World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Bush tells Washington Post he is not accountable for Iraq war lies

ஈராக் போர் தொடர்பான பொய்களுக்கு தான் பொறுப்பல்ல என்று வாஷிங்டன் போஸ்டிற்கு புஷ் கூறுகிறார்

By Patrick Martin
19 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

வாஷிங்டன் போஸ்ட் ஞாயிறன்று பிரசுரித்துள்ள ஒரு பேட்டியில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஈராக் போர் தொடர்பாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து தனது நிர்வாகத்தின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெதிராக தமது நிர்வாகத்தை பாதுகாத்ததுடன் அமெரிக்க மக்கள் 2004 ஜனாதிபதி தேர்தலில் தமது போர் கொள்கைளை ஏற்றுக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

2003 மார்ச்சில் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத நிலையில் அமெரிக்கா படையெடுத்து சென்றதற்கான பிரதான சாக்குப்போக்கான---- ஈராக்கிடம் பேரழிவுகரமான ஆயுதங்களை தேடுகின்ற அனைத்து முயற்சிகளையும் அமெரிக்க இராணுவம் கைவிட்டுவிட்டதாக போஸ்ட் அம்பலப்படுத்திய சில நாட்கள் கழித்து புஷ் பேட்டியளித்தார். கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பலன் எதுவும் தராத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, உயிரியல், இரசாயன அல்லது அணு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, எனவே சென்ற மாதம் ஈராக் ஆய்வுக்குழு (ISG) அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியாளர்களை எதிர்த்து போரிட அனுப்பப்பட்ட 1000 பேர் கொண்ட ஆயுதங்கள் தொடர்பான சக்திவாய்ந்த காரியாளர்கள் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் குழு கலைக்கப்பட்டது.

ஈராக் ஆய்வுக்குழு தலைவர் சார்லஸ் டியுல்பர், வாஷிங்டனில் இறுதி அறிக்கையை தயாரித்துக்கொண்டிருக்கிறார், அக்டோபரில் வெளியிட்ட பூர்வாங்க அறிக்கையிலிருந்து இது பெருமளவில் வேறுபட்டதாக இருக்காது, அதில் அவர் 1991 பாரசீக வளைகுடா போருக்கு பின்னர் ஈராக் தனது பேரழிவுகரமான ஆயுதங்களை அழித்துவிட்டது, அதற்கு பின்னர் அவற்றை மீண்டும் புதுப்பிக்கவில்லை என்று முடிவு கூறியிருந்தார்.

இதற்கிடையில், 16 அமெரிக்க இராணுவ மற்றும் சிவிலியன் புலனாய்வு தகவல் சேகரிப்பு அமைப்புக்களின் மையமான தேசிய புலனாய்வு குழு அமெரிக்க பாதுகாப்பிற்கு பூகோள அச்சுறுத்தல்கள் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் சதாம் ஹுசேன் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அமெரிக்கா படையெடுப்பு நடத்தியதற்கு முன்னர் இருந்ததைவிட இன்றையதினம் ஈராக்கில் அல்கொய்தா சக்திவாய்ந்ததாக உள்ளது. ஈராக்கில் பாத்திஸ்ட் அரசாங்கத்திற்கும் ஒஸாமா பின் லேடனுக்குமிடையில் உறவுகள் நிலவியதாக குற்றம்சாட்டப்பட்டது அமெரிக்க படையெடுப்பிற்கு மற்றொரு பிரதான சாக்குப்போக்காகும், இந்த கூற்றையும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான சான்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.

போஸ்ட் நிருபர்கள் இரண்டு பேர் ஈராக் பற்றி போருக்கு முன்னர் கூறப்பட்டவை, தற்போது மறுக்கப்பட்டிருக்கிறது குறித்து புஷ்ஷை கேட்டனர். அந்த கருத்து பரிமாற்றம் கீழ்கண்ட வகையில் சென்றது.

போஸ்ட்: ஈராக்கில் தொடர்ச்சியாக வியப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. துணை ஜனாதிபதி செனி பேசிக்கொண்டிருந்ததைப்போல் நாம் விடுவிப்பவர்களாக வரவேற்கப்படவில்லை. ஊகித்தபடி நாம் பேரழிவுகரமான ஆயுதங்களை கண்டுபிடிக்கவில்லை. சிலர் நம்பியதைப்போல் போருக்கு பிந்திய நிகழ்ச்சி போக்குகள் அமையவில்லை. கொஞ்ச மக்கள் தவறுகள் அல்லது தவறான முடிவுகள் என்று காண்கின்ற நடவடிக்கைகளுக்காக ஏன் சிலர் மீது பொறுப்பு சாட்டப்பட்டு எவரும் வேலை நீக்கமோ அல்லது பதவி இறக்கமோ செய்யப்படவில்லை?

புஷ்: நல்லது, எங்களுக்கு ஒரு பொறுப்பேற்கும் தருணம் வந்தது, அதுதான் 2004 தேர்தல். ஈராக்கில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பது தொடர்பாக அமெரிக்க மக்கள் வேறுபட்ட மதிப்பீடுகளை கேட்டனர், மற்றும் அவர்கள் இரண்டு வேட்பாளர்களை கண்ணுற்றனர், என்னை தேர்ந்தெடுத்தனர், அதற்காக நான் நன்றியறிதல் உள்ளவனாக இருக்கிறேன்.

இந்த கருத்துக்கள் மூலம் புஷ் 2004 தேர்தல் பிரச்சாரத்தின் உண்மையான உள்ளடக்கத்தை அப்பட்டமாக திரித்துக் கூறுகிறார். அடிப்படை ஜனநாயகக் கொள்கைகளின் மீது அவருக்குள்ள வெறுப்பை இந்த கருத்து மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

2004 தேர்தல் பிரச்சாரம் ஈராக் மீது அமெரிக்க மக்களுக்கு உண்மையான தேர்வு செய்யும் திட்டம் எதையும் தரவில்லை, ஏனென்றால் அதிகாரபூர்வமான, அரசியல் வாழ்வில் ஏகபோக அதிகாரம் செலுத்தும் இரண்டு பெரிய வர்த்தகக் கட்சிகள் வேட்பாளர்களும் போரை ஆதரித்தவர்கள். ஜனநாயகக் கட்சிக்காரர் ஆன கெர்ரி 2002 அக்டோபரில் போருக்கு செல்வதற்கு ஈராக்கிற்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானத்தின்போது செனட் சபையில் வாக்களித்தார், அதற்கு பின்னர் ஈராக் பிடிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார் மற்றும் ஏறத்தாழ காலவரையின்றி அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

நேரத்திற்கு நேரம் போர் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சிப்பதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவதற்கு முயன்றாலும், புஷ்ஷிற்கு எதிராக கெர்ரி எழுப்பிய விமர்சனங்களின் அனைத்து நிலைப்பாடும் தன்னை ஒரு பயனுள்ள தலைமை தளபதியாக படம் பிடித்துக் காட்டுவதிலேயே முன்னிலையாக அமைந்தது, ஈராக்கில் பொதுமக்களது கிளர்ச்சிக்கு மேலாக இராணுவ அடிப்படையில் வெற்றி பெறுவது அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு அத்தியாவசியமானது என்று கருதினார். ஜனாதிபதி தேர்தல் பொது விவாதம் ஒன்றில், கெர்ரி தனது ஈராக் கொள்கை தொடர்பாக வெளிப்படையாக வெளியிட்ட பிரகடனத்தில் "தனது கொள்கை ஈராக்கிலிருந்து வெளியேறுவதல்ல, ஆனால் எப்படி வெற்றி பெறுவது என்பதுதான்" என்றார்.

போர் எதிர்ப்பு உணர்வுகளோடு மிக நெருக்கமாக இருந்தவர் என்று கருதப்பட்ட அன்றைய முன்னோடி கட்சி வேட்பாளர் ஹோவார்ட் டீனை 2004 ஜனவரியில் தேர்தல் போட்டியிலிருந்து நீக்குவதற்காக கட்சி நிர்வாகமும், ஊடகங்களும் திட்டமிட்டு நடத்திய திடீர் தாக்குதல்களின் விளைவாக கெர்ரி ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இப்படி அங்கீகரிக்கப்பட்ட முன்னோடி வேட்பாளராக அங்கீகாரம் பெற்றது முதல், கெர்ரி அமெரிக்க பொது தேர்தல் போர் பற்றிய ஒரு பொதுவாக்கெடுப்பாக மாறிவிடாது தடுப்பதில் இடைவிடாது முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அந்த நியமன மாநாட்டை ஜனநாயகக் கட்சி இராணுவவாதமாக கொண்டாடும் நிகழ்ச்சியாக மாறிற்று அதில் முன்னாள் தளபதிகளும், வியட்நாம் போர்வீரர்களும் மேடை ஏறி திரும்ப திரும்ப கெர்ரியின் போர் வரலாற்றை புகழ்ந்துரைத்தனர்.

இதனுடைய முடிவு: இரண்டு முதலாளித்துவ வேட்பாளர்களுக்குமிடையில் ஈராக் போர் தொடர்பாக மாற்றுத் தேர்விற்கு இடமில்லாமலே போயிற்று. அமெரிக்காவிலுள்ள போர் எதிர்ப்பு பெரும்பான்மையினர் அரசியல் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டுவிட்டனர்.

2004 தேர்தல் தனது போர்க்கொள்கைக்கான கட்டளையிடும் நடவடிக்கை என்ற புஷ்ஷின் கூற்று அரசாங்க கொள்கைகள் மீது பொதுமக்களது கட்டுப்பாடு அல்லது உண்மையான ஜனநாயக விவாதங்கள் நடத்தப்படுவதை எந்தளவிற்கு அவமதிப்பிற்குள்ளாக்குகிறார் என்பதை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. மேலும், 2004 நவம்பர் 2 வாக்குப்பதிவில் தனது "பொறுப்பு எடுக்கும் தருணம்" என்று அவர் கூறுவது ஜனாதிபதி பதவி என்பது ஜனநாயகத்தை விட ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரம் என்ற கருத்தை அதிகமாக சார்ந்திருப்பதாக ஆகிறது.

புஷ்ஷின் கருத்துப்படி, எட்டாண்டுகள், வெள்ளை மாளிகையில் அவர் பதவியில் இருக்கும் போது அமெரிக்க மக்கள் அவரை அதற்கு பொறுப்பு சாட்டுவது ஒரே ஒரு நாளில்தான். மற்ற நாட்களில் எல்லாம் அவர் தட்டிக்கேட்பார் இன்றி ஆராய்வதற்கு வழியில்லாத ''தலைமை தளபதி'' என்கிற வகையில் எல்லையற்ற அதிகாரங்களை செயல்படுத்துவார். (அவர் அட்டர்னி ஜெனரலாக நியமனம் செய்துள்ள அல்பேர்டோ கொன்சாலேஸ் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு திட்ட வரைவில், ஜனாதிபதிக்குள்ள இந்த அதிகாரங்களில் சர்வதேச சட்டத்தை மீறுகின்ற வகையில் போர் கைதிகளை சித்திரவதை செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க கட்டளையிடுவதற்கும் முழுமையான கட்டுப்பாடற்ற அதிகாரம் உள்ளது).

அமெரிக்காவில் பாரம்பரிய அரசியல் சட்ட நெறிமுறைகளின் கீழ் நான்காண்டுகளுக்கு ஒரு முறை, மற்றும் இப்படி இரண்டு தடவை பதவிக்கு வரலாம் என்ற கட்டுப்பாட்டை தவிர அமெரிக்க ஜனாதிபதி வேறு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத தட்டிக் கேட்பாரற்ற மன்னர் அல்ல. அவர் கட்டுப்படுத்தி சமன்படுத்தும் அமைப்புகளுக்குமிடையில் சமமான அதிகாரம் படைத்த அரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றின் சுதந்திரமான அதிகார நடவடிக்கையின் கீழ் பணியாற்றுகிறார். தலைமை தளபதியாக அவரது பங்களிப்பு-----ஆயுதப் படைகள் மீது மட்டும்தானே தவிர நாட்டின் மீதோ அல்லது மக்கள் மீதோ அல்ல----அந்த அதிகாரம் சிவிலியன் அதிகார நிர்வாகம் இராணுவத்திற்கு மேம்பட்டது என்பதை காட்டுவதற்காகத்தானே தவிர, மக்களுக்கு மேலானவர் ஜனாதிபதி என்பதற்காக அல்ல.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் குடியியல் வகுப்புகளின் அரிச்சுவடிகளில் விளக்கப்பட்டுள்ள அமெரிக்க ஜனநாயக நெறிமுறைகள், அவை பெரும்பாலும் மறந்துவிட்ட காரணத்தினால் இன்றைய தினம் அமெரிக்காவின் ஜனநாயக நெறிமுறை முற்றிலுமாக சிதைந்து கொண்டு வருகிறது. இது போன்ற அரசியல் சட்ட கட்டுப்பாடுகள் ஜனாதிபதி அதிகாரத்திற்கு உண்டு என்று சுட்டிக்காட்டுகிற ஒரு முதலாளித்துவ அரசியல் பிரமுகர் மேற்கு வெர்ஜினியாவை சேர்ந்த செனட்டர் Robert Byrd அவரை பொதுவாக வாஷிங்டனில் ஒரு வயதான பைத்தியக்காரர் என்று கருதுகிறார்கள். ஒட்டு மொத்த அரசியல் ஸ்தாபனங்களும், 2001 செப்டம்பர் 11-ல் ஜனாதிபதி பதவிக்கான முன்னாள் துணை ஜனாதிபதி அல்கோர் ஜனநாயக கட்சிக்காரர், வெளியிட்ட மிக இழிவான பிரகடனமான புஷ்தான் தனது தலைமை தளபதியும் கூட என்பதை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

2005 வாஷிங்டனில், கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலை என்ற அதிகார பகுப்பு கடந்தகால சம்பவம் என்றே கருதப்படுகிறது. நீதித்துறையில் நிரப்பப்பட்ட வலதுசாரி விசுவாசிகள்தான் முதலில் வெள்ளை மாளிகைக்கு புஷ் ஐ கொண்டு வந்ததற்கு பொறுப்பானவர்கள். நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள குடியரசுக் கட்சி பெரும்பான்மையினர் புஷ் நிர்வாகத்தின் மீது எந்தக் கட்டுப்பாட்டையும் அல்லது கண்காணிப்பையும் செலுத்தவில்லை, அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி சிறுபான்மையினர் மிக மந்தமான, திறமையற்ற கண்டனங்களைத்தான் தெரிவிக்கிறார்கள். எனவே புஷ் நிர்வாகம் பொதுமக்களது கருத்தைப்பற்றி கவலைப்படாமல் பரவலாக மக்கள் எதிர்ப்பவை என்று தெரிந்த நடவடிக்கைகளான உள்நாட்டு மற்றும் வெளியுறவுக்கொள்கையாகிய இரண்டையும் மிக வேகமாக செயல்படுத்தி வருகிறது.

புஷ்-ன் ''பொறுப்பேற்பது'' தொடர்பான கருத்துக்களில் மற்றொரு இறுதி அம்சமும் உள்ளது. தனது சொந்த குற்றவியல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க மக்கள் முதுகில் பாரத்தை ஏற்றுகின்ற ஒரு முயற்சி போன்றது இது. புஷ் கூறியுள்ளபடி, ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் ஈராக்கிற்கும் அல்கொய்தாவிற்கும் தொடர்பில்லாவிட்டாலும் அதைபற்றி கவலையில்லை என்று 2004 நவம்பர் 2-ல் அமெரிக்க மக்கள் ஈராக் மீது போர் தொடுக்க முடிவு செய்துவிட்டார்கள். எப்படியும் ஈராக்கை பிடித்துக்கொண்டதை அமெரிக்க மக்கள் ஏற்றுக் கொண்டார்கள், இராணுவ ஆக்கிரமிப்பை காலவரையின்றி நீட்டிப்பதற்கு உறுதியாக உள்ள நிர்வாகத்திற்கு தங்களது ஆதரவை தந்துவிட்டார்கள் என்றாகிறது.

புஷ் நிர்வாகம் 2003 மார்ச்சில் புரிந்த பாரிய குற்றத்தின் தன்மையை இன்றைக்கும்வரை தொடர்ந்துகொண்டிருப்பதை பல சாதாரண தொழிலாள வர்க்கமும், மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் உணர்ந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள் என்ற ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால் அந்தப் போர் துவங்குவதற்கு முன்னரே மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் போரை எதிர்த்தனர் என்ற ஒன்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். 2003 பிப்ரவரியில் உலகம் முழுவதிலும் ஆரம்பித்த பாரியளவு கண்டனப் பேரணிகளில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

இடைவிடாத ஊடகங்களின் பிரச்சாரம் மற்றும் ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனங்களின் பிரச்சாரம் ஆகியவற்றிற்கு அப்பாலும், மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்து போரை எதிர்த்தே வருகின்றனர். தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் ஈராக்கில் புஷ் மேற்கொண்டுள்ள போரை 58 சதவீதம் பேர் எதிர்த்தனர், ஒரு கணிசமான சிறுபான்மையினர் அனைத்து அமெரிக்க துருப்புகளும் உடனடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தை ஆதரித்து நிற்கின்றனர். ஈராக் போருக்கு கூறப்பட்ட பேரழிவுக்குரிய ஆயுதங்கள் மற்றும் அல்கொய்தா தொடர்பு பற்றிய சாக்குப்போக்குகள் மோசடியானவை என்று இப்போது பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்கின்றனர்.

செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக் போர் நடத்தப்பட்டது என்று புஷ் நிர்வாகம் சித்தரித்ததால் குழப்பம் அடைந்திருந்தவர்களிடையிலும், இப்போது ஆக்கிரமிப்பு தொடர்ந்து நீடிப்பதால் அமெரிக்க போர் வீரர்களும் ஈராக் மக்களும் தொடர்ந்து மடிகின்ற எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போருக்கான எதிர்ப்பு அவர்களிடத்திலும் வளர்ந்து வருகிறது.

ஈராக் போர் ஒரு கொடூரமான குற்றம் ஆகும், புஷ், சென்னி, ரம்ஸ்பெல்ட் மற்றும் அவரோடு உடந்தையாக இருந்தவர்கள் அந்தப் போருக்கு பொறுப்பு சாட்டப்பட வேண்டும். அவர்களது உடந்தையாக செயல்பட்ட சதிகாரர்களும் இருக்கிறார்கள், அவர்கள் அமெரிக்க உழைக்கும் மக்களிடையே இல்லை ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் இருக்கிறார்கள். பெருநிறுவன அமெரிக்கா மற்றும் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனங்கள் ஆகியவை இந்த போருக்கான பொறுப்பை பகிர்ந்து கொள்கிறார்கள் இந்தப் போரில் ஏறத்தாழ 1400 அமெரிக்கர்களும் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்களும் ஏற்கனெவே பலியாகிவிட்டனர்.

ஈராக் மக்களுக்கெதிரான போரில் சம்மந்தப்பட்டவர்கள் போர் குற்றங்கள் தொடர்பான நீதிமன்றங்களில் விசாரிக்கப்படவில்லை, அவர்களுக்கு தகுந்த தண்டனையை அந்த நீதிமன்றங்கள் வழங்கும், அத்தகைய தண்டனை இந்தப் போருக்கு திட்டமிடுவது ஏற்பாடு செய்வது ஆகியவற்றில் பங்கெடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு பிரச்சார பீரங்கிகளாகவும் அரசியல் தரகர்களாகவும் சேவகம் செய்தவர்கள், அந்தப் போரினால் மகத்தான இலாபம் பெற்ற பெரு நிறுவனங்கள் இன்றைக்கும் இலாபம் பெற்று கொண்டிருப்பவர்கள் ஆகியோருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இதை செய்து முடிப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கான ஒரு அத்தியாவசிய முன் நிபந்தனை இதுதான்: அமெரிக்க தொழிலாள வர்க்கம் இரு கட்சி முறை என்ற அரசியல் இறுகுப்பிடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிக்க வேண்டும். மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் இணைத்துக்கொண்டு ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிரான பொது போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

Top of page