World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Behind the military leadership changeover in China

சீனாவில் இராணுவ தலைமை மாற்றத்தின் பின்னணி

By John Chan
25 October 2004

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியகுழு ''பிளீனத்தில்'' 78- வயது முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜமீன், மத்திய இராணுவ கமிஷன் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவரது வாரிசான ஜனாதிபதி ஹூஜிந்தாவோ, அந்தப் பதவியை ஏற்றார். ஹூ-விற்கும் ஜியாங்கிற்கும், விசுவாசமுள்ள சீன ஆட்சிக்குழுக்கள் நீண்ட நாட்களாக இடைவிடாது நடத்தி வந்த ஆதிக்க போராட்டத்தின் இறுதி கட்டம்தான் அந்த நடவடிக்கை.

''பிளீனத்தில்'' விவாதிக்கப்பட்ட முக்கியமான விடையம், ''கட்சியின் ஆளும் திறனை வலுப்படுத்துவது'' இராணுவத் தலைமை மாற்றப்படவேண்டும் என்று குறிப்பாக வலியுறுத்தப்பட்டது. உடல் நிலை காரணமாக ஜியாங் ராஜினாமா செய்தார். அவரது கோரிக்கையை மத்திய குழு ஏற்றுக்கொண்டது. இப்போது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அனைத்து அதிகாரங்களும் -கட்சி, அரசு மற்றும் இராணுவம், ஆகிய அனைத்தும் ஹூ-வின் கையில் உள்ளன. ஜியாங் ஒய்வுபெற்று சங்காயில் சொகுசு மாளிகையில் ஒன்றில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். சீனாவில் மிக சக்திவாய்ந்த தொழில் முகவர் அவரது புதல்வர்.

இந்தப்பதவி பரிமாற்றத்தை அதிகாரபூர்வமான அரசாங்க பிரச்சாரம் பாராட்டியுள்ளது. ஜியாங் கட்சிக்கும், நாட்டிற்கும், மக்களுக்கும் சிறப்பான பங்களிப்பு செய்திருப்பதாக பாராட்டியுள்ளது. மத்திய குழுவில் வெளியிடப்படாத ஒரு அறிவிப்பு என்னவென்றால் ஜியாங் தனது அதிகாரத்தை இழந்துவிட்டார், ஆனால் அரசியல் அடிப்படையில் அவருக்கு தீங்கு எதுவும் செய்யப்படமாட்டாது என்பதுதான்.

இந்த சம்பவங்களில் தனிப்பட்ட அபிலாஷைகளும் நலன்களும் ஒரு பங்களிப்பு செய்திருக்கின்றன. ஆனால் ஸ்ராலினிச ஆட்சிக்கும், அபிலாஷை கொண்டுள்ள முதலாளித்துவ மேல்தட்டினருக்கும் இடையில் நிலவுகின்ற சிக்கலான உறவுகள் மற்றும் சமூக கொந்தளிப்புக்கள் ஆகியவைதான் இந்த கோஷ்டி போராட்டத்தின் முடிவை நிர்ணயித்தன.

ஹூ ஜனாதிபதியாக பதவி உயர்வுபெற்றபின் இராணுவ அதிகாரத்தை ஜியாங் விட்டுக்கொடுக்க தயங்கியது ஆளும் குழுவிற்குள்ளேயே நிலவிய கவலைகளை அடிப்படையாக கொண்டது. ஸ்ராலினிச ஆட்சிக்கும் ஒரு நிலையான சமூக ஆதரவு அடித்தளத்தை உருவாக்குவதற்கு புதிய தலைமை அளவிற்கு அதிகமாக சென்றுவிடக்கூடும் ஜனநாயக சலுகைகளை அதிகம் தந்துவிடக்கூடும் என்ற கவலைகள் நிலவின. குறிப்பாக பழைய தலைமை ஹூ ஆட்சி 1989- ல் நடந்த தியனமேன் சதுக்க படுகொலைகள் குறித்து அதிகாரபூர்வமான விளக்கத்தை புறக்கணிக்கக் கூடும் என்று அஞ்சியது. ஆனால் அந்த விளக்கத்தை கண்டித்து அல்லது அதில் பங்கெடுத்துக் கொண்டவர்களை நீக்கிவிட்டு அந்த அட்டூழியத்திற்கு பொறுப்பான அரசியல் தலைவர்களை நீக்கிவிட்டுக்கூட ஆதரவை பெறுவதற்கு அது அஞ்சியது. ஜூன் 4-ல் நடைபெற்ற அந்தப் படுகொலைகளுக்கு கட்டளையிட்ட ஜியாங் முன்னாள் பிரதமர் லீ பெங் மற்றும் பல இதர தலைவர்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

ஹூ மற்றும் ஜியாங்கை சுற்றிவந்த குழுக்களிடையே நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் தந்திரோபாய முறையில் அமைந்த குறிப்பிட்ட சில அம்சங்கள்தான் ''மூவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்'' என்ற ஜியாங்கின் தத்துவத்தின் பிரதான அம்சம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர்களது ஆதரவை வென்றெடுக்கும் முயற்சியாக முதலாளித்துவ வாதிகளையும், தொழில் முகவர்களையும், அனுமதிப்பது. ஹூ தலைமையிலான புதிய தலைமை இதை மேலும் முன்னெடுத்துச்சென்று ஆட்சியில் நீடித்திருப்பதற்கு உறுதி செய்து தரும் வகையில் சமூகத்தின் மீது உள்ள கடுமையான கட்டுப்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தளர்த்தியது. தங்களை ''மக்களை முதலில்'' என்று சித்தரித்துக்கொண்டு தாங்கள் மேலும் ஜனநாயகவாதிகள் என்று காட்டுகின்ற வகையில் ஹூ மற்றும் அவரது சகாவான பிரதமர் பென் ஜியாபோ இருவரும் பேராசிரியர், கல்லூரி வட்டாரங்களின் ''அரசியல் சீர்திருத்தம்'' பற்றி விவாதிப்பதற்கு ஓரளவிற்கு அனுமதித்தனர்.

கடந்த 2- ஆண்டுகளில் ஜியாங் மத்திய இராணுவ கமிஷனில் தனது கட்டுப்பாட்டை பயன்படுத்தி முன்னாள் தலைமையை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவற்றில் தனது ஆதரவாளர்களை சக்தி வாய்ந்த பொலிட் பீரோ நிரந்தர குழுவில் நியமிப்பது தனது அந்தஸ்தையே அரசியல் சட்டத்தில் மாவோசேதுங் மற்றும் டெங்ஜியாபிங் அளவிற்கு உயர்த்துவது ஆகியவை அடங்கும். பழைய தலைவர்களின் நலன்களை காப்பாற்றிய பின்னர் ஜியாங் இராணுவ கட்டுப்பாட்டை ஒப்படைக்க சம்மதித்தார்.

புதிய மத்திய இராணுவ கமிஷன் அமைப்பு ஹூ ஜிந்தாவோவின் வலுபடுத்தப்பட்ட அந்தஸ்தை எதிரொலிக்கிறது. ஜிங்குவா செய்தி நிறுவனம் பிரசுரித்துள்ள பட்டியலின் படி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட மூல அமைப்பில் மேலும் நான்கு தளபதிகளை சேர்த்திருக்கிறார். இந்த 11-பேரில் 6-பேர் ஹூ விற்கு ஆதரவானவர்கள் என்று கருதபடுகிறார்கள். ஹூ துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தை போன்றில்லாமல் ஜியாங்கின் மிக நெருக்கமான ஆதரவாளரும் இன்றைய துணை ஜனாதிபதியுமான ஜெங்குயிங்காங் இப்போது பட்டியலில் இடம்பெறவில்லை.

இராணுவத்தின் ஆதரவை வென்றெடுப்பற்காக அண்மை மாதங்களில் ஹூ இராணுவ செலவினங்களை அதிகரிப்பதாக உறுதியளித்தார். மற்றும் மத்திய இராணுவ கமிஷனை விரிவுபடுத்தி அதில் கடற்படை விமானப்படை மற்றும் அணு ஆயுதப்படைகளின் பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்தார். ஜூலை 31-ல் பாதுகாப்பு அமைச்சர் கா-கன்துவாங் பகிரங்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். மக்கள் விடுதலை இராணுவம் பொதுச்செயலாளர் தோழர் ஹூ ஜிந்தாவோவை சுற்றி ஒன்றுபட்டாக வேண்டும் என்று வெளியிட்ட அறிக்கையும், இதில் ஒரு பங்களிப்பு செய்தது.

சீனாவில் முதலாளித்துவ சந்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் தார்மீக முடிவுதான் ஹூ ஜிந்தாவோ சீனத்தலைமையை எடுத்துக்கொண்டதாகும். ஹூ சிந்தாவோ உருவாகிக்கொண்டுவரும் சீன முதலாளித்துவத்தின் CEO- கடந்த 25-ஆண்டுகளுக்கு மேலாக சீனாவில் உருவாகிவரும் சுதந்திர சந்தை ஆவேசத்தை பயன்படுத்தி உருவாகிகொண்டுள்ள மத்தியதர வர்க்க பிரிவுகள் மற்றும் வர்த்தகர்களிடையே ஆட்சிக்கான ஆதரவை திரட்டுவதற்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஒரு தலைவராகும்.

ஜியாங் ஜமீன் மற்றும் இதர முன்னாள் தலைவர்கள் செஞ்சேனை மற்றும் 1949-சீன புரட்சியில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள் ஆனால் ஹூ-விற்கு அத்தகைய அனுபவம் இல்லை. 1990-களின் தொடக்கத்தில் டெங்ஜியாபிங் இனால், ஜியாங்கிற்கு அடுத்தப்படியாக அவர் நியமிக்கப்பட்டார். அப்போது தியனன்மேன் சதுக்க படுகொலைகளுக்குப்பின் ஆட்சி "முதலாளித்துவ தாராளவாதத்திற்கு" எதிரான ஒரு இயக்கத்தை நடத்தி வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் டெங் தொடக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் முடங்கி கிடந்தன. ஹூ எதிர்கால தலைவராக ஆளும் கட்சியில் நியமிக்கப்பட்டது, சுதந்திர சந்தை சீர்திருத்தங்களை முடுக்கிவிட வேண்டுமென்று தலைமை முழுவதற்கும், ஜியாங்கிற்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாகும்.

இந்த செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய தலைமை இராணுவத்தின் மீது உறுதியான கட்டுப்பாட்டு அதிகாரம் செலுத்துவது அவசியமாகும். ஜியாங் ஜமீன் அரசாங்கத்தை ஹூ ஜிந்தாவோ வசம் ஒப்படைத்தது மட்டுமல்லாமல் ஒரு சமூக வெடிகுண்டையும் ஒப்படைத்தார். பெரும்பாலான மக்கள் சர்வாதிகார தன்மை கொண்ட ஊழல்மிக்க ஆட்சி என்று வெறுத்து ஒதுக்கி அந்த சமூக அதிருப்தி கொந்தளிப்பாக வெடித்துச்சிதறும் தன்மையை ஆட்சி எதிர் கொண்டுள்ளது.

சீன ஸ்ராலினிசத்திற்கும் சோசலிசத்திற்கும், சம்மந்தமில்லை அது அடிப்படையிலேயே தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமானது. ஜப்பானிய ஏகாதிபத்தியத்திலிருந்தும் முதலாளித்துவ கோமிங்டாங் அரசாங்கத்திலிருந்தும் சீனாவை விடுவிப்பதற்கு நடைபெற்ற போராட்டத்தில் மாவோசேதுங்கின் இயக்கத்திற்கு விவசாயிகளிடையே கணிசமான ஆதரவு உருவானது உண்மை 1949-ல் ஸ்ராலினிஸ்டுகள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட நில சீர்திருத்தங்கள் மாவோசேதுங் ஆட்சிக்கும் ஒரு சமூக அடித்தளத்தை ஏற்படுத்துகின்ற வகையில் கிராமபுற மக்களின் ஆதரவை திரட்டியது.

புரட்சியை தொடர்ந்து மாவோசேதுங் மில்லியன் கணக்கான விவசாயிகளால் பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுக்கிடந்த தங்களை விடுவித்த சிவப்பு சூரியன் என்று கருதப்பட்டார். செஞ்சேனையின் முதுகெலும்பாக விவசாயிகள் விளங்கினர் அற்றும் பேஜிங்கிற்கு அது உயிர்நாடியாக ஆயிற்று. கலாச்சார புரட்சியின் போது நிலவிய குழப்பத்தை கட்டுப்படுத்தி தொழிற்துறை மையங்களை நிலைநாட்டுவதில் மாவோசேதுங்கிற்கு இராணுவத்தின் விசுவாசம் முக்கிய அம்சமாக விளங்கிற்று.

டெங்ஜியாபிங்கும், விவசாயிகளை அடிப்படையாகக்கொண்ட செஞ்சேனையை நம்பியிருந்தார். 1978-ல் அவர் திரும்ப பதவிக்கு வந்ததும், புரட்சிக்கு முந்திய இரண்டாவது கள இராணுவ பிரிவை சார்ந்த அதிகாரிகளுக்கு முக்கிய இராணுவப் பதவிகளில் பதவி உயர்வு அளித்தார். 1989-ல் நடைபெற்ற தியனன்மேன் சதுக்க நெருக்கடியில் ஆட்சி வெகுஜன கிளர்ச்சியை சந்தித்தது. அப்போது சீனாவின் 17- மூத்த இராணுவ தளபதிகளில் 10-பேர் டெங்கின் சொந்த பிரிவை சார்ந்தவர்கள். இந்த தளபதிகள்தான் தங்களது துருப்புக்களை பேஜிங்கிற்கும், மற்ற நகரங்களுக்கும், தொழிலாள வர்க்கம், மற்றும் மாணவர் போராட்டத்தை ஒடுக்குவதற்கு அனுப்பினார்கள்.

1979-முதல் செயல்படுத்தப்பட்டுவரும் சுதந்திர சந்தை நடவடிக்கைகளால் மாவோசேதுங் ஆட்சிக்கு விவசாயிகளிடையே நிலவிவந்த ஆதரவு சிதைக்கப்பட்டது. கூட்டுப்பண்ணை துண்டு துண்டாயிற்று. கிராமப்பகுதிகளில் செயல்பட்டுவந்த இலட்சக்கணக்கான அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்கள் மூடப்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம் வறுமை மற்றும் மிகக் கடுமையான வரிவிதிப்புக்கள் கோடிக்கணக்கான விவசாயிகளை நகரப்பகுதிகளுக்கு இடம்பெயர நிர்பந்தித்தது. அங்கு மிகப்பெருமளவில் சுரண்டப்படும் மலிவுக்கூலி தொழிலாளர்களாக தொழிலாள வர்க்கத்தில் அவர்கள் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஹூ மற்றும் ஜியாங்கை சுற்றியுள்ள கோஷ்டிகளிடையே கருத்துவேறுபாடுகள் எதுவாக இருந்தாலும் அவர்களது பொதுவான நோக்கம் என்னவென்றால் கட்சிக்கட்டுக்கோப்பின் சலுகைகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பது மற்றும் கடந்த 20- ஆண்டுகளுக்கு மேலாக சீனாவிற்குள் தங்களது முதலீடுகளை குவித்துக்கொண்டுள்ள பன்னாட்டு முதலீட்டளார்களின் இலாபங்களை பாதுகாப்பதுதான். ஹூ ஜிந்தாவோ முதலாளித்துவ மேல்தட்டினருக்கும் மத்திய தர வர்க்கத்திற்கும் சலுகைகளைத்தர தயாராக இருக்கக்கூடும் ஆனால் அவரது தலைமை மாவோசேதுங், டெங் மற்றும் ஜியாங்கைப்போன்று அதிகாரத்தில் கட்சியின் பிடியை நிலைநாட்டுவதற்கு போலீஸ் அரச நடவடிக்கைகளை நம்பியே இருந்தாக வேண்டும்.

புதிய தலைமையின் கீழ் ஏற்கனவே பல்வேறு அரசியல் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பேஜிங்கில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கண்டனப்பேரணி நடத்துவதற்காக அனுமதி கோரி மனுச்செய்த Ye Gouzhu கைது செய்யப்பட்டார். பிரபலமான இன்டர்நெட் எழுத்தாளர்கள் இருவர் காங்யூபி மற்றும் ஜியாங் ஹா இருவரும் முறையே 15-மற்றும் 12- ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உள்ளாகியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் வடகிழக்கு லியோனிங் மாகாணத்தில் அரசாங்க அதிகாரத்தை சீர்குலைக்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டனர். வேறு பல எதிர்பாளர்கள் கண்டிப்பான போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர் அரசாங்கத்தை கண்டித்ததற்காக பல வலைத்தளங்கள் மூடப்பட்டுவிட்டன. மிகப்பிரபலமான அதிகாரபூர்வமான நிபுணர் குழு சஞ்சிகையான Strategy and Management வடகொரியாவில் ஸ்ராலினிச ஆட்சியை கண்டித்ததற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Top of page