World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Spanish government discusses extending scope of Anti-Terror Pact

பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் ஸ்பெயின் அரசாங்கம் விவாதம்

By Paul Bond
24 August 2004

Use this version to print | Send this link by email | Email the author

ஸ்பெயின் சோசலிச தொழிலாளர் கட்சி (PSOE) எதிர்க்கட்சியாக இருந்தபோது, வலதுசாரி பாப்புலர் கட்சி அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை அடக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுகிறோம் என்ற சாக்குபோக்கில் அளவிட முடியாத சேவையை வழங்கியது. இப்போது அரசாங்கத்தை நடத்துகிற PSOE கட்சியானது அதே உடன்படிக்கையை மேலும் விரிவுபடுத்த முயன்று வருகிறது.

பாஸ்க் (Basque) பிரிவினைவாதக் குழுவான ணிஜிகி (ணிusளீணீபீவீ tணீ கிsளீணீtணீsuஸீணீஙிணீsஹீuமீ பிஷீனீமீறீணீஸீபீ ணீஸீபீ திக்ஷீமீமீபீஷீனீ) ஆனது சுற்றுலா மையங்களில் தனது குண்டுத் தாக்குதல் பிரச்சாரத்தை மீண்டும் தொடக்கியிருக்கிறது. ஆதலால், தேசியவாதக் கட்சிகள் இதனை பரப்பரப்பாக வலியுறுத்தி அரசாங்கத்திற்கு தங்களை நம்பகத்தன்மையுள்ள பொறுப்பான கூட்டணியாக நற்சான்றிதழ் கொடுத்து பிராந்திய அதிகாரத்தை சக்தி வாய்ந்ததாக்க கட்டளையிடுகின்றன. எப்படி இந்தக் குறிக்கோளை அடைவது என்பதில் அவைகளுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், ஸ்பெயினின் தொழிலாள வர்க்கத்தை கொடூரமான கண்காணிப்பு கொள்கைக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளில் ஒரு உடன்பாடு காண்பதற்கு எல்லாக் கட்சிகளும் முயன்று வருகின்றன.

கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்பு, சென்றவாரம் முதல் தடவையாக ஸ்பெயினின் வடக்கு கடற்கரைப் பகுதியில் ETA ஐந்து குண்டுகளை வெடிக்க வைத்தது. கடந்த ஏப்ரலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 84.2 சதவீதமான ஸ்பெயின் மக்கள் ETA அமைப்பை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தன. பாஸ்க் பிராந்தியத்தில் நடத்தபப்பட்ட கருத்துக்கணிப்பில் 71.4 சதவீதமான மக்கள் இந்த அமைப்பை நிராகரித்தனர். ETA நீண்ட நெடுங்காலமாக சுற்றுலா மையங்களை அடிக்கடி குறி வைத்து வருகிறது. ஏனென்றால் அவை ஸ்பெயின் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்து வருகின்றவை ஆகும். இந்த உயிர்நாடியான பொருளாதாரத் துறையை சீர்குலைத்தால் மாட்ரிட் தன்னோடு சமரசப் பேச்சுவார்த்தைகளை நடாத்த நிர்பந்திக்கப்படும் என்பது அதன் கொள்கையாக இருக்கிறது. இந்தப் பிற்போக்குத்தனமான முன்னோக்கானது, தொடர்ந்து வந்த ஸ்பெயின் அரசாங்கங்கள் ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை தந்துவிட்டது.

2000 TM, PSOE கட்சியானது பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தில் பாப்புலர் கட்சியுடன் சேர்ந்து கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் ETA வை ஒடுக்குவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கும். அதேவேளையில், சிவில் உரிமைகளை அடக்குவதற்கும், போலீஸ் அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் சட்டரீதியான தன்மையை வழங்கிவிட்டது. அந்தப் போர்வையில், தேசிய தன்னாட்சி பிரச்சனைபற்றிய எந்த ஜனநாயக விவாதத்தையும் கிரிமினல் நடவடிக்கையாக கட்டளையிடுவதற்கு அரச இயந்திரங்களை பலப்படுத்த பாப்புலர் கட்சி முயன்றது.

அந்த ஒப்பந்தத்தின் தர்க்க முன்னுரையானது, எல்லா வடிவிலான தேசியவாத அரசியலையும், வெளிப்படையாக பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்துவதாக அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக, பாஸ்க் பிராந்தியத்தை சுதந்திரமாக பிரகடனப்படுத்துகிற நோக்கில் சுய-நிர்ணய உரிமை ''திணிக்கப்படுவதாக'' அதில் கூறப்பட்டுள்ளது. அண்மை ஆண்டுகளில் மிதவாத பாஸ்க் தேசியக் கட்சி (Basque National Party - PNV) பிராந்திய தன்னாட்சி உரிமையை விரிவுபடுத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது. ஆகவே, ETA வைவிட தங்களைத்தான் அதிகம் குறித்து இந்த முன்னுரை இயற்றப்பட்டிருப்பதாக PNV கூறியுள்ளது.

இதன் விளைவாக, பாப்புலர் கட்சிக்கு உயிர்நாடியான ஆதரவு தெரிவித்துள்ள மிதவாத தேசியவாத கட்சிகள், தங்களது பிராந்தியத்துக்குள் ஆதரவை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

PSOE கட்சியின் ஆதரவோடு இரு கட்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டும்தான் இது செயல்படுத்த முடியும். ஆனால், 2001 செப்டம்பர் 11 ல் அமெரிக்கா மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து அன்றைய பாப்புலர் கட்சிப் பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னர் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷுடன் தன்னை இணைத்துக்கொண்டு ''பயங்கரவாதத்தின் மீதான போரின்'' பெயரால் உள்நாட்டில் மேலும் ஜனநாயக விரோதச் சட்டங்களுக்கு கட்டளையிட்டார்.

கடந்த மார்ச்சில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அஸ்னரை வெகுஜனங்கள் புறக்கணிப்பதற்கு மிகப்பாரியளவில் பங்களித்த காரணிகளில் ஒன்று, ETA வின் பிரச்சாரங்களை தனது வலதுசாரிக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்துக் கொள்வதில் உறுதியோடு நின்றதாகும். மாட்ரிட்டில் ரயில்கள் மீது மார்ச் 11 ல் நடைபெற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்களில் அல் கொய்தா சம்மந்தப்பட்டிருக்கிறது என்ற சான்றை மறைத்துவிட்டு ETA மீது பழிபோட அஸ்னர் முயலுகிறார் என்ற உண்மை அம்பலத்திற்கு வந்ததும், வெகுஜனங்களால் கிளர்ந்து எழுந்த விரோதப் போக்குகள் PSOE கட்சியை ஆட்சியில் அமர்த்தின.

ஆட்சிக்கு வந்த PSOE அரசாங்கம் மிதவாத தேசியவாதிகளுடன் மறுபடியும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கூச்சலிட்டாலும், அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ரத்துசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையை நிலைகுலையச் செய்தது. அந்த ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவது பற்றி கலந்துரையாட பாப்புலர் கட்சிக்கு PSOE அழைப்பும் விடுத்தது.

மாட்ரிட்டில் மார்ச் 11 ல் நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணைகள், பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தில் சிறுபான்மை கட்சிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்துவதற்கான வாய்ப்பைத் தந்துவிட்டது. Chunta Aragonesista கட்சியின் துணைத் தலைவர் ஜோசே அந்தோனியோ லாபோர்டிலா (Jose Antonio Labordela) இந்த விசாரணைக் கமிஷனில் கலந்துகொண்ட சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டுக்குழுவின் பிரதிநிதியாகும். அவர் எந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு உடன்படிக்கையிலும் ''அனைத்து அரசியல் சக்திகளும்'' இடம்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கட்டலான் தேசியவாத குவிதல் மற்றும் ஒன்றிய (Catalan nationalist Convergence and Union - CIU) அமைப்பைச் சார்ந்த ஜோர்டி ஜானே இப்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்தம் ''ஒரு பெரும் தவறு'' என்று வர்ணித்தார். ஏனெனில், அந்த ஒப்பந்தத்தில் பாப்புலர் மற்றும் PSOE ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாகவும், மிதவாத பாஸ்க் தேசியக் கட்சி சேர்த்துக் கொள்ளப்படாததால் தனது அமைப்பு அந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகள் பாப்புலர் கட்சியை ஆதரித்து வந்ததால் சென்ற பிராந்தியத் தேர்தல்களில் CIU தனது வாக்குகளை இழந்தது. இந்த இழப்பை பயன்படுத்தி பயனடைந்த கட்சி கட்டலான் குடியரசு இடது (Catalan Republican Left - ERC) கட்சியாகும். இக்கட்சியின் பிரதிநிதியான ஒகஸ்டி சேர்டா விமர்சனம் செய்யும் போது: ''எங்களது தீர்விற்கு மற்றும் தொலைநோக்கிற்கு பங்களிப்புச்செய்ய தேசியவாதிகளும் விரும்புகின்றனர்'' என்று குறிப்பிட்டார்.

இரண்டு கட்சிகளுக்கிடையில் ஒப்பந்தத்தை உருவாகிக்கொண்டு அரசாங்கத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் பொதுக் கருத்து என்று அதை சித்தரித்ததை சேர்டா விமர்சித்ததோடு, ''சர்வதேச பயங்கரவாதம்'' தொடர்பாக புதிய ஒப்பந்தத்திற்கு ERC ஆதரவு தரும் என்று உறுதியளித்தார்.

நடப்பு ஒப்பந்தத்தில் உள்ள முன்னுரையானது, எல்லா தேசியவாதக் கட்சிகளுக்கும் பிரதான தடைக்கல்லாக உள்ளது என்றும், ஆகவே, ஒரு புதிய உடன்படிக்கைக்கு ''அடிப்படை மூலக்கூற்றாக'' அதனை நீக்கவேண்டுமென்று ஜான் விவரித்தார். பாஸ்க் தேசியக் கட்சியினுடைய மார்கரிட்டா யூரியா, நடப்பு முன்னுரையை நீக்கிவிட்டு ''எல்லா வடிவங்களுக்கும் வெளிப்படையான'' ஒப்பந்தம் உருவாக்க வேண்டுமென்றும், இது பல்வேறு தேசியவாத வடிவங்களுக்கும் ''தெளிவாக தாக்குதலை'' தொடுப்பதாக அமைந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

துவக்கத்தில் PSOE கட்சியானது ''இஸ்லாமிய பயங்கரவாதம்'' தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டது. ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் தரப்படவில்லை. இதை உள்துறை அமைச்சர், விசாரணைக் கமிஷன் விசாரணையில் விளக்கினார். நடப்பு ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதுபற்றி தான் பேசவில்லை என்றும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது திட்டவட்டமாக நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய ஒப்பந்தம் பற்றி பேசுவதாகவும் சாட்சியமளித்தார்.

PSOE கட்சியானது தொடர்ந்தும் பாப்புலர் கட்சியின் அரசியல் செயற்திட்டங்களுக்கு ஆதரவு தந்து வருகிறது. அஸ்னரின் வாரிசும், பாப்புலர் கட்சியின் தலைவருமான மரியானோ ராஜோ நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது 2000 ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்த முன்னுரையில் எந்த மாற்றத்திற்கும் தான் சம்மதிக்கப்போவதில்லை என்றும், சர்வதேச பயங்கரவாதத்தை சேர்த்துக்கொள்ளும் வகையில் விரிவுபடுத்துவதை மட்டுமே தான் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு கமிஷன் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் பாப்புலர் கட்சி விமர்சித்தது.

அண்மையில் மரிவன்ட் மாளிகையில் அரசரை சந்தித்த பின்னர் PSOE கட்சியின் பிரதமர் சாபத்தரோ (Zapatero) பாப்புலர் கட்சியின் நிலைப்பாட்டைத்தான் ஆதரிப்பதாக தெளிவுபடுத்தினார். தற்பொழுது உள்ள உடன்படிக்கையில் உருவாகியுள்ள ''ஒற்றுமை ஐக்கியத்தை'' (PSOE மற்றும் பாப்புலர் கட்சிகளுக்கிடையில்) புகழ்ந்துரைத்தார். சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற கட்சிகளுடனும் உடன்பாடு காண்பதற்கான வழிவகைகளை தமது அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பாஸ்க் தேசியக் கட்சி பயங்கரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு அழைப்பு விடுவதில் ஐக்கியப்பட்டு ஒரே நிலைப்பாட்டோடு முன்னணியில் உள்ளது. ''எல்லாக் கட்சிகளும் கலந்து கொள்ளும் ஒரே ஒப்பந்தத்திற்கு'' வகைசெய்ய வேண்டுமென்று மார்கரிட்டா யூரியா கேட்டுக்கொண்டார். துணைத் தலைவரான எமிலியோ ஒலபாரியா கருத்துத் தெரிவிக்கும் போது ETA வுடன் போரிடுவது என்பது எல்லா தேசியவாதிகளுடனும் போரிடுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார். அதே போன்று இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லும்போது அதற்காக இஸ்லாமியத்தையே குற்றவியலாக அர்த்தப்படுத்தாது என்றும், ஒரே ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாஸ்க் தேசியக் கட்சியின் நிலைப்பாடு பிராந்திய அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கும் கட்சி என்ற அடிப்படையில் விடுக்கப்படுகின்றன. பாஸ்க் போலீசார், ETA வுடன் போரிடுவதற்கு இடையூறு செய்கிற வகையில் அஸ்னரின் கொள்கைகள் அமைந்திருந்ததாக அவர் மேலும் விமர்சித்தார். பிராந்திய அரச இயந்திரங்களை வலுபடுத்துகிற வகையில் உடன்படிக்கை உருவாக்க வேண்டுமென்ற கவலையுடன் இக்கட்சி செயல்பட்டு வருகிறது.

பாஸ்க் தேசியக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதியான Joseba Erkoreka ஒரு புதிய உடன்படிக்கை வரையப்பட வேண்டுமென்றும், ''பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு புதிய ஆயுதங்கள் நமக்கு தேவை'' என்றும் குறிப்பிட்டார். கட்டலோனியா பகுதியில் பிரதான பொறுப்புக்களை வகிக்கும் ERC கட்சியானது ஒரே ஒப்பந்தம் ''நியாயமானது'' என்று குறிப்பிட்டது.

பிராந்தியக் கட்சிகள் தங்களது கரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக எதேனும் ஒரு பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. ஆனால், பிரதமர் சாபத்தரோ அவர்களுக்கு அளவிற்கு அதிகமாக இடம்தர இயலாது என்று தெளிவுபடுத்திவிட்டார். மரிவன்ட் அரண்மனையைவிட்டு அவர் வெளியே வரும்போது, பாஸ்க் பிரதமர் Juan Jose Ibarretxe, பாஸ்க் இறையாண்மை குறித்து பொதுமக்களை கலந்து பேச வேண்டும் என்று கூறியிருப்பது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாபத்தரோ, எல்லா தன்னாட்சி உரிமைபெற்ற அரசாங்கங்களும் தங்களது ஆலோசனைகளை ''அரசியல் சட்ட கட்டுக்கோப்பு மற்றும் அதன் முன்நிகழ்வுகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டுமென்று'' குறிப்பிட்டார்.

இந்த வட்டத்தை ஒரு முடிவிற்கு கொண்டுவரும் பிரதான பங்களிப்பு ஸ்ராலினிச ஐக்கிய இடதுகள் கையில்தான் உள்ளது. எந்த வாய்ப்பையும் தள்ளிவிடுவதற்கில்லை என்று ஐக்கிய இடதுகளைச் சேர்ந்த காஸ்பார் லினாமசராஸ் (Gaspar Llamazares) குறிப்பிட்டார். ஆனால், நடப்பு ஒப்பந்தத்தை நீக்குவதா அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய குறுகியகால ஒப்பந்தத்தை இயற்றுவதா என்பதை அவர் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.

Top of page