World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

West Bengal carries out first hanging in India in a decade

பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கு வங்கம் முதலாவது தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது

By Sarath Kumara
30 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற மாதம் இத்தியாவின் மேற்குவங்க மாநிலம் 1995-க்கு பின்னர் முதலாவது தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த மாநிலத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில் குறிப்பான முக்கியத்துவம் உண்டு, ஏனென்றால் வெளிப்படையாக செயல்படும் வலதுசாரி கட்சியினால் அது நிறைவேற்றப்படவில்லை மாறாக ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட்- மார்க்ஸிஸ்ட் (CPI-M) தலைமையிலான "இடதுசாரி கூட்டணி அரசாங்கத்தினால் அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதினால் ஆகும்.

43-வயதான தனஞ்சாய் சாட்டர்ஜி, 1990-ல் 14- வயது மாணவி ஹெடல் பரேக்கை கற்பழித்து கொலை செய்ததாக ஆகஸ்ட் 14-ல் தூக்கிலிடப்பட்டார். அவர் தண்டிக்கப்பட்டது தொடர்பாக சந்தேகங்கள் நிலவிய போதிலும் அவரது தந்தையும், சர்வதேச பொதுமன்னிப்புப்புச் சபை, ஆசிய மனித உரிமைகள் கழகம் (AHRC) மற்றும் சர்வதேச பொது மனிப்பு சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் பொதுமன்னிப்பு கோரி மனுக்களை தாக்கல் செய்தபோதிலும் அவர் தூக்கிலிடப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியமும் கூட தூக்கு தண்டனையை நிறுத்துமாறும் மரண தண்ன்னையை இரத்து செய்யுமாறும் இந்தியாவை கேட்டுக்கொண்டது.

தனக்கும் அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும், தொடர்பில்லை என்றும் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சட்டர்ஜி இறுதிவரை வலியுறுத்திக்கூறிவந்தார். அந்த குற்றம் நடைபெற்றதை நேரில் கண்ட சாட்சிகள் எவருமில்லை. பல சாட்சிகள் சாட்டர்ஜி, பரேக்கின் அடுக்கக குடியிருப்பிற்கு சென்றதாகவும், அப்போது பரேக்கின் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறினர். அந்தப் பெண் சாட்டர்ஜி தனக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருப்பதாக புகார் கூறியதாகவும், அதற்கு பழிவாங்கும் முறையில் அந்தக் குற்றத்தை அவர் செய்ததாகவும், போலீசார் குற்றம் சாட்டினர். அந்த வீடுகள் கொண்ட வளாகத்தில் காவலராக பணியாற்றிவந்த சாட்டர்ஜி அந்தக் கொலைக்குப் பின்னர் தலைமறைவாகிவிட்டார் மற்றும் பரேக்கின் கைக்கடிகாரம் (மணிக்கூடு) அவரது கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டது.

சாட்டர்ஜி தண்டிக்கப்பட்ட நேரத்தில் DNA மரபணு சோதனை முறை நடைமுறையில் இல்லை, அவர் தண்டிக்கப்பட்ட பின்னர் அவரது வக்கீல் அத்தகைய சோதனையை, நடத்துமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெலிகிராப் நாளேட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தொடக்கத்திலிருந்தே விசாரணை நீதிபதி R.N. Kali பாரப்பட்சப்போக்கில் இருந்ததாக தோன்றியது என்று கோடிட்டுக்காட்டியிருந்தார். அவர் முன்னர் அந்த வழக்கு விசாரணைக்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அவர் அளித்த ஒரு பேட்டியில், தனது சொந்த காவலர்கள் ஒருவரால் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலைக் குற்றத்தோடு இந்த கொலையை ஒப்பிட்டிருந்தார்.

''குற்றம் சாட்டப்பட்டவரது தரப்பு எடுத்துரைக்கப்படும் முன்னரே நீதிபதி ஒரு முடிவிற்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. தண்டிக்கப்பட்டவருக்கு எதிரான சான்று அந்த நீதிபதி நினைவு கூர்ந்ததைப்போல், சந்தர்ப்ப சாட்சியங்கள் மட்டுமல்ல, ஆனால் அவை திட்டவட்டமான முடிவிற்கு வருகின்ற சாட்சியங்களாகத் தோன்றின'' என்று அந்தப் பத்திரிகையாளர் ஆகஸ்டில் எழுதினார்.

சாட்டர்ஜி உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார் மற்றும் மாநில ஆளுநர் மற்றும் இன்று பதவியில் இருக்கும் ஜனாதிபதி உட்பட இரண்டு ஜனாதிபதிகளுக்கு கருணைமனு தாக்கல் செய்தார். அவை அத்தனையும் இரத்துசெய்யப்பட்டன. சரியான வக்கீல்களை வைத்துக்கொள்கிற அளவிற்கு சாட்டர்ஜி வசதியாவனவர் அல்ல, அவர் பரம ஏழை. அவரது அப்பீல்களில் ஒன்றை நீதிமன்ற கைதிகள் நலத்துறையில் பணியாற்றிய சக கைதியான ஒருவர் எழுதிக்கொடுத்தார். இறுதிக்கட்டங்களில் மட்டுமே சர்வதேச, பொதுமன்னிப்பு அமைப்பு அவர் முறையான சட்ட உதவியை பெற உதவியது.

இறுதியாக நீதிமன்ற மேல்முறையீட்டில் சாட்டர்ஜியின் வக்கீல்கள் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவது நீண்டகாலத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட முந்திய வழக்குகளை வக்கீல்கள், மேற்கோள் காட்டினர். இந்த வாதங்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பத்தாண்டுகள் தாமதமானதற்கு அரசாங்கம் காரணமல்ல, சாட்டர்ஜிதான் பொறுப்பு என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் தூக்கிலிடப்பட்ட 55- வது கைதி சாட்டர்ஜி. தூக்கு தண்டனைகளுக்கு கணிசமான அளவிற்கு எதிர்ப்பு நிலவுவதால் அது போன்ற வழக்குகளில் விசாரணைகளும், மேல் முறையீடுகளும் வழக்கமாக நீண்டகாலத்திற்கு இழுத்தடித்துக்கொண்டே இருக்கும். மிக அபூர்வமாகத்தான் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். 1991-க்கும் 1998-க்கும் இடைப்பட்ட காலத்தில் 700-பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை, இன்னும் நீதிமன்ற மேல்முறையீடுகளில் நிலுவையிலுள்ளன, அல்லது கருணைமனு ஏற்கப்பட்டு, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் மேற்கு வங்காள இடதுசாரி அரசாங்கம் ஊடகங்களின் ஆதரவோடு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அனுதாபத்தை முன்னிறுத்தி சாட்டர்ஜியை ஒரு ஆபத்தான மனநோயாளி என்று சித்தரித்து, தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்காக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. சாட்சியம் இல்லாத நிலையிலும், ஒரு தொலைக்காட்சி அலைவரிசை ஒரு தலைப்பட்சமாக அந்தக் குற்றத்திற்கு பரபரப்பூட்டி பலமுறை ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதர பல தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களது சொந்த பாரபட்சப்போக்கில் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்பின.

தூக்குத்தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான பரபரப்பை தொலைக்காட்சிகளும், செய்திப் பத்திரிகைகளும் மிகப்பெருமளவிற்கு மக்களிடையே உருவாகி மிக விவரமாக எப்படி தூக்குதண்டனை நிறைவேற்றப்படும் என்பதை சித்தரித்தன. இப்படிப்பட்ட அபத்தமான, சித்தரிப்பு, துயரமிக்க நிகழ்ச்சிகளாக முடிந்துவிட்டன. இத்தகைய நாடக தூக்கு தண்டனைகளால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் எட்டு குழந்தைகள் பலியாயின.

மேற்கு வங்காள முதலமைச்சரும், பழம்பெரும் ஸ்ராலினிஸ்டுமான புத்ததேவ் பட்டாசார்ஜி இந்த பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கி ஊடகங்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். ''இந்தக் குறிப்பிட்ட வழக்கில் இந்த அரசாங்கமும் நானும் தூக்குதண்டனையை ஆதிக்கிறோம். அத்தகைய குற்றங்களை புரிபவர்களுக்கு தெளிவாக உரத்தக்குரலில் இது எதிரொலிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார். அவருக்கு மன்னிப்புத்தர வேண்டும் என்று எப்படி நாம் சிந்திக்க முடியும்?'' என்று அவரது மனைவி மீரா பட்டாச்சார்ஜி கேட்டார்.

உண்மையிலேயே மாநில அரசாங்கம் தூக்குதண்டனையை நிறைவேற்றுவதில் விரைவுபடுத்தியது. சாதாரணமாக இந்திய அதிகாரத்துவம் தூங்கிவழிவது, நடவடிக்கை பெரும்பாலும் மந்தநிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுவிடும், ஆனால் இந்த வழக்கில் 11- நாட்களில் பல்வேறு அரசாங்கத் துறைகளிலும் தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கான பல்வேறு சட்ட ரீதியான எழுத்து வேலைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பட்டாச்சார்ஜி இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். தலைமை செயலாளரையும், உள்துறை செயலாளரையும் சந்தித்து தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். சாட்டர்ஜியின் பிறந்த நாளில் இறுதியாக தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றத்தின் அரசியல் பிரச்சாரத்தன்மையை ''இந்து'' நாளிதழ் தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. 1994-ம் ஆண்டு சாட்டர்ஜியின் முதலாவது கருணை மனு ஜனாதிபதிக்கு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டபோது ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான அரசாங்கம் அந்த வழக்கை புறக்கணித்தது. நீதித்துறை அதிகாரி ஒருவர் 2003- அக்டோபரில் உயர்நீதிமன்றம் தூக்குதண்டனைக்கு விதித்துள்ள தடை ஆணை இரத்து செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பின்னர்தான் 13 ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென்று தூக்குதண்டனையை நிறைவேற்றுவதற்கான பிரச்சாரம் தொடங்கியது என்பதை அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

சாட்டர்ஜியை தூக்கிலிட வேண்டும் என்பதற்கான பிற்போக்கு பிரச்சாரம் மீண்டும் ஒருமுறை ஸ்ராலினிச CPI-M- க்கும் அதன் "இடது சாரி கூட்டணி கட்சிகளுக்கும், சோசலிசத்திற்கும் சம்மந்தமில்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருக்கிறது. கடந்த 20- ஆண்டுகளுக்கு மேலாக மாநிலத்தில் ஆட்சியில் இருந்து வருகிற CPI-M பொதுமக்களை எதிர்கொண்டிருக்கிற எரியும் சமூக பிரச்சனைகள் எதையும் தீர்த்துவைக்கவில்லை. இதர இந்திய மாநிலங்களில் அதன் எதிரிகள் நடத்துகின்ற அரசாங்கங்களை போன்றே மேற்கு வங்க இடதுசாரி அரசாங்கமும், முதலீடுகளை ஈர்க்கின்ற முயற்சியாக பொருளாதார சீரமைப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது, அதன் மூலம் ஏழைகளுக்கு பணக்காரர்களுக்கும் இடையில் நிலவுகின்ற மிகப்பெரிய இடைவெளியை அதிகரித்துள்ளது.

அண்மை ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற பல்வேறு வலதுசாரி கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கிளப்பிவிட்டு மக்களது ஆதரவைப்பெற முயன்று வந்தது CPI-M -ற்கு சவால்களாக தோன்றின. அதேபாணியில் CPI-M- பதிலளித்து அதன் சமூகக் கொள்கைகள் முழுமையாக தோல்வியடைந்ததிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக குற்றங்களை ஒடுக்குவதில் கடுமையாக இருப்பதாக காட்டிக் கொண்டதன் இறுதி முடிவுதான் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சியாகும்.

சென்ற மாதம் டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டிருந்ததைப்போல் பல ஆண்டுகளுக்கு முன்னர் CPI-M முற்றிலும் மாறுபட்டநிலை எடுத்திருந்தது. ஒரு பணக்கார தந்தையும், மகனும் மகனது மனைவியை கொலை செய்ததாக தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டனர். அந்த வழக்கில் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு மேற்குவங்காள அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பல்வேறு விமர்சகர்களும், சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு போன்ற மனித உரிமைகள் குழுக்களும், இந்திய நீதி நிர்வாகமுறை, குறிப்பாக தூக்குதண்டனை, ஏழைகள், கல்வியறிவு இல்லாதோர், மற்றும் சமூகத்தில் விளிம்பு நிலையிலுள்ளவர்களுக்கு எதிராக பாரபட்சமான முறையில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை சுட்டிக்காட்டின. 1982-ல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான P.N பகவதி ''தூக்குத் தண்டனை அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஏனென்றால் தண்டிக்கப்படுபவர்களில் மிகப்பெரும்பாலோர், ஏழைகள்" என்று கருத்து தெரிவித்தார்.

இந்திய மக்களில் மிகப்பெரும்பாலோர் முறையான வக்கீல்களை வைத்துக்கொள்ளும் வசதியில்லாதவர்கள், நாட்டுமக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கல்வியறிவு இல்லாதவர்கள், எனவே தங்களை தற்காத்து கொள்ளுகிற நிலையில் இல்லாதவர்கள். சாட்டர்ஜி தனது இறுதி நாட்களில் ''நான் மறு பிறவியில் பணக்காரனாக பிறக்க விரும்புகிறேன், ஏனென்றால் நீதி எப்போதுமே பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளது'' என்று அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.

முன்னணி பிரமுகர்கள் பலர் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரித்து நிற்கின்றனர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான மிருனாள் சென் ஃப்ரன்ட் லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது ''நான் எப்போதுமே தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்து கொண்டிருக்கிறேன், தூக்கு தண்டனை மிகக்கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான நடைமுறை'' என்று கூறியுள்ளார்.

இறுதி நாட்களில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான எதிர்ப்பு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட விமர்சனத்தில், ''எனக்கு தெரிந்த பலர் தூக்குத் தண்டனையை ஆதரிப்பவர்கள், தொலைக்காட்சி அலைவரிசைகளில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தொடர்பான நிகழ்ச்சிகளை பார்த்ததும் திடீரென்று தூக்குத்தண்டனை தொடர்பாக சந்தேகங்களுக்கு ஆட்பட்டனர். ஒரு ஏழை மனிதனை கொல்வதில் தாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோமோ என்ற உணர்விற்கு ஆட்பட்டனர்'' என்று குறிப்பிட்டார்.

என்றாலும், CPI-M அசையவில்லை. மேலும், ஸ்ராலினிஸ்டுகள் இந்திய அரசியல் நிர்வாகக்கட்டுகோப்பால் ஆதரிக்கப்படுகின்றனர். ஜூலை-2-ல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல், சாட்டர்ஜியை தூக்கிலிட வேண்டுமென்று இந்திய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார். ஆகஸ்ட் 4-ல் ஜனாதிபதி அப்துல்கலாம் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இந்திய உச்சநீதிமன்றம், தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இறுதி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி (BJP) கற்பழிப்பு வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று திரும்பத்திரும்ப வலியுறுத்தி வருவதால் இதற்கு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவின் மிகப்பெரிய முதலாளித்துவக்கட்சி ஒன்றை தெளிவாக தெரிந்துகொண்டிருக்கின்றன. CPI-M மிச்சமீதமாக தன்னோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சிதைந்துவிட்ட "இடது" முத்திரைகளை பயன்படுத்தி, முதலாளித்துவக் கட்சிகளுக்கு, செயல்படுத்துவதில் அரசியல் அடிப்படையில் சங்கடங்கள் ஏற்படும் காரியங்களை, CPI-M செய்து முடிக்கும் என்பதை தெரிந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்களது எதிர்ப்பிற்கப்பாலும் தூக்குத் தண்டனையை பிடிவாதமாக நிறைவேற்றியுள்ள ஸ்ராலினிஸ்டுகள் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளனர். அதை இதர மத்திய மாநில அரசாங்கங்கள் பெருகிவரும், அரசியல் எதிர்ப்பை திசை திருப்புவதற்காக சட்டம் ஒழுங்கு ஆவேசக் கூக்குரலை கிளப்பிவிடுவதற்கு ஐயத்திற்கிடமில்லாமல் பயன்படுத்திக்கொள்ளும்.

Top of page