World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பால்கன்

Balkans continue to fracture

பால்கன் தொடர்ந்தும் சிதைவடைகிறது

பகுதி 1 | பகுதி 2

By Paul Mitchell
1 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

இது பால்கன் பகுதியில் தொடர்ந்து வளர்ந்து வரும் ஸ்திரமற்ற தன்மையையும், பதட்டங்களையும் பற்றிய இரு-பாகத் தொடரின் முடிவுப் பகுதியாகும்.

கொசோவோவின் தகுதிநிலை

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் கிரைஸ் பாட்டனின் கடிதத்தில் முக்கியமான கருத்து கொசோவோவின் தீர்க்கப்படாத தகுதிநிலைப்பற்றி இருந்தது. சுதந்திரத்தைப் பற்றி வாக்கெடுப்பு நடத்தும் பிரச்சினையை ஒத்திப்போட்டு, மான்டிநீக்ரோவின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில் முன்னேற்றத்தைக் காண்பதில் விரைவு படுத்திய தன்மை, "சர்வதேசச் சமூகத்தில் கொசோவோவின் இறுதி அந்தஸ்து பற்றிய தீர்விற்கான காலக்கெடு இதையொட்டி தடைக்குட்படாது" என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.

கொசோவோவில் 50 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் வேலையின்மையில் உள்ளனர். அரசாங்க அதிகாரிகளோ இந்த எண்ணிக்கை 70 சதவிகிதமாகக் கூட இருக்கலாம் என்று ஒப்புக் கொள்ளுகின்றனர் ஏனெனில் பலர் பதிவு செய்து கொள்ளுவதில்லை. நாட்டை விட்டு வெளியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளதாலும், வெளியில் இருந்து வரும் நிதி குறைவதாலும், சமூக நெருக்கடி அதிகரித்து வருகிறது. கொசோவோவில் உள்ள ஐ.நா. பணிக்குழு (UNMIK), 500 சமூக உடைமையான நிறுவனங்கள் விற்கப்பட உள்ளன என்று கூறியுள்ளது, இதையொட்டி இன்னும் கூடுதலான வேலையிழப்புக்கள் ஏற்படும்.

அதிகாரபூர்வமாக, கொசோவோ, செர்பியா, மான்டிநீக்ரோவின் ஒரு பகுதிதான்; ஆனால் இது, "இறுதி ஒப்பந்தம் முடிவுகாணாத நிலையில்" UNMIK யால் இந்த பிராந்தியம் நிர்வகிக்கப்படுகிறது. யூகோஸ்லேவியாவைத் தகர்க்கும் நோக்கமுடைய, அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள், ஆகியவற்றை ஆதரிக்கும் ஏகாதிபத்தியச் சார்புடைய அல்பேனிய சக்திகள் மற்றும் பெல்கிரேடில் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள மேற்கத்திய நாட்டுச் சார்புடைய ஆட்சி, இவை இரண்டையும் சமாதானப் படுத்தும் வகையில் இந்த ''இறுதி நிலை'' எடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக்குழுத் தீர்மானம் 1244 ன்படி, இந்த ஒப்பந்தத்தில்"கணிசமான தன்னாட்சி'' ஈடுபட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது; அதே நேரத்தில், "யூகோஸ்லேவியா [இப்பொழுதைய செர்பியா, மான்டிநீக்ரொ] கூட்டாட்சிக் குடியரசின் தேச முழு இறைமைக்கும்'' உறுதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், முன்னாள் கொசோவோ விடுதலைப் படைத் (KLA) தலைவர்களினால் தூண்டப்பெற்ற வகுப்புவாத வன்முறையினால், 19 பேர் உயிர் இழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காயமும் உற்றனர். பெரும்பாலான செர்பியர்கள் உட்பட 4,000 பேருக்கு மேல் இடத்தைவிட்டு ஓடுமாறு நேர்ந்தது. கசிவான UN உட்குறிப்பு அறிக்கை ஒன்று, UNMIK "கிட்டத்தட்ட சரிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்டது" என்று கூறுகிறது.

இப்படி மோசமாகிக்கொண்டிருக்கும் நிலைமையை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே மோதல்கள் உள்ளன, சிலர் அல்பேனியத் தேசியவாதிகள் கோருவது போல் கொசோவோவிற்குக் கூடுதலான தன்னாட்சி கொடுக்கலாம் என்று விரும்புகின்றனர்; வேறு சிலர் வடக்குக் கொசோவோப் பகுதியை "பல உட்பிரிவுகளாக ஆக்கலாம்" என்ற செர்பிய முன்மொழிவை பரிசீலிக்கின்றன.

பால்கன் பகுதிக்கு UN தூதரான, நார்வே நாட்டைச் சேர்ந்த Kai Eide கொசோவோவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கையில் மாற்றம் வேண்டும் என்றும், கோசோவோவின் இறுதி அந்தஸ்து பற்றிய பேச்சுவார்த்தைகள் துவக்கப்படவேண்டும் என்று சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஷ்கா பிஷர் ஜெர்மனியின் இராஜதந்திர அலுவலர்களிடம் கொசோவோவில் தற்பொழுதைய சர்வதேசக் கொள்கை நல்லமுறையில் நடைபெற்று வருகின்றது என்று கூறிக்கொண்டிருக்கையில், ஜெர்மனியப் பாதுகாப்பு மந்திரி பீட்டர் ஸ்ட்ரக் ஒரு பாராளுமன்றக் குழுவிடத்தில் இக்கொள்கை மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று----ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்வகிக்கப் பட வேண்டிய ஒரு பாதுகாப்பு நாடாக கொசோவோ இருக்க வேண்டும் எனக்கூறும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (கொசவோ) என்னும், எதிர்க்கட்சி அறிக்கைகளைப் பிரதிபலித்து கருத்துக் கூறினார். பெரும் படைகளும் அதற்கான அதிகச் செலவுகளும் சிறிய, தனிமையில் உள்ள குடியேற்றப்பகுதிகளைக் காக்கக்கூட போதாதவை என்றும், "கூடுதலான முறையில்" செர்பிய தொகுப்புக்கள் அமைக்கப்படுவது பற்றி பரிசீலனை செய்யவேண்டும் என்றும் ஸ்டரக் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் பிரிட்டனும், கொசோவோவில் உள்ள அல்பேனிய இனவழியிலான அமைப்புக்களுக்கு விரைவில் சில அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளன. செர்பிய, மான்டிநீக்ரோவிற்கான அமெரிக்கத் தூதர் மைக்கேல் போல்ட் தெரிவித்துள்ள கொசோவோவின் இறுதி நிலை பற்றி தெளிவாக்குவது முக்கியம் என்ற கருத்தை ஒப்புக்கொண்டாலும், "அந்தஸ்தை விட இருக்கும் தரங்கள்" முக்கியம் என்பதுதான் வாஷிங்கடனுடைய அதிகாரபூர்வமான கொள்கை என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபர் 23 அன்று புதிய தேர்தல்கள் நடைபெற உள்ளன, முழு சுதந்திர வேண்டும் என வற்புறுத்தும், இனவழி அல்பேனியச் சக்திகள், மற்றும் கொசோவோவின் இருக்கும் அந்தஸ்து காப்பாற்றப்படவேண்டும் என்று நினைக்கும் செர்பியத் தேசியவாதிகளுக்கும் ஆழ்ந்த மோதலின் குவிப்பை இவை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கச் சார்பு கைப்பாவை, முந்தைய KLA உடைய பின்தோன்றல் அமைப்பான கொசோவோ ஜனநாயகக் கட்சி, இப்பொழுது கொசோவோவை அதன் பிரதம மந்திரி Bajram Rexhepi-யின் கீழ் ஆண்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தல்களைப் புறக்கணிக்கவுள்ள செர்பியர்கள், இதன் சட்டமன்றத்தையும் புறக்கணித்துள்ளனர்; ஜூலை 8ம் தேதி, சுதந்திரம் பற்றிய வாக்கெடுப்பு நடத்துவது உட்பட சில அரசியலமைப்புத் திருத்தங்களை ஏற்றுள்ளது.

அல்பேனிய அரசாங்கம் இந்த நகர்வுக்கு ஆதரவு கொடுக்கிறது, அதன் ஜனாதிபதி ஆல்பிரெட் மோய்சியு தன்னுடைய நாட்டின் அக்கறை கொசோவோவுடைய இறுதி அந்தஸ்து பற்றித் தீர்வு காண்பதாக இருக்கும் என்று சமீபத்தில் அறிவித்துள்ளார்.

பிரேசேவோ பள்ளத்தாக்கும், மாசிடோனியாவும்

அல்பேனியத் தேசியவாதிகள் இனவழியில் அல்பேனியப் பகுதிகளைத் தெற்கு செர்பியாவில் Presevo Valley என அழைக்கப்படும் பகுதி ஒன்றுபடுத்தப்படவேண்டும் என்று தூண்டிவிடுகின்றனர், இப்பகுதியில் மொத்ததத்தில் 60,000 அல்பேனியர்கள், இருக்கும் 30,000 செர்பியர்களைவிட எண்ணிக்கையில் நிறைந்துள்ளனர். இப்பகுதிதான் 2000ம் ஆண்டில் பிரேசேவோ விடுதலைப் படை, புஜனோவாக்கிற்கும், ஒரு KLA-க்கிளையான மெட்வேட்ஜா (UCPBM) க்கும் இடையே ஆயுதமேந்தி நடைபெற்ற பூசலின் களமாக இருந்தது.

செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற செர்பிய உள்ளாட்சித் தேர்தல்களில், ஜனநாயக நடவடிக்கைக்கான அல்பேனியக் கட்சி பிரேசேவோ பள்ளத்தாக்கில் பெரும் வெற்றியைக் கொண்டது. இப்பகுதிக்குச் சட்ட மன்றம் போல் செயல்படும் தெற்குச் செர்பிய ஒருங்கிணைப்பு மையத்தைப் பற்றி, DPA தலைவர் ராக்மி முஸ்டபா தெரிவித்தார்: "இந்த ஒருங்கிணைப்பு மையம் முன்போல் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை, இது மாற்றப்படவேண்டும்." இந்த ஆண்டு மற்றொரு DPA தலைவர் சைப் காம்பெரி முன்னதாகக் கூறியிருந்தார்: "அல்பேனியர்கள் இப்பகுதி கொசோவோவுடன் இணைக்கப்படவேண்டும் என்று கூறுவது இயல்பானதுதான்."

2001ம் ஆண்டில், பிரேசேவோ பள்ளத்தாக்குப் பூசல் எல்லை கடந்து மாசிடோனியாவிற்கு ஒரு KLA-UCPMB-யின் கிளையான அல்பேனியத் தேசிய விடுதலைப் படையினால் (NLA) எடுத்துச் செல்லப்பட்டது; அதுவும் கொசோவோவுடன் இணைக்கப்டவேண்டும் என்று கூறியுள்ளது.

நவம்பர் 7ம் தேதியன்று மாசிடோனிய அரசாங்கம் தன்னுடைய திட்டமான சில உள்ளாட்சித் தொகுதிகளின் எல்லைகளை மாற்றுவது பற்றியும், அதையொட்டி அல்பேனியர்கள் அவற்றில் பெரும்பான்மையில் இருப்பர் என்பது பற்றியும், ஒரு வாக்கெடுப்பு நடத்த உள்ளது. இந்த வாக்கெடுப்பு இனவழி மாசிடோனியர்கள், மற்றும் 25 சதவிகித அல்பேனியச் சிறுபான்மையினருக்கு இடையே உள்ள உறவுகளை ஆபத்திற்குட்படுத்தும் அச்சத்தைக் கொண்டுள்ளதோடு, 2001 ஓக்ரிட் அமைதி உடன்பாட்டை ஆபத்திற்குட்படுத்துவதாகவும் உள்ளது. மாசிடோனிய அரசாங்கம், Vmro-Dpmne கட்சி மற்றும் NLA ஆதரவுடன் ஜனாதாபதி Ljubco Georgijevski-யின் தலைமையில் உள்ளது.

இந்த Giorgijevski உடைய கூட்டணிக்கு எதிராக, அதற்கு நாட்டில் ஆதரவு இல்லை என்று வெளிப்படையாகத் தெரிந்ததும் அமெரிக்கா திரும்பிவிட்டது. அரசு உடமை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுதல், நலன்புரி வழங்கினங்கள் வெட்டுதல் ஆகிய நடவடிக்கைகளின் முயற்சிகளுக்கு எதிராக வெகுஜனங்கள் ஆர்ப்பாட்டங்களும், பொது வேலைநிறுத்தங்களும் நிகழ்ந்தன. மேற்கத்திய வல்லரசுகள் இன்னும் கீழ்படிகிற அரசாங்கத்தை விரும்புகின்றன; அத்தகைய அரசாங்கம் NLA ஐ ஒன்றுபடுத்த வேண்டும் எனக் கருதுகின்றன; ஆனால் ஏராளமான மலைபோல் குவிந்துள்ள சான்றுகள் இரகசியமாக வாஷிங்கடனுடைய ஆதரவிற்கு உட்பட்டுள்ளது என்றும், அரசாங்க கட்டமைப்பிற்குள் ஊடுருவி, தீவிரமாகத் தனியார்மயமாக்க மூலோபாயத்தைத் தொடரும் என்றும் தெரிவிக்கின்றன.

இப்பொழுது நாட்டில் ஜனாதிபதி Branko Crvenkovski-யின் சமூக ஜனநாயக கூட்டணி, தாராளவாத ஜனநாயகக்கட்சி, NLA க்குப் பின்தோன்றல் அமைப்பான ஒருமைப்பாட்டின் ஜனநாயக ஒன்றியம் (Democratic Union of Integration) ஆகியவற்றின் கூட்டணியினால் செயல்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம், Concordia செயல்பாடு என்ற பெயரில் மாசிடோனியாவில் நேட்டோப் பணியின் கட்டுப்பாட்டை மேற்கொண்டது. ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியவற்றால் சிறு அளவில் ஊக்குவிக்கப்பட்ட முயற்சியாக இருந்தாலும், EU-வின் வரலாற்றில் அது முதல் இராணுவ நடவடிக்கையாகும்.

பொஸ்னியா ஹெர்ஜிகோவினா

இதைவிடப் பெரிய, கூடுதலான சிக்கல் வாய்ந்த நேட்டோ பணியை பொஸ்னியா ஹெர்ஜிகோவினாவில் (BiH) இந்த ஆண்டு இறுதிக்குள் 7,000 நேட்டோ வீரர்களைக் கொண்டு நடத்தத் திட்டம் ஒன்றை EU கொண்டுள்ளது, ஆனால் அமெரிக்க தன்னுடைய தளத்தை டுஸ்லாவில் இருத்திக் கொள்ளும்.

டேடன் உடன்பாட்டில், BiH ஐ க் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐ.நா, உயர் பிரதிநிதி அலுவலகம் மறு சீரமைப்பிற்கும், குறைந்த தன்மைக்கும் மாற்றப்பட்டு, ஐ.நா.வின் உயர் பிரதிநிதி பாடி ஆஷ்டெளன், "என்னுடைய பங்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி என்ற முறையில் கூடுதலாகப் பெருகி வருகிறது." என்று கூறியுள்ளார்.

"சர்வதேசச் சமூகம் இங்கிருந்து வெளியேறுவதற்கான உபாயம் எதையும் கொண்டிருக்கவில்லை; ஆனால் BiH ஐரோப்பாவில் சேர்வதற்கான நுழைவு உபாயத்தைக் கொண்டிருக்கிறது. நாங்கள் அந்தப் பணி முடிவடையும் வரை இங்கு தங்கியிருப்போம்." என்று ஆஷ்டெளன் ஒப்புக் கொண்டுள்ளார்.

BiH, Republika Srpska, Croat-Muslim Federation என்று இரண்டு தனித்தனியே இயங்கும் அமைப்புக்களாக உள்ளது, இரண்டுமே சட்ட மன்றங்களைக் கொண்டு, இரண்டிலும் அதே தேசியக் கட்சிகள் 1992-95 போரின் போது அதிகாரத்திற்கு வந்து அரசை இயக்குகின்றன. உள்ளாட்சித் தேர்தல்கள் அக்டோபர் 2ம் தேதி நடக்க இருப்பவை, இந்தப் பிரிவை உறுதிப்படுத்துபவை போல் உள்ளன.

நாட்டின் உண்மையான அதிகாரம் முழுவதையும் ஆஷ்டெளன் செலுத்துகிறார் மற்றும் சமீபத்தில் 60 செர்பிய அதிகாரிகளை, உள்துறை மந்திரி, பாராளுமன்றத் தலைவர் உட்பட, பதவி நீக்கம் செய்தார்; அவர்கள் பொஸ்னிய செர்பிய போர்க் குற்றத் தஞ்சம் கோருபவர்களான Radovan Karadzic மற்றும் Ratko Mladic ஆகியோருக்கு உதவிவருவதாக இவர் குற்றமும் சாட்டியுள்ளார்.

கிட்டத்தட்ட 2.2 மில்லியன் அகதிகள் பொஸ்னியாவில் இருந்து திரும்பிவிட்டார்கள் என்று ஐ.நா. அண்மையில் கூறியுள்ளது; ஆனால் ஐ.நாவின் பொஸ்னியாவில் உள்ள அகதிகள் உயர் ஆணையாளரான உடோ ஜோன்ஸ், "நிலைமை இன்னும் நாட்டின் பல பகுதிகளிலும் வெடிப்புத் தன்மையைத்தான் கொண்டிருக்கிறது" என்று கூறினார். கிட்டத்தட்ட 500,000 மக்களை வேறிடங்களில் நிலையாகக் குடியேறிவிட முடிவெடுத்துள்ளனர்.

இந்த மாதத் துவக்கத்தில் கோன்செவிக் போல்ஜே பகுதியில் செர்பியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலகங்கள் நிகழ்ந்தன. அரசியல் பகுப்பாய்வாளர் Tanja Topic பால்கனில் இருக்கும் அமைதி மையத்திடம் "எந்த நேரத்திலும் போர் மீண்டும் வெடிக்கலாம்" என்று கூறியுள்ளார்; மேலும் "போருக்குப் பிந்தைய பொஸ்னியாவில் உள்ளூர் அரசியல் வாதிகளோ, சர்வதேசச் சமூகமோ நாட்டை அரசியல் அளவில் ஸ்திரப்படுத்தும் முயற்சியில் வெற்றி கொள்ளவில்லை." என்றும் தெரிவிக்கிறார்.

இந்தக் கருத்துத்தான் அரசியல், இராணுவப் பகுப்பாய்வளரான நிஷீstவீனீவீக்ஷீ றிஷீஜீஷீஸ்வீநீ ஆலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. அவர் தெரிவிப்பதாவது: "இப்பொழுது பொஸ்னியாவிலும் அப்பிராந்தியத்திலும் உள்ள அமைதி நிரந்தரமானது அல்ல. இந்தப் பகுதி இன்னும் "வெடி மருந்து நிறைந்த இடம்" என்றுதான் குறிப்பிடப்படுகிறது; பூசல்கள் விளைவதற்கு மிகச்சிறிய காரணங்களே போதுமானவை."

ஹங்கேரியத் தலையீடு

செர்பியாவின் Vojvodina மாகாணப் பகுதியிலும் இன பதட்டங்கள் எழுந்துள்ளன; இதில் ஹங்கேரி-மொழி பேசும் சிறுபான்மை உள்ளது. இந்த மாநிலம்தான் கிட்டத்தட்ட 220,000 செர்பிய அகதிகள், குரோசியா, கொசோவோவில் இருந்து வந்துள்ளவர்களுக்குப் புகலிடமாகவும் உள்ளது. 1990 களில் ஓரளவு இனவழியிலான அமைதி இருந்தது; ஆனால் ஹங்கேரியக் கட்சிகள், ஹங்கேரியாவின் உதவி பெற்று அங்கு சூட்டை அதிகரித்துள்ளனர்; இதற்குக் காரணம் SRS உடைய செல்வாக்கிற்கு அகதிகள் உட்பட்டுள்ளதுதான் எனக் குறை கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் ஹங்கேரியின் வெளியுறவு மந்திரி Lszl Kovcs 300,000 ஹங்கேரிய இனவழியாளருக்கு எதிராகக் "கொடுமைகள்" இழைக்கப்படுகின்றன என்று குறை கூறினார்; உள்துறை மந்தரி Mnika Lamperth, "எங்கள் இனத்தோருக்கு எதிராக உடல் ரீதியான தாக்குதல்கள், திட்டுக்கள் உட்படப் பல கொடுமைகள் இழைக்கப்படுவது பற்றிப் பெருகிய அறிக்கைகள் வந்துள்ளது பற்றி ஹங்கேரி பெரிதும் கவலை கொண்டுள்ளது." என்று கூறியுள்ளார்.

Jzsef Kasza என்னும் ஹங்கேரியர்களின் வோஜ்வோடினோக் கூட்டின் (VMSZ) உடைய தலைவர், இந்தத் தாக்குதல்கள் குரோவேஷியா, பொஸ்னியா, கொசோவோ ஆகிய பகுதிகளில் போர் துவங்கிய வகைகளைத்தான் நினைவுறுத்துகின்றன என்று அடிக்கடி தெரிவித்து வருகிறார்.

நிகழ்ந்துள்ள "கொடுமைகள்" பற்றிய அறிக்கைகள் 67 நிகழ்வுகளில் இழிவான முறையில் கல்லறைகள் சிதைக்கப்பட்டது உட்பட்டவை SRS உடன் தொடர்பு கொண்டவை என்பதைக் குறிக்கின்றன. செர்பிய உள்துறை மந்திரியால் இவை மேற்கோளிடப்பட்டுள்ளன. ஹங்கேரிய அரசாங்கம் இந்த எண்ணிக்கை 300-க்கும் மேலாக இருக்கும் என்றும் இப்பிரச்சினை "சர்வதேசப் பார்வைக்கு" வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் "சிறுபான்மையினர் பிரச்சினையை ஒட்டி, "பொருளாதாரத் தடைகள்" செர்பியா, மான்டிநீக்ரோ மீது, EU-வில் சேர்ப்பதற்கு முன் விதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இரு பெரிய ஹங்கேரிய-அமெரிக்கச் செல்வாக்குக் குழுக்களான ஹங்கேரிய-அமெரிக்கக் கூட்டு, மற்றும் ஹங்கேரிய-அமெரிக்க சட்ட மன்ற உறவுகளை மையம், இரண்டும் அமெரிக்கக் கொள்கை வகுப்போர் இதைப் பற்றிய குவிப்பைக் கொள்ளவேண்டும் என்று முயன்று வருகின்றனர். ஹங்கேரியில் பிறந்த அமெரிக்கச் சட்ட மன்ற உறுப்பினராகிய டாம் லான்டோஸ் செர்பிய பிரதம மந்திரி கோஸ்டினிகாவிற்குக் கடிதம் எழுதியுள்ளார்; இதைத்தவிர வேறு 13 அமெரிக்கத் தேசியச் சட்ட மன்ற உறுப்பினர்களும் வேறு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

ஹங்கேரியின் ஜனாதிபதி பெர்னெக் மாடில், இந்த நிகழ்வுகள்"சமீபத்திய (பால்கன்) போர்கள், மற்றும் கடுமையான பொருளாதார நிலைமையின் விளைவுகள்" என்று பின்னர் கூறியுள்ளார்; Kroly Pl என்னும் VMSZ உடைய துணைத் தலைவர் தாக்குதல்கள் பொருளாதரச் சரிவு, குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்புக்கள் இல்லாத நிலை இவற்றினால் ஏற்படுபவை என்று குறை கூறினார்; ஹங்கேரிய முதலாளித்துவம் இன்னமும் அயல்நாடுகளில் உள்ள ஹங்கேரியருக்கும், அண்டை நாடுகளில் இருக்கும் ஹங்கேரிய உரையாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

முந்தைய Fidesz கட்சி நிர்வாகம், ஜனவரி 2002 இல் ஒரு தகுதிநிலைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது; அது வெறும் வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி ஆகிய நலன்களைக் கொடுக்கும் ஒரு தொகுப்பு என்றில்லாமல், "ஹங்கேரியைவிட்டு நீங்கி வெளியே சென்றுள்ள ஹங்கேரியர்கள் சுய அமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கு ஆதரவு தரும் அமைப்பாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

ஹங்கேரி சுதந்திர ஜனநாயக கூட்டணியின் சோஷலிஸ்ட் கட்சி கூட்டணி அலையன்ஸ் Fidesz உடைய அரசாங்கத்தை 2002 ல் பதிலீடு செய்தது; ஆனால் அதன் கொள்கைகளைத்தான் எல்லா சாரம்சத்திலும் பின்பற்றி வருகிறது.

பிரதம மந்திரி பீட்டர் மெட்ஜியீசி கூறினார்: "ஹங்கேரியின் அரசியல் கட்சிகள் பல பிரச்சினைகள் பற்றி விவாதிக்கலாம், ஆனால் அவை அனைத்துமே ஹங்கேரியர் நாட்டின் எல்லைக்கப்பால் இருப்பவர்கள் பற்றிப் பொறுப்புக் கொண்டுள்ளனர்; ஹங்கேரிய நாட்டில் நலனைக் கருத்திற்கொண்டு, தேசிய அடையாளம், நனவு இவற்றின் அடிப்படையில், அனைத்தும் செய்யப்படவேண்டும்.

இரட்டைக் குடியுரிமையை அண்மையிலுள்ள நாடுகளில் ஹங்கேரிய மொழி பேசுபவர்களுக்கு வழங்குவதற்கு ஆதரவு தேடும் வகையில் இவருடைய அரசாங்கம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தலாமா என்று பரிசீலித்து வருகிறது. ஆனால் இது இன்னும் வறிய நாடுகளில் இருந்து பெரும் மக்கட்தொகுப்பு குடிபெயர்ந்து வந்து விடுமோ என்பதால் எச்சரிக்கையும் காட்டப்படுகிறது.

பால்கன் பகுதியில் உள்ள நிலைமை மேற்கத்திய வல்லரசுகளின் தலையீட்டின் கசப்பான குற்றத்தாலேயாகும். வறுமை, ஊழல், இனவழிப் பிரிவுகள் போன்றவை பால்கன் பகுதிகளில் பழைய யூகோஸ்லேவியாவைத் தகர்க்கும் முயற்சியை ஒட்டி, தொத்துவியாதி போல் பெருகியுள்ளன.

அந்தத் தலையீடு மனிதாபிமானச் செயல் என்ற போர்வையில் நிறைவேற்றப்பட்டது ஆனால் மிகப்பெரிய இராணுவ சக்தியை சிறிய நாடுகளின் மீது தந்திரோபாயமான "பெரிய வல்லரசுகளின்" நலன்களைத் தொடர்வதற்காகவும், தேசிய இறைமைக் கோட்பாட்டை இகழ்வுடன் மீறுவதற்காகவும், காலனித்துவ முறையில் மீண்டும் அடிமைத்தனத்தின் பல வகைகளை நிலைநிறுத்தவதற்காகவும், ஒரு புதிய போரைத் துவக்குவதற்கான விதைகளைத் தூவும் திறன் கொண்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையான விரோதப் போக்கைப் புதுப்பிப்பதற்காகவும் கையாளப்பட்டது.

Top of page