World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Kerry plugs his conservative credentials in second presidential debate

இரண்டாவது சுற்று ஜனாதிபதி தேர்தல் விவாதத்தில் தனது பழமைவாத நற்சான்றிதழ்களை மறைத்த கெர்ரி

By Barry Grey
9 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளிக்கிழமையன்று St. Louis-ல் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஜனாதிபதி விவாதம் ஒளிபரப்பப்பட்டது, ஏறத்தாழ அது கேலிக்கூத்து தன்மையில் நடைபெற்றது, ஜனாதிபதி புஷ் அதிரடியான பொய்களையும் ஈராக் போரை நியாயப்படுத்துவதற்கு பொருத்தமற்ற காரணங்களையும் கூறினார், அதே நேரத்தில் கெர்ரி தனது நேரத்தில் பெரும்பகுதியை தனக்கு சேர்ந்துள்ள பயங்கர ''தாராளவாத'' முத்திரைகளை கைவிடுவதிலும் தனது நிதி கருவூல பழமைவாதத்தை பட்டியலிடுவதிலும் இராணுவவாத நற்சான்றிதழ்களை எடுத்துரைப்பதிலும் செலவிட்டார்.

கருத்தைக் கவரும் சொற்றொடர் மற்றும் சத்த முழக்கங்களுக்கிடையே புஷ் சுதந்திரம் பற்றி கோமாளித்தனமாக சலிப்பூட்டும் போதனை செய்தார். கெர்ரியின் ''குழப்பமான சமிக்கைகளை'' கண்டித்தார்: ''நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்'' என்ற கெர்ரியின் கூற்று ஒரு மந்திரமும், உள்ளத்தை மரத்துப்போகச் செய்வதுமாகும் ''அவர் சமாதானத்திற்கான ஒரு திட்டமில்லாமல் அவசரக்கோலத்தில் போருக்கு சென்றார்'' போன்ற பல்லவி - இரண்டு அம்சங்களை தெளிவாக வெளிப்படுத்தியது.

முதலாவதாக, மக்களில் பரந்த வெகுஜனங்கள் போருக்கு ஆழமான எதிர்ப்பு உணர்வோடு உள்ளார்கள் என்பதை இருதரப்பு வேட்பாளர்கள் பிரச்சாரங்களிலும், எதிரொலிக்கவில்லை, மற்றும் இரண்டாவதாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கிடையில் போர் மற்றும் சமாதானம், ஜனநாயக உரிமைகள், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கைதரம் தொடர்பான உயிர்நாடி பிரச்சனைகளில் நிலவுகின்ற அடிப்படை வேறுபாடுகள் மிகக்குறுகலானவை.

ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு படுமோசமாகிக் கொண்டிருக்கும் புதைசேற்று சூழ்நிலையின் கீழ், விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டுள்ளன, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக துன்பங்களின் வளர்ந்துவரும் அறிகுறிகளின் கீழ், மற்றும் அந்த பாரசீக வளைகுடா நாட்டின்மீது படையெடுத்து சென்று பிடித்துக்கொள்வதற்கு கூறப்பட்ட அனைத்து சாக்குப்போக்குகளும் பொய்யானவை என்று நிரூபித்துவரும் வரிசையான அம்பலப்படுத்தல்களின் சூழ்நிலையின் கீழ் இந்த விவாதம் நடைபெற்றது. தேர்தல் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடைபெறவிருக்கிறது, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் முறையின் எதிர்கால வாய்ப்பு வளமும் அதன் இரண்டு பாரம்பரிய கட்சிகளும் மக்கள் கண்முன் எல்லாவிதமான நம்பகத்தன்மையையும் இழந்து கொண்டுவருகின்றனர்.

ஈராக்கில் வெற்றி மற்றும் உள்நாட்டில் பொருளாதார செழிப்பு என்ற நிர்வாகத்தின் கூற்றுக்களை எவ்வழிலாயினும், அப்பட்டமான உண்மைகளுக்கு அப்பாலும், புஷ்ஷை கையாளுபவர்கள் அவர்களுடைய முதன்மையானதை அந்த மனிதன் பாதுகாக்க வேண்டுமென்று பதிலளித்து வந்தனர். அவர் முதல் விவாதத்தில், தற்காப்பு செயற்பாடுகளுக்காக கலைந்துரையாடியபொழுது தினறினார், இப்போது கெர்ரி போருக்கு எதிராக விமர்சனங்களை தெரிவித்து வருவதற்கும் கடந்த காலத்தில் சதாம் ஹூசேனை கவிழ்ப்பதற்கு எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை ஆதரித்து நின்றதற்கும் இடையிலான முரண்பாடுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு புஷ் உதவியாளர்கள் அவரை கட்டாயப்படுத்தினர்.

அதற்கு மாறாக கெர்ரி, ஈராக்மீது படையெடுக்க புஷ் முடிவு செய்தது தொடர்பான தனது வாய்வீச்சை தற்போது கணிசமான அளவிற்கு அமுக்கி வாசித்தார், ''தேசத்தை தவறாக வழிநடத்தியதாக'' ஜனாதிபதி மீது இதற்கு முன்னர் கூறிய குற்றச்சாட்டுக்களின் விசையை மென்மைப்படுத்தி குறிப்பிட்டிருந்தார்.

இது தனிப்பட்ட முறையில் கோழைத்தனம், அல்லது தவறான கணிப்பு என்ற சாதாரண விவகாரம் அல்ல. எட்டு நாட்களுக்கு முன்னர் நடந்த முதலாவது ஜனாதிபதி விவாதத்தின் பின்னர் கெர்ரியின் வாக்காளர் ஆதரவு வளர்ந்து வருகிறது, இப்போது தேர்தல் போட்டி சூடுபிடித்துவிட்டது. ஜனநாயகக் கட்சியின் வெற்றி இப்போது கடுமையான சாத்தியக்கூறாக மாறிவிட்டது, எனவே கெர்ரி வெள்ளை மாளிகை எதிர்கொள்கின்ற அரசியல் பணிகளுக்கு ஏற்ற வகையில் தனது தந்திரங்களை மாற்றிக்கொள்ள கெர்ரி பிரச்சாரம் முயலுகிறது.

ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி எதிரணியைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல என்பது மட்டுமல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு அரசியல் கருவி ஆகும், அது ஈராக்கியர் கிளர்ச்சி எழுச்சியை நசுக்கவும் கருதுகிகிறது, அந்த நாட்டின் எண்ணெய் வளங்களின் முக்கியமான நலனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதை உறுதிசெய்து கொள்ள கருதுகிறது. இந்த இரத்தம் தோய்ந்த பணியை செயலாற்றுகின்ற பொறுப்பு கெர்ரி ஜனாதிபதியாகும் போது வந்து சேரும்.

எனவே கெர்ரி போரை புஷ்- நடத்திய விதத்தை இழிவுபடுத்துவதற்கும் அந்த போர் உண்மையிலேயே கிரிமினல் தான் என்பதை அம்பலப்படுத்துவதற்கும் இடையில் கழைக்கூத்தாடி கம்பிமேல் நடப்பதைப்போல் செயல்பட்டாக வேண்டும். போர் எதிர்ப்பு வாய்வீச்சு எல்லைகடந்து செல்லுமானால் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனங்களும் மதிப்பிழந்து நிற்கும் ஆபத்து உண்டு என்பதனால் ஐயத்திற்கிடமின்றி அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார்.

அதே நேரத்தில், தனது சொந்த கட்சிக்குள்ளேயே நிலவுகின்ற சக்திவாய்ந்த பிரிவையும் (கன்னையையும்), அவர் சமாளிக்க வேண்டியுள்ளது ---அதை பிரதிநிதித்துவப்படுத்தும் செனட்டர் ஜோசப் லிபர்மேன் மற்றும் கிளின்டன் போன்றவர்கள்---- அது விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும், போருக்கு ஆதரவு காட்டி வருகிறது.

புஷ் நிர்வாகம் மேற்கொண்டுவரும் வெளிப்படையான பெருநிறுவன ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை மாற்றவும், போருக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொது மக்களது கட்டளையை பெறுகின்ற அடிப்படையில் நவம்பர் 2 தேர்தலில் தீர்க்கமான வெற்றி பெறுவதை ஜனநாயகக் கட்சி விரும்பவில்லை. எனவேதான், கெர்ரி தொடர்ந்து சில மக்களைக் கவரும் கருத்துகளை உருவாக்கி வந்தாலும், பொருத்தமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்குவதை தவிர்ப்பதில் மிகுந்த சிரமப்பட்டு விளக்கம் தருகிறார்.

ஜனநாயகக் கட்சி வாக்காளர்களிடையே நிலவுகின்ற மிகப்பெரும் போர் எதிர்ப்பு உணர்வுகளை அணிதிரட்டுவதன் அவசியத்திற்கிடையில் அதைவிட மிக முக்கியமாக ---ஆளும் செல்வந்த தட்டினருக்கு ஈராக் ஆக்கிரமிப்பை நீடித்து அங்கு அமைதியை நிலைநாட்டும், மிகவும் சிக்கலான பணியை நீடித்து செயல்படுத்துவதாக உறுதியளிப்பதிலும்--- கெர்ரி பிரச்சாரத்தின் முரண்பாடுகள்---வெள்ளி கிழமை நடைபெற்ற விவாதத்தில் குறிப்பாக நம்பகத்தகாத நிலையை வெளிப்படுத்தியது. CIAஇன் தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் Charles Duelfer- புதன்கிழமையன்று வெளியிட்ட அறிக்கை பற்றி கெர்ரி குறிப்பிடவில்லை, 1991-முதலாவது வளைகுடாப்போர் முடிந்த சிறிது காலத்தில் சதாம் ஹூசேன் தனது வழக்கத்திற்கு மாறான ஆயுதங்கள் தயாரிப்புத்திட்டங்களை ஒழித்துக்கட்டிவிட்டார் என்று அது உறுதிப்படுத்தியது.

அதற்கு மாறாக புஷ், அந்த அறிக்கையை பலமுறை சுட்டிக்காட்டி ஈராக் மீதுபடையெடுக்க தான் முடிவுசெய்தது சரிதான் என்று அந்த அறிக்கை கூறியிருப்பதாக உண்மையை தலைகீழாக புரட்டினார். ''அவர் (கெர்ரி) ''ஆய்வாளர்கள் தங்களது பணியை செய்யவிட்டு விடுவோம்'' என்று கூறிக்கொண்டிருக்கிறார். அதைத்தான் Duelfer அறிக்கை காட்டுகிறது. அவர் ஆய்வாளர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்'' என்று புஷ் அறிவித்தார்.

உண்மையிலேயே Duelfer கூறியுள்ளபடி, சதாம் ஹூசேனின் மோசடி என்னவென்றால் அமெரிக்கரிடம் பொய்சொல்லி அதற்கெல்லாம் மேலாக, ஈராக் ஆட்சியும், ஈரானியரும் தன்னிடம் இல்லாத குவிந்திருக்கும் ஆயுதங்கள் இருப்பதாக நம்ப வேண்டுமென்று மோசடி செய்தார்.

மற்றொரு கட்டத்தில் புஷ் அபத்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்: ''சதாம் ஹூசேன் ஒரு அச்சுறுத்தலாக விளங்கினார் ஏனென்றால் பயங்கரவாத எதிரிகளுக்கு அவர் பேரழிவுகரமான ஆயுதங்களை தந்திருக்கக்கூடும். பொருளதாரத்தடைகள் செயல்படவில்லை.'' Duelfer அறிக்கை இதற்கு மாறாக துல்லியமான உறுதிப்படுத்தலை கொண்டுள்ளது: சதாம் ஹூசேனிடம் பேரழிவுகரமான ஆயுதங்கள் எதுவுமில்லை மற்றும் பொருளாதாரத்தடைகள் உண்மையிலேயே ''செயல்பட்டுவந்தன.''

இவற்றை சுருக்கமாக கூக்குரலிட்ட கெர்ரி, அந்த புள்ளியை அழுத்திக் கூறவில்லை. ஏன்? அதற்கு ஒரு காரணம் Duelfer அறிக்கை கிளிண்டனின் ஜனநாயக கட்சி நிர்வாகமும் அதன் ஆதரவாளர்களான கெர்ரி போன்றவர்களும், ஈராக்கில் WMD கள் இருப்பதாக பொய்க் குற்றம் கூறி, அதை கொடூரமான பொருளாதார தடைகளுக்கும், இராணுவத் தாக்குதல்களுக்கும் உட்படுத்தி புஷ் நிர்வாகத்தை போன்றே குற்றம் புரிந்திருக்கிறார்கள் என்பதை அது ஸ்தாபித்துள்ளது.

பெரும்பாலும் இந்த விவாதம் புஷ், கெர்ரி மீது அவர் ஒரு லிபரல் என்று குற்றம் சாட்டுவதற்கும், அதற்கு கெர்ரி இது போன்ற முத்திரைகளில் ஒன்றுமில்லை தான் ஒரு நிதிநிர்வாக கன்சர்வேடிவ் என்று சித்தரிப்பதுமாகவே நடைபெற்றது. இந்த வகையில் இரண்டுமுறை நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்காரர்களிடமிருந்து பிரிந்து சென்று றேகன் நிர்வாகத்தின்போது Gramm Rudman பட்ஜெட் குறைப்பு மசோதாவை ஆதரித்ததாகவும், சிக்கன செலவீன கொள்கையை கடைபிடிப்பதற்காக பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்தம் கொள்கையை ஆதரித்ததாகவும் தனது உரையில் இரண்டுமுறை குறிப்பிட்டார். சுகாதார சேவைகள் மற்றும் கல்வி தொடர்பாக தான் தேர்தல் பிரச்சாரத்தில் அளித்துள்ள உறுதிமொழிகள் பட்ஜெட் பற்றாக்குறையை வெட்டுவது என்ற உறுதிமொழிக்கு முரணாக அமையுமானால், அவற்றை (கல்வி, சுகாதாரம், சம்மந்தமான உறுதிமொழிகளை) கை விட்டுவிடப்போவதாக முன்கூட்டியே தெரிவித்தார்.

''நான் ஏற்கனவே எனது விருப்பத்திற்குரிய திட்டங்கள் சிலவற்றை விட்டுவிட்டேன். குழந்தைகள் நில திட்டத்திற்கு நிதியளிக்க விரும்பினேன். தேசிய சேவைத்திட்டத்தையும், முன்னெடுத்து வைத்தேன். இவற்றை நான் கைவிட்டு விட்டதற்குக்காரணம் ஜனாதிபதியின் பட்ஜெட் பற்றாக்குறை பெருகிக் கொண்டே வருகிறது. எனவேதான் நான் வரும் நான்கு ஆண்டுகளுக்குள் பட்ஜெட் பற்றாக்குறையை பாதியாகக் குறைத்துவிட உறுதியளிக்கிறேன்'''

தான் தேசபக்தி சட்டத்தையும், புஷ்ஷின் கல்வி மசோதாவையும் ஆதரித்ததாக மேலும் கூறினார். மேலும் தனது வலதுசாரி போக்குகளை விவரித்தார். ''நான் சேம நலத்திட்டத்தை ஆதரித்தேன், அமெரிக்க தெருக்களில் 100,000- போலீஸ்காரர்களை, பணியில் அமர்த்தும் போராட்டத்திற்கு தலைமை வகித்தேன், இளம் குழந்தைகள் வாழ்வில் நம்பிக்கைகள் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன்'' என்று கூறினார்.

வெளியுறவுக் கொள்கை தொடர்பாகவும் இதே முறையில்தான் நேருக்குநேர் உரையாடல் சென்று கொண்டிருந்தது. கெர்ரியின் உரையாடல் தொடர்பாக அவர் பயங்கரவாதம் மீதாக "மிதமான தன்மை" கொண்டவர் அரைகுறை சமாதான விரும்பி என்று புஷ்- குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த கெர்ரி "அமெரிக்காவின் பாதுகாப்பை பொறுத்தவரை வேறு எந்த அமைப்பிற்கும் நான் இரத்து அதிகாரத்தை தந்துவிட சம்மதிக்கமாட்டேன். நான் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து கொன்று குவிப்பேன். ஈரான் தொடர்பாக கண்டிப்பான நடவடிக்கை எடுப்பேன், என்னை நம்பலாம் என்று கூறினார்."

மேலும் 40,000 துருப்புக்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கைகளை ஆதரிக்கின்ற ஒய்வுபெற்ற ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்கள் பட்டியலை கெர்ரி தந்தார்.

இந்த நேர்முக கலந்துரையாடல்கள் "நகர மண்டபத்தில் நடைபெறும் கூட்டம்" போல் வேட்பாளர்களுக்கும் நடுநிலை வாக்காளர்களுக்குமிடையில் நடைபெற்றது. நாடக பாணியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் சோதனை செய்யப்பட்டு, பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் போர் தொடர்பாகவும், அந்தப் போருக்கான அடிப்படையை உருவாக்கியவர்கள் பற்றியும் கொண்டுள்ள ஆத்திரத்தை மற்றும் கணிசமான ஊதியம் தரும் பணிகள் ஒழித்துக்கட்டப்பட்டு வருவது பற்றியும் செல்வ உடைமையில் மிகப்பெரும் ஏற்றதாழ்வுகள் உருவாகிக்கொண்டிருப்பது பற்றியும் சமூக கோபதாபங்களை வெளிப்படுத்துபவர்கள் இல்லாத முறையிலும், தேர்ந்தெடுத்து சோதனை செய்து பார்வையாளர்களை அனுப்பினர்.

இந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து நடத்துகின்ற Gallup- வாக்குக் கணிப்பு அமைப்பு பார்வையாளர்களை தேர்ந்தெடுக்கிறது. அதை ஒரு கிறிஸ்தவ மதபோதகர் நடத்துகிறார். நேர்முக உரையாடல் நடுவரான ABC News அமைப்பைச் சார்ந்த Charles Gibson எந்தக் கேள்விகள் வேட்பாளர்களிடம் கேட்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வார். எல்லா கேள்வியும், முன்கூட்டியே எழுதப்பட்டு நடுவரிடம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இத்தகைய Potemkin- கிராம சூழ்நிலையில்கூட, கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள்- போர் தொடர்பாகவும் தேசபக்தர் சட்டம் பற்றியும், வேலைவாய்ப்பு தொடர்பாகவும், மருத்துவ சேவை, கட்டாய இராணுவ சேவை தொடர்பாகவும், கேட்கப்பட்ட கேள்விகள் புஷ் மீது அப்பட்டமான எதிர்ப்பு அல்லது அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தன.

இந்தக் கேள்விகள் எதற்கும் கெர்ரி கடுமையான மாற்று எதையும் தரவில்லை. இதற்கு என்ன காணம் என்பதை ஜனநாயகக்கட்சி வேட்பாளரே விளக்கினார். ஆண்டிற்கு 2,00,000- டாலருக்கு மேல் ஊதியம் பெறுகின்ற மக்களில் ஒரு சதவீதம் பேருக்கு புஷ் வரிகுறைப்பு செய்திருப்பதை இரத்துச்செய்யப் போவதாக தான் பேசியது குறித்து கெர்ரி விளக்கம் தந்தார்:

''தற்போது ஆண்டிற்கு 2,00,000-திற்கு மேற்பட்ட டாலர்களை சம்பாதிக்கின்ற மக்களுக்கு பில் கிளின்டன் காலத்தில் விதிக்கப்பட்ட வரி அளவிற்கு வரி உயர்த்தப்படும், அப்போது மக்கள் ஏராளமாக பணம் சம்பாதித்தார்கள், இங்கே வந்திருப்பவர்களை நான் சுற்றிப்பார்க்கும்போது இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களில் மூன்றுபேர் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்: நான் ஜனாதிபதி மற்றும் சார்லி, நான் வருந்துகிறேன், நீங்களும் தான் ''

இந்த விளக்கம் இரண்டு கட்சிகளில் ஜனாதிபதி துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் செய்திகளை தருகின்ற ஊடக முதல்வர்கள் ஆகிய கோடீஸ்வரர்கள்தான் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்ற அமெரிக்க சமூகத்தின் உண்மையான வர்க்க பிரிவுகளை எடுத்துகாட்டியது. இரண்டு கட்சிகளும், எத்தகைய சமூக நலன்களுக்காக போராடுகின்றன என்பது இந்தக் கலந்துரையாடலில் வெளிப்பட்டது.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி கலந்துரையாடலில் தன்னை பகிரங்கமாக பெரும் செல்வந்தர்களின் பிரதிநிதியென்று காட்டிக் கொண்டிருப்பது எந்தளவிற்கு ஜனநாயகக் கட்சி வலதுசாரி பக்கம் சாய்ந்துவிட்டது என்பதையும், சமூக சீர்திருத்தக் கொள்கைகளை மற்றும், தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொண்ட உழைக்கும் மக்களை விட்டு எவ்வளவு தூரம் விலகிக்சென்றுவிட்டது என்பதையும் முற்றிலுமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும், இந்தக் கலந்துரையாடல் தெளிவுபடுத்தியது.

இந்த சிறிய நகைச்சுவையோடு அமெரிக்க நிதியாதிக்கக் குழுவின் இரண்டு பிரதிநிதிகளுக்கும் இடையே வாக்காளர்கள் ஏதாவதொருவரை தேந்தெடுக்க வேண்டுமென்று கெர்ரி பெருமையடித்துக் கொண்டார்.

Top of page