World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Top adviser reveals Sharon set out to sabotage peace talks

இஸ்ரேல்: சமாதானப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க திட்டமிட்ட ஷரோன் முன்னணி ஆலோசகர் அம்பலம்

By Chris Marsden
9 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

பாலஸ்தீன ஆணையத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையை தடுத்து நிறுத்தவும் அதன் மூலம் மேற்குக்கரை பகுதியில் பெரும்பாலான யூத குடியேற்றக்காரர்களை அங்கேயே நிரந்தரமாக வைத்திருக்கவும், இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோனின் தலைமை ஆலோசகரான டோவ் வெஸ்கிளாஸ் (Dov Weisglass) ''ஒருதலைப்பட்சமாக பின்வாங்கும்'' திட்டத்தை உருவாக்கியுள்ளார். இதை புஷ் நிர்வாகத்தின் முழு ஆதரவோடு அவர் செய்தார் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஷரோனுடைய திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான டோவ் வெஸ்கிளாஸ் வெள்ளை மாளிகையுடன் இஸ்ரேல் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவிற்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவர் Ha'aretz Friday பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஒரு பகுதி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. ''இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் சமாதான முன்னெடுப்பை முடக்குவது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

''பாலஸ்தீனியர்களுடன் அரசியல் அடிப்படையில் நடவடிக்கை எதுவும் நடப்பதற்கான வழிவகைகளை தடுத்து நிறுத்துவதற்கு தேவைப்படும் அனைத்து அடிப்படைகளையும் வழங்குவது இந்தத் திட்டமாகும்''

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவிலும் மிக முக்கியமாக உள்நாட்டிலும் ஷரோன் பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் ரத்தக்களறி தாக்குதல்களுக்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டு வருகின்றன. ஆதலால், ஏதாவதொரு வகையில் உடன்பாட்டு பேச்சு அடிப்படையில் ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காக தன்னிச்சையாக விலக்கிக்கொள்ளும் இத்திட்டத்தை உருவாக்கியதாக வெஸ்கிளாஸ் விவரிக்கிறார்.

ஏன் இத்திட்டம் உருவாக்கப்பட்டது என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: ''ஏனென்றால் 2003 கடைசியில் (இலையுதிர் காலத்தில்) எல்லாமே நிலைகுத்தி நிற்பதாக நாங்கள் புரிந்து கொண்டோம். அமெரிக்கர்களும் இந்த நிலைமையை கண்டுகொண்டனர். இதற்கான பழி பாலஸ்தீனர்கள் மீது விழுந்ததே ஒழிய எங்கள் மீதல்ல. இந்த நிலவரம் நீடிக்க முடியாது என்பதை ஆரிக் [Sharon] புரிந்து கொண்டார். அவர்கள் எங்களை விட்டுவிட மாட்டார்கள், எங்களை கைகழுவிவிடமாட்டார்கள், காலம் எங்கள் பக்கத்தில் இல்லை. சர்வதேச அளவில் உள்நாட்டிலும் சீர்குலைவு தோன்றிற்று. இதற்கிடையில் உள்நாட்டில் எல்லாமே சிதைந்து கொண்டிருந்தது. பொருளாதாரம் தேக்கமடைந்து நின்றது மற்றும் ஜெனீவா முயற்சி பரவலான ஆதரவைப்பெற்றது.

''மற்றும் அதற்குப் பின்னர் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் பணியாற்ற மறுத்து அதிரடிப் படையினர்களும், விமானிகளும், அதிகாரிகளும் கடிதங்களைக் கொடுத்தனர். அதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம். இவர்களெல்லாம் மிடுக்காக உடை உடுத்தி, மூக்கு குத்தி போதை பொருள் வாடையோடு உலவுகின்ற இளைஞர்கள் அல்ல. இந்தக் கடிதங்களை கொடுத்தவர்கள் செல்வாக்குமிக்க விமானப் படையினர்கள். ஸ்பெக்டர் குழு போன்ற படைப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள். உண்மையிலேயே அவர்கள் எங்களது நாட்டின் சிறப்புமிக்க நேர்த்தியான இளைஞர்கள்'' என்றார்.

இஸ்ரேல் இனி பாலஸ்தீனத் தலைவர் யாசீர் அராஃபத்தை ''சமாதானப் பங்காளி'' என்று கருதமுடியாது. ஏனென்றால் இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்த அவர் தவறிவிட்டதாக ஷரோன் அறிவித்தார். அவரது இந்த நிலைப்பாட்டை வாஷிங்டன் முழுமையாக ஏற்றுக்கொண்டது. யாசீர் அராஃபத்தை புறக்கணித்துவிட்டு ''தன்னிச்சையாக, பிரித்துக்கொண்டு செல்லும்'' திட்டத்தை நடைமுறைபடுத்தப் போவதாக ஷரோன் மேலும் அறிவித்தார்.

நடைமுறையில் இது மேற்குக்கரையின் பெரும்பகுதி நிலத்தை பிடித்துக்கொள்ளும் கொச்சையான நடவடிக்கையாகும். காசா பகுதியிலிருந்து 7,500 சியோனிஸ்ட் குடியேற்றக்காரர்களையும், மேற்குக்கரையிலிருந்து நான்கு குடியிருப்புக்களையும் வெளியேற்றுவது என்பதானது, இராணுவம் பின்வாங்குகின்றது என்ற முகமூடியில் நடத்தப்பட்டதாகும். ஆனால், காசா இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதே நேரத்தில் மேற்குக்கரை நிலத்தின் வளமான பகுதிகள் முழுவதும் மற்றும் கிழக்கு ஜெருசலம் முழுவதும் நிரந்தரமாக இஸ்ரேலுடன் சேர்க்கப்பட்டு கனமாக வலுப்படுத்தப்பட்ட எல்லைச் சுவற்றிற்கு உள்ளே அடக்கப்பட்டுவிடும்.

அமெரிக்கா வகுத்தளித்த ''சாலை வரைபடத்தின்'' கீழ் ''சட்டப்பூர்வமான'' முறையில் பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை அடிப்படையில் உடன்படிக்கை காணவேண்டும் என்ற நாடகத்தை முடித்துக்கட்டும் வகையில் சில குடியிருப்புக்களை தியாகம் செய்வது என்று திட்டமிடப்பட்டது என்பதை வெஸ்கிளாஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

''இதுதான் அங்கே நடந்தது. சமாதான முயற்சி என்பது பல கருத்துக்களையும், உறுதிமொழிகளையும் உள்ளடக்கிய ஒரு ''மூட்டை'' என்பது உங்களுக்கு தெரியும். அந்த சமாதான முறைப்படி பாலஸ்தீன நாட்டை உருவாக்கும்போது, அதில் எல்லாவிதமான பாதுகாப்பு ஆபத்துக்களும் உள்ளடக்கமாக இருக்கும். சமாதான முன்னெடுப்பின்படி குடியிருப்புக்களை காலிசெய்ய வேண்டும், அகதிகள் திரும்ப வரவேண்டும், ஜெருசலத்தை பிரிக்கவேண்டும் இவை அத்தனையும் தற்போது முடுக்கப்பட்டுவிட்டன''

இந்த முயற்சியானது வாஷிங்டனது ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அத்தோடு, கணிசமான அளவிற்கு சியோனிஸ்டுகளது குடியிருப்புக்கள் நீக்கப்படமாட்டது என்பதால், பாலஸ்தீன நாடு உருவாவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை. அப்படியே உருவானாலும் அது திட்டுதிட்டான சேரிக் குடியிருப்புகளாகவும், எந்தவிதமான பயனுள்ள உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லாமலும் நான்கு பக்கங்களிலும் இஸ்ரேல் இராணுவத்தால் சூழப்பட்ட குடியிருப்பாகவே அமையுமென்பதை தெரிந்தே ஷரோன் திட்டங்களுக்கு வாஷிங்டன் ஆதரவு தந்தது. மிகுந்த சிடுமூஞ்சித்தனமான சிரிப்போடு வெஸ்கிளாஸ் தொடர்ந்து கூறினார்: ''அமெரிக்கர்களுடன் நான் உடன்பட்டதற்குக் காரணம் குடியிருப்புக்களின் ஒரு பகுதி பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்பதால் ஆகும். பிற குடியிருப்புக்கள் பாலஸ்தீனர்கள் பின்லாந்துக்காரர்கள் அளவிற்கு மாற்றப்படுகிறவரை நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. நாங்கள் செய்ததின் சிறப்பு அதில்தான் அடங்கியிருக்கிறது''

ஷரோனுடைய திட்டம் பற்றி ''நேர்மையாக'' விவாதிக்க முடியாது. அது மிகக்கடுமையான முயற்சியாகும். 2,40,000 குடியிருப்பவர்களில் 1,90,000 பேர் தாங்கள் வாழும் இடங்களிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

அதற்குப்பின்னர் இத்திட்டத்தால் இஸ்ரேலுக்கு ஏற்படும் அணுகூலங்களை வெஸ்கிளாஸ் எடுத்துக்காட்டினார்

''சமாதான முன்னெடுப்புகள் முடக்கப்படும்போது அதன்மூலம் பாலஸ்தீன அரசு உருவாவதும், (பாலஸ்தீனிய) அகதிகள் தொடர்பான விவாதங்களும் எல்லைகள் மற்றும் ஜெருசலம் தொடர்பான விவாதங்களும் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

''பாலஸ்தீன அரசு என்று கூறப்படும் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், அது தொடர்பான அனைத்து தொடர் நடவடிக்கைகளும், எங்களது நிகழ்ச்சி நிரலில் இருந்து காலவரையின்றி விலக்கப்பட்டுவிட்டன.

''மற்றும் இவை அனைத்தும் அதிகாரத்தோடும், அனுமதியோடும், அமெரிக்க ஜனாதிபதியின் ஆசியோடும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளது ஒப்புதலோடும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன''

ஆகஸ்டில் ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் ''சாலை வரைபடத்தில்'' கண்டிருந்த இஸ்ரேல் எல்லைகள் விரிவாக்கத்திற்கு விதிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச கட்டுப்பாட்டையும் ரத்துசெய்கின்ற முறையில் ஷரோன் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தார். அதன் மூலம் புஷ் அதற்கு முன்னர் அதிகாரப்பூர்வமான அமெரிக்க கொள்கையாக இருந்ததை தள்ளுபடி செய்துவிட்டு மேற்குக்கரை குடியிருப்புக்கள் இறுதியாக இஸ்ரேலின் ஒரு பகுதியாக ஆவதற்கு உடன்பட்டார்.

வெஸ்கிளாசின் தெளிவான அறிக்கைகள் ஷரோனுக்கு அவ்வளவாக அரசியல் பாதிப்பை ஏற்படுத்துபவையல்ல. தனது லிக்குட் கட்சிக்குள்ளேயும், பழமைவாத மற்றும் குடியிருப்பாளர் கட்சிகளிலும் தீவிர வலதுசாரி விமர்சகர்களுக்கிடையில் பல வாரங்களாக ஷரோன் தனது கடுமையான நிலைப்பாட்டை பிரகடனப்படுத்தி வந்தார். மற்றும் அராபத்தை கொன்று விடுவதாகவும், சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராக தாக்குதலை துவக்கப் போவதாகவும் அறிவித்துக் கொண்டிருந்தார். ஆனால், அவரது பிரகடனங்கள் வாஷிங்டனில் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் இஸ்ரேலின் தொழிற்கட்சிக்கும் மிகுந்த சங்கடத்தை கொடுத்தது. ''ஒருதலைப்பட்சமாக'' வெளியேற்றப்படும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் தொழிற்கட்சி ஆதரவு தந்தது. அது சமாதான முயற்சிக்கு நியாயமான நடவடிக்கை என்று பாராட்டியது.

ஆனால், இருதரப்பினருமே அவர்களுக்கு நன்றாகத்தெரிந்த உண்மையை தெரியாதது போல் நாடகமாடி வியப்புத் தெரிவித்தனர்.

அக்டோபர் 6 ல் வாஷிங்டன் ஷரோனுக்கு இஸ்ரேலின் நிலைப்பாட்டை ''தெளிவுபடுத்துமாறு'' கேட்டுக்கொண்டது. அமெரிக்காவிற்கு, தாக்கல் செய்யப்பட்ட இஸ்ரேலின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டோடு பொருந்திவருகிற வகையில் வெஸ்கிளாசின் விமர்சனங்கள் அமைந்திருக்கவில்லை என்று ஷரோனுக்கு நிர்வாகம் கூறியதாக வெளியுறவுத்துறை அதிகாரி ஆடம் எரிலி கூறினார்.

ஆனால், அதற்குப்பின்னர் ஆடம் எரிலி இஸ்ரேல் அரசாங்கம் மறு உறுதி தந்திருப்பதை வலியுறுத்திக் கூறினார். இஸ்ரேல் அரசாங்கம் ''சாலை வரைபட" திட்டத்தில் உறுதியாக உள்ளதாகவும், புஷ்ஷின் இஸ்ரேல் - பாலஸ்தீன முரண்பாட்டுக்கான தீர்வு அவர் கண்ணோட்டத்திலுள்ள முன்னோக்கை பற்றி நிற்பதாகவும் எரிலி கூறினார்.

தனது அலுவலகத்திலிருந்து ஷரோன் வெளியிட்ட ஒரு பகிரங்க அறிக்கையில் ''சாலை வரைபடத்திற்கு'' தனது நீடித்த ஆதரவை வெளிப்படுத்தினார். சமாதான உடன்படிக்கைக்கு ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக பாலஸ்தீனர்களை கண்டிக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்திருந்தது.

இரட்டை நாக்கிற்கு சரியான உதாரணம் என்று அமைந்திருக்கும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருப்பதாவது: ''பிரதமர் ஷரோன் சாலைவரை படத்தை ஆதரிக்கிறார். நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி முன்னேறுவதற்கு அது ஒன்றுதான் வகைசெய்யும் திட்டமாகும். தற்போது நிலவும் முட்டுக்கட்டை நிலைக்கு முழுப் பொறுப்பு பாலஸ்தீனயர்கள்தான். அவர்கள் தங்களது உறுதிமொழிகளை மதிக்கவில்லை. பயங்கரவாதம், வன்முறையை தூண்டும் வழியை விடாப்பிடியாக கடைபிடித்து வருகின்றனர்.

''பாலஸ்தீனிய பங்களிப்பு இல்லாத நிலையில் அரசாங்கம் இஸ்ரேலின் ராஜியத்துறை நிலைப்பாட்டை மேம்படுத்தவும், தனது குடிமக்களுக்கு பாதுகாப்பு தருகின்ற திறனை மேம்படுத்தவும், பொது மக்களது துன்பங்களை குறைக்கவும், சாலைவரைபட நிபந்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி, சமாதானத்தை நோக்கி முன்னேறுகிற பேச்சுவார்த்தைகள் நடைபெறமுடியும் என்கிற நிலை வரும்வரை அரசாங்கம் தன்னிச்சையாக ''விலக்கிக் கொள்ளும்'' திட்டத்தை கடைபிடித்து வருகிறது.''

''அரசியல் நடவடிக்கைகளை முடக்கிவிடும் நோக்கமில்லை. இப்போதுள்ள நிலையில் பாலஸ்தீன தேசிய ஆணையத்துடன் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதுதான் எங்களது நிலைப்பாடு'' என்று வெஸ்கிளாஸ் மேலும் கூறினார்.

வாஷிங்டனுக்கு இது தான் கோரியதற்கு மேல் அதிகமாக மனநிறைவு தருவதாகும். வெஸ்கிளாஸின் விமர்சனங்கள் குறித்து ஷரோன் அலுவலகம் வெளியிட்டுள்ள விளக்கங்கள் மீது புஷ் நிர்வாகம் மிகப்பெருமளவில் மனநிறைவு கொண்டிருப்பதாக ஒரு மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார். மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவலும் தனது ஆசியை இதற்கு வழங்கினார். சாலை வரைபடத்தின் மீது ஷரோனுக்கு உள்ள உறுதிப்பாட்டை அமெரிக்கா சந்தேகிக்கவில்லை என்று கிரனெடாவில் நிருபர்களிடம் அவர் தெரிவித்தார்.

குடியிருப்புக்களை விலக்கிக்கொள்ளும் திட்டமானது சமாதான நடைமுறைகளை முடுக்கும் என்று ஷரோன் எப்போதுமே சொல்லவில்லை என்று தொழிற்கட்சி தலைவர் சிமோன் பெரஸ் கூறினார். நவம்பரில் இஸ்ரேல் நாடாளுமன்றமான Knesset ல் குடியிருப்பு விலக்கத் திட்டத்திற்கு ஆதரவு தருவதாக தொழிற்கட்சி உறுதியளித்திருப்பதை ஷரோன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பெரஸ், தானும் ஷரோனிடமிருந்து ''விளக்கங்களை'' கோர விரும்புவதாகக் குறிப்பிட்டார்.

அராஃபத் மற்றும் பாலஸ்தீன தலைமையில் உள்ளவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, தமது சொந்த நலன்களுக்காக மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளை கண்காணிக்கும் பொலீஸ்காரர்களாக மீண்டும் நிறுவிக்காட்டியுள்ளனர். அவர்கள் தங்களது சொந்த உரிமையை பெற்றுக்கொண்டு பாலஸ்தீன மக்களின் கொடூரமான துன்பத்தில் செழிப்படைந்துள்ளனர்.

ஷரோனின் உண்மையான நோக்கங்கள் குறித்து புஷ் நிர்வாகம் தன்னை ஏமாற்றி விட்டதாக கருதி அராஃபத்தின் தலைமை பேச்சாளர் சாஹிப் எரக்ட் வாஷிங்டன், வெஸ்கிளாஸின் விமர்சனங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்டுகொண்டார். ''பிரதமர் ஏரியல் ஷரோனின் உண்மையான நோக்கங்களை வெஸ்கிளாஸ் தெளிவாக அறிவித்திருக்கிறார். காசா குடியிருப்பு விலக்க நடவடிக்கையானது சாலை வரைபடத்தின் ஒரு பகுதிதான் அதற்கு மாற்றல்ல என்று இப்போது எப்படி கருதமுடியும் என்பதை ஜனாதிபதி புஷ் விளக்குவார் என்று நாங்கள் நம்புகிறோம்'' என அவர் கூறினார்.