World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Indian government to merge state-run oil firms

அரச எண்ணெய் நிறுவனங்களை இணைக்கும் இந்திய அரசாங்கம்

By Parwini Zora and Daniel Woreck
12 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

முன்னைய பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கத்தின் புதிய தாராளவாத செயல்திட்டமான பொருளாதார நெறிமுறைகளை தளர்த்துவது, மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவது ஆகிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் எண்ணெய் இயற்கை எரிவாயு துறையை இந்திய அரசின் ஏகபோகத்தை நீடிக்கவும் விரிவுபடுத்தவும் முடிவு செய்திருக்கிறது.

நாட்டின் பிரதான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது அரசு தன் கட்டுப்பாட்டை நிலைநாட்டி வருகிறது, அவற்றுள் பெரும்பாலானவை உயர் லாபம் தருபவை, மிக முக்கியமான உலக எண்ணெய் உற்பத்தியில் அதிக பங்கை பெறும் இந்தியாவின் முயற்சிக்கு அவை முக்கியமானவை என்று கருதப்படுகின்றன. அரசாங்கத்தின் முழு ஆதரவோடு இந்தியா எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாடுகளில் எண்ணெய் எரிவாயுத் திட்டங்களிலும் துறப்பண நடவடிக்கையிலும் முதலீடு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன. இந்தியா தனது தொழில் நுட்ப அனுகூலங்களை பயன்படுத்தி இந்த பிராந்தியம் முழுவதற்குமான எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு மையமாக வந்து விட முடியும் என்று நம்புகிறது.

இந்த நிறுவனங்களை அரசின் கரங்களில் வைத்திருப்பது உலக எரிபொருள் சந்தைகளில் பூகோள பாத்திரத்தை ஆற்றவல்ல ஒரு அல்லது இரண்டு நிறுவனங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் குறிக்கோளை நிறைவேற்றுவதை எளிதாக்கும். இப்போது எண்ணெய் வல்லரசுகள் போட்டிகளுக்கும் பகைமைகளுக்கும் பிரதான காரணங்களில் ஒன்றாக இருப்பதை எடுத்துக்கொண்டால், இந்திய அரசாங்கத்தின் பூகோள அரசியல் மூலோபாயம் என்பது சாதாரண விவகாரமல்ல, இத்துடன் நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பதை அது மிக எளிதானதாகவும் கூட செய்கிறது.

"நமது எண்ணெய் நிறுவனங்களை பூகோள நிறுவனங்களாக வலுப்படுத்த வேண்டியது அவசியம்", என பிரதமர் மன்மோகன் சிங் புதுதில்லியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ONGC) ஜனவரி மாதம் ஏற்பாடு செய்திருந்த 2005 பெட்ரோடெக் மாநாட்டில் குறிப்பிட்டார். "சீனா தனது எரிபொருள் பாதுகாப்பிற்கு திட்டமிடுவதில் நமக்கு மேலாக முன்னணியில் உள்ளது" என எச்சரித்தார். "இந்தியா இனி மெத்தனமாக இருந்துவிடக் கூடாது" என்றார். எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கும் ஆய்வு நிறுவனம். அதுவும் இதர அரசு நடத்துகின்ற எண்ணெய் நிறுவனங்களும் சீனாவின் மூன்று மிகப்பெரிய நிறுவனங்களின் போட்டிகளை சந்திக்கின்றன. சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் (PetroChina Ltd.) தலைமையிலான மிகப்பெரிய சீனாவின் மூன்று எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவில் மத்திய கிழக்கில் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் எண்ணெய் துறப்பண பேரங்களை போட்டி போட்டு பெற்று வருகின்றன. "நாம் சீனாவை பிடிக்கின்ற அளவிற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் நாம் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு எண்ணெய் துறப்பண பணிகளில் சுத்திகரிப்பில் எரிவாயு கிணறுகளில் அவை போட்டிபோட்டு வருகின்றன". என்று இந்திய எரிவாயு பொறுப்புக் கழகம் (GAIL Ltd.) என்கின்ற நாட்டின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு சப்ளை நிறுவனத்தின் தலைவரான புரோஷந்தோ பானர்ஜி குறிப்பிட்டார்.

சென்ற ஆண்டில் பெட்ரோ சீன நிறுவனம் 13.30 பில்லியன் டாலர்கள் லாபம் சம்பாதித்திருக்கிறது. இது இந்தியாவின் 7 அரசாங்க சுத்திகரிப்பாலைகள் மற்றும் 2 எண்ணெய் எரிவாயு நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர வருவாயான 6 பில்லியன் டாலர்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

பூகோள அளவில் போட்டி போட்டு லாபம் ஈட்டும் வகையில் இந்தியாவின் அரசாங்க, எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள் ஒன்று அல்லது இரண்டு பெரிய நிறுவனங்களாக இணைய இருக்கிறது. ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் ஆட்சி அண்மையில் அதேபோன்றதொரு கொள்கையை கடைபிடித்தது, ரஷ்யாவின் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களான காஸ்பிரோமை, ரோஸ்நெப்டுடன் இணைத்தது. இந்திய பெட்ரோலிய மற்றும் எரிவாயு அமைச்சர் மணிசங்கர ஐயர் புது தில்லியில் ஜனவரி 16-ல் ஒரு மாநாட்டில் இந்த இணைப்பு திட்டத்தை பகிரங்கமாக அறிவித்தார். அதற்கு முன்னர், அவர் அரசிற்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் விற்பனையை நிறுத்தி வைத்துவிட்டார். முந்திய அரசாங்கம் அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்குவதைத் துவக்கி இருந்தது.

ஹாங்காங்கிலுள்ள இந்தியா கேபிட்டல் பண்டு நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான ஜான்தாம், புளும்பெர்க் டாட் காமிற்கு (Bloomberg.com) பேட்டியளிக்கும் போது, "இந்தியா பூகோள வரைபடத்தில் போடக்கூடிய ஒரு பெரிய தேசிய பலம்பொருந்திய நிறுவனத்தை உருவாக்க விரும்புகிறது...... அந்த நிலையை எட்டிவிட முடியும் என்று கருதுகிறது. ஆசிய நாடுகளிடையே கணிசமான அளவிற்கு தாகம் இருப்பதால் இந்தியா வெளிநாடுகளில் எண்ணெய் துறப்பண திட்டங்களில் போட்டியிடுவதற்கு தேவையான அளவிற்கு அது தேவையாக இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களை இணைக்கும் இந்திய அரசாங்கத்தின் ஒன்றிணைக்கும் திட்டம், இந்திய எண்ணெய்க் கழகம் (IOC) ஆயில் இண்டியா லிமிடெட், பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL), எண்ணெய் மற்றும் எரிவாயு கழகம் (ONGC), இந்திய எரிவாயு பொறுப்புக்கழகம் (GAIL) ஆகிய நிறுவனங்களை பொங்கைகோன், சென்னை, கொச்சி, மங்களூர் மற்றும் நொமாளிகாரில் செயல்பட்டுவரும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பாலைகளை சக்திமிக்கவகையில் பரிமாற்றம் செய்து ஒருங்கிணைக்க திட்டமிட்டிருக்கிறது.

இந்தியாவில் தற்போது செயல்பட்டு வருகின்ற அரசாங்கத்திற்கு சொந்தமான நான்கு பெரிய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலைகள் நாட்டின் 21,000 பெட்ரோலிய விற்பனை நிலையங்களையும் தன்வசம் வைத்திருக்கின்றன. 300 பெட்ரோலிய விற்பனை நிலையங்கள்தான் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் வசம் உள்ளது.

ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக வெளிநாடுகளில் IOC மற்றும் OIL நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து கூட்டாக எண்ணெய் கிணறுகளுக்கான பேரங்களில் ஈடுபட்டிருக்கின்றன, ஒரு லிபிய எண்ணெய் துறப்பண உரிமத்தை பெற்று இருக்கின்றன. இது வெளிநாட்டில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ள முதலாவது ஒப்பந்தமாகும். லிபியா ஆபிரிக்காவிலேயே மிகப்பெரிய எண்ணெய் வள கையிருப்பை வைத்திருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் நீக்கப்பட்ட பின்னர், லிபியா பாரியளவு வெளிநாட்டு முதலீடுகளை நாடுகிறது.

இந்தியா தனது அரசாங்க அதிகாரத்தையும் ராஜியத்துறை செல்வாக்கையும் பயன்படுத்தி இந்தியாவின் எரிபொருள் நலன்களை முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறது. மத்திய கிழக்கிலும் ஆபிரிக்க நாடுகளிலும் பணியாற்றிய முன்னாள் இந்திய தூதர்கள் பலர் எரிபொருள் பாதுகாப்பிற்கான ஒரு நிரந்தர குழுவாக செயல்பட திரட்டப்பட்டிருக்கின்றனர். அந்தக் குழுவிற்கு தலைவர் பொருளாதார நிபுணர் அர்ஜூன் சென் குப்தா ஆவார். இந்தக் குழு அரசாங்கத்திற்கும் அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கும் எண்ணெய் பேரங்களை வென்றெடுப்பதற்கு சிறந்த வழிமுறைகள் அடங்கிய ஆலோசனையை கூறும்.

குறிப்பாக சவுதி அரேபியா, வியட்நாம், ஆஸ்திரேலியா, மியான்மர், வங்கதேசம், ஈரான், ஈராக், கத்தார், காகஸ்தான், சிரியா, எகிப்து, லிபியா, அல்ஜீரியா, செனெகல், நைஜீரியா, சூடான் மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் எண்ணெய் கிணறுகளை வாங்குகின்ற நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவு படுத்தியிருக்கிறது.

சப்ளை சீர்குலைவு ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்குரிய கையிருப்பு உட்பட இந்தியாவின் எண்ணெய் உற்பத்தியையும், பாதுகாப்பையும், பெருக்குவதற்கு ஒரு ஐந்து அம்சத் திட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கியுள்ளது. புதிய எண்ணெய் கிணறுகளை இந்தியாவிற்கு உள்ளேயும், குறிப்பாக ஆழ்கடலிலும் சங்கடமிக்க எல்லைப்பகுதிகளிலும் தோண்டுவதற்கு இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தோண்டுவதற்கான உரிமம்கோரும் ஐந்தாவது ஏலத்தில் இந்தியா 20 புதிய எண்ணெய் எரிவாயு துறப்பணப்பகுதிகளை சர்வதேச ஏலத்திற்கு விட இந்தியா முயன்றது.

எண்ணெய் எரிவாயு ஆய்வுகளிலும் எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் இந்து மகாசமுத்திர பகுதியில் தனது கப்பற்படையின் வீச்சை அதிகரிப்பதிலும் இந்தியா இந்த பிராந்தியத்தின் எண்ணெய் பொருளாதாரத்தில் ஒரு மேலாதிக்க நிலைப்பாட்டை பெறுவதற்கு முயன்று வருகிறது. இந்தியா பெருமளவில் எரிபொருளை பயன்படுத்தும் நாடு என்பதோடு மட்டுமே நின்றுவிடாமல் தெற்கு ஆசியாவில் சுத்திகரிக்கப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இந்தியா விளங்கும் என்றும் ஐயர் குறிப்பிட்டார்.

சென்ற மாதம் இந்தியா முதலாவது ஆசிய எண்ணெய் வள அமைச்சர்கள் மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் பாரசீக வளைகுடா நாடுகளின் பிரதிநிதிகள் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆசியாவில் எண்ணெய் உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் நாடுகளின் பிரதிநிதிகளை பொது அரங்கில் திரட்டி பூகோள எண்ணெய் சந்தைகளில் மாற்றங்களை வலியுறுத்த இந்தியா பயன்படுத்திக்கொண்டது. தோண்டும் பணிகளில் முதலீட்டிற்காகவும் சக்தி பாதுகாப்பிற்கான ஹைட்ரோ கார்பன்களை மூலோபாய ரீதியில் சேமித்துவைப்பதில் முதலீடு செய்வதற்கும் பிராந்திய ஒத்துழைப்புக்காகவும் கூட அழைப்பு விடுத்தது.

Top of page