World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Killing in northern Sri Lanka: a sign of sharp tensions

வட இலங்கையில் படுகொலை: உக்கிரமான பதட்டநிலைமைகளின் அறிகுறி

By Shree Haran
12 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

வட இலங்கையில் கடந்த வாரம் ஒரு இளம் தமிழ் முடிவெட்டும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டமையானது, அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது அமுலில் இருக்கும் மூன்றுவருட கால யுத்த நிறுத்தம் ஆட்டங்கண்டு போயுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

ஆகஸ்ட் 5, சுமார் 12.45 மணியளவில் யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இணுவில் சந்தியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்திற்கு ஐந்து இலங்கை இராணுவ சிப்பாய்கள் வந்தனர். இரண்டு சிப்பாய்கள் வெளியில் நின்ற ஏனையவர்களிடம் தமது துப்பாக்கிகளை கொடுத்துவிட்டு முடி வெட்டுவதற்காக உள்ளே சென்றனர்.

சில நிமிடங்களின் பின்னர், ஒரு துப்பாக்கியிலிருந்து வெடித்த துப்பாக்கிக் குண்டு, தகரத்தால் அமைக்கப்பட்டிருந்து முன்சுவரை துளைத்துக்கொண்டு இரு முடி வெட்டும் தொழிலாளிகளையும் காயப்படுத்தியது. தலையில் காயமடைந்த 23 வயதான ஜெயசீலன் சாந்தரூபன் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்போது உயிரழந்தார். 29 வயதான கே. லோகதாஸ் காயங்களுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து பிரதேசவாசிகள் வீதிக்கிறங்கியதோடு துருப்புக்கள் அருகில் இருந்த முகாமொன்றுக்குள் நுழைந்துகொண்டனர். ஆத்திரமடைந்த ஒரு கூட்டம் சம்பந்தப்பட்ட படையினரை நீதியின் முன் நிறுத்துமாறு கோரி பாதைகளை தடை செய்ததோடு அங்கு வந்த இராணுவ வாகனங்களுக்கும் கல்லெறிந்தது. இறுதியாக கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர் புகையை பிரயோகித்தனர்.

மோதல்கள் ஏற்பட்ட அதே சமயம், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சார்ல்ஸ் விஜேவர்தன கடத்திச் செல்லப்பட்டதோடு பின்னர் அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பாலவோடையில் கண்டெடுக்கப்பட்டது. உத்தியோகபூர்வ கருத்துக்களின்படி அவர் ஆப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தாதர். மேலும் ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சத்தால் பொலிஸார் 32 மணித்தியால ஊரடங்கு சட்டத்தை அமுல்செய்திருந்தனர்.

கடந்த வெள்ளியன்று இரு சிப்பாய்கள் கடுமையான பாதுகாப்பின் கீழ் மல்லாகம் பிரதேச நீதவான் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 20வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் பொலிஸார் சம்பவத்தோடு தொடர்புபட்ட ஐந்து இராணுவ சிப்பாய்களையும் கைதுசெய்திருந்த போதிலும் ஆரம்ப விசாரணையின் பின்னர் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அச்சமயம் அவர்களிடம் ஆயுதம் இருக்காததால் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது என பொலிஸார் சாதாரணமாக கூறிவிட்டனர்.

உயிரிழந்த தொழிலாளி சாந்தரூபன் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில் ஒரு வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் குடும்பத்தில் எட்டு உறுப்பினர்கள் இருந்த போதும் மூன்று பேர் மட்டுமே தொழில் செய்கின்றனர். சீட்டுகளாலும் தகரங்களாலும் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒரு சிகை அலங்கார நிலையம் சாந்தரூபனின் மாமனாருக்கு சொந்தமானது. அரசியல்வாதிகளிடமிருந்தோ அல்லது விடுதலைப் புலிகளிடமிருந்தோ தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். சாந்தரூபனின் மரணச் சடங்கிற்காக ஒரு சிகை அலங்கார நிலைய தொழிலாளர் ஒன்றியம் மட்டுமே ரூபா. 5,000 (50 அமெ. டொலர்கள்) வழங்கியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது பற்றி தெளிவாகவில்லை. சாந்தரூபனின் கொலை தற்செயலானது என உடனடியாகத் தெரிவித்த இராணுவம், திங்களன்று சில புகைப்படங்களை "ஆதாரங்களாக" வெளியிட்டது. இந்த துப்பாக்கிச் சூடு வேண்டுமென்றே செய்யப்பட்டதென தான் நம்பவில்லை என மற்றைய சலூன் தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.

எவ்வாறெனினும், மறுபக்கம் இராணுவமும் கொழும்பு ஊடகங்களும் பொலிஸ் அத்தியட்சகர் விஜேவர்தனவை கொலைசெய்தமைக்காக விடுதலைப் புலிகளின் பிரதேச தலைவர்களை குற்றஞ்சாட்டினர். எந்தவொரு ஆதாரமும் வழங்கப்படாததோடு விடுதலைப் புலிகளும் அதை மறுத்தனர்.

சுனாமி நிவராணங்களை கூட்டாக விநியோகிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்பாட்டை அடைவதில் அவநம்பிக்கையான நிலையில் உள்ள ஜனாதிபதி குமாரதுங்க, இந்த சம்பவம் தொடர்பாக மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் பிரதிபலித்தார். கடந்த வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில், சாந்தரூபன் மற்றும் விஜேவர்தன ஆகிய இருவரது கொலைகளையும் அவர் கண்டனம் செய்தார். சாதாரணமாக, இராணுவத்தினதும் அதன் குற்றங்களினதும் உறுதியான காவலரான குமாரதுங்க, இந்த சம்பவமானது நிவாரண கொடுக்கல் வாங்கலையும் யுத்த நிறுத்தத்தையும் தடம்புரளச் செய்யும் ஆற்றல் மிக்கது என்பதையிட்டு தெளிவாகவே கவலைகொண்டுள்ளார்.

வெள்ளியன்று வெளியான இரண்டாவது அறிக்கையில், சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சிப்பாய்களும் "பல வழிகளிலும் இராணுவ விதிகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக..." குமாரதுங்க உறுதிப்படுத்தினார். "கடந்த சிலவாரங்களாக அடுத்தடுத்து இடம்பெற்ற ஆத்திரமூட்டல் சம்பவங்களால் ஜனாதிபதி கவலையடைந்துள்ளார். இந்த சம்பவங்கள் வடக்கு கிழக்கில் மேலோங்கிவருகின்ற முரண்பாடான நிலைமைகள் உக்கிரமடைவதற்கு வழிவகுக்கும் பழிவாங்கல் நடவடிக்கைகளை தூண்டுவதற்காக தீவிரவாதக் கும்பல்களால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டது போலவே தோன்றுகிறது," என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

குமாரதுங்கவின் கருத்துக்கள், இராணுவத்திற்குள் பிளவுகள் இருப்பதையும் அந்த "தீவிரவாத தட்டுக்கள்" நிவாரண உடன்படிக்கையை கீழறுக்கவும் "வளர்ச்சியைடந்துவரும் மோதல்களை" துரிதப்படுத்தவும் முயற்சிக்கின்றன என்பதை குறிப்பாக அங்கீகரிக்கின்றன. சாந்தரூபனின் கொலை திட்டமிட்ட ஆத்திரமூட்டல் என நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக ஜனாதிபதி தெளிவாகவே உணர்கிறார். நிலைமையை அமைதிப்படுத்தும் முயற்சியாக, அவரது குடும்பத்திற்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்கும் என அவர் அறிவித்தார்.

இந்தக் கொலை வேண்டுமென்று செய்யப்பட்டிருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, 2002 பெப்பிரவரியில் யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதில் இருந்தே இராணுவம் ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களில் ஈடுபட்டு வந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்த 2004 ஏப்பிரல் வரை, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை கீழறுப்பதில் ஆயுதப்படைகளின் உயர்மட்ட தட்டுக்களுடன் குமாரதுங்க சுறுசுறுப்பாக சேர்ந்து செயற்பட்டார்.

ஆயினும், இதன் பெறுபேறாக, அவரது கட்சியின் அதிகாரத்தின் கீழ் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க குமாரதுங்க முயற்சித்தபோது இராணுவ பிரிவுகளின் எதிர்ப்புக்கு முகம்கொடுத்தார். கடந்த ஆண்டு பூராவும், தீவின் கிழக்கில் விடுதலைப் புலிகளின் மேலாதிக்கத்தை சவால் செய்யும், விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவுக்கு ஆயுதப்படைகளின் பிரிவுகள் மெளனமாக ஆதரவு வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு பூராவும் இரு கோஷ்டிகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சியான இரகசிய படுகொலைகள் நடந்துள்ளதுடன், பிராந்தியத்தில் யுத்த நிறுத்தம் கேள்விக்குள்ளாகியது.

நிச்சயமாக குமாரதுங்கவின் அறிவுரைகளின் கீழ் இயங்கும் இராணுவம், யாழ்ப்பாண சம்பவத்தை கலந்துரையாடுவதற்காக வெள்ளியன்று விடுதலைப் புலி அலுவலர்களை சந்தித்தது. ஒரு விடுதலைப் புலிகளின் பேச்சாளர், மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் படைகளை குறைக்குமாறு இராணுவத்தை கேட்டுக்கொண்டார். பாதுகாப்பு படைகளுக்கான யாழ்ப்பாண கமாண்டர் சுனில் தென்னகோன், இந்த வேண்டுகோளை திறமைவாய்ந்த வகையில் நிராகரித்ததோடு "சட்டத்தையும் ஒழுங்கையும் மீறும்" எவருக்கும் எதிராக இராணுவம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என பிரகடனம் செய்தார்.

20 வருடகால கசப்பான உள்நாட்டு யுத்தம் நடந்த தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்கனவே பதட்ட நிலைமைகள் தீவிரமாக அதிகரித்துள்ளன. ஆயுதப் படைகளும் இராணுவ வாகனங்களும் அரசாங்க கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் பூராவும் ஒரு உயர்மட்ட நிலமையை பேணிவருகின்றன. இவ்வாறு இராணுவம் நிலைகொள்வதானது வேலையின்மை, விலை உயர்வு மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பற்றாக்குறை சம்பந்தமான பகைமையையும் ஆத்திரத்தையும் மோசமாக்குவதை மட்டுமே செய்யும்.

கொலைகளும் சிறிய மோதல்களும் தொடர்கின்றன. ஆகஸ்ட் 5, கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பின் கலவாஞ்சிக்குடியில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகம் தாக்கப்பட்டது. ஆகஸ்ட் 7, கிழக்கில் உள்ள ஏறாவூரிலும் ஒரு தமிழ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே தினம், யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த தமது வாகனம் தாக்கப்பட்டதில் மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர். அக்கறைப்பற்று -- பொத்துவில் பிரதான பாதையில் காஞ்சிரங்குடா சந்தியில் அடையாளந் தெரியாத துப்பாக்கிதாரிகளால் இரு விடுதலைப் புலி உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த வார கடைசியில் வழங்கிய ஒரு பேட்டியில், இலங்கை சமாதான கண்காணிப்பு சபையின் தலைவர் ஹக்ருப் ஹெளக்லண்ட், நிலைமையை எச்சரிக்கையுடன் சாராம்சப்படுத்தினார். அவர் ராய்ட்டருடன் பேசுகையில் "யுத்தம் எப்போதும் உடனடியாக நிகழக்கூடியது என நாம் நினைக்கவில்லை," என தெரிவித்த போதிலும், "ஆனால் அவை பேச்சுவார்த்தை நிலைமைகளுக்கும் (சமாதான பேச்சுக்கள்) முன்னதாக செல்கின்றன. மோதலுக்கான ஆபத்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் இரு சாராருக்கும் இடையிலான நிலைமை சுமூகமானதாக இல்லை," என அவர் மேலும் தெரிவித்தார்.

Top of page