World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraqi legislators denounce US assault on assembly member

சட்டமன்ற உறுப்பினர் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு ஈராக் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம்

By James Cogan
22 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ படைகளுக்கும், புதிதாகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள, "இறைமை" உடைய ஈராக்கிய தேசிய சட்ட மன்றம் என்று அழைக்கப்படும் அமைப்பிற்கும் இடையே உள்ள உண்மையான உறவின் தன்மையை, செவ்வாய் கிழமையன்று நடந்த நிகழ்ச்சி ஒன்று மிகத் தெளிவாக சித்தரித்துக் காட்டுகிறது. சட்ட மன்ற கட்டிடம் உள்ள வளாகமான "பசுமை மண்டல" பகுதிக்குள் நுழையும் முன் உள்ள வாகன சோதனைச் சாவடியில், ஒரு அமெரிக்க இராணுவத்தினர் சட்ட மன்ற உறுப்பினரின் அடையாள அட்டையை அவருடைய முகத்தில் எறிந்ததுடன், அவரைக் காரில் இருந்து கீழே இறக்கி, கைகளுக்கு விலங்கிட்டு, பெரும் அதிர்ச்சியுடன் கவனித்துக் கொண்டு இருந்த பார்வையாளர்களின் முன்னேயே இழுத்துக் கொண்டு சென்றார்.

இப்படி தாக்குதலுக்கு ஆளாகியிருந்த சட்டமன்ற உறுப்பினரான Fatah al-Shaik தன்னுடைய வாகனத்தில் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஷியைட் சமய குரு மொக்தாதா அல் சதரின் படத்தை ஒட்டியிருந்தார். அதற்காக, அமெரிக்க ஆதரவுடைய சட்டமன்றமாயினும், எதாயினும் சரி என்ற கருத்தில் இந்தப் படையினர் அவரை அமெரிக்க துருப்புக்கள் மற்ற ஈராக்கியர்களை அன்றாடம் வாடிக்கையாக நடத்துவது போல் நடத்துவதில் தயக்கம் ஏதும் காட்டவில்லை.

அமெரிக்க ஆணையில் நடைபெறும் ஊரடங்கு உத்தரவுகள், சாலைத் தடுப்புக்கள், மற்றும் சாதாரண ஈராக்கிய மக்கள்மீது நடத்தப்படும் சோதனைகள் ஆகியவற்றிற்கு எதிராக குரலை உயர்த்தாத சட்ட மன்ற உறுப்பினர்களை பொறுத்தவரையில், தங்களில் ஒருவரையே இவ்வாறு நடத்தியது அளவிற்கும் அதிகமாகவே போயிற்று. இதையும் தவிர ஈராக்கை உண்மையில் யார் ஆள்கிறார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி மிகவும் வெளிப்படையாகவே காட்டியது. ஆனால் அமெரிக்க நிர்வாகம் மற்றும் இராணுவத்தை பொறுத்தவரையில், சட்ட மன்ற உறுப்பினர்கள் கைப்பாவைகளாகவும், துதிபாடுபவர்களாவும் பொறுக்கி எடுக்கப்பட்ட தொகுப்பினர் ஆவர், அவர்களுடைய பங்கு என்ன கூறப்படுகிறதோ, அதை நிறைவேற்றி வாஷிங்டனில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு உள்ளுரின் சட்ட நெறியை அளித்தல் என்று மட்டுமே கருதப்படுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, ஈராக் முழுவதும் நேரடி ஒளிபரப்பான தேசிய சட்ட மன்ற நிகழ்ச்சியில் இத்தாக்குதல் பற்றிய விவாதத்திற்கு நேரம் கொடுக்கப்பட்டது. அதிகார பூர்வமான மன்னிப்புக் கோரல் வேண்டும் என்றும், தவறிழைத்த படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒருமனதாக ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது.

மொத்தம் உள்ள 275 இடங்களில் 140 இடங்களை பெற்றுள்ள கூட்டணியின் முக்கிய ஷியைட் கட்சியின் United Iraqi Alliance (UIA) அமைப்பின் உறுப்பினரான அல்-ஷைக், கண்ணீர் மல்கிய வண்ணம் உரை நிகழ்த்துகையில் என்ன நடந்தது என்று அவையில் கூறினார்.

"இன்று காலை தேசிய சட்ட மன்றத்திற்கு நான் வந்து கொண்டிருந்தபோது, என்னுடைய காரை பல முறை உதைத்ததின் மூலம் அமெரிக்கப் படைகள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். ...பச்சை மண்டலத்தில் நுழைவதற்காக காத்திருந்த 15 கார்களில் என்னுடையதும் ஒன்றாக இருந்தது. ஓர் அமெரிக்க துருப்பினன் என்னுடைய காரைக் குறிப்பாக நோக்கி வந்தார் போல் தோன்றியது; ஏனெனில் அதில் ஷியைட் தலைவரான மொக்தாதா அல் சதரின் படம் ஒட்டப்பட்டிருந்தது.

"இந்தப் படத்தினால் விரோதமடைந்தது போல், இந்த துருப்பினன் ஆங்கிலத்தில் சில சொற்களை கூறத் தொடங்கினார்; அவற்றை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் என்னுடைய MP அடையாள அட்டையைக் காட்டியவுடன், அதை என்னுடைய முகத்தில் திருப்பி அடித்து, காரின் கதவைத் திறந்து என்னை வெளியே இழுத்தார். துருப்பினருடன் இருந்த மொழிபெயர்ப்பாளரிடம் நான் தேசிய சட்ட மன்றத்தின் உறுப்பினர் என்று கூறியவுடன், அவர் விடையிறுத்தார், "நீங்களும், உங்கள் தேசியச் சட்ட மன்றமும் நரகத்திற்குச் செல்லுங்கள்" என்று.

"அந்த துருப்பினர் என்னுடைய கைகளை முதுகுப் புறம் வளைத்து எனக்கு கைவிலங்கிட முயன்றார். என்னை நன்கு அடிக்கத் தொடங்கியதுடன் என் கழுத்தைச் சுற்றி அவருடைய கைகளால் வளைத்தும் விட்டார். பின்னர் அவர்கள் என்னை 10 மீட்டர் தொலைவில் இருந்த ஓர் அறைக்கு இழுத்துச் சென்றனர்."

"எனக்கு நடந்தது, ஈராக்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நம்முடைய முழு தேசியச் சட்ட மன்றத்திற்கும் நேர்ந்த ஒரு அவமதிப்பை பிரதிநிதித்துவம் செய்கிறது. நாம் அனுபவித்து வரும் ஜனநாயகம் ஒரு போலியானது என்பதை இது காட்டுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அமெரிக்க இராணுவம் அதுதான் இந்நாட்டில் உண்மையான கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது, புதிய ஈராக்கிய அரசாங்கம் அல்ல என்பதைக் காட்ட முயற்சிக்கிறது" என்று ஷேக் அறிவித்தார்.

குறைந்தது மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்பாகவேனும் இந்த நிகழ்ச்சி நடந்தது; அவர்கள் எவரும் ஈராக்கியப் பாராளுமன்றத்தில் ஷேக் கூறிய குற்றச் சாட்டுக்களை மறுத்து ஏதும் கூறவில்லை. ஒரு ஷியைட்டு மன்ற உறுப்பினரான அலி யுஷுவா மன்றத்தில் தெரிவித்தார்:"இந்த நிகழ்ச்சி முழுவதையும் நான் பார்த்தேன்; துன்பத்திற்கு மேலும் துயரம் சேர்க்கும் வகையில், சகோதரர் ஃபத்தாவை அமெரிக்கர்கள் முறைகேடாக நடத்தியபோது, ஈராக்கிய வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளை அவர்மீது குறிவைத்தனர்."

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற போது, முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகளும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்த அவற்றின் உட்பிரிவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்தனர்.

குர்திஷ் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரான அப்த் அல்-காலிக் ஜங்கனா கூறினார்: "ஜெனிவா ஒப்பந்தப்படி, ஓர் ஆக்கிரமிப்புப் படை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மதிப்பு தரவேண்டும். இந்த தவறிழைத்த வீரர் நம்முடைய நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்." ஒரு சுன்னி பிரிவு மன்ற உறுப்பினர் அமெரிக்கப் படைகள் "இரண்டு மாத அவகாசம் கொடுத்து, அதற்கு அதிகமாகக் கூடாது, பச்சைப் பகுதியில் இருந்து அகலுமாறு அறிவிப்புக் கொடுக்கப்படவேண்டும்."

UIA -வின் ஃபலா ஷ்னாய்ஷெல் அறிவித்தார்: "இதுதான் நாமெல்லாம் நம்பிக்கை கொண்டிருந்த ஜனநாயக முறையா? மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும் முழு இறைமை என்பது இதுதானா?"

மிக வெளிப்படையான முறையில் அமெரிக்காவிற்கு ஆதரவை தரும் நபர்களில் ஒருவரான, அமெரிக்க கல்வி பயின்ற மன்றத் தலைவர் ஹச்சிம் அல்ஹசானியும் இந்த நிகழ்வு குறித்து கண்டனம் தெரிவித்தார். பசுமைப் பகுதியின் மையத்தில் இருந்து ஈராக்கிய வீரர்கள் மட்டுமே பாதுகாப்பிற்கு இருக்கும் ஒரு புதிய கட்டிடத்திற்கு அகலும் வரை பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறுத்திவைப்பதாக கூட அச்சுறுத்தினார். "பட்டது போதும். சட்டம் இயற்றுபவர்களுக்கு எதிராக அவமரியாதையை எவ்விதத்தில் காட்டினாலும் நாம் அதை நிராகரிக்கிறோம்" என்றார்.

சீற்றத்தின் பின்னணியில்

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கொதிப்பு, ஈராக்கிய அரசியல் வாதிகளுக்கு மன்றம், அமைக்கப்பட உள்ள அரசாங்கம் ஆகியவை உண்மையான அதிகாரம் என்றோ சுதந்திரமானது என்றோ சித்திரித்துக் காட்டுவதை அமெரிக்க செயற்பாடுகள் முடியாமல் செய்துவிட்டதை பிரதிபலிக்கிறது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெருக்களில் அடித்து உதைக்கப்படுவது என்பது, ஈராக்கிய மக்களுடைய பார்வையில் ஜனநாயகம் என்பதில் இருந்து மிகத் தொலைவில், அமெரிக்கப் படையெடுப்பு அவர்கள் நாட்டை நடைமுறையில் அமெரிக்க காலனிநாடாக செய்துவிட்டது என்ற கருத்தை வலியுறுத்திக் காட்டுகிறது. தாங்கள் ஒரு "இறைமை (Sovereign)" பெற்ற பாராளுமன்றத்தை பெற்றிருக்கிறோம் என்ற கூற்றை எவரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில் இருக்கும் 150,000 வெளிநாட்டு படைகள் ஈராக்கியச் சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர், அதேவேளை ஈராக்கிய படைவீரர்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுகின்றனர்.

மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைத்திருந்த ஈராக்கியக் கட்சிகள், உட்பிரிவுகள் இவற்றில் வளர்ந்து வரும் பெரும் ஏமாற்றத்தைத்தான் சுட்டிக்காட்டியுள்ளது.

படையெடுப்பு நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், புலம் பெயர்ந்திருந்த வணிகர்கள், குர்திஷ் தேசியவாதிகள் மற்றும் ஷியைட் அடிப்படை வாதிகள் என்று 2003 படையெடுப்பை தங்களுடைய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்று நினைத்தவர்கள் அனைவரும் கசப்பான உண்மையை எதிர் கொள்ள நேரிடுகிறது; அதாவது, புஷ் நிர்வாகத்தின் செயற்பட்டியல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய குறிக்கோள்கள், பெரு வணிக நலன்கள், குறிப்பிட்ட சர்வதேசக் குழுக்கள் KBR, Bechtel போன்றவற்றின் நலன்கள், ஆகியவைதான் இடம் பெற்றுள்ளன என்பதே ஆகும் அது. ஈராக்கிய பிரிவுகளை (கன்னைகளை) பொறுத்தவரையில், புஷ் நிர்வாகமானது ஒருவருக்கு எதிராக ஒருவரை ஆட்டுவிக்கிறது, அதேவேளை அமெரிக்க நன்களுடன் மோதலுறும் எந்தவித கோரிக்கைகளிலிருந்தும் விலகிச்செல்ல்லுமாறு அவற்றை நிர்பந்திக்கிறது.

குர்டிஷ் தேசியவாதிகள் வடக்கில் இருக்கும் எண்ணெய் வளத்தின் மீது கட்டுப்பாடு பெற அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்; ஆனால் பெரும்பாலான குர்திஷ் சிறுபான்மை மக்கள் உள்ள துருக்கி மற்றும் பல அரசுகளை திருப்திப்படுத்துவதற்காக, அமெரிக்கா குர்திஷ் கட்சிகள் அனைத்தையும் கிட்டத்தட்ட ஒரு தனி நாடு வேண்டும் என்ற முன்னோக்குடையை கோரிக்கையைக் கைவிடச் செய்துள்ளது. ஷியைட்டுக் கட்சிகள் இஸ்லாமிய சட்ட நெறிமுறையைக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்கள் விரும்பிய வகையில் "பாத்திசம் அகற்றல்" செய்யப்படவில்லை; ஆனால் அமெரிக்கப் படைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பச் செல்லவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதைக் கைவிடவேண்டும் என்று கோரப்படுகின்றனர். மறுசீரமைப்பு எனப்படும் செலவில் மிகப் பெரிய பங்கு கட்டிடத் திட்டங்களுக்கோ ஈராக்கிய ஆளும் செல்வந்த்த் தட்டுக்களுக்கு வணிக வாய்ப்புக்கள் கொடுப்பதற்கோ செல்லவில்லை; மாறாக அமெரிக்க இராணுவத்திற்கு உள்ள எதிர்ப்பை அடக்குவதற்குத் துணை நிற்கும் பல பாதுகாப்பு நிறுவனங்களின் பணிக்காகத்தான் செலவிடப்படுகிறது.

செவ்வாயன்று பாராளுமன்றத்தில் காணப்பட்ட காட்சிகள் இதன் விளைவுதான். அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்களை தவறாக நடத்துவது பற்றி ஈராக்கிய அரசியல் வாதிகள் தங்களுடைய விரக்தியைக் காட்டியுள்ளனர்; மேலும் தாங்கள் ஆதரித்திருந்த ஆக்கிரமிப்பின் ஜனநாயக விரோதப் போக்கின் மிருகத்தனமான தன்மையையும் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் கண்டித்துள்ளனர். அமெரிக்க இராணுவத்தின் முறைகேடு என்ற பிரச்சினை மில்லியன் கணக்கான ஈராக்கிய மக்களிடையே எதிர்ப்பை கொடுத்துள்ளது என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஷேக்கிற்குக் கொடுக்கப்பட்டதைப் போன்ற அல்லது அதைவிடக் கேவலமான முறையில் அமெரிக்க வீரர்களால் நடத்தப்படுவதை அனுபவித்துள்ளனர்.

ஈராக்கில் தன்னுடைய அடாவடித்தனத்தின் மற்ற வெளிப்பாடுகளுக்கு எத்தன்மையான விடையை கொடுத்ததோ அதேபோல்தான் அமெரிக்க இராணுவத்தின் விடையிறுப்பு இந்நிகழ்விற்கும் உள்ளது. "வருத்தம்" தெரிவித்த போதிலும்கூட, ஷேக்கின் குற்றச் சாட்டுக்களை அது நிராகரித்து, நடந்தவை பற்றி முற்றிலும் மாறான தகவல்களைக் கொடுத்துள்ளது. அமெரிக்க தொடக்க "விசாரணையின்படி", ஷேக்தான் வரிசையில் இருந்து காரை விட்டு வெளியே வந்து, இடைதடைப் பகுதியைக் கடந்து சோதனைச் சாவடியை தவறான பாதையில் இருந்து அணுகினார் என்று கூறப்படுகிறது. அவர் பின்னர் காரை விட்டு வெளியேறி "சொற்களாலும் உடலாலும்" ஈராக்கிய மொழிபெயர்ப்பாளரிடம் வாய்த்தகராறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். "மிஸ்டர் ஷேக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்துவதன்" மூலம் "தலையிட்டு நிலைமையைச் சீராக்க உதவியைச் செய்வதற்கு" மட்டுமே அமெரிக்கப் படைகள் தலையிட்டன என்று கூறப்பட்டது.

இந்தக் கட்டத்தில் துல்லியமாக நிகழ்ந்தது என்று கூறுவது இயலாது என்றாலும், முந்தைய விவகாரங்கள் மேற்கூறப்பட்ட கதையை மற்றொரு நயமற்ற மூடிமறைக்கும் கதை என்றே சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, மார்ச் மாதத்தில் அமெரிக்கப் படைகள் இத்தாலிய செய்தியாளர் கியுலியானா ஸ்க்ரினா சென்ற வாகனத்தின்மீது குண்டுவீசி ஒரு இத்தாலிய உளவுத்துறை பணியாளரைக் கொன்றதோடு, ஸ்கிரினாவைக் காயப்படுத்தவும் செய்தது. நேரில் பார்த்த இரு சாட்சியங்களுக்கு நேர்எதிராக, அமெரிக்காவோ அமெரிக்கப் படைகள் பலமுறை எச்சரிக்கை விடுத்ததையும் கேட்காமல் இந்த வண்டி மிக வேகமாக சோதனைச் சாவடியை நோக்கி வந்தது என்று கூறியது.

ஷேக் மீதான தாக்குதலும், ஈராக்கியப் பாராளுமன்றத்தின் சீற்றமும் அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் அதிக குறிப்பைப் பெறவில்லை. உதாரணமாக, நியூயோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இரண்டுமே அதைப் பற்றி தகவல் கொடுக்கவில்லை. இந்த மெளனம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். செவ்வாய் நிகழ்வுகள் அமெரிக்கப் பிரச்சாரமான ஈராக்கியப் போர் மத்திய கிழக்கில் "ஜனநாயகப் புரட்சியைக் கொண்டு வந்துள்ளது" என்ற கூற்றுடன் பொருந்தி நிற்கவில்லை. மாறாக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆக்கிரமிப்பிற்கு மிகவும் அடிபணிந்து ஒத்துழைத்த சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட ஜனநாயகம் ஒரு கேலிக் கூத்தாகியுள்ளது என்று கண்டித்துப் பேசியதன் மூலம் இந்த நிகழ்ச்சிக்கு பதில் கூறியுள்ளனர்.

Top of page