World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Opel cuts over 10,000 auto jobs

ஜேர்மனி: ஓப்பல் 10,000 பேரை வேலைநீக்கம் செய்கின்றது

By Dietmar Henning
19 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

தாய் நிறுவனமான General Motors நிறுவனம் ஜேர்மனியில் 10,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அறிவித்தவுடன், வியாழன்று Bochum பகுதியிலுள்ள Opel கார் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் வெளிநடப்புச் செய்தனர். ஐரோப்பாவில் ஜேர்மனிக்கு வெளியில் அந்த நிறுவனத்திற்கு 63,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களிலும், 2000 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு நிறுவனம் முடிவுசெய்திருக்கிறது.

வெள்ளிக்கிழமையன்றும் Ruhr பகுதியிலுள்ள Bochum தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழிலாளர் குழு (Betriebsrat) எனப்படும் நிறுவனம் அளவிலான கூட்டு தொழிற்சங்க-நிர்வாகக் குழு உள்ள Frankfurtam Main அருகிலுள்ள Ruesselsheim பிரதான Opel தொழிற்சாலையில் வழக்கம்போல் வேலைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன.

தொழிற்சங்கம் ''நிறுவனப்பணிகளை சீர்குலைப்பதில்லை'' என்று உறுதிமொழி தந்திருப்பதால், அதிகாரபூர்வமான எந்த நடவடிக்கைக்கும் அழைப்புவிடுக்க IG Metall தொழிற்சங்கத்தலைவர்கள் மறுத்துவிட்டனர். பதிலாக தாம் ''தகவல் வழங்கும் கூட்டங்களை'' ஒழுங்கு செய்யப்போவதாக அவர்கள் அறிவித்தனர். தொழிலாளர்களது கண்டன நடவடிக்கைகளால் உற்பத்தி சீர்குலைந்துள்ள தொழிற்சாலைகளில் தொழிற்சங்க அதிகாரிகள் திரும்பவும் உற்பத்தியை தொடக்குவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்தினர்.

Detroit ஐ தலைமையிடமாக கொண்ட நிர்வாகக்குழு அறிவித்துள்ள முடிவு Bochum மற்றும் Ruesselsheim பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது ஐரோப்பாவில் General Motors இன் இரண்டாவது நிலையில் உயர் நிர்வாகியாக இருக்கும் முன்னாள் Opel தலைமை நிர்வாகியான Carl-Peter Forster, வியாழனன்று கருத்துத்தெரிவிக்கும்போது ''திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம்'' என்று கூறினார். வேலைவாய்ப்புக்களையும், சலுகைகளையும் வெட்டுவதன் மூலம் 2006 அளவில் General Motors அரை பில்லியன் யூரோக்களை (623மில்லியன் டொலர்களை) மிச்சப்படுத்த திட்டமிட்டிருக்கிறது.

Bochum தொழிற்சாலையில் தற்போது 9600 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4000 இற்கும் மேற்பட்டவர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள். இவர்களில் 3100 பேர் அடுத்த ஆண்டு ஆட்குறைப்பிற்கு உள்ளாவார்கள் என்று தொழிற்சாலை தொழிலாளர்குழு தெரிவித்துள்ளது. அந்த தொழிற்சாலையில் கார்களை பொருத்தும் மேடை முழுவதையுமே மூடிவிடுவது பற்றி தெளிவாக விவாதிக்கப்பட்டது. Ruesselsheim தொழிற்சாலையில் ஏறத்தாழ 20,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 5,500 பேர் நேரடியாக உற்பத்தி பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். அங்கு 4000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படவிருக்கின்றனர். Opel Powertrain போன்ற இதர பிரிவுகளில் மேலும் 1000 பேர் ஆட்குறைப்பிற்கு உள்ளாவார்கள் என்று General Motors தெரிவித்தது.

சர்வதேச போட்டி பெருகிவருவதாலும், விற்பனை குறிப்பாக ஜேர்மனியில் வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதாலும், போட்டி நிறுவன்ங்களான Daimler- Chrysler மற்றும் Volkawagen ஐ போன்று General Motors உம் பெருமளவிற்கு ஆட்குறைப்பை அறிவித்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய கார்கள் பதிவு வீழ்ச்சியடைந்துவிட்டது. அதன் போட்டியாளர்களைவிட Opel அதிகமாக விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் ஜேர்மனியில் Opel கார்கள் 10% குறைவாகவே விற்பனையாகியிருக்கின்றன. அந்தக் கார்களின் சந்தை பங்கு 9.4% சதவீதம்தான். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிறுவனத்தின் சந்தை பங்கு 17% ஆகும்.

General Motors ஐரோப்பிய துணை நிறுவனங்களான Opel, Saab மற்றும் Vauxhall ஆகியவை பல ஆண்டுகளாக இழப்பில் சென்று கொண்டிருக்கின்றன. 2004 இன் முதல் 9 மாதங்களில் அந்த நிறுவனத்தின் ஐரோப்பிய இழப்புக்கள் 397 மில்லியன் டொலர்களாகும்.

General Motors இன் ஐரோப்பிய இழப்புக்களை ஈடுகட்டுவதற்காக தொழிலாளர்மீது இப்போது குறிவைத்துவிட்டார்கள் Opel தொழிலாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை, ஆனால் Ruesssselsheim மற்றும் Bochum நகர மக்கள் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு நகரங்களிலும் Opel தான் தனிப்பெரும் தொழில்வழங்குனராகும். Ruesselsheim அடுத்த பெரிய நிறுவன தொழிற்சாலையில் 2000 பேர்தான் பணியாற்றுகிறார்கள், அவர்களில் பாதிப்பேர் Opel தங்கள் பணியை இழக்கின்றனர். Opel இல் தொழில்கள் வெட்டப்படுவதன் மூலம் கார் உதிரிப்பாகங்களை அதற்கு விநியோகிக்கும் ஏராளமான ஏனைய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர்.

1960èOTM Opel Bochum இல் தொழிற்சாலையை கட்டத்துவங்கியது. அந்தப் பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டதாலும், 1970 களிலும், 1980 களிலும் Ruhr பள்ளத்தாக்கு உருக்கு ஆலைகள் மூடப்பட்டதாலும், வேலைவாய்ப்பு இழந்தவர்கள் பலருக்கு Opel தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு கிடைத்தது. இப்போது Opel அறிவித்துள்ள ஆட்குறைப்பின் காரணமாக Ruhr பகுதியில் மேலும் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன நிலை ஏற்படும். இதனுடைய விளைவுகள், ''அதிரடியானது மட்டுமல்ல, பேரழிவை உண்டாக்கக் கூடியது'' என்று Bochum மேயர் Ottilie Scholz (சமூக ஜனநாயக கட்சி -SPD) தெரிவித்தார்.

Ruesslsheim பகுதியில் Adam Opel 1899 ம் ஆண்டு தையல் இயந்திரங்களையும், சைக்கிள்களையும் தயாரிக்க துவங்கினர். அந்தப் பகுதி தொழிலாளர்கள் இப்போது நிர்வாகம் தீட்டியுள்ள திட்டங்கள் குறித்து ஆழ்ந்த ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஓரளவிற்கு உற்பத்தி அங்கே இருக்கும் என்று தொழிலாளர்கள் நம்புகின்றனர்.

அண்மைவாரங்களில் Ruesslsheim தொழிற்சாலையை அல்லது ஸ்வீடன் Trollhaettan இலுள்ள Saab தொழிற்சாலையை மூடிவிட திட்டமிட்டிருப்பதாக வதந்திகள் உலவின. தற்காலிகமாக ஏதாவதொரு தொழிற்சாலையை மூடும் முடிவு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Saab தொழிற்சாலையில் ஆரம்பத்தில் 500 வேலைத்தலங்கள் வெட்டப்படும் என்று தலைமை நிர்வாகி Peter Augustsson தெரிவித்தார். என்றாலும், General Motors இன் ஐரோப்பிய தலைமை நிர்வாகியான Fritz Henderson அடுத்த தலைமுறை Opel Vctra கார்மட்டுமே தயாரிக்கும், ஒரே ஒரு தொழிற்சாலைதான் இயங்கும் என்றும் Saab 9-3 தயாரிப்பில் மட்டுமே ஈடுபடும் என்றும் குறிப்பிட்டார்.

நடப்பு General Motors திட்டம் ஆரம்ப நடவடிக்கைதான். அறிவிக்கப்பட்டுள்ள ஆட்குறைப்பை தொடர்ந்து மேலும் செலவினங்களை வெட்டுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் General Motors தலைமை நிதியதிகாரி John Devine தெரிவித்தார்.

தொழிலாளர்களின் கோபம் தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கும் எதிராக திரும்பியதாக Spieget Online தகவல் தந்துள்ளது: ''நிர்வாகம் மற்றும் IG Metall - Opel தொழிலாளர்களை விலைபேசி விற்றுவிட்டதாக'' பல பதாகைகள் குறிப்பிட்டன. Westdeutsche Allegemeine Zeitung பத்திரிகையும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு எதிராக தொழிலாளர்களுக்கு வெறுப்பு நிலவுவதை வெளியிட்டிருக்கிறது. ''திடீரென்று ஒரு தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர் இரட்டை வேட உளவாளி என்றும் துரோகி என்றும் கண்டிக்கப்பட்டார்.

உண்மையிலேயே தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் IG-Matall தொழிற்சங்கமும் வேலைவாய்ப்புக்கள் வெட்டப்படுவதை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். பவேரியா வானொலியில் கருத்துத்தெரிவித்த IG-Matall தொழிற்சங்க துணைத்தலைவர் Bertold Huber "இத்தகைய ஒரு நடைமுறையில் எவரும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியாது என்று எங்கள் தரப்பில் எவரும் நம்பவில்லை'' என்று குறிப்பிட்டார். மற்றொரு பேட்டியில் நிர்வாகம் இருக்கின்ற சிக்கலான சூழ்நிலையை தாம் புரிந்து கொண்டிருப்பதாகவும், ஒத்துழைப்பதற்கு தொழிற்சங்கம் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்திக்கூறினார். நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்ட முறைக்கு எதிராகவே அவரது முக்கியகண்டனம் அமைந்திருக்கிறது. வழக்கம்போல் முதலில் தொழிற்சங்கத்துடன் பொது உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்வதற்கு முன்னர் நிர்வாகம் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டுவிட்டது.

அனைத்து Opel தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவராகவும், நிறுவனத்தின் மேற்பார்வை வாரிய உறுப்பினராகவும் செயல்பட்டுவருகின்ற Klaus Franz அதேபோன்ற உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தினார்: ''இந்த நிலவரத்தில் ஊழியர்கள் குறைக்கப்படாமல் தவிர்க்க முடியாது'' முடிந்த வரை எவ்வளவு குறைந்த அளவிற்கு ஆட்குறைப்பு இருக்க வேண்டுமோ, அதற்குரிய எல்லா வழிவகைகளையும், ஆராய்ந்தாக வேண்டும். Opel ஊழியர்கள் தற்போதுள்ள தொழிற்சாலைகளிலேயே தொடர்ந்து பணியில் நீடிப்பதற்கு ''விட்டுக்கொடுப்புகளை'' நிர்வாகத்திற்கு தருவதற்கு தயாராக இருக்கவேண்டுமென்று தெளிவுபடுத்தினார்.

Bochum, North Rhine Westphalia மாநிலத்தில் உள்ளது. அந்த மாகாண அரசு சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக்கட்சியின் கூட்டணி அரசாங்கமாகும். அது பல நாட்களாக தொழிலாளர்களை தான் ஆதரிக்க போவதில்லை என்றும் ஆதரிக்க முடியாதென்றும், கூறிவருகிறது. மாகாண முதலமைச்சரான Peer Steinbrueek (SPD) Opel Bachum ஊழியர்கள் அமைதிகாக்க வேண்டுமென்றும் தங்களது வேலை நிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் Bochum இல் ஆட்குறைப்பு செய்யப்படுவதை தான் தடுக்கமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

மாகாண பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரும் Bochum இன் IG- Metall தொழிற்சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவருமான Herald Scharhau (SPD) செவ்வாய் கிழமையன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில் ''பொதுப் பணத்திலிருந்து (அரசாங்க) எதையும் வழங்கப்போவதில்லை. அதனால் எதையும் சாதித்துவிட முடியாது'' என்று குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான ஆதரவையும், எதிர்பார்க்க முடியாது. Bochum இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் Scharhau, Steimbrueek (கூட்ட ஆலோசனைக்குழு) மற்றும் Opel நிர்வாகக்குழு பிரதிநிதிக்குழு உறுப்பினர்களுடன் கலந்து கொண்ட மத்திய பொருளாதார விவகார அமைச்சர் Wolfgang Clement (SPD) ''சமரசத்தீர்வு வரும்'' என்று நம்பிக்கை தெரிவித்தார். அதைப்போன்று Opel தொழிலாளர் Bochum இல் வேலைக்குத்திரும்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வேலைவாய்ப்பை வெட்டுகின்ற திட்டத்தின் அவசியத்தை தாம் புரிந்து கொண்டிருப்பதாகவும், ஜேர்மனியில் தொழிலதிபர்களின் உற்பத்தி செலவின பிரச்சனைகளை சமாளித்தாக வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

செவ்வாய்கிழமை அக்டோபர் 19ல் IG Metall ம் கூட்டு ஆலோசனைக்குழுவும் ஐரோப்பா முழுவதிலும் ஒரு நாள் நடவடிக்கை தினத்தை அறிவித்திருக்கின்றன. அன்றையதினம் எத்தகைய நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அனைத்து Opel தொழிலாளர் குழுவின் தலைவர் Klaus Framz 1998இல் அமெரிக்க General Motors நிறுவனத்தில் நடைபெற்றது போன்ற வேலை நிறுத்த நடவடிக்கையை தவிர்க்குமாறு தொழிலாளர் பிரதிநிதிகளும் கட்டளையிட்டிருப்பதாக தெரிவித்தார்.

Top of page