World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR

The Beslan hostage tragedy: the lies of the Putin government and its media

பெஸ்லன் பிணைக்கைதிகள் துயர நிகழ்ச்சி: புட்டின் அரசாங்கம் மற்றும் அதன் ஊடகங்களின் பொய்

By Vladimir Volkov
8 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

வடக்கு ஓசேட்டியா நகரான பெஸ்லனில் (Beslan) பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட துயரச்சம்பவம் ரஷ்யாவின் ஆளும் வர்க்கம் எந்த அளவிற்கு தனது சொந்த மக்களையே ஏமாற்றுகின்ற அளவிற்கு தரம் தாழ்ந்து சென்றுகொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. 1000-க்கு மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்ட நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்களுக்குப் பின்னரும் சில அடிப்படையான உண்மைகள் தெளிவில்லாமலேயே இருக்கின்றன. என்ன நடந்தது என்பதுபற்றி விரிவான, விரைவான நம்பத்தகுந்த தகவல்களை அறிந்துகொள்ளும் மிக முக்கியமான அடிப்படை உரிமையை அதன் மக்களுக்குத்தருவதற்கு ரஷ்ய அரசாங்கம் மறுத்திருக்கிறது.

செப்டம்பர் முதல்தேதி இந்த நெருக்கடி தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு நாட்களுக்குப்பின்னர் அது துயர முடிவிற்கு வந்தது வரை முன்னணி அரசியல்வாதிகள், ரகசிய போலீஸ் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்யாவின் பிரதான ஊடகங்கள், பேரழிவின் மட்டம் மற்றும் அதன் அதன் ஆபத்தான விளைவுகளைப் பற்றியும் திட்டமிட்டே தவறான தகவல்களை தந்து கொண்டிருந்தனர்.

முதல் பொய்: பிணைக்கைதிகள் எண்ணிக்கை

ஆரம்பத்திலிருந்தே பிணைக்கைதிகளின் எண்ணிக்கை திட்டமிட்டு குறைத்து மதிப்பீடு செய்யப்பட்டது. 354 பிணைக்கைதிகள் என்ற அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் தொலைக்காட்சி அலைவரிசையிலும் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட பள்ளிக்கூடம் அதிரடித்தாக்குதலுக்கு உள்ளானதுவரை திரும்பத்திரும்ப கூறப்பட்டு வந்தது.

இந்நெருக்கடியின் தொடக்கத்தில், செய்தி பத்திரிகையிலும், வலைத் தளங்களிலும் பிணைக்கைதிகள் எண்ணிக்கை பற்றி பல்வேறு புள்ளிவிவரங்களில் வெளியிட்ட நேரத்திலும் தொலைக்காட்சி அலைவரிசைகள் அதே புள்ளிவிவரங்களை கூறிக்கொண்டிருந்தன. செப்டம்பர் 2-ல் பிணைக்கைதிகளை பிடித்துக்கொண்டவர்களுக்கும், இங்குசேட்டியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஸ்லாம் ஆச்சேவிற்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 26- பெண்களும், குழந்தைகளும் விடுதலை செய்யப்பட்டபின்னரும், அந்த நேரத்தில் எத்தனைபேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர் என்பதை யாரும் மறைத்துவிட முடியாதிருந்த போதிலும் ஊடகங்கள் அதிகாரபூர்வமான மதிப்பீடுகளையே வெளியிட்டு வந்தன.

அந்தப்பள்ளிகூட உடற்பயிற்சி கூடத்தில் எத்தனை பிணைக்கைதிகள் இருந்தார்கள் என்பதை Auschev பார்த்திருக்கிறார். செப்டம்பர் 2-ல் விடுதலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும்போது, ''பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். 1000- பேர் இருப்பர் என்று நினைக்கிறேன்'' என்று சொன்னார். மற்றொரு பெண் தனது இரண்டு குழந்தைகளும் அந்தப்பள்ளியில் இருப்பதாக குறிப்பிட்டு ''அந்தப்பள்ளிக்கூட பதிவேட்டின்படி 860- குழந்தைகள் பள்ளிக்கு வந்திருக்க வேண்டும். பள்ளிப்பருவ தொடக்க விழாவிற்கு பாதிப்பேர் வராமல் இருந்திருக்கலாம். பெற்றோர்களும் இருக்கிறார்கள். இங்கே எத்தனைபேர் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். இங்கே கலாச்சார இல்லத்தில் 1000- பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரது ஒரு உறவினர் அல்லது குழந்தை பள்ளிக்கூடத்தில் இருக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

இதேபோன்ற செய்திகள் பத்திரிகைகளிலும், வலைத்தள வெளியீடுகளிலும் வந்தன. அப்படியிருந்தும் தொலைக்காட்சி அலைவரிசைகள் முதலில் தெரிவித்த புள்ளிவிவரங்களையே மீண்டும் கூறிக்கொண்டிருந்தன.

இரண்டாம் பொய்: பயங்கரவாதிகள் கோரிக்கைகளை எழுப்பவில்லை

இந்த துயரச்சம்பவம் தொடங்கிய உடனேயே அரசியல் உயர்மட்டத்தில் எந்தச்சூழ்நிலைகளிலும், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் பற்றிய தகவல் வெளியிடப்படக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. 2002-ல் "Nordost" மாஸ்கோ இசையரங்கில் நடைபெற்ற பிணைக்கைதிகள் தொடர்பாக புட்டீன் அரசாங்கம் பெற்ற படிப்பினைகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த இசை அரங்கிற்குள் சிக்கிக்கொண்ட பிணைக்கைதிகளின் உறவினர்கள் செச்சென்யாவில் ரஷ்யா தனது போரை முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்தக்கோரிக்கைக்கு பொதுமக்களது ஆதரவு பரவலாகயிருந்தது. இந்த அரசியல் உணர்வை ஒடுக்குவதற்கு கிரம்ளின் மிகப்பெரும் சங்கடத்தை சந்தித்தது.

இந்த முறை பயங்கரவாதிகள் எந்தக்கோரிக்கையும் எழுப்பவில்லை என்று கூறப்பட்டது. ஒரு இஸ்லாமியக் குழு செச்சன்யா போருக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ரஷ்யப்படைகள் திரும்பி அழைத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று விடுத்த கோரிக்கை, இந்த நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ரகசியமாகவே நிலைநாட்டப்பட்டது. இது தவிர, பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொள்வதற்கு தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் நிலைநாட்டிவந்தது.

செப்டம்பர் 6-ல், Novaya Gazeta செய்திப்பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தியில், செப்டம்பர் முதல்தேதி பிற்பகலில் அந்தப்பள்ளிக் கூடத்திற்கு அருகில் பெற்றோர்கள் திரண்டு ரஷ்ய ஜனாதிபதிக்கு வீடியோவில் ஒரு கோரிக்கை விடுத்தனர். குழந்தைகளின் உயிரை காப்பாற்றுவதற்காக பயங்கரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் ரஷ்ய ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டனர்."

இந்தத் தகவலை அனைத்து பிரதான தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரகசியமாகவே வைத்திருந்தனர்.

நேரில் கண்ட பல்வேறு சாட்சிகள் தந்துள்ள தகவல்களின்படி, பிணைக்கைதிகளை பிடித்துகொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை இரகசியமாக வைத்திருக்கவில்லை. எடுத்துக்காட்டாக, செப்டம்பர்3ல், அவரது மூன்று வயது பெண்குழந்தையுடன் விடுதலை செய்யப்பட்ட ஆசிரியரை Izvestia பேட்டி கண்டது. ''பயங்கரவாதிகள் தங்களது கோரிக்கை பற்றி உங்களிடம் எதுவும் சொன்னார்களா?'' என்று கேட்கப்பட்டது. ''செச்சன்யாவிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் வெளியேற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டுமே வைத்திருப்பதாக அவர்கள் கூறினார்கள்'' என்று பதிலளித்தார்.

மூன்றாம் பொய்: ''கட்டிடத்தை தாக்க திட்டங்கள் இல்லை

பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட செய்தி வெளியானவுடன் பொது மக்களிடையே பரவலாக ஆத்திர உணர்வு எழுந்தது. அப்போது அரசாங்க பிரதிநிதிகள் அந்தப் பள்ளிக்கட்டடத்தின் மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதை தவிர்ப்பதற்கு அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தனர். அந்தப்பள்ளியின் மீது திடீர்த் தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்ப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Izvestia செய்திப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு விமர்சனத்தின்படி, பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட விவகாரம் "மிக மோசமான திருப்பத்தை எடுத்தது." அரசாங்கம் தனது சொந்த தோல்வியை மறைப்பதற்காக அந்தக் கட்டடத்தின்மீது திடீர்தாக்குதல் நடவடிக்கை எடுப்பதற்கு தயாரிக்கப்படவில்லை என்றது, அத்தகைய ஒரு நடவடிக்கைக்கான எந்தவிதமான திட்டமும் கூட இல்லை என்று அறிவித்தது. இந்த கூற்றை மறுக்கின்ற வகையில் பல்வேறு உண்மைகளும், நேரில் கண்டவர்களது சாட்சிகளும் அமைந்துள்ளன.

செப்டம்பர் 3-ல் Nezavicimaya Gazeta தந்துள்ள தகவலின்படி "அந்தப் பள்ளிக்கட்டடத்தின் மீது திடீர்த்தாக்குதல் நடத்துவதற்கு புலனாய்வுப்படைகள் முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்தன". செப்டம்பர் முதல்தேதி இரவு சிறப்பு சாதனங்கள் அடங்கிய இராணுவப் போக்குவரத்து விமானம் வடக்கு ஒசேட்டியாவில் இறங்கியது. இந்த விமானத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புப் படையான "ஆல்பா" அந்த விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது.

இப்போது "ஆல்பா"வும், இன்னொரு பயங்கரவாத எதிர்ப்புப்படையான "விம்பெல்"-ம் அந்தப் பள்ளிக் கட்டடத்தில் திடீர்த்தாக்குதல் நடத்தியதில் முக்கிய பங்களிப்புச்செய்தது தெரியவருகிறது. செப்டம்பர் 3-ல் எதிர்பாராத வகையில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியதை தொடர்ந்து பயங்கரவாதிகள் உடனடியாகச்சுடத் தொடங்கியது மற்றும் ஏற்கனவே வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்தது, கட்டடத்தை தகர்ப்பது இடம்பெறலாம் என்று அவர்கள் உறுதிப்படுத்தியதை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த உண்மைகளை-பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்ற விவரம் வெளியிடப்படவில்லை, பிணைக்கைதிகளை பிடித்துக்கொண்டவர்களோடு அரசாங்கம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மறுத்தது. அந்தப் பள்ளிக்குள் என்ன நடக்கிறது மற்றும் முன்நிலையில் சிறப்புப்படைகள் நிலைகொண்டவிதம் - இவற்றை மனதில் கொண்டு இதுபற்றி செய்திப்பத்திரிகை Gazeta.ru செப்டம்பர் 4-ல் வெளியிட்டிருந்த தகவல்: ''அடுத்த இரண்டு நாட்களுக்குள் திடீர் தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டுமென்ற திட்டம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் குழந்தைகள் மூன்று அல்லது நான்கு நாட்கள்தான் உயிருடன் இருக்க முடியும். அதற்குப்பின்னர் மிகப்பெரும்பாலான பிணைக்கைதிகளை மீட்பது இயலாத காரியமாகிவிடும். என்றாலும், வெள்ளியன்று நடவடிக்கை எடுக்க அவர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்''

நான்காம் பொய்: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

இந்த அழிவுச்சம்பவம் நடந்தபின்னர் - அந்த உடற்பயிற்சி அரங்கில் குண்டுவெடித்து, கட்டடத்தின் ஒரு பகுதி சிதைந்த பின்னரும் - அரசாங்கமும், ஊடகங்களும் மடிந்தவர்கள் எண்ணிக்கையை குறைத்தே மதிப்பிட்டு, தொடர்ந்து பொய்சொல்லிக் கொண்டிருந்தனர்.

சடலங்கள் கணக்கெடுக்கப்பட்ட பின்னர்தான் அதிகாரபூர்வமான சாவு எண்ணிக்கை அதிகரித்தது. அரசாங்க வட்டாரங்கள் தந்துள்ள தகவலின்படி, செப்டம்பர் 6- திங்களன்று, 335-பேர் மடிந்ததாக கணக்கிடப்பட்டது. அதே நேரத்தில் 260- பேரைக் காணவில்லை என்ற பட்டியலும் வெளியிடப்பட்டது. "Echo Moscow" வானொலி நிலையத்தகவலின்படி காணாமல் போனவர்கள், இறந்தவர்கள் படியலிலும் இல்லை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பட்டியலிலும் இல்லை.

சனிக்கிழமையன்று, பெஸ்லான் நகரமக்கள் சவப்பெட்டிகளோடு அஞ்சலி செலுத்திய போது அந்தப் பள்ளிக்கூடத்திற்குள் 500- முதல் 600- வரை உடல்களை எண்ணியதாக தெரிவித்தனர்.

இந்தப் பின்னணியை பார்க்கும்போது, பயங்கரவாதிகள் எண்ணிக்கைப்பற்றி ரஷ்ய ஊடகத்தால் தரப்பட்ட தகவலில் அடங்கிய பொய்யை ஆராய வேண்டியதில்லை - அதுவும் கூட குறைத்தே கூறப்பட்டது - அல்லது சம்பவங்களின் போக்கில் தாறுமாறாக வேறுபட்ட விதத்தில் உத்தியோக ரீதியில் அறிவிக்கப்பட்டது.

ரஷ்ய ஊடங்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகள், குறிப்பாக பெரிய தொலைக்காட்சி அலைவரிசைகள் செயல்பட்டவிதம் வெட்கக்கேடானது. மேற்கு நாடுகளைச் சேர்ந்த பல தொலைக்காட்சி நிலையங்கள் வடக்கு ஒசேட்டியாவில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி, பெரும்பாலும் ரஷ்ய கேமராமேன்களுடன் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்தாலும், ரஷ்ய தொலைக்காட்சி நிலையங்கள் தங்களது வழக்கமான நிகழ்ச்சிகளை இடையீடு செய்ய மறுத்தன.

இந்த நெருக்கடியின் ஒரு கட்டத்தில், ரஷ்ய தொலைக்காட்சி அலைவரிசையான NTW நிருபர் காமிரா முன் தோன்றி ''என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாங்கள் சொல்ல இயலாது நாங்கள் அந்த சண்டையில் ஈடுபட்டிருப்பவர்களது செயல்களை விமர்சிக்க இயலாது'' என்று அப்பட்டமாக கூறினார்.

எனவேதான் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களை Beslan நகரவாசிகள் தாக்கியதில் வியப்பில்லை. உண்மையான சாவு எண்ணிக்கை விவரம் வெளியில் தெரிந்ததும் வெளியே காத்துக்கொண்டு நின்றவர்கள் தொலைக்காட்சி நிருபர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களது காமிராக்களையும் தாக்கினர் மற்றும் நிருபர்களையும் உதைத்தனர்.

ஆயினும், ரஷ்ய தொலைக்காட்சியால் ஆற்றப்பட்ட பாத்திரம், பிரதான ஊடகங்கள் மீது புட்டினின் கிரம்ளினால் இரும்புக்கரம் கொண்டு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே வெளிப்படுத்துகிறது. அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு தொலைக்காட்சியையும் கொண்டு வந்திருக்கிறது. ஊழல் மலிந்த வர்த்தகர்கள் மற்றும் முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரின் ரஷ்யாவின் ஆளும் தட்டினால் ஆதரிக்கப்படும் ஆத்திரமூட்டல் மூலமும் போக்கிரித்தனத்தின் மூலமும் ஊடகத்தை கட்டாயப்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.

புட்டின் மாஸ்கோ இசை அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட நெருக்கடியை பயன்படுத்தி, பத்திரிகை சுதந்திரம், முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருந்தது என்று கூறி, ஊடங்கள் மீது தமது பிடியை இறுக்கிக்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். அவர்களின் அறிக்கைகள் அல்லது கோரிக்கைகள், சம்பவங்களின் ஆய்வுகள் அல்லது ரஷ்ய இராணுவம் மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் பற்றிய செய்திப் படப்பிடிப்பு பயங்கரவாதிகளுக்கு உதவுகின்ற வகையில் எண்ணிப்பார்க்கத்தக்க வகையில் செய்திகளை வெளியிடக்கூடாது என்று கோரினார்.

இந்தத் தூக்குக்கயிறு இறுக்கப்படுகிறது. பெஸ்லன் சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை வெளியிட்டது தொடர்பாக கிரெம்ளின் பத்திரிக்கை பெருநிறுவன வெளியீட்டாளர்களால் நீக்கப்பட்ட பிறகு, Izvestia தினசரி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் Raf Shakirov, திங்களன்று ராஜினாமா செய்யும்படி நிர்பந்திக்கப்பட்டதை அறிவித்தார். முற்றுகையிடப்பட்டுள்ள அந்தப் பள்ளியிலிருந்து ஒரு காயம் பட்ட குழந்தையை ஒருவர் தூக்கிச்செல்லும் புகைப்படம் அந்தப் பத்திரிகையின் முதல் பக்கம் முழுவதும் வெளியிடப்பட்டிருந்தது. 350- பேர்தான் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்தனர் என்ற உத்தியோகப்பூர்வ கூற்றைப் பற்றி அந்தப் பத்திரிகை கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தது மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்களுக்குள்ளேயே முன்தணிக்கை முறைகளைப் பின்பற்றி வருவதாக கண்டிக்கும் விமர்சனக்கட்டுரையை அந்தப் பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.

இதற்கிடையில், முன்னணி ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் செச்சன்யா போர்பற்றி மிகக்கடுமையான விமர்சன செய்திகளை வெளியிட்டவர், இந்த பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்ட துயரக்காட்சிக்கு செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டார் அத்தகைய சூழ்நிலைகளை தீக்குறி என்றுதான் சொல்ல வேண்டும்.

Navaya Gazeta நிருபர் Anna Politkovskaya, Beslan- க்கு விமானம் ஏறினார். அப்போது அவர் தேநீர் அருந்திய பிறகு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. Rostov -வில் இறங்கி மருத்துவமனைக்கு விரைந்து சோதித்த போது உணவில் விஷம் கலந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு தகவலின்படி, அந்த நிருபர் திட்டமிட்டபடி விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டனர். அதிகாரிகள் தடுத்ததால் விமான நிலையத்தில் நின்ற அவரை மற்றொரு விமானக்கேப்டன் அடையாளம் கண்டு தனது விமானத்தில் ஏற்றிக்கொண்டார்.

ஊடகங்கள் ஒடுக்கப்பட்டிருப்பதுடன், ரஷ்ய நாடாளுமன்றமான Duma -வும் செயலற்று முடக்கப்படுவிட்டது. இந்த நெருக்கடியின் போது நாடாளுமன்றம் கூடவில்லை. ஒரு அறிக்கை விட்டதோடு சரி, ரஷ்யாவில் புட்டின் நிலைநாட்டிவருகிற ஏதேச்சதிகார ஆட்சியின் அடையாள சின்னங்கள் அவை.

இந்த ஆட்சி ஒட்டுமொத்தமும் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டமற்றும் பொதுவாக செயலிழந்து நிற்கும் தன்மையின் வெளிப்பாடுதான். ஜனாதிபதி மேற்கொண்டுள்ள அரசாங்க முன்தணிக்கை முறையாகும். "புதிய ரஷ்ய" தொழிலதிபர்கள் என்கிற முதலாளித்துவத்திற்கும் மிகப்பெரும்பாலான வறுமையில் வாடுகின்ற உழைக்கும் மக்களுக்கும் இடையில் நிலவுகின்ற பெரும் ஏற்றத்தாழ்வுகளை ஜனநாயக ஆட்சி- முறைகளால் நீக்கிவிட முடியாது.

தனது அரசியல் எதிரிகளையும், ஊடகங்களில் பெரும்பகுதியையும், விலைகொடுத்து வாங்கிவிட முடியும் அல்லது அச்சுறுத்திப் பணியவைத்துவிட முடியும் என்றாலும், ரஷ்யாவை அலைக்கழித்துக் கொண்டுள்ள ஆழமான நெருக்கடிகள் எதற்கும் தீர்வுகாணும் வல்லமையில்லாதவராக புட்டின் விளங்குகிறார். செச்சன்யா போரிலிருந்து இதர பிராந்திய பிரிவினை வாத வெடிப்புக்களில் இருந்து முழு அரசு எந்திரம் மற்றும் பொருளாதாரத்தையும் பண்பிட்டுக்காட்டும் பொதுவான ஊழல் மற்றும் சீர்குலைவுகளை அவரால் சரிக்கட்ட முடியவில்லை. இவை அத்தனை நெருக்கடிகளும் ஒன்று சேர்ந்துதான் பெஸ்லனில் துயரத்தை தோற்றுவித்திருக்கிறது.

ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான உந்துதலின் பின்னே இந்தத் தோல்விகள் இருக்கின்ற அதேவேளை, இப்போது நடைபெற்றுள்ள நெருக்கடியில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முன்தணிக்கை நடைமுறைகள் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்குள் பரவலான ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது. சோவியத் ஒன்றியம் சிதைந்த பின்னர் அந்த சிதைபாடுகளில் இருந்து தோன்றிய ஜனநாயக சீர்திருத்தங்களும் முதலாளித்துவம் அறிமுகமும், எதிர்பார்த்ததற்கு முரணாக படுமோசமான ஸ்ராலினிச காலத்து நிகழ்ச்சிகளை நினைவு கூறுகின்றவகையில் பலவகைகளில் செயல்படும் ஊடங்கள் உருவாகியுள்ளன. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றின் அடிப்படையில் இயங்குகின்றன. ரஷ்ய ஆட்சித் தலைவரை தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கின்ற அனைத்து செய்திகளையும் அடக்கி ஒடுக்குவதற்கு அர்ப்பணித்திருக்கின்றன.

Beslan ல் நடைபெற்ற அட்டூழியத்தை கையில் எடுத்துக்கொண்டு புட்டின் மேலும் அதிகமான ஏதேச்சதிகாரங்கங்களை கோருகிறார் மற்றும் செச்சன்யாவில் நடைபெறுகின்ற கொடூரமான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் எந்தவிதமான பேச்சுவார்தையையும் நடத்துவதற்கு அவர் முன்வரவில்லை. புஷ்ஷை முன்மாதிரியாகக் கொண்டு "பயங்கரவாதத்தின் மீது போர்" என்ற பெயரால் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு கட்டுத்திட்டமில்லா அதிகாரங்களைக் கோருகிறார் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.

அரசாங்க ஆதரவோடு செவ்வாயன்று நடத்தப்பட்ட பயங்கரவாத செயல்களுக்கு எதிரான பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்துக்கொண்டாலும், அவர்களது ஆவேசம் பயங்ரவாதிகளுக்கு எதிராக மட்டுமல்ல, ரஷ்ய அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.

Beslan நகருக்கு வடக்கே 18- மைல்களுக்கப்பால் உள்ள வடக்கு ஒசேட்டியாவின் தலைநகரான Vladikavkaz- ல் மிகக் கடுமையான ஆவேசம் காணப்பட்டது. நகரத்தின் மத்திய சதுக்கத்தில் திரண்ட கூட்டத்தினர் பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவும் எதிர்ப்பைக் காட்டினர்.

''இன்றைய தினம் நாங்கள் எங்களது குழந்தைகளை கல்லறையில் மூடுகிறோம், நாளை நாங்கள் இங்கே வருவோம், இந்த சாத்தான்களை அவர்களது பதவிகளில் இருந்து விரட்டுவோம். மிக தாழ்ந்த நிலையிலுள்ள டைரக்டர்களில் இருந்து அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிவரை பதவியில் இருந்து விரட்டுவோம்'' என்று பேரணியில் உரையாற்றிய ஒருவர் குறிப்பிட்டார்.

அந்தப் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் தலைக்கு மேலே ஒரு பதாகையில் ''ஊழல் மலிந்த அரசாங்கம்தான் பயங்கரவாதத்திற்கான ஊற்று'' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

Top of page