World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The political issues facing Opel workers

ஓப்பல் தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள அரசியல் பிரச்சனைகள்

Statement of the WSWS Editorial Board
22 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஐரோப்பா முழுவதிலும் உள்ள நகரங்களில் தனது ஐரோப்பிய துணை நிறுவனங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து அக்டோபர் 19ல் நடத்தப்பட்ட நடவடிக்கை தினத்தில் ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி கீழ்கண்ட அறிக்கையை விநியோகித்தது.

ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் ஜேர்மனியின் ஓப்பல் தொழிற்சாலைகளில் 10,000 வேலைகள் உட்பட தனது ஐரோப்பிய தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற 63,000 தொழிலாளர்களில் 12,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாவிருப்பதாக அறிவித்திருப்பது ஓப்பலிலும், ஜெனரல் மோட்டார்ஸின் இதர ஐரோப்பிய துணை நிறுவனங்களிலும் பணியாற்றிகொண்டிருக்கிற ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகளை அண்மை நாட்களில் பெரிய நிறுவனங்களான Siemens, Daimler Chysler மற்றும் Karstadt போன்றவை மேற்கொண்டதை தொடர்ந்து ஓப்பல் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பது ஜேர்மனியில் வேலைவாய்ப்பு, ஊதியங்கள் மற்றும் சமூக நிலைகள்மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களின் ஒரு புதிய கட்டத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இதில் சம்மந்தப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட உற்பத்தி வசதிகளை பாதுகாப்பது தொடர்பான உள்ளூர் தொழிற்சாலையை அடிப்படையாக கொண்ட மோதல்களைவிட அதிகமானதாகும். Dertoit இலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள மிகக்கொடூரமான நடவடிக்கை பெரிய நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அவர்களது கட்டளைக்கு பணிந்து நடக்கின்ற அரசாங்கங்கள் தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களையும், உரிமைகளையும், அழித்தொழிப்பதற்கு ஒருங்கிணைந்த தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த தாக்குதலின் நோக்கம் முதலாளித்துவ சந்தையின் கட்டுத்திட்டமற்ற ஆதிக்கம் செலுத்துவது மற்றும் சமூக வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும், ஒட்டுமொத்தமாக பெருவர்த்தக லாப நலன்களுக்கு அடிபணிந்து செல்லவைப்பதையும் கொண்ட ஒரு சமூக கொள்கையை நிலைநாட்டுவதாகும். ஒரு சமுதாயத்தின் சிறிய மேல்தட்டினர் இலாபம் ஈட்டுவதையும், தனிப்பட்ட வகையில் பணக்காரர்களாவதையும் கட்டுப்படுத்துகின்ற அனைத்து கட்டுத்திட்டங்களையும் இல்லாதொழிப்பதாகும்.

ஸ்வீடன் நகரான Trollhattan இல் உள்ளூர் அதிகாரிகள் கார் தொழிலாளர்கள் குழந்தைகளை இரவுகளில் தங்கவைத்து பராமரிப்பதற்காக குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களை திறப்பதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருப்பதும் மற்றும் 24 மணிநேர மூன்று பணிமுறையை உள்ளூர் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் அறிமுகப்படுத்த இயலும் வகையில் வகைசெய்திருப்பது இவ்வாறான ஒரு பொதுவான போக்கை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. சமூக பாதிப்புக்கள் எதுவாக இருந்தாலும் நிறுவனத்தின் முன்னுரிமை நடவடிக்கைகளில் எதுவும் குறுக்கிடக்கூடாது. இந்தத் திட்டங்களால் ஏற்படுகின்ற சமூக பாதிப்புக்கள் அழிவு தருபவை.

இதற்கு தொழிற்சங்கங்கள் எந்த பதிலையும் தரவில்லை, மாறாக: அவர்களே பிரச்சனையின் ஓர் அங்கமாக இருக்கின்றனர். முந்திய பல தலைமுறைகளுக்கு மேலாக வென்றெடுத்த பணிபாதுகாப்பு விதிகள் மற்றும் பணியிடபாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை கைவிடுவதற்கான அனைத்து ஒப்பந்தங்களும் தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது தொழிற்சாலை பிரதிநிதிகளின் ஒப்புதல் முத்திரையை பெற்றிருக்கின்றன.

இப்போது கூட இந்த பிரச்சனையில் சம்மந்தப்பட்டுள்ள IG Metall பொறியியல் தொழிற்சங்கத்தின் பிரதான தொழிற்சங்க துணைத்தலைவர் Bertold Huber, நிறுவனத்தை எதிர்நோக்கியுள்ள கடுமையான நிலவரத்தை தொழிற்சங்கங்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார். ஐரோப்பிய நாடுகளிலுள்ள அனைத்து ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைகளையும் சேர்ந்த தொழிற்சங்கங்களும் பணியிட மேற்பார்வையாளர்களும், வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கை இந்த வார்த்தைகளோடு தொடங்குகிறது 'ஐரோப்பாவில் ஜெனரல் மோட்டார்ஸின் சுருங்கிக்கொண்டு வரும் சந்தை பங்கு தொடர்பாகவும் பெரும் இழப்புக்கள் தொடர்பாகவும் தொழிற்சங்கங்கள் உணர்ந்திருக்கின்றன''
இங்கே தொழிற்சங்கங்களும், அவற்றின் பிரதிநிதிகளும் நிறுவனத்தின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெளிவுபடுத்தியுள்ளனர், மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி ஆட்குறைப்பிற்கும், ஊதிய குறைப்பிற்கும் மற்றும் இதர சலுகைகள் வெட்டிற்கும் சம்மதிக்க வகைசெய்யும் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

தொழிலாளர்களை பொறுத்தவரை நிறுவனத்தின் திட்டங்கள் பற்றிய செய்திகள் பரவியதும், உடனடியாக Bochum நகரிலுள்ள ஓப்பல் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டார்கள் தங்களது தொழிற்சாலை கதவை மூடி முற்றுகையிட்டார்கள். கதவடைப்பு செய்துவிடப்போவதாக அச்சுறுத்தல்கள் விடப்பட்டாலும் திரும்பத்திரும்ப மத்திய தொழிற்துறை அமைச்சர் Wolfgang Clement (SPD) தொழிலாளர்கள் பணிக்கு திரும்பவேண்டும் என்று திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்ட பின்னரும் Bochum தொழிலாளர்கள் இந்தவாரக் கடைசிவரை தங்களது வேலை நிறுத்ததை நீடித்ததுடன், அடுத்தவார ஆரம்பத்திலும் அதை நீடித்துக் கொண்டுள்ளனர்.

இது ஒரு ஆரோக்கியமான போக்கு என்றாலும், குறுகிய தொழிற்சங்க தீவிரவாதப்போக்கிற்கு அப்பால் செல்ல வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் கடந்தகால பொது அனுபவம் மீண்டும் நடைமுறைக்கு வரும். அதாவது வேலை நிறுத்தங்களையும், தீவிரமான கண்டனங்களையும் தொழிற்சங்கங்கள் தனிமைப்படுத்தி, அதற்குப்பின்னர் தொழிற்சங்க தலைவர்கள் ஒரு பேரத்தை உருவாக்கி நிர்வாகத்தின் அடிப்படை கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுத்து இப்போராட்டம் நசுக்கப்பட்டுவிடும்.

தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் புதியதொரு முன்னோக்கு தேவை. இன்றைய தினம் தங்களது பல்வேறு பகுதிகளிலுள்ள ஓப்பல் தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள மிக முக்கியமான பணி மற்றும் தொழிலாள வர்க்கம் முழுவதையுமே எதிர்நோக்கியுள்ள தலையாய கடமை என்னவெனில், சமூக ஜனநாயக தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை பிரதிநிதிகளின் வழக்கமான சந்தர்ப்பவாத அரசியல் சமரசப்போக்கு மற்றும் விட்டுக்கொடுக்கும் போக்கு ஆகியவற்றிலிருந்து உடைத்துக்கொண்டு செல்கின்ற ஒரு முன்னோக்கு தேவை.

ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் ஒரு இரும்பு கையுறையை அணிந்துள்ளது. ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க அது உறுதி கொண்டிருக்கிறது. அந்தப் பிரச்சனையில் சமரசத்திற்கு வழியில்லை. தொழிலாளர்கள் தங்களது சொந்த மாற்று சமூக முன்னோக்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், அது ஒற்றுமை சமூக முன்னேற்றம் மற்றும் சமூக சமத்துவத்தை அடிப்படையாக கொண்டு தனிமனித சுயலாபம், இலாபநோக்கு கடந்த கால சமுதாய நன்மைகள் அழிப்பு ஆகியவற்றிற்கு மாற்றாக அமைய வேண்டும். இலாபநோக்கு உந்துதலுக்கு மாறாக உழைக்கும் மக்களது தேவைகளை முன்நிறுத்துகின்ற ஒரு அரசியல் முன்னோக்கை தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.

நிறுவனத்தின் நிர்வாக கோரிக்கைகள் தொடர்பாக நியாயமான கோபம் மற்றும் வெறுப்புணர்வு, ஆகியவற்றிற்கு அப்பால் தொழிலாளர்கள் சிந்தனை தெளிவும், உண்மையை எதிர்கொள்கிற பக்குவத்தையும் வளர்த்துக்கொள்வது அவசியமாகும்.

ஒரு சர்வதேச மூலோபாயத்தை ஜெனரல் மோட்டார்ஸ் கடைபிடிக்கிறது

தொழிற்சங்க அதிகாரத்தினர் பரவலாக ''நிர்வாகத்தின் தவறுகள்'' பேசிக்கொண்டிருக்கிறார்கள், அந்தப் பேச்சுக்கள் கோழைத்தனமான பிதற்றல்கள் ''சுதந்திர சந்தை'' என்றழைக்கப்படும் கட்டுகோப்பை உருவாக்குவதற்கு அதிகபயனுள்ள திறமையான மற்றும் மனிதநேய அடிப்படையிலான வழிமுறைகள் உள்ளன என்ற கருத்தை வளர்க்கின்ற நோக்கில் கூறப்படுகின்ற பிதற்றல்கள் ஆகும். இதே நபர்கள்தான் தங்களது சொந்த ''மாற்று சேமிப்புகள்'' திட்டத்தை முன்னெடுத்து வைக்கிறார்கள்.

இது மாதிரியான வெறும் பேச்சுக்கள் வளர்ந்து கொண்டு வருகின்ற சமூக கொந்தளிப்பிற்கான ஆழமான காரணங்களை திரைபோட்டு மூடுகின்ற நோக்கம் கொண்டவை.

ஜெனரல் மோட்டார்ஸின் இந்த முடிவு உலகளாவிய தொழிற்போட்டி கடுமையாவது வேர்விட்டிருக்கிறது. தற்போது கார் தொழிலில் அது கடுமையான வடிவங்களை எடுத்திருக்கிறது சிறித காலமாக கார் உற்பத்தியாளர்கள் கிழக்கு ஐரோப்பாவிற்கு தங்களது தொழிற்சாலைகளை மாற்றினார்கள் -குறிப்பாக போலந்திற்கு மாற்றினார்கள்- இதுபோன்ற நாடுகளில் பயிற்சித்திறன் மிக்க தொழிலாளர் பட்டாளத்தை மலிவான ஊதியத்தில் பயன்படுத்தி இலாபம் பெறுவதற்காக இவ்வாறு செய்தார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் கொலேன் இல் ஜேர்மன் பொருளாதார ஆய்வுக்கழகம் ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அதன் தலைப்பு: Adam ஓப்பல் கண்ணோட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு நோக்கி விரிவாக்கம்'' அந்த அறிக்கை மே முதல் தேதி ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவடைவது, ஒட்டுமொத்தமாக கார் தொழிலுக்கு குறிப்பாக ஓப்பலுக்கு நல்ல நேரத்தில் உருவாக்கிக்தருகின்ற சம்பவமாகும் என்று குறிப்பிட்டிருந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்னர் பேர்லீன் சுவர் வீழ்ந்த பின்னர் உடனடியாக ஓப்பல் தனது கிழக்கு நோக்கிய பயணத்தை தொடக்கியது. 1992ல் ஒரு புதிய நவீன திறமை மிக்க தொழிற்சாலை கிழக்கு ஜேர்மன் மாகாணமான தூரிங்கியா இலுள்ள Eisenach நகரில் திறக்கப்பட்டது. அந்த நேரத்திலேயே கிழக்கு ஜேர்மனியில் நிறுவனம் குறைந்த ஊதியங்கள் மற்றும் உயர்ந்த உற்பத்தித்திறன் நிபந்தனைகளை விதித்து மேற்கு ஜேர்மனியிலுள்ள தொழிலாளர்களுக்கு நெருக்குதல்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

''1996ல் நமது மிக முக்கியமான நடவடிக்கை இந்த மண்டலத்தில் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் போலந்தில் ஒரு புதிய தொழிற்கூடத்தை அமைக்கின்ற முடிவாகும் (Gleivitz/ Schlesien) என்று அந்த அறிக்கை வாசகம் கூறுகிறது. உற்பத்தி முறை மற்றும் தொழிற்சாலை திறமையை பொறுத்தவரை Gleivitz ஏறத்தாழ Eisenach தொழிற்சாலையின் மறுப்பதிப்பாகும். உற்பத்திச் செலவுகள் ஓரளவிற்கு சாதகமாக உள்ளன. ''இந்தப்புள்ளி விவரங்கள் தெளிவான விளக்கம் தருபவையாக அமைந்திருக்கின்றன. ஜேர்மனியில் சராசரியாக ஒரு மணிநேர பணிக்கு மொத்த தொழிலாளர் செலவு 31யூரோக்கள், பிரான்சில் சுமார் 21 யூரோக்கள். தலைநகரிலிருந்து கிழக்கே 80 கி.மீ க்கு அப்பால் எல்லையை தாண்டியதும் போலந்தில், வெறும் 5 யூரோக்கள் தான்''

என்றாலும் Gleivitz ல் நிலவும் தொழிலாளர் சுரண்டல் விகிதங்கள் மிக உயர்ந்த அளவை காட்டுபவை அல்ல, சிறிது காலமாக கார்தொழில் சீனா மற்றும் ஆசிய சந்தைகளில் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள முயன்றுவருகின்றன. அந்த சந்தை மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளில் Gleivitz இல் நிலவுகின்ற வறுமைக்கோட்டு ஊதியங்கள் கூட கிடைப்பதில்லை. எனவே மிக பிரமாண்டமான கார் நிறுவனங்கள் தங்களது முந்திய தொழிற்சாலைகளில் கடுமையான பெரும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் சிதைந்துவிட்ட தொழிற்கட்டமைப்புக்களையும் சமூகசீரழிவையும் உருவாக்கிவிட்டு அது போன்ற வளர்முக நாடுகளுக்கு இடம்பெயர ஆரம்பித்தன.

இதுவரை Eisenach இலுள்ள தொழிற்சாலை தான் ''கீழைநாடுகளுக்கான தொழிற்துறை ஒளி விளக்குகளில்'' ஒன்று என்று பாராட்டப்பட்டது. ஓப்பல் உம் அதன் சகோதரத் தொழில்களும், இந்த மண்டலத்திற்கு அப்பாலும் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்தின. அப்படியிருந்தாலும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை ''ஒவ்வொரு இரண்டாவது விநியோகிஸ்தரும் தற்போது கிழக்கு ஐரோப்பா அல்லது சீனாவிற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறது. (Ernst & Young Study on the Auto Industry) இந்த சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் எந்த சலுகைகளைத் தந்தாலும் அது ஒரு சமூக சீரழிவை மேலும் ஊக்குவிக்கின்ற ஒரு நடவடிக்கையாகவே அமையும்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு

ஜேர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம் முதலாளிகள், தொழிலாளர்களை மிரட்டுவதற்கு மிக முக்கியமான ஆயுதத்தை அவர்களுக்கு தந்திருக்கிறது. Hartz சட்டங்கள் என்றழைக்கப்படுவது குறிப்பாக Hartz-IV என்கிற கடைசி வடிவம் சமூக பாதுகாப்பின் ஒவ்வொரு வடிவத்தையும் அழித்துவிட்டது. மற்றும் இன்றைய தினம் நியாயமான ஊதியம் பெற்றுக்கொண்டிருக்கிற தொழிலாளர்கள் ஓராண்டு வேலையில்லா திண்டாட்டத்திற்கு பின் வறுமையில் மூழ்குகின்ற சூழ்நிலைகளை உருவாக்கியிருக்கிறது. வேலையில்லாதிருப்போர் தங்களது சேமிப்புக்கள் அனைத்தையும் செலவுசெய்து விட்டதாக தெளிவாக நிரூபித்தால்தான் அரசாங்கம் தருகின்ற அற்ப தொகையான ''வேலையில்லாத்திண்டாட்ட ஊதியம் II" என்கிற உதவியைப்பெற முடியும்.

ஜெனரல் மோட்டார்ஸ் மட்டுமல்ல பல பெரிய நிறுவனங்கள் வேலையில்லா திண்டாட்ட அச்சத்தை பயன்படுத்தி தொழிலாளர்கள் ஊதியங்களில் வரலாறு காணாத வெட்டுக்களை கொண்டுவந்து அவர்களை வறுமையில் தள்ளிவிட நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ள ஓப்பல் தொழிற்சாலை கதவுகளில் கட்டப்பட்டுள்ள ஒரு பெரிய பதாகையில் ஞாயிறன்று ''நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் அல்லது Hartz-IV இருக்கிறது'' என்ற வாசகம் அடங்கியுள்ளது. இதன்மூலம் வேலை வாய்ப்புக்கள் மீது நடத்தப்பட்டுவருகின்ற தாக்குதல்களுக்கும் அரசாங்கம் சீர்திருத்தங்கள் என்று சொல்லி கொள்வதற்குமிடையில் நிலவுகின்ற தொடர்பு தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

Hartz சட்டங்களுக்கு எதிராக கண்டனங்கள் நடப்பதை ஒடுக்குவதில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்களிப்புச்செய்துள்ளன மற்றும் தொழிற் சந்தையில் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு வகை செய்திருக்கின்றன. தொழிற்சங்க அதிகாரத்தினர் பலர் சமூக ஜனநாயகக் கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றிவருகின்றனர். மற்றும் அவர்கள் பல ஆண்டுகளாக ஜேர்மனியில் சமூக சீரழிவை வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் சம்மந்தபட்டிருக்கின்றனர். படுமோசமான நிலவரம் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஒரே வழி சமரசங்களும், சலுகைகளை விட்டுக்கொடுப்பதும் தான் என்று திரும்பத்திரும்ப அவர்கள் கூறி வருகின்றனர். இன்றைய தினம் அவர்களது கொள்கைகளில் துயரமான விளைவுகளை தொழிலாளர்கள் சந்திக்கின்றனர். தாழிற்சங்கங்கள் தொடர்ந்து விட்டுக்கொடுப்புகளை வழங்குவது இன்று சந்திக்கும் படுமோசமான காட்சியை தவிர்க்க முடியாத அளவிற்கு உண்மையாக்கிவிட்டது.

தொழிலாளர்களை எதிர்நோக்கியுள்ள பணி பழைய தொழிற்சங்கம் மற்றும் சமூக ஜனநாயக அமைப்புக்களில் இருந்து தங்களை முழுமையாக உடைத்துக்கொண்டு செல்வதுதான். தொழிற்சங்கங்கள் ஆதரிக்கின்ற சமரச பேச்சுவார்த்தைகளுக்கான குழுக்கள் மீது தங்களுக்குள்ள அவநம்பிக்கையை தொழிலாளர்கள் தெளிவுபடுத்திவிட வேண்டும். மற்றும் அந்தக் குழுக்களின் முடிவுகளை ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் முன்கூட்டியே தெளிவுபடுத்திவிட வேண்டும். நிறுவன நிர்வாகத்தின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மற்றும் ஒவ்வொரு ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைகளிலும் தொழிலாளர் நலன்களை நிபந்தனை எதுவுமில்லாமல் தற்காத்து நிற்பவர்களும் தான் தொழிலாளர் சார்பில் அந்தக் குழுக்களில் இடம்பெற வேண்டும் என்பதையும் தொழிலாளர்கள் தெளிவுபடுத்திவிட வேண்டும்.

தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தமாக ஒரு புதிய அரசியல் போக்கையும், ஒரு புதிய அரசியல் கட்சியையும் உருவாக்க வேண்டிய பணியை எதிர்நோக்கியுள்ளனர். தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகத்தின் முன்னோக்கிலுள்ள வங்குரோத்துத்தன்மை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

கடந்த காலத்தில் வேறு எந்த நாட்டையும் விட ஜேர்மனியில் சமூக ஒற்றுமை மற்றும் சமூக சீர்திருத்தங்களின் பங்களிப்பு பற்றி மிக அதிகமாக எழுதப்பட்டிருப்பதுடன் பேசப்பட்டுமிருக்கிறது. சட்டங்களும், அரசியல் நிர்ணயச்சட்டங்களும், ''சொத்துடைமையோடு பிணைக்கப்பட்டிருக்கிற சமூகப்பொறுப்புக்கள்'' பற்றி வலியுறுத்தியுள்ளன மற்றும் தொழிலாளர்களும், முதலீடுகளும் ''சமூக பங்காளிகள்'' என்ற அடிப்படையில் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.

இரண்டாவது உலகப்போர் மற்றும் பாசிச சர்வாதிகாரத்திற்குப்பின் சமூகப்பிளவுகளை தீர்த்துவைப்பது, அதிகாரபூர்வமான அரசாங்கக் கொள்கையின் முதன்மைபணியாக எடுத்துக்கொள்ளப்பட்டது. கூட்டாட்சிக் குடியரசின் அரசியல் நிர்ணய சட்ட வாசகங்களிலும் அது இடம்பெற்றது.

1950களின் கடைசியில் மேற்கு ஜேர்மன் பொருளதார மறுமலர்ச்சியின் சின்னமாக ஓப்பல் கருதப்பட்டதுடன், வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு வழி செய்யும் என்றும் கூறப்பட்டது. 1962ல் ஓப்பல் Bochum நகரில் தனது தொழிற்சாலையை ஆரம்பித்தது. அந்தப்பகுதியில் உருக்கு தொழிற்சாலைகளும், சுரங்கங்களும் சிதைந்து கொண்டுவந்ததால் வேலைவாய்ப்பை இழந்துவிடுவோம் என்று அச்சுறுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தொழிற்சாலை Ruhr மண்டலத்தின் ''பயனுள்ள பொருளாதார சீரமைப்பின் சின்னமென்று'' கொண்டாடப்பட்டது.

கிழக்கு ஜேர்மனி வீழ்ச்சியடைந்தபின்னர் மேற்கினதும் கிழக்கினதும் மறுஇணைப்பு ''சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின்'' வெற்றி என்று கொண்டாடப்பட்டது. முதலாளித்துவம் தான் உயர்ந்த ஒரு அமைப்பு ஏனெனில் அதில் சுதந்திரமும் ஜனநாயகமும் வாழ்க்கைத்தர உயர்வுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

உண்மையிலேயே இந்த நாள் ஒரு திருப்பு முனையாகும். உற்பத்தியும் நிதி நிர்வாகமும் உலகமயமாகிவிட்டது. அனைத்து தேசிய சீர்திருத்த திட்டங்களின் அடிப்படைகளும் நீக்கப்பட்டுவிட்டன. ஸ்ராலினிஸ்டுகளது திட்டமான பொருளாதாரத்தை அரசு கட்டுப்படுத்துவதில் அடங்கியுள்ள ''தனி ஒரு நாட்டில் சோசலிசம்'' என்பது முதலும் முடிவுமாக சிதைந்துவிட்டது''

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் மிக அப்பட்டமான முறையில் மாறியதற்கும் இதுதான் ஆதாரமாகும். அவர்கள் முதலாளித்துவ பொருளாதார உறவுகளுக்கும், தேசிய அரசுகளுக்கும் கட்டுப்பட்டவர்களாதலால் அவர்கள் நேரடியாக முதலாளிகளின் கூட்டாகிவிட்டனர்.

ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கும் ஒரு புதிய கட்சியும்

ஓப்பல் தொழிலாளர்கள் ஒரு உண்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். அந்த நிறுவனத்தில் அமெரிக்க தொழிலாளர்கள் தங்களது சொந்த கசப்பான கிளர்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்தக் கிளர்ச்சியில் இருந்து ஜேர்மன் தொழிலாளர்கள் படிப்பினை பெற்றாக வேண்டும். போரிடுவதற்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை, அல்லது அமெரிக்க கார் தொழிலாளர்களிடம் துணிவிற்கும் தீவிர தன்மைக்கும் பஞ்சமில்லை, அவர்கள் கண்டன நடவடிக்கைகளையும், வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் பலவாரங்கள் பல தொழிற்சாலைகளில் உற்பத்தியை முடக்குகின்ற வகையில் வேலை நிறுத்தங்களை செய்தனர்.

1998 கோடை காலத்தில் மிக்சிகன் Flint நகர ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் 8 வாரம் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். ஆனால் அன்றைய தினம் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி கிளிண்டனோடு அமெரிக்க தொழிற்சங்கங்கள் இணைந்திருந்த சூழ்நிலைகளில் அந்த நிறுவனத்துடன் ஒரு பேரம் செய்துகொள்ள முயன்றனர். தொழிலாளர்கள் தீவிரதன்மையோடு இருந்தாலும் அதை முறியடித்து தொழிலாளர் கிளர்ச்சியை காட்டிக்கொடுக்க முடிந்தது.

அதன் விளைவுகள் Detroit இலும் சுற்றியுள்ள பகுதியிலும் பேரழிவை உருவாக்கின. இன்றையதினம் அந்தப்பகுதியில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இன்னும் உற்பத்தி நடந்து கொண்டிருக்கிற தொழிற்சாலைகளிலும் கூட பணவீக்க வீச்சிற்கு ஈடுகட்டும் வகையில் ஊதியங்கள் உயரவில்லை. வேலை நிலைகள் சீர்குலைந்துவிட்டன. விடுமுறைகள், விடுப்புக்கள் ஊழியர்களது உடல்நலம் மற்றும் தொழில் இடப்பாதுகாப்பு சிதைக்கப்பட்டு விட்டது. ஆட்குறைப்பிற்கு உள்ளான பல தொழிலாளர்கள் தங்களது வீடுகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு கடனில் மூழ்கிவிட்டனர். அதன் விளைவாக உயிர்வாழ்வதற்கு குறைந்த ஊதிய தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது ஜெனரல் மோட்டார்ஸ் அத்தகைய அமெரிக்க சூழ்நிலைகளை ஐரோப்பாவில் கொண்டுவர முயன்றுவருகிறது. அத்தகைய நடவடிக்கை எங்கே கொண்டுபோய் விடும்? மற்றும் சந்தையின் சட்டங்களுக்கு அடிபணிந்து நடப்பதென்றால் அதனுடைய விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யார் தெரிந்துகொள்ள விரும்பினாலும் அவர்கள், பேரழிவிற்கு உட்பட்ட Detroit மற்றும் பிற பெரிய அமெரிக்க நகரங்கள் பலவற்றில் அன்றாட வாழ்வு பற்றிய செய்திகளை படித்தாலே போதும்.

சமூக மேம்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளுக்கும், தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தித்திறன் பெருக்கத்திற்குமிடையில் நிலவுகின்ற இடைவெளி மிக அதிகமாக இருக்கிறது. அந்த தொழில்நுட்ப வாய்ப்புக்களை நாசம் விளைவிக்கிற வகையில் பயன்படுத்திவருகிறார்கள். நவீன தொழில்நுட்பத்தை சமூக மேம்பாட்டிற்கு அனைவரது நலனையும் கருத்தில் கொண்டு பயன்படுத்தும் பகுத்தறிவு முறைக்கு பதிலாக ஆளும் மேல்ட்டினர் அந்த தொழில்நுட்பத்தை தனியார் சொத்துடைமையை அடிப்படையாக கொண்டு தங்களது சொந்த நலனுக்கு கட்டுத்திட்டமில்லாமல் பயன்படுத்தி இலாபம் சம்பாதிக்கும் ஒரு வழியாக மேற்கொண்டிருக்கிறது. மற்றும் சமூகத்தின் மற்றைய பிரிவினரை அச்சுறுத்தி வருகின்றனர்.

உற்பத்தி சக்திகளின் சர்வதேச தன்மை, உற்பத்தி முறைகளை தனிச்சொத்துடைமையாக வைத்திருப்பதுடன் ஒவ்வாமை கொண்டது என்று கார்ல் மார்க்ஸ் பிரகடப்படுத்தியது, முன்பு எப்போதையும் விட இன்றைய தினம் அதிக அளவிற்கு ஏற்புடையதாக உள்ளது. சர்வதேச அளவில் சோசலிச அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துவதன் மூலம் மட்டுமே சமூக கட்டுப்பாட்டின் கீழ் சர்வதேச பிரச்சனைகளை கொண்டுவர முடியும்.

ஐரோப்பிய நடவடிக்கை தினத்தை தொழிற்சங்க அதிகாரத்துவம் தங்களது அழுத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு நாளாக பயன்படுத்திக்கொண்டு நிர்வாகத்துடன் பேச்சு நடத்த வழி அமைப்பதற்கு தயாராகிவருகின்றபோது, தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை கட்டாயமாக பயன்படுத்தி பல்வேறு தொழிற்சாலைகளுக்கிடையில் சர்வதேச அளவிலான தொடர்புகளை உருவாக்கி சோசலிச முன்னோக்கு பற்றி ஒரு விவாதம் நடத்தவேண்டும்.

அவ்வாறான ஒரு அரசியல் மற்றும் அமைப்பு ரீதியிலான மறுஒழுங்கமைப்பினை வசதிப்படுத்தும் மிக முக்கியமான கருவி உலக சோசலிச வலைத் தளமாகும். அது 10 இற்கு மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்படுவதுடன், ஒரு புதிய சர்வதேச தொழிலாளர் கட்சியை உருவாக்குவதில் உறுதி கொண்டுள்ள அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பாரிய நிறுவனங்களின் தாக்குதலை எதிர்க்கின்ற போராட்டப் பாதை எளிதானதல்ல. ஆனால் WSWS உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மேம்பாட்டில் பண்புரீதியான ஒரு புதிய கட்டத்தை நிலைநாட்டுகின்ற ஒரு இயக்கத்தின் உயிர்நாடியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

See Also :

ஜேர்மனி: ஓப்பல் 10,000 பேரை வேலைநீக்கம் செய்கின்றது

Top of page