World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

The ideology and politics of the Australian Greens

ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியினரின் கருத்தியலும் அரசியலும்

பகுதி 1 | பகுதி 2

By Nick Beams, SEP candidate for the Senate in NSW
16 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

இது இரு கட்டுரைத் தொடரின் முதற்பகுதியாகும்

அண்மைக் காலத்தில் ஆஸ்திரேலிய அரசியல் நிலைமையில் மிகவும் குறிப்பிடத்தக்க மாறுதல்களில் ஒன்று பசுமைக் கட்சியினருக்கு ஆதரவு விரைவாகப் பெருகியுள்ளது என்பதாகும். கருத்துக் கணிப்பில் இப்பொழுது பசுமைக்கட்சியினர் கிட்டத்தட்ட 10 சதவிகித வாக்குகளைப் பெறுவதோடு, செனட் மன்றத்தில் பல இடங்களைக் கைப்பற்றும் வாய்ப்பையும், அத்துடன் கீழ்மன்றத்தில் சில இடங்களைப் பெறும் வாய்ப்பையும் கொண்டுள்ளனர்.

தேர்தல் புள்ளிவிவரங்களைக் காட்டிலும் கூடுதலான முக்கியத்துவம் வாய்ந்த உண்மை, ஈராக் போருக்கு எதிராக பெப்ருவரி 2003இல் மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாகும். ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய இவ்வார்ப்பாட்டங்கள் நிகழ்ந்தபோது தொழிற்கட்சித் தலைவர்கள் முற்றிலும் பங்கு பெறாதபோது பசுமைக்கட்சியின் பிரதிநிதிகள் மேடைகளில் முக்கியமானவர்களாக இருந்தனர்.

பசுமைகளுக்கான இந்த ஆதரவின் வளர்ச்சி இரண்டு போக்குகளில் விளைவு ஆகும்: தொழிற்கட்சியினரின் நீண்ட கால ஆதரவாளர்களில் பல குறிப்பிடத்தக்க பிரிவினர் அதனிடம் விரோதமடைந்துள்ளதும், முழு அரசியல் அமைப்பிலும் இருந்தும் பாரியளவான இளைஞர்கள் பிரிவினர் அந்நியப்பட்டுள்ளமையுமாகும். கடந்த ஆண்டுகளில், சமூக நீதியின் உயர்சிந்தனைகளுக்கு மதிப்பளிந்திருந்த மாணவர்கள், இஞைர்கள் ஆகியோரின் விசுவாசத்தை தொழிற்கட்சி கட்டுப்படுத்திக்கொண்டிருந்தது. இப்பொழுது அவ்வாறு இல்லை. இப்பொழுது பசுமைகளின் முகாமில் நுழையும் சிறு பிரிவு இளைஞர்கள் பெரும் சிந்தைனையால் உந்துதலால் அல்லாது, பாராளுமன்ற பதவிகள், அல்லது கட்சியில் அல்லது தொழிற்சங்க அமைப்புகளில் ஏதாவது ஒரு அந்தஸ்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற கருத்தினாலாகும்.

ஈராக்கியப் படையெடுப்பு, காலனித்துவத்திற்கு திரும்புதல், சுற்றுச் சூழல் பேரழிவுகள், சமுதாய நலன்கள், சுகாதாரம், கல்வி இவற்றின் மீதான தாக்குதல் என்ற சில மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள பெருகிவரும் நெருக்கடிகளின் விளைவாக, பசுமைக்கட்சியினர் தங்களை பெரிய கட்சிகளுக்கு ஒரு மாற்று என்றும், இன்னும் கூடுதலான மனிதாபிமானமுடைய ஒரு சமுதாயத்தை வழிவகுக்கக் கூடியவர்கள் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுடைய வரலாற்றையும் வேலைத்திட்டங்களை படித்தால், அவர்கள் இருக்கும் அரசியல் முறைக்கு ஒரு மாற்று என்பதற்குப் பதிலாக, இதைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளில் முக்கிய பங்கு கொண்டிருந்தது தெரியவரும். ஓர் அரசியல் பாதுகாப்புக் கருவிபோல் செயல்பட்டு, அரசியல் அமைப்பிலிருந்து அந்நியப்படும் தன்மையை வெறும் எதிர்ப்பு காட்டுவதுடன் மட்டும் நிறுத்தி வைப்பதற்குத்தான் முயலுகிறார்கள் என்பதும், இப்பொழுதுள்ள அமைப்பிற்கான அடிப்படைக் காரணங்களைப் பற்றியோ, உண்மையான மாற்றத்திற்கான தேவைகளைப் பற்றி ஆய்வதைப் பற்றியோ கவலைப் படவில்லை என்பதும் தெளிவாகும்.

இந்நிலைப்பாட்டில் எவருக்கேனும் சந்தேகம் இருக்குமானால், பசுமைகளின் தலைவர் பொப் பிரெளன், தேசிய ஊடக அமைப்பிற்கு செப்டம்பர் 8 அன்று நிகழ்த்திய உரையைப் பரிசீலித்தாலே போதும். அவர் எதைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதனால்தான் இந்த உரை முக்கியமானது. செலவுத்தொகை ஒருபுறம் இருக்க, இப்பணம் வேறு சமுதாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது பற்றி போகிற போக்கில் கூறிய கருத்தைத் தவிர ஈராக் போர் பற்றியோ, அந்நாட்டின் ஆக்கிரமிப்பு பற்றியோ, பிரெளன் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பசுமைகளுக்கான சமீபத்திய பெருகிய ஆதரவு அவர்கள் போரை எதிர்க்கிறார்கள் என்ற பார்வையில் இருந்து வெளிவருவதால், இது வழமைக்குமாறான ஒரு தவிர்ப்பு ஆகும். ஆனால் இவ்வாறு ஏன் நிகழ்ந்தது என்பது அவர்களுடைய வேலைத்திட்டத்தை ஆராய்ந்தால் தெளிவாகும்.

போரைப் பற்றி பசுமைகளின் எதிர்ப்பு எப்பொழுதுமே கொள்கையளவில் இராமல், தந்திரோபாய முறையில்தான் இருந்திருக்கிறது. இது ஒரு ஏகாதிபத்தியப் கொள்ளைப்போர் என்பது அவர்களுடைய எதிர்ப்பிற்கு முக்கிய காரணமாக இல்லாமல், ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியின் கீழ் இது நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவதில்தான் இருக்கிறது. போரெதிர்ப்பு கூட்டங்களில் பலமுறையும் பிரெளன், ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் தொடர்ந்திருந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். "நம்முடைய பிராந்தியத்தில்" நல்ல முறையில் ஆஸ்திரேலியப் படைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர் வாதிட்டுள்ளார். ஈராக் போரை இந்த அடிப்படையில் எதிர்த்து, ஹோவர்ட் அரசாங்கம் ஒரு நவீன காலனித்துவ தலையீட்டை 2003 ஜுன் மாதம் சாலோமன் தீவுகளின் ஆஸ்திரேலியப் படைகள் மேற்கொண்டிருந்த தலையீட்டிற்கு, பிரெளன் முழு ஆதரவையும் கொடுத்ததில் வியப்பு ஏதும் இல்லை. இன்னும் முன்கூட்டியே ஏதேனும் இவ்விதத்தில் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்றுதான் அவர் வலியுறுத்தினார்.

ஈராக்கிற்கு எதிரான போர் தவறு என்று பிரெளன் இன்னும் கூறுகிறார் என்றாலும், படையெடுப்பு நடந்த 18 மாதங்களுக்குப் பிறகு நிலைமையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா. சபை இப்பொழுது அதிகாரபூர்வமாக, அமெரிக்கா ஏற்படுத்தியுள்ள அல்லாவி ஆட்சிக்கு ஆதரவைக் கொடுத்துள்ளது. பசுமைகளின் வெளிநாட்டுக் கொள்கையின் மையத்தானமாக இருக்கும் ஐ.நா.விற்கான ஆரவு என்பது இந்த ஆக்கிரமிப்பிற்கு அக்கட்சி ஒப்புதல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது. ஆனால் அவ்வாறு செய்தால் இதன் ஆதரவாளர்கள் பலருடைய எதிர்ப்பையும் தூண்டிவிடும்; ஏனெனில் ஐ.நா. அமெரிக்காவின் கொள்ளை முறை, சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு ஓர் மறைப்பைத் தான் கொடுக்கிறது என்று அவர்களில் பெரும்பாலானவர்கள் சரியாகவே கணித்துள்ளனர்.

ஈராக்கில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை எதிர்ப்பது என்பது ஐ.நா.வின் பங்கு பற்றி கேள்வி எழுப்புவதற்கு ஒப்பானதாகும். பசுமைகளுடைய வெளிநாட்டு கொள்கையின் மையத்தானமாக உள்ள கட்டுக் கதையான, ஐ.நாடுகள் சபை சமாதானம், உறுதித்தன்மை போன்றவற்றை பாதுகாத்து வருகிறது என்பதற்குப் பதிலாக, அது உண்மையில் பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் செயலை ஏற்கும் அமைப்பு போல் விளங்குகிறது என்பதுதான் தெளிவாகத் தெரியும். இந்த அரசியல் சிக்கலை எதிர்கொள்ளும் பிரெளன் எதைப் பற்றியும் பேசாமல் இருத்தலே சிறந்தது என்ற முடிவிற்கு வந்து விட்டார்.

தாஸ்மேனியப் படிப்பினைகள்

ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிலைமைய காக்க வேண்டியதில் பசுமைகள் கொண்டுள்ள பங்கு பற்றிய பிரெளனின் கருத்துக்களும் பலவற்றை வெளிப்படுத்துகின்றன.

பசுமைகளின் எழுச்சி இருகட்சி பாராளுமன்ற முறையின் உறுதித் தன்மையைக் கலைத்துவிடக் கூடும் என்பதுதான் ஆளும்வட்டாரங்களில் உள்ள கவலையாகும். எனவேதான், பசுமைகளுடைய செனட் உறுப்பினர்கள் பெருகலாம் என்ற எதிர்பார்ப்புடன் பிரெளன் செய்யப் போவதைப் பற்றி அவர் உரையாற்றிய பின்னர் கேட்கப்பட்ட முதல் கேள்வி" செனட் மன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு வழிவகை செய்வீர்களா அல்லது கடந்த எட்டு ஆண்டுகளாக தடைசெய்துகொண்டிருக்கும் போக்கைக் கைவிடுவீர்களா" என்பதாகும்.

1989 ல் இருந்து 1992 வரை தாஸ்மேனியப் மாநிலபாராளுமன்றத்தில் அவருடைய அனுபவங்களை, தொழிற்கட்சி-பசுமைக்கட்சி உடன்பாடு மாநில தொழிற்கட்சி அரசாங்கத்தை அதிகாரத்தில் தக்க வைக்கும் பொறுப்பைக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்து, பிரெளன், அத்தகைய மற்றும் ஒரு உடன்பாட்டிற்கும் அவர் கூட்டரசு நிலையில் தயாராக இருப்பார் என்றும், அது இரு பெரிய கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் வேண்டுமானாலும், அத்தகைய உடன்பாட்டைக் கொள்ளத்தயாரென்றும் வாதிட்டார்.

"தாஸ்மேனியாவில் தொழிற்கட்சி-பசுமைக் கட்சி உடன்பாட்டின் போது நான் கலந்துகொண்டேன். ...தாராளவாதிகள், தொழிற்கட்சி இருவருடனும், காலை, நண்பகல், இரவு என்று தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நாங்கள் நடத்தினோம்; இறுதியில் தாராளவாதிகள் பின்வாங்கிவிட்டனர், நாங்கள் தொழிற்கட்சியுடன் உடன்பாட்டைக் கொண்டோம்." என்று அவர் கூறினார். உடன்படிக்கையை ஒட்டி தொடர்ந்த பேச்சுவார்த்தைகளும் சில கருத்து வேறுபாடுகளும் இருந்தபோதிலும், உடன்பாட்டின் முக்கியத் தொகுப்பு பசுமைகள் தொழிற்கட்சியுடைய வரவுசெலவுத்திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்திருந்ததும், நம்பிக்கைவாக்கெடுப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவைக் கொடுத்திருந்ததும் ஆகும்.

"தாராளவாதகட்சியின் கிரே அரசாங்கம் $100 மில்லியன் பற்றாக் குறையை விட்டுச் சென்றதை நாங்கள் கண்டோம். எனவே பல மோசமான வரவுசெலவுத்திட்ட வெட்டுக்கள் செய்யப்பட்டன. எங்களுடைய அலுவலகத்திற்கு வெளியே கூட பசுமைகளின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கடுமையான சீற்றம் நிறைந்திருந்த பொதுக் கூட்டங்களிலும் நாங்கள் பங்கு பெற்றோம், ஆனால் பசுமைகளின் வழியைக் கடைப்பிடித்துத்தான் இருந்தோம்" என்று பெருமிதத்துடன் பிரெளன் அறிவித்தார்.

ஆளும்தட்டினருக்கு இதன் மூலம் தெளிவான தகவல் வழங்கப்படுகிறது: தாராளவாதகட்சி தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் "கோணல்" கொள்கை உடையவர்கள் என்று கூறுவதையோ, புறத்தே பச்சையும் உள்ளே சிவப்பும் என்று தர்பூஷனி பழம் போல் உண்மையில் மறைமுகக் கம்யூனிஸ்டுகள் என்று கூறுவதோயோ ஏற்காதீர்கள், ஒரு அரசியல் நெருக்கடியில் உறுதித்தன்மையை காப்பாற்றுவதற்கு பசுமைகள் நம்பப்படலாம். எங்களுடையை தாஸ்மேனிய வரலாறு அதை நிரூபிக்கிறது.

கடந்த உலகப் பெருமந்த நிலையை ஒட்டி, 1980களில், பசுமைகள் தாஸ்மேனிய தொழிற்கட்சி அரசாங்கத்துடன் கொண்டு உடன்பாடு ஏற்பட்டது என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டும். கடந்த 14 ஆண்டுகளில் ஆஸ்திரேலியப் பொருளாதாரம் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் இன்னும் கூடுதலான முறையில், இந்தப் பெருக்கம் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் பெருக்கத்தில் ஆழ்ந்துள்ள தன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு நெருக்கடியோ, அல்லது ஒரு சர்வதேச மந்த நிலையோ, பெருவங்கிகளாலும் நிதிநிறுவனங்களாலும் கட்டாயப்படுத்தி திணிக்கும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்குப் போதிய பாராளுமன்ற ஆதரவை இரு கட்சிகளுமே கொடுக்க முடியாத நிலையை ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடும். அத்தகைய நிலையில், தொழிற்கட்சியுடனோ, தாராளவாதிகளுடனோ, பசுமைகள் அரசாங்கம் அமைப்பதற்கு உடன் அழைக்கப்படலாம். அதற்கு "தயாராகவும், விருப்பத்துடனும்" இருப்பதாக பிரெளன் ஏற்கனவே விடையிறுத்துவிட்டார்.

பசுமைகளும் இலாப முறையும்

''பாவனையாளர் நிதிவழங்கும்", ("user pays") "சுதந்திர சந்தை" ஆகிய தொழிற்கட்சி, தாராளவாதகட்சிகள் என்ற இரண்டிற்கும் எதிரான பொருளாதார, சமுதாயக் கொள்கைகளை, பசுமைகள் முன்வைத்துள்ளனர். பசுமைகள் இருகட்சிகளினதும் பொது சுகாதாரம், கல்வி, இவற்றிற்கான செலவினங்களைக் குறைக்கும் திட்டங்களையும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களைக் கொண்டுள்ள செயல்களையும், வரிக் குறைப்பு வகைகள், பெருநிறுவன, உயர் ஊதியம் பெருவோருக்கு நலன் அளிக்கும் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்க்கிறார்கள்.

பொதுவாக பெருகிவரும் பிரச்சினைகள் எதிர்கொள்ளும்போது, பெரும்பாலான மக்கள் ஒரு எளிய, நியாயமான தீர்வைக் காணவேண்டும் எனற நம்பிக்கையைத்தான் கொண்டுள்ளனர். பசுமைகள் முன்வைக்கும் நடவடிக்கைகள் மிக நியாயமானவை என்ற தோற்றத்தைத்தான் கொடுக்கின்றன.

இக்காலத்தில் மூன்றாம் கட்டப் படிப்பு ஒரு உரிமையாகக் கருதப்படவேண்டும் என்று தேசிய செய்தியாளர் கூட்டத்தில் பிரெளன் கூறினார். ஆனால் தொழிற்கட்சி, தாராளவாத அரசாங்கங்கள் HECS (உயர்கல்வி நிதிஉதவித்திட்டத்தின்) மூலமாக சுமத்தியுள்ள கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான உயர்நிலைக் கல்வி தேர்ச்சி பெறும் மாணவர்கள் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லமுடியாமல் செய்துள்ளது. கடந்த கூட்டாட்சி வரவுசெலவுத்திட்டத்தில் பெரும் செல்வந்தர்களுக்குக் காட்டப்பட்ட $14.7 பில்லியன் வரிவெட்டில் பாதிக்கும் குறைவாகவேதான், "HECS கட்டணம் என்ற தளையில் இருந்து இளைய ஆஸ்திரேலியர்களை விடுவிக்கப் போதுமானது ஆகும்."

பெருநிறுவன வரிகளை 30 ல் இருந்து 33 சதவிகிதமாக, அப்பொழுதும் 2001 இல் இருந்த அளவான 34ஐ விடக் குறைவானதுதான், அதிகரிப்பது புதிய வேலைகளைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான வருவாயைக் கொடுக்கும்; அதிலும் 12 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருப்பவர்களுக்குக் குறிப்பாக, உதவும் என்று பிரெளன் சுட்டிக் காட்டியுள்ளார். சுகாதார துறையைப் பொறுத்தவரை, $2.5 பில்லியன் அரசாங்கம் உதவித்தொகையாக தனியார் காப்பு நிறுவனங்களுக்குக் கொடுத்தலை, தாராளவாதிகளாலும் ஆதரிக்கப்பட்டுள்ளதைக் கொண்டு, பொதுசுகாதாரத்தை விரிவு படுத்த முடியும் என பிரெளன் தெரிவிக்கின்றார்.

இப்பொழுது வெளிப்படையாக எழும் வினா இதுதான்: ஏன் அத்தகைய கொள்கைகள் செயல்படுத்தப்படவில்லை? கடந்த 20 ஆண்டுகளாக ஏன் சமுதாய நலன்கள் மீதான செலவினக் குறைப்புக்கள் முடிவின்றி நடைபெற்று வருகின்றன? ''பாவனையாளர் நிதிவழங்கும்" என்பதின் பின்னணி, சுகாதாரம், கல்வி முறை, சமுதாயப் பணிகள் இவற்றில் இரண்டு மட்ட முறையின்கீழ், வசதி உடையவர்கள் தரமான சேவைகளைப் பெறலாம், மற்றவர்கள் மோசமான "பாதுகாப்பு வலைக்குள்" திணறவேண்டும் என்ற நிலை ஏன் இருக்கவேண்டும்? பசுமைகள் கூறுவதுபோல் "சந்தை அடிப்படைவாதம்" என்பதை ஏற்பதற்கான காரணம் எதையும் விளக்கவில்லை.

"தடையற்ற சந்தை", "பொருளாதாரப் பகுத்தறிவுமுறை" என்ற கோட்பாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் உலகெங்கிலும் நிறைந்து நின்றாலும், அவை அரசாங்கம் செலவழித்தலைத் தாக்குவதும், உழைக்கும் வர்க்கத்தின் சமூகநிலை சரிவின் விளம்பில் நிற்பதற்கும் காரணமாகாது. மாறாக, இந்த கோட்பாடுகள் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த மாறுதல்களின் பிரதிபலிப்பாகும். அதிலும் குறிப்பாக 1950 களிலும், 1960 களிலும் மாறாதிருந்த மற்றும் அதிகரித்த இலாப உயர்வுக் காலத்தின் முடிவும், மற்றும் 1970 களில் இருந்து சராசரி இலாப விகிதத்தின் கீழ் நோக்கிய அழுத்தம் தொடர்ந்ததாலும் தோன்றிய பிரதிபலிப்பாகும்.

சமூக சேவைகளின் மீதான வெட்டு, அரசாங்கச் செலவினங்கள் குறைப்பு ஆகியவை உழைக்கும் வர்க்கத்தின் சமூகநிலையை தாழ்த்தும் நடவடிக்கைகளுடன் ஒன்றிணைந்தவையாகும். இதன்மூலமாகத்தான் ஒவ்வொரு நாட்டிலும் பெருநிறுவன, நிதியாதிக்க குழுக்கள் அழுத்தத்தைத் தங்களிடம் இருந்து அகற்றிக் கொள்கின்றன. இறுதிஆய்வில், அவை "கருத்தியலினால்" உந்தப் பெற்றவை அல்ல; முதலாளித்துவப் பொருளாதாரத்தில் உள்ளடங்கியுள்ள ஆழ்ந்த முரண்பாடுகளின் விளைவாகும்.

இதன் விளைவாக, இலாப முறையை அகற்குவதற்கான மற்றும் அதற்கு நேரடியாக சவால் விடும், சமுதாயத்தை சோசலிச அடித்தளத்தில் மறு சீரமைக்கும் திட்டம் ஒன்றினால்தான், அதாவது பெருநிறுவனங்கள் செல்வம் பெருக்குவதை மையக்கருத்தாகக் கொண்டிராமல் மனித தேவைகளை மையமாகக் கொள்ளும் ஒரு பொருளாதார முறையினால்தான் இவற்றை பின்வாங்க செய்ய முடியும். அவ்வப்பொழுது பசுமைகள் முதலாளித்துவ குவிப்பு முறையின் அழிக்கும் தன்மையின் தர்க்கத்தை எதிர்த்து கண்டன அறிக்கைகள் விட்டுள்ள போதிலும், அவர்கள் உண்மையாக இந்த முன்னோக்கை எதிர்க்கிறார்கள். இலாப முறையை பசுமைகள் எதிர்க்கவில்லை, அதன் பாதுகாப்பிற்கு முன்வரத்தயாராக உள்ளனர் என்பதைத்தான் பிரெளன் தெரிவித்துள்ள பசுமைக் கட்சி-தொழிற்கட்சி உடன்பாடு தெளிவுபடுத்துகின்றது.

தொடரும்.......

Top of page