World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Popular agitation against army atrocities engulfs the northeast state of Manipur

இந்திய வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி

By Kranti Kumara
15 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை மத்தியிலிருந்து இந்தியாவின் சிறிய வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், ஆயுதப்படைகளுக்கு அசாதாரணமான கட்டாயப்படுத்தும் அதிகாரங்களை தருகின்ற இந்திய சட்டமான ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) இரத்து செய்யக்கோரி, பொதுமக்களது கிளர்ச்சியால் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. இவ்வதிகாரங்களில் ஆயுதப்படைகள் "தங்களது கடமைகளை மேற்கொள்ளும்போது" கைது செய்வதற்கும் மக்களைக் கொல்வதற்கும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத மற்றும் அடிப்படையில் சவால்விடமுடியாத அதிகாரம் உள்ளடங்கும்.

1958-ம் ஆண்டு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட AFSPA சட்டம், இந்தியாவின் மத்திய அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட எல்லையை "கலவரப்பகுதி" என்று பிரகடனப்படுத்தியவுடன் தானாகவே செயல்பட தொடங்கும். 1980-ல் மணிப்பூர் மாகாணம் கலவரப்பகுதி என்று அறிவிக்கப்பட்டது. அதற்குப்பின்னர் கால்நூற்றாண்டாக இந்திய பாதுகாப்புப்படைகள் திரும்பத்திரும்ப மனித உரிமைகளை மீறுகின்ற மற்றும் கொடூரமான நடவடிக்கைகளை இழைத்துள்ளன.

AFSPA விற்கு எதிராகவும் இந்திய அரசாங்கம் முழுவதற்குமே எதிராகவும் பல ஆண்டுகளாக ஆத்திரம் பொங்கிக்கொண்டிருந்தாலும் அண்மையில் நடைபெற்றுள்ள கிளர்ச்சிகள் இணை இராணுவ அஸ்ஸாம் துப்பாக்கிப் படைப்பிரிவு சார்ந்த ஒரு குழுவினர் 32 வயது தங்கம் மனோரமாவை கைது செய்து, கொடூரமாக சித்ரவதை செய்து, கற்பழித்து கொலை செய்ததைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஜூலை மாதம் 10- நள்ளிரவில் அஸ்ஸாம் துப்பாக்கிப்படையை சேர்ந்த வீரர்கள் குழுவினர், மனோரமாவின் வீட்டில் திடீரென்று புகுந்து தூங்கிக்கொண்டிந்த அவரை வராண்டாவிற்கு இழுந்துவந்த அவரது குடும்பத்தினர் முன்னர் கொடூரமாகத் தாக்கினர்.

இந்தியாவிலிருந்து மணிப்பூர் பிரிந்து செல்லவேண்டும் என்று கோருகின்ற, தடை செய்யப்பட்டுள்ள தேசியவாத மக்கள் விடுதலை இராணுவத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மனோரமா கைது செய்யப்பட்டார். இந்த பெண்ணை கைது செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பலாத்கார நடைமுறைகள் பாதுகாப்பு படைவீரர்கள் பயன்படுத்தும் நடைமுறைஆகும். தடை செய்யப்பட்ட அமைப்பை சார்ந்தவர் என்ற சந்தேகத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு பாதுகாப்புப்படையினர் தாறுமாறாக நடவடிக்கை எடுப்பதற்கு முடியும்

செப்டம்பர் 5-ல் மாகாணத்தலைநகரான இம்பாலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் வந்தார். அவருக்கு வரவேற்புக் கொடுக்கின்ற வகையில் 12 மணிநேர பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. 32 மகளிர், மாணவ மற்றும் சமூக அமைப்புக்கள் இடம்பெற்றிருக்கின்ற ஒருங்கிணைப்புக்குழுவான Apunba Lup அந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்திருந்தது மற்றும் இம்பாலிலும் இம்பாலைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும்பாலும் கடையடைப்பை நடத்துவதில் வெற்றி பெற்றது.

மனோரமாவின் கொலை நடந்தவுடன் அஸ்ஸாம் துப்பாக்கிப்படை பிரிவின் தலைமை அலுவலகத்திற்கு எதிரில் நிர்வாணமாக பல பெண்கள் கண்டனப்பேரணி நடத்தினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகையில் ''இந்திய இராணுவமே எங்களை கற்பழி'' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. மற்றொரு இளம் பெண்னான Irom Sharmila சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். அவர் கைதுசெய்யப்பட்டு இந்திய அதிகாரிகள் அவருக்கு கட்டாயப்படுத்தி உணவு கொடுத்தனர்.

AFSPA-வின் கீழ் மணிப்பூர் மக்கள் அனுபவித்துவரும் துயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி தனது சாவின் மூலம் பரபரப்பை ஏற்படுதுவதற்காக இந்தியா பிரிட்டனில், இருந்து சுதந்திரம் பெற்ற 57-வது ஆண்டு விழாவை குறிக்கும் ஆகஸ்ட் 15-ல், 19-வயது மாணவத் தலைவர் Pebam Chittaranjan Mangang தீக்குளித்து மாண்டார். Chittaranjan மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கின்ற வகையில் Apunba Lup விடுத்திருந்த ஒரு பொது வேலைநிறுத்த அழைப்பை ஏற்று ஆகஸ்ட் 17-ல் இம்பால் முடங்கியது.

இந்திய ஆளும் செல்வந்தத் தட்டு இந்த பொதுமக்களது கிளர்ச்சி கண்டு வியப்பும், குழப்பமும் அடைந்தனர். மாகாண முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான Ibobi singh இம்பாலில் இருந்து AFSPA விலக்கப்பட வேண்டுமென்ற ஆலோசனை கூறினார், என்றாலும் அவர் Apunba Lup ஐயும் தீவிரவாதிகள் முன்னணி அரங்கு என்று கண்டித்தார் மற்றும் அதன் தலைவர்கள் பலரை கைதுசெய்யக் கட்டளையிட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி மத்திய அரசாங்கம் அண்மையில் மணிப்பூர் தலைநகரில் AFSPA இரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. ஆனால் மத்திய அரசாங்கம் மணிப்பூரில் "ஜனாதிபதி ஆட்சியை" கொண்டுவருதாக அச்சுறுத்தியது. குடியரசுத்தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டால் மாகாண சட்டசபையும் அரசாங்கமும் நீக்கப்பட்டு மணிப்பூர் மத்திய அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும்.

மணிப்பூர் முதலமைச்சர் Ibobi Singh எதிர்கட்சிகளோடு சமரசமாக நடந்துகொண்டு தனது அரசாங்கத்திற்கே உலைவைக்க வெளிப்படையாகவே முயன்று வருகிறார் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் குற்றம் சாட்டினர். மணிப்பூரில் அதை ஒரு சாக்குப்போக்காக எடுத்துக்கொண்டு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர முடியும்.

கண்டனங்களை தொடர்ந்து மாநில அரசாங்கம் நியமித்த விசாரணை கமிஷன் விசாரணைக்கு ஒத்துழைக்க அஸ்ஸாம் துப்பக்கிப்படையினர் மறுத்துவிட்டனர். மனோரமா மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகளை ஆராய்வதற்காக அந்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட துப்பாக்கிப்படையினர் திரும்பத்திரும்ப விசாரணை கமிஷன் முன் சாட்சியமளிக்க விடுக்கப்பட்ட சம்மன்களை ஏற்க மறுத்துவிட்டனர். AFSPA யின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் துணிச்சல் பெற்று, மாநில அரசாங்கம் அத்தகைய விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசாங்கத்திடம் தேவையான அனுமதியை பெறவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் (அஸ்ஸாம் தலைநகர்) கவுகாத்தியிலுள்ள உயர்நீதி மன்றத்திற்கு மனுச்செய்து விசாரணை கமிஷன் விசாணைக்கு தடையாளனை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அதிகளவில் சட்டமோதல்கள் நடைபெற்றபின்னர் மனோரமாவை கைது செய்வதில் பங்கெடுத்துக்கொண்ட நான்கு சிப்பாய்கள் விசாரணைக்கமிஷன் முன் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையில் இராணுவ தலைமை மணிப்பூரில் AFSPA தளர்த்தப்படுவதற்கு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர், அது தீவிரவாதிகளுக்கெதிரான போரை பலவீனப்படுத்திவிடும் என்று கூறினர். இராணுவத் தலைமை தளபதி N.C. Vij மற்றும் இதர மூத்த இராணுவ அதிகாரிகள் இம்பாலில் AFSPA வை தளர்த்துவதற்கான கட்டளை பாதுகாப்பிற்கு, ஊறுவிளைவித்துவிடும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறியதாக தெரியவருகிறது. AFSPA-விற்கு எதிராக மணிப்பூரில் நடைபெற்றுவரும் கிளர்ச்சிக்கு அரசாங்கம் சலுகைகாட்டுமானால் அதே போன்ற போராட்டங்கள் வடக்கில் பிற இடங்களிலும் கொந்தளிப்பு மிக்க ஜம்மு, மற்றும் காஷ்மீர் மாகாணத்திலும் எழுவதற்கு இடம் கொடுத்து விடுமென்று இராணுவ அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். செப்டம்பர் 14, இந்து நாளிதழ் தந்திருக்கின்ற தகவலின்படி, ''உள்துறை அமைச்சர் பட்டீலுக்கு அறிக்கை தந்த இராணுவ அதிகாரிகள் நிலவரம் குறித்து தங்களது மதிப்பீடுகளை அமைச்சரது கவனத்திற்கு கொண்டுவந்ததாகவும் அது எந்த வகையிலும் இறுதி எச்சரிக்கை என்று எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.''

பிரிட்டிஷ் காலனித்துவவாதிகளிலிருந்து இந்திய ஆளும் தட்டுவரை தொடரும் ஒடுக்குமுறை

மணிப்பூரில் பிரதான பாதுகாப்பு படை அஸ்ஸாம் துப்பாக்கிப்படைப்பிரிவு என்று அழைக்கப்படுகிறது. இந்த இணை இராணுவப்படை இந்திய உள்துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிற்கும் இந்திய இராணுவத்தின் பணிக்கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது. இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் AFSPA-வை செயல்படுத்தும் பிரதானப் படை இது. வடகிழக்கில் மலைவாழ் மக்கள் நடத்திய கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக இதனை 19-வது நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலனித்துவவாத ஆட்சி உருவாக்கியது. இந்தப்படைபிரிவு 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர், அஸ்ஸாம் துப்பாக்கிப் படைப்பிரிவு பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டது, இப்போது அதற்கு 40- பெட்டாலியன்கள் உள்ளன.

மகாத்மா காந்தியும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையும் ஆரம்பித்த வெகுஜன கிளர்ச்சியான, "இந்தியாவை விட்டு வெளியெறு" இயக்கத்தை நசுக்குகின்ற முயற்சியாக பிரிட்டிஷ் காலனி ஆதிக்கவாதிகள் இயற்றிய 1942-ம் ஆண்டு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரம் அவசரசட்டத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான், AFSPA. அது ஒத்துழையாமை இயக்கம் என அதன் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளைக் கடந்து இந்தியாவின் பல பகுதிகளில் ஒரு அரைக் கிளர்ச்சி எழுச்சியாக ஆனது. அப்போது 1942- சட்டம் கேப்டன் மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள இராணுவத்தலைவர்கள், அவரது கருத்தில், சூழ்நிலையில் தேவைப்பட்டால், கொல்வதற்காக சுட வேண்டுமென்று சிப்பாய்களுக்கு எழுத்துமூலம் கட்டளையிடுவதற்கு அந்தச்சட்டம் சிறப்பு அதிகாரங்களை வழங்கியது.

1955-ம் ஆண்டு அஸ்ஸாம் மாகாண அரசு அப்போது அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்தில் கிளர்ச்சியை சமாளிப்பதற்காக அஸ்ஸாம் கலவரப்பகுதிகள் சட்டத்தை இயற்றியது. அந்தச்சட்டம் முந்திய பிரிட்டிஷ் சட்டத்தைவிட கடுமையானது. குறைந்த பட்சம் கேப்டன் அந்தஸ்திலுள்ள அதிகாரி எழுத்து மூலம் கட்டளையிட பிரிட்டிஷ் சட்டம் வகை செய்தது. ஆனால் அஸ்ஸாம் சட்டம் இந்த அதிகாரங்களை, இந்திய இராணுவத்தில் தாழ்ந்த நிலையிலுள்ள சிப்பாய்க்கு மேற்பட்ட தரத்திலுள்ளவருக்கு சாதாரண படையினருக்கு வழங்கியது. 1942- சட்டம் கட்டளை எழுத்துமூலம் தரப்பட்டவேண்டுமென்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் 1955-ல் இயற்றப்பட்ட அஸ்ஸாம் கலவரப்பகுதிகள் சட்டத்தில் அத்தகைய நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

1958-ல் இந்திய நாடாளுமன்றம், பிரதமர் நேருவின் தலைமையில் AFSPA சட்டத்தை ''உள்நாட்டுப் பாதுகாப்பை'' நிலைநாட்டுவதற்காக இயற்றியது. ஆறு பிரிவுகளைக் கொண்ட இந்த சட்டம் 1955-ல் அஸ்ஸாம் சட்டமன்றம் இயற்றிய அதே வாசகங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. 1990-ல் இந்திய நாடாளுமன்றம் ஆயுதப்படைகள் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை இயற்றியது. அதன்மூலம் இந்த ஒடுக்குமுறை அதிகாரங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டன.

பல்வேறு கிளர்ச்சிகளையும் ஒடுக்குகின்ற முறையில் இந்திய ஆயுதப்படைகள் கட்டுத்திட்டம் எதுவுமில்லாமல் செயல்படுவதற்கு இந்த சட்டங்கள் சட்டபூர்வ முகமூடியை அளிக்கின்றன. உண்மையிலேயே பாதுகாப்புப் படைகளின் பலாத்காரமும், தன்னிச்சையான வன்முறைகளும் வடகிழக்குப் பகுதிகளிலும் ஜம்மு மற்றும் காஷ்மீரிலும் பிரிவினை இயக்கங்களுக்கு தூபம் போடுகின்ற, முதன்மையான மக்களின் குறைபாடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது.

AFSPA வின் நான்காவது பிரிவு திட்டவட்டமாக கட்டுப்பாடு எதுவுமில்லாமல் கொல்வதற்கு அதிகாரம் வழங்குகிறது. இது 1979-ம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டிருக்கிற சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் (ICCPR) தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தின் மூன்று பிரிவுகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் குழு (UNHRC) முடிவு செய்தது. இந்தியாவில் அத்தகைய சட்டம் இருப்பது குறித்து UNHRC ன் பல உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் மத்தியில் ஆட்சிபுரிந்த எந்த அரசாங்கமும், அது காங்கிரஸ் மேலாதிக்கம் செலுத்திய அரசாங்கமாக இருந்தாலும் அல்லது பிறமத பழிப்பு இந்துவாத பாரதிய ஜனதாக் கட்சி (BJP) மேலாதிக்கம் செய்யும் அரசாங்கமாக இருந்தாலும் அல்லது ''மூன்றாவது" கட்சி கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் இந்தக் கொடூரமான சட்டத்தை இரத்து செய்வதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை.

இந்தியாவின் ஆளும் முதலாளித்துவ வடகிழக்கின் மூலோபாய முக்கியத்துவம்

தற்போது வடகிழக்கு இந்தியாவில் 7-மாகாணங்கள் - அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், மேகாலயா, திரிபுரா, மற்றும் அருணாசலப் பிரதேசம் ஆகியவை அடங்கியுள்ளன. நாகாலாந்து, மிசோரம் மற்றும் திரிபுரா 1947-க்கு பிந்திய அஸ்ஸாம் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்த பிராந்தியத்தில் உயர்ந்த மலைபாங்கான காடுகள், மலைகள், மற்றும் சமவெளிகள், அடங்கியுள்ளன. இவற்றில் பல்வேறு வகைப்பட்ட பூர்வகுடி இன கலாச்சாரக்குழுக்கள் தங்களது தனித்தன்மை கொண்ட கலாச்சார முத்திரைகளோடு வாழ்ந்து வருகின்றனர். வட கிழக்கில் வளமான கனிம வளங்களும், வனவளமும் பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த மண்டலத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொழிவினாலும், அந்தப்பகுதியில் செடி, கொடிகளும், வனவளமும், விலங்கினங்களும் தனித்தன்மை கொண்ட மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளும் நிறைந்துள்ளன.

இந்த வடகிழக்கு பிராந்தியம் சீனா, மியான்மர் (முன்னாள் பர்மா) பூட்டான், பங்களாதேஷ் ஆகியவற்றுடன் சர்வதேச எல்லைகளைக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டில் அஸ்ஸாமிற்கும், மேற்கு வங்காளத்தின் வடக்கு எல்லைக்குமிடையில் ஒரு சிறிய பகுதியை ''கோழிக்கழுத்து'' என்றழைக்கிறார்கள். 1947-ல் பாக்கிஸ்தான், இந்தியா வகுப்புவாத அடிப்படையில் பிரிவினை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவின் இதர பகுதிகளில் இருந்து இந்த பிராந்தியம் தனிமைப்படுத்தப்பட்டு செல்வது அதிகரித்தது அதன் மக்கள் பலர் வரலாற்று அடிப்படையில் சீனாவுடனும், தென்கிழக்கு ஆசியாவுடனும் தொடர்பு கொண்டிருந்த வரலாற்று அடிப்படையிலான சுதந்திர இயக்கத்திற்கு தடைக்கற்கள் உருவாகின. பழைய தொடர்புகளால் பல்வேறு கலாச்சார பாரம்பரியங்களுக்கிடையில் பரஸ்பர செல்வாக்கை உள்வாங்கி இருந்தன.

இந்தியாவில் மிகக் குறைந்தளவிற்கு வளர்ச்சி கண்டுள்ள பிராந்தியங்கள் மத்தியில் எண்ணிப்பார்க்கையில், வடகிழக்கில் மலைவாழ் மற்றும் சமவெளி மக்கள் இங்கு வாழ்கின்றனர். மலைப்பாங்கான பகுதிகளில் மலைவாழ் மக்களும், பள்ளாத்தாக்குப் பகுதிகிகளில் பிறரும் பொதுவாக பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர்.

இன அடிப்படையில் பாகுபாடுகளின் வரம்பிற்கு உட்பட்டு மூன்று இனக்குழுக்களை மணிப்பூரில் காணமுடியும். மைத்தி, குக்கி, மற்றும் நாகர்கள் ஆகிய மூன்று இனக்குழுக்கள் உள்ளன. வரலாற்று அடிப்படையில் குக்கிக்களும், நாகர்களும், மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். மைத்தி இனத்தவர்கள் பள்ளத்தாக்குகளில் வாழ்பவர்கள். மலைவாழ் மக்கள் தங்களது பேச்சுத் தொடர்புக்கு வழக்கில் சொந்த மொழிகளை பயன்படுத்திக் கொண்டாலும், மாகாணத்தின் ஆட்சி மொழி மைத்தி ஆகும் மற்றும் இந்த மொழியை பெரும்பாலான மக்கள் பேசுகிறார்கள்.

வரலாற்று அடிப்படையில் இந்த மலைவாழ் இனங்களின் தனித்தன்மை கொண்ட குணம் என்னவென்றால் ஒவ்வொரு இனமும் அவர்களுக்குள்ளேயே சுயதேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருளாதார அலகுகளாக செயல்பட்டு வருகின்றன. உள்ளூரிலேயே தயாரிக்க இயலாத பொருட்களை பண்ட மாற்றுமுறையில் பக்கத்து இனங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இதுபோன்ற மலைவாழ் மக்கள் பொருளாதாரங்கள் வடகிழக்கில் இதற்கு முன்னர் தனித்தன்மை கொண்டதாக விளங்கிவந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1947-க்கு பின் இந்த ஊடுருவல் மிக வேகமாக வளர்ந்து, முதலாளித்துவ உறவுகள் ஊடுருவல் தொடங்கியதன் காரணமாக, இனிமேலும் அப்படி இல்லாமற் போனது. இன்றைய தினம் வடகிழக்கு, பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ரொக்கத்தைத்தான் பயன்படுத்துகின்றனர் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற நவீன வசதிகள் பலவற்றையும் விலைகொடுத்து வாங்குகின்றனர்.

மலைவாழ் மக்கள் சமுதாயத்தின் பொருளாதார அடித்தளம் சிதைந்து விட்டதால் பொருளாதாரத்தில் பாதுகாப்பற்ற நிலையும், சமுதாய ஏற்றத்தாழ்வுகளும் வளர்ந்தன. இவை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தேசிய- இன வெறுப்புக்களுக்கும் மோதல்களுக்கும் தூபம் போட்டன. 1980-களின் மத்தியிலிருந்து இந்து பிற்போக்குவாத BJP அரசியல் முக்கியத்துவம் பெற்று வளர்ந்ததால் இந்த இன மோதல்கள் மேலும் அதிகரித்தன. ஏனென்றால் வடகிழக்கு பகுதிகளிலுள்ள பல மலைவாழ் மக்களில் பலர் கிறிஸ்தவர்கள் ஆவர்.

நிலக்கரி, வனவளம், கனிமவளம் மற்றும் பெட்ரோலியம் ஆகியவை உட்பட பல்வேறுபட்ட இயற்கை வளங்கள் இந்த பிராந்தியத்தில் கிடைக்கின்றன. இவை இந்தியாவின் ஆளும் செல்வந்தத் தட்டிற்கு மிகப்பெரும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எடுத்துக்காட்டாக உள்நாட்டு பெட்ரோலிய உற்பத்தியில் குறைந்த பட்சம் 15- சதவீதமும் தேயிலை உற்பத்தியில் 50- சதவீதமும், அஸ்ஸாமில் கிடைக்கிறது.

இந்திய ஆளும் செல்வந்தத்தட்டு பெரும்பாலும் வடகிழக்கு பகுதியின் வரலாறு மற்றும் பண்பாடுகள் பற்றி அறியாமையில் உள்ளது, எனவே அந்த பிராந்தியத்தை பெரும்பாலும் அலட்சியப்படுத்தி, இழிவுடன் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வந்த ஐந்தாண்டு திட்டங்களில் மத்திய அரசாங்கம் மிகச்சொற்பமான நிதியாதாரங்களையே இந்தப்பகுதிக்கு ஒதுக்கி வருகிறது. இந்தியாவின் இதர பகுதிகளை விட வடகிழக்குப் பிராந்தியம் தொழிற்துறை வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருப்பதால் பரவலான வறுமையும், வேலையில்லாத்திண்டாட்டமும் நிலவுகிறது. பொதுமக்கள் எதிர்த்து கண்டனம் தெரிவிக்க முயலுகின்றபோது இந்திய அரசாங்கம் இராணுவ ஒடுக்குமுறையை ஏவிவிடுகிறது.

1972-ம் ஆண்டு மணிப்பூர் தனிமாநிலமாகிவிட்டது. 1980-முதல் இராணுவ சட்டத்தின் கீழ் உள்ளது. வேலையில்லாதிருப்போர், மாணவர்கள், இளைஞர்கள், தங்களது குறைபாடுகளை தெரிவிப்பதற்கு அரசியல் வழிமுறை எதுவுமில்லை, எனவே அவர்கள் பல்வேறுபட்ட கிளர்ச்சிக்குழுக்களிலும் சேர்ந்து கொள்கிறார்கள். இந்திய முலாளித்து வர்க்கத்தின் ஆட்சியால் உருவாக்கப்பட்டுள்ள சமூக அநீதிகளுக்கு தீர்வு இனக்குழு தேசியவாதமும், பிரிவினைவாதமும்தான் என்று இந்த கிளர்ச்சிக் குழுக்கள் பிரச்சாரம் செய்துவருகின்றன.

மணிப்பூரில் செயல்பட்டு வருகின்ற பல கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவிலிருந்து தோன்றியது அல்லது அடையாள படுத்திக்கொள்வது என்று காணப்பட்டாலும், இந்திய ஊடகங்கள் அடிக்கடி செய்வதைப்போல் இந்தக்குழுக்களை முற்றிலும் இன அடிப்படையில் பாகுபடுத்துவது தவறானது. சில கிளர்ச்சிக்குழுக்கள் பல்வேறு அல்லது எல்லா வடகிழக்கு குழுக்களையும், வடகிழக்கு மாநிலம் என்ற ஒரே அமைப்பின் கீழ் "ஐக்கியப்படுத்துவதாக" கூறி வருகின்றன. பிற குழுக்கள் முற்றிலும் இன அடிப்படையில் தங்களது அமைப்புக்களை உருவாக்கி பிற இனத்தவரை வெளியேற்றுவதையும் அல்லது தாங்கள் வெளியார் என்று கருதுபவர்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுக்கின்றன. மணிப்பூரில் தற்போது செயல்பட்டுக் கொண்டுள்ள முன்னணி குழுக்கள் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மக்கள் விடுதலை இராணுவம் (PLA) மற்றும் KangleiPak மக்கள் புரட்சிக் கட்சி (PREPAK) ஆகியவை ஆகும்.

இந்தக் குழுக்களுக்கிடையே கூட்டணி மாறிக்கொண்டேயிருக்கிறது, பல குழுக்கள் பிற இனங்களை வெளியேற்றுவதில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தக் குழுக்கள் எதுவும் துணைக்கண்டத்து ஒடுக்கப்பட்ட மக்களோடும், தொழிலாளர் வர்க்கத்தோடு ஒன்றுபட்டு செயல்பட நேசக்கரம் நீட்டவில்லை. சில குழுக்கள் சோசலிச சொற்றொடர்களைப் பயன்படுத்திவருகின்றன. ஆனால் எல்லா குழுக்களுமே குட்டி முதலாளித்துவ இனக்குழு, தேசியவாத மற்றும் மொழி அடிப்படையில் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வருகின்றன மற்றும் தெற்கு ஆசியாவில் பிற்போக்கு, முதலாளித்துவ, தேசிய அரசு அமைப்பு முறைக்கு மீண்டும் இடமாறுவதைத் தவிர வேறு எதுவுமில்லாத ஒன்றை நாடுகின்றன.

இந்திய செல்வந்தத்தட்டு இத்தகைய கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு அவர்கள் பாதுகாப்பு படைகளுக்கு கட்டுத்திட்டமில்லாத அதிகாரங்களை வழங்குகின்றனர். இதன் விளைவாக இந்தப்படைகள் அரசாங்க ஆதரவில் செயல்படுகின்ற பயங்கரவாத குழுக்களாகவே இயங்கிவருகின்றன. பலதலைமுறைகளாக அவர்கள் கொலைகளை, கற்பழிப்புக்களை, வீடுகளை உடைத்து நொருக்குவதை, தன்னிச்சையாக மக்களை கைது செய்வதை, மக்களை இழிவுபடுத்துவதை செய்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாது அல்லது மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறாமல் வேறு எந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்க முடியாது. மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவது என்பது இயலாததாகும். இது பாதுகாப்புப்படைகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் எதிராக பொதுமக்களிடையே ஆவேசத்தையும் எதிர்ப்புணர்வையும் உருவாக்கியுள்ளது.

பாரம்பரியமாக, இந்திய பிரதான ஊடகங்கள் வடகிழக்குப் பகுதியில் அடிப்படை மனித உரிமைகளுக்காக நடைபெறும் போராட்டங்களைப் பற்றிய தகவல்களை தருவதைப் புறக்கணித்து விடுகின்றன. பெரும்பாலான பத்திரிகைகள் தங்களது செய்திகளை கிளர்ச்சிக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நடைபெறும் மோதல்களோடு முடித்துக்கொள்கின்றன. இப்படி செய்திகளை வெளியிடுவதன் மூலம் வடகிழக்கு பிராந்தியம் கிளர்ச்சி மற்றும் வன்முறைகளில் கொந்தளித்துக் கொண்டிருப்பதாக சித்தரிக்கின்றன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அந்த பகுதி மக்கள் தங்களது அன்றான வாழ்விற்கும் கண்ணியத்தை நிலைநாட்டவும் போராடிக்கொண்டிருப்பதும், இந்திய அரசின் ஒடுக்குமுறைத் தன்மையும், பிறருக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகிறது.

Top of page