World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Former Tory Prime Minister Edward Heath dies

முன்னாள் டோரி பிரதமர் எட்வார்ட் ஹீத் மரணம்

By Ann Talbot
25 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் எட்வார்ட் ஹீத் தமது 89ஆவது வயதில் ஜூலை 17 அன்று காலமானது ஊடகங்கள் இடையில் ஒரு அலைபோல் பழைய அனுபவங்களை நினைவுபடுத்துவதாக அமைந்திருந்தது. அவர் 1970 முதல் 1974 வரை பிரதமராக பணியாற்றி வந்தார். பிரதமர் அலுவலகத்தில் குறுகிய காலம் பணியாற்றிய பின்னர், அவர் தனது நீண்ட அரசியல் வாழ்வை அவருக்கு பின்னால் பதவிக்கு வந்த மார்கிரட் தாட்சரை நாடாளுமன்ற பின்வரிசைகளில் இருந்து கொண்டே கண்டிப்பதில் செலவிட்டார்.

அவர் தனது அரசியல் வாழ்வின் உச்சியில் இருந்தபோது கருதப்பட்டதைவிட இப்போது அவர் மிகவும் சாதகமாக வெளிச்சத்தில் பார்க்கப்பட்டு வருகிறார். ஒப்புநோக்கும் போது தாட்சரையும் தொழிற்கட்சி பிரதமர் டோனி பிளேரையும் விட அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் அதிக கொள்கை மிக்கவராகவும் கருதப்படுகிறார். அவர் ஆட்சி அதிகாரத்திலிருந்து 1974ல் இறங்கியது அதிர்ஷ்டமில்லாதது என்றும் துயரமானது என்றும் கூட கருதப்படுகிறது. இந்த பார்வையின்படி, அவருக்கு அந்த தண்டனை கிடைத்திருக்கக் கூடாது. இந்த பிரச்சனைகளை உருவாக்கும் வயதுமுதிர்ந்தவர் மூத்த அரசியல்வாதி என தெய்வமாக்கப்பட்டபின் அவர்காலத்து கசப்பான மோதல்கள் மறக்கப்பட்டுவிட்டன.

ஈராக் முற்றுகையின்போது நடைபெற்ற நிகழ்ச்சியை தொழிற்கட்சியை சேர்ந்த டோனி பென் நினைவு கூர்ந்தார், ஹீத் அவரை தொலைபேசியில் அழைத்து "எப்படி நாம் பிளேயரை ஒழித்துக் கட்டப்போகிறோம்?" என்று கேட்டார். அதற்கு முன்னர் அவர்கள் சமரசம் செய்து வைக்கின்ற ஒரு முயற்சியாக ஈராக்கிற்கு பறந்து சென்றனர்.

அமெரிக்காவின் ஒரு சார்பாளராக பிரிட்டனை ஆக்கியிருப்பதன் மூலம் இந்த நாட்டின் தேசிய நலன்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்ற வகையில் இந்தப் போரில் பிரிட்டன் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பென்னும், ஹீத்தும் அஞ்சினர். போர் கடுமையாக சர்வதேச உறவுகளை ஸ்திரமற்றதாக்கிவிடும் என்றும் உள்நாட்டு அரசியல் உறவுகளில் ஏற்றுக்கொள்ளமுடியாத தாக்கத்தை உண்டுபண்ணும் என்று அவர்கள் அறிவார்கள்.

இந்த இரண்டு வகைகளிலுமே அவர்களது அச்சங்களும் சரி என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. பிரிட்டன் அரசியல் வர்க்கத்தின் வரலாற்று அனுபவத்தின் ஒரு அமைப்பை, ஹீத்தும் பென்னும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். அவர்கள் இருவரும், பிளேயரையும் அவரது மந்திரிசபையையும் விட அதிக அரசியல் அனுபவம் உள்ளவர்கள். தனிப்பட்ட முறையில் பிளேயரை விட அதிக செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள். இன்னொரு வரலாற்று காலத்தில் இரண்டு மூத்த அரசியல் தலைவர்கள் ஒரு தீர்க்கமான தலையீடு செய்தார்கள் என்று வரலாறு உருவாக்கப்படுவதற்கு பதிலாக அந்த இரண்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேற்கொண்ட பயணம் பயனற்றது என்று எள்ளி நடையாடப்படும் நிலை வந்தது.

அவர்கள் இருவரும் போரைத் தவிர்ப்பதற்கு அல்லது பிரிட்டனை அதிலிருந்து ஒதுங்கியிருக்கச் செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது, அவர்களது தனிப்பட்ட பலவவீனங்களால் அல்ல. மாறாக அந்தத் தோல்வி பிரிட்டனின் அரசியல் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட ஆழ்ந்த வீழ்ச்சியை எதிரொலிக்கிறது. அவர்களது எச்சரிக்கை சொற்கள் பிளேயரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாததுடன், என்ன சொல்லப்படுகிறது என்பதை புரிந்து கொள்கின்ற ஆழமான அரசியல் கண்ணோட்டம் அவரிடமில்லை. அவர்கள் நன்றாக புரிந்து கொண்ட ஆபத்துக்களை பிளேயரால் அறிந்து கொள்ளமுடியவில்லை.

பிரிட்டனின் மூத்த அரசியல்வாதி என்ற முறையில் ஹீத் தனது பங்கை வகிக்க முயன்ற நேரத்தில் அவர் அந்த பங்கைவகிக்கும் ஒரு அரசியல் மேடையே இல்லை. அவர் பயிற்றுவிக்கப்பட்டு பணியாற்றி வந்த ஒட்டு மொத்த தேசிய அரசியல் கட்டமைப்பு அடிப்படையிலேயே இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது மற்றும் அவரது எச்சரிக்கைகள் ஒரு இளைய தலைமுறை அரசியல்வாதிகளிடம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை, ஏனென்றால் ஹீத்தையும் அவரது அரசியல் கண்ணோட்டங்களையும் உருவாக்கிய சமூக உறவுகள் அவர்களை பொறுத்தவரையில் கடந்தகாலத்தின் எச்சசொச்சங்களாக ஆகிவிட்டன.

ஹீத் காலங்களின் மாற்றங்களால் பாதிப்பிற்கு இலக்கான ஒருவர் மட்டுமே என்று கூறுவதற்கில்லை. அந்த மாற்றங்களை உருவாக்குவதற்கு அவரும் பங்களிப்புச் செய்திருக்கிறார், அவற்றின் விளைவுகள் குறித்து பின்னர் வருந்தியிருக்கிறார். அண்மைக்கால பிரிட்டிஷ் வரலாற்றில் மிகக்கடுமையான காலத்தில் அவர் பிரதமராக இருந்தார் என்பதை மறந்து விடுவது எளிதானது. ஐந்திற்கும் குறைவில்லாத மாநிலங்களில் அவசரகாலநிலை பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. வடக்கு அயர்லாந்தில் நிராயுதபாணி குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொழிலாளர் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வாரத்திற்கு மூன்று நாட்களே பணியாற்றுகின்ற அளவிற்கு தொழிற்துறை வீழ்ச்சியடைந்தது. மின்சார வெட்டு வழக்கமாக இருந்தன. அந்த காலகட்டத்தில் அதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு வேலையில்லாத நிலை பெருகிற்று. 1974ல் ஒரு பாரியளவிற்கு வேலைநிறுத்த அலை தோன்றி ஹீத் பதவியிறக்கப்பட்ட நேரத்தில் வர்க்க மோதல் பிரிட்டனை ஒரு புரட்சிகர நிலைமையின் விளிம்பிற்கே கொண்டு செல்கின்ற ஒரு உச்சநிலையை அடைந்திருந்தது. ஒரு தொழிற்கட்சி அரசாங்கம் மீண்டும் பதவிக்கு வந்ததால்தான் நாடாளுமன்ற ஆட்சி நிலைமுறிவு தவிர்க்கப்பட்டது.

ஹீத்தின் வரலாறு தவிர்க்க முடியாத அளவிற்கு களங்கப்பட்டிருப்பதற்கு காரணம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தாட்சர் முறியடித்த 1974ல் நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அவர் முறியடிக்கத் தவறிவிட்டதுதான். ஆனால் தாட்சரின் வெற்றிக்கு ஒரு தசாப்தமாக தயாரிப்பு செய்யப்பட்டு, மற்றும் இது முந்திய அனுபவங்களிலிருந்து ஆளும் வர்க்கம் பெற்ற படிப்பினைகளை சார்ந்திருந்தது. தாட்சர் அதே மாதிரியான எதிரிகளை கையாளவில்லை. சுரங்கத் தொழிலாளர்களை அவர் எதிர்கொண்ட நேரத்தில், தொழிற்சங்க காங்கிரஸ் தனது உறுப்பினர்கள் நலன்களை பாதுகாத்து நிற்பதற்கான எந்த பாசாங்கையும், அல்லது தொழிலாள வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்கும் மற்ற பிரிவினருக்கும் இடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் உறுதிபாட்டிற்கு துரோகமிழைத்தது.

தாட்சர் சுரங்கத் தொழிலாளர்களை தனிமைப்படுத்தி அவர்களை சமாளிக்கும் அனுகூலத்தை பெற்றார். ஹீத் தொடர்ந்து அணிதிரட்டப்பட்டு வந்த தொழிலாளர் வேலை நிறுத்தங்களையும் மற்றும் போர்க்குணம் கொண்ட தொழிலாள வர்க்கத்தை எதிர் கொண்டார். அப்போது அதன் தலைவர்கள் 1985ல் செய்ததைப்போல் சுரங்கத் தொழிலாளர்களை தனிமைப்படுத்த இயலவில்லை.

ஆனால் இது அவர்கள் அதனை செய்ய முயலவில்லை என்று அர்த்தப்படாது. ஹீத்தின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜோன் கேம்பல் சுட்டிக்காட்டியிருப்பது என்னவென்றால், அவர் பதவிக்கு வந்த நேரத்தில் ஹீத் வேலை நிறுத்தம் செய்வதற்கான உரிமையை கட்டுப்படுத்தும் தமது மசோதாவை தொழிற்சங்கத் தலைவர்கள் ஆதரிப்பார்கள் என்று எல்லா வகையிலும் எதிர்பார்த்தார். தனிப்பட்ட முறையில் அவரிடம் தொழில்துறை உறவுகள் மசோதாவை அவர்கள் வரவேற்பதாக உறுதியளித்தனர் என்றாலும், பகிரங்கமாக அவர்களால் அதை சொல்ல இயலவில்லை. தொழிற்கட்சியின் தொழில் அமைச்சரான Ray Gunther ஹீத்திற்கு சாதகமாக செயல்பட்டு தொழிற்சங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அவருக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்கினார். முந்திய பதவிக்காலத்தில் அதேபோன்றதொரு சட்டத்தை கொண்டு வருவதற்கு தொழிற்கட்சி முயன்றது.

ஒவ்வொரு கட்டத்திலும், தொழிற்சங்க தலைவர்கள் சமரசத்திற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தனர், ஆனால், அவர்களால் தொழிலாள வர்க்கத்தின் ஆத்திரத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. 1972 ஜனவரியில், தொழிற்துறை உறவுகள் சட்டத்திற்கு எதிராக 1,20,000 தொழிற்சங்க உறுப்பினர்கள் லண்டன் தெருக்களில் அணிவகுத்து, பிரித்தானிய வரலாற்றிலேயே இல்லாத பெரிய தொழிற்சங்க பேரணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஒருநாள் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றதுடன், மற்றும் சட்டரீதியான தண்டனைகளுக்கு அப்பாலும் தொழிற்சங்கங்கள் பதிவு செய்து கொள்ள மறுத்தன.

இறுதியாக, தொழிலாள வர்க்கத்தின் மிக போர்குணம் கொண்ட பிரிவுகளில் ஒன்றை தீர்க்கமாக முறியடிப்பதற்கு வழியமைத்து கொடுத்தவர்கள் தொழிற்கட்சித் தலைவர்கள்தான்.

ஹீத், ஒரு வலதுசாரி செயல்திட்டத்தின் அடிப்படையில்தான் ஆட்சிக்கு வந்தார். 1970 ஜனவரியில் செல்ஸ்டன் பூங்காவில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் வகுக்கப்பட்ட ஒரு மூலோபாயம் என்று விளக்கம் தரப்பட்டது. அப்போது தொழிற்கட்சி தலைவர் ஹரோல்டு வில்சன் புதிய டோரி பிரதமராவதற்கு அபிலாசை கொண்டுள்ள ஹீத்தையும் அவரது செயல்திட்டத்தையும் வர்ணிப்பதற்கு "செல்ஸ்டன் மனிதர்" என்ற சொல்லை உருவாக்கினார். அன்றைய எக்கோனமிஸ்ட் இந்த மாற்றம் பற்றி குறிப்பிட்டு அப்போதிருந்த டோரிகள் பற்றிய விமர்சனத்தில், "அவர்கள் அடுத்த அரசாங்கமாக தோன்றுவது சரிதான்----ஆனால் அவர்கள் ஒரு கருணையுள்ளவர்களாக தோன்றவில்லை" என்று குறிப்பிட்டிருந்தது.

செல்ஸ்டன் கடந்த காலத்திலிருந்து திட்டவட்டமாக பிரிந்து செல்கின்ற ஒன்று என்று கருதப்பட்டது, மற்றும் பிற்காலத்தில் தாட்சரோடு சம்மந்தப்பட்ட நாணய கொள்கையோடு தொடர்புபடுத்தப்பட்டிருந்தாலும் அந்த மாற்றம் தோற்றமளிப்பதைப்போல் முழுமையானதல்ல. பல அம்சங்களில் ஹீத் இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய சமரச அரசியலை மதித்தார்.

பெரும் மந்தநிலைக்கு பின்னர் கண்டிராத அளவிற்கு வேலையில்லாதோர் தொகை 1 மில்லியன் அளவிற்கு உயர்ந்ததும் ஹீத்தும் அவரது அமைச்சர்களும் பீதியடைந்தனர். அந்த அளவிற்கு வேலையில்லாதோர் தொகை உயர்ந்திருப்பது சமூக கொந்தளிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், நாடாளுமன்ற ஆட்சியில் ஸ்திரமற்றதனத்தை ஏற்படுத்திவிடும் என்றும் புரட்சியையே கூட உருவாக்கிவிடக் கூடும் என்றும் அரசியல் அனுபவம் எச்சரித்தது. பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் பகிரங்கமான வர்க்க மோதலை தவிர்ப்பதற்கும், ஒரு முயற்சியாக 1972ல் ஹீத் கீன்சிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். தாட்சரை பொறுத்தவரை, Enoch Powell போதித்த நாணய தத்துவங்களின் பக்கம் அதிக அளவில் ஈர்க்கப்பட்டதால், இது துரோகமாகும்.

தாட்சரையும், ஹீத்தையும் வேறுபடுத்தி காட்டுகின்ற இதர பெரிய பிரச்சனை ஐரோப்பா. டோரி பிரதமர் ஹரோல்டு மக்மில்லன் முதலில் ஐரோப்பிய சமூகத்தில் (EC) பிரிட்டனை சேர்க்க முதல் முயற்சியை மேற்கொண்டார். அப்போது அவர் ஹீத்தை தனது தூதராக தேர்ந்தெடுத்தார். மற்றும் தமது பதவிகாலம் முழுவதிலும் ஹீத் அந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தார். இறுதியாக, 1973ல் அவற்றில் சேர்ப்பதில் வெற்றிபெற்றார்.

பிரித்தானிய பிரதமர்களில் ஹீத், ஐரோப்பா மீது ஆர்வம் செலுத்துவதில் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டதுடன், மற்றும் அமெரிக்காவுடன் பிரிட்டனின் "சிறப்பு உறவு" குறித்து அலட்சியம் காட்டி வந்தார். ஆனால் மக்மில்லன் காலம் முதல் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளை தொடர்ந்து கடைபிடித்து வந்தன. போரின் அழிவிலிருந்து மீண்டு ஐரோப்பா மறுமலர்ச்சி பெறுவது ஒரு பொருளாதார அவசிய தேவையாயிற்று மற்றும் பிரிட்டிஷ் தொழிற்துறைக்கு அது ஒரு பெரிய சந்தையாக ஆயிற்று.

அதன் சாம்ராஜியம் இல்லாமல், பிரிட்டன் வர்த்தக நிலுவையில் தனக்கு சாதகமான நிலையை உருவாக்கிக்கொள்ள முடியாததுடன் மற்றும் கடந்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பா அதற்கு தேவைப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உடனடியாக பிரிட்டன் ஐரோப்பிய பொது வர்த்தக சமூகத்தில் சேருவதில்லை என்ற முடிவு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது, ஏனென்றால், தனக்கு சாதகமில்லாத நிபந்தனைகளை பிரிட்டன் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இன்றைக்கும் அதே நிபந்தனைகள் பிரிட்டனுக்கும் பிரான்சிற்கும் உறவுகளில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பினராக பிரிட்டன் ஆனது அந்நாட்டிற்கு ஒரு பொருளாதார உயிர்காக்கும் கருவியை தந்ததே தவிர, ஐரோப்பாவுடன் போட்டியிடுவதற்கு தொழிற்துறை மறுசீரமைக்கப்பட்டதால் நூறுஆயிரக்கணக்கான தொழில் இழப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. மலிவு ஊதிய தொழிலாளர்களும், தளர்த்தப்பட்ட வேலைவாய்ப்பு சட்டங்களும் அதன் ஐரோப்பிய ஒன்றிய போட்டியாளர்களிடமிருந்து பிரிட்டனுக்கு ஒரு தற்காலிக சாதகமாகியது.

தாட்சர் பெருமையடித்துக்கொண்ட மற்றும் இன்றைய தினம் பிளேயர் அனுபவித்துக் கொண்டிருக்கிற பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டது. அமெரிக்க மற்றும் ஆசிய நாடுகளின் நிறுவனங்கள், பிரித்தானியாவை ஐரோப்பிய சந்தைக்கான பொருட்களை தயாரித்து அனுப்ப ஒரு தகுந்த அரங்கு என்று கருதி அங்கிருந்து முதலீடு பிரிட்டனை நோக்கி வந்தது.

தாட்சர் எப்போதுமே ஹீத்துக்கு எதிராகவே தன்னை காட்டிக்கொண்டார். உண்மையிலேயே அவர்களது சமூக பூர்வீகமும் அரசியல் நிலைநோக்கும் ஒரே மாதிரியானவை. அவர்கள் இருவரும் ஒரு கீழ்மட்ட-மத்தியதர வர்க்க பிரிவிலிருந்து வந்தவர்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளிலிருந்து ஆக்ஸ்போர்டிற்கு தங்களது ஆற்றலால் பட்டத்தை வென்றெடுத்தவர்கள். சாதாரணமாக பொதுப்பள்ளிகளில் அரசு செல்வந்தத் தட்டினரின் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுவதற்கு மாறான சூழ்நிலைகளில் இருவரும் உயர்கல்வி பெற்றவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய, காலகட்டத்தில் ஏற்பட்ட ஒரு திட்டவட்டமான மாற்றத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் விளங்கினர், அப்போது டோரி கட்சி தனது சமூக அடித்தளத்தை பரந்ததாக்க முயன்று பிரிட்டிஷ் கிராமப்புறங்களில் வேர்விட்டு வளர்ந்த கட்சி என்பதற்கு மாறாக தன்னை ஒரு நவீன முதலாளித்துவக் கட்சி என்று வளர்த்துக் கொள்ள முயன்றது.

மேட்டுக்குடி முதியவர்களிடமிருந்து ஒரு இரகசியமான முறையில் கட்சித்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக முதல் தடவையாக, ஹீத், டோரி கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சேர்ச்சிலுக்கு பின்னர் சுதந்திரமான சொந்த வசதிகள் இல்லாத மற்றும் 1922ல் போநார் லா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சொந்த வீடு கூட இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது டோரி கட்சி தலைவராவார்.

உலகப்போருக்கு பிந்திய பழமைவாத அரசாங்கங்கள் அரசாட்சியிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுடன், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்காக நலன்புரி அரசை ஏற்றுக் கொண்டு தொழிற்துறையில் பெரும் பிரிவுகள் தேசியமயமாக்கியதையும் விரைவாக முன்னுக்குவந்த இந்த புதிய டோரி கட்சியின் பிரிவு அதிருப்தியை காட்டியது. வெளிநாடுகளில் அவர்கள் இந்தியாவை இழந்தார்கள், சூயசில் இழிவுபடுத்தப்பட்டார்கள் மற்றும் ஆபிரிக்காவிற்கு சுதந்திரம் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பழைய மேட்டுக்குடியினருடன் (aristocracy) எந்தவிதமான தொடர்புகள் இல்லாமல் ஒரு புதிய தலைமை வளர்ந்து கொண்டு வருவதன் மூலம் கட்சி தாக்குதலில் இறங்க முடியும் என்று நம்பப்பட்டது.

இந்த செயல் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஹீத் தோல்வியடைந்தார் என்றால் அது அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதால் அல்ல. அவரது வாழ்க்கை வரலாற்றை முன்னோக்கிப் பார்த்தால், அவரது தனிப்பட்ட குறைபாடுகளை பற்றி அதிகம் பேசப்பட்டது. அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்தது, அவர் பொது இடங்களில் தடுமாற்றமாக நடந்து கொண்டது, மற்றும் அவரது முரட்டுத் தனம் பற்றி அதிகம் பேசப்பட்டது - ஆனால் அவருக்கு அரசியலில் ஏற்பட்ட தோல்விக்கு அவருடைய தனிப்பட்ட குணங்கள் காரணமல்ல. தாட்சரும் அடங்கலான பல அரசியல்வாதிகள் கவர்ச்சியில்லாதவர். ஆனால் தாட்சர் வெற்றி பெற்றதற்கு காரணம் அவரும் அவரது ஆதரவாளர்களும் ஹீத்தின் தோல்வியிலிருந்து படிப்பினைகளை பெற்றனர்.

இந்த போரிட்டுக்கொண்டிருந்த ஜோடிக்கு வாரிசு பிளேயர் என்று சரியாக கருதப்படுகிறது. இதற்கு முந்திய எந்த தொழிற்கட்சித் தலைவரும் இந்த அளவிற்கு செயல்படுவதற்கு சுதந்திரமான உரிமை பெற்றிருக்கவில்லை. தொழிலாளர் இயக்கம் இடைவிடாது சீரழிந்துகொண்டு வந்தாலும், அதிகாரத்துவக் குழு தாட்சர் தொடக்கிவைத்த பொருளாதார கட்டாயங்களுக்கு தலைமை ஏற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதாலும், அவர் தொழிற்கட்சியை மாற்றி வலது நோக்கிய பாதையிலான அரசாங்கத்தை மிக எளிதாக கொண்டு வர முடிந்தது.

எனவே, எட்வார்ட் ஹீத்தை பற்றிய ஒரு மதிப்பீடு ஒரு அரசியல் மற்றும் சமூக அமைப்பின் மரணக் குறிப்பாக அவசியம் வடிவெடுக்கிறது. என்றாலும், மிக வியப்பளிக்கும் வகையில் அவர் எந்தக் குழுவையும் சார்ந்தவர் அல்ல. டோரிகள், ஹீத்தின் தோல்வியால் படிப்பினைகளை பெற்றனர், ஆனால் தொழிலாள வர்க்கம் படிப்பினைகளை பெறவில்லை.

ஹீத் அரசாங்கத்தின் ஆட்சிகாலம் பாரம்பரிய தொழிலாளர் இயக்கத்தின் உயர்ந்த கட்டத்தை காட்டுவதாகும். அந்த அரசாங்கத்தை வீழ்த்தியது அதன் மிகப்பெரிய வெற்றியாகும், ஆனால் அதுதான் அதன் கடைசி வெற்றிச் சிரிப்பாகும். 1974ம் ஆண்டுதான் ஹீத்தின் அரசியல் நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காலம் மட்டுமல்ல, ஆனால் மிக முக்கியமாக தொழிற்சங்கங்களும் தொழிற்கட்சியும் தொழிலாள வர்க்கத்தின் உடனடியான, நடைமுறையான நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியதாக தோன்றிய ஒரு நீண்ட வரலாற்று காலகட்டத்தின் முடிவுமாகும்.

1974ல் பிரிட்டனின் தொழிலாள வர்க்கம் ஒரு அரசாங்கத்தை கவிழ்த்தது. அன்றைய சூழ்நிலை, ஒரு புரட்சிகர நெருக்கடியின் தன்மையை கொண்டதாக இருந்தது. என்றாலும், அந்தச் சூழ்நிலையை அதன் புரட்சிகரமான தன்மையை தொழிலாள வர்க்கத்தைவிட ஆளும் செல்வந்தத் தட்டினர்தான் சிறப்பாக புரிந்து கொண்டனர்.

நம்பர் 10 இலிருந்து நான்கு நாட்கள் வரை காத்திருந்தார். அப்போது இராணுவப் படையை பயன்படுத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல் உண்மையிலேயே நிலவியபோது ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டார். தொழிற்சங்கத் தலைவர்களது ஆசியோடு தொழிற்கட்சி மீண்டும் பதவிக்கு வந்ததும் அந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டது.

அதற்கு ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தொழிற்கட்சி ஊதியங்களை குறைத்தது. ஹீத் அரசியல் அடிப்படையில் நிலைநாட்ட முடியாதது என்று கருதியிருக்கக் கூடிய அளவிற்கு வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்து, தொழிலாள வர்க்கம் விரக்கியடைந்து பிளவுபட்டது. தொழிலாளர்களில் வசதிபடைத்த பிரிவுகளை சார்ந்தவர்கள் தாட்சர் விடுத்த மக்கள் முதலாளித்துவம் (popular capitalism) என்ற அழைப்பினால் ஈர்க்கப்பட்டனர். 1974ல் ஏற்பட்டது போன்ற மற்றொரு இயக்கத்திற்கு தலைமை வகிக்கும் ஆபத்தில் சிக்கிக் கொள்ள தொழிற்சங்கங்கள் விரும்பாது தாட்சரின் தொழிற்சங்கத்திற்கு எதிரான சட்டத்தை எதிர்க்கவோ அல்லது தொழிலாளரின் ஐக்கியத்தை ஆதரிக்கவோ மறுத்தனர். ஹீத் தனது வேலைத்திட்டத்தில் வெற்றிபெற முடியாத தடைக்கல்லாக இருந்த வர்க்க ஒருமைப்பாடு என்ற உணர்வை தொழிற்கட்சி அரசாங்கம் பலவீனப்படுத்தியது.

தொழிலாளர்கள் இயக்கத்திற்கு உள்ளே இருந்து கொண்டே காட்டிக் கொடுத்ததாலும், துரோகத்தாலும் தொழிற்கட்சி சாதித்ததை ஒரு டோரி அரசாங்கம் நேரடி தாக்குதலால் செய்திருக்க முடியாது.

Top of page