World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government orders police crackdown against high school protesters

உயர்நிலைப்பள்ளி ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க பிரெஞ்சு அரசாங்கம் போலீசுக்கு கட்டளை

By Antoine Lerougetel
16 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

மூன்றாவது மாதமாக இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்வி அமைச்சர் பிரான்சுவா பிய்யோன் இன் கல்வி சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் லீசேயேன்களின் வெகுஜன எதிர்ப்பு இயக்கம் பெருமளவில் அரசு வன்முறையை சந்தித்து வருகிறது. இந்தச் சட்டம் இளைஞர்களுக்கு சமவாய்ப்புக்களை சீர்குலைப்பதென்றும் ஏழைக் குழந்தைகளுக்கு எதிரான பாரபட்சம் கொண்டுள்ளது என்றும் அனைவருக்கும் பொதுக் கல்வியின் தரத்தைக் குறைப்பதாக உள்ளது என்றும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் பள்ளிக் கல்விக்கான ஆதார வளங்கள் குறைக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஒரு பகுதியில் உள்ள பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்தவர்கள் இப்போது பிரதிநிதிகளை தேர்தெடுத்து ஒரு கூட்டாகவோ அல்லது ஒருங்கிணைப்புக் குழுக்களாகவோ செயல்பட்டுவருவதால் தற்போதுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கங்கள், FIDL- (சுதந்திர மற்றும் ஜனநாயக உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் கூட்டமைப்பு) மற்றும் UNL (உயர்நிலைப்பள்ளி, மாணவர்களின் தேசிய ஒன்றியம்) ஆகியவை ஓரளவிற்கு ஓரங்கட்டப்பட்டன.

அரசாங்கம் அந்த சட்டத்தை இரத்துச்செய்ய நிர்ப்பந்தம் கொண்டுவருவதற்கு பல்லாயிரக் கணக்கான உயர்நிலைப் பள்ளிகள் இணைந்து நடத்திய மகத்தான வேலை நிறுத்தங்கள் மற்றும் கண்டனப் பேரணிகள் தோல்வி அடைந்தது, அதேபோல ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இந்த மாணவர் இயக்கத்தை நனவுபூர்வமாக தனிமைப்படுத்தியமை இவற்றால் குழுக்களை அமைத்து மறியல் செய்வது மற்றும் பள்ளி முற்றுகை போராட்டங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களையும் கல்வி நிர்வாகக் கட்டிடங்களையும் பிடித்துக்கொள்ளது போன்ற அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கும் தந்திரோபாயங்களை ஏற்பதற்கு வழிவகுத்துள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு வழக்கமான தனது கொடூர இயல்பை பிரான்சுவா பிய்யோன் காட்டியிருக்கிறார். பள்ளிகளில் இருந்து மறியல் செய்பவர்களை வெளியேற்றுவதற்கு "கடுமையான கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். ஏப்ரல் 9ம் தேதி செனட் சபையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் "ஒரு முற்றுகை நடக்கின்ற ஒவ்வொரு முறையும், தேவையான அனைத்து வழிமுறைகளோடும், ஒரு தலையீடு இருக்கும்" என்று அறிவித்தார்.

அவர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இயக்கத்தின் அளவையும் ஆழத்தையும் குறைத்து மதிப்பிட முயன்றார். ‘bac' தேர்வு நடப்பதற்கு சில வாரங்களே இருக்கின்ற நிலையில் ஒரு சொற்ப சிறுபான்மை, கல்விமுறை செயல்படுவதை தடுத்து நிறுத்த நான் அனுமதிக்கமாட்டேன். சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டது பொதுமக்கள் வாக்களித்திருப்பதை சீர்குலைக்க நான் எப்போதும் ஒப்புக்கொள்ளமாட்டேன்" என்று அமைச்சர் அறிவித்தார்.

பிரான்சின் உள்துறை அமைச்சரும் தலைமை போலீஸ் அதிகாரியுமான டொமினிக் டு வில்ப்பன் போலீசை அனுப்பி இருக்கின்ற கொடூரமான நடவடிக்கையை நியாயப்படுத்தினார் "பிரான்காய் வில்லான் வேண்டுகோளை ஏற்று நான் இதை செய்திருக்கிறேன். நமது தேசிய எல்லையையும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு செல்கின்ற சுதந்திரத்தையும் மதிப்பதற்கு உறுதிசெய்து தருகின்ற வகையில் நாம் செயல்பட்டு ஆகவேண்டும்" என்று அவர் கூறினார். முந்தியநாள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையில் நடைபெற்ற மோதல்கள் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், பொதுக் கட்டிடங்களையும் போலீசையும் தாக்கிய சிறிய வன்முறை மற்றும் முரட்டுத்தனமான, பல குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததாக" குறிப்பிட்டார்.

ஏப்ரல் 8ம் தேதி அதிகாலை சார்லமான் உயர்நிலைப் பள்ளி (Charlemagne lycée) இல் போலீசார் தலையிட்டு, அதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்களை, வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது மறியல் செய்பவர்களை அடிப்பது சட்டவிரோதமானது என மாணவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு இந்த நடவடிக்கை வியப்பாக ஆகிவிட்டது" என்று ராவுல் சார்ஸ்பேர்க் குறிப்பிட்டார். அவர் FCPE (பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு) தலைவர் ஆவார், அந்த சங்கமே முற்றுகையில் பங்கெடுத்துக் கொண்டது.

ஏப்ரல் 7ல் AFP செய்தி நிறுவனம் தந்திருக்கின்ற மதிப்பீட்டின்படி சுமார் 1000 உயர்நிலைப் பள்ளிகளில், அவற்றில் 50 பாரிஸ் பிராந்தியத்தை சேர்ந்தவை, 20 மிடி பிரனே (Midi-Pyrénées) பகுதியைச் சேர்ந்தவை, 9 பிரெஞ்சு கொம்டே (Franche-Comté) பகுதியை சேர்ந்தவை உள்பட மூடப்பட்டுவிட்டன, முற்றுகையிடப்பட்டிருக்கின்றன அல்லது ஆர்ப்பாட்டங்களாலும் அல்லது ஒரு பகுதியில் முற்றுகை நடப்பதாலும் வழக்கமாக செயல்படவில்லை.

பள்ளிகள் முற்றுகைக்கு அழைப்புவிடுத்த FIDL-ல் மாணவர் அமைப்பு, 370 உயர்நிலைப் பள்ளிகளை திரட்டி இருப்பதாக அறிவித்தது. லில்லி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது மோதல்கள் உருவாயின. போலீசாருடன் நடைபெற்ற இந்த மோதலில் இரண்டுபேர் சொற்ப காயமடைந்தனர், சுமார் பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர். பேசியேர் (Béziers) பகுதியில் ஒரு உயர்நிலைப் பள்ளியை முற்றுகையிட முயன்றபோது 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாரிசில் பால்ஷாக் உயர்நிலைப் பள்ளி (18ம் வட்டாரம்) மாணவி காயமடைந்து மருத்துவமனைக்கு செல்லவேண்டி வந்தது. மாணவர்கள் மறியல் செய்து கொண்டிருந்தபோது, அவர்களை அப்புறப்படுத்துவதற்கு போலீசார் முயன்றுகொண்டிருந்த நேரத்தில் மறியல் செய்து கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையில் ஒரு கார் செல்லமுயன்றபோது அதில் அடிபட்டு அந்த மாணவி காயமடைந்தார்.

பதினோராம் வட்டார வோல்ரேய்ர் உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சமயகுரு ஆசிரியர் ஒருவர் காரில் பயணம் செய்தவரால் தாக்கப்பட்டார். மாணவர்கள் கார் செல்லும் பாதையை மறித்ததால் அந்தக் காரோட்டி ஆசிரியரை தாக்கினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கு போலீசார் அங்கு இல்லாதது குறித்து கண்டனம் தெரிவித்தனர்.

ஏப்பிரல் 8-ம் தேதி லிபரேஷன் பத்திகை வெளியிட்டுள்ள ஒரு தகவலில் பாரிஸ் கல்வி நிர்வாக பகுதிகளில் நடைபெற்ற காட்சியை வர்ணித்திருக்கிறது. கண்டனப் போராட்டம் நடத்திவரும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பொது மக்களது அனுதாபத்தையும் அந்த மாணவர்களை கிரிமினல் குற்றவாளிகளாக ஆக்குவதற்கு பிய்யோனும் டு வில்ப்பனும் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நிராகரிக்கின்றனர் என்பதையும் அந்த தகவல் தெளிவாக விளக்குகின்றது.

"பாரிஸ் கல்வி நிர்வாகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் மாடியிலிருக்கும் தனது சாகாக்களை கூவி அழைத்தார். 'கீழே வாருங்கள் உங்களது குழந்தைகள் அங்கே இருக்கலாம்.. உங்களது குழந்தைகள் அங்கேயிருந்து அவர்கள் தாக்கப்படுவதை நீங்கள் அனுமதிக்கமாட்ட்டீர்கள் அல்லவா? நேற்று பகல் ஒரு மணி அப்போதுதான் போலீசார் அங்கு நுழைந்தார்கள். பல்கலைக்கழக தலைவர் அலுவலகத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக 500 மாணவர்கள் முற்றுகை இட்டுக் கொண்டிருந்தனர், அடித்தளப் பகுதியில் இது நடந்தது. கலவரத் தடுப்பு போலீசார் (CRS) அவர்களை வெளியில் இழுத்துச்சென்றனர். அப்போது மாணவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர் 'நாங்கள் அமைதியாக இருக்கிறோம்! என்று கூக்குரல் எழுப்பினர். அவர்களுக்குப் பாதுகாப்பாக ஆசிரியர்களும் ஊழியர்களும் சுற்றி நின்றனர். அப்போது CRS அந்த மாணவர்களின் கைகளையும் கால்களையும் பிடித்து இழுத்தனர். சில மாணவ மாணவிகளது கைகள் முதுகுப்புறமாக வளைக்கப்பட்டு தரையில் அமர்த்தப்பட்டனர்.

அறிக்கை தொடர்ந்தது: "அவர்கள் என்ன செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டார்கள்? பிய்யோனை நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வோம் என்று கூச்சலிட்டனர். அவர்களது மொபைல் தொலைபேசிகளுடன் அவர்கள் அந்தக் காட்சியைப் படம் எடுத்தனர். ஒரு பெண் கண்ணீர் சிந்துகின்ற நிலைக்கு வந்து, 'இது மிகவும் கொடூரமான ஒன்று' என்று கூச்சலிட்டார். தெருவில் இளைஞர்களது கைகள் அவர்கள் முதுகுக்குப் பின்னாலும் தலைக்குப் பின்னாலும் கட்டப்பட்டிருந்தனர். பலர் அதிர்ச்சி அடைந்தனர். கைகள் உடைந்துவிட்டதாக பேசினர். SUD ஆசிரியர் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஒரு பிரதிநிதியான ரெஜின் காலே மிகவும் கொதிப்படைந்து, 'தங்களது எதிர்காலம் பற்றி நியாயமான கவலைகளைக் கொண்டிருக்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிய்யோன் தருகின்ற பதில், அட்டூழியமும் போலீசாரின் லத்தியும்தான். இது சகித்துக்கொள்ளப்பட முடியாதது' என்றார். பிற்பகலில் கல்வி அமைச்சகம் அருகில் 200 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் தடிகளால் தாக்கப்பட்டனர். சோர்போன் பல்கலைக் கழகத்தில் CRS மேலும் கடுமையாக தாக்குதல்களை நடாத்தினர். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிப் புத்தகங்களை கைகளில் ஏந்தி மறியலில் ஈடுபட்டனர்."

பாரிசில் 16ம் வட்டாரத்தில் ஏப்பிரல் 9ல் குளோட்-பேர்னார்ட் உயர்நிலைப் பள்ளியில் ஒருவாரமாக பாடங்கள் நடாத்துவது தடுக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. "அந்த வாசலுக்கு வெளியில் பறக்கும் தேசிய கொடியை பாருங்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று அந்தக் கொடி பறை சாற்றவில்லயா? சட்டம் சமத்துவத்தை மதிக்கவில்லை" என்று விஞ்ஞானம் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி, மாக்டலேனா கண்டனம் தெரிவித்தார். தொடர் மதிப்பீட்டு முறையுடன் கூடிய ‘bac' ஐ மாற்றுவதற்கான திட்டம் முற்றிலுமாக கைவிடப்படாது போகலாம் என அவர் அஞ்சினார். "தேர்வுகள் புனிதமானவை" என்று ஜெர்மி கூறினார். "வேடிக்கைக்காக நாங்கள் பள்ளிக்கூடத்தில் மறியல் செய்யவில்லை. எங்களது கோரிக்கையை கேட்க வேண்டும்" என்று ஷப்ரீனா என்ற மாணவி தெரிவித்தார். "என்றாலும் நாளை எனது வகுப்பிற்கு செல்கிறேன், ஜூனில் தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன" என்று ஷப்ரீனா குறிப்பிட்டார்.

ஆசிரியர் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் வன்முறையை அரசாங்கம் பயன்படுத்துவதை கண்டித்தன. பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. FIDL தந்துள்ள தகவலின்படி, குறிப்பாக பாரிஸ், லீல் மற்றும் பெசியேர் பகுதிகளில் மாணவர்களை போலீசார் "தாக்கினர்." "அமைச்சருக்கு தான் எடுத்துவைப்பதற்கான கருத்துக்கள் எதுவுமில்லை. எனவே உயர்நிலைப் பள்ளி மாணவர்களது வாயை மூடுவதற்காக லத்திகளை பயன்படுத்துகிறார்கள். இறுதிவரை நாங்கள் கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கு போராடுகிறோம். எங்களை அடக்குவதற்கு லத்திகளையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்துகின்ற அமைச்சரை கண்டிக்கிறோம்" என்று FIDL அறிக்கை குற்றம் சாட்டுகிறது. உயர்நிலை பள்ளி மாணவர்களது நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற செயல்கள் கவலையளிப்பதாக உள்ளது என்று UNSA ஆசிரியர் சங்க செய்திக் குறிப்பு கூறுகின்றது. FSU தொழிற்சங்கக் கூட்டமைப்பு "போலீஸ் ஒடுக்குமுறையை" கண்டித்தது. "பேச்சுவார்த்தை நடத்த முடியாது" என்று பிய்யோன் கூறியிருப்பது, மாணவர்களுக்கு படுமோசமாக ஜனநாயகப் பாடத்தை கற்பிப்பதாக உள்ளது. அமைச்சர் "இந்தவகையில் நெருக்கடி படுமோசமாக ஆவதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்" என்று FSU குறிப்பிட்டது.

சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜூலியான் டிரே நிலைமை "படுமோசமாகி" வருவது குறித்து வருந்தினார். "உண்மையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை" வலியுறுத்தினார். கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல்களை கண்டித்தது. முரட்டுத்தனமான தந்திரோபாயங்கள் நிலவரத்தை நெருக்கடிக்குத்தான் இட்டுச்செல்லும், ரஃபரன் அரசாங்கம்தான் பழியை ஏற்றகவேண்டி இருக்கும்" என்று கம்யூனிஸ்ட் கட்சி ஒரு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

முன்னாள் "பன்மை இடது" அரசாங்கம் ஜொஸ்பன் தலைமையில் நடைபெற்றபோது அதில் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தன. அன்றைய கல்வி அமைச்சர் குளோட் அலேக்ர் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய வெகுஜன இயக்கங்கள் நடைபெற்றதை தொடர்ந்து 1999ல் அன்றைய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டியதன் கட்டாயம் ஏற்பட்டது.

Top of page