World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்

Pope Benedict XVI's political resume: theocracy and social reaction

போப் பதினாறாம் பெனடிக்ட் பற்றிய அரசியல் சாரம்: சமய குருமார் ஆட்சியும் சமூகப் பிற்போக்குத்தனமும்

By Joseph Kay
22 April 2005

Use this version to print | Send this link by email | Email the author

கார்டினல் ஜோசப் ராட்சிங்கரை புதிய போப்பாக தேர்ந்தெடுத்துள்ளமை, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் ஆளும் செல்வந்த தட்டுக்களினுள்ளே, குறிப்பாக ஐரோப்பாவில், வத்திக்கான் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மிகப் பிற்போக்கான சக்திகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபடும் என்பதை தெளிவாகக் காட்டும் அடையாளம் ஆகும்.

திருச்சபை கோட்பாட்டை செயல்படுத்துபவர் மற்றும் போப் இரண்டாம் ஜோன் போலின் முக்கிய ஆலோசகராகவும் நீண்ட நாளாக ராட்சிங்கர் இருந்து வந்தமை, போப் பதினாறாம் பெனடிக்ட் என்ற வகையில், அவர் கூடுதலான ஆக்கிரோஷத்துடன் அரசியல் விவகாரங்களில் தலையிடுவார் என்பதையும், கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கை பிரச்சினைகளையும் இதற்காக பயன்படுத்துவார் என்பதையும் குறிப்பதோடு, வலதுசாரி கட்சிகள் மற்றும் வலதுசாரி கொள்கை ஆகியவற்றின் சமூக அடித்தள வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

புதிய போப்பிற்கு கத்தோலிக்க திருச்சபையிலேயே தீவிர வலது பிரிவுகளுடன் மிக நெருக்கமான தொடர்பு உண்டு; இதில் Opus Dei போன்றவை அடங்கும்; இது வெளிப்படையாக திருச்சபை, அரசாங்கம் இவை தனித்தனியே செயல்படவேண்டும் என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாட்டிற்கு விரோதப் போக்கு உடையது ஆகும்; மேலும் திருச்சபையின் நிலையை, சாதாரண ஆட்சியின் நிர்வாகத்தை விட உயர்த்தும் முயற்சியையும் கொண்டுள்ளது. இத்தகைய சமயகுரு ஆட்சிப் போக்குகள், வலது கட்சிகளால், இருபதாம் நூற்றாண்டில் அடையப்பட்டிருந்த சமூக, ஜனநாயக வெற்றிகளை தாக்குவதற்கு கருத்தியல் அளவிலான ஆயுதசாலையாக பெருகிய முறையில் தழுவப்பபடுகின்றன.

அரசியல் விவகாரங்களில் ராட்சிங்கருடைய தலையீட்டிற்கு, மிக நேர்த்தியான உதாரணங்களில் ஒன்றாக, 2004 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அவர் கொண்டிருந்த பங்கை குறிப்பிடலாம். தேர்தலுக்கும் முந்தைய காலக்கட்டத்தில், ஏராளமான அமெரிக்க கத்தோலிக்க பிஷப்புக்கள், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு ஆன்மீகக் கூட்டுறவு (Holy Communion) தங்களால் மறுக்கப்பட்டுவிடும் என்று பகிரங்கமாகவே அறிவித்தனர்; இதற்குக் காரணமாக அவர்கள் கூறியது ஒரு கத்தோலிக்கராக இருந்தாலும், ஜோன் கெர்ரி கருக் கலைப்பு உரிமைகளில் தனியார் உரிமை வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தார் என்பதாகும். அமெரிக்க அரசியலமைப்பின் சமய சார்பற்ற அஸ்திவாரங்களை திமிர்த்தனமாக மீறும் அவர்களுடைய தலையீடு, கிட்டத்தட்ட சமய முறையில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கு கத்தோலிக்கர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற சமய ஆணைக்கு ஒப்பாயிற்று.

ஜூன் 2004ல் ராட்சிங்கர் அமெரிக்க பிஷப்புக்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார்; கிட்டத்தட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்பதை எதிர்க்கும் வகையில் கருக்கலைப்பு பிரச்சினையை பயன்படுத்திய திருச்சபை அலுவலர்களுக்கு, அது வத்திக்கானின் ஒப்புதல் முத்திரை கொடுத்தது போலாகி விட்டது. வாஷிங்டன் டி.சி. பிஷப்பிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் ராட்சிங்கர் குறிப்பிட்டதாவது: "ஒரு வேட்பாளர் கருக்கலைப்பு/இறப்புக் கோரும் உரிமை (euthanasia) ஆகியவற்றில் உடன்பாடு காட்டினால், அவருக்கு வாக்குப் போடுதல் என்பது வேண்டும் என்றே தீமையுடன் ஒத்துழைப்பு கொடுப்பது போல் ஆகும்; இதனால் ஒருவர் (Holy Communion) ஆன்மீக கூட்டுறவுக்கு தகுதி அற்றவர் ஆகிவிடுவார்".

கெர்ரியை பற்றிய வெளிப்படையானது என்ற குறிப்பு ஒன்றில், ராட்சிங்கர் "ஒரு கத்தோலிக்க அரசியல்வாதி, தொடர்ச்சியாக கருக்கலைப்பு, இறப்பை விரும்புதல் இவற்றை ஏற்கும் வகையில் தொடர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபட்டாலோ, அதற்காகச் சட்ட மன்றத்தில் பின்னர் வாக்களித்தாலோ, அவருக்கு ஆன்மீகக் கூட்டுறவு மறுக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

வத்திக்கான் அதிகாரபூர்வமாக மரண தண்டனையை எதிர்ப்பதாலும், ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பை கண்டனத்திற்கு உட்படுத்தியதாலும், ஒரு விதமான நியாயப்படுத்தும் தர்க்கத்தை கொண்டு சுமையை புஷ்ஷிடம் ஏற்றாமல் கெர்ரியிடம் ஏற்றிய வகையில் ராட்சிங்கர் கூறவேண்டியதாயிற்று; புஷ் ஈராக்கின் மீது தூண்டுதலற்ற போரை மேற்கொண்டிருந்தது மட்டுமல்லாமல், டெக்சாசின் கவர்னர் என்ற முறையில் 140க்கும் மேற்பட்ட மரண தண்டனைகளுக்கும் ஒப்புதல் கொடுத்திருந்தார். இதற்கு ராட்சிங்கர் கூறுவதாவது: "அனைத்துப் பிரச்சினைகளுமே கருக்கலைப்பு, விருப்ப இறப்பு இவற்றில் உள்ள அறநெறித்தன்மையை கொண்டிருக்கவில்லை. போர் தொடக்குதலைப் பற்றியும் மரண தண்டனை வழங்குவது பற்றியும் கத்தோலிக்கர்களிடையே கூட முறையான கருத்து வேறுபாட்டின் செல்வாக்கு இருக்கலாம். ...ஆனால் கருக்கலைப்பு, விருப்ப இறப்பு இவற்றில் எவ்விதக் கருத்து வேறுபாட்டிற்கும் இடமில்லை."

தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்னர் வந்த ராட்சிங்கரின் அறிக்கையின் அந்த நேரத்திய வெளியீடு, தற்செயல் நிகழ்வு அல்ல. ராட்சிங்கர் அறிக்கைக்கு ஒரு வாரம் முன்பு புஷ், வத்திக்கானுக்கு சென்றிருந்தார். National Catholic Reporter கொடுத்துள்ள தகவல்படி, வத்திக்கானுடைய வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் ஏஞ்சலோ சோடனோவிடம் "அனைத்து அமெரிக்க பிஷப்புக்களும் எனக்கு ஆதரவாக இல்லை" என்று புஷ் புகார் கொடுத்திருந்தார். அமெரிக்காவில் உள்ள திருச்சபை பிஷப்புக்களுக்கு கலாச்சார பிரச்சினைகளான கருக்கலைப்பு, ஓரினத் திருமணம் போன்றவற்றில் இன்னும் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொள்ளவேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ராட்சிங்கருடைய கருத்துக்கள் திருச்சபையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தின: கெர்ரிக்கு வாக்குப் போடும் எவரும் "தீமையுடன் முறையாக ஒத்துழைப்பதாக" முடிவு செய்யப்படலாம் என்பதேயாகும் அது. அவருடைய தலையீடு கத்தோலிக்க வாக்காளர்களிடையே புஷ்ஷிற்கான ஆதரவை 2000ல் இருந்த 46 சதவிகிதத்தில் இருந்து 2004ல் 56 சதவிகிதமாக உயரவைத்தது.

ஆகஸ்ட் 2004ல் ராட்சிங்கர் கொடுத்த மற்றொரு அறிக்கை ஐரோப்பிய அரசியல் விவகாரங்களில் கத்தோலிக்க திருச்சபையின் அழுத்தத்தை அதிகரிக்கும் இலக்கைக் கொண்டிருந்தது; இது துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படக் கூடாது என்ற வாதமாகும். பிரெஞ்சு செய்தித்தாள் Le Figaro விற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் ராட்சிங்கர், "வரலாற்றுப் போக்கை காணும்போது, துருக்கி எப்பொழுதுமே வேறு ஒரு கண்டத்தைத்தான் பிரதிபலித்துள்ளது; அந்நிலையில் எப்பொழுதுமே ஐரோப்பாவிற்கு நிரந்தர எதிர்ப்போக்கைத்தான் கொண்டுள்ளது. இரண்டு கண்டங்களையும் ஒன்றெனக் காண்பது ஒரு தவறாகிவிடும். அப்படிக் கொண்டு விட்டால், அது வளத்தின் இழப்பு என்ற பொருள் கொடுப்பதுடன், பொருளாதார நலனுக்காக பண்பாடு மறைதல் என்ற நிலை ஏற்படுத்துவதற்கு துணை நின்று விடும்" என்று கூறியிருந்தார்

ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை சேர்ப்பதற்கு தன்னுடைய எதிர்ப்பை துருக்கி ஒரு முஸ்லிம் நாடு என்ற உண்மையின் மேல்தான் அவர் வெளிப்படையாகவே தளமாகக் கொண்டிருந்தார். "ஒரு பொது அடையாளம் காணக்கூடிய பண்பாட்டை ஐரோப்பா கொண்டுள்ளது. இதன் வேர்கள் ... இந்தக் கண்டத்தில் ஊன்றியுள்ளவை, கிறிஸ்துவ மரபைக் கொண்டவை" என்று அவர் அறிவித்தார்.

பிற சமய பழிப்புவாதம் மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு இனவாதம் என்ற இரண்டிற்கும் அழைப்பு விடும் இந்த முன்னோக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல வலது சாரி மற்றும் பாசிசப் போக்குச் சக்திகளுக்கு பெரும் இருப்பாகப் போய்விட்டது.

கத்தோலிக்க திருச்சபையில் இவரை போப்பாக உயர்த்தும் கருத்து கொண்டிருந்த பிரிவுகள் மிகவும் ஊக்கம் செலுத்தியதின் தன்மையிலேயே போப் பதினாறாம் பெனடிக்டின் கீழ் திருச்சபை கொள்கையின் வளைவரைபாதை எவ்வாறு செல்லும் என்பதின் முன்னிழலைக் காணமுடியும். இப்பிரிவுகளில் Opus Dei மற்றும் Communion and Liberation என்ற இரண்டும் உள்ளன.

Opus Dei இன் மூன்று முக்கிய உறுப்பினர்களின் விரைவான, அழுத்தம் திருத்தமான ஆதரவை ராட்சிங்கர் பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு அமெரிக்கர் அல்லாத கார்டினல்களின் உதவியாளர்களை மேற்கோளிட்டு, வாஷிங்டன் போஸ்ட் ஏப்ரல் 21 பதிப்பில், ராட்சிங்கர் வத்திக்கானுடைய சட்டத்துறையின் மொழிபெயர்ப்புத் துறை தலைவரான ஸ்பெயினைச் சேர்ந்த Julian Herranz, மற்றும் Pontifical Council For the Family அமைப்பின் தலைவரான கொலம்பியாவை சேர்ந்த Alfonso Lopez Trujillo இருவருடைய ஆதரவையும் கொண்டிருந்தார் எனக் கூறியுள்ளது.

Opus Dei இன் உறுப்பினர்கள் மிக அதிகாமான அளவில் இரண்டாம் ஜோன் போலினால் ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்: இந்த இயக்கத்தின் நிறுவனரான Josemaria Escriva வை துறவியார் தகுதிக்கும் போப் உயர்த்தியிருந்தார். ஸ்பெயினின் பாசிச பிராங்கோ அரசாங்கத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்திருந்த Escriva, ஒரு முறை ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் ஹிட்லர் கொண்டிருந்த பங்கிற்காக அவரைத் "திருச்சபையை காப்பாற்றியவர்" என்று கூறியிருந்தார்.

Pontifical Council of the Family இன் தலைவர் என்ற முறையில் Trujillo கருக்கலைப்பு, பிறப்பு தடுப்பு, ஓரினச் சேர்க்கை மற்றய கலாச்சார பிரச்சினைகளில் மிகவும் பிற்போக்கான நிலைப்பாடுகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளார். 2003, ஜூன் 14ம் தேதி வெளியிட்ட "ஐரோப்பாவில் குடும்பமும் வாழ்க்கையும்" என்ற அறிக்கை ஒன்றில், "பல ஐரோப்பிய நாடுகளின் முன்வைக்கப்பட்ட பல நேர்மையற்ற, அறநெறி பிறழ்ந்த திட்டங்கள், உரியகாலத்தில் பிஷப்புக்களுடைய தலையீட்டினால், நிறுத்தி வைக்கப்பட்டிருக்க முடிந்திருக்கும்" என்று வாதிட்டு ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் கூடுதலான திருச்சபை குறுக்கீடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

"திருத்தூதர் இயக்கங்கள், அரசியல் வாதிகள், சட்டம் இயற்றுபவர்கள் ஆகியோருக்கு தெளிவான கருத்துக்களை கூறும், அவர்களிடையே தெளிவை உருவாக்கும்" விவகாரங்களை கண்காணிக்கும் அதிகாரம் பொருந்திய ஆராய்ச்சிக் கூடம் ஒன்று நிறுவப்படவேண்டும் என்றுஅழைப்பு விடுத்தார்.

Opus Dei ஸ்பானிய மக்கள் கட்சியுடன் நெருக்கிய தொடர்புகளை கொண்டுள்ளது; இதன் வேர்கள் பிராங்கோவின் ஆட்சிக்காலத்திற்கு சென்றுள்ளன; இதன் உறுப்பினர்கள் ஜோஸ் மரியா அஸ்னருடைய மக்கள் கட்சி அரசாங்கத்திலும் மிக உயர்மட்டப் பதவிகளில் இருந்தனர். இது மார்ச் 2004ல் அகற்றப்பட்டது.

இந்த கத்தோலிக்க திருச்சபையின் மிகத்தீவிர வலதுபிரிவு அமெரிக்க அரசியல் நடைமுறைக்குள்ளும் செல்வாக்கை பெருக்கி வருகிறது; குறிப்பாக இது குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர் ரிக் சான்டோரத்தின் செல்வாக்கின் மூலம் நடைபெறுகிறது. இவருக்கு Opus Dei உறுப்பினர் பதவி கொடுக்கப்படவில்லை; ஆனால் ஜனவரி 2002ல் ரோமில் நடைபெற்ற எஸ்கிரிவாவின் 100வது பிறந்த நாள் விழா கூட்டத்திற்கு முக்கிய விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் அமெரிக்க ஜனாதிபதியாக 1960ல் இருந்த ஜோன் எப். கென்னடி திருச்சபை மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தனித்தனியே நடக்கவேண்டும் என்றும் திருச்சபை தன்னுடைய செல்வாக்கை அரசியல் முடிவுகளில் காட்டுவதை அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

ராட்சிங்கரை ஆதரித்த மற்றொரு கத்தோலிக்கப் பிரிவு Communion and Liberation என்பது ஆகும்; இது இத்தாலிய வணிக மற்றும் அரசியல் செல்வந்த தட்டுக்களில் பெரும் செல்வாக்கு கொண்டது ஆகும். ஏப்ரல் 21ம் தேதி Los Angeles Timesல் வந்த கட்டுரை ஒன்று, ராட்சிங்கர் ஏற்றம் பற்றிய "மிகத் தெளிவான அடையாளம்" இந்த அமைப்பின் நிறுவனர் Monsignor Luigi Giussani உடைய இறுதிச் சடங்குகளின் போது நன்கு வெளியாயிற்று எனக் கூறுகிறது. பெப்ரவரி மாதம் நடைபெற்ற அந்த வழிபாட்டுக் கூட்டத்தில் மற்றவர்களுடன் இத்தாலிய பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனியும் கலந்து கொண்டார். "சிலர் எதிர்பார்த்தபடி மிலானின் ஆர்ச் பிஷப்பான Cardinal Dionigi Tettamanzi க்குப் பதிலாக, நோய்வாய்ப்பட்டுள்ள போப்பின் பிரதிநிதியாக வந்திருந்த ராட்சிங்கர் நல்லடக்க பிரார்த்தனை கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இவருடைய உரை பெரும் கரவொலியைப் பெற்றது. போப்பின் தேர்தலில் போட்டியாளராக இருந்த டெட்டமன்ஜியின் உரைகளுக்கு பார்வையாளர்கள் பெரும் மெளனத்தையே காட்டினர்."

கத்தோலிக்க அதிகார படிநிலையின் கூடுதலான தாராளப் பிரிவுகள் டெட்டமன்ஜிக்கு ஆதரவைக் கொடுத்திருந்தனர். ஆனால் ராட்சிங்கருக்கு கொடுக்கப்பட்ட உற்சாகமான வரவேற்பு, இத்தாலிய ஆளும் செல்வந்த தட்டின் வலதுசாரிப் பிரிவு அவருக்குப் பின் உறுதியாக நின்றது என்பதின் அடையாளமாயிற்று.

Communion and Liberation அமைப்பு அண்மையில் செய்திகளில் இடம் பெற்றது: அதற்குக் காரணம் இதன் உறுப்பினர் ஒருவரான Rocco Buttiglione இத்தாலியினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி, உள்துறை துறைக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்தப் பதவியை அவர் பெறுவதை ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தடைசெய்துவிட்டது; இதற்குக் காரணம் அவர் ஓரினச் சேர்க்கை பாவம் என்று கூறியிருந்ததுதான். இத்தாலிய அரசியலில், கருக்கலைப்பு உரிமைகள் சட்டத்தை திருப்பப் பெறவேண்டும் என்ற இயக்கத்திலும் புட்டிலியோன் முன்னணியில் இருந்துவருகிறார்.

கார்டினல் ராட்சிங்கரின் பிற்போக்குத்தனமான தலையீடு 2004 அமெரிக்கத் தேர்தலில் இருந்தது பற்றி அமெரிக்க செய்தி ஊடகம் கிட்டத்தட்ட முழு மெளனத்தை சாதிக்கிறது. இதேபோன்ற நிலையைத்தான் ஜனநாயகக் கட்சியும் கொண்டுள்ளது. ராட்சிங்கரின் தலையீட்டிற்கு நேரடியான இலக்காக இருந்த ஜோன் கெர்ரியோ இவர் போப்பாக ஏற்றம் பெற்றதை கத்தோலிக்க திருச்சபைக்கு நம்பிக்கை, புத்துயிர், சிறந்த எதிர்காலத்தை அளிக்கும் கணமாகும்" என்று உயர்த்தியுள்ளார். தானும் தன்னுடைய மனைவியும், "இரண்டாம் ஜோன் போலின் அதே வழியில் போப் பதினாறாம் பெனடிக்ட்டின் போப் பதவிக்காலமும் உலகைப் பெரிதும் கவர" இறைவனைப் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்தார்.

See Also :

போப் இரண்டாம் ஜோன் போல் : ஓர் அரசியல் இரங்கற் குறிப்பு

அமெரிக்கச் செய்தி ஊடகமும் போப்பும் -- திருச்சபையையும் அரசையும் பிரிப்பதன் மீதான தாக்குதல்

Top of page