World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president installs unstable minority government

இலங்கை ஜனாதிபதி ஸ்திரமற்ற சிறுபான்மை அரசாங்கத்தை பதவியில் இருத்துகிறார்

By Nanda Wickremasinghe
8 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவினால் கடந்த மாதக் கடைசியில் அமைக்கப்பட்டுள்ள சிறுபான்மை அரசாங்கம், ஆழமான அரசியல் ஸ்திரமின்மையின் ஒரு அறிகுறியாகும். 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 70 ஆசனங்களை மட்டுமே கொண்டிருக்கும் அவர், தேர்தலில் அவருக்கு பக்கபலமாக இருந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய ஆகிய இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் ஆதரவில் முற்றிலும் தங்கியிருக்கின்றார்.

குறிப்பிடத்தக்க வகையில், முந்தைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (சுதந்திர முன்னணி) அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜே.வி.பி, இராஜபக்ஷவை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கை கொண்டிருந்த போதிலும், அமைச்சரவையில் சேர மறுத்துள்ளது. மக்களை கவரும் வாய் வீச்சுக்களை நம்பியிருக்கும் இக்கட்சி, முதல் தடவையாக 2004ம் ஆண்டு ஆளும் கூட்டணியில் சேர்ந்ததோடு அதன் வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறியதையடுத்து, விரைவில் மக்களிடையே ஆதரவை இழந்தது.

39 ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களதும் 10 ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களில் 9 பேரதும் ஆதரவுடன் சுதந்திர முன்னணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டிருந்தாலும் கூட, அது மிகவும் ஸ்திரமற்றுள்ளது. இராஜபக்ஷவின் சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு (ஸ்ரீ.ல.சு.க) 60 உறுப்பினர்களே உள்ளனர். எஞ்சியுள்ள 10 உறுப்பினர்களும், முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணி, லங்கா சம சமாஜக் கட்சி (ல.ச.ச.க), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உட்பட சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகளை சேர்ந்தவர்களாகும்.

சுதந்திர முன்னணி, எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் (ஸ்ரீ.ல.மு.கா) இருந்து பிரிந்து வந்த சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. அடிக்கடி நிகழும் பணம் அல்லது அரசியல் தூண்டுதல்களுடனான "கட்சி தாவல்" நடவடிக்கை, இலங்கையில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட வழிமுறையாக இருப்பதோடு, அதனால் இரு வழிகளையும் வெட்ட முடியும் என்பதையிட்டு இராஜபக்ஷ கவனமாக உள்ளார். இதன் விளைவாக, அவருடைய அமைச்சரவை அநேகமாக ஆளும் கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளதுடன், இதன் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கத்தின் பக்கமே இருக்க வேண்டும் என்ற செயலூக்கம் எல்லோருக்கும் உண்டு.

இராஜபக்ஷ 25 அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்து அற்ற 26 அமைச்சர்கள் மற்றும் 29 பிரதி அமைச்சர்களாக மொத்தம் 80 பதவிகளை 70 சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளார். 60 ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற உறுப்பினர்களில் 58 பேருக்கு ஏதேனும் ஒரு வகையில் ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை கொண்டுள்ளனர். இரண்டே இரண்டு ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்களுக்கு மட்டுமே அமைச்சுப் பொறுப்புக்கள் கொடுக்கப்படவில்லை. அவர்களில் முதலாமவர் படுகொலை செய்யப்பட்ட வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய ஆசனத்திற்காக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட வேண்டியவர். இரண்டாமவர் இராஜபக்ஷவிற்குப் பதிலாக அவருடைய பாராளுமன்ற ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் சகோதரியான நிருபமா இராஜபக்ஷ ஆவார்.

இராஜபக்ஷ சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பியிருப்பதோடு, அந்த எண்ணிக்கையை உயர்த்தவும் முயன்று வருகிறார். எதிர்வரும் வாரங்களிலும் மாதங்களிலும், எதிர்க்கட்சியான ஐ.தே.க யில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களை கவர்வதற்கு அல்லது மீண்டும் உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தில் சேர்ந்துகொள்ள ஜே.வி.பி ஐ உற்சாகப்படுத்துவதற்கு மேலும் அமைச்சர் பதவிகளை இராஜபக்ஷ உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே நேரத்தில், ஜனாதிபதி முக்கிய அமைச்சரவைப் பொறுப்புக்களின் மீது உறுதியான பிடியைக் கொண்டுள்ளார். ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மிகவும் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டில் இருந்து பிரச்சாரம் நடத்திய இராஜபக்ஷ, தன்னையே பாதுகாப்பு அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமித்துக் கொண்டுள்ளார். இராஜபக்ஷ தனது சகோதரர் கோதபாய இராஜபக்ஷவை பாதுகாப்புச் செயலராக நியமித்துள்ளார். இப்பதவி பாதுகாப்புத் துறையின் நிர்வாகத் தலைமைப் பதவியாகும்.

முந்தைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முக்கிய ஆதரவாளர்களை புதிய ஜனாதிபதி வேண்டுமென்றே ஓரம் கட்டியுள்ளார். அதில் சந்திரிகாவின் சகோதரரான அனுரா பண்டாரநாயகா குறிப்பிடத்தக்கவர் ஆவர். ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய உடனான இராஜபக்ஷவின் தேர்தல் உடன்படிக்கையானது பெரும் வர்த்தகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளும் பரிந்துரைக்கும் "சமாதான முன்னெடுப்புகளுக்கு" தீங்கு இழைப்பதாக தேர்தல் பிரச்சாரங்களின் போது பண்டாரநாயக்க வெளிப்படையாக இராஜபக்ஷவை விமர்சித்திருந்தார்.

ஸ்ரீ.ல.சு.க மத்திய குழு முன்னதாகவே பண்டாரநாயக்காவை பிரதமர் பதவிக்கு நியமனம் செய்திருந்தபோதிலும் கூட, அது அவருக்கு கொடுக்கப்படவில்லை. அவர் மீண்டும் வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்படாமல் ஒப்புமையில் ஒரு சிறிய பதவியான சுற்றுலாத்துறை அமைச்சு அவருக்கு அளிக்கப்பட்டது. இதேபோன்ற காரணங்களால், குமாரதுங்க ஆதரவாளரான சரத் அமுனுகம நிதி அமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு பொது நிர்வாகத்துறைக்கு மாற்றப்பட்டார்.

பல நாட்களாக ஊசலாடியபின், இராஜபக்ஷ ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு தெளிவான முயற்சியில் பிரதமர் பதவிக்கு ரத்னசிறி விக்கிரமநாயக்காவை தேர்ந்தெடுத்தார். புலிகளுக்கு எதிரான கடும் போக்கில் விக்கிரமநாயக்க பிரசித்தி பெற்றவராக இருப்பதோடு பெளத்த உயர் பீடங்களுடனும் நெருக்கமான உறவுகொண்டவராவார். முக்கியமான பதவியான பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பும் அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

விக்கிரமநாயக்காவை தேர்ந்தெடுத்த பின், பிரதமர் பதவியை விரும்பிய முக்கிய ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படவேண்டியவற்றை கொடுக்க ஜனாதிபதி தள்ளப்பட்டார். இராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மையாக இருந்த மங்கள சமரவீர வெளியுறவு அமைச்சராகவும் மற்றும் தபால், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த ஸ்ரீ.ல.சு.க உறுப்பினராக இருந்தபோதிலும் கூட, தனக்கு உரிய பதவி கொடுக்கப்படவில்லை என டீ.எம். ஜயரட்ன புகார் தெரிவித்ததை அடுத்து, அவருக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி என்ற ஒரு மேலதிக அமைச்சுப் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இராஜபக்ஷவின் பிரச்சாரத்தில் மற்றொரு முக்கிய நபரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளக்கு வர்த்தக, நுகர்வோர் விவகார மற்றும் சந்தை அபிவிருத்தி அமைச்சுக்கும் மேலதிகமாக நெடுஞ்சாலைகள் அமைச்சும் கொடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 23 அன்று புதிய அமைச்சரவை பதவியேற்ற பின், குறுகிய நேரத்தில் புதிய திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் வளர்ச்சி அமைச்சரான ஸ்ரீபதி சூரியாராச்சி ராஜிநாமா செய்தார். இராஜபக்ஷ உடனடியாக அவரை தொழில் முயற்சி அபிவிருத்தி மற்றும் மூலதன ஊக்குவிப்பு பிரதி அமைச்சராக நியமித்தார். இரு துறைகள் சார்ந்த நான்கு அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர்களும் மற்றும் 12 அமைச்சரவை அந்தஸ்து இல்லாத அமைச்சர்களும் உள்ளனர். இவர்கள் பிரதி அமைச்சர்களாகவும் உள்ளனர்.

பழைய, செயலற்றுப்போன ''தொழிலாளர்'' கட்சிகளான ல.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் ஏற்கனவே கொண்டிருந்த பதவிகளுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ல.ச.ச.க பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரையே கொண்டுள்ளதோடு அதுவும் 2004 பொதுத் தேர்தலையடுத்து சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் கொடுக்கப்பட்டதாகும். பல தசாப்தங்களாக ஸ்ரீ.ல.சு.க யுடன் கூட்டுக் கட்சிகளாக இருந்த அவை இரண்டும், சீரிய சுயாதீனமான அரசியல் அமைப்புக்களாக கருதப்படவில்லை.

இந்த அமைச்சர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கு மிகப் பெரிய அளவு பொதுப் பணம் தேவைப்படும். அவர்களுடைய சம்பளத்தைத் தவிர, ஒவ்வொருவருக்கும் உத்தியோகபூர்வ வீடு, வாகனம், தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ அலுவலர்கள் மற்றும் பதவிக்கான சலுகைகள் ஆகியவையும் அவர்களுக்கு உண்டு. அனைத்து அமைச்சர்களும் தற்பொழுதுள்ள ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியத்தைக் கொண்டுள்ளனர். இதனுடன் சேர்த்து, ஒவ்வொருவருக்கும் அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவிலிருந்து பிரத்தியோகமாக பயிற்றுவிக்கப்பட்ட மெய்காவலர் கமாண்டோக்களும் இவர்களுக்கு உண்டு.

ஜே.வி.பி மக்களுடைய வெறுப்புணர்வைத் தூண்டும் முயற்சியாக, முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்க அமைச்சர் பதவிகள் வழங்கும் பழக்கத்தைக் கண்டித்திருந்தது. ஜே.வி.பி தலைவர்கள் அமைச்சரவை எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்று இராஜபக்ஷவை தூண்டிய போதிலும், தோணி ஆடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, விரைவில் அவர்கள் தங்கள் விமர்சனங்களை குறைத்துக் கொண்டனர்.

கொழும்பில் இருக்கும் செய்தி ஊடகங்கள் அவ்வப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றுத் தன்மையையும் அமைச்சர் பதவிக்கு அவர்கள் கொண்டுள்ள விருப்பம் பற்றியும் புலம்பியுள்ளது. ஆனால், ஓரளவு அரசியல் உறுதிப்பாடு தேவை என்றால் அதற்கான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆளும் தட்டுக்கள் நன்கு உணர்ந்துள்ளன.

டெயிலி மிரர் தலையங்கம் டிசம்பர் 1 அன்று குறிப்பிட்டதாவது: "ஜனாதிபதி இராஜபக்ஷவினால் அமைச்சுப் பதவிகளைக் குறைக்க முடியவில்லை. அவருடைய தர்மசங்கடம் புரிந்துகொள்ளக் கூடியதாகும். பலவிதக் கட்சிகள் மற்றும் குழுக்களின் விருப்பங்களையும் பேரவாக்களையும் அவர் திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. எவரையும் புண்படுத்த அவரால் இப்பொழுது இயலாது. ஏனெனில், அவரது அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒரு மெல்லிய சமநிலையில்தான் உள்ளது."

அரசாங்கத்தின் உறுதியற்ற நிலை இராஜபக்ஷ அல்லது அவருடைய அமைச்சர்களின் தனிப்பட்ட குறைபாடுகளில் இருந்து வெளிவரவில்லை. மாறாக, ஆளும் வர்க்கம் முழுவதும் எதிர்கொண்டுள்ள தவிர்க்கமுடியாத, அரசியல் தர்ம சங்கடங்களில் இருந்தே வெளித்தோன்றுகிறது.

கொழும்பில் இருக்கும் கூட்டுத்தாபன தட்டுக்ளுக்கு, புலிகளுடன் ஒரு அதிகாரத்தைப் பகிர்வு ஒழுங்கை பேச்சுவார்த்தை மூலம் ஏற்படுத்திக்கொண்டு, தீவின் 20 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதோடு, பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டியயுள்ளது. ஆனால், அரசியலில் இரண்டு முக்கிய முதலாளித்துவ கட்சிகளான ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க யும் தொழிலாளர் வர்க்கத்தை பிரிக்கவும் மற்றும் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் நீண்ட காலமாக சிங்கள பேரினவாதத்தை தூண்டி விடுவதிலேயே தங்கியுள்ளன.

இராஜபக்ஷ ஏற்கனவே ஒரு மெல்லிய கயிற்றில் நடந்துகொண்டிருக்கின்றார்: அவர் பேச்சுவார்த்தைகள் நடத்துவோம் என்று உறுதிமொழி கொடுக்கும் அதே நேரத்தில், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவையும் திருப்திபடுத்தும் வகையில் புலிகளுக்கு எதிராக கண்டிப்பான நிலைப்பாட்டைக் காட்டுகின்றார். சுதந்திர முன்னணி அரசாங்கமானது ஏற்கனவே பரந்த எதிர்ப்பைத் தூண்டிவிட்டுள்ள தனியார்மயமாக்கல் திட்டம் மற்றும் செலவு வெட்டு ஆகியவற்றை அமுல்படுத்தக் கோரும் பெருவர்த்தகர்கள், உலக வங்கி மற்றும் சர்வதேசிய நாணய நிதியத்தினதும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

இத்தகைய பெரிய, உறுதியற்ற அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கும் என்பது ஐயத்திற்குரியதேயாகும்.

Top of page