World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

As early balloting begins: tensions build over Bush vote-suppression drive

ஆரம்பகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: புஷ் வாக்காளர்களை அமுக்கும் முயற்சியால் கொந்தளிப்பு உருவாகிறது

By Patrick Martin
20 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

மிக உயிர்நாடியான போர்கள மாகாணமான புளோரிடா உட்பட திங்களன்று 5-மாகாணங்களில் முன்கூட்டியே மாற்று வாக்குப்பதிவு தொடங்கியது. தொழிலாள வர்க்கம் மற்றும் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் வாக்குப்பதிவை குறைப்பதற்கு புஷ் பிரச்சாரமும் குடியரசுக் கட்சியும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாக மோதல்கள் ஏற்கனவே வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. குறிப்பாக வாக்குப்பதிவு முடிவு நெருக்கமாக உள்ள மாநிலங்களில் இத்தகைய முயற்சிகள் திட்டவட்டமாக நடந்துவருகின்றன.

தேர்தல் முடிந்த பின்னர் நடைபெறுகின்ற போராட்டத்தின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை உணர்த்துகின்ற வகையில் புளோரிடாவில் குடியரசுக்கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிலுள்ள மாகாண அரசாங்கம் முதல் சுற்றில் வெற்றிபெற்றிருக்கிறது, தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்த மனுவை மாகாண உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வாக்களார்கள் தங்களது தற்காலிக வாக்குகளை சரியான வாக்குச்சாவடியில் பதிவுசெய்தால்தான் அவை வாக்குகள் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.

2000- தேர்தல் மோசடிக்கு பின்னர் தற்காலிக வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து தவறான முறையில் நீக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு வகை செய்வதற்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது. வாக்குச்சாவடிகளில் இருந்த வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு பதிலாக அத்தகைய வாக்காளர்களுக்கு டம்மி வாக்குச்சீட்டு தரப்பட்டு அவர்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தபின்னர் அத்தகைய வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள வாக்குப்பதிவேடுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் அவை வாக்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படும். அதுவரை அத்தகைய வாக்குகள் தனியாகவே வைத்திருக்கப்படும். உண்மையிலேயே பதிவு செய்து கொண்டவர்கள் வாக்குகளே முதலில் எண்ணப்படும் என்று சட்டம் விளக்குகிறது.

ஜனாதிபதியின் சகோதரரான கவர்னர் Jeb Bush நியமித்தவர்தான் புளோரிடா தலைமைத் தேர்தல் அதிகாரி, டம்மி வாக்குகள் எங்கே அந்த வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்வதற்கு மனுக்கொடுத்தாரோ அந்த பிராந்தியத்திலுள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தால்தான் அவை வாக்குகள் எண்ணும்போது சேர்த்துக்கொள்ளப்படும் என்ற முடிவை அறிவித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் சட்டபூர்வமாக பதிவு செய்திருந்தாலும், அவற்றை எண்ணுவதற்கு பதிலாக அழித்துவிட உறுதுசெய்து தரும் வகையில் இந்த முடிவு அமைந்திருக்கிறது.

பலவாக்காளர்கள் வாக்குப்பதிவு தினத்தில் தவறான வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் தவறை செய்து விடுகிறார்கள் அந்த பிராந்திய வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் இடம் பெறாததால் அவர்கள் வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. புளோரிடா போன்ற மாகாணங்களில் மக்கள் தொகை மிக வேகமாக வளர்ந்துகொண்டிருப்பதால் வாக்குச்சாவடி எல்லைகளில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவதும், இதில் ஒரு பகுதி காரணமாகும். இந்த ஆண்டு இந்தப்பிரச்சனை மிகப்பெருமளவில் முற்றக்கூடும். ஏனென்றால் நான்கு சூறாவளிகள் பல வழக்கமான பழக்கப்பட்ட வாக்குச்சாவடிகளை அழித்துவிட்டன.

புளோரிடாவில் இந்த வகை தவறு அரசியல் ரீதியாக நடுநிலைத்தன்மை கொண்டதல்ல: முதல் தடவையாக வாக்களிக்க விரும்புகின்ற புதிய வாக்காளர்கள் மற்றும் ஏழைகள் வாழும் புறநகர்கள் ஆகியவற்றைச் சேர்ந்த வாக்காளர்கள் அளவிற்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், சூறாவளி பாதிப்பு மிகப்பரவலாக உள்ளதால் அந்தக் கட்டிடங்கள் மிகவும் தரம் குறைந்தவை. நிவாரண நடவடிக்கைகளும் மந்தகதியில் சென்று கொண்டிருக்கின்றன. எனவே குடியரசுக்கட்சி தற்காலிக வாக்குச்சீட்டுக்களை முடிந்தவரை கட்டுப்படுத்த விரும்புகிறது.

பல புளோரிடா தொழிற்சங்கங்கள் Hood- ன் முடிவிற்கெதிராக வழக்கு தாக்குதல் செய்தன. தற்காலிக வாக்குகள் சரியான வாக்குச்சாவடியில் அல்லது பிற வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்டாலும் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் அனைவரது டம்மி வாக்குகளையும், வாக்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ள மாகாண அரசை கட்டாயப்படுத்த கட்டளையிடுமாறு வழக்கு தாக்கல் செய்தன. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் முக்கியமாக ஏழைகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவதாக அவர்கள் வாதிட்டனர். மாகாண அரசாங்கத்தின் நடவடிக்கையை மாகாண உச்சநீதிமன்றம் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டது.

புளோரிடாவில் சிறுபான்மையினர் வாக்களிக்காது தடுப்பதற்கு இதர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. பல பெரிய பிராந்தியங்களை சார்ந்த தேர்தல் அதிகாரிகள் டம்மி வாக்குப்பதிவு செய்யும் வாக்குச்சாவடிகள் பலவற்றை கட்டுப்படுத்திவிட்டனர், அல்லது சிறுபான்மையினர் வாழும் புறநகர் பகுதிகளில் வாக்குச்சாவடிகளை திறக்க மறுத்துவிட்டனர். Volusia பிராந்தியத்தில் NAACP என்ற அமைப்பால் வழக்கு தொடரப்பட்ட பின்னர்தான் அந்த பிராந்தியத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆரம்ப வாக்குப்பதிவு மையங்களை ஏற்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டது. ஏற்கனவே உள்ள ஒரு வாக்குப்பதிவு நிலையம் Daytona கடற்கரையிலிருந்து 30-மைல்களுக்கப்பால் உள்ளது. அந்த பிராந்தியத்தில்தான் பெரும்பாலான கருப்பர்கள் வாழ்கின்றனர்.

Duval பிராந்தியத்தில் மிகப்பெரிய வடக்கு புளோரிடா நகரமான Jack Sonville அடங்கியிருக்கிறது. அந்த பிராந்திய தேர்தல் அலுவலகத்திற்கு வெளியில் ஆர்பாட்டங்கள் நடந்ததை தொடர்ந்து ஒரு சில கூடுதல் வாக்குப்பதிவு நிலையங்கள் அமைக்கப்படுவதாக Hood அறிவித்தார். Duval பிராந்திய தேர்தல்கள் கண்காணிப்பாளர் John Stafford வாரக்கடைசியில் திடீரென்று ராஜினாமா செய்தார். தனது உடல்நிலை காரணமாக அவ்வாறு செய்ததாக அவர் கூறினார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தது, ஆனால் அது சில மாதங்களுக்கு முன் நடந்தது.

Duval- பிராந்திய அதிகாரிகள் தொடக்கத்தில் ஒரு மில்லியன் மக்களைக்கொண்டு அந்த பிராந்தியத்திற்கு ஒரு வாக்குச்சாவடியைத்தான் அமைத்தனர். அந்தக் கவுண்டியில் மிகப்பெரிய நகரான Jacksonvillie 840- சதுர மைல்கள் அளவிற்கு பரவலாக உள்ளது. அந்த பிராந்தியம் Rhode Island மாகாணத்தைவிட பரப்பில் பெரியதாகும்.

இந்த பிராந்திய வாக்காளர்களின் வாக்குப்பதிவு தகுதியை இரத்துச்செய்வதற்கு சட்டநுட்பங்களை தீவிரமாக பயன்படுத்தியது. புதிதாக வாக்குப்பதிவு செய்வதற்கு மனு கொடுத்துள்ள குடிமக்கள் மூளை வளர்ச்சி ரீதியாக தகுதியானவர்கள், மற்றும் குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களல்ல என்பதை சரிபார்பதற்கு எந்தவிதமான ஏற்பாடும் செய்யாமலே பல பெரிய புளோரிடா கவுண்டிகள் புதிய வாக்காளர் பதிவு மனுக்கள் முறையாக நிரப்பப்படவில்லை என்று காரணம் கூறி தள்ளுபடி செய்திருக்கின்றன. Duval பிராந்தியத்தில் இப்படி தள்ளுபடி செய்யப்பட்ட பதிவுகளில் 45- சதவீதம் கறுப்பு இனத்தவர் வாக்குகளாகும்.

2000- தேர்தலில் Duval பிராந்தியம் 27000- வாக்குகளை செல்லாது என்று அறிவித்தது. இவற்றில் பெரும்பாலானவை கருப்பர்கள் வாக்குப்பதிவு செய்தவை. அவர்கள் தவறாக வாக்களித்தார்கள் என்று கூறி தள்ளுபடி செய்தார்கள் இது மாதிரியான தவறுகள் நடப்பதற்கு காரணம் குழப்பமான ஜனாதிபதி வாக்குச்சீட்டுக்கள்தான். Palm Beach பிராந்தியத்தில் பயன்படுத்தப்பட்ட படுமோசமான ''வண்ணத்துப்பூச்சி'' வாக்குச்சீட்டுக்கள் என்று சொல்லப்பட்ட படுமோசமான வாக்குச் சீட்டுக்கள்தான் இதே போன்று பயன்படுத்தப்பட்டன. வாக்குச்சீட்டு தவறான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படிவத்தில் அச்சிடப்பட்டுள்ள கட்டளைகள் தவறான முறையில் உள்ளன. அந்தக் கட்டளைப்படி வாக்குச்சீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இரண்டு பக்கங்களில் தான் ஜனாதிபதி வேட்பாளர்களது பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன.

புளோரிடாவில் நடைபெறுகின்ற தகராறின் தீவிரத்தன்மை அமெரிக்க அரசியல் வாழ்வின் ஒரு முக்கியமான அம்சத்தை எடுத்துக்காட்டுகிறது. 2000-தேர்தலுக்குப்பின் ஒரு மாதம் வரை வெடித்துச் சிதறியிருந்த அரசியல் கொந்தளிப்புக்கள் இன்னும் தணியவில்லை. மாறாக அந்த முரண்பாடுகள் அதைவிட உயர்ந்த அளவிற்கு தேர்தல் நாளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இப்போது வெடித்துச் சிதறியுள்ளது.

2000-தேல்தல் களவாடப்பட்டதை ஜனநாயகக் கட்சி அடிபணிந்து ஏற்றுக்கொண்டது. ஒட்டுமொத்த அரசியல் மற்றும் ஊடக நிர்வாகங்கள் புஷ் மற்றும் கோர் வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டது பழையகாலத்து வரலாறு என்று நாடகமாடிக் கொண்டிருக்கின்றன. கோடிக் கணக்கான உழைக்கும் மக்கள் புஷ் நிர்வாகம் சட்டவிரோதமானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதது என்றே கருதுகின்றனர். மற்றொரு ஜனாதிபதி தேர்தலை கொள்ளையடிப்பதற்கு புதிய முயற்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக மக்கள் சரியாகவே கவலை கொண்டிருக்கின்றனர்.

போட்டி மிகத் தீவிரமாகவும், வாக்கு எண்ணிக்கைகள் மிகக்குறுகலான அளவில் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிற மாநிலங்கள் பலவற்றில் புளோரிடா போன்ற அல்லது இதைவிட மோசமான கொச்சையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. Nevada-வில் குடியரசுக் கட்சி ஒரு கம்பெனியை வாக்காளர் பதிவிக்காக நியமித்திருக்கிறது. அந்தக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் ஜனநாயகக் கட்சி வாக்காளர்கள் தாக்கல் செய்த பதிவு மனுக்களை தூக்கி எறிந்துவிட்டு குடியரசுக் கட்சிக்காரர்கள் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் வைத்துக்கொண்டனர். Sproul & Associates நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர் அந்தக் கம்பெனியின் நடவடிக்கைகள் குறித்து ஒரு Las Vegas தொலைக்காட்சி நிலையத்திற்கு பேட்டியளித்தார். Oregon, West Virgnia, Minnesota மற்றும் இதர மாநிலங்களில் Sproul நிறுவனம் இதே போன்று வாக்காளர்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறது.

Milwaukee, Wisconsin, மேஜர் ஒரு ஜனநாயகக் கட்சிக்காரர் அவர் புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வழக்கமான வாக்குச் சீட்டுக்களுக்கு மேலாக அதிகமான வாக்குச்சீட்டுக்களை அச்சடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அந்த கவுண்டி நிர்வாகி ஸ்காட் வாக்கர் ஒரு குடியரசுக் கட்சிக்காரர் புஷ் பிரச்சாரத்தின் உள்ளூர் இணைத்தலைவர். தொடக்கத்தில் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். மோசடி நடக்குமென்ற ஆபத்தை சுட்டிக்காட்டினார்- மக்களை வாக்குப்பதிவில் கலந்து கொள்ளவிடாது தடுப்பதற்கு குடியரசுக்கட்சி மேற்கொண்டுவரும் முயற்சிகளில் வழக்கமாகக் கூறிவரும் சாக்குப்போக்கு இது.

Colorado- வில் 165,000- புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த மாகாண அரசாங்கம் குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. வாக்குச்சீட்டு மோசடிக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நூற்றுக்கணக்கான வாக்குப்பதிவேடுகளை அட்டர்னி ஜெனரல் அலுவலக ஆய்விற்காக அனுப்பியுள்ளனர். வழக்கு தொடரப்படும் என்ற அச்சுறுத்தலையும், வெளியிட்டுள்ளனர்.

நியூ மெக்ஸிகோவில் மாகாண குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிக்காரரான தேர்தல் அதிகாரி மீது புதிய வாக்காளர்கள் வாக்குப்பதிவில் தங்களது அடையாள அட்டைகளை காட்ட வேண்டுமென்று வழக்கு தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டனர். அடையாள அட்டைகளை காட்டவேண்டுமென்று கூறுவது குறிப்பாக புகைப்பட அடையாள அட்டைகளை காட்டக் கோருவது, ஏழைகள் மற்றும் இடம்பெயரும் வாக்காளர்களை குறிவைத்து எழுப்பப்படுகின்ற கோரிக்கையாகும். இத்தகைய வாக்காளர்கள் பொதுவாக தங்களது அடையாள அட்டைகளை கொண்டு செல்வதில்லை அல்லது அதிகாரிகளுக்கு அதைக்காட்ட தயங்குகிறார்கள்.

மிக்சிகனில் புஷ்- நிர்வாகமே தலையிட்டு பெடரல் நீதிமன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் ஆட்சேபனைகளுக்கு எதிராக வாதிட்டது. அந்த மாகாணத்தின் குடியரசுக் கட்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரி புளோரிடா-வைப் போன்று தற்காலிக வாக்குகளை எண்ணுவதைக் கட்டுப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில் ஓகியோவில் பெடரல் நீதிபதி ஒருவர், குடியரசுக் கட்சியை சேர்ந்த தேர்தல் அதிகாரி கென்னத் பிளாக்வெல் பிறப்பித்த இதே போன்ற விதிகளை தள்ளுபடி செய்தார். தற்காலிக வாக்குகள் எந்த வாக்குச்சாவடியில் பதிவு செய்யப்பட்டாலும், அவற்றை வாக்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த பெடரல் நீதிபதி கட்டளையிட்டார்.

மிக்சிகன் வழக்கில் தலையிடுவதற்கு முடிவுசெய்தது புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவுகின்ற வகையில் அமைந்தது என்று கூறப்படுவதை நீதித்துறை அதிகாரியான Mark Corallo மறுத்தார். மாகாணத்தின் அரச அதிகாரத்தை காத்து நிற்பதற்காகத்தான் தலையிட்டதாக அவர் கூறினார். ''காங்கிரஸ், எப்படி வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வது மாகாணத்தின் நீண்டகாலமாக நிலவிவரும் அதிகாரமாகும். இது சம்மந்தமாக காங்கிரஸ் வெளிப்படையாக முடிவு செய்து அந்த அதிகாரத்தை சிதைத்துவிடக்கூடாது என்று முடிவு செய்திருக்கிறது. நீதிமன்றங்கள் காங்கிரசின் முடிவை மதித்தாக வேண்டுமென அமெரிக்கா நம்புகிறது'' என்று Corallo குறிப்பிட்டார்.

இந்தக் கருத்து அப்பட்டமான இரட்டைவேடம் என்பது மிக வெளிப்படையாக அம்பலத்திற்கு வந்திருக்கிறது. 2000- தேர்தலில் மாகாணங்களின் நீண்டகால அதிகாரமான எப்படி வாக்குகளை எண்ணவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் புறக்கணித்துவிட்டது. புளோரிடாவில் பதிவான வாக்குகள் அனைத்தையும், திரும்ப எண்ணுவதற்கு மாகாண அரசியல் சட்டம் அதிகாரம் அளித்திருக்கிறது என்று புளோரிடா உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நவம்பர் 2-ல் தேர்தல் முடிவு மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அமையுமானால் அப்படித்தான் அமையும் என்று தோன்றுகிறது, அப்படியாயின் இறுதி முடிவு நீதிமன்றங்களில்தான் நிறைவேற்றப்படும் என்று குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்களை சார்ந்த இரு தரப்பு அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. புஷ் பிரச்சார பொது வக்கீலான Tom Josejiak விடுத்துள்ள எச்சரிக்கையில், புளோரிடா பாணியில் நாட்கணக்காக அல்லது வாரக்கணக்கான ஓகியோ, மிக்சிகன், விஸ்கான்சின், நியூ மெக்ஸிகோ மற்றும் இதர மாநிலங்களில் வழக்குகள் நடக்கலாம் தேர்தல் முடிவு தெரிய பல நாட்கள் அல்லது வாரங்கள் ஆகலாம் என்று அவர் பெருந்தொகையை நன்கொடையாக வழங்குகின்றவர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். வாக்குப்பதிவு தினத்திலும் அதற்குப்பின்னர் தொடரப்படும் வழக்குகளுக்காக, ஒவ்வொரு தரப்பும் இப்போதே பல்லாயிரக்கணக்கான வக்கீல்களை நியமித்திருக்கின்றன.

பெருகிவரும் அரசியல் மோதல்களின் நீண்டகால தாக்கங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் கிளிண்டன் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக பணியாற்றிய Leon Panetta அக்டோபர் 17-ல் நியூயோர்க் டைம்ஸிற்கு அளித்துள்ள பேட்டி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ''நமது அடிப்படை அமைப்புக்கள் மீதான நம்பிக்கை பலவழிகளில் சிதைக்கப்பட்டு வருகிறது: அமெரிக்க கம்பெனிகள் நிர்வாகத்தில் நமது மத சமுதாயத்தில் பத்திரிகைகளில் மற்றும் நிச்சயமாக அரசாங்கத்தில், குறிப்பாக ஈராக்கில் நமது புலனாய்வு கட்டுக்கோப்பில் ஏற்பட்டுள்ள தோல்வி அம்பலத்திற்கு வந்திருப்பதால் இப்போது நாம் தேர்தல் தகராறுகள் என்ற சகாப்தத்தில் இருக்கிறோம், நமது அரசியல் சட்டம் இந்த தகராறுகளை தீர்த்து வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்றுதான் ஒவ்வொருவரும் நம்புவார்கள், ஆனால் எத்தனை தேசிய தேர்தல்களை நாம் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏதாவதொரு கட்டத்தில் இந்த நாட்டில் அதனால் கொந்தளிப்பு வெடித்துவிடாதா'' என்றார்.

இரு கட்சிகளுக்கிடையேயான இந்த உள்ளார்ந்த முரண்பாடுகள், இரண்டு அமெரிக்காவின் ஆளும் மேல்தட்டினரின் இரண்டு போட்டிக் குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இதில் ஆழமாக சென்று கொண்டிருக்கின்ற கொந்தளிப்புக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் மிகப்பெருமளவில் செல்வம் ஒரு பகுதியில் குவிந்து கொண்டிருப்பதால் நிதியாதிக்கக் குழுவினருக்கும், மிகப்பரவலான வெகுஜன சக்தியான உழைக்கும் மக்களுக்குமிடையே நிலவுகின்ற சமூக துருவமுனைப்பு அடங்கியிருக்கிறது. இந்த சமூக பிளவு, போரினால் மோசமடைந்துகொண்டு வரும் பொருளாதார பாதுகாப்பற்ற நிலையினால், கம்பெனி ஊழல்களால் மற்றும் ஜனநாயக உரிமைகள்மீது நடைபெற்றுவரும் தாக்குதல்களால் பெருகிவந்து தற்போது மிகப்பரவலான மக்களிடையே ஒரு அரசியல் தீவிரமயப்பட்ட வெளிப்பாடாக ஆகியிருக்கிறது.

அரசியல் கருத்துப்பரிமாற்றங்கள் வளர்ந்திருக்கிறது, முதலாளித்துவ அரசியல் நிறமாலை சிதைவுகளுக்கப்பாலும், இது வளர்ந்திருக்கிறது. புதிய வாக்காளர்களாக பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவது இந்த மாற்றத்தைக் காட்டுகிறது. இவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் தொழிலாள வர்க்கம் மற்றும் சிறுபான்மை வாக்காளர்களாவர். எடுத்துக்காட்டாக புளோரிடாவில் 2000- தேர்தலோடு ஒப்பிடும்போது கூடுதலாக வாக்களிக்கும் தகுதியுள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவுசெய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் 2,00000- திற்கும் மேற்பட்டோர் கருப்பர் இன வாக்காளர்கள், ஓகியோவில் நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட இப்போது 6,00,000 -புதிய வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர் இவர்களில் பெரும்பாலோர் தொழில்துறை தொழிலாள வர்க்க மையங்களான Cleveland, Toledo, Cincinnati மற்றும் Dayton மற்றும் பகுதிகளைச் சார்ந்தவர்களாவர்.

அதேபோன்று இதர மாகாணங்கள் உட்பட பென்சில்வேனியா, Iowa, Missouri, Wisconsin, Colorado, New Mexico, Nevada, ஆகிய பகுதிகளில் மிகப்பெருமளவிற்கு கூடுதலாக பதிவு நடந்திருக்கிறது. புதிய வாக்காளர்கள் பதிவு செய்து கொண்டிருப்பது புஷ்ஷிற்கு பொதுமக்களது எதிர்ப்பை எதிரொலிப்பதாக அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக Philadelphia-வில் நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஜனநாகக் கட்சிக்காரர்களின் வாக்காளர் பதிவு 35,000 அதிகரித்திருக்கிறது. குடியரசுக் கட்சிக்காரர்களின் வாக்காளர்கள் பதிவு 22,000 வீழ்ச்சியடைந்திருக்கிறது. Philadelphia- புறநகரில் அடங்கியுள்ள 4- பெரிய பிராந்தியத்தில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அதிக அளவில் புதிய வாக்காளர்களை பதிவுசெய்து கொண்டிருக்கிறனர்.

நியூயோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஒரு விரிவான ஆய்வின்படி ஓகியோவில் புதிய வாக்குப் பதிவு நான்காண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலவரத்தைவிட குறைந்த வருவாய்காரர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாழ்கின்ற புறநகர் பகுதிகளில் 250- சதவீதம் அதிகரித்துள்ளது அதே நேரத்தில் வசதியானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிற குடியரசுக் கட்சி செல்வாக்குள்ள பகுதிகளில் 25-சதவீதம்தான் புதிய வாக்காளர்கள் பதிவு அதிகரித்துள்ளது. புளோரிடாவில் வசதிக் குறைவானவர்கள் பகுதிகளில் 60-சதவீதமும், பிற இடங்களில் 12-சதவீதமும் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. Missouri, St. Louis பகுதியில் 2000-ல் சில ஆயிரம்பேர் மட்டுமே புதிய வாக்காளர்களாக பதிவுசெய்து கொண்டனர், இப்போது 50,000-பேர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.

Top of page