World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Report highlights costs of occupation for Israeli society

ஆக்கிரமிப்பால் இஸ்ரேலிய சமுதாயத்திற்கு ஏற்பட்ட செலவை எடுத்துக்காட்டும் அறிக்கை

By Rick Kelly
12 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

டெல் அவிவை அடிப்படையாகக் கொண்ட அத்வா மையம் ஒரு புதிய அறிக்கையில் பாலஸ்தீனிய எல்லைகளை ஆக்கிரமித்ததால் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பாரியளவு செலவினங்களை விவரித்திருக்கிறது. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் மேற்கு கரையிலும், காசா பகுதியிலும் குடியிருப்புக்களை விஸ்தரிப்பதற்கும், பாலஸ்தீன எதிர்ப்பை ஒடுக்குவதற்கும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளன. இந்தச் செலவினங்கள் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் முதுகில் வெளிப்படையாகவே சுமத்திவிட்டார்கள், அவர்கள் தங்களது ஊதியம், வாழ்க்கைத்தரம் மற்றும் சமூக நலன்களின் மீதான தொடர்ந்த தாக்குதல்களை காண்கின்றனர்.

அந்த அறிக்கை, ஆக்கிரமிப்பின் விலை: இஸ்ரேலிய சமுதாயத்திற்கு ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட செலவு என்ற தலைப்பில் அத்வா மையத்தை சேர்ந்த Shlomo Swirski எழுதியுள்ளார். அதன் ஆசிரியர்1967-ல் பாலஸ்தீனிய எல்லைகளை இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டதை தொடர்ந்து ஏற்பட்ட செலவினங்கள் பற்றிய பல்வேறு பொருளாதார மற்றும் புள்ளி விவர அறிக்கைகளை நுணுக்கமாக ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.

"அனைவருக்கும் தெரிந்திருப்பதைப்போல் பாலஸ்தீனிய மக்கள் மிக அதிகமான விலையை தரவேண்டியிருக்கிறது" என்று ஒப்புக்கொண்டுள்ள Swirski, "ஆனால் இந்த உண்மை இஸ்ரேலியர் தருகின்ற விலையை எந்த வகையிலும் குறைந்ததாகவோ அல்லது முக்கியத்துவம் எதுவும் குறைந்து விட்டதாகவோ ஆக்கிவிடவில்லை'' உறுதிப்படுத்தினார்.

இஸ்ரேல் இராணுவம் இரண்டு பிரிவுகளை, 7 பிரிகேடுகளுடன் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் நிரந்தரமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேலிய இராணுவ பட்ஜெட் என்றைக்கும் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை என்பதால் படைகள் பணியாற்றுவதற்கான துல்லியமான செலவு பற்றி தெரியாது. என்றாலும், "எல்லைகளின் சம்பவங்கள்" தொடர்பான சிறப்பு செலவினங்களை பட்ஜெட் வெளியிடுகிறது. இந்த செலவினங்கள் 1987-க்கும் 2005-க்குமிடையில் மொத்தம் 6.5 பில்லியன் டாலர்களாகும். பாலஸ்தீனிய சிறை கைதிகளுக்கான எல்லைக் காவலர்கள் மற்றும் இஸ்ரேல் போலீசாருக்காக மில்லியன் கணக்கான டாலர்களும் செலவிடப்பட்டிருக்கின்றன" என்று அத்வா அறிக்கை குறிப்பிட்டது.

சியோனிச குடியிருப்புகளின் வளர்ச்சிகளில்---மேற்குக் கரையிலும், காசாவிலும் இஸ்ரேல் முதலீட்டின் மொத்த வளங்களும் பிரிக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பின் இராணுவ செலவினங்களோடு பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன. இராணுவச் செலவினத்தை போல், இந்த குடியிருப்புக்களுக்கான செலவினையும் கணக்கிட முடியாது, ஏனென்றால் பொது நிதி வழங்குவதை எப்போதுமே இஸ்ரேல் நிர்வாகங்கள் மறைத்துவிடுகின்றன. இஸ்ரேலுக்குள் செலவிடப்படுவன பட்ஜெட் அறிக்கைகளிலும், இரகசிய இராணுவ பட்ஜெட்டின் ஒரு பகுதியிலும் மறைக்கப்பட்டு விடுகின்றன.

சென்ற ஆண்டு, Haaretz செய்தி பத்திரிக்கை 1967-க்கும் 2003-க்கும் இடையிலான அரசாங்கத்தின் உபரி செலவினங்களை மதிப்பீடு செய்திருக்கிறது-----அதாவது அந்த குடியிருப்புக்கள் இஸ்ரேலுக்குள் அமைக்கப்பட்டிருக்குமானால் ஆகும் செலவினங்களுக்கும் மேலாக செலவிடப்பட்ட தொகையாகும் ---- மொத்தம் 10.5 பில்லியன் டாலர்கள் ஆகும். இது ஒரு குறைந்த மதிப்பீடு இதில் குடியேறியவர்களுக்கான வரிச்சலுகைகள் உயர்ந்த சுகாதார மற்றும் கல்வி வசதிகள் உட்பட வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் சேர்க்கப்படவில்லை.

1967-க்கும் 1987-க்கும் இடைப்பட்ட காலத்தை "ஒரு பேரத்தில் நடந்த ஆக்கிரமிப்பு" என்று அத்வா மையத்தின் அறிக்கை வர்ணித்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் அமைப்பு ரீதியிலான பாலஸ்தீன மக்களது எதிர்ப்பு குறைவாக இருப்பதால் அந்தப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவச் செலவினங்கள் குறைந்த அளவிற்கே உள்ளன. இந்த காலகட்டத்தில் ஆக்கிரமிப்பினால் இஸ்ரேல் பொருளாதாரம் இலாபம் அடைந்துள்ளது, பாலஸ்தீனிய தொழிலாளர்களுக்கு அவர்களின் இஸ்ரேலிய சரிநிகரானவர்களைவிட 35 முதல் 50 சதவீதம் வரை குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளை இஸ்ரேலிய ஏற்றுமதிகளுக்கு கீழ்படிந்த சந்தையாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது, 1980-களில் பாலஸ்தீனிய பொருட்களைவிட இஸ்ரேல் பொருட்களை அமெரிக்கா மட்டுமே அதிகமாக வாங்கியிருக்கிறது.

1987-ல் முதலாவது இன்டிபாடா, அல்லது பாலஸ்தீன எழுச்சி வெடித்து சிதறிய பின்னரே முற்றுகையிடப்பட்ட ஆக்கிரமிப்பு எல்லைகளில் இஸ்ரேலிய இராணுவ செலவினங்கள் அதிகரித்தன. இந்த காலகட்டத்தில் குடியிருப்புக்களும் மிக வேகமாக அபிவிருத்தி அடைந்தன. 1977-ல் 6000 குடியிருப்போர் மட்டுமே இருந்தனர், 1992-ல் இவர்களது எண்ணிக்கை 107,000 ஆயிற்று, தற்போது இது 200,000திற்கு மேல் அதிகரித்துவிட்டது.

2000த்தில் தொடங்கிய இரண்டாவது இன்டிபாடா, இஸ்ரேலிய பொருளாதாரத்தில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் உயர் தொழில்நுட்ப குமிழிகள் வீழ்ச்சியடைந்ததற்கு இணையாக இந்த எழுச்சி தோன்றியது, இதனால் இஸ்ரேலிய கம்பியூட்டர் மற்றும் தொழில்நுட்ப தொழிற்துறைகள் பாதித்தன. 2000-ல் 8 சதவீதம் உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2001-ல் 0.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது, வெளிநாட்டு முதலீடுகள் வற்றிவிட்டன. இஸ்ரேல் வரலாற்றில் நீண்டகால பின்னடைவிற்கு பின்னர், இப்போதுதான் சற்று முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது, இருந்தாலும் வேலையில்லாதோர் தொகை 10 சதவீதம் மேற்பட்டதாகவே உள்ளது.

ஏரியல் ஷரோன் தலைமையிலான லிக்குட் அரசாங்கம் 2001 பெப்ரவரியில் பதவிக்கு வந்தது, சென்ற டிசம்பர் முதல் தொழிற்கட்சியோடு கூட்டணி சேர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் நிர்வாகம் சமூக சேவைகள் மற்றும் பொது சேவைக்கான செலவினங்களை வெட்டியது, அதே நேரத்தில் பெருநிறுவனங்கள் மற்றும் உயர் வருமானக்காரர்களின் வரிகளை குறைத்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, எட்டு சுற்றுக்கள் பட்ஜெட் வெட்டுக்களால் அரசாங்க செலவினம் ஏறத்தாழ 14 பில்லியன் டாலர்கள் குறைந்துவிட்டன. குறைந்த பட்சம் 1980களின் நடுப்பகுதியிலிருந்து தொழிற்கட்சி உட்பட அனைத்து பிரதான இஸ்ரேலிய அரசியல் கட்சிகளும் வலதுசாரி மற்றும் நலன்புரி பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போக்கில் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. என்றாலும், இந்தக் காலகட்டத்தில் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு செலவினங்களை வெட்டியது, சரோன் அரசாங்கம் இரண்டாவது இன்டிபாடாவினால் உருவான அவசர நிலைமைகளை சுரண்டிக்கொண்டதால் சாத்தியமானது. Swirski குறிப்பிட்டிருப்பதை போல், "தனது கருத்தியல் கோட்பாடுகளை செயல்படுத்துவதற்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதைப்போல், நினைத்து ஷரோன் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அமைத்து கொண்டதாக சொல்லிவிட முடியும்".

"தேசிய ஐக்கியம்'' பற்றி மோசடியான அழைப்புக்களை ஷரோன் விடுத்தார் மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் வெட்டுக்கள் அவசியமான நடவடிக்கை என்று உருவாக்கிக் காட்டினார். அவரது செலவீன வெட்டு முதல்திட்டம் "பொருளாதார தற்காப்பு கேடயம்" என்று முத்திரையிடப்பட்டு, 2002 மார்ச்-ஏப்ரலில் இஸ்ரேல் இராணுவம் மேற்குக்கரையில் நடத்திய தாக்குதலை குறிப்பதற்கு சூட்டப்பட்ட பெயரில் திட்டமிட்டே எதிரொலிக்கப்பட்டது.

சுகாதார மற்றும் கல்விச் செலவினங்கள் வெட்டப்பட்டன. ஓய்வூதியங்களும் நலன்புரி உதவித் தொகைகளும் நான்காண்டுகளுக்கு முடக்கி வைக்கப்பட்டன, சராசரி ஊதியத்தை விட எதிர்கால ஊதிய உயர்வு பணவீக்கத்தோடு தொடர்புபடுத்தப்பட்டது, இதன் விளைவாக பலரது ஊதியம் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. அதேபோன்று வருமான ஆதரவும் மற்றும் குடும்பத்திற்கான பட்டுவாடாவும் வெட்டப்பட்டது.

ஓய்வூதியம் பெறும் வயது ஆண்களுக்கு 65-லிருந்து 67 ஆகவும், பெண்களுக்கு 60-லிருந்து 67 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஓய்வூதியப்படிகள் வெட்டப்பட்டன, ஓய்வூதியநிதி தனியார் உடைமையாக்கப்பட்டது. தொழிலாளர்களின் முதலீடு பாதுகாப்பான அரசாங்க கடன் பத்திரங்களிலிருந்து நிதிச் சந்தைகளுக்கு திருப்பி விடப்பட்டது. "அத்தகைய அதிதீவிரமான நடவடிக்கைகளுக்கான எடுத்துக்காட்டுக்களை மெக்சிகோ அல்லது சிலி நாட்டில் பினோசேயின் சர்வாதிகார ஆட்சியில்தான் காணமுடியும்" என்று அத்வா மையத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த நடவடிக்கைகள் இஸ்ரேலின் வறுமை விகிதத்தை அதிகரித்துவிட்டதில் காணப்படுகிறது. 2003-ல், அனைத்து குடும்பங்களில் 19.2 சதவீதமும், குழந்தைகளில் 29.4 சதவீதமும் வறுமையில் வாழ்ந்தன" ஏழை மக்களின் எண்ணிக்கை அவர்களது விகிதாச்சாரம் ஆகியவை அதிகரித்துவிட்டது மட்டுமல்லாமல், வறுமையின் தன்மையே மோசமடைந்துவிட்டது. 2000-தில் இஸ்ரேல் ஏழைகளின் சராசரி வருமானம் வறுமைக்கோட்டிற்கு கீழே 25.6 சதவீதம் சராசரியாக வீழ்ச்சியடைந்திருந்தது. 2003-ல் இது 30.2 சதவீதமாக உயர்ந்து விட்டது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

தொடர்ந்து வந்த இஸ்ரேலிய அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலுக்குள் ஏற்றதாழ்வுகள் பெருமளவிற்கு பெருகிவிட்டன----இந்தப் போக்கு ஷரோன் அரசாங்கத்தின் கீழ் அதிகரித்துவிட்டது. "நாட்டின் மத்திய தர வர்க்க இல்லங்கள் 1998-ல் 3-ல் ஒரு பகுதியாக இருந்தது, 2002-ல் 28 சதவீதமாக குறைந்து விட்டது. மத்தியதர வர்க்கத்தின் வருமானம் 1988-ல் 28 சதவீதமாக இருந்தது 2002-ல் 21 சதவீதமாக வீழ்ச்சியடைந்து விட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நாட்டின் செல்வம் ஒரு சிறுபான்மையினரின் கையில் குவிந்து கொண்டு வருகிறது, மத்தியதர வர்க்கம் சுருங்கிக் கொண்டு வருகிறது. மொத்த வருவாயில் மிகக் குறைந்த அளவிற்கு மற்றும் குறைந்து கொண்டிருக்கின்ற வருவாயை பெறுகின்ற குறைந்த வருவாய்காரர்களின் அளவு அதிகரித்து வருகிறது" என்று Swirski குறிப்பிட்டிருக்கிறார்.

இரண்டு மிக உயர்நத வருமான வரி செலுத்துகின்ற தரப்பினரின் விளிம்புநிலை வரிவிதிப்பு விகிதம் 60 சதவீதத்திலிருந்து 47-49 சதவீத அளவிற்கு குறைக்கப்படும். பெரு நிறுவன வரிவிதிப்பு அடுத்த மூன்றாண்டுகளுக்கு மேலாக 36 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்படும். "இன்டிபாடாவின் விளைவுகளுக்கு ஆகும் செலவின் சுமையை இஸ்ரேலின் மிகப்பெரும் பணக்காரர்களின் தோளில் இருந்து இறக்கிவிட்டு அவர்களுக்கு நிவாரணம் தருவதுதான், வரிகுறைப்புக்களின் உண்மையான முக்கியத்துவமாகும்" என்று அத்வா மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேல் அரசாங்க கடன்பத்திரங்களுக்கு அமெரிக்கா உத்திரவாதம் அளித்திருப்பதால்தான் இத்தகைய வரிவெட்டுக்கள் சாத்தியமாகிறது. 2003-ல் இத்தகைய ஆதரவும் ஷரோன் அரசிற்கு 9 பில்லியன் டாலர் மதிப்பிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணத்திற்கு பதிலுதவியாக ஷரோன் தனது பட்ஜெட் வெட்டுக்களை நிலைநாட்டுவதாகவும் பொதுத்துறை ஊதியங்களை மேலும் குறைப்பதாகவும் முக்கிய தொழில்துறைகள் பலவற்றை தனியார் மயமாக்குவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

"இஸ்ரேல் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதத்திற்கும் பாலஸ்தீனிய எல்லைப்பகுதிகளுக்குள் ஏற்பட்டுள்ள சேதத்திற்கும் இடையில் வேறுபடுத்தி பார்ப்பது பெரும்பாலும் செயற்கையானது. பல ஆண்டுகள் ஆக்கிரமிப்பின் கீழ் இரண்டு பொருளாதாரங்களுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் உருவாகிவிட்டதால் ஒரு பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மற்றொரு பொருளாதாரம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது" என்று Swirski தனது அறிக்கையை முடிக்கிறார்.

இந்த ஆய்வு ஒரு இடதுசாரி சியோனிச முன்னோக்கில் நடத்தப்பட்டது, மற்றும் ஒரு உடன்பாட்டு அடிப்படையில் இரு அரசுகள் உருவாக வேண்டும் என்ற வாதங்களை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கிறது. என்றாலும் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில் ஆராயும் போது தோன்றுவது என்னவென்றால், லிக்குட் தொழிற்கட்சி அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ சியோனிச அரசிற்கே எதிராக பாலஸ்தீன வெகுஜனங்களும் இஸ்ரேலிய தொழிலாளர் வர்க்கமும் ஐக்கியப்பட்டு ஒரு போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது.

Top of page