World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

SEP files challenge to place candidates on Ohio ballot

ஓகியோ வாக்குச்சீட்டில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் இடம்பெற ஆட்சேபனைகளுக்கு எதிராக நடவடிக்கை

By Jerry White
17 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஓகியோ தேர்தல் அதிகாரிகள் தனது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களை வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிடுவதற்கு மேற்கொண்ட முயற்சியை ஆட்சேபித்து சோசலிச சமத்துவக் கட்சி புதன் கிழமையன்று மாநில தேர்தல் அதிகாரியிடம் கவுன்டி அதிகாரிகள் சட்டபூர்வமான பதிவு செய்யப்பட்ட ஏறத்தாழ 4200- கையெழுத்துக்களை செல்லாது என்று அறிவித்திருப்பதை எதிர்த்து குறைந்த பட்சம் 1230- பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் சட்டப்படி செல்லுபடியாகும் வாக்காளர்கள்தான் என்பதை நிரூபித்தன.

SEP கடந்த பலநாட்களாக வாக்காளர்கள் பதிவேடுகளை பூர்வாங்கமாக விசாரணை செய்தது, ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்ட தேர்தல் வாரியம் -SEP வேட்பாளர்களுக்கு வாக்குப்பதிவு தகுதியை மறுப்பதற்கும், வாக்காளர்களது வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கும்- கடைப்பிடிக்கும் ஜனநாயக விரோத நேர்மையற்ற நடைமுறைகளை எடுத்துக்காட்டியது.

ஏற்கனவே கவுன்டி அதிகாரிகள் ஆட்சேபிக்காத 3,811- வாக்காளர்கள் கையெழுத்துக்களுடன் செல்லுபடியாகும் கையெழுத்துக்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ள கையெழுத்துக்களையும், சேர்த்துக்கொண்டால் நவம்பர் 2- தேர்தலில் பில்வான் ஒகெனும், ஜிம் லோரன்சும் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ள தேவைப்படும் 5,000- திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் இப்போது கிடைத்திருக்கின்றன.

ஓகியோ தேர்தல் அதிகாரிகளிடம் SEP தனது ஆட்சேபனைகளை தாக்கல் செய்த அதேநாளில் பெடரல் நீதிமன்றத்தில் பில்வான் ஒகெனையும், லோரன்சையும் வாக்குச்சீட்டில் சேர்த்துக்கொள்ள தேர்தல் அதிகாரியை கட்டாயப்படுத்தி கட்டளையிட வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.

SEP வேட்பாளர்களுக்கு வாக்குப்பதிவில் கலந்து கொள்ள தகுதியில்லை என்று மாநில தேர்தல் அதிகாரியான Kenneth Blackwell அளித்த முடிவின்படி புதன்கிழமை மாலை 5-மணிக்கு அல்லது அதற்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவேண்டும் என்ற நிபந்தனையை நிறைவேற்றுகின்ற வகையில், அந்தக்காலக்கெடுவிற்கு முன்னரே கொலம்பஸிலுள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் SEPன் பூர்வாங்க மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அலுவலக பிரதிநிதி ஒருவரின்படி, தேர்தல் அதிகாரிகள் குழு ஒன்று தாக்கல் செய்துள்ள சான்றுகளை உடனடியாக ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும்.

அன்றையதினமே புதன் கிழமையன்று, கொலம்பஸ்ஸிலுள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் SEP- சார்பில் ஒரு அட்டர்னி இடைக்கால தடை ஆணை கோருகின்ற மனு ஒன்றை தாக்கல் செய்தார். பில்வான் ஒகெனையும், ஜிம் லோரன்சையும் உடனடியாக வாக்குச்சீட்டில் பதிவு செய்ய வேண்டுமென்று கட்டளையிடுமாறு Black well- க்கு எதிராக அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓகியோ தேர்தல் வாரியத்தை மேற்பார்வையிடுகின்ற Black well-இன் அலுவலகம், வேட்பாளர்களின் அரசியல் சட்ட அடிப்படையிலான உரிமைகளை மீறுகின்ற வகையில் நியாயமற்ற நடைமுறை தடைக்கற்களை விதிக்கிறது மற்றும் செல்லாதென்று அறிவிக்கப்பட்ட வாக்காளர் அனைவரது மனுக்களையும் முழுமையாக ஆராய்வதை தடுக்கிறது என்று SEP தாக்கல் செய்துள்ள தீர்மான மனு வாதிடுகிறது.

ஓகியோவின் 60- கவுண்டிகளிலும் இருந்து வாக்காளர்கள் பதிவு தகவல்களைச் சேகரித்து 400-க்கு மேற்பட்ட வாக்காளர்களின் கையெழுத்துக்கள் அடங்கிய முழுப்பக்கங்களையும், ஒவ்வொரு வரியாக ஆராய்வதற்கு Black well- இன் அலுவலகம் SEP ஆய்வாளர்களுக்கு 6- நாள் அவகாசம் தந்திருப்பது இந்தத் தடைக்கற்களில் ஒன்று. தேர்தல் அலுவலகத்தின் முடிவிற்கே விட்டிருந்தால், SEP ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. செப்டம்பர் 9- பிற்பகல் ஓகியோ தேர்தல்கள் வாரிய அலுவலகத்திற்கு SEP பிரதிநிதி ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தபொழுதுதான் Black well- ன் முடிவு பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

புதன்கிழமை பிற்பகல் 4-மணி வரை ஜிம் லோரன்ஸின் வீட்டிற்கு Black well- அலுவலக அதிகாரபூர்வமான அறிவிப்பு வரவில்லை. 5-மணிக்கு முன்னர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வேண்டுமென்பதே அந்தக் கட்டளை!

வியாழன் காலை தொலைபேசியில் அமெரிக்க நீதிபதி Gregory Frost வழக்கை விசாரித்தார். SEP அட்டர்னியான Robert Newman தனது விவாதத்தில் இறுதிக்கெடுவும் இதர தடைக்கற்களும் காலாவதியாகிவிட்ட தவறுகள் நிறைந்த வாக்காளர் பதிவேடுகளை மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கியது உட்பட வாக்குப்பதிவை சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான நடைமுறையிலுள்ள தவறுகளை பட்டியலிடுவதற்கு போதுமான அவகாசமும் நியாயமான வாய்ப்பும் SEP-க்கு வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இரகசியமாக நடக்கவிருக்கும் அரசுத்துறை செயலாளர் மறுபரிசீலனை நடைமுறையை நியூமேன் ஆட்சேபித்தார். தனது வேட்பாளர்களுக்கு தடைவிதிக்கும் மாகாண தேர்தல் அதிகாரிகள் முடிவுகளை எதிர்த்து வாதிடுவதற்கு SEP-க்கு வாய்ப்பு எதுவுமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசுத்துறைச் செயலரின் அட்டர்னி ஜெனரல் Jim Petero இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கவில்லை, மாறாக ஓகியோவில் வாக்குப்பதிவு சட்டங்கள் "மிகக் கடுமையானவை அல்ல" என்று குறிப்பிட்டு SEP மீது அவதூறான ஒரு குற்றச்சாட்டையும் சொன்னார். கையெழுத்து தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயலாமல் நடுவண் நீதிபதி மூலம் கட்சியின் வேட்பாளர்களை வாக்குப்பதிவில் கலந்து கொள்ளச்செய்வதற்கு குறுக்குவழியில்" SEP முயன்று வருவதாகக் குற்றம்சாட்டினார்.

ஆரம்பம் முதலே SEP அனைத்து சட்டபூர்வமான நடைமுறைகளையும், கண்டிப்பாக நிறைவேற்றி வருகிறது. SEP மனுக்களை நடுநிலையோடு ஆராய்ந்து முடிவு செய்வதற்கு பதிலாக கட்சி வாக்குப் பதிவில் இடம்பெறச் செய்வதற்கு போதுமான வாக்காளர் ஆதரவு பெற்றிருக்கிறதா? என்பதை முடிவு செய்வதற்கு பதிலாக உள்ளூர் மற்றும் மாகாண தேர்தல் அதிகாரிகள் முடிந்தவரை பல வாக்காளர் கையெழுத்துக்களை நீக்கிவிடவும் அற்பமான நுட்ப அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் கையெழுத்துக்களை இரத்து செய்ய அல்லது எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் இரத்து செய்வது என்ற நடைமுறையை மேற்கொண்டிருக்கின்றனர்.

இப்படி அப்பட்டமாக ஓகியோ வாசிகளின் வாக்களிக்கும் உரிமை மீதான தாக்குதலுக்கு பின்னர் அரசுத்துறை செயலாளரின் அதிகாரபூர்வமான முத்திரையைக் குத்தி இருக்கிறார்கள்.

இடைக்கால தடை ஆணைகோரி நியூமேன் தாக்கல் செய்துள்ள மனுவில் 1980- ல் அமெரிக்க நீதிபதி Newell Edenfield சுயேட்சை வேட்பாளர் John Anderson தாக்கல் செய்திருந்த மனுக்களில் இருந்த பல்லாயிரக்கணக்கான வாக்காளர் கையெழுத்துக்கள் செல்லாதவை என்று முடிவு செய்யப்பட்ட பின்னர், ஜோர்ஜியா மாகாணத்தில் அவரை வாக்குப்பதிவில் சேர்த்துக் கொள்ளவேண்டுமென்று கட்டளையிட்டார். அந்த வழக்கில் ஜோர்ஜியா அதிகாரிகள் தந்த எட்டுநாள் காலக்கெடு Anderson நிரூபிப்பதற்கான சான்றை தாக்கல் செய்யும் சுமையை ஏற்றுவது, வேட்பாளரின் சட்டபூர்வமான நடைமுறை உரிமையை மீறுவதாகும் என்று தீர்ப்பளித்தார்.

இப்போது SEP அதைவிட சுமையான காலக்கெடுவை சந்திக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய அந்த மனு "அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று உறுதியளிக்கின்ற" இடைக்கால ஆணையை நீதிமன்றம் வழங்குவது, பொதுநலனைக் காப்பதாகும் என்றும், "இந்த மாகாண மக்கள் அரசியல் சட்ட முதலாவது திருத்தம் வழங்கியுள்ள வாக்களிக்கும் உரிமை தங்களது கருத்துக்களை எடுத்துவைக்கின்ற வேட்பாளர்களுக்கு அல்லது மாற்று அரசியல் கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை அனுமதிக்கிற வகையில்" தடை ஆணைபிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

''வாக்களிக்கும் உரிமையானது, நாம் மிக மதிப்புள்ளது என்று பேணிக்காக்கின்ற தலைசிறந்த சுதந்திர உரிமைகளில் ஒன்று, இந்த உரிமையை பொருத்தமற்ற எரிச்சல் ஊட்டுகின்ற கேள்விகளுக்கு அப்பால் நிலைநாட்டப்பட வேண்டும். ஒரு வாக்காளரது கையெழுத்து அச்சிடப்பட்டுள்ளதா அல்லது அந்த வாக்காளரது முகவரி, இதுவா அல்லது அதுவா, அல்லது 16- கையெழுத்துக்களுக்கு பதிலாக ஒரு பக்கத்தில் 15- அல்லது 17- கையெழுத்துக்கள் உள்ளனவா? என்ற அற்பமான பிரச்சனைகளுக்கெல்லாம் அப்பால் வாக்காளர்கள் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்'' என்று அந்த மனு கேட்டுக்கொண்டது.

அண்மையில் புஷ் நியமித்த நீதிபதி Frost, வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் அதிகாரி Black well க்கு, SEP பரிசீலனை முடிவுகள் அடங்கிய விவரத்துடன் SEP துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜிம் லோரன்ஸ் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் SEP மனுவில் கையெழுத்திட்டவர்களில் பாதிக்கும் குறைந்தவர்கள் வாக்களிப்பதற்காக பதிவு செய்துவந்தவர்கள் என்ற கூற்று மேலெழுந்த வாரியாகப்பார்க்கும்போதே அபத்தமானது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். 2000-ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்கும் பருவம் வந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 89- சதவீதம் ஆகும். 2004- தேர்தலில் இப்படி பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும் என்றால் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய வாக்காளர்களை பதிவு செய்யும் இயக்கங்களை நடத்தியுள்ளனர் என்பதையும் ஜிம் லோரன்ஸ் சுட்டிக்காட்டினார். மேலும் SEP மனுக்களில் கையெழுத்து வாங்கிய கவுண்டிகளில் -Cuyahoga (Cleveland), Franklin (Columbus), Lucas (Toledo), Montgomery (Dayton), Trumbull (Warren-Youngstown) மற்றும் Hamilton(Cincinnati)- ஆகியவற்றில் வாக்காளர் பதிவு மாகாண சராசரியைவிட அதிகம்தான் என்றும் லோரன்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருகிறார்.

மேலே கூறப்பட்டுள்ள கவுண்டிகளில் ஆட்சேபிக்கப்பட்ட கையெழுத்துக்களை பூர்வாங்கமாக ஆராய்ந்ததில், தள்ளுபடி செய்யப்பட்ட கையெழுத்துக்களில் 30- முதல் 40- சதவீதம் செல்லுபடியாகும் என்று SEP கண்டுபிடித்திருக்கிறது.

இப்படி ஒட்டுமொத்தமாக வாக்காளர்களை தள்ளுபடி செய்திருப்பதற்கு ஒரே ஏற்கத்தக்க விளக்கம் அரசியல் பாரபட்சமாகத்தான் இருக்க முடியும், பிரதானமாக ஜனநாயகக்கட்சி இதில் சம்மந்தப்பட்டிருக்கிறது. அக்கட்சி தனது தாக்குதல்களை புஷ் நிர்வாகத்தின் வலதுசாரி கொள்கைகள் மீது திருப்பிவிடவில்லை, ஆனால் அமெரிக்க பெரு வர்த்தக இரு பிரதான கட்சிகளின் அரசியல் ஏகபோகத்திற்கு சவால்விட முயலுகின்ற போர் எதிர்ப்பு வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை மற்றும் மூன்றாம் தரப்பு வேட்பாளர்கள் மீதும் தனது தாக்குதல் கணையைத் தொடுத்திருக்கிறது.

ஜனநாயகக் கட்சிக்காரர்களின் உடனடி தேர்தல் முயற்சிகளுக்கப்பால், அவர்கள் SEP-ஐ மட்டுமல்ல, ரால்ப் நாடெர் சுயேட்சையாக போட்டியிடுவதையும் திட்டமிட்டு மூன்றாம் தரப்புக்கட்சி வேட்பாளர்களை வாக்குச்சீட்டிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்களிடையே உருவாகியுள்ள பொதுக்கருத்தை பிரதிபலிக்கிறது மற்றும் ஊடகங்களும், கம்பெனி நிர்வாகக் கட்டுக்கோப்புக்களும், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் எந்த அரசியல் மாற்று தோன்றினாலும், அதை சட்டவிரோதமானது என்று கருதுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள ஆளும் மேல்தட்டினர், இரண்டு கட்சி கட்டுக்கோப்பிற்குள் எல்லா அரசியல் விவாதங்களும், நடவடிக்கைகளும் முடக்கி வைக்கப்படவேண்டுமென்ற பிற்போக்குத்தனமான வரையறைகளை நிலைநாட்டுவதில் அமெரிக்காவின் ஆளும் மேல்தட்டினர் உறுதிகொண்டிருக்கின்றனர்.

உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்த ஜிம் லோரன்ஸ் கூறினார்: ''SEP-ஐ வாக்குப்பதிவிலிருந்து நீக்கிவிடுவதற்கு நடத்தப்படுகின்ற பிரச்சாரம் முழுவதிலும் இருந்து தெளிவாக எதிரொலிப்பது என்னவென்றால் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிற்குமே உண்மையான ஆதரவு இல்லை என்பதுதான். தான்தோன்றித்தனமாக SEP- கையெழுத்துக்களை தள்ளுபடி செய்யும் முயற்சியில் தேர்தல் அதிகாரிகள் எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் பலரது கையெழுத்துக்களையும் தள்ளுபடி செய்துவிட்டார்கள். அவர்கள் கொடுத்திருக்கிற முகவரியில் வசிக்கவில்லை, அல்லது அவர்களது கையெழுத்துக்கள் சரியானவையல்ல ஏனெனில் அவை அச்சிடப்பட்டிருக்கின்றன என்று கூறிவிட்டார்கள்.

''இத்தகைய வழிமுறைகளில் SEP- க்கு வாக்குப்பதிவு தகுதியை மறுக்கின்ற முயற்சி குறித்து எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்களது கோபத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் உண்மையிலேயே பதிவு செய்யப்பட்ட வாக்காளர் தான் என்பதற்கு சட்டபூர்வமாக கையெழுத்திட்ட வாக்கு மூலங்களை தாக்கல் செய்திருக்கின்றனர். எனது சக கார் தொழிற்சாலை ஊழியர்கள் பலர் அதேபோன்று செய்திருக்கின்றனர். அப்பட்டமாக நியாயமற்ற வகையில் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்காவிட்டால், அத்தகைய நிபந்தனையை அரசு விதித்திருக்க வில்லையென்றால் மேலும் பலர் அத்தகைய வாக்கு மூலங்களைத் தாக்கல் செய்திருப்பர்.

''ஏழை தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் அடிக்கடி தங்களது முகவரிகளை மாற்றுகின்ற கட்டாயத்திற்கு உள்ளாவர். அவர்களை தண்டிக்கிறவகையில் முதலாளித்துவம் மிகத்துயரமான நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை முறைகள் பழைய தென்மாநிலங்களில் கருப்பர்கள் வாக்குப்பதிவில் கலந்து கொள்ளாது தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு வரி மற்றும் கல்வியறிவுச் சோதனை முறைகளை நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது. இன்றைய தினம் உழைக்கும் மக்களது வாக்குரிமையை பறிப்பதற்கு அதே முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கெர்ரி, புஷ்ஷிற்கு உண்மையான மாற்றல்ல என்பதை அறிந்து கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு போராடும் ஒரு கட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கண்ணியமான வேலைவாய்ப்பு, ஊதியம் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் இவற்றுக்காக -அடிப்படைத் தேவைக்காக போராடும் கட்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''

WSWS- அனைத்து வாசகர்களையும், ஜனநாயக உரிமைகளை ஆதரிக்கின்ற அனைவரையும் SEP கேட்டுக்கொள்வது என்னவென்றால் அவர்கள் அனைவரும் பில்வான் ஒகெனையும், ஜிம் லோரன்சையும் மாநிலம் முழுவதிலும் வாக்குச்சீட்டில் இடம்பெறச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓகியோ அரசுத்துறை செயலாளர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம். எதிர்ப்புச் செய்திகளைக் கொண்ட மின் அஞ்சல்களை பின்வரும் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

Kenneth Blackwell
Ohio Secretary of State
election@sos.state.oh.us

தயவு செய்து அந்தப்பிரதிகளை WSWS ஆசிரியருக்கு அனுப்பவும்.

editor@wsws.org

Top of page