர்களின் கூட்டத்தில் எந்த உடன்பாடும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

அமெரிக்காவிற்கும் "பழைய ஐரோப்பா" என்று அழைக்கப்படும், குறிப்பாகப் பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் இடையேதான் முக்கிய பிளவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான ஜீன்-கிளாடு ட்ரைக்ட், சமீபத்திய நாணய மாற்றங்களை "மிருகத்தனமானது" என்று குறிப்பிட்டதுடன், முக்கிய மத்திய வங்கிகளுக்கிடையே ஒருங்கிணைந்த முறையிலான ஒரு தலையீடு கொள்ளப்படவேண்டும் என்றும் கூறினார். ஆனால் அமெரிக்காவோ, சமீபத்திய நாணயச்சந்தை மாறுதல்களை மிக அதிகமானவை என்று கருதவில்லை; Financial Times க்கு ஒரு கருவூல அதிகாரி சந்தைகள் "திறம்படச் செயலாற்றுகின்றன" என்றும் "மிகப் பெரிய வகையிலான ஒழுங்குகளை" வெளிப்படுத்தியுள்ளன என்றும் கூறியிருக்கிறார்.

டாலருடைய மதிப்பின் சரிவு, ஏற்றுமதிச் சந்தைகளுக்கு ஒரு பெரிய ஆபத்து என்றும் அதையொட்டி ஐரோப்பிய வளர்ச்சியின் வாய்ப்புக்களுக்கும் பாதிப்பு இருக்கும் என்று யூரோப்பகுதியில் உள்ள பெரிய நாடுகள் கருத்தைக் கொண்டுள்ளன. புஷ் நிர்வாகம் வரலாறு காணாத அளவு பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டத்தில் நிர்வாகத்தை நடத்தியது டாலரின் சரிவில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று ஐரோப்பிய அரசாங்கங்கள் உறுதியாகக் கருதுகின்றன.

வார இதழான Der Spiegel க்குக் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், ஜேர்மனியின் துணை நிதியமைச்சர் Caoi Koch Weser, அமெரிக்க வணிக, பொதுப்பற்றாக்குறை வரவுசெலவுத் திட்டங்கள் "சந்தைகளை உறுதிகுலைக்கும் தன்மையை" கொண்டிருக்கின்றன என்றும், "தொடர்ந்து, இடைக்கால முறையில் வரவுசெலவுத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டியற்கான" நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். புஷ் நிர்வாகத்தின் வரிக்குறைப்புக்களை குறைகூறிய அவர், அவை மிகவும் கூடுதலான முறையில் செல்வந்தர்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்றும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஏதும் செய்யவில்லை என்றும் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை மோசமாக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் நிதி அமைச்சரான நிக்கோலா சார்கோசி இதேபோன்ற கருத்துக்களைத் தெரிவித்து, தன்னுடைய பற்றாக்குறைகளை அமெரிக்கா குறைத்துக் கொண்டால்தான் டாலரின்மீது மீண்டும் நம்பிக்கையைச் சந்தைகள் கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்தார். "ஐரோப்பியர்களிடம் இருந்தும், சர்வதேச நிதியக் குழுவில் இருந்தும் அமெரிக்காவிற்கு ஒருமித்த உணர்வுடன் நாங்கள் விடுக்கும் செய்தி இதுதான்." என்றார் அவர்.

ஆனால் புஷ் நிர்வாகம் இக்குறைகூறல்களைப் பொருட்படுத்தவே செய்யாது. இந்த வார இறுதிக் கூட்டத்திற்கு முன் பல ஐரோப்பியத் தலைநகரங்களுக்கு விஜயம் செய்து கொண்டிருக்கும் கருவூலச் செயலர் ஜான் ஸ்நோவின் கருத்தின்படி, அமெரிக்க வரவுசெலவுத் திட்டப் பற்றாக் குறைகள் பிரச்சனை அல்ல என்றும் ஐரோப்பியப் பொருளாதாரத்தில் வளர்ச்சிக் குறைவு இருப்பதுதான் பிரச்சினைக்கு காரணம் என கூற்ப்பட்டுள்ளது. ஸ்நோவின் புறப்பாட்டிற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு கருவூல அதிகாரி டாலர் மீதான அழுத்தங்களுக்கான காரணங்களுள் ஒன்று அமெரிக்க வர்த்தகப் பங்காளர் நாடுகளில் தரத்திற்கும் குறைவான வளரச்சி இருப்பதுதான் என்று கூறினார்.

"மற்ற நாடுகளைவிட அமெரிக்கா கூடுதலான முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது என்றால், அமெரிக்காவில் இருந்து ஏற்றமதிகள் இருக்கவேண்டியதைவிடக் குறைவான வளரச்சியில் இருக்கிறது என்று பொருள் ஆகும். ஜேர்மனியிலோ, மற்ற நாடுகளிலோ விரைவான, அதிகமான வளர்ச்சி எதிர்பார்த்தபடி இல்லை என்றால் அது எங்கள் ஏற்றுமதிக்கு நன்மைகள் கொடுத்து வணிகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும் உதவும்."

அவ்வதிகாரி சீனா அதிகமாக வளைந்து கொடுக்கக் கூடிய நாணயக் கொள்கைகளை ஏற்பதற்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என்றார்; அப்பொழுதுதான் யுவான் உயர்வைநோக்கி நகரும் என்றும் அது டாலர் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

ஆனால், இந்தக் கொள்கையளவு சீரமைப்பு முறைகள் தீர்வுகளைக் காண்பதற்குப் பதிலாக உலகப் பொருளாதாரத்தில் உள்ள முரண்பாட்டுத் தன்மைகளை உயர்த்திக் காட்டத்தான் உதவுகின்றன. பொருளாதார வளர்ச்சிதான் தீர்வுகாணச் சிறந்த முறை என்று கூறப்பட்டாலும், ஐரோப்பிய வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரம் ஏற்றுமதிச் சந்தையில் அது விரிவாக்கம் பெறுவதுதான் ஆகும்; அதுவோ அமெரிக்க டாலருக்கு போட்டியாக யூரோவின் மதிப்பு எப்படி உள்ளது என்பதைப் பொறுத்துதான் இருக்கும். வேறுவிதமாகக் கூறினால், இங்கு ஒரு தீய வட்டம்தான் செயல்படுகிறது. ஐரோப்பியப் பொருளாதாரத்தின் வளரச்சிக்கு டாலரின் மதிப்பு சீராகத் தக்க வைக்கப்படவேண்டும் என்பது ஒரு முக்கிய தேவையாகும்; ஆனால் டாலரின் உயர்மதிப்பு அமெரிக்க வணிகப் பற்றாக் குறையை அதிகப்படுத்தி, உலகளாவிய முறையில் நிதிச் சமசீரற்ற தன்மையை மோசமாக்கிவிடும்.

இதேபோல், யுவான் மற்றும் ஆசிய நாணயங்களில் கூடுதலான நெகிழ்ச்சித்தன்மை ஏற்பட்டால், அதிலும் ஆபத்துக்கள் வரக்கூடும் என்று இப்பொழுது கண்டறியப் பட்டுள்ளது. ஏனெனில் ஆசிய மத்திய வங்கிகள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைச் செலவழித்து அமெரிக்க நிதியச் சொத்துக்களை வாங்கியிருக்கின்றன; அவர்களுடைய நாணயங்கள் அமெரிக்க டாலரைவிடத் தாழ்ந்த மதிப்பு இருக்கவேண்டும் என்ற கருத்தில் இது செய்யப்படுகிறது; அப்பொழுதுதான் அவர்களுடைய ஏற்றுமதி அமெரிக்கச் சந்தையில் போட்டியிட்டு நிற்க இயலும்.

கடந்த ஆண்டு இறுதியில் ஆசிய வங்கிகள், வெளிநாட்டு நாணய இருப்புக்களை $1.89 டிரில்லியன் டாலர்கள் அளவிற்குக் கொண்டுள்ளதோடு, அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க டாலர் வடிவத்தில் இருக்கிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய நாணயங்கள் மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டால், இந்த இருப்புக்களில் மிகக் கணிசமான இழப்புக்கள் ஏற்படும். நியூ யோர்க் கூட்டரசு இருப்பு வங்கிக் கணிப்புக்களின் படி, யுவானின் மதிப்பு 10 சதவிகிதம் டாலருக்கு எதிராக உயர்ந்தது என்றால், சீனா தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3 சதவிகித இழப்பிற்குச் சமமான மூலதன நஷ்டத்தைக் கொண்டு விடும். இதேபோல் 10 சதவிகித உயர்வு ஏற்பட்டால் தென் கொரியாவிற்கும் அதே அளவு இழப்பு ஏற்படும். மற்ற நாடுகளின் பொருளாதாரங்களைப் பொறுத்தவரையில் அதிரடி நஷ்டம் இன்னும் கூடுதலாக இருக்கும். சிங்கப்பூருக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகித இழப்பும் தைவானுக்கு 8 சதவிகித இழப்பும் ஏற்படும்.

இந்தக் கணக்குகளைப் பற்றி கருத்துத் தெரிவித்து Economist குறிப்பிடுவதாவது: "அத்தகைய மதிப்புயர்வைத் தவிர்ப்பதற்கு, ஆசிய மத்திய வங்கிகள் மிகப் பெரிய அளவில் டாலர் இருப்புக்களைச் சேமிக்க/சேகரிக்க வேண்டும். ஆனால் அது இன்னும் கூடுதலான மூலதன இழப்புக்களுக்குட்படுத்தி சரிவுப் பாதையில் செலுத்தும். இதற்கு மாற்றுவகையில், யூரோ போன்ற சேமிப்பு நாணயங்களுக்கு திருப்புவதன் மூலம், டாலர் சரிவின் விளைவுகளைத் தவிர்ப்பதை நாடுவர். ஆனால் அது இன்னும் விரைவாக டாலரை விரைவில் பெரும் வீழ்ச்சிக்கே இட்டுச்செல்லும். வேறுவிதமாகக் கூறினால், ஆசிய மத்திய வங்கிகள் ஒரு இக்கட்டான சங்கடத்தில் உள்ளன; அவைகள் டாலருடைய சரிவைத் தடுத்து நிறுத்த முற்பட்டாலோ, அல்லது அதன் சரிவில் இருந்து தப்பிக்க முற்பட்டாலோ, எவ்விதத்திலும் ஆபத்தை எதிர் கொள்ள நேரிடும்."

உலக நிதி முறையில் பெருகும் ஆபத்துக்களைப் பற்றிய வளரும் கவலை, மிகக் கூடுதலான முறையில் டாலர்மீது வைத்துள்ள நம்பிக்கையினால் வந்துள்ளது என்பது ஜப்பான் வங்கியின் கவர்னர் Toshihiko Fukui, கடந்த வாரம் நிகழ்த்திய முக்கிய உரை ஒன்றில் பிரதிபலிக்கிறது.

டோக்கியோவில், "யூரோ: ஐந்து ஆண்டுகள் செயல்பாடு--ஆசியாவிற்கான அதன் உட்குறிப்புக்கள்" என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அவர், அமெரிக்க டாலருக்கு எதிராகத் தெளிவான முறையில் ஒரு போட்டி நாணயம் எழுச்சியுற்றால், உலக நாணய முறைக்கு ஒரு திறவுகோல் போல் அது அமையுமானால், உலக நிதி முறையை உறுதிநிலைப்படுத்தும் விளைவை அது ஏற்படுத்தும்."

புக்கூய் இந்த அரங்கத்தில் மேலும் கூறியதாவது: யூரோ வெளிவந்ததில் இருந்தே அதன் முக்கியத்துவம் மிகக்கணிசமாக அதிகரித்துள்ளது. 50 நாடுகளுக்கும் மேலாகத் தங்களுடைய நாணயங்களை யூரோவுடன் இணைத்துக் கொண்டுள்ளன; இது மொத்த வெளிநாட்டு நாணய இருப்புக்களில் 20 சதவிகிதம் என்பதோடு, எல்லை கடந்த பத்திரங்கள், யூரோ ஆதிக்கத்திற்குட்பட்டவற்றில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கும் ஆகும். அமெரிக்காவைப் பற்றி இழையோடும் வகையில் குறிப்பிட்ட அவர் எந்த ஒரு நாட்டின் நாணயமும் உலக வணிகத்தை ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டால் அதில் இருந்து விளையும் ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டினார்.

அத்தகைய நிலைமையில் முக்கிய நாணயமுடைய நாட்டின் அரசாங்கம் "வெகு எளிதில் தன்னுடைய பொருளாதாரக் கொள்கையை உள்நாட்டு நலன்களைக் கருத்திற்கொண்டு கவனத்தை ஒருமுகப்படுத்தும்" என்றார் அவர்.

"இன்றைய உலகந்தழுவிய பொருளாதார முறையில், இது தேவையற்ற குமிழ் விளைவுகளை உலகில் மற்ற பகுதிகளில் முக்கிய நாணயத்தின் வெளிமதிபின் ஏற்ற இறக்கங்கள் மூலம் ஏற்படுத்திவிடும்." இரண்டு போட்டியிடும் நாணயங்கள் இருந்தால், "அவற்றிற்கிடையே உள்ள போட்டி கூடுதலான கவனத்தை முக்கிய நாணயங்களின் வெளிமதிப்பிற்குக் காட்ட வைக்க வகை செய்யும்." இத்தகைய நிலைமைதான் "உலக நிதி முறையில் உறுதிப் பாட்டைக் கொண்டுவருவதற்கு நல்ல விளைவுகளைக் கொடுக்கும்."

இத்தகைய கருத்துக்கள் புஷ் நிர்வாகத்தால் வரவேற்கப்பட மாட்டா; ஏனெனில் ஐரோப்பியர்களின் கலக்கத்துடன் சேர்ந்து, அவை உண்மையை எடுத்துரைக்கின்றன; அதாவது பெரிய முதலாளித்துவ நாடுகள் டாலரின் பங்கை, உலக நாணயங்களில் பெரியது என்ற முறையில் அது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய நலன்களைக் கொடுக்கிறது என்பதை அதிருப்தியுடன்தான் கருதுகின்றனர் என்றும் அவற்றையொட்டி அவை புதிய மாற்று முறைகளின் வளர்ச்சிக்கு வகை செய்யலாம் என்பதும் புலனாகும்.

அத்தகைய மாற்றத்திற்கான சிந்தனை அயல்நாட்டுக் கொள்கைகள் பற்றிய பூசல்களால் ஊக்கம் பெறலாம். தேர்தல் முடிந்த இரண்டு வாரங்களுக்குள், இரண்டாம் புஷ் நிர்வாகம் ஐரோப்பாவுடன் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்திய தன்னுடைய ஒருதலைப்பட்ச அயல்நாட்டுக் கொள்கைப் போக்கைத் தீவிரப்படுத்தும் என்பது தெளிவாகிவிட்டது. அதாவது தூதரக, மற்ற முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் பொருளாதார நடவடிக்கைகள் பயன்படுத்தப்படலாம் என்று பொருளாகும்.

தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய முதலாம் செய்தியாளர் கூட்டத்தில், புஷ், தான் தேர்தல் பிரச்சாரத்தில் "அரசியல் மூலதனத்தை" ஈட்டியுள்ளதாகவும், அதைச் செலவழிக்க நோக்கங்கொண்டிருப்பதாகவும் வலியுறுத்தினார். ஆனால் நாளொன்றுக்கு தன்னுடைய வணிக, பொதுப் பற்றாக்குறையைச் சமாளிக்க கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டாலர்கள் வரத்து இருக்கவேண்டும் என்ற நிலையிலும், 1 டிரில்லியன் டாலர்கள் கடனில், 92%, கடந்த நான்கு ஆண்டுகளில் அயல்நாட்டுக் கடன் கொடுப்போரால் கொடுக்கப்பட்டவை என்ற நிலையில், தன்னுடைய பொருளாதார மூலதனத்தை இவரால் நிரூபிக்க முடியுமா என்பது வேறு ஒரு கேள்வியாகும்.

Top of page