World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The filthy underside of American "democracy": How Ohio officials have conspired against the SEP and its supporters

அமெரிக்க "ஜனநாயகத்தின்" இழிந்த கீழ்மைத் தன்மை: SEP மற்றும் அதன் ஆதரவாளர்களுக்கு எதிராக ஓகியோ அதிகாரிகள் எவ்வாறு சதித் திட்டம் புரிந்தனர்

By Patrick Martin
15 September 2004

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்குச்சீட்டில் பதிவுத் தகுதி கொடுக்க ஓகியோ அதிகாரிகளால் மறுக்கப்பட்ட முயற்சி அமெரிக்காவில் ஜனநாயகம் என்று கூறிக்கொள்ளும் முறையின் உண்மைகளைப் பற்றிய புறநிலைப் படிப்பினை ஆகும். மாநில அரசாங்கத்தின் குடியரசுக்கட்சி அதிகாரிகளும், உள்ளூர் குடியரசு, ஜனநாயகக்கட்சி அதிகாரிகளும் சக்திகளாக ஒன்றிணைந்து, ஜனநாயகவிரோத சட்டங்கள், ஒருதலைப்பட்ச தொழில் நுட்ப கூறுகள், நேரடி மோசடி இவற்றினைப் பயன்படுத்தி, நவம்பர் 2 வாக்குப்பதிவில் சோசலிசப் பிரச்சாரம் தொடங்கவிடாமல் தடுக்க ஒன்றிணைந்துள்ளனர்.

செப்டம்பர் 8 புதன்கிழமையன்று, ஓகியோ மாநில அரசுத்துறை செயலகத்தின் அலுவகம், கவுண்டிப் பதிவாளர்கள், கையெழுத்துக்களை பரிசோதனை செய்ததின் அடிப்படையில், SEP ஜனாதிபதித் தேர்தல் பதிவிற்காக பில் வான் ஒகென், ஜிம் லோரென்ஸ் ஆகியோர் கொடுத்திருந்த மனுக்களில், மாநிலச் சட்ட விதிப்படி தேவைப்படும் 5,000 கையெழுத்துக்களைவிட மிகக்குறைவாக, முறையான 3,811 கையெழுத்துக்கள்தான் இருப்பதால், வாக்குச்சீட்டில் இவர்கள் இடம் பெற முடியாது என்று நிர்ணயித்துள்ளது. SEP பிரச்சாரத்தால் கடந்த மாதம் அளிக்கப்பட்ட மொத்த 7,983 கையெழுத்துக்களில் பாதிக்கு மேல், பதிவாளர்கள், அவை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் கையெழுத்து அல்ல என்று தகுதியற்றதாக்கிவிட்டனர்.

SEP மனுவில் கையெழுத்திட்ட மொத்தத்தில் பாதிக்கும் சற்றுக் குறைவானவைதான் பதிவுசெய்யப்பட்ட கையெழுத்துக்கள் என்று கூறுதல் எடுத்த எடுப்பிலேயே அபத்தமானதாகும். Policy Matters Ohio என்னும் ஒரு க்ளீவ்லாந்த் தளமுடைய http://www.policymattersohio.org/pdf/EDR_report.pdf, சிந்தனைக் குழுவின் அறிக்கையின்படி, 2000- தேர்தல்களின் வாக்குப் போடும் வயது வந்தவர்களுக்கு, வாக்குப்பதிவு செய்தவர்களின் விகிதம் 89 சதவிகிதம் என்று இருந்தது. 2004 தேர்தலுக்கு அந்த எண்ணிக்கை, ஜனநாயகக், குடியரசுக் கட்சியினர் பெரும் செலவு செய்து பல்லாயிரக்கணக்கில் புதிய வாக்குரிமை உடைய வாக்களாளர்களின் பெயர்களைச் சேர்த்திருக்கக் கூடும் என்பதால், உயர்ந்திருக்க சாத்தியமுள்ளது.

வேறுவிதமாகக் கூறினால், 8,000 ஓகியோவில் வாழ்பவர்களை ஒரு ஒழுங்கின்றி கணக்கிற்குட்படுத்தினாலும், அவர்களில் 7,000 பேருக்கு மேல் வாக்களிக்கும் உரிமைக்குப் பதிவு செய்திருப்பர். ஆயினும்கூட SEP மனுவில் கையெழுத்திட்ட ----ஒழுங்கற்ற முறையில் இல்லாமல் தொழிலாள வர்க்க அரசியிலில் அவர்கள் காட்டிய நலனுக்காகவும், அவர்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனரா என்று குறிப்பாகக் கேட்டபின்னர் பெற்ற 8,000 கையெழுத்துக்களில், 4,000க்கும் குறைவானவை பதிவு செய்யப்படாதவை என்று ஓகையா, மாநில, உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். நியாயமென தோன்றுகின்ற பொது அறிவு எதையும் சோதிப்பதை இந்த கூற்று தவிர்க்கிறது. புள்ளி விவர கண்ணோட்டத்திலிருந்து, இத்தகைய நிலை வருவது என்பது பூஜ்யத்தை ஒட்டித்தான் இருக்கும்.

மனுவைப் பரிசோதனை செய்ததின் முடிவு ஒரு குற்றத்தைத்தான் காட்டுகிறது: SEP உடைய கையெழுத்துச் சேகரிப்பு பற்றி அல்ல அது; உள்ளூர் அதிகாரிகளின் மிக மட்டமான, ஊழல் மலிந்த சோதனை முறை பற்றித்தான் அவ்வாறு உள்ளது எனத் தெரியும்; முதலாளித்துவ கட்சியின் ஸ்தாபிக்கப்பட்ட இருகட்சிமுறைக்கு சவால் விடும், ஒரு சோசலிச, மற்றும் போரெதிர்ப்பு பிரச்சாரத்திற்கு எதிரான அரசியல் ஒருசார்புத்தன்மையின் வெளிப்பாடுதான் இது. இதன் விளைவு ஜனநாயக, குடியரசுக் கட்சியினருக்கு ஒரு மாற்றுக் காண வேண்டும் என்று மாநிலம் முழுவதும் மனுக்களில் கையெழுத்திட்ட ஆயிரக்கணக்கான ஓகியோ வாக்காளர்கள் அனைவரும் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறார்கள்.

SEP இடம், அரசுத்துறை செயலகத்தின் அலுவலகம், கட்சியின் வேட்பாளர்கள் வாக்குச்சீட்டுப் பதிவிற்கு தகுதி பெறவில்லை என்று தெரிவிக்கவில்லை. நம்முடைய பிரதிநிதி மனுவின் நிலைபற்றித் தொலைபேசி மூலம் மறுநாள் கேட்டபோதுதான் இத்தகவல் அறியப்பட்டது. இதன் பின்னர், வார இறுதியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு -----பரிசீலிக்கப்பட்ட மனுக்களின் பிரதிகளையும், வாக்காளர் பதிவுச்சான்றுகளையும் 60 மாவட்ட உட்பிரிவுகளில் இருந்து பெறுவதற்கும், கிட்டத்தட்ட 4,200 தகுதியற்றதாக்கப்பட்ட கையெழுத்துக்களைப் பரிசீலனை செய்யவும், மீண்டும் அவற்றை பதிவிற்குட்படுத்தவும், எமக்கு ஆறு நாட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய எழுத்துச் சோதனைப் பணி செப்டம்பர் 15, புதன் மாலை 5 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

SEP ஆதரவாளர்கள் கையெழுத்துக்களை மறுபரிசீலனை செய்யும் பணியைத் தொடங்கி விட்டனர், செல்லாத கையெழுத்துக்கள் என்று கூறப்பட்டவற்றில் ஏற்கனவே 1,000 கையெழுத்துக்கள் ஓகியோ மாநிலத்தின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதற்கிடையில் புதன் மாலை 5 மணி என்ற இறுதி கெடுவிற்குள், மொத்தமாக 5,000-க்கும் மேலான கையெழுத்துக்களை கொண்டு வர வேண்டியுள்ளதை எந்த வித சந்தேகமில்லாமல் SEP அடையாளங்கண்டிருந்தது.

எவ்வாறாயினும், ஓகியோ மாநில அரசாங்கம் இந்த உண்மையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புவுதற்கு இடம் இல்லை. தேர்தல் குழுவோ அல்லது அரசுத்துறை செயலக கென்னத் பிளாக்வெல்லோ, இயற்றியுள்ள விதிகளுக்கு எதிராக, முறையான வகையில், மனுக்கள் கொடுத்தவர்கள், பொய்யென நிரூபிக்க சவால் செய்ய வழியில்லை. SEP-க்கு ஒரு ''சாதகமான" என்ற முறையில் அரசுத்துறை செயலகத்தின் ஒரு பரிசீலனைக் குழு SEP அளித்துள்ள தகுதியற்ற கையெழுத்துக்களை ஏற்க, ஆய்வு செய்ய ஏற்பாடு செய்வார் என்று பிளாக்வெல் அலுவலகத்தில் இருந்த பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஏற்கனவே SEP சேகரித்திருந்த முறையான கையெழுத்துக்கள் ஒருதலைப்பட்சமாக நிராகரிக்கப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகளை தீவிரப் பரிசீலனைக்கு உட்படுத்துவது என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு நிர்வாக அல்லது நீதிக் குழு விசாரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. .

சவாலிடப்பட்டுள்ள கையெழுத்துக்களை மறு ஆய்வு செய்யும் பணி, மாநில, உள்ளூர் தேர்தல் அதிகாரிகளுடைய செயற்பாடுகளால் இன்னும் கூடுதலான வகையில் இடர்ப்பாடுகளுக்கு காரணமாகியுள்ளன.

மாவட்டப் பதிவாளர்கள் ஒவ்வொரு கையெழுத்தையும் நிராகரித்தற்கான காரணம் என்று கூறப்படுபவற்றைக் குறித்துள்ள நூற்றுக்கணக்கான மனுத்தாள்களின் நகல்களை அரசுத்துறை செயலர் அலுவலகம் குறியிட்டுக் கொடுத்துள்ளது; NR என்றால் பதிவு செய்யப்பட வில்லை, NRA என்றால் அந்த விலாசத்தில் பதிவு செய்யப்படவில்லை, NG என்றால் உண்மையில்லாத மனு, ILL என்றால் சரியாகப் புரியாத கையெழுத்து, என்றெல்லாம் குறிப்புக்கள் கொடுத்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ன. டசின் கணக்கான தாள்களில் நகல்கள் கிழிக்கப்பட்டுள்ள விதத்தில் SEP ஆதரவாளர்கள் இந்தக் குறிப்புக்களைப் பற்றிச் சரியாகப் படிக்கவும் அவற்றில் உண்மையை ஆய்வு செய்யவும் முடியாமல் இருந்தது.

மாவட்டப் பதிவாளர்கள் கொண்டுள்ள பட்டியலில் ஏராளமான பிழைகள், பிழையான தகவல்கள், எழுத்துப் பிழைகள், பல இடங்களில் பெயர்கள் போன்றவை விடுபட்டிருத்தல் என்றெல்லாம் இருக்கின்றன. இந்தத் தவறுகள் அனைத்தும் ஒரு பதிவான வாக்காளரின் கையெழுத்தை செல்லுபடியாகாது என்று தள்ளிவிடுவதற்குத் துணையாக நிற்கக்கூடும்.

மாவட்டப் பதிவாளர்கள் கொண்டுள்ள பட்டியல்கள் காலம் கடந்தவையாவும் உள்ளன. சில உட்பிரிவுகளின் பதிவுப்பட்டியல்கள் மார்ச் மாதத்தில் இருந்து தேதிவாரியாகச் சரி செய்யப்படவில்லை. கூடுதலான நடப்பில் இருப்பவை ஜூலை மாதமே முடிக்கப்பட்டு விட்டன, அப்பொழுதுதான் SEP இன் கையெழுத்து சேகரிக்கும் பணி தொடங்கியிருந்தது. பல்லாயிரக் கணக்கான வாக்காளர்கள் மனு சரி பார்த்தல் என்ற கோணத்தில் இத்தேதிக்குப் பிறகு பதிவு செய்திருந்தால், அவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை என்று கருதப்படும் நிலையில் உள்ளனர்.

அரசுத்துறை செயலர் கொடுத்துள்ள விதி முறைகளில் ஒன்றை கவுண்டி மனு சோதிப்பவர்கள் தெளிவாக பின்பற்றவில்லை, அதன்படி ஒரு கையெழுத்து புரிந்துகொள்ள முடியாதது என்றோ, பெயரோ, விலாசமோ சரியாக விளங்கவில்லை என்றுதான் கொள்ளமுடியும். மாறாக, கையயெழுத்து சரியில்லை என்று விலாசம் தெளிவாக இருந்தாலும், அது வாக்காளரை அடையாளம் கண்டுகொள்ளவும், அவர்கள் பதிவு செய்ததை உறுதி செய்ய முடியும் என்றாலும் தள்ளுபடியாகியுள்ளன; SEP ஆதரவாளர்கள் பின்னர் இவ்வழியில்தான் அடையாளம் கண்டனர்.

Trumbull கவுண்டி உட்பிரிவில் வறிய தொழிற்துறை நகரமான வாரென் நகரம் உள்ளது, இதன் அதிகாரிகள் கூட்டாட்சி நிர்வாக வகையில் உட்பிரிவின் பதிவுப் பட்டியலைத் தயாரிக்கவும் இல்லை, online-ல் அது கிடைக்குமாறும் செய்யவில்லை; மாறாக SEP பிரதிநிதி ஒருவர் வாரன் நகருக்கு வந்து கணினி குறுந்தகட்டை எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இந்த உட்பிரிவு கையெழுத்து சரிபார்த்தலில் மோசமான நிலையைக் கொண்டுள்ளது, SEP மனுவில் கையெழுத்திட்டவர்களில் 40 சதவிகித்தினருக்கும் கீழான எண்ணிக்கையில்தான் வாக்குப் பதிவு முறையைச் செய்துள்ளனர் என்று கூறுகிறது.

மொத்தத்தில் உட்பிரிவு அதிகாரிகள் கையெழுத்துப் பரிசீலனை செய்யும் முறைகள் மனுக்களை குப்பைத் தொட்டியில் போடும் வகையாகத்தான் உள்ளன என்று விவரிக்கலாம். இதனுடைய நிலைப்பாடே அற்ப புத்தித்தனமான, ஒருதலைப்பட்சமான விதிமுறைகளைப் பயன்படுத்தி 8,000 ஓகியோ வாக்காளர்கள் தெளிவாக வெளியிட்டுள்ள விருப்பத்தை ஏமாற்றத்திற்குட்படுத்துவதாக உள்ளது. SEP ஆதரவாளர்கள் மீண்டும் அனைத்து சோதனைக்குட்பட்ட கையெழுத்துக்களையும் மறுபடி பிரச்சாரத்திற்குட்படுத்திய முதல் பெரிய நகர்ப்புற உட்பிரிவு Cuyahoga (Cleveland) என்பது குறிப்பிடத்தக்கது.

Cuyahoga உட்பிரிவில் SEP 1,142 கையெழுத்துக்களைச் சேகரித்தது, இங்கு வாக்காளர் பதிவு விகிதம் 82 சதவிகிதம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதாவது கிட்டத்தட்ட சேகரிக்கப்பட்டிருந்தவற்றில் 900 வாக்குகளுக்கு மேல் பிழையற்றவை எனக் கொள்ளப்படலாம். மாறாக, உட்பிரிவின் அதிகாரிகள் 598 கையெழுத்துக்கள்தாம் சரியானவை என்றும் 544 செல்லுபடியாதாகதவை என்று குறித்துள்ளனர். SEP ஆதரவாளர்கள் இந்த 544-யும் சரிபார்த்துக் குறைந்தது 225 ஆவது செல்லுபடியாகக் கூடியவை என்றும் இதனால் செல்லுபடியாகும் சதவிகிதம் 72 என்றும் மொத்த பதிவு விகிதத்தை விட இதுக் குறைவு என்றும் நிரூபிக்க முடிந்தது.

போலிக் காரணம் காட்டித் தள்ளுபடி செய்யப்பட்ட 225 கையெழுத்துக்களில், 58 "உண்மையானவை அல்ல", அவர்களுடைய பெயர், கையெழுத்தாக இல்லாமல், பெரிய எழுத்தில் இருந்திருந்தன, 112 மொத்தப் பிழைகள் எனப்பட்டன, கையெழுத்துக்கள் "பதிவு செய்யப்படவில்லை" என்பதான, உட்பிரிவின் ஆதாரங்களே நபர்கள் மனுவில் கொடுத்துள்ள முகவரியில் இருக்கின்றன என்று தெரிவிக்கின்றன, இன்னும் 55 பேர் "குறிப்பிட்ட விலாசத்தில் இல்லை" என்று கூறப்பட்டபோதிலும், அதே நபர் அதே பிரிவில் வேறு பகுதியில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார், சில சமயம் 100, 200 அடிகள் தள்ளிய விலாசத்திற்குத்தான் சென்றுள்ளனர்.

எந்த மிகச்சிறிய தகவலும் தகுதி நீக்கம் செய்யச் சிறியது அல்ல என்ற வகையில் இவர்கள் செயல்கள் உள்ளன சில உதாரணங்களாவன:

*Diane C. Jones தெளிவாகப் புரியும் கையெழுத்தைத்தான் போட்டுள்ளார், அவருடைய முகவரியை 308 Eddy சாலை, க்ளீவ்லாந்து என்றும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய குறிப்பில் "விலாசத்தில் பதிவு செய்யப்படவில்லை" என்று உள்ளது, உண்மையில் அவருடைய விலாசம் 380 எட்டி சாலைதான்.

* Willie Griffin, கிளீவ்லாந்தைச் சேர்ந்தவர் தன்னுடைய விலாசத்தை 14247 Trisett என்று 14247 Triskett என்று எழுதியுள்ளார்: (ஒரு K ஐ விட்டுவிட்டார்), பதிவு நீங்கப்பட்டது.

* ஓர் ஆசிய அமெரிக்க வாக்காளர் N. Olmsted புறநகரின் மனுவில் Xiong Fuqin என்று கையெழுத்திட்டார்: இவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் Fuqin Xiong என்று இருந்ததால் இது பதிவு செய்யப்படவில்லை எனத் தள்ளுபடி செய்யப்பட்டது.

* Chris Hansen, என்னும் தெற்கு Euclid புறநகர வாக்காளர், பதவு செய்யப்படாதவர் எனக் கூறப்பட்டுவிட்டார்: இதற்குக் காரணம் இந்த அம்மையார் மனுவில் கையெழுத்திடும்போது, "Christine" என்ற முழு முதல் பெயருக்குப் பதிலாக Chris என்று சுருக்கமாக எழுதிவிட்டார்.

* Bertha Warren என்ற க்ளீவ்லாந்தைச் சார்ந்தவர் மனுவில் பெயரின் முதல் எழுத்தான B ஐ மட்டும் எழுதி, தெருவின் பெயரையும் Hathaway என்று சுருக்கி எழுதிவிட்டதால், அவருடைய கையெழுத்து மனு "உண்மையல்ல" எனத் தள்ளப்பட்டு விட்டது.

இப்படிப் பெரிய எழுத்துக்களில் எழுதியது, முதல் எழுத்தைப் பயன்படுத்தியது, வெளிப்படையாக உள்ள எழுத்துப் பிழைகள், மாறிவிட்ட எண்கள், சுருக்கங்கள் என்ற போலிக்காரணங்களைக் காட்டி, Cuyahoga-விலும் (மாநிலம் முழுவதும் நூற்றுக் கணக்கிலும்) கையெழுத்து மனுக்கள் எக்காரணமும் இன்றித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன; பெரும்பாலான காரணங்கள் போலியாகத் தோற்றவிக்கப்பட்டவை. சரியான முறையில் போடப்பட்டுள்ள கையெழுத்துக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு கள்ளமில்லா விளக்கங்கள் ஏதும் இல்லை. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு ஓர் அரசியல் மாற்று என்ற அச்சுறுத்தலை அகற்ற அனைத்தையும் செய்யவேண்டும் என்ற அரசியல் முடிவின் விளைவுதான் இது.

டேடனில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று உள்ளூர் அதிகாரிகளின் அரசியல் அரசியல் ஒரு சார்புத்தன்மையை, குறிப்பாக ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நகர்ப்புற மாவட்டங்களில் உள்ளதை, தெளிவாக நிரூபிக்கிறது. செப்டம்பர் 2ம் தேதி, Montgomery கவுண்டித் தேர்தல் அலுவலகம் SEP இன் துணை ஜனாதிபதி வேட்பாளருடையை மகன் டேவிட் லோரன்ஸ், மனு சேகரித்தவரை அழைத்து, அவர் மனு சேகரிக்க, எழுத்துமூலச் சான்றைப் பெறவேண்டும் என்று கூறினர். இந்த நபரிடம் லோரன்ஸ் எந்தத் தகவலையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் அவருக்கு எழுத்துச் சான்று கிடைக்கும் என்று கூறினார். மாறாக, முழு மனுவையும், லோரென்ஸ் சேகரித்திருந்த 22 பெயர்களையும் அதிகாரி தள்ளுபடி செய்தார்: அதில் ஒரு குறிப்பையும் எழுதியுள்ளார்: "செல்லுபடியாகதது. மோசடித் திறன் கொண்டது. 1.50 மணிக்கு 9/2/04 அன்று போனில் அழைத்து தகவலைத் தெரிவித்துள்ளேன்" என்று.

மற்றொரு மான்ட்கொமரி உட்பிரிவு கையெழுத்துப் பரிசோதகர் ஓர் உண்மையான Kafkaesque வகையிலான மனு நிராகரிக்கும் உத்தியைக் கையாண்டார். விதிகளில் கூறப்பட்டுள்ளபடி, மனு சேகரிக்கும் சுற்றறிக்கையாளர் அந்தத் தாளில் மனுவிற்கு சேகரிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையான 17 ஐக் குறித்தார். பரிசோதகர் தாளில் "செல்லுபடியாகது; சுற்றறிக்கையாளர் எண்ணிக்கையை தவறாக எழுதியுள்ளார்." இவர் 18, 19 ம் வரிகளில், இவை வெற்றிடங்கள், குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வாறு எழுதியுள்ளார். அதாவது முழு மனு, 17 கையெழுத்துக்கள் கொண்டது நீக்கப்பட்டது; ஏனென்றால் சுற்றறிக்கையாளர் வெற்று வரிகளை சரியான கையெழுத்து என்று மதிப்பிடவில்லை!

பழுது பார்க்க முடியாத அளவிற்கு அழுகிப்போய்விட்ட ஓர் அரசியல் முறையின் அடையாளம்தான் இத்தகைய முறைகளைக் கையாளுதல் ஆகும். வாக்காளர் பதிவிற்கான வகை, வாக்குச்சீட்டு தகுதிக்கு மனுச்செய்தல் போன்றவை முடிவு எடுப்பதில் பரந்த அளவு மக்கள் பங்குபெறும் வகையில் இல்லாமல், அமெரிக்காவின் அரசியல் இரு வலதுசாரி பெரு வணிகக் கட்சிகளும் பெரு வணிக நலன்களுக்கு இணங்கியுள்ள அமைப்பிற்குள் அடங்கி இருக்கவேண்டும் என்பதையும், அதே அளவிற்கு உழைக்கும் மக்களுடைய நலன்களுக்கு விரோதமாக இருப்பதையும் வலியுறுத்தும் வகையில்தான் உள்ளன.

வெளிப்படையாக ஒருதலைப்பட்சமாகவும், இழிவான முறையில் ஜனநாயக உரிமைகளைத் தாக்கும் முறைகளும் ஓகியாவில் இப்பொழுது நடைபெறுவதுபோல் இருக்கும் தன்மை, அரசியல் முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி மக்களுடைய சீற்றத்திற்கு எரியூட்டுகின்றது. இது ஏற்கனவே ஓகியோ அரசுத்துறை செயலகத்தின் அலுவலகத்தில் குவியும் மின்னஞசல், கடிதங்கள் மூலம் எதிர்ப்பைப் பிரதிபலித்துள்ளன.

SEP, WSWS வாசகர்கள், மற்றும் ஜனநாயக உரிமைகளின் ஆதரவாளர்கள் அனைவரையும் ஓகியோ தேர்தல் குழு தன்னுடைய தாக்குதலை நிறுத்தி, பில் வான் ஒகென், மற்றும் ஜிம் லோரென்ஸ் மாநில வாக்குச்சீட்டில் தகுதி பெறுமாறு செய்திடக் கோரவேண்டும் என்று அழைப்பு விடுகிறது. உங்களுடைய மின்னஞ்சல், எதிர்ப்புத் தெரிவிப்பவை கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பப் படவேண்டும்:

Kenneth Blackwell
Ohio Secretary of State
www.sos.state.oh.us

Please send copies to editor@wsws.org

Top of page