World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

After Terri Schiavo's death: new threats against democratic and constitutional rights

டெர்ரி ஷியாவோவின் மரணத்திற்கு பின்னர்: ஜனநாயக, அரசியலமைப்பு ரீதியான உரிமைகளுக்கு எதிராக புதிய அச்சுறுத்தல்கள்

By David Walsh
23 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

டெர்ரி ஷியாவோ வழக்கு பற்றிய தகவல்களில், அரசியல், செய்தி ஊடகம் ஆகியவற்றின் அயோக்கியத்தனமும், பாசாங்குத்தனமும், பொய்யுரைகளும், துரதிருஷ்டமான பெண்மணி, தன் கணவரின் தோள்களில் வியாழன்று காலை இறந்த பின்னரும்கூட நின்றுவிடவில்லை.

டெக்சாஸ் மாநிலத்தில் ஆளுனராக இருந்தபோது சிறிதும் அக்கறையின்றி 152 பேரை தூக்கிலிட்டதற்கு தலைமை தாங்கியவரும், மற்றும் ஈராக்கியர்களில் பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடித்த கறையை தன் கைகளில் கொண்டிருக்கும், ஜோர்ஜ் டபுள்யூ புஷ், ஷியாவோவின் மரணத்திற்கு பின்னர் "அனைத்து அமெரிக்கர்களும் வரவேற்கப்பட்டு, மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படும் ஒரு பண்பாடு நிறைந்த வாழ்வை கட்டமைப்பதற்காக, அதிலும் குறிப்பாக பிறருடைய தயவில் வாழும் மக்களுக்கு" தன்னுடைய பணியை தொடர இருப்பதாக உறுதி கொடுத்துள்ளார்.

புஷ் மேலும் கூறியதாவது: "நாகரிகத்தின் சாராம்சமே வலிமையுடையவர்கள், வலிமையற்றவர்களை காக்கும் கடமையை கொண்டுள்ளவர்கள் என்பதுதான்". $60 பில்லியன் பணத்தை அடுத்த பத்து ஆண்டுகளில் மருத்துவ பாதுகாப்பிற்காக செலவழிப்பதில் இருந்து குறைத்து, இத்திட்டத்தால் பயன்பெறும் 50 மில்லியன் வயதானவர்கள், வறியவர்கள், ஊனமுற்றவர்கள் என்று மக்கட்தொகையின் மிகப்பாதுகாப்பற்ற பிரிவினர் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்த ஏற்பாடுகளை செய்யும் நிர்வாகத்தின் தலைவரிடம் இருந்து இச்சொற்கள் வந்துள்ளன.

அமெரிக்காவில் ஜனநாயக நெறிகள் உடைந்துவிடும் தன்மை வியாழக் கிழமையன்று டெக்சாஸ் குடியரசுக் கட்சியை சேர்ந்த, மன்றத்தின் பெரும்பான்மைக் கட்சித் தலைவரான டாம் டிலேயினால் தீவிரமாக அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. ஷியாவோவின் உணவு செலுத்தும் குழாய்கள் மறுபடியும் பொருத்தப்படவேண்டும் என்று உத்திரவிட மறுத்த நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையில் அறிவித்தார்: "இந்த இழப்பிற்குக் காரணம், எவரை மிக அதிகமாக பாதுகாக்க வேண்டுமோ, அவர்களை பாதுகாப்பதற்கு நம்முடைய சட்ட முறை பாதுகாக்கவில்லை; இந்த நிலை மாறும். தங்களுடைய நடத்தைக்காக இதற்குப் பொறுப்பானவர்கள் விடையிறுக்கும் காலம் வரும்; ஆனால் அது இன்றல்ல." அட்லான்டாவில் ஒரு நீதிபதி சுடப்பட்ட நிகழ்வு, மற்றும் ஒரு நீதிபதியின் குடும்பம் ஷிகாகோவில் கொலையுண்டது ஆகியவற்றிற்குப் பின் வந்துள்ள இத்தகைய டிலேயின் கருத்துக்கள் வன்முறையை தூண்டுவது வெளிப்படையாக இருப்பதாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

அமெரிக்க அரசியலமைப்பின் கையடக்க பதிப்பு ஒன்றை தன்னுடைய பையில் இருந்து எடுத்த டிலே, நிருபர்களிடம் கூறினார்: "காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி இந்த வழக்கை புதிதாக விசாரிக்க அதிகாரவரம்பு கொடுத்து உண்மையை ஆராயும்படி கூறிய பின்னரும், அவர்களை இழிவுடன் நடத்தி இந்த திமிர்படித்த, கட்டுப்பாட்டில் இல்லாத, பொறுப்புக் கூறா நிலையில் இருக்கும் நீதித்துறையை கவனித்துக் கொள்ளுவோம்." ஷியாவோ வழக்கில் தொடர்புடைய நீதிபதிகள் மீது பெரிய குற்ற விசாரணை நடத்தும் முயற்சிக்கு ஆதரவு கொடுப்பாரா எனக் கேட்கப்பட்டதற்கு, டிலே விடையிறுத்தார்: "அதைப் பற்றி கவனிப்பதற்கு நிறைய நேரம் உள்ளது."

இந்த வர்ணனைகள் உண்மையிலேயே பெரும் பீதியை ஜனநாயகக் கட்சி செனட் உறுப்பினரான எட்வர்ட் கென்னடிக்கு அளித்தன; அவருடைய தீப்பொறி பறக்கும் கருத்துக்களுக்காக டிலேயே அவர் சாடினார். இந்த அறிக்கைகள் "பொறுப்பற்றவை, இழிவிற்குட்பட்டவை" என்று கென்னடி கூறினார். "உணர்வுகள் மிகுந்த நிற்கும் நிலையில், மிஸ்டர் டிலே தான் எவருக்கு எதிராகவும் வன்முறையை போதிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த வழக்கில் பலரும் ஏற்கனவே உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் மன்றத்தின் இரண்டாம் மூத்த உறுப்பினர், அரசியல் படுகொலைகளில் இரண்டு சகோதரர்களை இழந்தவர், மன்றத்தின் பெரும்பான்மை தலைவரை நீதித்துறை உறுப்பினர்களுக்கு எதிராக வெளிப்படையான வன்முறையை தூண்டாமல் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, உண்மையிலேயே மிக அசாதாரணமான நிலையைத்தான் குறிக்கிறது.

டிலேயின் கருத்துக்கள், ஷியாவோவின் வழக்கை தங்களுடைய வழக்கு போல எடுத்துக் கொண்டுள்ள பல சமய வெறியர்களின் சொற்களிலும் எதிரொலித்தன. குடும்பத்தின்மீது கவனம் செலுத்து (Focus on the Family) என்ற அமைப்பை சேர்ந்த ஜேம்ஸ் டாப்சன், "நீதிபதிகள் இந்த வழக்கில் நீதிப் பிழைக்கு மட்டும் உட்பட்டிராமல், சிந்தித்து, இதயமற்ற முறையில் ஒரு நிரபராதியான மனித உயிரை அழித்த குற்றத்தை செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார். குடும்ப ஆராய்ச்சி குழு (Family Research Council) என்ற அமைப்பை சேர்ந்த டோனி பெர்கின்ஸ் அறிவித்தார்: "இது ஒரு சோகமான, துரதிருஷ்டமான, ஆனால் தவிர்த்திருக்கக் கூடிய நிகழ்வு ஆகும்; இது அமெரிக்கர்களை நீதிமன்றத்தினால் வரும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை கொடுக்க வேண்டும். இது ஒன்றும் இனி ஏட்டளவு பிரச்சினை அல்ல; வாழ்வா சாவா என்ற பிரச்சினையாகும்."

"வருத்தத்தை கொண்டு வரும் வெறும் இறப்பு மட்டும் அல்ல இது; இது ஒரு கொலையாகும்" என்று டெர்ரி ஷியாவோவின் பெற்றோர்களுக்கு ஆலோசகராக இருக்கும் அருட்தந்தை பிராங்க் பவோனே அறிவித்தார். வாழ்க்கைக்காக பாதிரிகள் (Priests for Life) என்ற தீவிர கருக்கலைப்பு-எதிர்ப்பு குழுவின் தேசிய இயக்குனரான பவோனே மைக்கேல் ஷியாவோ பற்றி தொடர்ந்து அவதூறாகப் பேசினார். "அவருடைய இதயமற்ற கொடூரச் செயல் கடைசிக் கணம் வரை தொடர்ந்திருந்தது" என்று அவர் கூறினார். ஷியாவோவுடைய வக்கீலான ஜோர்ஜ் பெலோஸ் ஊடகங்களுக்கு "இப்பாதிரியார் விஷத்தை கக்க மிகக் கடுமையான அறிக்கைகளை மிஸ்டர் ஷியாவோ பற்றிக் கூறியிருப்பது அமைதியை தரவில்லை." என கூறியுள்ளார்.

"வாழ்க்கைக்கான நற்செய்தி (Gospelf of Life)" க்காக முற்றிலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள இருக்கும் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரிமார்கள் சங்கம் அமைக்கப் போவதாக பவோனே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு கருணை இறப்பு மற்றும் கருக்கலைப்பு இவற்றிற்கெதிராகப் பாடுபடும் என்றார் அவர். இந்தக் குழுவின் தலைமையிடம் டெக்சாசில் உள்ள அமரில்லோவில் நிறுவப்படும். Planned Parenthood of Amarillo எனப்படும் அமெரில்லாவின் திட்டமிட்டு செயல்படும் பெற்றோர்கள் என்ற அமைப்பின் மூத்த அதிகாரி, புதிய சங்கத்தின் வருவை "அச்சத்தை ஊட்டியுள்ளது" எனக் கூறியுள்ளார். திட்டமிடும் பெற்றோர்கள் அமைப்பு புதிய சங்கம் வன்முறையில் ஈடுபடக்கூடிய பயங்கரவாதிகளை ஈர்க்கக் கூடும் என்ற கவலையையும் தெரிவித்தார்.

காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மெளனம் சாதித்தனர் அல்லது அதிகம் எதையும் குறிக்காத, தவிர்க்கும் வகையிலான கருத்துக்களைத்தான் ஷியாவோவின் மரணத்தை ஒட்டித் தெரிவித்துள்ளனர். செனட்டு மன்றத்தின் சிறுபான்மை கட்சித் தலைவரான, நெவடாவைச் சேர்ந்த ஹாரி ரீட், உயிர்த்த உயில்களுக்கு ஒப்புதல் தரும் வகையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். "டெர்ரியை நேசித்தவர்களின் தனிப்பட்ட முடிவுகளுடன் தொடர்புடைய, மிகக் கடினமான நேரமாகும் இது. என்னுடைய நம்பிக்கை என்னவென்றால் இந்தச் சோக நிகழ்வு அனைத்து அமெரிக்கர்களையும் ஓர் உயிர்த்த உயிலை எழுத ஊக்குவிக்கும் என்பதுதான். வரவிருக்கும் கடினமான நாட்களில், என்னுடைய எண்ணங்களும், பிரார்த்தனைகளும், இந்த இழப்பினால் வலியை உணர்ந்துள்ளவர்கள் பால் செல்லுகின்றன." என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதிநிதிகள் மன்றத்தின் சிறுபான்மை கட்சித் தலைவரான சான் பிரான்ஸிஸ்கோவின் நான்சி பெலோசி, (இப்பொழுதுதான் மத்திய கிழக்கில் இருந்து திரும்பியவர்), சமயச் சடங்கை முதலில் அடையாளம் காட்டிவிட்டு செய்தி ஊடகத்திடம் தான் ஷியாவோவிற்காவும் பிரிந்துள்ள அவருடைய குடும்பத்திற்காகவும் ஜெருசெலத்தில் உள்ள புனித தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ததாக கூறினார். ஷியாவோ வழக்கை பயன்படுத்திக் கொள்ளுவதற்காக தனிப்பட்ட முறையில் தன்னுடைய அதிருப்பதியை டீலே, மற்றும் குடியரசுக் கட்சியினர் பால் வெளிப்படுத்துவதாகவும், அமெரிக்க மக்கள் தமது சொந்த முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

செனட்டர் ஜோன் கெர்ரி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் அல்லது செனட் உறுப்பினர் ஹிலேரி கிளின்டன் ஆகியோரிடம் இருந்து எந்தக் கருத்துக்களும் வெளிவரவில்லை. ஷியாவோவின் பெற்றோர்கள் உயிர்காக்கும் கருவிகளை அகற்றக் கூடாது என்பதற்குத் தடைவிதிக்க நீதிமன்றத்தை நாடச் சொன்ன, காங்கிரசில் இந்த முற்றிலும் அரசியலமைப்பு நெறி பிறழ்ந்த சட்டவரைவிற்கு ஆதரவு கொடுத்திருந்த, அயோவாவின் ஜனநாயகக் கட்சி செனட்டர் டாம் ஹார்கின் குறிப்பிட்டார்: "இது மனக்காயங்கள் ஆறுவதற்கான நேரம்; டெர்ரியின் வாழ்வை புகழ வேண்டிய நேரம்; நம்முடைய நம்பிக்கை அப்பெண்மணி இப்பொழுது நம் கர்த்தருடன் அமைதியாக உள்ளார் என்பதேயாகும்."

பல்வேறு மாநில சட்டமன்றங்களும் ஏற்கனவே ஷியாவோ வழக்கில் நீதிமன்றத்தின் நடவடிக்கை போல பழையபடி நடக்காமல் தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. அலபாமாவில் சட்ட மன்ற உறுப்பினர்கள் அலபாமா பட்டினி, தாகஏக்கச் சட்டம் (Alabama Starvation and Dehydration Act) என்ற ஒரு தூண்டுதலை கொடுக்கும் தலைப்புடைய சட்ட வரைவை கொண்டுவந்துள்ளனர்; இதல் நோயாளியின் வெளியிடப்பட்ட எழுத்துமூலமான உத்தரவு கொடுக்கப்பட்டால் ஒழிய உணவு செலுத்தும் குழாய் அகற்றப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோன்ற நடவடிக்கைதான் லூயிசியானாவிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கன்சாஸ் மாநில சட்ட மன்ற பிரதிநிதிகள் பிரிவில் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டது; அதன்படி ஒரு பாதுகாப்பாளர் உயிர்காப்புக் கருவிகளை அகற்றும் முன் நீதிமன்ற ஒப்புதலை பெறவேண்டும் என்ற கட்டாயம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவிற்கு கருக்கலைப்பு-எதிர்ப்புக் குழுக்களின் ஆதரவு இருக்கிறது; ஆனால் மாநில செனட் மன்றத்தில் இது தோற்கடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷிகனைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினர், மேற்கு கிளையின் ஜோயெல் ஷெல்ட்ரெளன் ஒரு சட்டத்தை இயற்ற முயன்று கொண்டிருக்கிறார்; இதன்படி தம்பதிகளில் ஒருவர், திருமண பந்தத்திற்கும் அப்பால் தொடர்பை கொண்டிருந்தால், உணவு, திரவப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதியை மனைவிக்கோ, கணவனுக்கோ கொடுக்கக் கூடாது என்ற முடிவை மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தர உணர்வற்ற நிலையில் மனைவியை கொண்டிருந்த மைக்கேல் ஷியாவோவிற்கு அவருடைய நீண்டகால தோழி மூலம் குழந்தைகள் உள்ளன.

CBS News இன் படி, 32 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட சட்டவரைவுகள் ஷியாவோ வழக்கினால் ஊக்கம் பெற்றவை தயார் நிலையில் உள்ளன என்றும், அவற்றில் பெரும்பாலானவை ஒரு பிற்போக்குத்தனமான தன்மையைக் கொண்டுள்ளது என்றும் தெரியவருகிறது.

Time இதழ் நடத்திய ஒரு புதிய கருத்துக் கணிப்பின்படி, அமெரிக்கர்களில் ஒரு பெரிய பெரும்பான்மை (59 சதவிகிதம்) டெர்ரி ஷியாவோவின் உணவு செலுத்தப்படும் குழாய் அகற்றப்பட வேண்டும் என்ற முடிவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதில் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் (53 சதவிகிதம்), நற்செய்தி கிறிஸ்தவர்கள் (அவர்களும் 53 சதவிகிதம்) என்று உள்ளனர். நான்கில் ஒருவருக்கும் குறைவாகவே அந்த முடிவை "கடுமையாக எதிர்ப்பதாகக்" கூறியுள்ளனர். "நீங்கள் ஷியாவோவின் இடத்தில் இருந்தால், உங்களுடைய பாதுகாப்பாளர் உங்களுடைய உணவு செலுத்தும் குழாய் அகற்றபடுவதை விரும்புவீர்களா?" என்று கேட்கப்பட்டதற்கு, 69 சதவிகிதத்தினர் "விரும்புவோம்" என்ற விடையைத்தான் கொடுத்துள்ளனர். காங்கிரசின் தலையீட்டை 75 சதவிகிதத்தினர் தவறானது என்றுதான் கருதியுள்ளனர். 70 சதவிகிதத்தினர் புஷ்ஷின் நடவடிக்கைகளை எதிர்த்துள்ளனர். கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் மூன்றில் இரு பகுதியினர் காங்கிரஸ், மற்றும் புஷ்ஷின் தலையீடு அவர்களுடைய "பெறுமதிகள், கொள்கைகள்" என்பவற்றிற்கு பதிலாக அரசியலைத்தான் மையமாக கொண்டுள்ளது என கூறியுள்ளனர்.

தலையீடுகள் பற்றி செல்வாக்கு இல்லாவிட்டாலும்கூட, ஷியாவோ வழக்கை முன்னோடியாக கொண்டு ஜனநாயக உரிமைகள், வெளிப்படையான நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்கள் உட்பட அரசியலமைப்பு நெறிகள் ஆகியவற்றின் மீது தாக்குதல்கள் தீவிரம் அடையும். இன்னும் கூடுதலான வகையில் தனிப்பட்ட உரிமைகள்மீது படையெடுப்புக்கள் நிகழும்; இவை வலது அடிப்படை சமயக் கோட்பாட்டை சார்ந்து நிற்கும். இந்தத் தாக்குதல் அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியினுள் தமது சமூக வேர்களை கொண்டுள்ளது; ஆனால் ஜனநாயகக் கட்சி அடிபணிந்து நிற்பதும் மக்கள் செய்தி ஊடகத்தின் இழி நிலையும்தான், சமய உரிமை குறுகிய தளத்தைக் கொண்டாலும் அதற்கு அப்பால் மக்களிடையே செல்வாக்கைப் படர அனுமதித்துள்ளன.

உண்மையான சமூக, விஞ்ஞான, ஒழுக்கநெறி விடயங்களை புதைக்கும் வகையில்தான் ஷியாவோ வழக்கு பற்றிய செய்தி ஊடகத் தகவல்கள் அமைந்துள்ளன. இந்த நிகழ்வின் உட்குறிப்புக்களை பற்றி அமெரிக்க செய்தி ஊடகம் உண்மையிலேயே தீவிர ஆர்வம் கொண்டுள்ளது என்றால், உதாரணத்திற்கு, புதன் கிழமையன்று 11வது சுற்று நீதிமன்ற முறையீட்டு நீதிபதி ஸ்ரான்லி எப். பிர்ஷ் ஜுனியர், ஷியாவோவின் பெற்றோர்களுக்கு மறு விசாரணை அனுமதி மறுத்தபோது தெரிவித்த கருத்துக்களை மிகப் பரந்த அளவில் வெளியிட்டிருக்கும்.

கூட்டாட்சி நீதிபதிகளிலேயே மிகவும் பிற்போக்குக் கருத்துடையவர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கும் பிர்ஷ், டேவிட் காரோ என்னும் அரசியல் அமைப்பு சட்ட வல்லுனர் கருத்தில் "மிகச் சரியாகவே ஸ்காலியா/தோமஸ் முகாமில்" உள்ளவர் என்ற பெயரெடுத்தவர் ஆவார்; ஆதாவது தலைமை நீதிமன்ற நீதிபதிகள் Antonin Scalia, மற்றும் Clarence Thomas இருவரையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1990ல் ஜனாதிபதியாக இருந்த முதல் ஜோர்ஜ் புஷ்ஷால், பிர்ஷ் நியமிக்கப்பட்டவராவார். அலபாமா மாநிலம் பாலியல் விளையாட்டு பொருட்களை தடை செய்து இயற்றுவதற்கு உரிமை உடையது என்ற கருத்தையும், புளோரிடாவில் ஓரினத் தம்பதியினர் தத்து எடுத்துக் கொள்ளுவதை தடை செய்யும் சட்டம் சரியே என்ற கருத்தையும் இவர் கூறியிருக்கிறார்.

தன்னுடைய தீர்ப்புரையில் பிர்ஷ் புஷ்ஷையும் காங்கிரசின் குடியரசுக் கட்சியனரையும் "நம்முடைய அரசியலமைப்பு நிறுவனர்களின் சுதந்திரமான மக்களுக்கு ஆட்சி தருவதற்காக கொடுக்கப்பட்ட திட்டமான, நம்முடைய அரசியலமைப்பிற்கு முற்றிலும் வெளிப்படையான விரோதமானவகையில்" செயல்படுவதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி நீதிமன்றங்களை ஷியாவோ வழக்கு பற்றி மறு பரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் உரிமை சட்ட மன்றத்திற்கு கிடையாது என்று பிர்ஷ் கூறியுள்ளார்; மேலும் சட்டமன்றத்தில் அவரசரமாக இயற்றப்பட்டுள்ள சட்டம் "கூட்டரசு நீதிமன்றங்கள் நீண்ட காலமாக அவற்றின் நிதானமான முடிவெடுக்கும் நெறிகளை காட்டும் நீதிக் கோட்பாடுகளை அபகரிக்கும் எண்ணத்தை கொண்டுள்ளது" என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார். மேலும், "(அரசியலமைப்பை) இயற்றயவர்கள் ஓர் அரசியலமைப்பு வடிவமைப்பை, அதிகாரப்பிரிவு கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்படுத்தினர் என்பது தெளிவான உண்மையாகும்" என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

"இதையொட்டிப் பார்க்கும்போது, ஷியாவோ சட்டம் "நீதித் துறையின் சுதந்திரத்தன்மையில் குறுக்கீடு செய்கிறதா என்பதை நாம் விசாரிக்காவிட்டால், அரசியல் அமைப்பின் மூன்றாம் விதியில் கூறப்பட்டுள்ளபடி இருக்கவேண்டிய, நம்முடைய அரசியலமைப்பின் வடிவத்தையே ஆபத்திற்கு உட்படுத்தும் நிலையை ஏற்படுத்திக் கொண்டுவிடுவோம்." என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனிப்பட்ட முறையில் சாய்வெழுத்தில் கீழ்க் காணும் எச்சரிக்கையையும் பிர்ஷ் விடுத்துள்ளார்: "இன்று நீதித்துறையின் சுதந்திரம் பறிபோவதற்கு உடன்பட்டுவிட்டால், நாளையில் இருந்து அனைத்து அரசியலமைப்பு விதிகளின் மீறல்களுக்கும் ஒரு முன்னோடி ஏற்பட்டுவிடும்."

இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க கருத்து, புஷ் நிர்வாகம் மற்றும் குடியரசுக் கட்சியின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் காங்கிரசை முற்றிலும் கண்டனத்திற்குட்படுத்திய கருத்துக்கள், எந்த தொலைக்காட்சி இணையத்திலும் வெளியிடப்படவில்லை; ஆனால் எத்தனையோ மணி நேரம் பாதிரியார் பவோனே, கருக்கலைப்பு எதிர்ப்பு வெறியர் ராண்டால் டெர்ரி, "கிறிஸ்துவ பாதுகாப்புக் கூட்டணி (Christian Defense Coalition) அமைப்பின் இயக்குனர் வணக்கத்திற்குரிய பாட்ரிக் ஜே. மஹோனே மற்றும் பல தீவிர சமயவாதிகள், பிற்போக்காளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

Top of page