World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

David North speaks at Sydney's Gleebooks

சிட்னியின் கிளீ பதிப்பகத்தில் டேவிட் நோர்த் பேசுகிறார்

By Laura Tiernan
4 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் புதன் கிழமை இரவு, அவரது புதிய நூலான அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியை வெளியிடும் நிகழ்ச்சி முன்னணி சிட்னி புத்தகக் கடையான Gleebooks-ல் நடைபெற்றது. அதில் அவர் உரையாற்றினார்.

பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்தக வெளியீட்டுத் தொழில் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் சோசலிச சமத்துவ கட்சி ஆதரவாளர்கள் என சுமார் 130 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2000 மற்றும் 2004-ல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களை பற்றி அவர் அரைமணி நேரம் உரையாற்றியதை கவனமாக கேட்டனர்.

"அமெரிக்க ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு ஆழமான நெருக்கடியின் அடையாள சின்னம்தான் தேர்தல் முடிவுகள்" என்ற தனது அமெரிக்க அரசியல் மற்றும் சமூக தத்துவத்தின் விளக்கம்தான் தமது இன்றைய புத்தகம் என்று நோர்த் விளக்கினார்.

2000 தேர்தல் களவாடப்பட்டது ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையிலேயே மீறுவதாகும். வில்லியம் ஷேக்ஸ்பியரின் மாபெரும் நாடகங்களில் ஆட்சி அதிகாரத்தை சட்டவிரோதமாக கைப்பற்றுவது சாதாரணமாக கருதப்படவில்லை என்பதை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அவர் நினைவூட்டினார். "அத்தகைய சம்பவங்கள் எப்போதுமே மிகவும் பாரதூரமான மற்றும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும்".

உண்மையிலேயே அமெரிக்க மக்களது ஜனநாயக விருப்பை புறக்கணித்துவிட்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் புஷ்-ஐ ஜனாதிபதியாக பதவியில் அமரவைத்ததை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிற்கெதிராக சட்டவிரோதமான போர்கள் தொடக்கப்பட்டன. மற்றும் தேசபக்தி சட்டத்தின் கீழ் ஆட்கொணர்வு போன்ற அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன.

"ஆழமாக ஊழலிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் புதை சேற்றில் சிக்கிக்கொண்டுள்ள ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதை நம்பமுடியாத பலருக்கு 2004 தேர்தல் முடிவுகள் ஒரு பயங்கரமான அதிர்ச்சியை தந்தது."

2000-த்தில் ஜனநாயக விரோதமாக புஷ் பதவியில் அமர்த்தப்பட்டது சாதாரணமாக ஏற்பட்டுவிட்ட ஒரு நெறிபிறழ்வு என்ற நம்பிக்கையைத்தான் பல அமெரிக்கர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் 2004 தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தியிருப்பது என்னவென்றால் ஜனநாயக நடைமுறை தன்னைத்தானே திருத்திக்கொள்வதற்கு இயலாநிலையை அல்லது அமெரிக்க அரசியல் சட்டம், சர்வதேச சட்டம் இரண்டையும் மீறிவிட்ட கும்பல் ஆட்சியின் சக்திகளை வெளியேற்ற வல்லமை இல்லாதது என்பதை காட்டிவிட்டது.

புஷ் மறுதேர்தல் மக்களது ஜனநாயகக் கட்டளை என்ற வாதத்தை நோர்த் தள்ளுபடி செய்தார். "ஜனநாயகம் என்பது, ஏதோ சம்பிரதாயத்திற்கு வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பதல்ல. மக்களுக்கு தெரிந்திருக்கிற தகவல் என்ன? இன்றைக்கும் கூட, போருக்கு ஒரு விரிவான எதிர்ப்பு நிலவுகிறது என்றாலும், செப்டம்பர் 11-ல் ஏதோ ஒரு வகையில் சதாம் ஹூசைன் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று ஒரு பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள் மற்றும் அவர் அல்-கொய்தாவோடு நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார் என்றும் நம்புகிறார்கள்."

எப்படி அமெரிக்க மக்கள் ஒரு முடிவற்ற பிரச்சாரத்திற்கு இலக்கானார்கள் என்பதை நோர்த் நினைவுபடுத்தினார். 2002-ல் நாடாளுமன்றத்தின் இரு சபைகள் கூட்டுக் கூட்ட தொடக்க உரையை புஷ் ஆற்றியதை அவர் ஆராய்ந்தார். அதில் அவர் ஈராக் அரசாங்கம் அணு ஆயுதங்களை ஆந்த்ராக்ஸை வைத்திருக்கிறது என்றும், அமெரிக்கா மீது போர் தொடுப்பதற்கு பயங்கரவாதிகள் தயாராகயிருக்கிறார்கள் என்றும் புஷ் கூறியிருந்தார். "இந்த சொற்களை ஊடகங்கள் பன்மடங்கு பெரிதாக்கி திரும்ப திரும்ப ஒளி / ஒலி பரப்பிக் கொண்டிருந்தன......"

"ஊடகங்களில் நிலவுகின்ற அப்பட்டமான ஊழலை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், மற்றும் சராசரி அமெரிக்க மக்கள் புறநிலையான தகவலை பெறுவதற்கு எவ்வளவு கடுமையாக சிரமப்படுகிறார்கள் என்பதையும் நீங்கள் நினைவிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் செய்தி என்பதே பிரச்சாரம்தான் அதுவும் அந்த வார்த்தையின் மிகவும் விசித்திரமான அர்த்தத்தில்".

அமெரிக்க ஜனநாயகத்திலும் அமெரிக்க அரசியல் அமைப்புகளிலும் நிலவுகின்ற மகத்தான ஊழல் இரண்டு முக்கியமான அடிப்படை நிகழ்வுகளின் வெளிப்பாடுதான். முதலாவது அமெரிக்கா தனது பூகோள பொருளாதார மேலாதிக்கத்தை இழந்து விட்டது. இரண்டாவது சமூக ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்து விட்டன, "வரலாறு நமக்கு ஏதாவது படிப்பினை தருகிறதென்றால், அது மிக உயர்ந்த அளவிற்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்ற நிலை ஜனநாயகத்திற்கு ஒவ்வாததாகும்."

மலைப்பூட்டும் செல்வக்குவியல்கள், மக்களில் ஒரு சிறிய பிரிவினரிடம் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைய தினம் தலைமையிலுள்ள 1000 CEO-க்கள் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 25 முதல் 30 பில்லியன் டாலர்களை வருவாயாக பெறுகின்றனர். "இத்தகைய செல்வ குவியல், ஒரு சிலரது கையில் சேர்ந்து கொண்டு வருவது, ஜனநாயகத்தின் அடித்தளத்தில் ஒரு மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்".

உரையின் நிறைவில் அமெரிக்காவில் ஒரு பகிரங்க ஜனநாயக விரோதக் கொள்கை வளர்ந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். அண்மையில் அமெரிக்க புத்திஜீவி Micheal Ignatieff, The Leaser Evil என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புத்தகத்தில் ஜனநாயகத்திற்கு ஒரு ஏதேச்சதிகார விளக்கம் தந்திருக்கின்றார். அது அமெரிக்காவில் நிலவும் போக்கின் ஒரு வெளிப்பாடுதான். அபு கிரைப்பில் நடைபெற்ற அட்டூழியங்கள் அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களில் ஒரு பகுதியினர் பேணி வளர்த்த, ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான அரசியல் சூழ்நிலையில், இடம்பெற்றதாகும்.

அமெரிக்க ஜனநாயகத்தில் நெருக்கடி தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் முக்கியமான நடைமுறைகளை விளக்குவதும் "இந்தப் போக்குகளுக்கு எதிராக வலுவான சமூக எதிர்ப்பு தோன்றுவதற்கான சில உணர்வு" குறித்து விளக்குவதும் தமது புத்தகத்தின் நோக்கம் என்று நோர்த் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்காவில் சோசலிசத்திற்கான போராட்டத்தை மையப்படுத்தி பல்வேறு வினாக்களை எழுப்பினர். இந்த வினாக்களில் ஜனநாயகக் கட்சியின் பாத்திரம், ரால்ப் நாடெரின் அரசியல் நிலைப்பாடுகள், அமெரிக்க தேர்தல் முறையின் அமைப்பு ஜனநாயகம் பற்றிய கருத்துரு தொடர்பாக சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்து ஆகியவை உள்ளடங்குவன.

நோர்த் தமது பதிலில் அமெரிக்க முதலாளித்துவத்தின் தலைமை அரசியல் முண்டுகோலாக ஜனநாயகக் கட்சி பங்களிப்பு செய்து வருவது பற்றி பேசினார். 2000 மற்றும் 2004 தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் புஷ் நிர்வாகத்தின் சட்டவிரோதமான செயல்பாடுகள் குறித்து எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. வரலாற்று ரீதியாக சோசலிச இயக்கம், ஜனநாயகக் கட்சியிலிருந்து சுயாதீனமாக உழைக்கும் வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு போராடி வருகிறது. அவர் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார். 1860-களில் நடைபெற்ற அமெரிக்காவின் உள்நாட்டுப் போரிலிருந்து தொடங்கி வெடித்துச் சிதறிய வர்க்கப் போர்களை சுருக்கமாக எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற 8 மணி நேர வேலைக்கான போர்க்குணமிக்க போராட்டங்கள் 1930-களில் பரந்த தொழில்துறை சங்கங்கள் உருவாக்கப்பட்டமை, 1970-களிலும் 80-களிலும் நடைபெற்ற சிவில் உரிமைகள் இயக்கம் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் ஆகியவற்றையும் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நோர்த்தின் உரையை கவனமாகக் கேட்டனர். அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி என்ற அவரது நூலில் அவரது கையெழுத்தை பெறுவதற்காக நூலின் ஆசிரியரைச் சந்திக்க காத்திருந்தனர்.

Top of page