World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British government threatens prosecution to suppress claim that Bush sought to bomb Al Jazeera

அல்ஜசீரா மீது புஷ் குண்டு வீச முயன்றார் என்ற கூற்றை நசுக்குவதற்கு வழக்குத் தொடர்வதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அச்சுறுத்தல்

By Julie Hyland
24 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

பாரசீக வளைகுடாவில் ஷேக்குகளால் ஆளப்படும் நாடான கட்டாரில் அமைந்துள்ள அரபு மொழி தொலைக்காட்சி நிலையமான அல்ஜசீரா தலைமையகங்களை குண்டு வீச அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ.புஷ் விரும்புகிறார் என்பதை தெளிவாக பதிவு செய்திருக்கும் ஒரு தலைமை இரகசியக் குறிப்பின் மேல் விவரங்களை வெளியிடும் அவர்கள் மீது உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் பத்திரிகை ஆசிரியர்களை அச்சுறுத்தியுள்ளது.

Daily Mirror ஒரு குறிப்பிட்ட இலக்காகியுள்ளது. ஏனெனில் அது நவம்பர் 22 செவ்வாய் கிழமையன்று ''தனது நேச நாடு மீது குண்டு வீச புஷ் சதி'' என்ற தலைப்பின் கீழ் அந்த குறிப்பை முதல் பக்கத்தில் தனி செய்தியாக பிரசுரித்திருந்தது. அந்த செய்தி பத்திரிகை தந்த தகவலின்படி அந்த ஐந்து பக்க குறிப்பு 2004 ஏப்ரல் 16ல் பிரதமர் டோனி பிளேயருக்கும் புஷ்சிற்கும் இடையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் பற்றிய ஒரு இரகசிய குறிப்பாகும்.

இந்த கூட்டம் 300,000 குடிமக்களை இராணுவ முற்றுகையின் கீழ் கொண்டு வந்த ஈராக்கின் பல்லூஜா நகரத்திற்கு எதிராக ஒரு பெரிய அமெரிக்க தாக்குதல் நடைபெற்றபோது அந்த சந்திப்பு நடந்தது. அல்ஜசீரா தலைமை அலுவலகங்களுக்கு எதிராக ''இராணுவ நடவடிக்கையை'' கட்டவிழ்த்துவிட புஷ் அச்சுறுத்தியதை அந்தக் குறிப்பு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அது முன்னர் அமெரிக்க இராணுவ தலைமையகங்களை வைத்திருந்த கட்டாரின் தலைநகரான டோஹாவிலுள்ளது. Mirror தந்துள்ள தகவலின்படி, பிளேயர் அத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று புஷ்ஷை அறிவுரை மூலம் ஏற்றுக் கொள்ளச் செய்தார்.

ஒரு பெயர் குறிப்பிடப்படாத வட்டாரம் பத்திரிகையிடம் கூறியது: ''இந்த இரகசிய குறிப்பு வெடித்துச் சிதறுவதும் பெருமளவில் புஷ்ஷிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதுமாகும். அவர் கட்டாரிலுள்ள மற்றும் பிற இடங்களிலுள்ள அல்ஜெசீரா அலுவலகங்களுக்கு குண்டு வீச விரும்புவதாக தெளிவுபடுத்தினார். அப்படிச் செய்வது ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என்று பிளேயர் பதிலளித்தார். புஷ் அப்படிச் செய்ய விரும்பினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ----மற்றும் அவர் அப்படி செய்யக் கூடாது என்று பிளேயர் விரும்பினார் என்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை.''

மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரம் செய்தி பத்திரிகையிடம் கூறியது: ''புஷ் மிகப் பிடிவாதமாக கடுமையாக இருந்தார் அதேபோன்று பிளேயரும் இருந்தார். இருவரும் பயன்படுத்திய சொற்களிலிருந்து இந்த அளவிற்கு மிகவும் தெளிவாக தெரிகிறது.'' அத்தகையதொரு தாக்குதல் ''ஈராக் போருக்கு பின்னர் மிகவும் பிரச்சனைக்குரிய வெளியுறவுக் கொள்கை பேரழிவாக அமைந்திருக்கும்'' என்று Mirror குறிப்பிட்டது.

செய்தி பத்திரிகை தந்துள்ள தகவலின் படி அந்தக் குறிப்பு 2004ல் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டோனி கிளார்க்கின் அலுவலகங்களுக்கு ''திரும்பியது''. அவர் இப்போது தனது பதவியை இழந்துவிட்டார். கிளார்கின் ஒரு ஆராய்ச்சியாளராக முன்னர் பணியாற்றி வந்த லியோ ஓ' கொன்னாருக்கு அரசாங்க ஊழியர் டேவிட் கியோக் அந்தக் குறிப்பை தந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் கியோக் மற்றும் ஓ'கொன்னார் மீது குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன மற்றும் அவர்கள் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கின்றனர். அந்த விசாரணையின் ஒரு பகுதியாவது இரகசியமாக நடத்தப்படலாம்.

Mirror ஆசிரியர் ரிச்சார்ட் வாலஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையை அச்சிடுவதற்கு முன்னர் பிளேயர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு அந்த செய்தி பத்திரிகை பரிசோதித்தாக கூறியிருக்கிறார். ''பிரசுரிக்க போகிறோம் என்ற எங்களது எண்ணத்தை முழுமையாக பிரதமர் அலுவலகம் (No 10) புரிந்து கொள்ளச் செய்தோம் மற்றும் ''அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்ற வகையிலோ எந்த ''கருத்தும்'' இல்லையென்று எங்களுக்கு தகவல் தரப்பட்டது என்று கூறியுள்ளார். அப்படியிருந்தும் 24 மணி நேரத்திற்குள் அரச வழக்கு தொடுனர் கோல்ட் ஸ்மித் பிரபு Mirrorயும் மற்றவர்களையும் 5ஆவது பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

''ஒரு ஆவணத்தை வெளியிடுவதற்கு ஒரு அரசாங்க ஊழியர் சட்டவிரோதமாக தகவல் தருவாரானால் அது உத்தியோகபூர்வ இரகசிய சட்டம் 5ஆவது பிரிவை மீறுகின்ற செயலாகும்''. என்று கோல்ட் ஸ்மித் பத்திரிகை ஆசிரியர்களை எச்சரித்திருக்கிறார். மேல் விவரங்களை வெளியிடுவதில்லை என்று Mirror உறுதிப்படுத்தாவிட்டால் மேலும் உடனடியாக உயர்நீதி மன்றத்தின் தடையுத்தரவை பெறப்போவதாகவும் கோல்ட் ஸ்மித் எச்சரித்துள்ளார். ''அடிப்படையிலேயே அதை ஏற்று செயல்பட நாங்கள் சம்மதித்திருக்கிறோம்'' என்று Mirror குறிப்பிட்டது.

அச்சுறுத்தல்களுக்கு அப்பாலும் அரசாங்கம் நேரடியாக அந்த இரகசியக் குறிப்பின் உண்மையை ஆட்சேபிக்கவில்லை. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதை பற்றி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று கூறியது.

BBC 2 இன் ''செய்திகள் இரவு'' என்ற நிகழ்ச்சியில் ஒரு அறிக்கையை தந்த கிளார்க் அந்த குறிப்பை படித்துப்பார்த்த பின்னர் அதை கொடுத்த வட்டாரத்திற்கே திருப்பி தந்துவிட்டதாக கூறினார் ஏனெனில் அதில் ''ஈராக்கில் பிரிட்டீஷாரின் வாழ்விற்கு இழப்பை ஏற்படுத்தும் தகவல் அடங்கியிருந்தது'' என்று அவர் குறிப்பிட்டார்.

அதே நிகழ்ச்சியில் பேட்டி காணப்பட்ட தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பீட்டர் கில்போயில் உறுதிப்படுத்தியது என்னவென்றால் பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் இந்த இரகசிய குறிப்பு என்று கூறப்படுவது குறித்து தான் கேள்விப்பட்டதாகவும் ''அதிபர் புஷ் அல்ஜெசீரா மீது குண்டு வீச விரும்பினார் என்ற நம்பத்தக்க கருத்து'' உண்மைதான் என்று அவர் குறிப்பிட்டார்.

கில்போயில், நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து பிளேயர் அந்தக் குறிப்பின் முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று கேட்டு கொண்டார். அல்ஜசீரா மீது தாக்குதல் நடத்துவதை வேடிக்கையாக புஷ் கூறினார் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். கில்பாயில் ''அல் ஜெசீரா பத்திரிகையாளர்கள் பயன்படுத்திய பாக்தாத் ஓட்டலில் ஒரு தாக்குதல் நடாத்தப்பட்டமை அது பெரும் சர்ச்சையை கிளறிவிட்டது. [கொசோவோ போரின் போது] சேர்பியாவின் ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை ஒரு வேடிக்கை கருத்து என்று தள்ளிவிட முடியாது ஆனால் அதில் எந்த வேடிக்கையும் இல்லை என்பதை நான் அறிந்திருக்கிறேன்.'' என கூறினார்.

அல்ஜசீரா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் Daily Mirror செய்தியின் விவரங்களை மிக விழிப்பான வழிவகையில் சரிபார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த செய்தி சரியாக இருக்குமானால் அது அல்ஜசீராவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள ஊடக அமைப்புகளுக்கு அதிர்ச்சி கவலை ஆகிய இரண்டையும் தருவதாக இருக்கும். நாங்கள் மிக நேர்மையாக வெள்ளை மாளிகையையும் டவுனிங் ஸ்டிரீட்டையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இருவரும் Daily Mirror செய்தியை சவால் செய்ய வேண்டும். அந்த இரகசியக் குறிப்பு சரியாக இருக்குமென்றால் பத்திரிகையாளர்களையும் செய்தியமைப்புக்களையும் திட்டமிட்டு குறிவைத்து தாக்குவது ஏன் என்பது குறித்து பதவியில் இருப்பவர்கள் தங்களது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

அப்படிச் செய்ய தவறுவது ''இதற்கு முன்னர் அல்ஜசீரா பத்திரிகையாளர்கள் மற்றம் அலுவலகங்கள் சம்மந்தப்பட்ட சம்பவங்களில் அமெரிக்க நிர்வாகத்தின் தகவல்கள் குறித்து கடுமையான சந்தேகங்கள் ஏற்படும்'' என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Daily Mirror செய்தியை அமெரிக்க நிர்வாகம் தள்ளுபடி செய்துள்ளது மற்றும் அந்த செய்தி ஏஜென்சியை குறிவைத்து தாக்கும் என்று கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு ''விந்தையானது'' என்று கூறியது. அவற்றின் வரலாற்று ஏடுகளே வேறு விதமாக அமைந்திருக்கிறது.

2002 நவம்பரில் ஆப்கனிஸ்தானின் காபூலில் இருந்த அல்ஜெசீரா அலுவலகம் அமெரிக்காவின் ஒரு 500 இறாத்தல் குண்டினால் அழிக்கப்பட்டது. அப்போது ஒருவரும் காயமடையவில்லை ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த கட்டிடத்தில் எவரும் இல்லை. அதற்கு முன்னர் அல்ஜெசீரா அலுவலகம் இருப்பது பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டபோதிலும் ஒரு பயங்கரவாத இடத்தை குறி வைக்க எண்ணியதாக அமெரிக்கா அப்போது கூறியது.

ஈராக்கில் பாக்தாத்திலுள்ள அல்ஜெசீரா அலுவலகங்களில் அமெரிக்க ராக்கெட்டுக்கள் நேரடியாக தாக்கியதில் 2003 ஏப்ரல் 8ல் அல்ஜெசீரா நிருபர் டாரிக் ஐயுப் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பல அல்-ஜசீரா ஊழியர்கள் கடுமையாக காயமடைந்தனர்.

அருகாமையில் இருந்த அபுதாபி தொலைக்காட்சி நிலையங்களும் தாக்கப்பட்டன. அதன் நிருபர் ஷாக்கர் ஹமேத் உதவிக்காக அவசர அழைப்பு விடுத்தார். ''அல்ஜெசீராவின் கட்டார் செயற்கைகோள் செய்திபரப்பும் மற்றும் பாக்தாத்திலுள்ள அபுதாபி தொலைக்காட்சி அலுவலகத்தை சேர்ந்த இருபத்தைந்து பத்திரிகையாளர்களும் தொழில்நுட்ப ஊழியர்களும் பாக்தாத்திலுள்ள அபுதாபி தொலைக்காட்சி நிலையத்தில் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்றார்கள்'' என்று ஹமீத் அழைப்பு விடுத்தார்.

இந்த தாக்குதல்கள் ஒரு ''தவறு'' என்று அமெரிக்க அரசுத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் சற்று நேரத்தில பாக்தாத்தின் பாலஸ்தீனிய ஓட்டல் மீது ஒரு அமெரிக்க டாங்கி நடத்திய தாக்குதலில் இரண்டு படப்பிடிப்பாளர்கள் கொல்லப்பட்டனர். அந்த ஓட்டலில் ஏறத்தாழ 200 இற்கு மேற்பட்ட சர்வதேச பத்திரிகையாளர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களில் அனேகமானோர் அமெரிக்க இராணுவத்தோடு இணைந்திராதவர்களாகும்.

இந்த தாக்குதலில் பலியானவர்கள் ராய்ட்டர்ஸ் படப்பிடிப்பாளர் ராதாஸ் புரோட்டியுக் மற்றும் தனியார் ஸ்பெயின் தொலைக்காட்சி நிலையம் ஒன்றிற்கு பணியாற்றிய ஜோஸ் கவ்சோ ஆகியோர். ஏனைய ஊடகங்களின் மற்ற மூன்று பேர் காயமடைந்தனர்.

அல்ஜெசீரா பத்திரிகையாளர் தாசிர் அல்லொவுனி (Tayssir Allouni) ஆப்கனிஸ்தானில் தனது அலுவலகம் தாக்கப்பட்டதையும் பாலஸ்தீன ஓட்டலில் நடந்த தாக்குதலையும் நேரில் கண்டவர். காபூலில் தலைமை நிருபராக பணியாற்றிய போது அந்த அலுவலகங்கள் தகர்க்கப்பட்ட நேரத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் மற்றும் பாலஸ்தீனிய ஓட்டலில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து செய்திகளை சேகரித்து அனுப்பினார்.

அண்மையில் அல்லொவுனி ஒரு ஸ்பெயின் நாட்டு நீதிமன்றத்தில் பயங்கரவாதத்திற்க உதவியதாக ஒரு வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்----அவற்றை அவர் மறுத்தார். 2001ல் அவர் ஓஸாமா பின்லேடனை பேட்டி கண்டமை அவர் அல்கொய்தாவிடம் தொடர்பிற்கு நிரூபணம் என்று அரச தரப்பு வழக்கு கூறியது.

அல்ஜசீரா மட்டுமே குறிவைத்து தாக்கப்படவில்லை. எட்டு பத்திரிகையாளர்களும் ஊடக உதவியார்களும் அமெரிக்க இராணுவத்தினால் கொல்லப்பட்டனர் என்று எல்லையற்ற நிருபர்கள் என்ற அமைப்பு (Reporters Without Borders) கூறியிருக்கிறது. இப்படி பலியானவர்களில் பிரிட்டனின் ITV செய்தியாளர் டெர்ரி லிலோய்டும் ஒருவர் அவர் போர் தொடங்கிய போது பாஸ்ராவிற்கு வெளியில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் ஈராக்கிற்குள் புக முடிந்த இராணுவத்துடன் இணைந்திராத பத்திரிகையாளர்கள் வெகு சிலரில் லிலோய்டும் ஒருவர். அதே தாக்குதலில் காயமடைந்த பிரான்சு படப்பிடிப்பாளர் டானியல் டுமுஸ்டியேர் இந்த தாக்குதல் பற்றி கூறும் போது லிலோய்டு கொல்லப்பட்ட பின்னரும் தங்களது வாகனங்கள் மீது தொடர்ந்து அமெரிக்கப்படைகள் சுட்டுக் கொண்டிருந்ததாக கூறினார் மற்றும் ''தொந்தரவு தரும் சாட்சிகளை ஒழித்துக் கட்டிவிட'' இராணுவம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

2004ல் ஸ்டேட் ஆப் யூனியன் உரையில் புஷ் அல்ஜசீராவும் இதர செய்தி அமைப்புக்களும் ''வெறுப்பை கிளறும் பிரசாரம்'' செய்து வருவதாக கண்டித்தார். பாதுகாப்பு துணை செயலர் போல் வொல்போவிற்ச் மற்றும் பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்டின் நிர்வாகம் அந்த வலைப்பின்னல் மீது விரோதப்போக்கு கொண்டிருப்பதை மறைக்கவில்லை.

BBC Two இன் ''செய்தி இரவு'' நிகழ்ச்சியில் அமெரிக்காவை தளமாகக்கொண்ட பாதுகாப்பு கொள்கை நிலையத்தை சார்ந்த பிராங் கப்பேனியிடம் அந்த குறிப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. செய்தி ஏஜென்சிகளை குறி வைத்து இராணுவ தாக்குதல் நடத்துவது உண்மையிலேயே ''ஆத்திரமூட்டுவதா.'' என்று கேட்கப்பட்டது. அந்த குறிப்பு நம்பகத்தன்மையானதா இல்லையா, என்று கேட்கப்பட்டதற்கு அமெரிக்க போர் புரிந்து ''வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கடமையுடன் ஈடுபட்டுள்ள ஒரு போரில் எதிரியின் பிரசார கருவியாக'' அல்ஜெசீரா செயல்பட்டு வருகிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.

''அல் ஜெசீரா தீவிரமாக நமது எதிரிகளுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற அளவிற்கு அதை ஈடுபடாமற் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதுதான் பொருத்தமுடையது'' என்று அவர் தொடர்ந்தார். இந்த செய்தி நிறுவனம் ''சுதந்திரத்தை நேசிக்கின்ற மக்களது'' ''எதிரிகளின்'' சேவையில் தனது அலுவலகங்களையும் ஊழியர்களையும் ''தீங்கான வழியில்" வைத்துள்ளது. இது ''நியாயமான போரில்'' ''வெளிப்படையாய் இலக்கில்" வைத்து நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

Top of page