World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Australia: thousands attend funeral for Van Nguyen

ஆஸ்திரேலியா: வான் நுகுயேன் இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

By WSWS reporters
8 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற வெள்ளிக்கிழமையன்று சிங்கப்பூர் அரசாங்கம் 25 வயது நுகுயேன் துவோங் வானை தூக்கிலிட்ட காட்டுமிராண்டித்தனத்திற்கு பொதுமக்களளது ஆழமான எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் 3000 இற்கு மேற்பட்ட மக்கள் ஒரு இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மெல்போனில் உள்ள சென்ட் பாட்ரிக் தேவாலயத்தின் நுழைவுவாயிலுக்கு வெளியில் காலை 11 மணிக்கு வழிபாட்டு சேவை ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே இரங்கல் குறிப்பில் தங்களது பெயர்களை கையெழுத்துடன் பதிவு செய்வதற்காக துக்கம் அனுஷ்டிப்பவர்கள் காத்திருந்தனர். பலர் வியட்நாமின் துக்க சின்னமாக பாரம்பரிய வெள்ளை உடுப்பை அணிந்திருந்தனர்.

வானின் இறுதிச் சடங்குகள் மரண தண்டனைக்கு எதிரான ஒரு கண்டன பேரணியாக ஆகிவிடக் கூடாது என்று முந்திய நாள் வரை மெல்போனின் Age செய்திபத்திரிகை உட்பட ஊடகங்கள் வலியுறுத்திக் கூறிவந்தன. உலகம் முழுவதும் தூக்கு தண்டனை விதிக்கும் நடைமுறைக்கும் மற்றும் ஒரு இளைஞனது வாழ்வு வெட்டி முறிக்கப்பட்டதில் தங்களது கடும் வெறுப்பை தெரிவித்துக் கொள்வதில் உறுதியுடன் ஆயிரக்கணக்கானோர் அவரது வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

அந்த தேவாலயத்தில் மரத்தாலான இருக்கைகளிலும் தேவாலய பிரகாரங்களிலும் சுற்றுப்பிரகாரத்திலும் திரண்டிருந்தவர்கள் சாதாரண உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளை சார்ந்தவர்களாவர். முதியவர்களும், இளைஞர்களும், வியட்நாமியர்களும், ஆஸ்திரேலியர்களும் ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் புலம் பெயர்ந்தவர்களும், பல்கலைக்கழகம், TAFE மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் மற்றும் முழுக்குடும்பங்களும் பல சிறு குழந்தைகளுடன் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் நடைபெற்ற இரங்கல் வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

அந்த தேவாலய படிக்கட்டுக்களுக்கு வெளியிலிருந்த பேச்சாளர்கள் அந்த தேவாலயத்தின் முற்றத்தில் திரண்டிருந்த டசின் கணக்கான இரங்கல் தெரிவிப்போருக்கு திரும்பவும் பிரார்த்தனையை ஒலிபரப்பினர். இறுதி இரங்கல் சடங்கு ஆங்கிலத்திலும் வியட்நாமிய மொழியிலும் நடத்தப்பட்டது.

அந்த இரங்கலுக்காக தரப்பட்ட குறிப்பில் வான் நுகுயேன் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்னர் இறுதியாக கூறிய வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.

2002 டிசம்பரில் ஆஸ்திரேலியா வரும் வழியில் நுகுயேன் 396 கிராம் ஹெராயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றத்திற்கு கட்டாயமாக சிங்கப்பூரில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் அப்படியிருந்தும் வியட்நாமை பூர்வீகமாகக்கொண்ட ஆஸ்திரேலியாவின் பிரஜையின் வாழ்வை காப்பாற்றுவதற்கு ஹோவார்ட் அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யவில்லை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்து அவரது தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்டபூர்வமான முயற்சிகளும் எதிர்க்கப்பட்டது.

சாதாரண மக்களது குவிந்த எதிர்ப்புணர்வு தொழிற்கட்சியின் செயல்பாட்டிற்கு எதிர்மாறாக இருந்தது. இதற்கு முன்னர் நூகியேன் தூக்கிலிடப்பட்ட காலை நேரத்தில் வழக்கமான கடமைகளை செய்யப்போவதாக குறிப்பிட்ட விக்டோரியா தொழிற்கட்சி பிரதமரான ஸ்டீவ் பிரேக்ஸ் செவ்வாயன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளப்போவதில்லை, ஏனெனில் நுகியேனை ''ஏற்றிப் போற்றுவதை'' தான் விரும்பவில்லை என்று கூறினார்.

வான் நுகுயேனின் நண்பர்கள் மற்றும் அவருக்கு வாதிடும் வக்கீல் லெக்ஸ் லாஸ்ரி QC ஆகியோரால் ஊழிய இடத்தில் புகழுரையை எடுத்துரைக்கப்பட்டது, நுகுயேயுடைய மற்றவருக்கான பரிவு மற்றும் அக்கறை உணர்வை விவரித்தனர்.

லாஸ்ரி ஒரு வக்கீல் என்ற முறையில் தனது குடும்பத்தின் சார்பில் அந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டார். ''சட்டத்திற்காக பணியாற்றிக் கொண்டுள்ள நாங்கள் நீதி அமைப்பில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். எங்களை பொறுத்தவரை வான் கூடியளவு பாதுகாக்ககூடியவர்.''

''எங்காவது ஒரு இடத்தில் அநீதி நடக்கிறதென்றால் அது எல்லா இடங்களிலும் நீதியை பாதிக்கிறது'' என்று மார்டின் லூதர் கிங் கூறியதை மேற்கோள் காட்டிய லாஸ்ரி, நுகுயேன் தூக்கிலிடப்பட்டது பரந்த சட்ட மற்றும் அரசியல் விளைபயன்களை கொண்டது என்பதை தெளிவுபடுத்தினார்.

''தூக்கு தண்டனை பற்றிய அரசியல் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்கெல்லாம் அப்பால் பல சாதாரண மக்கள் வானுக்காக வருந்துகின்றனர். அவர் அவர்களுக்கிடையே மனித நேயம் மற்றும் இரக்கம் பற்றிய வலுவான உணர்வுகளை திரும்பவும் கிளறிவிட்டிருக்கிறார்.''

வானின் மரண தண்டனையை இரத்து செய்வதற்கு இடையறாது பிரசாரம் செய்த ஒரு நெருக்கமான நண்பரான பிரான்வின் லியு வான் நுகியான் பலரது வாழ்வை தொட்டுவிட்டார் என்று கூறினார். தனது சிறைச்சாலை அறையிலிருந்து தனக்கு ஆதரவு கடிதங்கள் அனுப்பிய ஒவ்வொருவருக்கும் தான் வாழும் சில நாட்களுக்குள் பதிலளித்து விட விரும்பினார். ''நம்மிடமிருக்கும் மிச்ச நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அவரது தன்னலமற்ற தன்மைக்கு முன் மாதிரியே இல்லை.

''மரண கொட்டடியில் அவர் ஒரு குழந்தை மற்றும் தேவைப்படுவோருக்கு அவர் ஒரு மூத்த சகோதரர்''. ''சிங்கப்பூரில் நுகியேனோடு சேர்ந்து மரணக் கொட்டடியில் இருந்தவர்கள் வானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மரணமடைந்த தங்களது நேசத்திற்குரியவர்களுக்காக பிரார்த்தனை நடத்தினர்'' என்று அவர் குறிப்பிட்டார்.

வான் நுகியேனின் தாயார் கிம் தேவாலயத்தின் படிக்கட்டுக்களில் இறங்கி தனது நீண்ட பயணத்தை தனது மகனின் சவப் பெட்டி பின் தொடர மேற்கொண்டார் இரங்கல் தெரிவிப்பதற்காக அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தாங்களாக முன் வந்து நீண்ட நேரம் கைதட்டினர்.

அந்த கூட்டத்திற்கு வெளியில் நின்ற மக்கள் நுகுயேனின் சவப்பெட்டி வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டதை அமைதியாக அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர். தேவாலய மைதானங்களிலிருந்து அவரது இறுதி யாத்திரை சவப்பெட்டி புறப்பட்ட போது கிம் ஒரு திறந்த சன்னல் வழியாக தனது கைகளை அசைத்து தனது பாராட்டை தெரிவித்துக் கொண்டார்.

நுகியேன் தூக்கிலிடப்பட்டது ஒரு காட்டு மிராண்டிச் செயல் என்று கண்டிக்கும் கட்டுரையை உலக சோசலிச வலைதளம் வெளியிட்டிருந்ததன் பிரதிகளை நூற்றுக்கணக்கான மக்கள் பெற்றுக் கொண்டனர். அந்த இளைஞரை கைவிட்ட எதிர்க்கட்சியான தொழிற்கட்சி மற்றும் ஹோவார்ட் அரசாங்கத்தின் மீது மக்கள் தங்களது கடுமையான ஆத்திரத்தை WSWS நிருர்களிடம் எடுத்துரைத்தனர். அவர்கள் மரண தண்டனைக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு வகைப்பட்ட இதர பிரச்சனைகளிலும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர் மற்றும் நுகியேனின் குடும்பத்தோடு தங்களது ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுவதற்காகவும் இன்றைய அரசியல் மற்றும் சமூக ஒழுங்கின் மனித நேயமற்ற மற்றும் கொடூரமான போக்கு அதிகரித்து வருவதற்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இந்த இறுதி அஞ்சலி பிரார்த்தனையை பயன்படுத்தி கொண்டதாக குறிப்பிட்டனர்.

ஒரு வயதான பெண்மணியான ஸ்ரெபானி லோகன் ''இந்த தூக்குத் தண்டனை முற்றிலும் காட்டு மிராண்டித்தனமானது என்று நான் நினைக்கிறேன். நான் இத்தாலியிலிருந்து வந்திருக்கிறேன்---- அங்கு 1800களில் என்ன நடந்ததோ அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இது நடந்திருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது மிகவும் வெறுப்பூட்டுவது. நான் ஹோவார்டையும் தொழிற்கட்சியையும் குற்றம் சாட்டுகிறேன்.'' எனக்குறிப்பிட்டார்.

மேரி என்கிற ஒரு தாய் ''இது இரக்கமற்றது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. வான் நுகியானுக்கு சிறை தண்டனை விதித்திருக்க வேண்டும் இப்படி தூக்கிலிடப்பட்டிருக்கக் கூடாது. இது மிகக் கொடூரமானது. அது ஹோவோர்டின் மகனாக இருந்தால் அவர்கள் வெளியே கொண்டு வந்திருப்பார்கள். இந்த வெள்ளிக் கிழமையன்று ஹோவார்ட் ஒரு கிரிக்கெட் விளையாட்டை பார்க்கச் சென்றார். அரசாங்கம் எதையும் செய்யாது.'' என்று அறிவித்தார்.

இந்தோனேஷியாவிலிருந்து வந்து RMIT பல்கலைக்கழகத்தில் ஒரு குறுகிய கால வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் இளம் பத்திரிகையாளர்கள் குழு ஒன்று அந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு மரண தண்டனைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

யுவன் என்பவர் ''மரண தண்டனையை தள்ளுபடி செய்வதுதான் என் கருத்து. ஏனென்றால் ஒவ்வொருவரும் தங்களது வாழ்விற்கும் எதிர்காலத்திற்கும் மறு ஏற்பாட்டை செய்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு தரப்பட வேண்டும். தங்களது வாழ்வை மேம்படுத்திக் கொள்வதற்கான உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்று நான் நினைக்கிறேன். இந்த தேவாலயத்தில் மக்கள் கண்ணீர் சிந்துகிறார்கள், பல ஆஸ்திரேலிய மக்கள் கதறி அழுகின்றனர். சென்ற வெள்ளிக் கிழமையன்று ஆஸ்திரேலியாவின் எல்லா இடங்களிலும் கண்டனங்கள் நடைபெற்றன என்றதொரு உணர்வு ஏற்பட்டது.'' என்று குறிப்பிட்டார்.

அகஸ்டினஸ் மேலும் ''நுகியேனுக்கு மிகுந்த மரியாதை செய்யும் வகையில் வழிபாடு செய்யப்பட்டது. மரண தண்டனையை நான் முழுமையாக எதிர்க்கிறேன். மரணத்தை சந்திப்பதற்கு நுகியேன் ஏற்கனவே தனக்குத் தானே தயாராகிக் கொண்டார். அவர் இப்போது அமைதியில் வாழ்கிறார். இது இந்தோனேஷியாவில் உள்ளதைப் போன்று இருக்கிறது. தூக்குத் தண்டனை இருக்கக் கூடாது'' என்றார்.

''ஒரு ஆஸ்திரேலியர் மரண தண்டனையை சந்திக்கும் கடைசி முறையாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன்'' என்று ஓட்டினியல் குறிப்பிட்டார்.

அதில் கலந்து கொண்ட ஒய்வு பெற்ற ஜென்னி லோவல் WSWS இடம் ''இந்த அரசாங்கம் ஊழல்மிக்க கோழைகளைக் கொண்ட ஒரு அணியாகும். அவர்கள் தங்களது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு மட்டுமே செயல்படுகின்றனர் வேறு ஒன்றுக்கும் அல்ல. தூக்கு தண்டனை என்பது காட்டுமிராண்டித்தனமானது. அது உலகத்தில் எதனை முன்னேற்றிவிட்டது?'' என்று குறிப்பிட்டார்

''அவர்கள் கவலைப்படுவதெல்லாம் பெரு வர்த்தக நிறுவனங்களையும் அரசாங்கத்திலுள்ள தங்கள் நண்பர்களையும் பற்றித்தான். ஹோவார்ட் மரண தண்டனையுடன் உடன்பட்டுள்ளார் என நான் சந்தேகிக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

இதர நாடுகளின் நன்மதிப்பை ஆஸ்திரேலியா தலைவர்கள் பெறுவதில்லை. அவர்கள் இரட்டை வேடக்காரர்கள். இப்போது நான் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன்----அதில் நான் கூறியிருப்பது நான்கு தூக்குகயிறுகளையும் ஒன்பது துப்பாக்கிகளையும் கொண்ட மேடைதான் ஹோவார்ட் அரசாங்கம் என்று வர்ணித்திருக்கிறேன். அது அச்சமூட்டுகின்ற உருவகமாகும்.``

ஒரு டிரைவரான ஜிம் பெல்கின்ஸ் வேலையில்லாதிருக்கும் அவரது இளம் நண்பர்களான ஸ்டீவ் மற்றும் டெனிசி ஒரு இல்லத்தரசி ஆகியோர் தங்கள் ஆத்திரத்தை தங்கள் அரசாங்கத்தின் மீது வெளிப்படுத்தினர். ஸ்டீவ் ''நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருக்கின்ற தொழில்துறை உறவுகள் பயங்கரவாத-எதிர்ப்பு மற்றும் பணிக்கு நலன்புரி உதவிகள் என்ற நிலை ஆகியவற்றை பாருங்கள். நாம் வெற்றி பெற முடியாது - ஏதாவது ஒரு கட்சி அல்லது அடுத்த கட்சி வெற்றி பெறும். மிகப் பெரும்பாலான மக்களுக்கு இது தெரியாது அவர்கள் தங்களது அன்றாடக் கடமைகளுக்கு சென்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு பட்டம் பெற்றிருக்கிறேன் ஆனால் எனக்கு ஒரு பகுதி நேர அல்லது தினக்கூலி வேலைதான் கிடைக்கும. நியூஸ் ஸ்டார்டிற்கு நான் வேலைக்கு சென்றால் ஒரு மணி நேரத்திற்கு 14 டாலர்கள் ஊதியத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது அதே துறையில் பணியாற்றுவதற்கு என்னை திரும்பத்திரும்ப பயிற்சிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாழ்க்கை குறிப்பை எழுதுவதற்கு நான் எத்தனை முறை கற்றுக் கொண்டேன் என்பது எனக்கு தெரியாது.'' எனக்குறிப்பிட்டார்.

டெனிசி இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார்: ''எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். புதிய சட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு நான் வேலை தேட வேண்டும். நான் 12 ஆண்டுகள் பணியாற்றவில்லை. இயலாதவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை பாருங்கள். இந்த வழிப்பாட்டு சேவை என்னை வருந்தச் செய்தது எனக்கு வானைத் தெரியாது----ஆனால் அவரை அறிந்திருந்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அவர் ஒரு விரும்பத்தக்க மனிதரைப் போன்று தோன்றுகிறார். எனது சொந்த தந்தையின் இறுதி சடங்கில் நான் இந்தளவிற்கு கதறி அழுததில்லை. அது போன்று மரணம் அடைவது ஒரு அற்பமான தவறாகும். நான் இந்த இறுதி சடங்கிற்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன்'' என்றார்.

''ஊடகங்களை பாருங்கள்'' என்று ஸ்டீவ் சுட்டிக்காட்டினார். ''அவர்கள் எதிர்காலத்தில் பயங்கரவாதிகளாக ஆகக் கூடியவர்கள் பற்றி பேசுகிறார்கள் ஆனால் அது அவர்கள் கற்பனையாக எழுதுகின்ற கதையா? இரண்டுவாரங்களுக்கு முன்னர் ஒரு முஸ்லீம் மத போதகர் ஏதோ சொன்னார் - அதற்காக ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் இதில் எல்லாம் பெரிய பங்கை வகிக்கின்றன'' என்றார்.

ஜிம் பெல்கின்ஸ் ''அவை அத்தனையும் கெர்ரி பேக்கருக்கு அல்லது முர்டோக்கிற்கு சொந்தமானது உலகின் ஒவ்வொரு பத்திரிகைக்கும் அவர்கள் தான் சொந்தக்காரர்கள் சீனாவில் அவர்கள் பயன்படுத்துகின்ற முறையை பாருங்கள். மனித இனத்திற்கு எதிரான அத்தனை குற்றங்களையும் அவர்கள் ஆதரிக்கிறார்கள்-----முர்டோக் அவர்களுக்கு நல்ல விளம்பரம் தர வேண்டும் அப்போது தான் சீனாவில் அவருக்கு இடம் கிடைக்கும்.'' என்று குறிப்பிட்டார்.

''வான் நுகுயேனை பொறுத்தவரை வியட்நாமில் நாம் செய்ததற்கு பின்னால் இதைவிட ஒரு சிறிதளவு அவர்களை நன்றாக நடத்தியிருக்கலாம். இது மிகவும் உருக்கமானது. அது மிகவும் என்னை உலுக்கிவிட்டது. எனது இரண்டு புதல்வர்களை இழந்துவிட்டேன் மற்றும் இது மற்றொரு மகனை இழந்தது போல் உள்ளது'' .

''தனிப்பட்ட முறையில் நான் ஓய்வு பெற முடியாது அது எனக்கு கட்டுபடியாகாது. நான் சாகும் வரை வேலை செய்துதான் ஆக வேண்டும். புதிய சட்டத்தின் கீழ் இப்படித்தான் ஏராளமான மக்கள் இறுதி மூச்சுவரை வேலை செய்தாக வேண்டும். நான் ஒரு மணி நேரத்திற்கு 15 டாலர்கள் விகிதத்தில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணியாற்றுகிறேன். விடுமுறை மற்றும் நோய்களுக்கான ஊதியம் இல்லை. நடுஇரவுப்பணிக்கு கூடுதல் சம்பளமும் இல்லை. அரசாங்கம் தனது பணக்கார நண்பர்களை கவனித்து கொள்கிறது அவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டு வருகிறார்கள். நான் தாராளவாதக் கட்சிக்கு வாக்களித்தேன், நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களுக்கு நான் மீண்டும் வாக்களிக்க மாட்டேன்'' என்றார்.

ஒரு தாயான ஜான் ''நான் அயர்லாந்தை சேர்ந்தவள் மற்றும் எனது தாயின் மைத்துனர் 1946 இல் அங்கு சிறையில் தூக்கிலிடப்பட்டார். எனவே இந்த தூக்குத்தண்டனை உண்மையில் என்னை பாதித்து விட்டது.

''அண்மையில் நான் ஐந்து வாரங்கள் பிரிட்டனில் தங்கியிருந்தேன் மற்றும் அரசாங்கம் 90 நாட்களுக்கு மக்களை விசாரணையின்றி சிறையில் அடைக்க விரும்பி சட்டத்தை தாக்கல் செய்தது. அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் 90 நாட்களுக்கு பதிலாக 28 நட்கள் என்று மட்டுமே முடிவு செய்யப்பட்டது. அயர்லாந்தில் அத்தகைய நடவடிக்கைகள் பற்றி நாம் அனைவரும் அறிவோம்.'' என கூறினார்.

RMIT இல் பொறியியல் - கம்ப்யூட்டர் முறைகளை படிக்கின்ற 20 வயது மாணவரான சார்லட் லோபோ ''நான் தூக்குத்தண்டனையில் நம்பிக்கை வைத்திருக்கவில்லை. அவர் ஏதோ தவறு செய்தார் என்பதை நான் அறிவேன் ஆனால் அதற்காக அவரது வாழ்வை விலையாக ஆக்கியிருக்கக் கூடாது.

''கடைசி பொது மன்னிப்பு மேல்முறையீட்டிற்கு முன்னர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அரசாங்கம் இதில் சம்மந்தப்பட்டிருக்குமேயானால் ஏதாவது செய்திருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நான் பார்ப்பதிலிருந்து அது நடந்ததாக நான் நினைக்கவில்லை.'' என்றார்.

சார்லோட் அந்த இரங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டார். பல RMIT மாணவர்கள் நுகியேனுக்காக ''தங்களது கரங்களை நீட்டினர்''. உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று வான்கியானின் நண்பர்களான கெல்லி நிக் மற்றும் பிரான்வின் லூயியும் கையை சின்னமாகக் கொண்டு "Reach Out" பிரச்சாரம் நடத்தினர். ஆயிரக்கணக்கான உயர்நிலைப்பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது கையை பிரதி எடுத்தார்கள். அதில் நுகியேன் விடுத்த வேண்டுகோளை பொறித்தார்கள் அதில் சிங்கப்பூர் அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

நுகியானுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதை தமது குடும்பம் முழுவதும் எதிர்த்ததாக லோபோ குறிப்பிட்டார்.

ஒரு சிறு வர்த்தகரான கான்: ''எதற்கும் ஒரு எதிர்ப்பு இங்கே உள்ளதா என்று ஆவேசமாக கேட்டார். பணத்திற்காகவே சமுதாயம் வழி நடத்தப்படுகிறது. உலகம் முடிந்த பின்னர் தான் சமூகநீதியும் சமூக சமத்துவமும் ஏற்படுவதுபோல் தோன்றுகிறது. இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில் சமூக நீதி இல்லை. அவர்களோடு வான் நுகியேன் முழுமையாக ஒத்துழைத்தார். தான் தவறு செய்துவிட்டதாக அவர் உணர்ந்து கொண்டது உண்மையில் துக்கம் தருவதாகும்.''

''சிங்கப்பூர் அரசாங்கம் ஆஸ்திரேலிய அரசாங்கம் இரண்டுமே பெரு வர்த்தக நிறுவனங்களோடும் பெரும் பணக்காரர்களோடும் சர்வதேச ஒத்துழைப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே விரும்புகின்றனர். இரண்டு அரசாங்கங்களுமே சிறியவர்களை பலி கொடுக்கின்றனர்.'' என்றார்.

Top of page