World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Nick Beams addresses Australian election meetings in Kingsford Smith and Batman

"The SEP's campaign is about ideas, not votes"

கிங்ஸ்போர்ட் மற்றும் பற்மான் தேர்தல் கூட்டங்களில் நிக் பீம்ஸ் உரை

''சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் கருத்துக்களுக்காகவே தவிர, வாக்குகளுக்காக அல்ல''

By Nick Beams, SEP candidate for the Seante in NSW
23 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

எமது தேர்தல் பிரச்சாரத்தில் ஈராக் மீதான போர் உலக அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக அமைந்திருக்கிறது என சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வலியுறுத்தி வருகிறது. அப்படியென்றால் வரும் தசாப்தங்களுக்கு உலகின் எதிர்காலத்தையே உருவாக்கவல்ல முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை அது கொண்டிருக்கிறது.

சென்றவாரம் ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் BBC-க்கு பேட்டியளித்தபோது ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போர் "சட்டவிரோதமானது" என்று ஒப்புகொண்டார்.

அன்னான் திட்டவட்டமான எந்த நடவடிக்கையும் -அமெரிக்காவை ஐ.நா- விலிருந்து வெளியேற்றுவது அல்லது அதன் தலைவர்கள் மீது அவர்களது போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளை நடத்துவது- பற்றி அவர் கூறாவிட்டாலும் அவரது கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் பெறுகின்றது. இரண்டாம் உலகபோருக்குப் பிந்தைய ஒழுங்கு மற்றும் அந்த போருக்குப்பின்னர் உருவாகிய சர்வதேச உறவுகள் கட்டமைப்பு நிலைமுறிவுற்றதை ஏற்றுக்கொள்வதாக அவை பிரதிநிதித்துவப்படுத்தின.

இரண்டாம் உலகப்போருக்கான உடனடி அடிப்படைக்காரணங்கள் நாஜி ஜேர்மனி மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போர்களில் அடங்கியிருந்தது என்று சொல்லும்போது அமெரிக்காவால் இப்போது நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புபோர்கள் உலகின் பிரதான முதலாளித்துவ அரசுகளுக்கிடையே புதிய மோதல்களுக்கான சூழ்நிலைகளை உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன என்று நாம் சொல்லியாக வேண்டும். இதற்கு ஆழமான காரணங்கள் இருக்கவேண்டும். ஜோர்ஜ் புஷ்ஷின் மற்றும் அவரது நிர்வாகத்தின் தனிப்பட்ட ஆளுமை அல்லது குற்றத் தன்மை என்று மட்டுமே அதை சர்வ சாதாரணமாக விட்டுவிட முடியாது. ஜனநாயகக் கட்சியிடமிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்பது இந்த உண்மையை கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

அண்மையில் உலக அரசியல் மற்றும் வரலாறு தொடர்பாக பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு நூலின் முன்னுரையில் ஓர் அம்சம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. 1990-களில் வெளியிடப்பட்ட சமூகவியலில் முக்கிய விவாத தலைப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது "பூகோளமயமாக்கல்" ஆக இருந்தது. 21ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் அது ஏகாதிபத்தியம் மற்றும் சாம்ராஜ்ஜியம் பற்றிய கொள்கை விளக்கமாக இருக்கிறது. இந்த அவதானிப்பு அண்மையில் வெளியிடப்பட்ட நூல்களின் தலைப்புகளே சான்றுகாட்டி நிரூபிக்கின்றன. Colossus: The Price of America's Empire, American Empire, Rogue Nation, Imperial America, Fear's Empire, America Unbound, The Sorrows of Empire, Hegemony or Survival, The New Imperialism, Resurrecting Empire, Inventing the Axis of Evil, Incoherent Empire. மற்ற நூல்களையும் இந்தப்பட்டியலில் சேர்த்துகொள்ளலாம்.

ஏகாதிபத்திய இராணுவவாதம் வெடித்துச் சிதறியிருப்பதற்கும், பொருளாதார பூகோளமயமாக்கலுக்கும் இடையே அடிப்படை மற்றும் தற்செயலான தொடர்புகள் உண்டு. திரட்டும் நிகழ்ச்சிப்போக்கால் உந்தப்படும் மூலதனம் எங்கும் பரவுவதற்கு, எங்கும் கூடு கட்டுவதற்கு, எல்லா தேசிய தடைகளையும் இறுக்கங்களையும் தகர்த்து ஊடுருவிச்செல்வதற்கு, உபரி மதிப்பிற்கான முடிவற்ற அதன் வேட்கையில் பழைய உற்பத்தி வடிவங்களை, பழைய பொருளாதார அமைப்புக்களை உருக்குலையுமாறு அடிக்கும் மூலதனத்தின் சர்வவியாபகத் தன்மைக்கும் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியற் கட்டமைப்புக்களின் அடித்தளமான தேசிய அரசுக்கும் இடையிலான ஆழமான முரண்பாடுகளால் உலக முதலாளித்துவம் அதிர்ந்துள்ளது

இந்த பூகோளமயமாக்கலின் முதலாவது சகாப்தம் -19-ம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளும் 20ம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளும்- இந்த முரண்பாடுகள் முதல் உலகப்போராக வெடித்த வடிவத்தைக் கண்டது. அந்த போரின் பூர்வீகம் முதலாளித்துவ வல்லரசுகள் ஒவ்வொன்றும் இந்த முரண்பாடுகளை தீர்த்துக்கொள்வதற்கு தன்னையே உலக வல்லரசாக நிறுவிக்கொள்ளும் முயற்சியில் இருந்தது.

பூகோளமயமாக்கலின் இரண்டாவது பெரியகட்டம் கடந்த 30- ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்தது. தற்போது சந்தைகளையும், இலாபங்களையும் பெறுவதற்கான போராட்ட அழுத்தங்களின் கீழ், இந்த முரண்பாடு மீண்டும் ஒரு புதிய அதைவிட மோசமான வெடித்து சிதறும் வடிவெடுத்து மீண்டும், தோன்றியுள்ளது. அதே பதில் நடவடிக்கைகயைத்தான் அது இன்றைக்கு கொண்டுவந்திருக்கிறது. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பதாகையின்கீழ் அமெரிக்கா தனது சர்வதேச போட்டிநாடுகளை புறந்தள்ளி சவால் செய்ய முடியாத தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றுவருகிறது. உலகப்பொருளாதாரத்திற்கும், தேசிய - அரசு அமைப்புக்கும் இடையில் நிலவுகின்ற முரண்பாடுகளை சமாளிக்கிற வகையில் அமெரிக்கா என்கிற ஒரு தேசிய அரசை எல்லா நாடுகளையும் விட தலைமை சிறப்புடையதாக நிலைநாட்ட முயன்று வருகிறது.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பும் காலனி - ஆதிக்கமும்.

ஈராக் மீது போர் தொடுக்கப்பட்டது தவறு ஆனால் அங்கு அமைதியை நிலைநாட்ட ஆக்கிரமிப்பு நீடிக்கவேண்டும் என்ற வாதத்தை இந்த தேர்தல் பிரச்சாரத்தில் நாம் கேட்டுகொண்டிருக்கிறோம். அமெரிக்கா, ஈராக்கில் இல்லாவிட்டால், அந்த நாடு மிக வேகமாக உள்நாட்டுபோரில் சிக்கிகொள்ளுமென்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக்கிரமிப்புத்தான் "பயங்கரவாதத்தின் மீதான போரின்" முன்னோடிகளும் என்றும் கூறுகிறார்கள்.

முதலாவது இதற்கு முந்திய எல்லா ஆக்கிரமிப்பு அரசுகளையும் போல் -நாஜிக்கள் அதற்கு தலையாய உதாரணம்- ஒடுக்குமுறைக்கு பொதுமக்கள் தெரிவிக்கின்ற எதிர்ப்பையும் பயங்கரவாதம் என்றே அமெரிக்கா அழைக்கிறது.

இரண்டாவதாக, பயங்கரவாதச்செயல்கள் நடப்பதை பொறுத்தவரை ஈராக் ஆக்கிரமிப்பு, குழப்பத்தை தீர்க்கும் விஷமுறிவு அல்ல, அதுவே குழப்பத்திற்கு காரணமாகும். இந்த வகையில் நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், செப்டம்பர் 21 ம் தேதி பதிப்பு பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள முதல்பக்க செய்தியை உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

''ரோமிலுள்ள பிரிட்டிஷ் தூதர் நேற்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ், அல்கொய்தாவின் 'தலைசிறந்த ஆள் சேர்க்கும் சார்ஜன்ட்' என்று வர்ணித்த பொழுது, Downing Street- க்கு அவரது தூதரக மேலதிகாரிகளுக்கும் மிகுந்த சங்கடத்தை உண்டுபண்ணினார்.

''Sir ivor Roberts வெளியுறவுத்துறையின் மிகச்சிறப்புமிக்க தூதர்களில் ஒருவர், நீண்ட வெளிநாட்டு அனுபவம் உள்ளவர். வாரக்கடைசியில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட கூட்டம் ஒன்றில் அவர் கூறிய கருத்தை இத்தாலிய பத்திரிகை ஒன்று மேற்கோள்காட்டி பின்வருமாறு வெளியிட்டிருக்கிறது: 'புஷ் இறுதியாக மீண்டும்தேர்ந்தெடுக்கப்படுவதைக் கொண்டாடுவதற்கு தயாராகிருக்கிற எவராவது இருப்பாரானால், அது அல்கொய்தாவாகத்தான் இருக்கும்.' ''

ஈராக்கில் குழப்பத்தை தடுப்பதற்கு தொடர்ந்து அந்தநாடு ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கவேண்டியது அவசியம் என்று வாதிடுவதை நம்புகின்ற எவரும் அதன் இறுதி முடிவிற்கே சென்று தவிர்க்க முடியாத தர்க்க ரீதியிலான முடிவிற்கு வந்தாக வேண்டும். குழப்பத்தை தவிர்த்து அமைதியை உருவாக்குவதற்கு ஒரே வழி ஒரு ஏகாதிபத்திய அரசு மேலாதிக்கம் செலுத்துவதுதான் என்று சொல்வது முடிவற்ற ஆக்கிரமிப்புபோர்களையும் காலனி ஆதிக்கத்திற்கும் பொறுப்பளிப்பதாகும்.

இது கற்பிதமான வாதம் அல்ல.. கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் ஊடகங்களில் பிரபலமான தலைவராகவே ஆகிவிட்ட பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் Niall Ferguson, இரண்டு நூல்களில் இந்தக்கருத்தை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்.

2003- ல் அவர் வெளியிட்ட Empire என்ற நூலில், பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் நிரூபித்தது என்னவெனில் சாம்ராஜ்ஜியம் என்பது, ஆளுகின்ற அரசின் நலனுக்கானது என்பது மட்டுமல்ல, சர்வதேச அரசாங்கம் என்ற அளவில் வேலை செய்யக் கூடிய ஒரு வடிவம் என்பதாகும்" என்று அவர் வாதிக்கிறார். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அனுபவத்திலிருந்து பெறப்படுகின்ற படிப்பினை என்னவென்றால், "சாம்ராஜியமில்லாமல் உலகை நடத்தும் பரிசோதனை முற்றிலும் வெற்றிபெற முடியாது என்பது கணிக்கப்பட முடியாது" என்று கூறியிருக்கிறார் (Niall Ferguson, Empire பக்கம்-371)

இதன் தவிர்க்கமுடியாத தொடராக Colossus- அந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. அந்த நூல் அமெரிக்கா ஏகாதிபத்திய அனுபவத்தை எடுத்துரைக்கிறது. "தாராண்மை சாம்ராஜ்ஜியதிற்கான வாதம்" என்று அவர் அழைப்பதை முன்னெடுத்து வைக்கையில், "சில நாடுகளில் ஏதோ ஒரு வடிவில் ஏகாதிபத்திய ஆட்சி தேவைப்படலாம், அப்படி என்றால் அந்த நாடுகளில் பகுதி அளவிலோ அல்லது முற்றிலுமோ இறையாண்மை நிறுத்திவைக்கப்படவேண்டும், அது முழு சுதந்திரத்தைவிட சிறப்பானதாக அமையலாம், அத்தகைய மாற்றம் சில மாதங்களுக்கு அல்லது ஆண்டுகளுக்கு மட்டுமல்ல ஆனால் பல பத்தாண்டுகளுக்குத் தேவைப்படலாம்." தாராண்மை சாம்ராஜ்ஜியம் என்பதை பொருளாதார பூகோளமயமாக்கலுக்கு ஏற்ற மாற்று அரசியல் அமைப்பாகும் என்று சிந்திக்கப்பட வேண்டும் என்று Ferguson முடிக்கிறார்.

Ferguson அமெரிக்காவை விமர்சித்திருப்பது ஒரு சாம்சாஜ்ஜியத்தை ஏற்படுத்த, அது முயலவில்லை என்பதற்காக அல்ல, ஆனால் அந்தப் பணியை மேற்கொள்வதற்கு அமெரிக்கா தேவையான ஆதாரங்களை திட்டவட்டமாக திரட்டிப் பயன்படுத்தவில்லை என்பதுதான். ''இன்றைய தினம் உலகிற்கு ஒரு பயனுள்ள தாராண்மை சாம்ராஜ்ஜியம் தேவை மற்றும் அந்தப்பணியை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தலைசிறந்த தகுதியுள்ள நாடாகும்" மற்றும் "ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தது போல, பொருளாதார பூகோளமயமாக்கலுக்கு அரசியல் ரீதியான ஒரு உத்திரவாதம் தேவைப்படுகிறது'' என்று அவர் வலியுறுத்துகிறார். (Colosus- பக்கம் 301)

சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்ப்பட்ட ஒரு பத்திரிகை கட்டுரையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து அவர் தனது கருத்தை மேலும் நிலைநாட்டியுள்ளார். அமெரிக்காவின் பூகோள மேலாதிக்கத்தை விமர்சிப்பவர்கள் மாற்று பற்றியும் சிந்திக்கவேண்டும், அந்த மாற்று "பன்னாட்டு, கற்பனை" அல்ல, ஆனால் மாறாக "புதிய இருண்டகாலத்து அராஜக சிம்மசொப்பனமாக'' வே அமைந்துவிடும்.

அமெரிக்க மேலாதிக்கத்தை விரும்பாத எவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். போட்டிபோடுகின்ற வல்லரசுகள் உள்ள பல்துருவத்தன்மை உள்ள உலகைக் காட்டிலும், மேலாதிக்காளன் இல்லாத ஒரு உலகம் அமெரிக்க முதன்மைக்கு ஒரு உண்மையான மாற்றாக இருக்கலாம். துருவமுனைப்பு அற்ற நிலை ஒரு அராஜக புதிய இருண்ட காலத்திற்கு- மங்கிக்கொண்டுவருகிற சாம்ராஜிய சகாப்தங்களும் மதவெறிப்போக்கும்; உலகின் கவனத்திலிருந்து மறைந்துவிட்ட பிராந்தியங்களில் முடிவற்ற கொள்ளை மற்றும் சூறையாடல்கள் நடைபெறும்; பொருளாதாரம் தேக்கமுறும் மற்றும் நாகரீகம் சிலபாதுகாக்கப்பட்ட திட்டுக்களுக்குள் ஒதுங்கிவிடும் -திரும்புவதை அர்த்தப்படுத்த முடியும்." (வல்லரசற்ற ஒரு உலகம் Foreign Policy July-August 2004)

Ferguson எடுத்துக்காட்டுவது முழு முதலாளித்துவ ஒழுங்கின் அரசியல் மற்றும் வரலாற்றுத் திவாலை வெளிப்படுத்துகிறது, ஏகாதிபத்தியம் இல்லாவிட்டால், காட்டுமிராண்டித்தனம் என்ற தேர்வைத்தான் முன்வைக்கிறது. 20-ம் நூற்றாண்டின் வரலாறு முழுவதுமே ஏகாதிபத்தியம் காட்டுமிராண்டித்தனத்திற்கு மாற்று மருந்தல்ல என்பதை எடுத்துக்காட்டுகிறது. மாறாக ஏகாதிபதியம் புதிய மற்றும் படுபயங்கரமான வடிவங்களில் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்கவும் வளர்க்கவும் மட்டுமே செய்யும் என்பது தெளிவாகியிருக்கிறது. இந்த அடிப்படை உண்மையை ஈராக் அனுபவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் காட்டியுள்ளது.

பொருளாதார பூகோளமயமாக்கலினால் உருவாக்கப்பட்டுள்ள சவால்களுக்கு ஒரே பதில் அந்த நிகழ்ச்சிப்போக்குகளினால் உண்டு பண்ணப்பட்ட சமுதாய சக்திகளிடமிருந்து- சர்வதேச தொழிலாள வர்க்கத்திடமிருந்து ஒரு புதிய அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டுவதுதான் .

ஈராக் போர் ஏகாதிபத்திய வன்முறை மீண்டும் வெடித்தலை மட்டும்காணவில்லை. தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய சர்வதேச இயக்கம் தோன்றுவதையும் கூட பார்க்கிறது, அது போருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க பூகோள அளவிலான கண்டனப்பேரணிகளில் பிரதிபலித்தது. இதில் உடனடியாக எடுக்கவேண்டிய நவடிக்கை, இந்த இயக்கத்தை சோலிச முன்னோக்கில் ஆயுதபாணியாக்குவதுதான். பூகோள முதலாளித்துவ ஒழுங்கில் நெருக்கடியால் கட்டவிழ்த்துவிடப்படும் காட்டுமிராண்டித்தனத்திற்கு ஒரே பதில் அதுதான். இந்த அடிப்படையில்தான் SEP தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்துகொள்கிறது.

பசுமைக் கட்சியினரின் பாத்திரம்.

நமது முன்னோக்கை மேலும் தெளிவுபடுத்துவதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற பசுமைகள் மற்றும் சோசலிச கூட்டணி கட்சிகள் முன்னெடுத்து வைக்கின்ற வாதங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த மூன்றாண்டுகளில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்ட சரிவை பசுமைகள் பயன்படுத்திக்கொண்டார்கள். 2001- தேர்தலில், அகதிகள் மீதும், புகலிடம் நாடியோர் மீதும் தாக்குதல்களை நடத்திய ஹோவார்டிற்கு தொழிற்கட்சி ஆதரவு தந்ததால், பசுமைகளின் செல்வாக்கு மீண்டும் வளர்ந்தது.

பசுமைகளுக்கு வாக்களிக்க விரும்புபவர்களது நோக்கங்களை தெளிவாக அறிய முடிகிறது: அவர்கள் "சுதந்திர சந்தை" "பயன்படுத்துவோர் செலுத்தல்" என்ற லிபரல் மற்றும் தொழிற்கட்சிகளின் பொருளாதாரத்திட்டங்களை எதிர்ப்பவர்கள். சமூக சேவைகளுக்கு செலவிடும் திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விரும்புபவர்கள். இரண்டு பெரிய கட்சிகளும், நிதி மற்றும் தொழிற்துறை பெருநிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பது குறித்து கவலைகளை தெரிவிப்பவர்கள். அவர்கள் சுற்றுப்புறச்சூழல் தொடர்பாக மட்டுமல்ல இதர கொள்கைகளிலும், முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறைகளை கொண்டவர்கள். அவர்கள் போரையும், அதன் தொடர்பாக உருவாகின்ற பொய்கள் மோசடிகளையும் எதிர்த்து நிற்கின்றனர். இந்தப் பிரச்சனையிலும் அல்லது வேறு எந்தவிவகாரங்களிலும் தொழிற்கட்சி ஹோவார்ட் அரசாங்கத்திற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது உண்மை.

இவைகள்தான் பசுமைக்கட்சி ஆதரவாளர்களின் நோக்கங்கள் இவை கண்ணியமானவை, நேர்மையானவை என்று எவரும் கூறமுடியும். ஆனால் இங்கே எவருக்கும் நினைவிற்கு வருகின்ற பழைய பழமொழி நல்லெண்ணங்களும், நரகத்திற்கான வழியும் என்பதுதான்.

அதிகாரபூர்வமான அரசியல் நிர்வாகத்தின் மீது மில்லியன் கணக்கான மக்கள் வெறுப்புக் கொண்டிருப்பதை பயன்படுத்தி அவர்கள் பயன்பெறுகிறார்கள், ஆனால் அவற்றிற்கு பசுமைகள் மாற்று அல்ல. மாறாக அதே கொள்கைகள் நீடித்திருப்பதற்கு அவர்கள் உறுதி கொண்டிருக்கின்றனர்.

வாரக்கடைசியில் பசுமைகளுக்கும், தொழிற்கட்சிகளுக்குமிடையே வாக்களிப்புத்தொடர்பாக பேரம் உருவாக்கப்பட்டது அறிவிக்கப்பட்டபின்னர், உடனடியாக அரசியலில் மறைந்துவிடுகிற வாய்ப்பில் உள்ள, முன்னாள் ஜனநாயகக்கட்சித் தலைவர் Meg Lees, வெளியிட்டுள்ள விமர்சனத்தில் செனட்டில் பசுமைகளுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்குமானால் அவர்கள் உடனடியாக இரண்டு அமைப்புக்களையுமே கலைத்துவிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார். மேல்சபை முடக்கிவிடப்பட்டுவிடும், ஏனென்றால் பசுமைகள் சமரசம் செய்து கொள்வதை மறுக்கும் வரலாற்றைக் கொண்டவர்கள், என்று Meg Lees, கருத்துத் தெரிவித்தார். பசுமைக்கட்சித் தலைவர் Bob Brown, அரசியலில் நிலையான ஆட்சியைத் தருவதில் குறிப்பாக டாஸ்மானியாவில் பசுமைக் கட்சியின் வரலாற்றைக் குறிப்பிட்டு, உடனடியாக பதிலளித்தார்.

1989-முதல் 1992-வரை தொழிற்கட்சியுடன் அந்த மாகாணத்தில் பசுமைகள் ஒரு "உடன்படிக்கையை" செய்து கொண்டனர். அந்த மாகாண அரசாங்கம் வேலைவாய்ப்புக்களை வெட்டியது, பட்ஜெட் செலவைக் குறைத்தது, அப்போது பசுமைக்கட்சியின் சொந்த கீழ்மட்ட அணியினர் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்கையில் அவர்கள் "தாம் வகுத்த கோட்டைக் கடக்காது பார்த்துக் கொண்டனர்" என்று Brown பெருமைபட நினைவு கூர்ந்தார். அதையே மத்திய அரசாங்க மட்டத்தில் இப்போது பசுமைகள் செய்வார்கள்.

இப்போது ஏற்பட்டுள்ள உடன்பாட்டை நடைமுறைப்படுத்தினால் 15- ஆண்டுகளுக்கு முன் டாஸ்மானியாவில் நடைபெற்றதைவிட கடுமையான தாக்கம் ஏற்படும் என்பதை ஒருவர் எண்ணிப்பார்க்க முடியும். பசுமைக் கட்சி - தொழிற்கட்சி உடன்படிக்கை சென்ற பொருளாதார மந்தநிலையின் இடையே உருவாயிற்று. அதற்குப்பின்னர் ஆஸ்திரேலிய பொருளாதாரம் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து வளர்ச்சிப் போக்கில் உள்ளது. ஹோவார்ட் அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதற்கு அது ஒரு பிரதான அம்சமாகும். ஆனால் அந்த வர்த்தக சுழற்சி விரைவிலோ அல்லது சற்றுப் பின்னரோ திரும்பியாக வேண்டும், அப்போது கடுமையான விளைவுகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உண்டு.

திங்களன்று பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கருத்துரையில், ''எவ்வளவு நாட்களுக்கு ஆஸ்திரேலியா இப்படி சுழன்று கொண்டிருக்க முடியும்?'' என்று கேட்டிருக்கிறது. இதற்கு பதில் என்னவாக இருக்கமுடியும் என்றால் நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது என்பதாகத்தான் இருக்கவேண்டும். அந்தக்கட்டுரை சுட்டிக்காட்டுவது பங்குச் சந்தை விலை ஒரு சாதனை அளவாக உயர்ந்திருக்கிறது. கடந்த 18- மாதங்களில் பங்குகளின் விலை மூன்றில் ஒருபங்கு உயந்திருக்கிறது. சொத்துக்களின் விலை மிகப்பெருமளவில் உயர்ந்து கொண்டிருப்பதால் பொருளாதாரம் தாக்குப்பிடித்து நீடித்துக்கொண்டிருக்கிறது. 1997-க்குப்பின் வீடுகளின் விலை இரட்டிப்பாகியுள்ளது. நுகர்வோர் செலவினங்கள்தான் பொருளாதாரத்தின் பிரதான உந்து சக்தியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மேலாக நுகர்வோர் செலவினம் 5-முதல் 6-சதவீதம் உயர்ந்து கொண்டே போகிறது. இதனுடைய விளைவு என்னவென்றால் கடன் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இன்னும் இன்றைக்கு தனிமனிதர்களது சேமிப்புக்கள், அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் தனிமனிதர் சேமிப்பு 3-சதவீதமாக குறைந்திருக்கிறது. தனிநபர் வீட்டுவருமானத்தைவிட சராசரி குடும்பங்களின் கடன்கள் 150- சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தச்சூழ்நிலைகளில் மிக மந்தமான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் அல்லது வட்டிவிகிதங்களில் ஒரு சிறிய உயர்வு ஏற்பட்டாலும் அதானல் ஒரு பெரிய தாக்கம் உருவாகும். அதன்மூலம் அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்கும். வங்கிகளும், பணச்சந்தைகளும் கோருகின்ற கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பசுமைகளோடு மற்றும் கூட்டணி அரசாங்கத்தோடு ஒரு உடன்படிக்கை செய்துகொள்வது தேவைப்படும்.

சோசலிச கூட்டணி- ISO- ம் DSP-ம்

சோசலிச கூட்டணியின் ஓர் அங்கமான சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) அடிப்படை நோக்குநிலை செப்டம்பர் 17- ''Socialist worker"- ல் விரிவாக்கப்பட்டிருக்கிறது.

''Latham தேர்தலில் வெற்றிபெறுவாரானால் அது போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஒரு பெரிய வெற்றியாகும். ஆனால் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், 'பயங்கரவாதத்தின் மீதான போருக்கு' எதிராகவும் தொடர்ந்து அந்த இயக்கம் போராடியாக வேண்டும்''

அது எப்படி வெற்றியாகும்? Latham போருக்கு எதிராக பிரச்சாரம் செய்யவில்லை, ஆக்கிரமிப்பை அவர் கண்டிக்கவில்லை, போருக்கு முன்னர் ஹோவார்டோ அல்லது புஷ்ஷோ கூறிய பொய்களை கண்டிக்கவில்லை. அமெரிக்காவோடு, வளைகுடா பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா ராணுவ நடவடிகைளை நீடிக்கும் என்று தெளிவுபடுத்தினார். அந்தப்போரை "தவறு" என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்கா தலைமையில் ஏற்பாடு செய்யப்படும் மற்றொரு ஆக்கிரமிப்புப்போரில் பங்கெடுத்துக்கொள்ள தொழிற்கட்சி அரசு தாயாராக இருக்குமென்று கோடிட்டுக்காட்டினார். ஈராக் படையெடுப்பின்போது தொழிற்கட்சி அரசு பதவியில் இருந்திருக்குமானால் 190-91- வளைகுடாப்போரில் தனது கடற்படை கலந்துகொள்ள உறுதிசெய்த Hawke- ன் தொழிற்கட்சி அரசாங்கத்தைப்போல் ஈராக் போரில் கலந்து கொண்டிருக்கும்.

மேலும், Latham மற்றும் அவரது முன்னணி வெளியுறவு மற்றும் ராணுவ கொள்கை வகுக்கும் தலைவர்களான Kim Beazly மற்றும் Kevin Rudd இருவரும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் ஆஸ்திரேலிய ராணுவத்தை தொழிற்கட்சி அரசாங்கம் அனுப்புமென்று தெளிவுபடுத்தியுள்ளனர். மலேசியா மற்றும் இந்தோனேஷியா அரசாங்கங்கள் எதிர்ப்புத்தெரிவித்து வருவதால் அமெரிக்கா இந்த மண்டலத்தில் தனது படைகளை அனுப்ப முடியாத சூழ்நிலையில், இது அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டணிக்கு உண்மையான பங்களிப்பை செய்வதாகும். என்று Beazly கூறியுள்ளார்.

சோசலிச கூட்டணியில் முன்னிலைப்பங்கு வகிக்கும், ஜனநாயக சோசலிசக் கட்சி (DSP) அடிப்படையிலேயே ISO வைப்போன்ற நிலைதான் எடுத்துள்ளது. செப்டம்பர் 8-ல் பிரசுரிக்கப்பட்டுள்ள இடது பசுமை வார இதழில் வெளிவந்த கட்டுரையில், ''இடதுசாரி வலுவான அடிப்படையில் செயல்பட்டால்தான் ஹோவார்ட் -ஐ விட சிறப்பாக தொழிற்கட்சி செயல்பட நிர்பந்திக்க முடியும். அதிக வாக்குகள் பெற்று இடதுசாரி நிர்பந்தம் கொடுக்காவிட்டால் Latham அரசாங்கம் Hawke மற்றும் Keating அரசாங்கங்களைப்போன்றுதான் செயல்படும். தொழிற்கட்சி அரசாங்கம் கிரீன்களையும், சோசலிஸ்ட் கூட்டணியையும் தான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக அளவில் நம்பியிருக்குமானால் அந்த அரசாங்கம் ஒரு சில சீர்திருத்தங்களைத்தான் கொண்டுவரக்கூடும் நமது உரிமைகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு அதிக பீதியுடன் செயல்படும்.''

இங்கே எடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பவாத தாக்கம் என்னவென்றால் பசுமைகளுக்கு நேரடியாக வாக்களிக்க வேண்டும் என்பதுதான். மொத்தத்தில், பசுமைக்கட்சி சோசலிச கூட்டணியைவிட பெரிய அமைப்பு எனவே தொழிற்கட்சியினர் மீது அதிக நெருக்குதல்களைக் கொண்டுவர முடியும். ஆனால் பசுமைக்கட்சிக்காரர்கள் ஏற்கெனவே தொழிற்கட்சி அராசங்கத்தோடு ஓர் உடன்படிக்கை செய்துகொள்வதாக உறுதியளித்திருக்கின்றனர். தேவைப்பட்டால் லிபரல்களோடு உடன்படிக்கை செய்துகொள்ள தயாராக இருக்கின்றனர். இதை வேறு வகையில் கூறுவதென்றால் அடிமட்ட தொண்டர்களிடமிருந்து வருகின்ற நிர்பந்தங்களை விட அரசியல் நெருக்கடி வெடிக்குமானால் மேலேயிருந்து வருகின்ற நெருக்குதல்களுக்கு பதிலளிக்கின்ற வகையில் எந்த அரசாங்கம் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுமோ, அந்த அரசாங்கத்தோடு செர்ந்துகொள்வார்கள்.

DSP- வெளியிட்டுள்ள கருத்து மற்றொரு பிரச்சனையை எழுப்புகிறது. Hawke மற்றும் Keating அரசாங்கம் அனுபவங்களிலிருந்து பெறுகின்ற படிப்பினைகள் என்ன?

இந்த தேர்தல் தொகுதியில், தொழிற்கட்சி வேட்பாளரான ''பீட்டர் கேரட்'' ALP யில் சேருகின்ற தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார். அது ஒரு சீர்திருத்த கட்சி என்று கூறியுள்ளார். ஆனால் Hawke - Keating அரசாங்க காலத்தில் சீர்திருத்தம் என்கிற சொல்லின்பொருள் முற்றிலுமாக மாறிவிட்டது. அதுவரை 20-வது நூற்றாண்டின் முதல் எண்பது ஆண்டுகளில் சீர்திருத்தம் என்றால் முதலாளித்துவ கட்டுக்கோப்பின் படுமோசமான அம்சங்களின் சிலவற்றை சரிசெய்வது மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சலுகைகளை அறிமுகப்படுத்துவதென்று பொருள் கொள்ளப்பட்டது. என்றாலும், கடந்த 20- ஆண்டுகளுக்கு மேலாக சீர்திருத்தம் என்ற சொல் முற்றிலும் மாறுபட்ட விளக்கத்திற்கு உள்ளாகிவிட்டது. இப்போது தொழிற்துறை உறவுகளில், ஊதியக்கட்டுக்கோப்பில் "சீர்திருத்தம்" என்று சொன்னால் அதனுடைய பொருள் வேலைவாய்ப்புக்களில் வெட்டு, ஆட்குறைப்பு, நிரந்தர தொழிலாளர்களை தினக்கூலிகளாக மாற்றுவது என்று பொருள். அதே போன்று சுகாதார முறைகளில் மாற்றம் என்று சொல்லும்போது அந்த சீர்திருத்தம் சுகாதார சேவைகளை பயன்படுத்துவோர், கட்டணங்களை செலுத்தவேண்டும் அல்லது கூடுதலாக விலை கொடுத்து மருந்துகளை வாங்கவேண்டும் என்றாகிறது. நிதி நிர்வாகத்தில் "சீர்திருத்தங்கள்" என்பன பொருளாதார நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் ரத்து செய்வது. போக்குவரத்தில் "சீர்திருத்தம்" என்பது அதிகரித்த அளவில் தனியார்மயமாக்கல் என்று என்று பொருளாகும், இப்படியே இந்தப்பட்டியல் நீண்டு கொண்டிருக்கிறது.

உலக முதலாளித்துவ விவகாரங்களில் திருப்புமுனை ஏற்பட்ட காலத்தில் Hawke-Keating அரசாங்கம் பதவிக்கு வந்தபோது மேலே சொன்ன ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கும் துவக்கம் செய்யப்பட்டது. இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய நீண்ட பொருளாதார பூரிப்பு நிலைமை ஒரு முடிவிற்கு வந்தது. சர்வதேச முதலீடுகள் தொழிலாள வர்க்கத்தின் சமுதாய நிலையின் மீது ஒட்டுமொத்த சர்வதேச அளவிலான தாக்குதலைத்தொடுக்க கோரியது. Fraser- ன் லிபரல் அரசாங்கம், ஹோவார்ட் நிதியமைச்சராக இருந்ததால் இந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை. தொழிற் கட்சிஆட்சிக்கு வந்தது. இதன் வலைத்திட்டத்தின் தாக்கம் 1996-ல் ஹோவார்ட் காலத்திலும் நீடிக்கப்பட்டது. இந்த விவரங்கள் நமது தேர்தல் அறிக்கையில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இன்றிரவு நாம் ஆராயவிருக்கிற மிக முக்கியமான பிரச்சனை என்ன செய்யப்பட்டது என்பதுபற்றி அதிகமாக இல்லையென்றாலும் எப்படி செய்யப்பட்டது? என்பதைப்பற்றித்தான் ஆராயப்போகிறோம்.

Hawke-Keating அரசாங்கத்திற்கு தொழிலாள வர்க்கம் தேவையான அளவிற்கு நெருக்குதலைத்தரவில்லை என்பதுதான் பிரச்சனை என்று DSP கூறுகிறது. Latham அரசாங்கத்தின் மீது தேவையான அளவிற்கு நிர்பந்தம் தரப்படுமானால் முந்திய அனுபவம் திரும்புவதைத் தடுக்க முடியுமா? இதை வேறுவகையில் விளக்குவது என்றால், தொழிலாள வர்க்கம் தேவையான தீவிரத்தன்மையோடு அல்லது தேவையான கடுமையோடு போராடவில்லை, எனவே இறுதியில் தொழிலாள வர்க்கத்தின் மீதுதான் பழிபோடவேண்டும்.

ஆனால் இந்த கால கட்டத்து வரலாற்றைப் பார்த்தால் தொழிலாள வர்க்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெறவில்லை என்பது அல்ல பிரச்சினை என்று விளக்கிக் காட்டும். 1985-ல் குயின்ஸ்லாந்து மின்சாரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அது நாடுதழுவிய பொதுவேல நிறுத்தமாக வெடிக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டது. நிலக்கரி சுரங்கத்தொழிலாளர்கள் தங்களது உரிமைகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள். 1988-ல் ALP யிலிருந்து அவர்களது யூனியனை விலக்குவதற்கு கிளர்ச்சி நடைபெற்றது. 1989-ல் Cackatoo தீவு துறைமுகம் முற்றுகையிடப்பட்டது. இவை நடைபெற்ற கிளர்ச்சிகளில் சில எடுத்துக்காட்டுகள்தான்.

இதில் பிரச்சனை என்னவென்றால் Hawke and Keating அரசாங்கங்கள் நடத்திய தாக்குதல்களுக்கு எதிர்ப்பு அல்லது போர்க்குணம் அல்லது அழுத்தம் இவற்றின் பற்றாக்குறை அல்ல. ஆனால் தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டுகின்ற அரசியல் முன்னோக்கு எதுவும் தொழிலாள வர்க்கத்திடம் இல்லை.

தொழிலாளர் வர்க்கத்திற்கு முன்னோக்கு எதுவுமில்லாத இந்த நெருக்கடி சர்வதேச அளவில் நிலவுகின்ற நடைமுறையின் ஓர் அங்கம்தான். அதன் தாக்கம் சோவியத் ஒன்றியத்தில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டது. 1990-91-ல் ஸ்டாலினிச ஆட்சிகள் பொரிந்துவிட்டபின்னர் அதற்கு வழிவகுத்த அரசியல் நெருக்கடியை எதிர் கொள்வதற்கு தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுதந்திரமான முன்னோக்கை முன்னெடுக்க முடியாததாக இருந்தது. இதன் பொருள் என்னவென்றால் அதன் விளைவு உண்மையான சோசலிசத்தை புத்துயிர்பெறச்செய்வதற்கான போராட்டம் நடைபெறவில்லை, மற்றும் ஸ்டாலினிச அதிகாரத்துவ சாதனத்தால் தொழிலாள வர்க்கத்திடமிருந்து பறித்துக்கொள்ளப்பட்ட அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு போராட்டம் நடத்தப்படவில்லை, மாறாக முதலாளித்துவ மீட்சி திரும்பவும் கொண்டுவரப்பட்டது மற்றும் குற்றக் கும்பல்கள் ஆட்சிகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகள் முழுவதிலும் ஆட்சி செய்வதை இப்போது பார்க்கிறோம்.

"தொழிலாள வர்க்கம் புரட்சிகர நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும் அல்லது அது ஒன்றுமில்லாததாக (உதவாக்கறையாக) ஆகிவிடும்" என்று மார்க்ஸ் ஒருமுறை எழுதினார். இப்படி அவர் சொல்லியதால், முதலாளித்துவத்தை வீழ்துவது எப்போதும் எல்லா இடங்களிலும் சாத்தியமாகும் என்று அவர் கூறவில்லை. சமுதாயப் புரட்சி என்பது கண நேர செயல் அல்ல, மாறாக நீண்டகால முழுமையான வரலாற்றை அடிப்படையாகக்கொண்டது. இந்த வரலாற்று காலம் முழுவதிலும் வரலாற்றின் வளைவுகள் மற்றும் திருப்பங்கள் முழுவதும், சமுதாயத்தை சோசலிச மாற்றத்திற்கு உள்ளாக்குவதை நோக்கமாக்க் கொண்டு, தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுதந்திரமான அரசியல் முன்னோக்கை முன்னெடுத்துச் சென்றாக வேண்டும். இந்த நோக்கமில்லாமல், போராட்டங்கள் எவ்வளவுதான் போர்க்குணம் கொண்டவையாக இருந்தாலும் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்கத்தின் கீழ் இறுதியாக அந்த போராட்டங்கள் ஒன்றுமில்லாதவையாக ஆகிவிடும்.

இன்றைய தினம் தொழிலாள வர்க்கம் எதிர் நோக்கியுள்ள நெருக்கடி அரசியல் முன்னோக்கு நெருக்கடி ஆகும். முதலாளித்துவம் மனித இனத்தை வரலாற்று அடிப்படையிலான ஒரு முட்டுச்சந்திற்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டது. உலகின் மிகப்பெரும்பாலான மக்களாக விளங்குகிற தொழிலாள வர்க்கம் தனது சுதந்திரமான முன்னோக்கை முன்னெடுத்துச் சென்று தீர்வுகாணாவிட்டால் அந்த முட்டுச்சந்திலிருந்து வெளியேற வழி இல்லை. எனவே நமது தேர்தல் பிரச்சாரம் வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல, சலுகைதரும் பேரங்களை உருவாக்குவதற்காக அல்ல, எந்தக்கட்சி குறைந்த தீங்கு என்று விவாதிப்பதற்கல்ல, நமது பிரச்சாரம் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. பல தலைமுறைகளாக ஸ்ராலினிஸ்டுகளாலும், தொழிலாளர் அதிகாரத்துவங்களாலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவுக்கு இழைக்கப்பட்ட பெரும் சேதத்தை சரிசெய்வதற்கு, மார்க்சிசம் மற்றும் சர்வதேச சோசலிசத்தின் மகத்தான தொழிலாளர் விடுதலை கருத்துக்களை, சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் போராட்டங்களின் மையத்திற்கு மீளக் கொண்டுவருவதும்தான் நமது பிரச்சாரத்தின் நோக்கமாகும்.

Top of page