World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australian election announced: a campaign of lies and provocation

ஆஸ்திரேலிய தேர்தல் அறிவிப்பு: பொய்களும் ஆத்திரமூட்டல்களும் நிறைந்த பிரச்சாரம்

By Nick Beams
1 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

வரலாற்றுரீதியாக இதற்கு முன்கண்டிராத அளவிற்கு பொய்களை அடிப்படையாகவும், ஊடக சூழ்ச்சிக் கையாளல்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் பயமுறுத்தும் பிரச்சாரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கத்தின் தலைவர் என்கிற முறையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்ட், அதே அடிப்படையில் எப்படியாவது திரும்பவும் தொற்றி ஏறி பதவிக்கு வந்துவிட முடியுமென்று மிகத் தெளிவாக முடிவு செய்திருக்கிறார்.

அக்டோபபர் 9-ல் தேர்தல் நடக்கும் என்ற அறிவிப்பை அவர் ''நம்பிக்கை'' அடிப்படையில் வெளியிட்டிருக்கிறேன் என்று அவர் அறிவித்திருப்பதன் மூலம் இந்த முடிவிற்குத்தான் வரமுடிகிறது.

சென்ற ஞாயிறன்று தேர்தல் முடிவை அறிவித்ததன் மூலம், ஆறு வாரங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் நடப்பதற்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது---- 1984க்கு பின்னர் இதுதான் நீண்ட பிரச்சாரம் நடக்கும் தேர்தலாகும். என்றாலும், இந்த நீண்ட பிரச்சாரத்தின் நோக்கம் அரசாங்கத்தின் சான்றை உயர்ந்த அளவிற்கு ஆராய்வதை உறுதிப்படுத்துவது அல்ல ---- அதற்கு மாறாக ஆகும்.

கீழ்சபை கூட்டத்தொடரை முடித்துவைத்து, அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் ''குழந்தைகளை கடலில் வீசி எறிந்தார்கள்'' என்ற விவகாரத்தில் அவரது முக்கிய பங்குபற்றி கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியும் என்று நம்பினார், 2001-நவம்பர் தேர்தலில் தாராளவாத கட்சி பிரச்சாரத்தில் அந்த விவகாரம் முக்கிய இடம்பெற்றது.

தஞ்சம் புக விரும்பியவர்கள் ஆஸ்திரேலியாவிற்குள் அகதிகளாக நுழைய வேண்டும் என்பதற்காக தங்களது குழந்தைகளை கடலுக்குள் வீசி எறிந்தார்கள் என்று கூறியது 2001- நவம்பர் வாக்குப்பதிவு தினத்தின் போது அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ''ஆலோசனை'' தரப்பட்டதால்தான் அவ்வாறு கூறியதாக ஹோவார்ட் தொடர்ந்தும் நிலைநாட்டி வந்தார். கடைசியாக நடத்தப்பட்ட பெரிய பத்திரிகை மாநாட்டின் பிரச்சாரத்தின்போது அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று கூறினார். தேர்தலில் பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் ரீத்திற்கு ஆலோசகராக சேவை செய்த, Mike Scrafton தேர்தலின் முந்தைய காலத்தில் தனிப்பட்ட முறையில் அவர் ஹோவார்டிற்கு, அவரது கூற்றை பொய் என்று வெளிப்படுத்தியதாகக் கூறிய பொழுது, ஹோவார்டின் கூற்றுக்கள் கடைசியாக ஆகஸ்ட் 16-ல் பொய் என்று அம்பலப்படுத்தப்பட்டன.

இறுதியில், ஹோவார்ட் பீதியடைவதற்கு எந்தக்காரணமும் இல்லை. அவரது அரசாங்கத்தை பண்பிட்டுக்காட்டும் செயல்படும் வழிவகைக்கேற்ப அவர் செயல்பட்டார், அதே போன்று எதிர்கட்சியான தொழிற்கட்சியும் செயற்பட்டது. குழந்தைகளை கப்பலை விட்டு கடலில் வீசிய விவகாரத்தில், செனட் முன்னர் நடத்திய ஒரு விசாரணையில் Scrafton- ஐ நீதிமன்றத்திற்கு கட்டாயம் வருமாறு ஆணையிட மறுத்து, தொழிற்கட்சி ஒரு நாள் விசாரணை நடத்த முடிவு செய்தது----அப்போது Scrafton- ன் சாட்சியமளிக்க வேண்டுகோள் விடப்பட்டது---- தேர்தல் முடிந்த பின்னர் இறுதி அறிக்கை நவம்பர் 24-ல் வெளியிடப்பட்டது.

தொழிற்கட்சி தலைவர் மார்க் லேத்தம், ஹோவார்ட் முடிவுபற்றி தெரிவித்த கருத்துக்களும் அதற்குப்பின்னர் அவர் பத்திரிகை மாநாடுகளுக்கு தந்த பேட்டியும் அதே நடைமுறைகளை தெளிவாக வெளிப்படுத்துவதாகவும் கூட இருந்தன.

இப்போது ஒன்று தெளிவாகத் தெரிகிறது, நாஜிக்கள் திட்டமிட்ட மற்றும் ஆக்கிரமிப்புப் போரை நடத்திய குற்றத்திற்கும் சட்ட அடிப்படையில் வழக்கை பயன்படுத்திய சட்ட உடன்பாட்டின்படி, ஹோவார்டும் அவரது அமைச்சர்களும் போர் குற்றவாளிகள், ஏனெனில் அவர்கள் ஈராக்கிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நடத்தப்பட்ட போரிலும் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆக்கிரமிப்பிலும் ஒத்துழைத்துக் கொண்டிருப்பவர்கள்.

அப்படியிருந்தும் தேர்தல் தொடர்பான ஆரம்ப அறிக்கையில் லேத்தம் அந்தப்போர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பத்திரிகை மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ள 4500- வார்த்தைகள் கொண்ட எழுத்து படிவில் (transcript), ''ஈராக்'' என்ற சொல் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது, அதுவும் ஹோவார்ட் அரசாங்கத்தைவிட தேசிய பாதுகாப்பில் தொழிற்கட்சி மிக வலுவாக செயல்படும் என்று அவர் குறிப்பிட்டதின் ஒரு பகுதியாகவே அந்த சொல் இடம்பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிலும், பிற நாடுகளிலும் இன்றைய-தினத்தின் அரசியல் சூழ்நிலையில் மிக முக்கியமான அம்சத்தை எடுத்துக்காட்டுவதாக அது அமைந்திருக்கிறது. மில்லியன் கணக்கான மக்கள் ஈராக்கிய படையெடுப்பிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் ஆழமான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், ஆனால் அவர்களது கோபமும், விரோதப் போக்கும் அதிகாரபூர்வமான அரசியல் சாதனங்களில் வெளிப்பாடு அடையவில்லை.

லேத்தம் போர் பற்றி குறிப்பிடக்கூட தவறிவிட்டது தற்செயலாக நடந்துவிட்டதல்ல. அரசாங்கத்திற்கும், தொழிற் கட்சிக்குமிடையே நிலவுகின்ற அடிப்படை ஒற்றுமையை அது காட்டுகிறது. போருக்கு முன்னர், தொழிற் கட்சியிடம் நிலவிய ஒரே கருத்துவேறுபாடு ஐ.நா ஒப்புதலைப் பெற்றபின்னர் படையெடுப்பு நடத்தியிருக்கலாம் என்பதுதான். அதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், லேத்தம் ''கிறிஸ்துமஸ் வாக்கில் துருப்புக்கள் வெளியேறும்'' என்று ஆவேச உரையாற்றினாலும் தொழிற்கட்சி வளைகுடாப் பகுதியில் ஆஸ்திரேலிய கப்பற்படைகளை நிலைநாட்ட உறுதி கொண்டிருந்தது. தான் திரும்ப ஆட்சிக்குவந்தால் ''பயங்கரவாத்தின் மீதான போர்'' என்று அழைக்கப்படும் அமெரிக்கா தலைமையிலான இராணுவ நடவடிக்கையில் பங்கெடுத்துக்கொள்ளுமென்று அறிவித்தது.

அதேபோல் ''நம்பிக்கை'' என்ற பிரச்சனையில், ஹோவார்ட் அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் தவறான தகவல்கள் ஆகியவற்றிற்கு தொழிற்கட்சி தெரிவித்த கடுமையான கண்டனங்களில் ஒன்று பிரதமர் ''ஆஸ்திரேலிய மக்களை அந்த நம்பிக்கைக்குள் கொண்டுவரவில்லை'' என்பதும், எப்போது ஹோவார்ட் தனது பதவியை தனது துணைத் தலைவர் Peter Costello-விடம் ஒப்படைக்கப்போகிறார் என்ற திட்டத்தை தெரிவிக்கவில்லை என்பதும்தான் அவர்களுடைய கவலையுமாகும்.

ஹோவார்டின் தொடக்க அறிக்கை எதையாவது கடக்க இருக்கிறது என்று எடுத்துக்கொண்டால், அவர் போரிலிருந்து பொருளாதாரத்திற்கு பெரிய பொய்யை நீட்டிக்க தீர்மானித்திருக்கிறார் என்தாகும். முந்திய தொழிற்கட்சி அரசாங்கங்கள் காலத்தில் நிலவியத்தைப்போன்று வட்டி விகிதங்கள் உயருமானால் சராசரி வீட்டு அடமான கடன்களை திருப்பித் தருவதற்கு மாதம் 960 டாலர்கள் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு மாறாக, தனது அரசாங்கம் அடுத்த 10- ஆண்டுகளில் சவால்களை சமாளிக்கும் திட்டத்தை அறிவிக்கும் என்றும், ''மேற்கத்திய உலகின் மிகவும் வலுவாக செயல்படும் பொருளாதாரத்தின் அடித்தளத்திலிருந்து'' அது வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை ''நாங்கள் வலிமைவாய்ந்த, உயிர்த்துடிப்புள்ள மற்றும் போட்டியிடக்கூடிய பொருளாதாரத்தை தந்திருக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஹோவார்ட் அரசாங்கத்தால் மிகவும் தற்பெருமையாக கூறப்படும் செழுமை பொருளாதாரக் கொள்கைகளால் வந்ததல்ல. மாறாக இது 1990-களின் மத்தியிலிருந்து கடன்கள் பெருகியதால் ஏற்பட்டதாகும். ஆஸ்திரேலியன் பத்திரிகையில், ஜூலை 29- பதிப்பில் ANU பொருளாதாரப் பேராசிரியர் Ross Garnaut வெளியிட்டுள்ள கட்டுரையின்படி: ''வங்கிகள் கடன் கொடுப்பது விஸ்தரிக்கப்படுவது, மிகவலுவான அடிப்படையில் வளர்ந்து கொண்டுவந்ததால் தனிப்பட்டவர்கள் நுகரும் தொகை அதிகரித்து வருகிறது'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடன்கள் பெறுகின்ற அளவு எந்தளவிற்கு வளர்ந்து கொண்டு செல்கின்றதென்றால் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலாண்டில் குடும்பத்தினர் வருமானத்தில் சேமிப்பு எதிர்மறை 3 சதவீதமாக ஆகிவிட்டது. கடனுகள் பெருகுவதன் மற்றொரு அடையாளச்சின்னம் தற்போதைய கணக்கு பற்றாக்குறை ஏற்படுவது, கிட்டதட்ட சான்றளவு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் அதன் சதவீதம், வரலாற்றுரீதியாக சர்வதேச வட்டிவிகிதம் குறைவாக இருப்பினும் வர்த்தக நிலைமை சான்று நிலையில் (இறக்குமதி விலைகளுக்கு ஏற்றுமதி விலைகளின் வீதம்) இருப்பினும் உயர்ந்துகொண்டுள்ளன.

கடன் அதிகரிப்பு பூரிப்பை தூண்டிவிட்டு வீட்டின் விலை அதிகரிக்கும், இதனுடைய அர்த்தம் 30 ஆண்டுகளில் வட்டிவிகிதம் குறைந்த மட்டத்திற்கு இருந்தபோதிலும், வீடுகளை வாங்குபவர்கள் 1980- களின் கடைசியில் 17- சதவீதமாக இருந்த பொழுது செலுத்தப்பட்ட அளவிற்கு வீட்டுக்கடன் வட்டிகளை செலுத்திவருகின்றனர். இதில் மிகச்சிறிய அளவிற்கு வட்டி வீதத்தில் உயர்வு ஏற்பட்டாலும்---- எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் வட்டி உயரும் என்று ரிசேர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது - அது, மிகக்கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிரச்சாரம் நடத்து கொண்டிருக்கிற முதன்மை வாக்குப்பதிவில் ஆளும் கட்சி முந்திக்கொண்டிருப்பதாகக் கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. பசுமைக்கட்சியினரும், இதர சிறிய கட்சிகளும் தங்களது முன்னுரிமை (preference) வாக்குகளை தொழிற்கட்சிக்கு தரும்போது அவை வெற்றிபெறும்.

இதே போக்கு நீடிக்குமானால், ஹோவார்ட் அரசாங்கம் அதிகாரத்தில் எப்படியாவது ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக தனது பல்வேறு மோசமான வித்தைகளை கையாளும். இதர சக்திகளும் அதில் பங்கெடுத்துக்கொள்ளும். அமெரிக்காவில் நவம்பர் 2-ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், குறிப்பாக மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் தனது ஸ்பானிய கூட்டாளியை இழந்தபின்னர், புஷ் நிர்வாகம் ஹோவார்ட் அரசாங்கம் தேர்தலில் தோல்வியுற்றால் அதைப் பின்னடைவு என்று கருதும்.

எனவே ஆத்திரமூட்டலுக்கான சாத்தியக்கூறு தெளிவாக உள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய முதல் நாளிலேயே, பொருளாளர் Peter Costello மாட்ரிட்-பாணியிலான பயங்கரவாத தாக்குதல் தேர்தலை சீர்குலைக்க பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளார். "நீங்கள் குறிப்பிட வேண்டிய ஒரே விஷயம் இதுதான்: ''ஸ்பெயினில் தேர்தலின் போது பயங்கரவாத சம்பவம் ஒன்று நடந்தது, எனவே ஆஸ்திரேலியாவிலும் நாம் முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்'' என்று மெல்போர்னில் ஒரு வானொலி பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும், பின்னர், தனக்கு அது போன்ற தாக்குதல் பற்றி புலனாய்வு தகவல் உண்டா, எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறதா என்று தெரியாது என்று குறிப்பிட்டார். ஆனால் Costello வின் முயற்சி இதுபோன்ற அச்சுறுத்தும் பிரச்சாரம் நடத்தப்படலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. திங்களன்று வெலிங்டனிலிருந்து வெளியிடப்படும் Dominion Post வெளியிட்டுள்ள ஒரு ஆழ்ந்த கருத்தில், எடுத்துக்காட்டாக, பிரச்சாரத்தின் போது ஒரு ஆஸ்திரேலியர் பிணைக் கைதியாக ஈராக்கில் பிடிக்கப்பட்டால் ''அனைத்துப் போட்டியும்" முடிந்துவிடும் என்று குறிப்பிட்டது.

Top of page