World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

20,000 demonstrate against US military torture training center

அமெரிக்க இராணுவ சித்திரவதை பயிற்சி மையத்திற்கு எதிராக 20,000 பேர் ஆர்ப்பாட்டம்

By Patrick Martin
24 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

20,000 மக்கள் அவர்களில் பெரும்பாலோர் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், சனியன்றும் ஞாயிறன்றும் ஜோர்ஜியாவிலுள்ள Fort Benning நுழைவாசலுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தனர், மேற்கு மண்டல பாதுகாப்பு கூட்டுறவு அமைப்பை மூடிவிட வேண்டுமென்று கோரினர். அமெரிக்காவின் பள்ளி (School of the Americas) என்ற புதிய பெயர் பலகையுடன் உள்ள இந்த இழிபுகழ்பெற்ற அமெரிக்க பயிற்சி நிலையம் இலத்தீன் அமெரிக்க இராணுவ சர்வாதிகாரிகள் மற்றும் சித்திரவதைக்காரர்களில் இரண்டு தலைமுறையினரை கல்வியூட்டியுள்ளது.

இலத்தீன் அமெரிக்காவில் இராணுவ ஒடுக்குமுறைக்கு அமெரிக்க அரசாங்கம் உடந்தையாக செயல்பட்டுவருவதை எதிர்த்து ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் அந்த ஆர்ப்பாட்டத்தில் இம்முறை மிகப்பெருமளவிற்கு மக்கள் திரண்டனர். ஈராக்கில் போருக்கு மக்களிடையே விரோதப்போக்கு வளர்வதனால்தான் இது அதிகரித்துள்ளது. பல போர் எதிர்ப்பு பேச்சாளர்கள் மக்களிடையே உரையாற்றினர் மற்றும் அமைதிக்கான ஈராக் முன்னாள் படையினர்கள் இந்த நிகழ்ச்சியில் முன்னணி வகித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜோர்ஜியாவிலுள்ள கொலம்பசில் கூடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான், Fort Benning பகுதியை சார்ந்த இராணுவத்தில் சேர்ந்துள்ள முதலாவது பெண் படையினர் ஒருவர் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மனசாட்சிப்படி எதிர்ப்பாளராக தன்னை பதிவு செய்துகொண்டு பணியாற்றுவதற்கு மறுத்துவிட்டார்.

டெக்ஸாஸ் தேசிய காவலர் பிரிவை சார்ந்த ஒரு சமையல்காரர் கத்தரின் ஜாசின்ஸ்கி (வயது 22) ஜோர்ஜியாவிலுள்ள கொலம்பசில் வியாழன்று நடைபெற்ற செய்தி மாநாட்டில் தனது வழக்கை விளக்குவதற்காக வந்திருந்தார். ஜூன் 2004ல் மனசாட்சிப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர் தன்னை பணிவிலக்கவேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்தார் ஆனால் இராணுவம் அதை அக்டோபர் 2004ல் புறக்கணித்துவிட்டது. ஜாசின்ஸ்கி அந்த முடிவை எதிர்த்து டெக்ஸாசிலுள்ள ஒரு மத்திய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தன்னை இராணுவ சேவையிலிருந்து விடுவிப்பதற்கு நீதிமன்றம் கட்டளையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது படைப்பிரிவான 111ஆவது பகுதி ஆதரவுக் குழு, இப்போது Fort Benning ல் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதற்காக பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. சென்றவாரம் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஆர்லண்டோ கார்சியா ஒரு தற்காலிக தடை ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற ஜாசின்கியின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டார். "ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நலன்களைவிட தனியொரு போர் வீரரின் நலன்கள் பெரிதானவை அல்ல" என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அண்மை மாதங்களில் ஈராக்கில் நடைபெற்று வருகின்ற சண்டைகளில் Fort Benningä சார்ந்தவர்களிடையே சாவு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அக்டோபர் 15 முதல் இந்தப் பகுதியிலிருந்து சென்று ஈராக்கில் பணியாற்றிவரும் படையினரில் குறைந்தபட்சம் 11 பேர் கொல்லப்பட்டனர் இவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோரத்து குண்டு வெடிப்புகளுக்கு இலக்கானவர்கள். அக்டோபர் 15ல் ரமாதி அருகே நடைபெற்ற ஒரே தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

வாரக் கடைசியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவு இராணுவ ஒடுக்கு முறையில் பலியான பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்களுக்கு அடையாள பூர்வமாக நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளாகும். Fort Benning வாசல்கதவுகளை கடந்து சென்ற ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளை நிற சிலுவைகளை சுமந்து சென்றனர். அவற்றில் எல் சல்வடோர் குவாத்தமாலா, நிகரகுவா, கொலம்பியா, ஆர்ஜென்டினா மற்றும் இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொலை செய்யப்பட்டவர்கள் அல்லது காணாமல் போய்விட்டவர்கள் என்று குறிக்கப்பட்டவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

சனிக்கிழமை மாலை நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் வழிபாட்டில் ஒரு மேடையில் அமர்ந்து பலியானவர்களது உறவினர்கள், உயிர்தப்பியவர்களும் உரையாற்றினர். அப்போது உரையாற்றியவர்களில் ஈராக்கில் கொல்லப்பட்ட ஜோர்ஜியாவை சேர்ந்த முதலாவது படையினரான ஜமால் அடிசனின் தாயார் பாட்ரீசியா ரொபேர்ட்ஸ்சும், மற்றும் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் நடத்தும் சகோதரி ஹெலன் பிரேஜியானும் உரையாற்றினர். ஜோர்ஜியா, லித்தோனியாவை சேர்ந்த ரொபேர்ட்ஸ் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது: ''நாடுதழுவிய அமைதி பேரணிகளை நான் ஆதரித்து வருகிறேன். அவை அத்தனையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவை என்று நான் கருதுகிறேன். அவை அத்தனையும் ஒரே உள்ளடக்கத்தை கொண்டது ஏனெனில் பலாத்காரம் போரை வளர்க்கிறது.

School of the Americas இல் பட்டம் பெற்ற ஒருவர் புரிந்த மிகக் கொடூரமான அட்டூழியத்தின் ஆண்டு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கண்டனங்கள் நடைபெறுகின்றன. 1989ம் ஆண்டு ஆறு Jesuit பாதிரியார்களையும் அவர்களது வேலையாளையும் அவரது புதல்வியையும் சல்வடோரியன் கொலைக்குழு கொன்று குவித்ததை நினைவுபடுத்துகின்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்டனப்பேரணி நடைபெறுகிறது. அதற்கு பின்னர் ஓராண்டு கழித்து ரோய் பர்கியாஸ் பாதிரியார் இந்த கண்டனப் பேரணிகளில் Catholic religious order (கத்தோலிக்க மத பள்ளிகளை) சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்: ஜோர்ஜ் டவுன், பாஸ்டன் கல்லூரி, சிகாகோ லயோலா மற்றும் லூயிஸ் பல்கலைக்கழகம் உட்பட 28 Jesuit உயர் கல்லூரிகளை சேர்ந்தவர்களும், அவர்கள் நடத்தும் 46 உயர்நிலைப்பள்ளிகள் 44 பள்ளிகளை சேர்ந்தவர்களும் இந்தப் பேரணியில் பங்கெடுத்து கொண்டனர்.

சான்பிரான்சிஸ்கோவிலுள்ள இக்னேஷியஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 2000 மைல்களுக்கு மேல் பயணம் செய்து இந்தப் பேரணியில் கலந்த கொண்டது உட்பட அமெரிக்கா முழுவதிலும் இருந்து ஆர்பாட்டக்காரர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். ஞாயிறு காலை Fort Benning நுழைவு வாயிலில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதாக 41 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் 17 மாநிலங்களிலிருந்தும் பிரதானமாக வடகிழக்கு மற்றும் மத்திய மேற்கு மற்றும் கொலம்பியா மாவட்டத்திலிருந்து வந்திருந்தனர்.

வாரக் கடைசியில் நடைபெற்ற கண்டன நடவடிக்கைகளில் போலீசார் தலையிடவில்லை. ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை எதுவும் நடக்கவில்லை என்றாலும் அமெரிக்க மாஜிஸ்திரேட் G.மல்லோன் பேர் கிளாத் ஆர்பாட்டக்காரர்களில் ஒருவருக்கு முதலாவதாக மிகக் கடுமையான தண்டனை வழங்கினார்: ஐயோவாவிலுள்ள Grinnell கல்லூரியில் துணை நூலகர் கிரிஸ்டியான காண்ட் (வயது 49) இற்கு 6மாத சிறைத்தண்டனையும் 2000 டாலர் அபராதமும் விதித்தார். சமாதானம் மற்றும் சுதந்திரத்திற்கான சர்வதேச மகளிர் கழகத்தில் ஒரு உறுப்பினரான இவருக்கு 2002ல் இதே குற்றத்திற்காக மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மற்றும் 2007 வரை ஐந்தாண்டுகளுக்கு Fort Benning இற்கு வரக்கூடாது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

Fort Benning கண்டனத்தில் Grinnell கல்லூரியை சேர்ந்த 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் இந்த நிகழ்ச்சி பற்றி வர்ணிக்கும்போது ''இது உண்மையிலேயே மிக சக்தி வாய்ந்த பேரணி ஏனெனில் இதில் கலந்து கொண்ட 20,000 மக்கள் உண்மையிலேயே நல்லெண்ணம் தீமையை வெல்லும் என்று நம்புகின்றனர் இத்தகைய பேரணிகளை அடிக்கடி நாம் காண முடியாது. அவர்கள் உண்மையிலேயே தாங்கள் நம்பியதை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது அனுபவங்களை சித்திரவதையில் பலியானவர்களை பற்றி ஸ்பானிய மொழியிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுகின்றனர். அது இரு மொழி நிகழ்ச்சியாகும்'' என்றார்.

காண்ட் போல் அல்லாமல் கைது செய்யப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலனவர்கள் குற்றச்சட்டுக்களை ஒப்புக் கொள்ளவில்லை மற்றும் அவர்கள் வழக்குகள் முடிவு செய்யப்படும்வரை 500 முதல் 2,500 டாலர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

School of the Americas இன் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலமுறை தோல்வியடைந்திருக்கின்றன. பயிற்சியின் போது பயன்படுத்தப்படுகின்ற சித்திரவதை கையேடு தொடர்பான தகவல்கள் 1999ல் அம்பலத்திற்கு வந்ததை தொடர்ந்து அந்தப் பள்ளியை மூடுவதற்கு ஒரு மசோதா கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கீழ்சபை-செனட் சபை இணைந்த கூட்டுக்குழு கூட்டத்தில் அந்த மசோதா நிறைவேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஒரு போலியான அடையாளச் சின்னமாக பென்டகன் 2001ல் அந்தப் பயிற்சியின் பெயரை மேற்கு மண்டல பாதுகாப்பு கூட்டுறவு கழகம் என்று மாற்றியது.

அந்தப் பள்ளியை மூடுவதற்கான ஒரு புதிய மசோதா கீழ்சபை ஆயுத சேவைகள் குழுவின் முன் உள்ளது. அதை 123 பேர் இணை-ஆதரவாளர்களாக தாக்கல் செய்துள்ளனர். ஆனால் குடியரசுக் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படுவதற்கு சாத்திய கூறு சிறிதும் இல்லை. (1995 இற்கு முன்னரும் கூட ஜனநாயகக் கட்சி கட்டுப்பாட்டில் இருந்த காங்கிரஸ் அத்தகைய நடவடிக்கையை தள்ளுபடி செய்தன.)

நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள பல ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இலத்தீன் அமெரிக்கக் கொலைக்குழுக்களுக்கு அமெரிக்கா உதவி தருவதை எதிர்ப்பதாக வாய்வீச்சு காட்டி வந்தாலும் கிளின்டன் நிர்வாகம் கொலம்பியாவில் எதிர்கிளர்ச்சி இயக்கத்திற்கு மிகக் கடுமையான ஆதரவு வழங்கியது. அது மத்திய அமெரிக்காவில் றேகன் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரத்தக்களரி தலையீடுகளை விட அது மேலும் அதிகமான பொதுமக்கள் சாவுகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

நல்ல நோக்கத்தொடு வந்திருக்கின்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பற்றி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் என்ன சொல்லி வந்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் முண்டு கொடுக்கும் கொத்தடிமை ஆட்சிகளோடு அதன் உறவுகளை வெட்டிவிடப் போவதில்லை. சென்ற ஆண்டு புஷ் நிர்வாகம் ஹைட்டியில் முந்திய டூவாலியர் சர்வாதிகாரத்தில் பணியாற்றி வந்த கொலைகார கும்பல்கள் ஜனாதிபதி ஜோன்- பெட்ரான் அரிஸ்டைடை பதவியிலிருந்து விரட்டுவதற்கு அனுமதியளித்தது. தற்போது வெனிசூலாவும் பொலிவியாவும் அமெரிக்காவின் இரகசிய நடவடிக்கைகளுக்கு குறிவைக்கப்பட்டிருப்பதுடன் கொலம்பியா ஆட்சிக்கு தொடர்ந்து இராணுவ உதவியை வழங்கி வருகிறது.

Top of page