World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

Anti-Japanese protests erupt in China

சீனாவில் ஜப்பானுக்கு எதிராக வெடிக்கும் எதிர்ப்புக்கள்

By John Chan
8 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜப்பானை ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெறச்செய்ய முன்மொழியப்பட்டுள்ள ஐ.நா. சீர்திருத்தங்கள் சீனா முழுவதிலும் கண்டன அலைகளுக்கு இலக்காகி உள்ளது. பரவலாக வலைத் தள மனுக்களுடன் பல நகரங்களில் ஜப்பானிய சில்லறை விற்பனை கடைகளுக்கு வெளியில் ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தேசியவாத உணர்வை தூண்டிவிடும் ஒரு வழிமுறையாக ஆரம்பத்தில் அரசுக்கு சொந்தமான ஊடகங்களால் ஊக்கப்படுத்தப்பட்ட, அந்த இயக்கம் ஜப்பானுக்கு எதிராக போதுமான அளவு கடுமையான நிலையை எடுக்கத் தவறிவிட்டதற்காக அரசாங்கத்திற்கு எதிராகவே திரும்பியுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள பல சீன அமைப்புக்கள் பெப்ரவரி கடைசியில், ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானை ஐ.நா. பாதுகாப்பு சபையிலிருந்து ஜப்பானை விலக்கி வைக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளும் மனுக்களுடன் இப்பிரச்சாரத்தை முன்னெடுத்தன. அன்னான் முறையாக தனது ஐ.நா. சீர்திருத்தத் திட்டத்தை அறிவித்தபொழுது இந்த மனுக்களை அனுப்புவது சென்ற மாதம் விறுவிறுப்படைந்தது. பிரதான சீன வலைத் தளங்கள் அந்த மனுக்களை அனுப்பின. மற்றும் உத்தியோகபூர்வமான க்சின்குவா செய்தி நிறுவனம் தந்துள்ள தகவலின்படி சென்ற வார கடைசி வாக்கில் 22.2 மில்லியன் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

Financial Times தந்துள்ள தகவலின்படி, ``வலைத் தளம் மூலமாக இந்த மனுக்கள் தேச பக்தியை தூண்டுகின்ற வாசகங்களுடனும், விரும்பி கையெழுத்து போடுகின்ற வடிவங்களுடனும் பல்கலை கழகங்களுக்கும், பணியிடங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன.`` ஜப்பானுக்கு எதிரான உணர்வுகள் இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் இராணுவம் புரிந்த அட்டூழியங்களுக்காக ஜப்பான் மன்னிப்பு கேட்க இன்றைக்கும் தயக்கம் காட்டி வருவதால் நிலவுகின்ற ஆழமான ஆத்திரத்தை ஜப்பானுக்கு எதிரான உணர்வுகள் எதிரொலிக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது 35 மில்லியன் சீனர்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது மற்றும் ஜப்பான் மீண்டும் இராணுவமயமாக்கப்பட்டு வருவது குறித்து அச்சங்கள் நிலவுகின்றன.

அன்னானின் சீர்திருத்தப்பொதியானது ஐ.நா. பாதுகாப்பு சபையில் செய்யப்படும் மாற்றங்களில் ஒரே ஒரு அம்சம்தான். இந்தத் திட்டங்கள் செப்டம்பர் மாதம் விவாதிக்கப்படவிருக்கின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மனி உட்பட பல நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவதற்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன, அது தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்சு ஆகியனவற்றுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு சபையில் ஒரு நிரந்தர உறுப்பினர் என்ற முறையில் இரத்து அதிகாரம் கொண்ட சீனா, ஜப்பான் தொடர்பாக தனது நிலைப்பாட்டை இன்னும் முடிவு செய்யவில்லை.

ஜப்பானின் போர்க்கால வரலாற்றை பகிரங்கமாக மூடிமறைக்கின்ற வகையில், ஜப்பான் இராணுவத்தை சீனாவிலும் ஆசிய நாடுகளிலும் ``விடுவிப்பவராக`` வர்ணித்து ஒரு புதிய உயர்நிலைப் பள்ளி வரலாற்றுப் பாட நூல் வெளியிடப்படுவதற்கு டோக்கியோ அங்கீகாரம் அளித்த பின்னர், இந்த வாரம் இந்த பிரச்சனை மீண்டும் கிளர்ந்து எழுந்தது. சீனா தொடர்பாகவும், இந்த பிராந்தியம் முழுவதிலும் தனது அரசாங்கத்தின் மிகவும் வலியத்தாக்கும் தன்மைய நிலைப்பாட்டிற்கு ஏற்ப பிரதமர் ஜீனிசிரோ கொய்ச்சுமி வரலாற்றை பொய்மைப்படுத்துவதை ஊக்குவித்திருக்கிறார்.

பாடநூல் பற்றிய இந்த செய்தி வடகிழக்கு சீன நகரான சேங்சுன்னில் செயல்பட்டு வரும் ஜப்பானின் மிகப்பெரிய மதுபான தயாரிப்பாளரான ஆஷாகி வடிப்பு ஆலையை பொதுமக்கள் புறக்கணிக்கின்ற நிலை உருவாயிற்று. இந்த கண்டனத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் அந்த நிறுவனம் புதிய பாடநூலை ஆதரிப்பதாக குற்றம்சாட்டினர். இந்த புறக்கணிப்பினால் ஜப்பானின் இதர பொருள்கள் விற்பனையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நகரங்களில் சீன மக்கள் ஜப்பானிய பொருள்களை புறக்கணித்து வருவதால் அந்த புறக்கணிப்பு இயக்கம் பரவலாகி ஜப்பானின் அழகு சாதனப் பொருட்கள் ஷாம்பூ ஆகியவற்றின் விற்பனையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று தென்கொரியாவிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அங்கு அரசாங்கம் ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினராக ஜப்பான் ஆவதற்கு பகிரங்கமாக எதிர்த்துள்ளது.

வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விமர்சனங்கள் பெய்ஜிங் ஆட்சி ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க தவறியதை கண்டித்திருக்கின்றன. குறிப்பாக மூத்த தூதர் ஊ ஜியான்மிங் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறார். அவர் தற்போது ஜப்பானின் மிகப்பெரும் அளவிலான வர்த்தக பங்காளியாக சீனா விளங்குவதை சுட்டிக்காட்டி, ஜப்பான் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினராவது தொடர்பாக சீனா ``ஒரு பகுத்தறிவான முறையில்`` முடிவு செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக விவாதித்து வருகிறார்.

ஒரு விமர்சனம் இப்படி அமைந்திருக்கிறது: ``அதன் அரசு தலைவர்கள் எல்லாம் இயலாநிலையில் இருக்கும்போது எப்படி சீனா உறுதியாக நிற்க முடியும். சீனா இந்த முறை ஒப்புதலை தருமானால் இப்போதிருக்கும் பதவிகளில் அரசாங்க தலைவர்கள் இருப்பதற்கு எந்த விதமான உரிமையும் இல்லை. அவர்கள் தங்களது வீடுகளுக்கு சென்று தங்களது குழந்தைகளை ஆரத்தழுவிக்கொள்ளட்டும்.``

இந்த மனுக்களை ஏற்பாடு செய்கின்ற டாங்செங் New York Times-ற்கு ஏப்ரல் முதல் தேதி பேட்டியளித்தபோது, ``சீனா ஜப்பானுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பது மட்டுமே போதுமானதல்ல. அரசாங்கம் இதில் தலைமைதாங்கி நடவடிக்கை எடுக்க விரும்பாமல் இருக்கலாம். ஆனால் சீன மக்கள் தலைமை ஏற்றுவிட்டனர். சீனாவில் இதற்கு முன்னர் எப்போதுமே இந்த அளவிற்கு ஒரு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றதில்லை. எதிர்காலத்தில் இந்த இயக்கத்தை ஒடுக்குவது அரசாங்கத்திற்கு மிகக் கடினமாக இருக்கும்`` என்று குறிப்பிட்டார்.

சென்ற சனிக்கிழமையன்று சிச்சுவான் மாகாண தலைநகரான செங்டுவில் 10,000 கண்டனக்காரர்கள் இரண்டு ஜப்பானுக்கு சொந்தமான பல்பொருள் அங்காடிகள் முன் திரண்டு ஜன்னல்களை உடைத்தனர். மறுநாள் வேறு பல நகரங்களில் ஜப்பானுக்கு எதிரான கண்டனங்களும், கலவரங்களும் வெடித்துச் சிதறின. குவாங்ஜீவில் 10,000 மக்கள் ஜப்பானுக்கு எதிரான முழக்கங்கள் இடம்பெற்றிருந்த 10 மீட்டர் நீளமுள்ள ஒரு சிவப்பு பதாகையில் கையெழுத்திட்டனர். சென்ழென் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறைந்தபட்சம் 3,000 பேர் ஜப்பானுக்கு எதிரான பதாகைகளோடு அணிவகுத்துச் சென்றனர் மற்றும் அவர்கள் ``ஜப்பானிய ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைய வேண்டும்,`` ``ஜப்பானிய பொருள்களை புறக்கணிப்போம்`` என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

சென்ழென்னில் இரண்டு பெரிய ஜப்பானுக்கு சொந்தமான பல்பொருள் அங்காடிகளில் கண்டனக்காரர்கள் புக முயன்றதை அடுத்து கலவரத் தடுப்பு போலீஸ் படைப்பிரிவுகள் உட்பட நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு அனுப்பப்பட்டனர். போலீசார் வருகை கூட்டத்தினரை கோபமடைய செய்தது, தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களும், கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர். கண்டனக்காரர்களை சமாதானப்படுத்துவதற்காக போலீசார் அவர்களை செய்பு அங்காடியில் சீனக்கொடியை ஏற்ற அனுமதித்தனர். ``ஆசிய மக்களுக்கு எதிராக ஜப்பான் புரிந்த பாரிய அளவு அட்டூழியங்களுக்காக`` ஜப்பான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு பகிரங்கக் கடிதம் கேட்டுக்கொண்டது மற்றும் ``அனைத்து சமாதானம் விரும்பும் சகிப்புத்தன்மை கொண்ட சீன மக்கள் இதை அனுமதிக்கக்கூடாது`` என்று அந்த பகிரங்க கடிதம் அறிவித்தது.

இரு முனையும் கூராக உள்ள கத்தி

இந்த கண்டனங்கள் தனது கட்டுப்பாட்டை மீறி வளர்ந்துவிடும் என்று பெய்ஜிங் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறது. பகிரங்கமாக முதலாளித்துவ சந்தையை தழுவிக்கொண்ட ஆட்சியானது, நாட்டில் ஆழமாகிக்கொண்டு வரும் சமூகப் பிளவினால் எழுந்துள்ள மக்களது ஆத்திரத்தையும், பகை உணர்வையும் திசை திருப்புவதற்கு ஒரு வழியாக கருத்தியல் அடிப்படையில் தேசியவாதத்தை நம்பியிருக்கிறது. சென்ற ஆண்டு ஆசிய கால்பந்து கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானிடம் சீனா தோற்ற நேரத்தில் அரசாங்கம் திட்டமிட்டு பிற்போக்குத்தனத்தையும், தேசியவாதத்தையும் இளைஞர்களிடையே வளர்த்து வருவது அந்தக் கலவரத்தின் மூலம் வெளிப்பட்டது.

அதே நேரத்தில் எந்த பிரச்சனையில் ஒரு கண்டன இயக்கம் தோன்றினாலும் அது மிக விரைவாக அரசாங்கத்திற்கு எதிரான இயக்கமாக மாறிவிடும் என்பது குறித்து பெய்ஜிங் அஞ்சுகிறது. யூகோஸ்லாவியாவில் 1999-ல் நேட்டோ போர் விமானங்கள் அங்குள்ள சீன தூதர் அலுவலகத்தின் மீது ஆத்திரமூட்டும் வகையில் குண்டுவீசி தாக்கியதற்கு பின்னர் சீன ஆட்சி எதிர்கொண்டது போன்ற இருதலைக்கொள்ளி நிலையை இப்போதும் எதிர்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியில் கண்டனம் நடத்துவதற்கு பச்சைக்கொடி காட்டிய பின்னர், ஆர்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து அந்த இயக்கம் கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடுமோ என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டதால், சீனத் தலைமை படுவேகமாக ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அண்மையில் நடைபெற்ற கண்டனங்களுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் மீது பழி போட்டாலும் சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளரான குயின்காங் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ``சீன மக்கள் தங்களது நிலைப்பாடுகளை ஒரு பகுத்தறிவான முறையில் வெளிப்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்`` என்று அறிவித்தார். ஜப்பான் வர்த்தக நிறுவனங்களுக்கு சீனாவில் பாதுகாப்பு தரவேண்டுமென்று டோக்கியோ கேட்டுக்கொள்ளும் முன்னரே போலீஸார் கண்டனக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர். எடுத்துக்காட்டாக, சென்ற ஞாயிறன்று, கிழக்கு செஜியாங் மாகாணத்தை சேர்ந்த டாய்ஜோ நகரத்தில் சாதாரண உடுப்பில் வந்த போலீசார் ஜப்பானுக்கு எதிராக கண்டனம் செய்த ஒரு குழுவினரை தாக்கினார்கள் மற்றும் அந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர்.

ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் Open பத்திரிகையில், சென்ற செப்டம்பர் மாதம், முன்னாள் சீன தலைவர் ஜியாங்ஜெமின் அளித்த பேட்டியில், கால்பந்து கலவரம் "தீவிர தேசியவாதிகளால்" உருவாக்கப்பட்டதென்று கவலை தெரிவித்தார். அவர்கள், ஜப்பானை அல்ல, மத்திய அரசாங்கத்தை குறி வைத்து தாக்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். "ஜப்பானுக்கு எதிரான தேச பக்தி இயக்கம் என்று கூறப்படுவது" அரசியல் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று அவர் எச்சரித்தார். அந்த விமர்சனங்கள் பல்கலைக்கழகங்களில் ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதற்கு முன்னோடியாக அமைந்திருந்தன.

1919 மே 4-ல் தொடக்கப்பட்ட இயக்கம் போன்ற வரலாற்று முன் மாதிரிகளை பெய்ஜிங் நன்றாகவே உணர்ந்திருக்கிறது, வெர்சைல்ஸ்சில் நடாத்தப்பட்ட சமாதான மாநாட்டில் சீனாவிலுள்ள ஜேர்மனியின் காலனி ஆதிக்க சலுகைகள் ஜப்பானுக்கு வழங்குவது என்ற முடிவிற்கு எதிராக தீப்பொறி போல் வெகுஜனக் கிளர்ச்சி அப்போது வெடித்தது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அப்போது நடத்திய வெகுஜனக் கண்டனங்கள் ஜப்பானை மட்டுமே இலக்காக கொண்டு நடத்தப்படவில்லை, மாறாக அந்த மாநாட்டு முடிவை ஏற்றுக்கொண்ட சீனாவின் ஊழல் மிக்க ஆட்சியையும் எதிர்த்து நடத்தப்பட்டன. இந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்படுவதற்கும், மற்றும் 1925-27-ல் புரட்சிகர வெடிப்புக்கும் முன்னோடியாக விளங்கிற்று.

கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட சர்வதேச சோசலிச கொள்கைகளை நீண்ட காலத்திற்கு முன்னரே கைவிட்டுவிட்டது. தேசியவாதத்தை வளர்ப்பதன் மூலம் பெய்ஜிங் பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு தரகராக செயல்படுகிறது. போலீஸ் அரசாங்க நடவடிக்கைகள் மூலம் சீன தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டுவதை செயல்படுத்தி வருகிறது. இப்போது சீன தொழிலாள வர்க்கம் சந்தித்து வருகின்ற ஒடுக்குமுறை நிலைமைகள், 1920களிலும், 1930களிலும் குழந்தை தொழிலாளர் மற்றும் கசக்சிப் பிழிந்து வேலை வாங்கும் நிலை பரவலாக நீடித்ததை அடிக்கடி ஒப்பீடு செய்வதாக உள்ளது.

பெய்ஜிங் தொடர்ந்து பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறந்துவிட்டுக் கொண்டேயிருக்கிறது. எடுத்துக்காட்டாக, சென்ற மாதம் சீனாவில் மிகப்பெரிய மின்சார இயந்திரங்களை தயாரிக்கும் அரசாங்க ஷங்காய் எலக்ட்ரிக் குழுமம், டோக்கியோவில் அதனது 28 தொழிற்சாலைகளை பெரிய ஜப்பானிய பெருநிறுவனங்களுக்கு விற்க முயற்சித்தது. ஜப்பானிய கம்பெனிகள் இயந்திர சாதனங்களையும், உதிரிப்பாகங்களையும் விற்றுக்கொண்டிருப்பதாலும் மற்றும் மிகப் பந்த அளவிலான மலிவு கூலி தொழிலாளர் குழுவினரை சுரண்டுவதற்கு கம்பெனிகளை நிறுவிக் கொண்டிருப்பதாலும் ஜப்பானின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக சீனா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு சீனாவில் ஜப்பானிய நிறுவனங்கள் ஜப்பான் மொழி பேசும் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் நியமிப்பதற்காக கால்சென்டர்களை அமைத்துக் கொண்டிருக்கிறது. இது 1930-களில் அந்த பிராந்தியத்தில் ஜப்பானிய காலனி ஆதிக்க பாரம்பரியத்தை நிலைநாட்டுவதாக உள்ளது.

இதன் விளைவாக பெய்ஜிங், ஜப்பானுக்கு எதிரான கண்டனப் பேரணிகளின் பொருளாதார தாக்கம் குறித்து கவலையடைந்துள்ளது. சென்ழென் பகுதியை சார்ந்த பொருளாதார நிபுணர் ஜீ யெகோன் ஹாங்காங்கிலிருந்து வெளிவரும் Standard பத்திரிகையில் ``நாம் எல்லா ஜப்பானிய பொருள்களையும் புறக்கணிப்போமானால் நமது பொருளாதாரம் உடனடியாக முடக்கப்பட்டுவிடும்`` என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஜப்பானிய நிறுவனங்களோடு கூட்டுத்தொழில்களை நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு சீனக் கம்பெனிகள் தற்போது நிர்பந்தத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் ஜப்பானின் நிஸ்ஸான் நிறுவனம் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான டாங்ஃபெங் கார் தொழிற்சாலையுடன் கூட்டுத்தொழில் செய்வது மற்றும் ஜப்பானின் நிப்பொன் எஃகு தயாரிப்பு நிறுவனமான பாவோ எஃகு நிறுவனமும் 920 மில்லியன் டாலர் மதிப்பிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அடங்கும்.

பெய்ஜிங் மெல்லிய நூலிழையில் நடப்பதற்கு முயன்று வருகிறது. ஜப்பானின் புதிய பாடநூல் தொடர்பாக சீன மக்களது வெறுப்பை சமாதானப்படுத்துவதற்காக பெய்ஜிங் அந்தப் பாடநூல் வெளியிடப்பட்டதை கண்டித்து, அது ``சீன மக்களது உணர்வுகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்திவிட்டது`` என்று கூறியிருக்கிறது. ஆனால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஜப்பான் உறுப்பினர் ஆவது தொடர்பாக தெளிவான ஒரு நிலையெடுத்து அது டோக்கியோவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட முடியும் என்று நம்புகிறது. இந்த சூழ்ச்சித்திட்ட முறைகள் மூலம் ஜப்பானுக்கு எதிராக மட்டுமல்ல, தானே உருவாக்கியுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை சமாளித்துவிட விழைகிறது.

Top of page