World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP presidential candidate Bill Van Auken speaks to South Asian press in Sri Lanka

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் பில்வான் ஒகென் இலங்கையில் தெற்காசிய பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார்

By a reporter
21 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர், பில்வான் ஒகென், செவ்வாய் அன்று கொழும்பில் நடந்த இலங்கை, இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய செய்தித்தாள்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 20க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களிடம் பேசினார். இலங்கையின் சொர்ணவாகினி தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை படம்பிடித்து அதன் இரவு எட்டுமணி செய்தி நிகழ்ச்சியின் பொழுது பலநிமிடங்கள் நீடித்த செய்தி அறிக்கையாக ஒளிபரப்பியது. அவ்வறிக்கையில் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை ஒரு போர்க்குற்றம் என்று அவர் குறிப்பிட்டுப் பேசிய குறிப்புக்களிலிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கள் பல உள்ளடங்கி இருந்தன.

இச்செய்தியாளர் மாநாட்டிற்கு ஒப்சேர்வர், சண்டே டைம்ஸ், டெய்லி மிரர், தி ஐலாண்ட், டெய்லி நியூஸ், வீரகேசரி, லங்கா தீப மற்றும் லக்பிமா உள்பட ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் உள்ள பிரதான செய்தித்தாள்களிலிருந்து பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளிதழ் மற்றும் பிரண்ட் லைன் ஆகியவற்றிலிருந்தும் பாக்கிஸ்தானிய நாளிதழ் டாவ்ன் மற்றும் பாக்கிஸ்தானின் மிபக் பெரிய செய்தி முகவாண்மையான News Network International ஆகியவற்றிலிருந்தும் செய்தியாளர்கள் வருகை தந்திருந்தனர்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர், விஜே டயஸ் செய்தியாளர் கூட்டத்தை தொடங்கி வைத்து அக்டோபர்23 சனிக் கிழமை கொழும்பிலும் அக்டோபர்25 திங்கள் அன்று கண்டியிலும் சோசலிச சமத்துவக் கட்சி மாநாடுகளில் உரையாற்ற இருக்கும் வான் ஒகென்னை அறிமுகப்படுத்தினார்.

2004 அமெரிக்கத் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டின் பின்னே உள்ள சர்வதேச முன்னோக்கை விளக்குவதன் மூலம் வான் ஒகென் பின்வருமாறு விளக்கினார்:" அமெரிக்காவில் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்கள் இருக்ககையில் ஏன் எமது கட்சி அதன் வேட்பாளர்களை ஒரு சொற்பொழிவு சுற்றுச்செலவுக்கு அனுமதித்தது என்பது தொடர்பாக இங்கும் அமெரிக்காவிலேயும் கூட சில கேள்விகள் எழுந்துள்ளன என்பதை நான் அறிவேன். ஆயினும், எம்மைப் பொறுத்தவரை, நவம்பர்2 தேர்தல் வெறுமனே ஒரு அமெரிக்க நிகழ்ச்சி அல்ல, உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கான ஆழமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது என்பது தெளிவானதாகும்."

வான் ஒகென் தொடர்ந்ததாவது:"உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் பாதிப்பின் காரணமாக வெறுமனே மட்டுமல்லாமல் பெரும் மற்றும் எதிர்மறை தாக்கத்தினை எடுத்துக் கொண்டால் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்கள் வாக்குகளை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோருவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் விளக்கி இருக்கிறோம்."

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு பெரு முதலாளித்துவ கட்சிகளின் மற்றும் அவற்றின் வேட்பாளர்கள், ஜோர்ஜ் புஷ் மற்றும் ஜோன் கெர்ரி ஈராக் மீதான ஆக்கிரமிப்பைத் தொடரவும் ஈராக் மக்களின் எதிர்ப்பை நசுக்கவும் முற்றிலும் தொடர்ந்து தம்மை அர்ப்பணித்திருக்கின்றனர் என்பதை குறிப்பிட்டு, சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின் குற்ற மற்றும் எதேச்சாதிகார அழிவுத் தன்மையை சுட்டிக்காட்டினார்.

"ஈராக்கில், அமெரிக்க அரசாங்கம் நடத்தி வரும் யுத்தமானது அப்பட்டமான ஆக்கிரமிப்பு நாட்களின் வீழ்ச்சியை பிரதிநிதித்துவம் செய்கிறது மற்றும் முழு உலக மக்களையும் அச்சுறுத்துகிறது...... இந்தப் போருக்கு அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளாலும் கொடுக்கப்படும் சாக்குப் போக்குகள் ---பேரழிவு ஆயுதங்கள் அல் கொய்தாவுடனான சதாம் ஹூசேனின் தொடர்பு என்று கூறப்படுவது-- அமெரிக்க அரசாங்கத்தினாலேயே தயாரிக்கப்பட்ட அறிக்கை ஏற்றுக் கொண்டவாறு கூட அவை பொய்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. உண்மைனன காரணமாகத் தொடர்ந்து இருப்பது ஈராக்கிய எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதன் மூலம் அமெரிக்க மேலாதிக்க அதிகாரத்தை நிறுவுவதற்கான முயற்சி ஆகும்.

"ஈராக்கிலிருந்து அனைத்து அமெரிக்கத் துருப்புக்களையும் உடனடியாகவும் நிபந்தனை எதுவுமின்றியும் வாபஸ் வாங்குவதற்காக கோரிக்கை எழுப்பும் ஒரே கட்சி எமது கட்சி ஆகும். பத்து மில்லியன் அமெரிக்கர்களின் ஆதரவைப் பெறுகின்ற கோரிக்கை இதுதான், ஆனால் அவர்களின் உணர்வுகள் பெருநிறுவன கட்டுப்பாட்டிலுள்ள கட்சிகளின் கொள்கைகளில் எதிரொலிப்பை காணவில்லை.

ஈராக்கிய போருடனும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்று அழைக்கப்படுவதுடனும், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் மிகவும் ஸ்திரமற்ற சக்தியாக ஆகி உள்ளது என்று மேலும் கூறினார். இலங்கையிலும் மற்றும் ஏனைய பல நாடுகளிலும் வாழ்க்கைச் செலவில் திடீர் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ள எண்ணெய் விலைகளில் விரைவான உயர்வு, அமெரிக்க அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற இராணுவவாதத்தின் ஒரு விளைபயனாகும்.

"அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் நலன்கள் தவிர்க்க முடியாதபடி இலங்கையிலும் ஏனைய அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களின் நலன்களுடன் கட்டுண்டிருக்கிறது. நாடுகடந்த மூலதனம் மிகவும் மலிவான மற்றும் மிக ஒட்டச் சுரண்டக் கூடிய கூலி உழைப்பை தேடி இப்புவி முழுவதும் தேடி அலைந்து திரிகிறது, தொழிலாளர்களின் உரிமைகளை ஈவிரக்கமற்று ஒடுக்கும் சுதந்திர வர்த்தக மண்டலங்களை உருவாக்குவதை ஆதரித்து வருகிறது."

அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களின் கூலிகள், வேலைகள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான ஒருபோதும் முடியாத தொடர்ச்சியான தாக்குதல்களை வான் ஒகென் சுட்டிக்காட்டினார். "அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள், பூகோளம் முழுவதிலும் உள்ள அவர்களின் சக தொழிலாளர்களைப் போல, அவர்கள் கூலியைக் குறைப்பதையும் மோசமடைந்து வரும் வேலை நிலைமைகளையும் ஏற்கவில்லையாயின், பெருநிறுவனங்கள் இன்னும் கூட மலிவான கூலி உழைப்பு கிடைக்கும் இன்னொரு நாட்டிற்கு தங்களின் நடவடிக்கைகளை எளிதல் மாற்றிவிடும் என்று கூறப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்கு தேசியத் தீர்வு எதுவும் இல்லை. அதற்கு தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துவது தேவைப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இதர நாடுகளின் தொழிலாளர்களை சென்றடைவதுடன் அமெரிக்காவில் தேர்தல்களில் அவர்களின் நலன்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் மூலம் புஷ்ஷை ஜனாதிபதியாக நிறுவியது, பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் என்ற பெயரால் போலீஸ் மற்றும் ஜனாதிபதி அதிகாரத்தை பெருமளவில் விரிவுபடுத்தல், ஓகியோவில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வேட்பாளராக போட்டியிடும் அந்தஸ்தை தன்னிச்சையாய், ஜனநாயகமற்ற முறையில் மறுத்தல் ஆகியன, அமெரிக்க அரசியல் அமைப்புமுறை உலகத்திற்கு ஜனநாயக ஒளிவிளக்கு என்ற கூற்றைப் பொய்யாக்குகிறது.

தெற்கில் இனப்பாகுபாடு பிளவுபடுத்தல் காலகட்டத்திற்குப் பின்னர் பார்த்திரா அளவிற்கு அமெரிக்காவில் மக்களுக்கு வாக்களிக்க உரிமை மறுக்கப்படும் முயற்சிகள் மீதாக எதிர்ப்புக்கள் ஏற்கனவே இருக்கின்றன.

"மிகவும் கடினமான போராட்டத்தின் மூலம் மட்டுமே, இணைந்து 40 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட எட்டு மாநிலங்களில் வாக்குச்சீட்டில் எமது வேட்பாளர்களை நாங்கள் இடம்பெறச்செய்ய முடிந்தது. மூன்றாவது கட்சி வேட்பாளர்களை போட்டியிடவிடாமற் செய்யவைக்க பயன்படுத்தப்படும் ஜனநாயக விரோத சட்டங்களுடன் 50 மாநிலங்களிலும் வாக்குச் சீட்டில் இடம்பெற குறைந்தபட்சம் ஒரு மில்லியன் வாக்காளர்களின் கையெழுத்து தேவைப்படுகிறது ஜனநாயகக் கட்சியாளர்களும் குடியரசுக் கட்சியினரும், நாங்கள் தேர்தலில் போட்டியிடவிரும்பும் வாக்காளர்களின் முறைமையான மனுக்களை தூக்கி எறிந்துவிட்டு, எங்களது வேட்பாளர் அந்தஸ்தை மறுப்பதற்கு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

முடிவாக, வான் ஒகென், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரமானது, பெரு வணிகத்தினர் அரசியல் அதிகாரத்தின் மீது ஏகபோகத்தை செயல்படுத்தும், அரசு ஆதரவு இருகட்சி அமைப்பு முறையைத் தலைகீழாக கவிழ்க்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்று விளக்கினார். "ஜனநாயகக் கட்சியினராலும் சரி அல்லது குடியரசுக் கட்சியினராலும் சரி தங்களின் நலன்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத, மற்றும் உழைக்கும் மக்களின் பரந்த நலன்களை வெளிப்படுத்த, நாங்கள் அறிந்துள்ள எதிர்வரும் போராட்டங்களுக்கு தயாரிப்புச்செய்ய அமெரிக்காவில் அரசியல் விவாதத்தின் மட்டத்தை உயர்த்த நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களை அரசியல் கல்வியூட்டுவதற்கும் உலகம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே ஒரு சக்திமிக்க சர்வதேச சோசலிச கலாச்சாரத்தை மீளக் கட்டி எழுப்புதற்கும் எமது பிரச்சாரம் குறிப்பிடத்தக்கவகையில் பங்களிக்கும் என நாங்கள் நம்புகிறோம்."

வான் ஒகென்னின் தொடக்க உரையை தொடர்ந்து உயிரோட்டமுள்ள 45 நிமிடங்கள் கேள்வி பதில் தொடர் இடம்பெற்றது.

புஷ் மற்றும் கெர்ரிக்கு இடையில் சோசலிச சமத்துவக் கட்சியானது ஏதேனும் முன்னுரிமை கொண்டிருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், வான் ஒகென், தாம் அப்படிச்செய்திருந்தால், தான் ஜனாதிபதி பதிவிக்குப் போட்டியிட்டிருக்கமாட்டேன் என்றார். புஷ் மற்றும் கெர்ரி இருவருமே அமெரிக்க பெரு வணிகர்களுக்கான பேச்சாளர்கள் மற்றும் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் ஆதரவாளர்கள் ஆவர். கெர்ரி தாம் ஈராக்கை விட்டு விலகுவதில்லை மாறாக போரில் "வெல்வதற்காகவே" இருப்பதாக திரும்பத் திரும்ப கூறினார். இதிலிருந்து வேறுபட்டதாக, சோசலிச சமத்துவக் கட்சியானது "ஈராக்கில் ஏகாதிபத்தியத்தின் தோல்விக்காக நிற்கிறது, ஏனெனில், மற்றவகையில், அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டு ஆக்கிரமிப்பிற்காக ஏனைய நாடுகளை குறிவைப்பதற்காக ஊக்கப்படுத்தப்பட மட்டுமே செய்யப்படும்." வருகை தந்திருந்தோரில் பலர் தங்களின் உடன்பாட்டை தலையசைப்பதன் மூலம் காட்டினர்.

பயங்கரவாதத்தின் மீதான புஷ்ஷின் யுத்தம் பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் மனப்பாங்கை பற்றிக் கேட்டபொழுது, அது ஒரு மோசடி என வான் ஒகென் கூறினார். 2001, செப்டம்பரின் பயங்கரவாத தாக்குதல்கள், ஈராக் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதன் மூலம் பொருளாதார வீழ்ச்சி அழிவைத் தடுத்து நிறுத்த அமெரிக்க இராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் மத்திய கிழக்கு மற்றும் காஸ்பியன் கடற் பிராந்தியத்தின் எண்ணெயை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் மூலோபாய ஸ்தானத்தில் அமெரிக்காவை வைக்கவுமான அமெரிக்க ஆளும் தட்டின் நீண்டகாலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சாக்குப்போக்காக பயன்பட்டிருந்தது. உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் ஏகாதிபத்திய யுதத்தத்துக்கு ஆதரவாக பொதுமக்களை இராணுவத்துக்கு ஆள்திரட்டவும் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம் அமெரிக்க மக்களை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது" என அவர் தொடர்ந்தார்.

சோவியத் ஒன்றியம் பொறிந்துபோன நிலையையும் சீன ஆட்சி முதலாளித்துவத்தை தழுவிக்கொண்டதையும் எடுத்துக் கொண்டால் எப்படி அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்க்கப்பட முடியும் என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்குப் பதிலளிக்கையில், ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போலியான எதிரெடை என்பதை சோவியத் ஸ்ராலினிச ஆட்சி நிரூபித்திருந்தது என்று வான் ஒகென் விளக்கினார். தொழிலாள வர்க்கத்திலிருந்து அதிகாரத்தை பிடுங்கிக் கொண்ட சோவியத் அதிகாரத்துவம், இறுதியில் சோவியத் ஒன்றியத்தில் தன் மூலம் முதலாளித்துவம் மீட்கப்பட ஒரு முகவாண்மையாக செயல்பட்டதன் மூலம் அதன் சலுகைகளைப் பாதுகாக்க விழைந்தது.

"ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்திலோஅல்லது அபிவிருத்தி அடைந்து வரும் உலகம் என்று அழைக்கப்படுவதன் நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்திலோ எமது நம்பிக்கையை நாம் வைப்பதில்லை, கெட்டிதட்டிப்போன தொழிற்சங்கங்கள் மற்றும் பாரம்பரிய தொழிலாளர் இயக்கங்களிலும் நம்பிக்கையை வைப்பதில்லை. ஏகாதிபத்தியத்தை சக்தி மிக்க வகையிலும் தொடர்ச்சியாகவும் எதிர்க்கும் ஒரே சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். என்றுமிராதளவு மோசமான நிலைமைகளை எதிர்கொண்டிருக்கும், அமெரிக்க தொழிலாள வர்க்கம், உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் அனைவருடனும் ஐக்கியப்பட முடியும் மற்றும் கட்டாயம் ஐக்கியப்பட வேண்டும்."

"ஒருமுனைப்பட்ட உலகு" என்ற கருத்துரு பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்து பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், அமெரிக்காவின் வலிமை பற்றிய கூற்றுக்கள் பெரும் அளவில் மிகைப்படுத்தப்பட்டிருப்பதாக வான் ஒகென் வலியுறுத்தினார். இராணுவ பலத்தின்மீது அதிகரித்த அளவில் அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பது வலிமையின் அடையாளம் அல்ல, மாறாக பொருளாதார வீழ்ச்சி ஆகும். அமெரிக்கா இப்பொழுது உலகின் மிகப் பெரிய கடன்கார நாடாக இருக்கிறது மற்றும் 600 பில்லியன் டாலர்கள் வர்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டிருக்கிறது. ஈராக்கை வென்று கைப்பற்றுவதற்கான வாஷிங்டனின் முயற்சி, மேலும் படுதோல்வியாக ஆகியிருக்கிறது.

அமெரிக்காவில் உண்மையான துருவமுனைப்படல் குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையில் அல்ல, மாறாக உழைக்கும் மக்களைக் கொண்டுள்ள அபரிமிதப் பெரும்பான்மைக்கும் ஒரு குறுகிய, அதிகரித்த அளவில் பெருவேட்கையுள்ள மற்றும் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெரு வணிகத் தட்டுக்கும் இடையிலானதாகும். அமெரிக்கா "ஆபத்தான நெருக்கடியில் உள்ள ஒரு நாடு" என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த பதில், உழைக்கும் மக்கள் யுத்தத்தை எதிர்த்தால் அவர்களின் எதிர்ப்பு தேர்தல்களில் ஏன் வெளிப்பாட்டைக் காணவில்லை என்ற மேலும் ஒரு கேள்வியைத் தூண்டி விட்டது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பிற்கு முந்தைய வாரங்களில், புஷ் நிர்வாகமும் ஒத்திசைந்து போகும் ஊடகமும் சதாம் ஹூசேனின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அல்கொய்தாவுடனான உறவுகள் பற்றிய புனையப்பட்ட கதைகளுடன் போருக்கான ஆதரவை திரட்ட முரசறைவித்த நிலைமைகளின் கீழ், அமெரிக்கா அதன் வரலாற்றில் மிகப்பெரிய போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கண்டது.

இரு கட்சி அமைப்புமுறை, பெருநிறுவன செய்தி ஊடகம், மற்றும் மிகுதியான ஜனநாயக விரோத தேர்தல் விதிமுறைகளை பயன்படுத்தி, அமெரிக்க செல்வந்தத்தட்டானது போர் எதிர்ப்பாளர்களின் வாக்குரிமையை பறிக்க முடிந்த அளவு எல்லாவற்றையும் செய்தது. இந்த முயற்சியில் தவறுக்கு உடந்தையாக இருந்தவை தொழிற்சங்கங்கள் ஆகும். "தொழிற்சங்கங்கள் முன் கூறப்பட்டவர்களின் நிழலாக இருந்தன. றேகனின் காலத்தில் ஆரம்பித்த தாக்குதல்களை எதிர்கொள்ள திராணியற்று இருந்தன என்பதை நிரூபித்தன, மற்றும் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் பின் உறுதியாக நின்றன."

அமெரிக்கா நெருக்கடியால் ஆட்டம் கண்டுள்ளது என அவர் மீளவும் வலியுறுத்தினார். அமெரிக்காவின் பொருளாதார நிலை நிலைநிறுத்த இயலாததாக உள்ளது, மற்றும் உழைக்கும் மக்கள் தீவிரமயப்படுத்தப்பட்டுக்கொண்டு வருகின்றனர் மற்றும் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இது சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்திற்கான வளர்ந்துவரும் ஆதரவில் எதிரொலித்து வருகிறது.

அமெரிக்க தொழிலாளர்களுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் கொள்கைகள், பேரளவில் நடப்பு வங்கிக் கணக்கு (current account) மற்றும் வர்த்தக பற்றாக்குறைகளை கொண்டிருக்கும் அதேவேளை, எப்படி அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடிகிறது, பாலஸ்தீனிய மக்களின் போராட்டம் பற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் நிலைப்பாடு, அமெரிக்க அரசாங்கத்திற்கும் பெருநிறுவன செய்தி ஊடகத்திற்கும் இடையிலான கூட்டின் தன்மை மற்றும் தொழிற்சங்கங்களின் பங்கு பற்றி மேலும் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

Top of page